Archived

This topic is now archived and is closed to further replies.

Nellaiyan

துரோகிகள்!!!!!!!!!

Recommended Posts

........ கடவுள் கல்லாப் போனான் .... என்று . கனகாலம் கோயிலுக்கு சென்று ... மீண்டும் பொழுது போக்குக்காக போனால் ... பூசை முடிந்து நாலு கிழடுகள் சாப்பாட்டு இடத்தில், நாட்டு நடப்புகளை கதைத்துக் கொண்டிருக்க .... நானும் பக்கத்தில் குந்த ....

.... "என்னவாம், நாடு நிலவரம்" .

..... "ம்ம்ம்ம்ம்... என்னத்தை சொல்ல? எல்லாம் முடுச்சு போச்சு!!! இனி கதைத்தென்ன" .. பெருமூச்சுடன்....

.... "எல்லோரும் சேர்த்து கொள்ளியை வைச்சுட்டாங்கள்" ....

.... "போராட்டம் என்று ஒன்றை தொடங்கி கண்ட மிச்சம் வெளிநாடு, அவ்வளவுதான்"....

.... "வாயாலை கதைத்துக் கதைத்து காலத்தை விட்டு விட்டம், அவன் சிங்களவன் கெட்டிக்காரன் செயலாலை செய்து போட்டான்" ....

.... "விசர் பொடியள் யுத்தநிறுத்தம் எண்டதை சைன் பண்ணிப் போட்டு வலைக்குள் வீழ்ந்து விட்டார்கள்" ...

.... "உண்மைதான், பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை குடித்த மாதிரித்தான், இவையளும் நடந்திருக்கினம். அவங்கள் எல்லாப்பக்கத்தாலையும் விசயங்களை கொண்டு போனதை உதுகள் கவனிக்கவில்லை" ....

.... "பெரிய படிச்சதுகளும் இல்லைத்தானே, உந்த ஓட்டங்களை அறிவதற்கு" ...

.... "சண்டையை தொடங்கப் போகிறோம், தொடங்கப் போகிறோம் என யுத்த நிறுத்த காலத்திலை சனங்களை வைத்து ஊர்வலங்கள் நடத்தியும், அவன் சிங்களவனை வீணாக உசுப்பேற்றி விட்டதுதான் மிச்சம்" ...

... "அது போதாததற்கு இங்கை வெளியிலையும் இறுதி யுத்தம் என காசு சேர்க்கத் தொடங்கி உலகத்துக்கும் நாம் சண்டைக்கு போகப் போகிறோம், எமக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை என சொன்னது..." ....

.... "உண்மைதான்" ...

.... அவன் அடிக்கத் தொடங்கியவுடன் பரவ விடுகிறம் எண்டாங்கள், இறுதி மட்டும் விழுந்தாலும் மீசையில் ..." ...

.... "கடைசி, புதுக்குடியிருப்பு போகத்தான் வெளிநாட்டு சனம் காப்பாற்ற ரோட்டில் இறங்கச் சொன்னாங்கள்"...

.... "எல்லாம் லேட்ட்ட்ட்ட்" ....

... "ம்ம்ம்ம், இறங்கியும் என்னத்தை செய்ய முடிந்தது?? யாராவது ஏறெடுத்து பார்த்தார்களா?" .....

.... "அரசியல் ஞானசூனியங்கள்" ...

.... "சரி, சண்டையையும் சரியாகவா செய்தாங்கள்?? ...

.... "உண்மைதான், சிங்களவன் அடிக்கத்த் தொடங்க ஒரு ஆயிரக்கணக்கில் சிங்கள இடங்களில் போட்டிருந்தால், காலிலை விழுந்திருப்பாங்கள்!, இது என்னடா என்றால் வளவுக்குள் எதிரியை கூட்டி வந்து, ... முடிச்சதுதான் மிச்சம்" ....

... "உண்மைதான், சொன்னாங்கள் .... தெற்கில் இரத்த ஆறு ஓடும், சிங்கள இனம் யுத்தம் தொடங்க பாடம் படிக்கும், ... எண்டு எல்லாம் சொன்னாங்கள். கடையில் ஒண்டும் நடக்கேலை!!!!!" ....

... "உலக அபிப்பிராயமாம், அங்கீகாரமாம் ... அதுதான் சிங்க்களவனை சாக்கொல்லேலையாம்" ...

... "உலக அபிப்பிராயம் எண்டு நாம் முடிந்ததுதான் மிச்சம்" ....

... ""சிங்களவங்கள் நல்லாப் பயப்பட்டவங்கள் முந்தி, சண்டை தொடங்கினால் தாமும் நிறைய பாதிக்கப்படப் போறம் எண்டு, ஆனால் நாங்கள் அவங்களை நோகப்பண்ண கூட விடேலை" ...

... "இண்டைக்கு முன்பு பயத்திலை இருந்த சிங்களவங்கள் எல்லாம் கிளம்பி கூத்தடிக்கிறாங்களாம்" ...

........ "......" .....

...... "முடிபுகள் எடுத்தவைகள் தவறானவை, செயற்படுத்தினதுகள் தவறானவை, ... மொத்தத்தில் எல்லாம் பிழைதான்" ...

சாப்பாடு முடிந்து கையை கழுவி, கோயிலை விட்டு வெளியேறும் போது ....... நினைத்தேன் ... உந்தக் கதைத்த கிழடுகள் ..... துரோகிகள் ......!!!!!

Share this post


Link to post
Share on other sites

எங்கும் துரோகிகள் எனவே எச்சரிக்கை!

இனிக் கனபேர் கதைப்பினம். கதைவிடுவினம். முந்தியும் இந்த பொடியள், நடந்து அலைஞ்சு களைச்சு மொட்டையும் விழுந்து....., இப்ப மனிசராயும், தாத்தாவாயும்..., பனியுக்கையும் மழையுக்கையும் திரிஞ்சு கதவு தட்டேக்கையும் உதைத்தான் சொன்னவை. இப்பிடியொரு கூட்டமும் எங்களோட கூட இருக்கும்வரை தமிழனால் நிமிர முடியாது.

எட உந்த அறிவுஜீவித்தனத்தை எடுத்து விட்டு ஒருக்கா மகிந்த மாத்தயாவிட்டக் கேட்டகலாமே.

Share this post


Link to post
Share on other sites

இப்போ கணபேர் வெளிக்கிட்டுட்டினம்.

Share this post


Link to post
Share on other sites

இப்போ கணபேர் வெளிக்கிட்டுட்டினம்.

முந்தி பெடியள் செய்வாங்கள் என்று கணபேர் இருந்திட்டோம்,இப்ப பெடியள் தோல்வியை தழுவிய படியால் கணபேர் வெளியால் வெளிக்கிட்டுட்டிடோம்

Share this post


Link to post
Share on other sites

உங்கு கோயிலில் கதைத்துக் கொண்டிருந்த வயது மூத்த கூட்டம் உண்மையைத்தான் கதைத்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் துரோகிகள். அப்படியென்றால் சரி. :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?..................

சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு

Share this post


Link to post
Share on other sites

வயசான பெரிசுகள் கட்டையிலபோறகாலத்தில தங்கட ஆதங்கத்தைச் சொன்னதுக்குமா?..................

சாப்பிடுகிறதைத் தவிர வேறு எதுக்கு வாயைத்திறந்தாலும் துரோகிப்பட்டம் கொடுக்கிற நம்ம கலாச்சாரம் எப்பதான் மாறுமோ? கண்டநிண்டதுக்கெல்லாம் துரோகி துரோகியெண்டு துரோகியென்ற சொல்லே வலு இல்லததாப்போச்சு

:D வாயை திறவுங்கோ,ஆனால் நாங்கள் சொல்லுவதற்கு ஜால்ரா போடமட்டும் ,மற்றும்படி திறந்தா எங்களுக்கு கேட்ட கோபம் வரும் :D:D

தமிழக உறவுகளை பற்றியும் நீங்கள் ஒன்றும் சொல்லக்கூடாது,அவர்களைப்பற்ற

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • அக்கா, அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் கதக்கப்படாது.😉 பிரபாகரன் பெயரை உச்சரித்தாலும் குற்றம் உச்சரிக்காவிட்டாலும் குற்றமா 😂 சீமான் விடுதலைப் புலிகளைச் சொல்லி அரசியல் செய்வது எந்த வகையில் பிழை என்று கூறுவீர்களா ? 😏
    • தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இன்று அவசரக் கூட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அவசரக் கூட்டம் ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இதில் இந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றார்கள். விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப்., சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி, அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், மற்றும் கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் சோமசுந்திரம் கணேசமூர்த்தி தலைமையிலான கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள். திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளரும் பொருண்மிய மேம்பாட்டு கழக பொறுப்பாளராகவும் இருந்த போராளி ரூபனும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்கின்றார். பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது உட்பட முக்கியமான அரசியல் விவகாரங்கள் இன்றைய கூட்டத்தில் ஆரபாயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.   http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்கள்-தேசிய-கூட்ட-2/
    • (எம்.மனோசித்ரா) பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு ஜனாதிபதி செயலணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவினால் நேற்று செவ்வாய்கிழமை (02) அதற்கான வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கி, நீதி மற்றும் சட்டத்தின் ஆணையை பாதுகாக்கும், ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாடு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பொருளாதார முறைமையை தாபிக்கும் போது நாட்டின் பாதுகாப்பு முக்கிய அம்சமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். சிறுவர் தலைமுறை நாட்டின் எதிர்காலமாக கருதப்படுகிறது. முழு சமூகத்திலும் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினை, பொருளாதார மந்தநிலையுடன் இணைந்த சமூக வீழ்ச்சியின் முக்கிய காரணியாகும். இதிலிருந்து சமூகத்தை விடுவிப்பது முக்கிய தேவையாகும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதியினால் பாதுகாப்பான நாடு, ஒழுக்கப் பண்பாடான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டீ.எம்.எஸ். திஸாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்ன, சுங்கப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வு பிரதாணி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வு தகவல் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி, இராணுவ புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.எஸ். ஹேவாவிதாரண, கடற்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கெப்டன் எஸ்.ஜே.குமார, விமானப்படை புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் எயார் கொமாண்டர் எம்.டி.ஜே. வாசகே, பொலிஸ் விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.சீ.ஏ. தனபால மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். சுதந்திர சமாதான சமூக இருப்புக்கு இடையூரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பிரச்சினைக்கு ஆளானவர்களை அதிலிருந்து தடுத்தல், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்ற இடங்களின் ஊடாக நாட்டிற்குள் போதைப்பொருள்கள் கொண்டுவரப்படுவதை தடுத்தல், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழித்தல், போதைப்பொருள் காரணமாக ஏற்படும் ஏனைய சமூக சீரழிவுகளை தடுத்தல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும். ஏனைய நாடுகளில் இருந்து இலங்கையினுள் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத செயற்பாடுகள், சமூக விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து அதற்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துதல் மற்றும் சிறைச்சாலைகளுடன் தொடர்புட்ட சட்ட விரோத, சமூக விரோத நடவடிக்கைகளை கண்டறிந்து அவற்றை தடுத்தலும் ஏனைய பொறுப்புகளாகும். கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான ஜனாதிபதி செயலணியை தாபிக்கும் அறிவித்தல் தனியான வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு சிறப்பான வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்ட நாடு. ஒரு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க மரபுரிமைகள் அந்நாட்டின் தனித்துவத்தையும் வரலாற்றையும் எடுத்துக்காட்டும் மூலாதாரமாகும். இந்த மரபுரிமைகள் இயற்கை மற்றும் மனித நடவடிக்கைகளினால் அழிவுக்கு உட்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இந்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான உடன்படிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக வர்த்தமாணி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொல்பொருளியல் சக்கரவர்த்தி சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த நாயக தேரர், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் தமன்கடுவை தலைமை சங்கநாயக்க தேரரும் அரிசிமலை ஆரண்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய பனாமுரே திலகவங்ஸ நாயக தேரர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திஸாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில குணவர்தன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸாநாயக மற்றும் தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். கிழக்கு மாகாணத்திற்கு சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், அடையாளம் கண்ட இடங்கள், தொல்பொருள்களை பாதுகாத்தல், மீளமைத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான பொருத்தமான நிகழ்ச்சித்திட்டமொன்றை இனம்கண்டு நடைமுறைப்படுத்தல், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் அளவை இனம்காணுதல் மற்றும் தெளிவாகவும் நிரந்தரமாகவும் நிலப் பிரதேசத்தை ஒதுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்தல், அக்காணிகளின் கலாசார முக்கியத்துவத்தை பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பிரபல்யப்படுத்தல் மற்றும் அம்மரபுரிமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும். https://www.virakesari.lk/article/83337
    • கொரோனா தொடர்பில் பெற்றோருக்கு விழிப்புணர்வு வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை, சுகாதார நடவடிக்கை மூலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களை விழிப்பூட்டும் விசேட செயலமர்வுகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் மாணவர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வளிமுறைகள் பற்றி இதன்போது தெளிவுபடுத்தப்படுவதுடன், தமது பிள்ளைகளுக்கு அவதானமாக பின்பற்ற அறிவூட்டுமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இதன்படி, மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி, வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலைகளில், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம். அச்சுதனின் வழிகாட்டுதலில், புளியந்தீவு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார் தலைமையில், இவ்வாறான பெற்றோரை விழிப்பூட்டும் செயலமர்வுகள், நேற்று (02) நடைபெற்றன. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கொரோனா-தொடர்பில்-பெற்றோருக்கு-விழிப்புணர்வு/73-251315