Jump to content

பசங்களை பார்த்தீங்களோ??


Recommended Posts

நேற்று என்ன படம் பார்க்கலாம் என்று யாழ் சோழியன் மாமாவிட்ட கேட்டன். பசங்க, நாடோடி இரண்டும் நல்ல படங்கள் என்று சொன்னார். சரி என்று கேட்டுப்புட்டு எனது மூன்று பெறாமக்கள் பசங்களோட சேர்ந்து பசங்க பார்த்தன்.

படம்.. அந்தமாதிரி சூப்பராய் இருந்திச்சிது. நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் இப்படி ஒரு அருமையான படம் பார்த்து இருந்தன். ஒருசில வழமையான தமிழ் சினிமாத்தனம் தவிர, இந்தப்படம் உண்மையில மூலாதாரத்தை முட்டிவிட்டிது.

படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்க நமது பள்ளிக்கூட வாழ்விலும் இப்படி நடந்த பிரச்சனைகள், பிடுங்குப்பாடுகள், மனஸ்தாபங்கள், அத்தோட சந்தோசமான சம்பவங்கள் எல்லாம் நினைவுகளில பசுமையாக வந்துபோச்சிது.

படத்திண்ட கருப்பொருள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறதோட.. படம் மூலம் சமுதாயத்துக்கு சொல்ல வருகின்ற செய்திகளும் காத்திரமாய் இருக்கிது. வழமையாக எதிர்மறையான சிந்தனைகளோட, சினிமாத்தனங்கள், ஹீரோக்களிண்ட மெண்டல் ரோதனைகள் இவற்றோட ஓடுகின்ற படங்கள் மத்தியில.. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அருமையான படமாக இந்த பசங்க உருவாக்கப்படு இருக்கிது.

தொடர்ந்து இப்படியான படங்களை எதிர்பார்ப்போம். படத்தில நடிச்ச சின்னப்பசங்க, கலைஞர்கள் அனைவருக்கும் யாழ் சோழியன் மாமா சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். :lol:

ஒரு சுவாரசியமான சம்பவம் என்ன என்றால்.. படம் முடியப்போற தருணத்தில எனது பெறாமகன் ஒருத்தன் படம் இப்பிடி முடியப்போகிது.. இப்படியான ஒரு சம்பவம் நடக்கப்போகிது என்று ஏற்கனவே சற்று முன்னதாக சரியாக சொல்லிவிட்டான். எனக்கு படம் பார்த்துக்கொண்டு இருந்தபோது அப்படி யோசிக்க முடியவில்லை என்றாலும்... அவன் அப்படி நடக்கப்போகிது என்று சொன்னபிறகு அவனின்ட கற்பனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நான் கேட்டன்.. எப்படி உதை ஊகித்தீங்கள் என்று. அவன் சொன்னான்... தான் அதிகளவில் கதைப்புத்தகங்கள் வாசிப்பதனால் அப்படி ஊகிக்ககூடியதாக இருந்தது என்றான்.

194_pasanga_1.jpg

நீங்கள் ஏற்கனவே பலர் இதை பார்த்து இருப்பீங்கள். நாங்கள் கடைசியிலதான் மூட் வரும்போது படம் பார்க்கிறது. பசங்க பற்றி உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கோ. நன்றி!

Link to comment
Share on other sites

நான் நேற்று இரவு ஐங்கரன் DVD (தரவிறக்கம் தான்..) மூலம் பார்த்தேன்... மிக அருமையான படம். என் பள்ளிகூட வாழ்க்கையை மீண்டும் இரண்டரை மணித்தியாலங்களில் வாழ்ந்து விட்டது போன்ற உணர்வைத் தந்தது. பள்ளிக் குழந்தைகளை பள்ளிக் குழந்தைகளாகவே காட்டிய முதல் தமிழ் படம் என்று இதனைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்

குழந்தைகளைத் தவிர காதலர்களாக வரும் இருவரும் கூட மிக இயல்பான காதலை வெளிப்படுத்தி இருப்பதும், பெற்றோர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக காட்டியதும் படத்தை மேலும் சிறக்க வைக்கின்றது.

நல்ல சினிமாவை விரும்புகின்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

:

கலைஞன்,

நாடோடிகளையும் பாருங்கள். இயல்பான காட்சிகளைக் கொண்ட ஓரளவிற்கேனும் நல்ல படம்

Link to comment
Share on other sites

வழமையாக சினிமாவில், நண்பர்கள் காதலர்களை சேர்த்து வைப்பதாக வருவது சாதாரணம். ஆனால் அவர்கள் இணைந்த பிறகும்.. வாழ்க்கையிலும் நண்பர்கள் உதவுவதாக கூறப்பட்டிருக்கும் விதம் என்னைக் கவர்ந்தது.

ஐயையோ.. எனக்கும் புதுப் படத்துக்கும் வெகுதூரம்..!! :(:lol:

Link to comment
Share on other sites

நண்பர்கள் காதலர்களை சேர்த்து வைப்பார்களோ? கொஞ்சம் யோசிக்கவேண்டிய விசயம். நெடுக்காலபோவானைத்தான் கேட்டுப்பார்க்கவேணும். :lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அருமையான படம்..இப்படிப் படம் வந்து பலகாலம் ஆயிடுச்சு....... எம் சிறுவயது வால்தனங்களையும் பாடசாலை நாட்களையும் மீண்டும் அசைபோட வைத்த படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசியத்தையும் படத்துக்குள் புகுத்தியிருந்தார்கள், கவனித்தீர்களா?

அதில் என்ன தப்பு?

Link to comment
Share on other sites

கவனிச்சம். கவனிச்சம். எல்லாப்படத்திலையும் அதை புகுத்தித்தானே வச்சு இருக்கிறாங்கள். அதாவது இப்ப நீங்கள் சொல்ல வருவது என்ன? உதை பார்க்கலாமோ இல்லாட்டிக்கு புறக்கணிக்கலாமோ என்றாவது சொல்லுங்கோ.

Link to comment
Share on other sites

நீண்ட நாள்களுக்குப் பிறகு கலைஞன், நிழலியின் கதை விமர்சனத்தைப் படித்த பின்பு இந்தப் படத்தை youtube-இல் பார்த்தேன்... காதலர்களின் தொலைபேசி காட்சி கொஞ்சம் ஓவர் பிளேடு. மற்றப் படி வித்தியாசமான கதையைக் கொண்ட படம், பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

முழுமையாக ஒரு படம் நீண்ட நாளைக்கு பிறகு பார்த்தேன். வித்தியாசமான படம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமை போல ஓசியில சினிமா பார்க்கும் கொள்கையின் பிரகாரம் ஓசியில் இணையத்தில் பார்த்தேன்.

வித்தியாசமா எதுவும் சொல்வதற்கில்லை. பெரிய வில்லன்களை விலக்கிவிட்டு சிறிய வில்லன்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்..!

மொத்தத்தில்.. பசங்கள்.. ரசிக்கலாம்.. புதிதல்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனிச்சம். கவனிச்சம். எல்லாப்படத்திலையும் அதை புகுத்தித்தானே வச்சு இருக்கிறாங்கள். அதாவது இப்ப நீங்கள் சொல்ல வருவது என்ன? உதை பார்க்கலாமோ இல்லாட்டிக்கு புறக்கணிக்கலாமோ என்றாவது சொல்லுங்கோ.

நல்ல படம் முரளி, குழந்தை வயதை மீண்டும் அசை போட வைத்த படம். தன்னம்பிக்கை உள்ளவன் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை எண்டதை என்னால் அந்தப்படத்தின் மூலம் உணர்ந்துகொள்ள முடிஞ்சுது.

இயலாமையின் அடிப்படையில் தான் கோவம் வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி. என்கின்ற எல்லாமே தோன்றுகின்றன என்பதையும் தெளிவாக விளக்கி இருந்தார்கள்.

பசங்க!..." நமக்கான பாடம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.