• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Nellaiyan

துரோகிகள்!!!!!!!!!

Recommended Posts

........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த ....

.... "என்னவாம், நாடு நிலவரம்" .

..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்....

.... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" ....

.... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்"....

.... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" ....

.... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ணிப் போட்டு வலைக்குள் வீழ்ந்து விட்டார்கள்" ...

.... "உண்மைதான், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த மாதிரித்தான், இவையளும் நடந்திருக்கினம். அவங்கள் எல்லாப்பக்கத்தாலையும் விசயங்களை கொண்டு போனதை உதுகள் கவனிக்கவில்லை" ....

.... "பெரிய படிச்சதுகளும் இல்லைத்தானே, உந்த ஓட்டங்களை அறிவதற்கு" ...

.... "சண்டையை தொடங்கப் போகிறோம், தொடங்கப் போகிறோம் என யுத்த நிறுத்த காலத்திலை சனங்களை வைத்து ஊர்வலங்கள் நடத்தியும், அவன் சிங்களவனை வீணாக உசுப்பேற்றி விட்டதுதான் மிச்சம்" ...

... "அது போதாததற்கு இங்கை வெளியிலையும் இறுதி யுத்தம் என காசு சேர்க்கத் தொடங்கி உலகத்துக்கும் நாம் சண்டைக்கு போகப் போகிறோம், எமக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என சொன்னது..." ....

.... "உண்மைதான்" ...

.... அவன் அடிக்கத் தொடங்கியவுடன் பரவ விடுகிறம் எண்டாங்கள், இறுதி மட்டும் விழுந்தாலும் மீசையில் ..." ...

.... "கடைசி, புதுக்குடியிருப்பு போகத்தான் வெளிநாட்டு சனம் காப்பாற்ற ரோட்டில் இறங்கச் சொன்னாங்கள்"...

.... "எல்லாம் லேட்ட்ட்ட்ட்" ....

... "ம்ம்ம்ம், இறங்கியும் என்னத்தை செய்ய முடிந்தது?? யாராவது ஏறெடுத்து பார்த்தார்களா?" .....

.... "அரசியல் ஞானசூனியங்கள்" ...

.... "சரி, சண்டையையும் சரியாகவா செய்தாங்கள்?? ...

.... "உண்மைதான், சிங்களவன் அடிக்கத்த் தொடங்க ஒரு ஆயிரக்கணக்கில் சிங்கள இடங்களில் போட்டிருந்தால், காலிலை விழுந்திருப்பாங்கள்!, இது என்னடா என்றால் வளவுக்குள் எதிரியை கூட்டி வந்து, ... முடிச்சதுதான் மிச்சம்" ....

... "உண்மைதான், சொன்னாங்கள் .... தெற்கில் இரத்த ஆறு ஓடும், சிங்கள இனம் யுத்தம் தொடங்க பாடம் படிக்கும், ... எண்டு எல்லாம் சொன்னாங்கள். கடையில் ஒண்டும் நடக்கேலை!!!!!" ....

... "உலக அபிப்பிராயமாம், அங்கீகாரமாம் ... அதுதான் சிங்க்களவனை சாக்கொல்லேலையாம்" ...

... "உலக அபிப்பிராயம் எண்டு நாம் முடிந்ததுதான் மிச்சம்" ....

... ""சிங்களவங்கள் நல்லாப் பயப்பட்டவங்கள் முந்தி, சண்டை தொடங்கினால் தாமும் நிறைய பாதிக்கப்படப் போறம் எண்டு, ஆனால் நாங்கள் அவங்களை நோகப்பண்ண கூட விடேலை" ...

... "இண்டைக்கு முன்பு பயத்திலை இருந்த சிங்களவங்கள் எல்லாம் கிளம்பி கூத்தடிக்கிறாங்களாம்" ...

........ "......" .....

...... "முடிபுகள் எடுத்தவைகள் தவறானவை, செயற்படுத்தினதுகள் தவறானவை, ... மொத்தத்தில் எல்லாம் பிழைதான்" ...

சாப்பாடு முடிந்து கையை கழுவி, கோயிலை விட்டு வெளியேறும் போது ....... நினைத்தேன் ... உந்தக் கதைத்த கிழடுகள் ..... துரோகிகள் ......!!!!!

Share this post


Link to post
Share on other sites

எங்கும் துரோகிகள் எனவே எச்சரிக்கை!

இனிக் கனபேர் கதைப்பினம். கதைவிடுவினம். முந்தியும் இந்த பொடியள், நடந்து அலைஞ்சு களைச்சு மொட்டையும் விழுந்து....., இப்ப மனிசராயும், தாத்தாவாயும்..., பனியுக்கையும் மழையுக்கையும் திரிஞ்சு கதவு தட்டேக்கையும் உதைத்தான் சொன்னவை. இப்பிடியொரு கூட்டமும் எங்களோட கூட இருக்கும்வரை தமிழனால் நிமிர முடியாது.

எட உந்த அறிவுஜீவித்தனத்தை எடுத்து விட்டு ஒருக்கா மகிந்த மாத்தயாவிட்டக் கேட்டகலாமே.

Share this post


Link to post
Share on other sites

இப்போ கணபேர் வெளிக்கிட்டுட்டினம்.

Share this post


Link to post
Share on other sites

இப்போ கணபேர் வெளிக்கிட்டுட்டினம்.

முந்தி பெடியள் செய்வாங்கள் என்று கணபேர் இருந்திட்டோம்,இப்ப பெடியள் தோல்வியை தழுவிய படியால் கணபேர் வெளியால் வெளிக்கிட்டுட்டிடோம்

Edited by Jil

Share this post


Link to post
Share on other sites

உங்கு கோயிலில் கதைத்துக் கொண்டிருந்த வயது மூத்த கூட்டம் உண்மையைத்தான் கதைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் துரோகிகள். அப்படியென்றால் சரி. :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?..................

சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு

Edited by naanal

Share this post


Link to post
Share on other sites

வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?..................

சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு

:D வாயை திறவுங்கோ,ஆனால் நாங்கள் சொல்லுவதற்கு ஜால்ரா போடமட்டும் ,மற்றும்படி திறந்தா எங்களுக்கு கேட்ட கோபம் வரும் :D:D

தமிழக உறவுகளை பற்றியும் நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது,அவர்களைப்பற்ற

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மக்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் யாருக்கு உண்டு? ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான நிலையில், மக்களின் வாழ்க்கைக்கு பாதகத்தை ஏற்படுத்த கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள பிரதேசங்களுக்கு அனுமதியில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும். அமுலில் காணப்படுகின்ற ஊரடங்கு உத்தரவின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படவேண்டிய தேவைகள் காணப்படுமாயின் அதனை கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பணிக்குழுவின் வாயிலாகவே அறிவிக்கபடும். தவிர, பொது மக்களின் இயல்பான வாழக்கைக்கும் அவர்களுக்கான பாதகத் தன்மையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்வதற்கு வேறு எவருக்கும் அனுமதியில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/140154?ref=imp-news
    • அம்பாறையில் நகரங்களில் திரண்ட மக்கள்! ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு தமக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர். கல்முனை பொது சந்தை மூடப்பட்ட போதிலும் பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது. மேலும் சில வியாபார நிலையங்கள் சுப்பர் மார்க்கெட்டுகள், பாமசிகள், வங்கிகள், எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெற்றது. அத்துடன், அம்பாறை பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தனர். இதேவேளை, தொடர்ந்தும் கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/அம்பாறையில்-நகரங்களில்-த/
    • மன்னாரில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில்! மன்னாரில் இன்று காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் மக்களின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் மீன் பிடி, விவசாயம் மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்களே அதிகமாக காணப்படுகின்றனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக காவல் துறை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீன் பிடி, விவசாயம் மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும் மக்கள் தமது நகைகளை நகை அடகு பிடிக்கும் நிலையங்களுக்குச் சென்று அடகு வைத்து பணத்தை பெற்று பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். இதே வேளை மன்னார் நகரில் நிரந்தரமாக மரக்கறி வியாபரம் மேற்கொண்டு வருகின்ற மரக்கறி வியாபரிகளுக்கு தம்புள்ளைக்குச் சென்று மரக்கறி வகைகளை பெற்று வருவதற்கான பாஸ் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும், மன்னாரில் மரக்கறி வியாபாரம் செய்யாத ஏனைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வர்த்தகர்கள் பலருக்கு மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழக்ஙப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மரக்கறி வகைகளை கொண்டு வந்து விற்பனைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மன்னாரில் நிரந்தரமாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் புதிய அரச பேரூந்து தரிப்பிட பகுதியில் மரக்கறி வகைகள் கட்டுப்பாட்டு விலையினை விட அதி கூடிய விலைக்கே விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விசனம் தெரித்தனர். எனினும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மரக்கறி வகைகள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக மன்னார் மாவட்டம் சூழவும் பொலிஸாரும், இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாருக்குள் வருபவர்கள் மற்றும் மன்னாரில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்பவர்களின் தேசிய அடையாள அட்டையினை இராணுவம் பரிசோதனை செய்த பின்னரே செல்ல அனுமதிக்கின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/140162
    • வணக்கம் பையா, நீங்கள் அனுப்பிய உதவி 52450ஆயிரம் ரூபா கிடைத்தது. உங்கள் உதவியின் மூலமான முன்னேற்ற அறிக்கை திட்ட முன்னெடுப்பின் ஒழுங்கில் அறியத்தரப்படும். நன்றி உறவே. வணக்கம் நில்மினி, பேபால் வசதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனால்  வங்கியிலக்கம் ஊடாக அனுப்ப வாய்ப்பு உள்ளதா அறியத்தாருங்கள். மீதி விபரம் தனிமடலில் அல்லது அனுப்பி வைக்கிறேன்.
    • அங்கே ஏன் இந்தப்பார்வை ஐய்யய்யய்ய.சுண்டெலியை தாக்க தயாராகும் சுட்டிப்பூனை .....!  🐀