• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Paravaikal

5 ‘கொடி’! 3 ‘பொடி’!

Recommended Posts

வணக்கம் உறவுகளே!

இங்கே கீழே நான் பதியும் கட்டுரை தமிழீழ தேசிய விடுதலைக்கு எதிரான ஒரு தளத்தில் இருந்து மீள்் பிரசுரிக்கின்றேன். இதை யாழின் "ஜனநாயக முகம்" ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்.இவர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு புலத்து தமிழர்கள் தூங்கி கிடந்து கொண்டு இங்குவெட்டியாய் பேசுகின்றோம் என்பதையும்... கிட்டத்தட்ட 4 மாதங்களாக தொடர்ந்த பொராட்டம் நடாத்தும் இந்தத இளைஞர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என்று கேட்டுக்கொள்கின்றேன்....

இதே நேரம்...வேறு வேறு பெயர்களின் கழியாட்டங்களை நடாத்தும் ஊடக குழுமங்கள் மக்கள் பற்றிய அக்கறையையும் செலுத்துமாறும் இந்த போராட்டத்தை புறப்பணிப்பதை நிறுத்துமாறு வேண்டுகின்ற அதே வேளை... இந்த போராட்டம் தேவையில்லை என்று எண்ணுபவர்கள் குறிப்பிட்ட இளைஞர்களுடன் பேசி போராட்டத்தை நிறுத்தம் படியும் வேண்டுகின்றோம்.

5 ‘கொடி’! 3 ‘பொடி’!

(சாகரன்)

இடம்: அமெரிக்க தூதுவராலயம் முன்றல், யூனிவேசிற்றி அவெனியூ, ரொறன்ரோ, கனடா

காலம்: 25, 2009

நேரடி ஒலி, ஒளிபரப்பு எதுவும் இல்லை. ஊர்ச் சங்கங்கள் ஏதும் இல்லை. ஏன் கனடா பொலிஸ் கூட இல்லை. என்ன நடந்தது?. பல ஆயிரம்; மக்களுடன் நடந்த பொங்கு தமிழ் எங்கே? ரொறன்ரோவின் தமிழ் புலி வானொலிகள் எங்கே? திருச் செல்வம் எங்கே? ஈசன் எங்கே?

பிரபாகரன் இல்லை என்றதும் குளிர் காய்ந்து விட்ட நிலமையோ? நாங்கள் கவன ஈர்ப்புகள் ஆரம்பிக்கும் போதே சொன்னோம் ‘பதாகைகளை மாற்றுங்கள் வரலாறு உங்களை பதிவு செய்யும்’ என்று. நீங்கள் சிவப்பு மஞ்சள் கொடியுடன் புலி கடித்துக் குதறும் படத்துடன் ‘புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்’ என்ற வாசகங்களை அழித்து விட்டு இதனைத் தமிழரின் தேசியக் கொடி என்று உலக செய்திச் தொடர்பு சாதனங்களுக்கு புலுடா விட்டீர்கள் பெருந் தெருக்களை மறித்தீர்கள். தூதரங்களுக்கு கல்லு எறிந்தீர்கள். வீதியை மறித்து மக்களுக்கு இடைஞ்சல் செய்தீர்கள். ஜிம் உம், மீனாவும் உங்கள் வோட்டிற்காக பேட்டி கொடுத்ததை கண்டு பழுகாங்கிதம் அடைந்தீர்கள்.

இன்று ‘5 கொடி 3 பொடி’ என்று 5 கொடிகளையும் பிடிக்க ஆளில்லாமல் 2 கொடியை நிலத்தில் ஊண்டிவிட்டு வழிமேல் வழி வைத்து காத்து நிற்கின்றீர்கள், மீதி இரு கொடிகளையும் பிடிக்க ஆக்கள் தேடி. இதில் கொடி பிடிப்பவர்களுக்கு சம்பளமும் சாப்பாடும் வேறு. ஆள்கட்கள் தான் இல்லை.

வைகோ, நெடுமாறன் இருந்தால் பழரசத்தைக் கொடுத்து ‘மாபெரும்’ போராட்டத்தை முடித்து வைத்திருப்பார்கள். யாரும் இல்லை அப்படி இங்கில்லை. உங்களை உசுப்பேத்தி கொடிபிடிக்க வைத்தவர்களும், உழைக்காமல் பணம் சேர்த்து சொகுசாக வாழ புது வழி தேடி கேபி உடன் அல்லது உருத்திரகுமாருடன் அல்லது இன்னொரு சர்வ தேச புலனாய்வுப் பொறுப்பாளருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட சென்று விட்டனர் அல்லது மருத்துவக்குழு, TROழு உண்டியல் என்று எந்தப்பக்கம் சாய்வது என்று ஓடிக்கொண்டு Busy யாக உள்ளனர.; CMR உம் தனது அரசியல் ஆய்வுகளை புதிய வருகையான பூநகரி மைந்தனிடம் ஒப்படைத்து விட்டு புத்தம் புது குத்துப் பாடல்களுக்குள் புகுந்து விட்டது. இடையிடையே ஊர் கடந்த தனிநாடு என்று சந்திரகாந்தன்கள் தமது மேதாவிலாசத்தைக் காட்ட பேடடிகள் மட்டும் நடக்கின்றது. அவர்களுக்கும் பிழைப்பு நடக்க வேண்டுமே!

‘மாண்ட வீரர் கனவு கண்ட’ ‘அறு’ சுவை உணவகம் 2 வது கிளையைத் திறந்து வியாபாரத்தை ஓகோ என்று நடத்துகின்றது. 3 ‘பொடி’களின் கோரிக்கயை சட்டை செய்ய கீதவாணியும் தயார் இல்லையாம். போன் போட்டு ராசகுமாருடன் கெஞ்சியதாக கேள்வி ‘CTR உம் CMR உம் கை விட்டு விட்டது நீங்களாவது ‘கவறேஜ்’ தாருங்கள் என்று’. ‘முதியோர் நிதியில் மோசடி’ என்று தனிவழி சென்று வானொலி கண்ட கலாவும் அவரது தாய் வானொலிப் பண்ணையார் பச்சையப்பா புகழ் பொன்னையாவும் 3 ‘பொடி’களை ஏறெடுத்தும் பார்க்கத் தயார் இல்லை. ‘புதினம்’ உம் துரோகியாக்கப்பட்டுவிட்டது.

கல்விச்சபை சேவையாளர் தனது புதுக்கட்சித் தேடலுக்கு முன்னுரிமை கொடுத்து ஒவ்வொரு கட்சியினதும் வாசல் படிகளை தட்டுவதில் Busy. கூடவே துணைவியாருக்கும் பதவி தேடல்.

கவுன்சிலர் தனது மாகாணசபை கதிரை கனவுகளை நனவாக்கி மேலும் பிரமுகராக வலம் வர ‘புலிகள் மறுத்து வந்த ஜனநாயகம் பிழை’ என நிலமைகளுக்கு எற்ப தொப்பியை மாற்றிப் போட்டு ‘கத்தரின் கத்தி பிடி’ பிடிப்பில் அதிக கவனமாகி விட்டார்.

3 ‘பொடிசு’ களே உங்களை இனிக ;கவனிக்க யாரும் இல்லை. தயவு செய்து 5 கொடிகளை கடாசி விட்டு புத்தகங்களை தூக்குங்கள். உங்களுக்கு சோறு போட நீங்கள்தான் உழைக்க வேண்டும். உங்களை நம்பி உங்கள் குடும்பம், உறவு என்ற பெருவட்டம் காத்திருக்கின்றது. தற்போது Summer பரவாய் இல்லை Winter வர முன்பு Escape ஆவது உங்களுக்கு நலம். உங்கள் 5 கொடி தமிழ் ஈமத்தை தாம்பாளத்தில் வைத்து அமெரிக்கா தர உதவாது. குளிர் வர முன்பு நல்ல முடிவு எடுங்கள். நீங்கள் ‘நம்பும்’ அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரிட்டன் விடுதலைக்கு உதவாது. அனுபவப்பட்டவர்களிடன் கேட்டுப்பாருங்கள். கடந்த கால, நிகழ்கால வரலாறுகளைப் புரட்டிப்பாருங்கள்.

ஊரில் வாழும் நம் உறவுகளுக்கு நல்லது செய்ய நிறைய உள்ளன. கம்பிக்குப் பின்னால் நிற்கும் நம் உறவுகளை சொந்த வீடுகளில் குடியமர்துவதை துரிதப்படுத்துவோம். கிழக்கில் உறவுகளை வலுப்படுத்தி ஐக்கியத்தை கட்டியெழுப்புவோம். எமது பிரச்சனையை ஏற்ற, புரிந்து கொண்ட சிங்கள மக்களுடன், தலைவர்களுடன் உறவுப்பாலம் அமைப்போம். முஸ்லீம் சகோதரர்களை மேளதாளத்துடன் அழைத்து வந்து அவர்களின் சொந்த நிலத்தில் யாழ்பாணத்தில் முதலில் குடியமரத்துவோம்.

நல்லவர்களுடன், செயல் வல்லவர்களுடன் கை கோர்த்து செயற்படுங்கள். துரோகியாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் போக மீதியாய் பல ‘நல்ல’ அரசியல் தலைவர்கள் இன்னும் இருக்கின்றார்கள் நம் மண்ணில். அவர்களை இனம் கண்டு நமது தலமை சக்திகளை உருவாக்குவோம். கடல் கடந்த ‘தனிநாடு’ கற்பனை வாதம். சும்மா இருந்து காசு, பணம் பண்ண விளையும் ‘புது மொந்தையில் உள்ள பழைய கள்ளு’. எம் மண்ணில் வாழும் மக்களின் தேவைகளின், சிந்தனைகளின் அடிப்படையில் உருவாகும் அரசியல் வேலைத் திட்டத்திற்கு உதவுங்கள். இதனை எம் மண்ணில் வாழும் மக்களே தீர்மானிக்க முடியும் நீங்களோ, நானோ அல்ல. நாங்கள் ஓடி வந்தவர்கள் அல்லது ஓட விரட்டப்பட்டவர்கள்.

(சாகரன்) (ஆனி 28, 2009)

இதுக்கு பிறகு என்னை துரோகி என்று சொல்ல விரும்பினால் எனக்கு ஆட்சேபனை இல்லை...!

Edited by Paravaikal

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் உறவுகளே!

இதுக்கு பிறகு என்்னை துரோகி என்று சொல்ல விரும்பினால் எனக்கு ஆட்சேபனை இல்லை...!

துரோகி :D:D

Share this post


Link to post
Share on other sites

இந்த போராட்டத்துக்கு ஊடகங்கள், பொதுமக்கள் ஆதரவளிக்காதவிடத்து இது எதிர்மறையான விளைவுகளை ஏற்;ப்படுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதை அனைவரும் உணரவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

எமது பிரச்சனையை ஏற்ற, புரிந்து கொண்ட சிங்கள மக்களுடன், தலைவர்களுடன் உறவுப்பாலம் அமைப்போம். முஸ்லீம் சகோதரர்களை மேளதாளத்துடன் அழைத்து வந்து அவர்களின் சொந்த நிலத்தில் யாழ்பாணத்தில் முதலில் குடியமரத்துவோம்
.

இந்த கருத்தை யாழில் சிலர் அதிகம் எழுதியிருக்கினமே

Share this post


Link to post
Share on other sites

வடக்கின் வசந்தம்

கிழக்கின் உதயம்

என்றெல்லாம் பிலிம் காட்டுவாங்கள்

ஆனால் அப்பாவித் தமிழனுக்கு வாய்கரிசியும் கிடைக்காது

பாவம் சதாரண சிங்களவன்.

அவனுக்கு அரசாங்கம் இன்றைய இராணுவ வெற்றிகளை ஊதி ஊதிப்பெரிசாக்காட்டும்.

வெளிநாடுகளில இருந்து தாராளமாகக் கிடைக்கும் உதவிகளை

அரசியல்வாதிகள் ஆளாளுக்கப் பங்குபோட்டுக்கொள்ளுவாங்கள்.

சாதாரண நாட்டுச் சிங்களவனுக்குப் பாலாறும் ஓடாது தேனாறும் ஓடாது.

பாணுக்கும் பருப்புக்குமே லாட்டரி அடித்துக்கொண்டுதான் இருப்பான்.

இந்த நிலை தொடர கொஞ்சக் காலத்தில, ஒருசில வருசத்தில

எப்ப ஐயா எங்கட வீட்டில பாலாறு, தேனாறெல்லாம் ஓடும் என்று

அந்தச் சிங்களவன் மகிந்த மாத்தையாவைப் பார்த்துக் கேட்கேக்கை

உதுக்கெல்லாம் காரணம் என்று கைகாட்டிவிட புலிப்புhச்சாண்டியும் இருக்காது.

அப்பொழுதுதான் ஒருபகுதிச் சிங்களம் அடடா இவ்வளவு நாளா மயக்கத்தில இருந்திட்டமே!

பிரச்சனை வேறு எங்கோ இருக்கிறதே! என்று தேட முற்படும்.

அப்பொழுது அவர்களுடனும் இணைந்து கஸ்டப்படுகிற அனைத்து இன மக்களையும்

இணைத்து முழு இலங்கைக்குமான பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான

செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இலங்கையிலுள்ள அனைத்து

மக்களுக்குமான சரியான தீர்வைப் பெற்றுத்தரும்.

அதற்கான வேலைகளை நாம் மெதுவாக

இப்பொழுதே ஆரம்பிப்பதுதான் சரியானதென நினைக்கிறேன்.

அதைவிடுத்து இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக நாம் மிகவும் பலமிழந்து நிற்கும்

இன்றைய நிலையில் பழைய கள்ளுப் புதிய மொந்தை வேலைகளைச் செய்வது

பொல்லைக் கொடுத்து அடிவாங்கின கதையாக முழுமையான இன அழிப்பிற்கு நாங்களே பாதைபோட்டுக்கொடுத்த கதையாகத்தான் அமையும்.

தாயகத்தில் உள்ளவர்கள் அன்று தமது தேவை எதுவெனச் சொன்னார்கள் அதற்குத் தேவையான பக்கபலமாக நாம் நின்றோம். இன்று அவர்கள் தமக்கு எதுவேண்டுமெனத் தாமே மீண்டும் சுயமாச் சிந்தித்துக் கூறட்டும் அதற்கு நாம் தோள் கொடுப்போம். அதை விடுத்து அவர்களுக்கு இதுதான் வெண்டும் என புலம்பெயர் நாம் தீர்மானிக்க வேண்டாம். சிலர் சொல்லலாம் அடக்குமுறைக்குள் இருந்துகொண்டு அவர்கள் தமக்கு எது வேண்டுமென்று கூறமுடியாது என. அன்றும் இதே அடக்குமுறைக்குள் இருந்துகொண்டுதான் தமக்கு எது தேவையென அவர்கள் தீர்மானித்தார்கள். இன்றும் அவர்களது தேவைகளை முதலில் அவர்கள் தீர்மானிக்கட்டும்.

ஐந்தாம்கிளாஸ் படிக்கிற பிள்ளை கதைக்கிற கதைக்கும் வயசான காலத்தில எப்படா மேலபோவன் என்றிருக்கிற பழசுகளின்ரை ஆதங்கத்திற்கும் என எதெதுக்கெல்லாமோ துரோகிப் பட்டம் கொடுக்கிற சமுதாயத்தில எனக்கும் சிலபேர் எப்பவோ அந்த லிஸ்ரில இடம்போட்டிருப்பியள், என்றாலும் நாங்கள் எல்லாரும் தேடுகிற அந்தச் சுதந்திரத்திற்குள் இந்தப் பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரமும் இருக்கென்ற நம்பிக்கையிலைதான் தொடர்ந்து முரண்டுபிடிக்கிறமாதிரிக் கருத்துக்களை எழுதுகிறன் புரிந்துகொண்டால் சரி. குமரிமுதல் இமயம்வரை கொடிகட்டிப் பறந்தம்., அது செய்தம் இது செய்தம் ஆண்டபரம்பரை என்ற பழைய பெருமைகளைமட்டும் பேசிக்கொண்டு இருப்பதைவிட்டு உலகாளும் பரம்பரை என்று பேசப்படும் சமுதாயமாக மாறுவோம்.. மாறிவரும் உலக நடப்புக்களைக்கண்டு மலைத்து நிற்காமல் மாற்றங்களை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளக் கற்றுக்கொள்வோம். உச்சங்களைக் காணலாம்

Share this post


Link to post
Share on other sites

.

அப்பொழுதுதான் ஒருபகுதிச் சிங்களம் அடடா இவ்வளவு நாளா மயக்கத்தில இருந்திட்டமே!

பிரச்சனை வேறு எங்கோ இருக்கிறதே! என்று தேட முற்படும்.

அப்பொழுது அவர்களுடனும் இணைந்து கஸ்டப்படுகிற அனைத்து இன மக்களையும்

இணைத்து முழு இலங்கைக்குமான பாரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான

செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுதான் இலங்கையிலுள்ள அனைத்து

மக்களுக்குமான சரியான தீர்வைப் பெற்றுத்தரும்.

அதற்கான வேலைகளை நாம் மெதுவாக

இப்பொழுதே ஆரம்பிப்பதுதான் சரியானதென நினைக்கிறேன்.

கஸ்டப்படும் மக்கள் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீங்கள்?பொருளாதாரத்தில் கஸ்டப்படும் மக்களும் இனவாத சிந்தனையுடன் தான் இருக்கிறார்கள்,சிறிலங்கா சிங்களவர்க்கு மட்டுமதான் சொந்த்தம் என்ற சிந்தனை எப்ப இல்லாமல் போகுதோ அப்ப சிறிலங்காவுக்கு விடிவு,அது இந்த நூற்றாண்டில நடக்காது.

Share this post


Link to post
Share on other sites

பொருளாதாரச் சீர்குலைவு வேலையில்லாத்திண்டாட்டம் போன்ற சிக்கல்களில் சிக்கித்தவித்த ஜேர்மனியமக்களுக்கு

அவர்களது பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் யுhதர்கள்தான் என்ற மயக்கம்

கிட்லர்காலத்தில் எப்படித் தோற்றுவிக்கப்பட்டதோ அதேபோன்று

இன்று சிங்களமக்களுக்கு உள்ள கஸ்டங்களுக்கெல்லாம் காரணம் தமிழரும் தமிழரது

பொருளாதாரச்சுரண்டலும் என்பதுதான் ஆரம்பகாலத்தில் சிங்களவர்மத்தியில் விதைக்கப்பட்ட கருத்து

காலப்போக்கில் இவற்றுடன் இணைக்கப்பட்ட கோசங்கள்தான் புலிப்புhச்சாண்டி, பயங்கரவாதம் போன்ற கருத்துக்கள்.

இப்பொழுது இம்மாதிரி பல மயக்கங்களில் இருக்கும் சிங்களரில் ஒருபகுதி இனிவரும் காலத்தில் பிரச்சனைக்குரிய

காரணங்கள் அரசியல்வாதிகளால் கூறப்படும் இவையல்ல என உணர்ந்து காரணத்தைத் தேடமுற்படும்

அப்பொழுது அவர்களுடன் கைகோர்க்கும் காலம்வரும்.

Edited by naanal

Share this post


Link to post
Share on other sites

இலங்கை அரசியல் இனிவரும் காலங்களில் பிராந்திய அரசியலுடன் தான் நகரும்,அந்த வகையில் பிராந்திய மாற்றங்கள் வந்தால்தான்

Share this post


Link to post
Share on other sites

ஆம் நீங்கள் கூறுவதும் சரிதான். மேற்கத்திய மற்றும் அமெரிக்க அரசியலுக்கும் பிராந்திய அரசியலுக்கும் இடையில் இடம்பெற்ற ஆதிக்கப் போட்டியில் பிராந்திய அரசியல் வலுப்பெற்றதன் விளைவுதான் எமது இன்றைய பின்னடைவின் முக்கிய காரணம்.

அத்துடன் இலங்கையிலுள்ள முக்கிய கட்சிகளில் U.N.P எப்பொழுதும் மேற்குலகைச் சார்ந்தும் S.L.F.P. எப்பொழுதும் பிராந்திய நாடுகள் சார்ந்துமே தமது கொள்கைளை வகுத்தும் அரசியலை நடத்தியும் வந்துள்ளன. இந்தவகையிலும் இன்றைய அரசு ஆட்சியிலிருக்கும்வரை பிராந்திய அரசியல் எமது நாட்டின் அரசியல் நகர்வுகளில் கோலோச்சப்போது உறுதி.

Share this post


Link to post
Share on other sites

S.L.F.P. எப்பொழுதும் பிராந்திய நாடுகள் சார்ந்துமே தமது கொள்கைளை வகுத்தும் அரசியலை நடத்தியும் வந்துள்ளன.

இந்த பிராந்திய அரசுகள் அநேகமாக,சிறுபான்மையின் உரிமைகளை நசுக்குவதிலயே கண்ணும் கருத்துமாக செயல்பட்டு இருக்கின்றன.கஷ்மீர்மக்களின் போராட்டம்,சீக்கியமக்களின்,நா

கலாந்து,மீசோராம் , மக்களின் போரட்டங்கள்,

71ஆம் ஆண்டின் J.V.P.கிளர்ச்சியை,இலங்கையின்S.L.F.P கட்சியின் அழைப்பின் பெயரில் வந்து அடக்கினர் அதே பாணியில் 39 வருடங்களுக்கு பிறகு எமது போராட்டத்தையும் அடக்கியுள்ளனர்

Edited by Jil

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this