நிலாமதி

விரைவில் எதிர் பாருங்கள் .....

Recommended Posts

வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு .....

..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக ,

தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை

செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் .

இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம்

.எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன்.

அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன்.

விரைவில் எதிர் பாருங்கள் ............

Edited by நிலாமதி

Share this post


Link to post
Share on other sites

எம் நாட்டுக்கவிஞனின் கையை பலப்படுத்துவோம்.எம்நாட்டிலய

பெயர் சொல்லக்கூடிய கவிஞர்கள் எல்லாரும் வருகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவோம்.யாழ்கழத

து உறவுகளோ எங்ககே உங்கள் கைகள் எல்லாம் எங்கள் கழ கவிஞன் இழங்கவியை நோக்கி ஓங்கி ஒலிக்கட்டும்.தேம்ஸ் நதியின் தென்றல் காற்ரோடு கலந்து சங்கமிக்கட்டும்.ஒன்று சேருவோமா...?நிச்சமாக நீங்கள் விடமாட்டீர்கள்.எங்கள் கழ கவிஞனின் பேனாவைப் பலப்படுத்துவோம்.நான் உங்களிடம் கேட்டு நிற்பது ஒன்றே ஒன்று தான் எங்கள் தாயகத்து கலைஞர்களை,கவிஞர்களை உங்களால் முடிந்த மட்டும் ஊக்கப்படுத்துங்கள்.

பிரியமுடன்:யாயினி.

Edited by yagini

Share this post


Link to post
Share on other sites

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி......உங்கள் முயற்ச்சி நிட்சயம் வெற்றி அளிக்கும். ஈழமக்களின் யதார்த்த நிலையை ஒவ்வொரு கவியிலும் மிக நன்றாக எழுதும் உங்களுக்கு எம் மக்களின் ஆதரவும் ஊக்கமும் கிடைக்கும் என்பது உறுதி.

நன்றி

ஈழமகள்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முயற்சி நிச்சயம் வெற்றி அளிக்கும் வாழ்த்துக்கள் இளங்கவி அண்ணா.

உங்களுக்கு எமது ஆதரவும் ஊக்கமும் என்றும் கிடைக்கும்.

Edited by ஜீவா

Share this post


Link to post
Share on other sites

அந்த நூலுக்கு அட்டைபடம் தயாரித்ததையிட்டு எனக்கும் மகிழ்ச்சி. வெளியீடு நெருங்கி விட்டதால் அட்டைப்படத்தை இங்கு தரலாம் என நினைக்கின்றேன். இதுபற்றி விரிவாகவும் எழுத வேண்டும்.

yarl.jpg

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துகள் இளங்கவி.....யாழ் இணையம் தந்த ஒரு நல்ல கவிஞன்

சஜீ....,

அட்டைப் படம் அருமையாக இருக்கு....!!! இளங்கவியின் கவிதை தொகுப்பையும் மரணத்தின் வாசனையையும் முடிந்தால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் வெளியிடுங்கள். புலம் பெயர் தேசத்தில் இருந்து வெளியீடு செய்யும் போது, மொழிபெயர்ப்புக்கு வசதி அதிகம் என நம்புகின்றேன்

Share this post


Link to post
Share on other sites

யாழ்கள உறவுகளுக்கு....

இதுவரையும், இனிமேலும் வாழ்த்துத் தெரிவித்த, தெரிவிக்கப்போகும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த வெளியீட்டுக்கு எனக்கு யாழ்கள உறவுகள் தந்த ஊக்கம் தான் காரணம்... அதனால் ஓர் முயற்சி.....

நூற்றோட்டத்தில் கூட நிலா அக்கா எனக்கு ஆதரவு கொடுக்கும் படி உறவுகளை வேண்டிக்கொள்வதை நினைக்க மனம் மிக நெகிழ்வாக இருக்கிறது..... எனது புத்தகத்தையும் நிழலி போன்ற நல்ல கவிஞர்களும் ஏனைய சில யாழ்கள உறவுகளும் வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் படி சொல்வது எவ்வளவு பெருமையாக இருக்கிறது....

எனது கவித்திறனை வளர்க்க உதவிய யாழ் களத்திற்கும் யாழ் கள நண்பர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்....

மேலும் எனது அட்டைப்படத்தை எனது யாழ்கள உறவுகளின் பார்வைக்காக பதிந்த

சயந்தனுக்கும் எனது நன்றிகள்....

மிக்க நன்றி.....

Share this post


Link to post
Share on other sites

அட்டைப் படத்தை பார்த்தவுடனேயே புத்தகத்தை வாங்கத் தூண்டும் ஆவல் ஏற்படுகின்றது .

எனக்கு கவிதைகளில் அவ்வளவு நாட்டம் இல்லாவிட்டாலும் ......... அவ்வப்போது இளங்கவியின் கவிதைகளையும் படித்துள்ளேன் .

நிச்சயம் இப் புத்தகம் எனது புத்தக அலுமாரியில் இடம் பெறும் .

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு .....

..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக ,

தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை

செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் .

இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம்

.எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன்.

அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன்.

விரைவில் எதிர் பாருங்கள் ............

எப்போ நிலாமதி அம்மணியின் கவிதைத் தொகுப்பு வெளிவரும்?

Share this post


Link to post
Share on other sites

தங்களது முயற்சிக்கு எம் மனமார்ந்த பாராட்டுக்கள் இளங்கவி!

வாழ்த்துக்கள்..............

Share this post


Link to post
Share on other sites

இளங்கவி அண்ணனின் கவிதைய நான் மிகவும் விரும்பி வாசிப்பேன்

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா..

Share this post


Link to post
Share on other sites

இளங்கவி உங்களுடைய கவிதை நூலாக்க முயற்சிக்கு எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும். எப்போது, எங்கு வெளியிடுகிறீர்கள்? முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், ஒரு சில நூல்களுடன் உங்கள் படைப்புகளை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து இயங்கக்கூடிய விதத்தில் உங்கள் பொருளாதாரப் பலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். எங்கள் ஈழத்துப் படைப்பாளிகள் தொடர்ந்து சிறந்த படைப்புகளை உருவாக்கினாலும் பொருளாதாரச் சூழல் படைப்பாளிகளை மட்டுப்படுத்திவிடுகிறது. இது உங்களிடத்தில் நான் கூறும் அறிவுரை அல்ல. பொதுவாக எல்லாப் படைப்பாளிகளுக்கும் கூறுவது. அண்மையில் கூட எங்கள் யாழ்க்களத்தில் பொயட் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் பெருங்கவிஞனின் அனுபவத்தை அறிந்திருப்பீர்கள். இது யாரோ முகந்தெரியா ஒருத்தியின் அலட்டல் என்று எடுத்துக் கொள்ளாமல் ஒரு இலக்கிய நட்பின் கரிசனையாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

தங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் இளங்கவி.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி ..அதே நேரம் சகாராவின் கருத்துக்களே எனது கருத்துக்களும்..பொருளாதாரச்ச

ூழலை சயந்தனின் வடலியூடாகவும் வேறு வழிகளாலும்.பலப்படுத்திக்கொள

Share this post


Link to post
Share on other sites

:unsure::wub: வாழ்த்துக்கள் இளங்கவி...!

நிச்சயம் வாங்கி படிப்பேன்... புத்தகம் வெளியிட்டதும் இங்கே தயவு செய்து அறிய தாருங்கள் - எங்கு வாங்கலாம் என்பதை.

நன்றி. <_<

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

மீண்டும் எல்லோருக்கும் நன்றிகள் என்னில் நம்பிக்கைகொண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு....

அறிவிப்பாகவும் ஒரு விடயம் கூற விரும்புகிறேன்... ' நீ என்றும் என் காதலி' எனும் கவிதையை 'காதலிக்க மறக்காதே ' என்று தலைப்பை மாற்றி லங்காசிறி(www.lankasri.eu ) கவிதைப் பகுதியில் உமா எனும் நபர் பிரசுரித்துள்ளார்... இந்தக் கவிதையும் என் தொகுப்பில் உள்ளடங்கியுள்ளது... எனவே உங்கள் கவிதைகளும் திருடப்பட்டு வேறு தலைப்புகளில் வரலாம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்....

நன்றி

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி...

உங்கள் ஆக்கங்களோ தனித்தன்மை கொண்டது... அதனை உங்கள் கவி-ரசிகர்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்...

இருப்பினும் இப்படியான (internet plagiarism) திருட்டு வேலைகள் கவலையளிக்கக் கூடிய விடையம் தான்...

Share this post


Link to post
Share on other sites

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒளிக்க முடியாது. :wub:<_< அது தானுங்க இளங்கவி எழுதிய கவிதை ஒண்று திருட்டுபோய்விட்டது.ச்சி.....இ

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் இளங்கவி...

உங்கள் ஆக்கங்களோ தனித்தன்மை கொண்டது... அதனை உங்கள் கவி-ரசிகர்கள் எளிதில் இனங்கண்டு கொள்வார்கள்...

இருப்பினும் இப்படியான (internet plagiarism) திருட்டு வேலைகள் கவலையளிக்கக் கூடிய விடையம் தான்...

குட்டி

நீங்கள் சொன்னது சரிதான்... எனது ரசிகர் ஒருதர் தான் இதை எனக்குத் தெரிவித்தார் அதன் பின்புதான் நான் போய்ப் பார்த்தபோது அது பெயர் மாற்றத்துடன் இருந்தது....

உங்கள் எல்லோரின் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்...

இளங்கவி

Share this post


Link to post
Share on other sites

அடப் பாவிங்களா ..... ஒருவருடைய கவிதையை கூட , களவெடுப்பாங்களா ? :unsure:

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்

மீண்டும் எல்லோருக்கும் நன்றிகள் என்னில் நம்பிக்கைகொண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு....

அறிவிப்பாகவும் ஒரு விடயம் கூற விரும்புகிறேன்... ' நீ என்றும் என் காதலி' எனும் கவிதையை 'காதலிக்க மறக்காதே ' என்று தலைப்பை மாற்றி லங்காசிறி(www.lankasri.eu ) கவிதைப் பகுதியில் உமா எனும் நபர் பிரசுரித்துள்ளார்... இந்தக் கவிதையும் என் தொகுப்பில் உள்ளடங்கியுள்ளது... எனவே உங்கள் கவிதைகளும் திருடப்பட்டு வேறு தலைப்புகளில் வரலாம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்....

நன்றி

இளங்கவி

உங்கள் கவிதைத் தொகுப்பு சிறப்புற அமையவும்... வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் இளங்கவி. <_<

லங்காசிறி மூலம் குறிப்பிடாமல் அறிவியல் செய்திகளைக் கூட தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. அதை அங்கு போய் எடுப்பவர்கள் அதன் மூலத்தையே இடுகின்றனர். இப்படி லங்காசிறி (தமிழ்வின்) இணையச் சேட்டைகளுக்கு குறைவில்லை.

அறிவியல் செய்திகளைப் பிரசுரிப்பது தவறல்ல. மூலத்தைக் குறிப்பிட்டால் தான் செய்திகளில் இடம்பெறும் தவறுகளை வாசகர்கள் சரியானவர்களுக்கு சுட்டிக்காட்டி திருத்த முடியும். ஆனால் கவிதைகள் என்பது ஒருவரின் சொந்தப் படைப்பு. அதை மூலம் குறிப்பிடாது அடுத்தவரின் பெயரில் பிரசுரிப்பது தப்பு.

முன்னர் லண்டனில்.. ஒரு பேப்பரிலும் இப்படி அடுத்தவரின் இணைய ஆக்கங்களைச் சுட்டு தமது பெயரில் வெளியிட்டு வந்திருக்கின்றனர். இப்ப என்னவோ தெரியாது. நான் அந்தப் பேப்பர் படிக்கிறதை நிறுத்திட்டேன். :icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.