Jump to content

உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்

Recommended Posts

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின்றனதான். சமீபத்தில் கனடியர்களான ஆப்கான் நாட்டைச் சேர்ந்த 4 பெண்களின் மரணம் சர்ச்சையை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை குடும்பம்தான் கொலை செய்ததாக ("Honor killing ") கிடைத்த தகவலின் படி விசாரணை நடக்கிறது தற்பொழுது ஆனால் அது கொலைதான் என்று நிரூபிக்கும் முதலே ஒவ்வொருதரும் ஒவ்வொருவிதமாகக் கதை கட்டுகிறார்கள். இதற்கு முதலும் சில வருடங்களுக்கு முன்னர் பஞ்சாப் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டார்.

தமிழர் அல்லது ஆப்கான் போன்ற சிறுபான்மை இனமக்களிடையே இடம்பெறும் பிரச்சனைகள் பூதாகரமாக்கப்படுவதோடு "தமிழ் இளைஞர் கொலை " அல்லது "ஆப்கான் பெண்கள் கொலை" என்று போடுவார்கள் பத்திரிகையில். கொலை கொள்ளை என்று வரும்போது அவர்கள் கனடியர்களாகப் பார்க்கப்படுவதில்லை. அண்மையில் அமெரிக்காவில் 29 வயதான ஒருவருக்கு 21 பிள்ளைகள் இருக்காம் என்ற செய்தியை வெகு சாதாரணமாக ஒரு சாதனை போல எழுதியிருந்தார்கள் அதை வாசித்த ஒரு முஸ்லிம் நண்பி சொன்னாள் இதே ஒரு முஸ்லிம் ஆண் செய்திருந்தால் இவர்கள் என்னவெல்லாம் எழுதியிருப்பார்கள் என்று.

அண்மையில் ஒரு பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு 10 வயதுப்பிள்ளையை அப்பா குளிப்பாட்டினார் என்ற கருத்தை பாலியல் துன்புறுத்தல் என்ற ரீதியில் பார்க்க வேண்டுமென்றார் ஒருவர். ஆனால் அந்தாய்வில் பங்குபற்றிய ஒருவர் உண்மையில் சொல்ல வந்த விடயம் என்ர அம்மா சின்ன வயசிலயே செத்திட்டார் அதால 10 வயசுவரைக்கும் என்னைக் குளிப்பாட்டினது என்ர அப்பாதான் என்பதே இதை நாங்கள் எப்படி விளங்கிக்கொள்கிறோம் என்றதைப் பொறுத்துத்தான் அந்த ஆய்வு அடுத்த கட்டத்துக்குப் போகும். இலங்கை அல்லது இந்தியாவில் பெண் பிள்ளைகள் ஆடையுடன் குளிப்பது வழக்கமென்பதும் அம்மா இல்லாத பிள்ளைகளை அப்பா குளிப்பாட்டுவது வழக்கமென்பதும் (அதுவும் 30-40 வருடங்களுக்கு முதல்) அங்கிருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். நாட்டுக்கு நாடு மக்களுக்கு மக்கள் அவர்களுடைய வழக்கங்களும் பழக்கங்களும் மாறுபடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

அதேபோல children aid socity யால் தேவையில்லாமல் தண்டிக்கப்பட்ட கதை இங்கு நிறையச் சமூகங்களில் உண்டு. தமிழர்களிடம் மட்டுமல்ல மற்றைய 4மூகங்களிலும் children aid socity எண்டாலே பிள்ளை பிடிகாறர் என்றமாதிரியான பயமுண்டு. மற்றைய மக்களின் பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால் பலர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த இரு இளைஞர்களும் கொல்ல பட்டது தமிழ் இளைஞர்களாலா? எனக்கு விபரம் தெரியாது - அதனால் கேட்கிறேன்?

- honour killing என்று வருவதெல்லாம் சமூகத்திற்கு சமூகம் மாறு பட்டு இருக்கும், அதை இனம் காட்டுவது தவறல்ல.

இலங்கையிலேயே நாங்கள் சிறு பான்மையினர் தான்! இங்கு வெளிநாடு என்று வந்தால் போல வந்த இடங்களில் அவங்கள் எங்களை தங்களில் ஒரு அங்கம் என்று தங்கள் பொருளாதார முன்னேற்றங்களுககவும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்று கொள்ளலாம். ஆனால் வெளியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குள் வந்து நாங்கள் எமது செயற்பாடுகளின் மூலம் பிழை பிடிக்க இடம் கொடுப்போமேயானால் நிச்சயம் வெள்ளைக்காரன் - எங்களை விநோதமாக்கி தான் காட்டுவான்.

தமிழரை மட்டுமல்ல எனேயே சிறுபான்மையினரையும் தான்.

ஊரில ஒரு சோனகன் இரண்டு மனைவி வைத்திருந்தால் நாங்களே ஒரு மாதிரி பார்க்கிறோம் தானே.... அவன்ட சமூகத்தில அதுக்கு இடம் இருக்கு. அவன் செய்கிறான் என்று நினைத்து மதிப்பு கொடுக்கிறோமா?

அது போல தான் வெள்ளைக்காரனுக்கு - சொல்ல போனால் மற்ற இனத்தாரை விட அவனுக்கு - சகிப்புணர்வு கூட உள்ளது போல காட்ட விரும்புவான் - பெரும்பாலும் விளங்கி கொள்ளவும் தென்டிப்பான். ஆனால் பிழை விடும் போது/ அல்லது அவனிட விளக்கத்துக்கு நம்பிக்கைகளுக்கு அப்பால் எமது செயற்பாடுகள் இருக்கும் போது, சுட்டி காட்டுவது அவன் இயல்பு.

- அத்துடன், எனக்கு நீங்கள் ஏன் இறந்தவர் தமிழன்/ அல்லது கொலை செய்தவர் தமிழன்/ என்று இனம் காட்டுவதை விரும்பவில்லை என்று விளங்கவில்லை. இதை positive ஆக எடுக்க முற்படலாம் தானே? உதாரணத்திற்கு - கனடாவில் கொல்ல பட்ட இரு இளைஞர்கள் தமிழர் என்பதும், நோர்வேயில் அண்மையில் சிறை சென்ற வாள் கொலை இளைஞர்கள் தமிழர் என்பதும், இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக சிறை சென்ற இருவர் தமிழர் என்பதும் - "தமிழர்" என்ற குறிப்போடு இருந்த படியினாலேயே எமது இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது/ அவர்கள் செயற்பாடுகள் இவாறு ஆக காரணம் என்ன என்றெல்லாம் அறிய ஆய முடிகிறது. இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் தான் இனிமேலாவது இவை நடக்காமல் பார்த்து கொள்ள இளைஞர்களை சுற்றியுள்ள தமிழ் சமூகம் அக்கறை எடுக்கும். இளைஞர்களும் விளையாட்டுத்தனமாய் தொடங்கும் செயல்கள் எவ்வாறு விபரீதமாக போய் முடியலாம் என்பதையும் கண்டுனர்வார்கள்.

அதை விட்டு போட்டு - பாஸ்போர்ட்ல அப்படி இருக்கு என்றதுக்காக canadian youngster killed in a gang fight என்று போட்டால் எங்கட தமிழ் சமூகம் வாசிச்சு அக்கறை பட்டு திருத்தி கொள்ளுமா தன்னை??????????????

- சின்ன பிள்ளைகள் சம்மந்தமான உங்கள் கருத்துகளுக்கு எனது விளக்கம் இது தான்:

இந்த மேற்கத்தைய நாடுகளில் ஏராளமான இனத்தவர் வாழ்கிறார்கள். ஒவொருவரும் பிள்ளைகளை வளர்ப்பது வித்தியாசமாய் இருக்கும். அவர் அவர் எப்படி சரி என்று படுகுதோ அப்படி இருங்கோ என்று authorities கவனியாது விட்ட படியால் - எத்தினையோ அசம்பாவிதங்கள் நடந்து இருக்கு.

சின்ன பிள்ளைகளை பலி கொடுத்தால் குடும்ப கஷ்டம் தீரும் என்று கொலை கூட செய்து இருக்குதுகள் இங்க இங்கிலாந்தில். .

இல்லாட்டி இங்க ஏன்? கிட்டடியில் செய்தியில் படித்தேன் - ஈழத்தில் ஒரு பதினாலு வயது சிறுமியை தகப்பனே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்று.

மேற்கத்திய நாடுகளில் சிறு பிள்ளைகளை பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதை அதிகமாய் காண்கிறோம். அப்படி உள்ள ஒரு சமூகத்தில் அந்த நாட்டு அரசாங்கம் சட்டங்கள் எடுக்கும் - எல்லோரையும் அதற்குள் கொண்டு வர .

எமது பிழை இல்லாத நடவடிக்கைகள் பிழையாக பார்க்க படுகிறது என்று நீங்கள் வருத்த பட்டால் ஒன்றை நீங்கள் ஜோசியுங்கோ - அப்படி அவங்கள் கெடுபிடி போட்டு இருப்பதால் எங்கோ ஒரு பிள்ளை என்றாலும் பாதுகாக்க படும்.

சிறு பிள்ளைகள் சம்மந்தமான எந்த ஒரு சட்டமும் அவர்களை பாதுகாக்கவே எடுக்க படுகிறது. ஆனால் அதன் பொருட்டு பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்க கூட இயலாமல் போகிறதையும் உணர்வேன். அதற்கு பெற்றோர் தங்கள் அணுமுறைகளை கொஞ்சம் மாற்ற தான் வேணும். "நாங்கள் வாங்காத அடியா உந்த வயதில" என்று ஜோசியாமல் - எங்களுக்கு இருந்த சுற்றம் சூழல் சுதந்திரம் (நாட்டை சொல்லவில்லை, அட் லீஸ்ட் முற்றம் ஒழுங்கை தெரு என்றாவது எங்கட என்னத்திற்கு ஓடி விளையாடினோம்) - இதெல்லாம் இங்கத்தைய எங்கடபிள்ளைகளுக்கு அமைவது மிக குறைவு. - இங்கு பிள்ளைகள் கதிரையில் கட்டு பட்டு இருந்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி முன்னாலே கிடந்தது காய்கிறார்கள். சில வீடுகளில் காற்றோட்டத்திற்காக ஜன்னல் திறந்து விடுவது கூட பிரச்சனை!

-கடைசியாக நீங்கள் சொன்ன dating violence கோதாரிக்கு என்னட்ட ஒரே பதில் தான் - இப்படியான மண்டை பிழையான சோடியளோட ஏன் மினக்கடுறியள்? :mellow: தெரியாமல் பிழை விடுறது வேற... முரட்டு குணம் உள்ளதுகள் என்று தெரிந்தும்...ஏன்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

- நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த இரு இளைஞர்களும் கொல்ல பட்டது தமிழ் இளைஞர்களாலா? எனக்கு விபரம் தெரியாது - அதனால் கேட்கிறேன்?

முதலாவது தெரியாது (கொல்லப்பட்டது தமிழ் இளைஞர்களால்) ஆனால் 2ஆவது அப்படி இல்லை.

http://www.cbc.ca/canada/toronto/story/200...o-homicide.html

Link to comment
Share on other sites

***

கருத்து:

1. ஏன் கனடா தமிழ் . பிள்ளைகள் afro american னை கறுப்பன் என்கின்றனர்?

2. ஏன் chinese இனை சப்பை மூக்கு என்கின்றனர்?

3, எம் "தன் சக தமிழனையே" சாதி பிரித்து வேசம் காட்டும் ஈன ஈழ தமிழனுக்கு மற்ற தேசத்தவருடன் இணைய முடியுமா? Integrate ஆக முடியுமா?

4. பிறகென்ன மற்றவன் உங்களை....பிரதேச,. சாதி வேறுபாட்டால் பிழந்து போனவனை ஒரு தேசியனாக அங்கீர்கரிக்க வேண்டும் என்ற அவா? முதலில் தமிழ் சாதி மானுடனாகட்டும்...பிறகு மற்றவன் ஏன் மதிக்கவில்லை என ஆராய்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிழலி நீங்கள் ஏன் புட்டைபற்றி பேச்சில் சோற்றைப்பற்றி கதைக்கிறீங்கள் என்று தெரியவில்லை. கட்டுரையை சரிவரப்புரிந்து கொள்ளாது நீங்கள் கருத்து எழுதுவது எவ்வளவு சரியானாது என்று எனக்கு தெரியவில்லை.

தமிழினத்துக்குள் சாதியை நீங்கள் பிரித்து கதைப்பத்க்கும் கட்டுரையாளர், ஊடகங்களில் தமிழர்கள் என்று விளிப்பதாக என்று சொல்வதங்ககு:ம் என்ன தொடர்பு?

அப்படியே உங்கள் கருத்துப்படி வைத்துக்கொள்ளுவோம், எம்மை தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துக்கொள்ள தேவையில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படியே நாமும் செய்ற்ப்பட்டால் அதை அவர்கள் ஏற்றுக்;கொள்வார்களா?

உங்களை திருப்பி நானே கேக்கிறன்... முன்னர் பாக்கிஸ்தானியர்களi அழைத்து இன்று ஒட்டுமெத்தமாக... ஆசியர்களையும் வெள்ளையர்கள் "பாக்கி" என்று அழைப்பது ஏன்?

எந்த வெள்ளையர்களோ, கறுப்பினத்தவர்களோ, கொலை செய்யப்படும் போது அவர்களது மொழியால் இனத்தால் அடையாளப்படுத்தப்படுவது அரிதே!? ஏன்? அடிப்படையில் யாருமே கனடாவின் பூர்வீக குடிகள் இல்லாத போது அவர்களது மொழியை அல்லது இனத்தை நாட்டை விளித்து அவர்களது செய்திகளை வெளியிடலாமே?

ஒரு விடயம் என்னவெண்டா, தமிழர்கள் என்று விழித்து எழுதும் போது மற்றைய சமூகங்களுக்கு எம் மீதான பார்வை மாற்றம் பெறுவது தவிர்கக முடியாதது தானே!

நீங்கள் சொல்வது போல நமக்குள் ஒற்றுமை இல்லை. நாம நெடுக சண்டை பிடிக்கிறம் என்று போட்டு நாட்டுப்பிரச்சினைக்காக நீங்கள் குரல் கொடுக்காமல் இருக்க போறீங்கள்h? நீங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை... பொல தான் இருக்கு....

ஊடகங்கள் தமிழர்கள் என்று விழிpப்பதில் எந்த தவறும் இல்லை. அதே நேரம் அவர்கள் அதை எல்லா நேரத்திலும் கடைப்பிடித்தல் நன்று ! அதையே கட்டுரையாளார் சொல்ல விழைத்தார் என்று நினைக்கின்றேன்.

ஆனால் சாதி பற்றி பேச்சை நீங்கள் வலுக்கட்டாயமாக இக்கருத்தாட்டத்தில் புகுத்த விளைந்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்.

எவருடைய ஆராட்சியையும் இந்த எல்லைக்குள் தான் இருக்க வேண்டும் என்று மட்டுப்படுத்துவது எப்படிச் சரியானது. அதை மட்டுமே எழுதணும், இதை மட்டுமே எழுத வேண்டும் என்று புத்திமதி சொல்வதற்கு யாழில் கருத்தாளர் பட்டம் ஒன்றும் தேவையில்லை...

சொல்லப் போனால் சினேகிதி எழுதியமைக்கும், நீங்கள் கேட்கின்ற தனிப்பட்டரீதியிலான கேள்விகளுக்கும் எவ்வகைத் தொடர்புமிருப்பதாகத் தெரியவில்லை.. ஏதோ தலைப்பில் எழுதணும் என்ற கணக்கில் எழுதியிருப்பதாகவே தோன்றுது

-----------------

குழந்தைகள் தொடர்பான சட்டங்கள் வெளிநாடுகளில் அணுகப்படும் விதம் என்பது, ஒரே தந்தை, ஒரே தாய் வாழ்நாள் முழுதும் ஒன்றாக வாழ்கின்ற வாழ்க்கை முறை, இல்லை என்பதால் ஒவ்வொரு குழந்தைகளையும் தனிப்பட்டவிதத்தில் கவனிக்கப்படவேண்டிய கடப்பாடு புலத்தில் உண்டு. நம் நாட்டில் அவ்வகையான முறையில்லை. பெரும்பாலும், இதுவரை காலமாவது சண்டையோ குத்துப்படாடோ, பெற்றோருக்கிடையில் ஏற்பட்டாலும் பிரிவு என்பது பொதுவாகக் குறைவாக இருந்ததால், குழச்தைகள் துஸ்பிரயோகம் பற்றிக் கணக்கெடுக்கபடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த இரு இளைஞர்களும் கொல்ல பட்டது தமிழ் இளைஞர்களாலா? எனக்கு விபரம் தெரியாது - அதனால் கேட்கிறேன்?

- honour killing என்று வருவதெல்லாம் சமூகத்திற்கு சமூகம் மாறு பட்டு இருக்கும், அதை இனம் காட்டுவது தவறல்ல.

இலங்கையிலேயே நாங்கள் சிறு பான்மையினர் தான்! இங்கு வெளிநாடு என்று வந்தால் போல வந்த இடங்களில் அவங்கள் எங்களை தங்களில் ஒரு அங்கம் என்று தங்கள் பொருளாதார முன்னேற்றங்களுககவும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்று கொள்ளலாம். ஆனால் வெளியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குள் வந்து நாங்கள் எமது செயற்பாடுகளின் மூலம் பிழை பிடிக்க இடம் கொடுப்போமேயானால் நிச்சயம் வெள்ளைக்காரன் - எங்களை விநோதமாக்கி தான் காட்டுவான்.

தமிழரை மட்டுமல்ல எனேயே சிறுபான்மையினரையும் தான்.

ஊரில ஒரு சோனகன் இரண்டு மனைவி வைத்திருந்தால் நாங்களே ஒரு மாதிரி பார்க்கிறோம் தானே.... அவன்ட சமூகத்தில அதுக்கு இடம் இருக்கு. அவன் செய்கிறான் என்று நினைத்து மதிப்பு கொடுக்கிறோமா?

அது போல தான் வெள்ளைக்காரனுக்கு - சொல்ல போனால் மற்ற இனத்தாரை விட அவனுக்கு - சகிப்புணர்வு கூட உள்ளது போல காட்ட விரும்புவான் - பெரும்பாலும் விளங்கி கொள்ளவும் தென்டிப்பான். ஆனால் பிழை விடும் போது/ அல்லது அவனிட விளக்கத்துக்கு நம்பிக்கைகளுக்கு அப்பால் எமது செயற்பாடுகள் இருக்கும் போது, சுட்டி காட்டுவது அவன் இயல்பு.

- அத்துடன், எனக்கு நீங்கள் ஏன் இறந்தவர் தமிழன்/ அல்லது கொலை செய்தவர் தமிழன்/ என்று இனம் காட்டுவதை விரும்பவில்லை என்று விளங்கவில்லை. இதை positive ஆக எடுக்க முற்படலாம் தானே? உதாரணத்திற்கு - கனடாவில் கொல்ல பட்ட இரு இளைஞர்கள் தமிழர் என்பதும், நோர்வேயில் அண்மையில் சிறை சென்ற வாள் கொலை இளைஞர்கள் தமிழர் என்பதும், இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக சிறை சென்ற இருவர் தமிழர் என்பதும் - "தமிழர்" என்ற குறிப்போடு இருந்த படியினாலேயே எமது இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது/ அவர்கள் செயற்பாடுகள் இவாறு ஆக காரணம் என்ன என்றெல்லாம் அறிய ஆய முடிகிறது. இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் தான் இனிமேலாவது இவை நடக்காமல் பார்த்து கொள்ள இளைஞர்களை சுற்றியுள்ள தமிழ் சமூகம் அக்கறை எடுக்கும். இளைஞர்களும் விளையாட்டுத்தனமாய் தொடங்கும் செயல்கள் எவ்வாறு விபரீதமாக போய் முடியலாம் என்பதையும் கண்டுனர்வார்கள்.

அதை விட்டு போட்டு - பாஸ்போர்ட்ல அப்படி இருக்கு என்றதுக்காக canadian youngster killed in a gang fight என்று போட்டால் எங்கட தமிழ் சமூகம் வாசிச்சு அக்கறை பட்டு திருத்தி கொள்ளுமா தன்னை??????????????

- சின்ன பிள்ளைகள் சம்மந்தமான உங்கள் கருத்துகளுக்கு எனது விளக்கம் இது தான்:

இந்த மேற்கத்தைய நாடுகளில் ஏராளமான இனத்தவர் வாழ்கிறார்கள். ஒவொருவரும் பிள்ளைகளை வளர்ப்பது வித்தியாசமாய் இருக்கும். அவர் அவர் எப்படி சரி என்று படுகுதோ அப்படி இருங்கோ என்று authorities கவனியாது விட்ட படியால் - எத்தினையோ அசம்பாவிதங்கள் நடந்து இருக்கு.

சின்ன பிள்ளைகளை பலி கொடுத்தால் குடும்ப கஷ்டம் தீரும் என்று கொலை கூட செய்து இருக்குதுகள் இங்க இங்கிலாந்தில். .

இல்லாட்டி இங்க ஏன்? கிட்டடியில் செய்தியில் படித்தேன் - ஈழத்தில் ஒரு பதினாலு வயது சிறுமியை தகப்பனே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்று.

மேற்கத்திய நாடுகளில் சிறு பிள்ளைகளை பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதை அதிகமாய் காண்கிறோம். அப்படி உள்ள ஒரு சமூகத்தில் அந்த நாட்டு அரசாங்கம் சட்டங்கள் எடுக்கும் - எல்லோரையும் அதற்குள் கொண்டு வர .

எமது பிழை இல்லாத நடவடிக்கைகள் பிழையாக பார்க்க படுகிறது என்று நீங்கள் வருத்த பட்டால் ஒன்றை நீங்கள் ஜோசியுங்கோ - அப்படி அவங்கள் கெடுபிடி போட்டு இருப்பதால் எங்கோ ஒரு பிள்ளை என்றாலும் பாதுகாக்க படும்.

சிறு பிள்ளைகள் சம்மந்தமான எந்த ஒரு சட்டமும் அவர்களை பாதுகாக்கவே எடுக்க படுகிறது. ஆனால் அதன் பொருட்டு பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்க கூட இயலாமல் போகிறதையும் உணர்வேன். அதற்கு பெற்றோர் தங்கள் அணுமுறைகளை கொஞ்சம் மாற்ற தான் வேணும். "நாங்கள் வாங்காத அடியா உந்த வயதில" என்று ஜோசியாமல் - எங்களுக்கு இருந்த சுற்றம் சூழல் சுதந்திரம் (நாட்டை சொல்லவில்லை, அட் லீஸ்ட் முற்றம் ஒழுங்கை தெரு என்றாவது எங்கட என்னத்திற்கு ஓடி விளையாடினோம்) - இதெல்லாம் இங்கத்தைய எங்கடபிள்ளைகளுக்கு அமைவது மிக குறைவு. - இங்கு பிள்ளைகள் கதிரையில் கட்டு பட்டு இருந்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி முன்னாலே கிடந்தது காய்கிறார்கள். சில வீடுகளில் காற்றோட்டத்திற்காக ஜன்னல் திறந்து விடுவது கூட பிரச்சனை!

-கடைசியாக நீங்கள் சொன்ன dating violence கோதாரிக்கு என்னட்ட ஒரே பதில் தான் - இப்படியான மண்டை பிழையான சோடியளோட ஏன் மினக்கடுறியள்? :rolleyes: தெரியாமல் பிழை விடுறது வேற... முரட்டு குணம் உள்ளதுகள் என்று தெரிந்தும்...ஏன்?????

வணக்கம் அண்ணா.

நானும் ஒத்துக்கொள்ளுறன் என்னிலும் உங்களுக்கு கொஞ்ச விசயம் தெரியும் என்று,... அதே நேரம் புலம்பெயர்நாடுகளில் உள்ள சட்டங்கள் எல்லாமே எல்லாருக்கும் பொருத்தமானதாக இல்லை. நாம் வாழ்ந்த கலாச்சார சூழலுக்கு அப்பால் இவை பிறிதொரு கலாச்சார சூழலுக்காக உருவாக்கப்பட்டவை. இங்கு இருக்கும் சட்டங்கள் 18 வயதுக்கு பிறகு பிள்ளைக்கு முழுமையான சுத்திரத்தை வழங்குகின்றது ஆனால் ஒரு பிள்ளை 18 தொடக்கம் 21 வயது வரையான காலப்பகுதியில் தான் அதிகம் கவனிக்ப்பட வேண்டியவராக இருக்கின்றார். நீங்கள் சொல்லும் ஒரு சில சம்பவங்களுக்காக முழு சமூகமும் ஒரு சட்டத்தை மல்லுக்கட்ட வேண்டும் என்ற தேவை இல்லை. இன்னும் இங்கு தாய் தந்தையர்கள் மாறி மாறி திருமணங்கள் செய்வதால்் இந்த நாட்டை அடிப்படையாக கொண்டு வாழ்பவர்களுக்கு இந்்த சட்டம் ஏதோ ஒருவகையில் பொருத்தமாக இருக்கின்றது. ஆனால் நமது நாட்டு மக்களுக்கு இது 10 சதவீதம் ஊட பொருந்தவில்லை.

அடுத்து பிழை செய்யப்படுபவர்களையும் கொலை செய்தவர்களையும் தமிழர்கள் உன்று விழி்ப்பதில் தமிழர்ககள் மீதான நல்லெண்ணம் மற்றைய சமூகங்களிடமிருந்து குறைவடைகின்றது. ஒருவன் கொல்லப்படும் போது மக்கள் பொதவாக " அவன் காங்ஸ்டர், இல்ல வேற பிரச்சினையாம், இப்பிடி தான் பேசுவார்கள். இறுதிய கனடாவில் கொல்லப்பட்ட இளைஞன் ஏன் இந்தியர்களால் கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் தேடிய போது இதற்காகவா என்று கவலைப்பட வேண்டியிருந்தது. ஆனால் அப்படி அலசிப்பார்ப்பவர்கள் மிகவும் குறைவு தமது முடிவுகளை அவர்களே எடுத்து விட்டு தமிழ் பையன் மற்றைய சமூகத்துடன் பிரச்சினையாம் என்று தான் பேசப்படும். அதை ஏன் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள் இல்லை?

Link to comment
Share on other sites

\\- நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த இரு இளைஞர்களும் கொல்ல பட்டது தமிழ் இளைஞர்களாலா? எனக்கு விபரம் தெரியாது - அதனால் கேட்கிறேன்?\\

முதல் கொலை தமிழ் இளைஞர்களால் என்றும் மற்றது வேறுநாட்டு இளைஞர்களாலும் என்று சொல்லப்படுகிறது

\\- honour killing என்று வருவதெல்லாம் சமூகத்திற்கு சமூகம் மாறு பட்டு இருக்கும், அதை இனம் காட்டுவது தவறல்ல.

இலங்கையிலேயே நாங்கள் சிறு பான்மையினர் தான்! இங்கு வெளிநாடு என்று வந்தால் போல வந்த இடங்களில் அவங்கள் எங்களை தங்களில் ஒரு அங்கம் என்று தங்கள் பொருளாதார முன்னேற்றங்களுககவும் வேறு சில அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்று கொள்ளலாம். ஆனால் வெளியில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குள் வந்து நாங்கள் எமது செயற்பாடுகளின் மூலம் பிழை பிடிக்க இடம் கொடுப்போமேயானால் நிச்சயம் வெள்ளைக்காரன் - எங்களை விநோதமாக்கி தான் காட்டுவான்.

தமிழரை மட்டுமல்ல எனேயே சிறுபான்மையினரையும் தான். \\

கனடாவில் எல்லோருமே வந்தேறு குடிகள்தான். அப்பிடி சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்த வேண்டுமென்றால் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களையும் அவர்கள் தமிழர்கள் என்று குறிப்பிட வேண்டும். நல்லது செய்யும்போது அவர்கள் கனடியர்கள் கொலை என்று வந்தால் அவர்கள் தமிழர்களா???

\\\ஊரில ஒரு சோனகன் இரண்டு மனைவி வைத்திருந்தால் நாங்களே ஒரு மாதிரி பார்க்கிறோம் தானே.... அவன்ட சமூகத்தில அதுக்கு இடம் இருக்கு. அவன் செய்கிறான் என்று நினைத்து மதிப்பு கொடுக்கிறோமா?

அது போல தான் வெள்ளைக்காரனுக்கு - சொல்ல போனால் மற்ற இனத்தாரை விட அவனுக்கு - சகிப்புணர்வு கூட உள்ளது போல காட்ட விரும்புவான் - பெரும்பாலும் விளங்கி கொள்ளவும் தென்டிப்பான். ஆனால் பிழை விடும் போது/ அல்லது அவனிட விளக்கத்துக்கு நம்பிக்கைகளுக்கு அப்பால் எமது செயற்பாடுகள் இருக்கும் போது, சுட்டி காட்டுவது அவன் இயல்பு.

- அத்துடன், எனக்கு நீங்கள் ஏன் இறந்தவர் தமிழன்/ அல்லது கொலை செய்தவர் தமிழன்/ என்று இனம் காட்டுவதை விரும்பவில்லை என்று விளங்கவில்லை. இதை positive ஆக எடுக்க முற்படலாம் தானே? உதாரணத்திற்கு - கனடாவில் கொல்ல பட்ட இரு இளைஞர்கள் தமிழர் என்பதும், நோர்வேயில் அண்மையில் சிறை சென்ற வாள் கொலை இளைஞர்கள் தமிழர் என்பதும், இங்கிலாந்தில் பாலியல் வல்லுறவு குற்றத்திற்காக சிறை சென்ற இருவர் தமிழர் என்பதும் - "தமிழர்" என்ற குறிப்போடு இருந்த படியினாலேயே எமது இளைஞர்களுக்கு என்ன நடக்கிறது/ அவர்கள் செயற்பாடுகள் இவாறு ஆக காரணம் என்ன என்றெல்லாம் அறிய ஆய முடிகிறது. இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் தான் இனிமேலாவது இவை நடக்காமல் பார்த்து கொள்ள இளைஞர்களை சுற்றியுள்ள தமிழ் சமூகம் அக்கறை எடுக்கும். இளைஞர்களும் விளையாட்டுத்தனமாய் தொடங்கும் செயல்கள் எவ்வாறு விபரீதமாக போய் முடியலாம் என்பதையும் கண்டுனர்வார்கள்.

அதை விட்டு போட்டு - பாஸ்போர்ட்ல அப்படி இருக்கு என்றதுக்காக canadian youngster killed in a gang fight என்று போட்டால் எங்கட தமிழ் சமூகம் வாசிச்சு அக்கறை பட்டு திருத்தி கொள்ளுமா தன்னை?????????????? \\\

இப்படியும் ஒரு நன்மையிருக்கலாம் ஆனால் தீமைகள் தான் அதிகம்.

\\ - சின்ன பிள்ளைகள் சம்மந்தமான உங்கள் கருத்துகளுக்கு எனது விளக்கம் இது தான்:

இந்த மேற்கத்தைய நாடுகளில் ஏராளமான இனத்தவர் வாழ்கிறார்கள். ஒவொருவரும் பிள்ளைகளை வளர்ப்பது வித்தியாசமாய் இருக்கும். அவர் அவர் எப்படி சரி என்று படுகுதோ அப்படி இருங்கோ என்று authorities கவனியாது விட்ட படியால் - எத்தினையோ அசம்பாவிதங்கள் நடந்து இருக்கு.

சின்ன பிள்ளைகளை பலி கொடுத்தால் குடும்ப கஷ்டம் தீரும் என்று கொலை கூட செய்து இருக்குதுகள் இங்க இங்கிலாந்தில். .

இல்லாட்டி இங்க ஏன்? கிட்டடியில் செய்தியில் படித்தேன் - ஈழத்தில் ஒரு பதினாலு வயது சிறுமியை தகப்பனே பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது என்று.

மேற்கத்திய நாடுகளில் சிறு பிள்ளைகளை பாலியல் குற்றங்களில் பயன்படுத்துவதை அதிகமாய் காண்கிறோம். அப்படி உள்ள ஒரு சமூகத்தில் அந்த நாட்டு அரசாங்கம் சட்டங்கள் எடுக்கும் - எல்லோரையும் அதற்குள் கொண்டு வர .\\

நிச்சயமாக சட்டங்கள் தேவை. ஆனால் மற்றைய மக்களின் வாழ்வு பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லாதவர்கள் அவர்களுக்காக முடிவெடுக்க முடியாது. அப்படி முடிவெடுக்கும்போது குற்றம் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவார்கள். அப்படி நடந்துமிருக்கிறது.

ஈழத்தில் பாலியல் கொடுமைகள் நடக்கவில்லையென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் ஆய்வாளர்கள் , வைத்தியர்கள் , உளவியல் ஆலோசகர்கள் போன்றோர்களுக்கு மற்ற மக்களின் வாழ்க்கை முறை , அவர்களின் பழக்கவழக்கங்ககள் போன்றவை தெரிந்திருக்க வேண்டுமென்கிறேன்.

\\\

எமது பிழை இல்லாத நடவடிக்கைகள் பிழையாக பார்க்க படுகிறது என்று நீங்கள் வருத்த பட்டால் ஒன்றை நீங்கள் ஜோசியுங்கோ - அப்படி அவங்கள் கெடுபிடி போட்டு இருப்பதால் எங்கோ ஒரு பிள்ளை என்றாலும் பாதுகாக்க படும்.

சிறு பிள்ளைகள் சம்மந்தமான எந்த ஒரு சட்டமும் அவர்களை பாதுகாக்கவே எடுக்க படுகிறது. ஆனால் அதன் பொருட்டு பிள்ளைகளை பெற்றோர் கண்டிக்க கூட இயலாமல் போகிறதையும் உணர்வேன். அதற்கு பெற்றோர் தங்கள் அணுமுறைகளை கொஞ்சம் மாற்ற தான் வேணும். "நாங்கள் வாங்காத அடியா உந்த வயதில" என்று ஜோசியாமல் - எங்களுக்கு இருந்த சுற்றம் சூழல் சுதந்திரம் (நாட்டை சொல்லவில்லை, அட் லீஸ்ட் முற்றம் ஒழுங்கை தெரு என்றாவது எங்கட என்னத்திற்கு ஓடி விளையாடினோம்) - இதெல்லாம் இங்கத்தைய எங்கடபிள்ளைகளுக்கு அமைவது மிக குறைவு. - இங்கு பிள்ளைகள் கதிரையில் கட்டு பட்டு இருந்து சாப்பிட்டு விட்டு, தொலைக்காட்சி முன்னாலே கிடந்தது காய்கிறார்கள். சில வீடுகளில் காற்றோட்டத்திற்காக ஜன்னல் திறந்து விடுவது கூட பிரச்சனை!

-கடைசியாக நீங்கள் சொன்ன dating violence கோதாரிக்கு என்னட்ட ஒரே பதில் தான் - இப்படியான மண்டை பிழையான சோடியளோட ஏன் மினக்கடுறியள்? :rolleyes: தெரியாமல் பிழை விடுறது வேற... முரட்டு குணம் உள்ளதுகள் என்று தெரிந்தும்...ஏன்????? \\\\

நன்றி உங்கள் விரிவான கருத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிந்தனைக்குட்படுத்தபட வேண்டிய ஒரு கட்டுரை.

"போர் சூழலில் இருந்து வந்த ஒரு சமூகம்" இதில் மன அளவிலான பாதிப்பு நிறைய இருக்கலாம் என்பது என்னுடைய தனிபட்ட எண்ணம்.

முக்கியமான இன்னொருவிடயம்....... பெரும்பாலானா எமது மக்கள் (புலம்பெயர்ந்து வாழும); அந்த நாட்டில் வாழுவதற்கு அந்த நாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாது வாழ்கிறார்கள். சுதந்திரம் என்பதன் அடிப்படை நோக்கம் அல்லது விளக்கம் பலரால் சரியா புரிந்துகொள்ளபடவில்லை. தாய்தந்தையருக்கும் பிள்ளைகளுக்குமான உறவில் தெளிவில்லை.

நாம் வாழும் நாட்டின் சட்டங்கள் எம்மால் சரியா புரிந்துகொள்ளபடல் வேண்டும். காரணம் இந்த நாட்டின் பெரும்பாண்மையானவர்களுக்கு ஒத்ததாகவும் சம்மதத்துடனும்தான் அவை இயற்றபடுகின்றன. நேற்று வந்த எமக்கு பொருந்தவில்லை என்பது விரண்டாவாதம். அதற்கு ஒரே தீர்வு அந்த நாட்டை விட்டு வெளியேறி எமக்கு சாதகமான சட்டம் இருக்கும் நாட்டுக்கு குடிபெயர்வதுதான்.

மற்றையபடி ஊடங்கள் விபச்சாரிகள்தான் எதில் தமது பிழைப்பை கூட்டலாம் என்பதில்தான் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் தவிர உண்மைகளோ நல்லவைகளோ யாருக்கும் தேவையற்றதாகிவிட்டது. நாம் தவறுகளை குறைப்பதுதான் ஒரே வழி. செய்யும் போது தமிழன் என்று போடாதே என்று அடம்பிடிப்பதிலும் அது எமக்கு இலகுவானது.

Link to comment
Share on other sites

சென்னை இலங்கைத் தமிழர் முகாமில் அகதிகள் மோதல்

சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில்இ குடிபோதையில் இருந்த அகதிகள் செய்த அட்டகாசத்தைத் தட்டிக் கேட்ட தந்தை மற்றும் இரு மகன்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் செல்வநாயகம். இவரது மகன்கள் நாகேந்திரன்இ ஜெயந்தன்.

நேற்று இரவு இதே முகாமை சேர்ந்த வாலிபர்கள் ஜெகன்இ கிருபாஇ இளையராஜாஇ பிரபுஇ செல்வம் மற்றும் யோகேந்திரன் ஆகிய 6 பேர் குடிபோதையில் முகாமில் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையுடன் சுற்றி கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்களை ஆபாசமாக திட்டி கொண்டிருந்தனர்.

இதை நாகேந்திரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் நாகேந்திரன்இ தந்தை செல்வநாயகம்இ தம்பி ஜெயந்தன் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கி அரிவாளால் வெட்டியது.

நாகேந்திரன் தலையிலும் செல்வநாயகம் இடது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. கவலைக்கிடமான நாகேந்திரன் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்வநாயகமும் ஜெயந்தனும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிப்காட் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் தலைமறைவாகி விட்ட அந்த ஆறு பேரையும் தேடி வருகின்றனர்.

http://www.tamilwin.org/view.php?2a36QV14b...3g2hP0cc3tj0Cde

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரை யதார்த்ததைச் சந்திக்க திராணியற்ற நிலை என்றே சொல்ல வேண்டும்.

கனடாவுக்கு வந்துவிட்டதாலோ.. லண்டனுக்கு வந்துவிட்டதாலோ.. கடதாசிகளில் குடியுரிமை வாங்கிவிட்டதாலோ ஒருவன் கனடியன் ஆக முடியாது. ஒருவன் பிரிட்டிஷ் ஆக முடியாது. இதுதான் யதார்த்தம்.

வெள்ளைத் தோல். நீல நிறக்கண்கள்.. பழுப்பு முடி.. இவ்வாறான பிறப்புரிமையியல் இன்றி அகதியாக (அது பொருளாதாரமாக இருக்கட்டும் அரசியலாக இருக்கட்டும்) சொந்த நாட்டையே காட்டிக் கொடுத்துவிட்டு ஓடிவந்த உங்களுக்கு கனடியன் என்று எழுதி சான்றிதழ் தந்ததே பெரிய விசயம். இருந்தாலும்.. அதை தக்க வைத்துக் கொள்ளத் தெரியாமல் அலைவதும்.. சண்டை பிடிப்பதும்.. சாதி பிரித்து அடிபடுவதும்.. நீங்கள். அப்படிச் செய்து கொண்டு மற்றவனைப் பார்த்து.. ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்க என்ன திராணி இருக்கிறது.

நிழலி கேட்பதன் உட்பொருள்.. உங்களுக்கிடையேயே நீங்கள் வேற்றுமை காணும் போது எப்படி.. கனடியர்கள் என்று அந்த மண்ணுக்குச் சொந்தமானவன்.. பிறப்புரிமையில் வேறுபட்டவன்.. உங்களை இலகுவாக இனங்கண்டு கனடியன் என்று விழிக்க முடியும் என்று. அதில் என்ன தவறு இருக்கிறது.

அடுத்தவன் பாக்கி (paki) என்றால் உடனே racism என்று அழைக்கிறீர்கள். நீங்களோ.. வெள்ளையர்களை கறுப்பர்களை சீனர்களை கனடியர்கள் என்றா அழைக்கிறீர்கள். அடிப்படையில் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்ற மாட்டீர்கள்.. ஆனால் உங்களை விட பெளதீகத் தோற்றத்தில் வேறுபட்ட அந்த நாட்டுக்கே சொந்தமானவன்.. உங்களை கனடியன் என்று அழைக்க வில்லை என்று கவலைப்படுகிறீர்கள்.

எவராவது உங்களை தமிழீழத்தான் என்று அழைக்கவில்லை என்று கவலைப்பட்டிருக்கிறீர்களா..??! இல்லையே. அதனை சாட்டி அசைலம் அடித்த நீங்களே அதனை நிந்திக்கும் போது.. உங்களின் பெளதீகத்தோற்றத்தில் இருந்தும் தெளிவாக வேறுபட்டனவன்.. அந்த நிலத்தின் பூர்வ குடி.... உங்களின் 20 - 30 வருட காலத்துக்கு முன்னான இருப்பிடத்தின் வழி உங்களை இனங்கண்டு.. அடையாளமிடுவது தவறென்றால் எப்படி..??!

கனடியன் என்று எழுதப்பட்ட சான்றுதழ்கள் சட்டதிற்கு முன் உங்களுக்கு சலுகைகள் பெற்றுத்தரலாம். ஆனால் அந்தந்த நாடுகளின் தேசிய இன மக்கள்.. உங்களை வந்தேறு அகதிக் குடிகளாக எண்ணுவதை உங்களால் குப்புறப்படுத்து சிந்தித்தாலும் மாற்ற முடியாது. அது அவனின் சுதந்திரம்.. ஒரு வகையில். அவங்களும் பல போர்களை கண்டவங்கள் தான். அமெரிக்கா உள்நாட்டுப் போரில் சிதைவடைந்து போன போது கூட ஒரு வெள்ளையனவாவது உங்கட தேசத்துக்கு ஓடி வந்து அசைலம் கேட்டானா. இல்லையே..!

அவங்களுக்குத் தெரியும்.. உங்களின் அகதி நிலை..உங்களின் பிச்சைக்காரத்தனத்தின் வெளிப்பாடு என்பது. அதை நீங்கள் கனடிய சான்றிதழை வைத்து தமிழர்களிடையே மறைக்கலாம்.. வெள்ளையர்களிடத்தில்.. அந்தந்த தேசிய இன மக்களிடையே மறைக்க முடியாது. அவர்களுக்கு தெரியும்.. தமிழர்கள் தமக்கு சூ துடைக்க வந்தவர்கள் என்பது..! இதை விட தெளிவாக உங்களை அவர்களால் அடையாளமிட முடியுமோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வெள்ளையர்கள் செய்வது சொல்வது தமிழர்கள் விடயத்தில் மெத்தச் சரி.. அதுவே யதார்த்தம்.

நாம் மலைய மக்கள் எம்மோடு கூடி வாழ்ந்த போது எப்படி அழைத்தோம்.. வடக்கத்தையார்.. தோட்டக்காட்டான்.. கூலிகள் என்றுதானே. தமிழர்கள் என்றா அழைத்தோம். இல்லையே..???! ஒரே பெளதீகத் தோற்றம் கொண்ட நாமே அப்படி சிந்திக்கும் போது.. பூர்வ குடி வெள்ளைகள்.. எம்மை ஆசியன்.. பிச்சைக்காரன்.. காட்டுமிராண்டி என்று நடத்தையால் தோற்றத்தால் இனங்காண்பதில் என்ன தவறு இருக்கிறது..??! :lol::rolleyes:

Link to comment
Share on other sites

கனடியன் என்று எழுதப்பட்ட சான்றுதழ்கள் சட்டதிற்கு முன் உங்களுக்கு சலுகைகள் பெற்றுத்தரலாம். ஆனால் அந்தந்த நாடுகளின் தேசிய இன மக்கள்.. உங்களை வந்தேறு அகதிக் குடிகளாக எண்ணுவதை உங்களால் குப்புறப்படுத்து சிந்தித்தாலும் மாற்ற முடியாது

ஒபாமா மாற்றி போட்டார் அல்லோ, பிறகு ஏன் சும்மா சன்டை பிடிப்பான் ..முடிச்சா உங்களுடயைய வாரிசுகளை அந்தந்த நாட்டு அரசியலில் சேர்த்து விடுங்கோ ,இதுதான் நீ பிறந்த நாடு இதுதான் உன்னுடைய தேசியம் அப்படி சொல்லி கொடுங்கோ,அதை விட்டிட்டு நான் இந்தியன் என்று சும்மா பாம்மாத்து காட்ட வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமா மாற்றி போட்டார் அல்லோ, பிறகு ஏன் சும்மா சன்டை பிடிப்பான் ..முடிச்சா உங்களுடயைய வாரிசுகளை அந்தந்த நாட்டு அரசியலில் சேர்த்து விடுங்கோ ,இதுதான் நீ பிறந்த நாடு இதுதான் உன்னுடைய தேசியம் அப்படி சொல்லி கொடுங்கோ,அதை விட்டிட்டு நான் இந்தியன் என்று சும்மா பாம்மாத்து காட்ட வேண்டாம்

ஒபாமா என்னத்தை மாற்றினார். வெள்ளையள் வகுக்கிற கொள்கையோட போவதுதான் அவரின் தலைவிதி. அவரையே கறுப்பு ஜனாதிபதி என்றுதான் அழைக்கிறாங்க. அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்லத் தயங்குறாங்க. அது போக.. துப்பாக்கி கொண்டு அலையுறாங்க.. அவரோ போற வாற இடத்தில சாப்பிடக் கூட பயப்பிட்டு.. பரிவாரத்தோட கிளம்பி திரியுறாரு..! இதில.. என்னத்தை மாற்றிட்டார்..! என்னதான்.. பெரிய இடத்துக்கு வந்தாலும்.. வெள்ளைத்தோல் வந்தால் தான் அது அமெரிக்க ஜனாதிபதி. இல்ல கறுப்பு ஜனாதிபதி முதல். அப்புறம் தான் அமெரிக்க ஜனாதிபதி.

வெள்ளை ஜனாதிபதியானா அது சாதாரணம். கறுப்பு வந்தா.. அது அசாதாரணம்.. அதிசயம். அந்த அதியத்தை நிகழ்த்திப் பார்க்க வோட்டுப் போட்ட வெள்ளைகள் தான் அதிகமே தவிர.. ஒபாமாவை அமெரிக்க மக்களின் தலைவனா ஏற்றுக் கொண்டல்ல..! இதுதான் உண்மை..! :rolleyes:

கறுப்பன் ஜனாதிபதியாக வர விடமாட்டங்கள் என்று தான் எல்லோரும் சொன்னவைகள் ஆனால் வந்து இரண்டுமாதத்திற்கு மேலாக ஆட்சிசெய்திட்டார்தானே,

இன்று வெள்ளைகள் வகுத்த சட்டங்கள் அவர்களையே பதம் பார்க்கிறது,

இறைவனின் பெயரால் மனிதனுக்கு எழுதப்பட்ட சட்டங்களிலும் பார்க்க,மனிதன் மனிதன் வாழ எழுதிய சட்டம் பலனளிக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகமிருக்க பனங்காய் விழுந்த கதைதான். ஓபாமா ஜனாதிபதியான கதை.

அமெரிக்க ஜனதிபதியை மக்கள் தேர்வு செய்வதில்லை..... அமெரிக்க பணக்காரர்கள்தான் தேர்வு செய்ய முடியும். ஜனாதிபதி போட்டியில் நிற்பவர் கூடுதலான பணத்தை வசூலித்து காட்;ட வேண்டும் இந்த பணத்தை கொடுப்பது பணக்காரர்களும்..... கம்பொனிகளும்.

ஜோர்ஜ்புஸ் தீவிரவாதம் என்று 8வருடங்கள் படம் காட்டி கொண்டிருக்க. சைனாகாரன் உலக சந்தைகள் எல்லாவற்றையும் தனதாக்கிவிட்டான்...... முஸ்லீம்களின் சனத்தொகையானது உலகில் பெருகி வருவதை ஜோர்ஜ் புஸ் அரசு கவனத்தில் எடுக்கவில்லை அல்லது அதற்கு நேரம் இருக்கவில்லை. முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போரை தமக்கு எதிரான போராகவே கருதினார்கள் ஒரு கால கட்டத்தில் அந்த போர் அவ்வாறுதான் நடந்தது.... காரணம் யூதர்களின் பின்வீட்டு வேலை.... யூதர்கள்தான் யோர்ஜ் புஸ்ஸின் ஆலோசகர்களாக இருந்தார்கள். இப்போது சைனாகரான் பல வேலைகளை ஆப்பிரிக்காவிற்கு கொடுத்துவிட்டான் பல தயாரிப்புகள் ஆப்பிரிக்க நாடுகளில்தான் தயாராகின்றன..... உலகின் சந்து பொந்தெல்லாம் அவன் புகுந்து கொண்டதின் விளைவு...... அமெரிக்க பொருள் உற்பத்திகளை விற்க சந்தைகள் இல்லாது போனது. இப்போது வெறும் மருத்துவ பொருட்களையே விற்க முடிகின்றது அதையும் குறைந்த விலையில் வேறு நாடுகளிடம் பெற கூடியதாக இருக்கின்றது ( இந்தியா பிரேசில் மலேசியா) ஆனால் நீங்கள் விற்க முடியாது என்று பேட்டை ரவுடிதனம் செய்துதான் அதையாவது விற்க முடிகின்றது.

இதெற்கெல்லாம் ஒரு முடிவு கட்டி முஸ்லீம்களே நீங்களும் எங்கள் சகோதரர்கள் என்று ஒரு விண்ணாணம் போட்டு பறிபோன சந்தைகளை மீண்டும் கைப்பற்ற.... ஒரு முஸ்லீம் பின்தளம் தேவைபட்டது.......... ஓபாமா தலையை நீட்டினார். அப்படியே பற்றினார்கள். இதுதான் நடந்ததே தவிர. கறுப்பினத்தவர்கள் இன்றும் ஒதுக்கபட்ட இனமாகவே இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

ஆப்கான் (தலிபான்) மேல் எப்படியான ஒரு பார்வை இங்கே நிலவுகிறதோ அதேமாதிரியான ஒரு பார்வைதான் துரதிர்ஷ்டவசமாக எம்மீதும் உள்ளது. இதற்கு ஒரு வகையில் நாமே காரணமாகவும் இருந்துள்ளோம்.

இந்த நிலைக்கு ஊடகங்களின் மேல் முழுமையான பழியை நாம் போட்டுவிட முடியாது. நமது சில செயல்பாடுகள் இங்குள்ள வேற்றினத்தவருக்கு எதிர்மறையான அனுபவங்களைக் கொடுத்துள்ளதையும் நாம் மறுக்க முடியாது.

உதாரணமாக நான் வேலைபார்த்த ஒரு நிறுவனத்தில் அந்த மேலாளர் (வெள்ளை இனத்தவர்) தொண்ணூறுகளில் ஸ்காபுரோ பகுதியில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த பகுதியில் ஆயுதம் ஏந்திய தமிழ் குண்டர் குழுக்களால் அந்த இடத்தை விட்டு பிராம்ப்டனுக்கு குடிபெயர்ந்தவர். அவரின் இடத்தில் எம்மை இருத்திப் பார்த்தோமென்றால் நிலைமை புரியும். அதாவது ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதை.

அந்த மேலாளர் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஊடகங்களுக்கு விளாசித்தள்ளியிருப்பாரோ யார் அறிவார்? ஒரு எதிர்மறையான மக்கள் அனுமானம் இப்படியாகவும் தோற்றம் பெற்றிருககலாம் என்பதை மறுக்க முடியாது.

அன்று விட்டேத்தித்தனமாக நடந்து கொண்டது இன்று ஊடகங்களின் வாயிலாக வெளிவந்துகொண்டு இருக்கின்றது. இன்றைய தலைமுறை நடந்துகொள்ளும் முறையில் நாளைய ஊடக அணுகுமுறையில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆனால் நடக்கும் கொலைகளைப் பார்க்கும்போது கனடாவில் தமிழன் ரமில் இருக்கப்போகின்றானோ என்கிற பயம் வருகிறது.

Link to comment
Share on other sites

வணக்கம் நிழலி நீங்கள் ஏன் புட்டைபற்றி பேச்சில் சோற்றைப்பற்றி கதைக்கிறீங்கள் என்று தெரியவில்லை. கட்டுரையை சரிவரப்புரிந்து கொள்ளாது நீங்கள் கருத்து எழுதுவது எவ்வளவு சரியானாது என்று எனக்கு தெரியவில்லை.

தமிழினத்துக்குள் சாதியை நீங்கள் பிரித்து கதைப்பத்க்கும் கட்டுரையாளர், ஊடகங்களில் தமிழர்கள் என்று விளிப்பதாக என்று சொல்வதங்ககு:ம் என்ன தொடர்பு?

அப்படியே உங்கள் கருத்துப்படி வைத்துக்கொள்ளுவோம், எம்மை தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துக்கொள்ள தேவையில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படியே நாமும் செய்ற்ப்பட்டால் அதை அவர்கள் ஏற்றுக்;கொள்வார்களா?

உங்களை திருப்பி நானே கேக்கிறன்... முன்னர் பாக்கிஸ்தானியர்களi அழைத்து இன்று ஒட்டுமெத்தமாக... ஆசியர்களையும் வெள்ளையர்கள் "பாக்கி" என்று அழைப்பது ஏன்?

எந்த வெள்ளையர்களோ, கறுப்பினத்தவர்களோ, கொலை செய்யப்படும் போது அவர்களது மொழியால் இனத்தால் அடையாளப்படுத்தப்படுவது அரிதே!? ஏன்? அடிப்படையில் யாருமே கனடாவின் பூர்வீக குடிகள் இல்லாத போது அவர்களது மொழியை அல்லது இனத்தை நாட்டை விளித்து அவர்களது செய்திகளை வெளியிடலாமே?

ஒரு விடயம் என்னவெண்டா, தமிழர்கள் என்று விழித்து எழுதும் போது மற்றைய சமூகங்களுக்கு எம் மீதான பார்வை மாற்றம் பெறுவது தவிர்கக முடியாதது தானே!

நீங்கள் சொல்வது போல நமக்குள் ஒற்றுமை இல்லை. நாம நெடுக சண்டை பிடிக்கிறம் என்று போட்டு நாட்டுப்பிரச்சினைக்காக நீங்கள் குரல் கொடுக்காமல் இருக்க போறீங்கள்h? நீங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை... பொல தான் இருக்கு....

ஊடகங்கள் தமிழர்கள் என்று விழிpப்பதில் எந்த தவறும் இல்லை. அதே நேரம் அவர்கள் அதை எல்லா நேரத்திலும் கடைப்பிடித்தல் நன்று ! அதையே கட்டுரையாளார் சொல்ல விழைத்தார் என்று நினைக்கின்றேன்.

ஆனால் சாதி பற்றி பேச்சை நீங்கள் வலுக்கட்டாயமாக இக்கருத்தாட்டத்தில் புகுத்த விளைந்துள்ளீர்கள் என்று நினைக்கின்றேன்.

வணக்கம் பறவைகள்,

சரியாக புரிந்து கொள்ளாமல் நான் பதில் எழுதி இருக்கின்றேன் என நீங்கள் கருதிய என் பதிலுக்குத் தான் மினக்கெட்டு பந்தி பந்தியாக நீங்கள் பதில் எழுதியுள்ளீர்கள்

சிநேகிதியினுடைய திரியின் முக்கிய கருத்து கனடிய மக்களும் ஊடகங்களும் எம் சமூகத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடும் போது கனடியர்களாக எம்மை அடையாளப் படுத்தாமல் தமிழர்களாக இன அடிப்படையில் எம்மை அடையாளப் படுத்துகின்றனர் என்பதே. இத்தகைய அடையாளப் படுத்தல்கள ஏன் வெள்ளை இன கறுப்பின மக்கள் சமூகங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறும் போது மேற்கொள்ளுவதில்லை எனவும் ஆந்தங்கப் பட்டு இருந்தார்

அதற்கான என் பதில் தான் அது.

நாம் முதலில் எம்மை கனடியர்களாக அடையாளப்படுத்துகின்றோமா? அல்லது மற்றைய இனங்களின் தனித்துவத்தையும் இன அடையாளங்களையும் மதிக்கின்றோமா? நாம் தமிழர், நாமே உலகின் மிகச் சிறந்த குடி எனும் மிதப்பில் மற்ற அனைத்து இன மக்களுக்கும் தரக்குறைவான பட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு தான் இங்கு (கனடாவில்) வாழ்கின்றோம். தம் பிள்ளைகளுக்கு எம் தமிழ் பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பது சீனர்களை “சப்பட்டைகள்” என்றும் ஆபிரிக்க –அமெரிக்க குடிகளை (Afro Americans) “கறுப்பன்” என்றும், இதே வகையில் ஏனைய இனங்களை ஒவ்வொரு பெயர்களிலும் அழைத்து கொள்கின்றோம். தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது, “கறுப்பனோடு சேராதே…வெள்ளைகள் உன்னைக் கெடுத்துப் போடுவர்” போன்ற அருமையான அறிவுரைகளே. தமிழ் சமூகத்தால் நடாத்தப் படும் வணிக நிறுவனங்களில் தமிழர் அல்லாத வேறு மக்களை பணிக்கு அமர்த்தி இருப்பதை காணமுடிகின்றதா?

நாம் எந்தக் கணமும் எம்மை தமிழர்களாக நினைத்து கொள்வோம், அடையாளப் படுத்திக் கொள்வோம் மற்றவர்களின் இன அடையாளங்களை தரக்குறைவாக சொல்லிக் கொள்வோம். அப்படி இருந்து கொண்டு, மற்றவன் மட்டும் எம்மை மதிக்க வேண்டும் ‘கனடியனாக’ கருத வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

அடுத்தது….அந்த தமிழன் எனும் அடையாளத்தையாயினும் நாம் பொதுப் படையாக ஏற்றுக் கொண்டு எமக்கும் ஐக்கியமாக இருக்கின்றோமா? இல்லவே இல்லையே. ஊரில் இருக்கும் போது எப்படி சாதி அடிப்படையில் பிரிந்து இருந்தோமா அப்படி தானே இன்னும் இருக்கின்றோம். இன்னும் “ஊரில எவ் விடம்” போன்ற சாதி விசம் செறிந்த மொழியைத் தானே காவித் திரிகின்றோம்? தாழ்ந்த சாதி என அடையாளப்படுத்தப் பட்ட சக தமிழனை தன் சொந்த சாப்பாட்டு கடையில் கூட வேலைக்கு அமர்த்த மறுக்கும் சாதி வெறியர்களாகத்தானே இங்கும் இருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லாமல் இருக்கலாம், அல்லது அப்படி இல்லாத ஒரு சமூகமாக எம்மைப் பற்றி புனித கனவு காணலாம்…ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை.

தனக்குள்ளேயே சரியான ஐக்கியமில்லாத ஒரு சமூகம், மற்ற சமூகங்களை இன அடிப்படையில் தரம் தாழ்த்தும் ஒரு சமூகம் எப்படி மற்ற சமூகம் தன்னை மதிக்கும் என எதிர்பார்க்கலாம்? தமிழன் என்றுமே தனக்குள் கூட integrate ஆக வில்லை, பிறகு எப்படி மற்ற சமூகங்களுடன் integrate ஆக முடியும்?

எம்மால் மற்ற சமூகங்களுடன் ஒத்து போக முடியாமையால் தான். எம் இனத்துக்குள் நடந்த பெரும் மனித அவலத்தினை தடுக்க நாம் பேரணியாக திரண்ட போதும் எம்மைத் தவிர்ந்த ஏனைய சமூகங்களிடம் இருந்து மிக மிக சொற்பமான ஆதரவையே பெற முடிந்தது. பலஸ்தீனரின் பேரணியில் திரளும் ஏனைய சமூகங்கள் ஏன் எம் பேரணியில் திரளவில்லை எனும் கேள்வியின் விடையில் தான் நாம் எந்தளவுக்கு மற்ற சமூகங்களிடம் இருந்து பிரிந்து இருக்கின்றோம் என்பதை உணரமுடியும். புலிகள் இறுதிக் காலத்தில் அந்தந்த நாடுகளின் மக்களுடனும் அவர்களின் மனங்களுடனும் பேசுங்கள் என்றனர். எம்மால் முடியவில்லை…ஏனெனில் நாம் ஒருக்காலும் அப்படி மற்ற சமூகங்களுடன் பேசியதுமில்லை…மதிப்பும் கொடுத்ததும் இல்லை

ஊடகங்களும் ஊடகவியாலாளர்களும் வானில் இருந்து குதித்த புனிதர்கள் இல்லை. இந்த சமூகம் எப்படி எம்மை பார்க்கின்றதோ அந்த அடிப்படையில் தான் அவர்கள் எம்மைப் பார்ப்பார்கள். அதனால் தான்

எம்மை இன அடையாளம் இட்டு குறிப்பிடுகின்றனர். அது மாற வேண்டும் எனில், முதலில் மாற்றத்தை எம்மில் கொண்டு வருவோம். பின் அவர்களின் மாற்றத்தை அவாவிக் கொள்வோம்

Link to comment
Share on other sites

***

மன்னிக்கவும், யாழ்ப்பாணம் என்றதற்கு அப்பால், இன்னும் பல ஊர்களை போட்டு இருக்க வேண்டும். அப்படி போட்டிருந்தால் கேள்வி சரியாக இருக்கும்

இந்த கேள்வி கேட்டதுக்கு காரணம், நாம் இன்னும் எம் ஊரை வைத்து, சாதியை வைத்து எம்மை அடையாளப் படுத்துவதில் இருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. அப்படி இருக்க கனடிய சமூகம் எப்படி எம்மை கனடியனாக அடையாளப் படுத்தும் என எதிர்பார்க்க முடிய்ம் என கேட்பதற்கே (கனடியர்களுக்கு தெரியவில்லை எமக்கு தமிழராக கூட ஐக்கியப் படுத்தப் பட்ட அடையாளத்தை கொடுக்க முடியாது என..)

வலைஞனுக்கு/ நிர்வாகத்துக்கு,

சைவ வேளாளர் வாதம், யாழ்ப்பாண மைய வாதம் என்று பெரிய கட்டுரைகள் வந்தால் அவற்றை அனுமதிப்பீர்கள். ஆனால் அதையே இரு வரிகளில் போட்டால் வெட்டுவீர்களா (எப்பவும் ஏபி கட்டுரைகளுக்கு மட்டும் விதிவிலக்கு போல)

நிழலி கேட்பதன் உட்பொருள்.. உங்களுக்கிடையேயே நீங்கள் வேற்றுமை காணும் போது எப்படி.. கனடியர்கள் என்று அந்த மண்ணுக்குச் சொந்தமானவன்.. பிறப்புரிமையில் வேறுபட்டவன்.. உங்களை இலகுவாக இனங்கண்டு கனடியன் என்று விழிக்க முடியும் என்று. அதில் என்ன தவறு இருக்கிறது.

சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிழலி...

வெள்ளையினத்தவர்களை... கறுப்பினத்தவர்களை பணிக்கமர்த்தியுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் வணிப நிறுவனங்களை உங்களுக்கு பட்டிலிட்டு என்னால் காட்ட முடியும்! வணிகம் என்பதற்க்குள்.. சகல விதமான வணிபங்களும் அடக்கம் என்பால்... கணினி நிறுவனங்கள்.. வைத்திய சாலைகள்... கல்விச்சாலைகள்... மற்றும் இன்னோரொன்ன நிறுவனங்களில் வேற்றினத்தவர்களை தமிழர்கள் பணிக்கமாத்தியுள்ளனர்.

ஆனால் தனிப்பட்ட அனுபவத்தில்.. ஒரு தமிழன் மேலதிகாரியாகவோ... அல்லது நிறுவனத்தின் அதிபராகவோ இருக்கும் போது... வேற்றினத்தவர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதற்க்கு சிந்திக்கின்றனர். அவர்கள் சிந்திக்க காரணம் இவ்வாறான ஊடகங்களே அன்றி நாம் சீனர்களை சப்பட்டைகள் என்று கூறுவதோ அல்லது ஆபிரிக்கர்களை கறுப்பர்கள் என்று கூறுவதோ அல்ல! அதே நேரம்... வெள்யையினத்தவர்களும்... கறுப்பினத்தவர்களும் எம்மை பிறவுண் பீப்பிள் என்று அழைப்பதை நீங்கள் அவதானிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.!

நாம் நமக்குள் அடிபடுவதற்க்கு ஊடகங்களில் தமிழர்கள் அடிபட்டர்பகள் என்று போடுவதற்க்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? அல்லது அதற்க்கும் இந்த கட்டுரைக்கும் ஏதவாது தொடர்பிருக்கின்றதா? அதை விடுவோம் எமது பேரணிகளில் மாற்றின சமூகங்கள் கலந்து கொள்ளாமைக்கு நாமே முதற்காரணம். எம்மிடம் திட்டமிடல் இருக்கவில்லை. மற்றவர்களை அனுகும் முறை எமக்கு தெரியவில்லை. அதை விடவும் குறிப்பிட்ட அமைப்பு அல்லது குறிப்பிட்டவர்கள் மட்டுமே போராட்டததை ஒழுங்கு படுத்த வேண்டும் என்ற நிலை எழுதப்படாத விpயாக இருந்தது. படித்தவர்கள்... அறிவாளிகள்... அரசியல் தெரிந்தவர்கள் கனேடிய தமிழர்களது அரசியல் களத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்தனர். இப்படியிருக்கையில் மற்ற சமூகங்கள் வராமைக்கு நாங்கள் சாதி பாக்கிறது தான் காரணம் என்று முட்டாள்த்தனமாக எழுதுவது எந்த விதத்தில் பொருந்தும். நான் வாழும் எனது குறுகிய சமூகத்துக்குள் சாதி ஒரு பிரச்சினை இல்லை. மேலாதிக்க சிந்தனை கொண்ட சில தமிழர்களால் எழுப்பபடும் இந்த சாதியா பிரச்சினைகள் பொதுவான பிரச்சினைகளே அல்ல. சிலரால் அவர்களின் நன்மைக்காக ஒருவாக்கப்படும் போலிப்பிரச்சினைகள்!

உதாரணமாக நான் வேலைபார்த்த ஒரு நிறுவனத்தில் அந்த மேலாளர் (வெள்ளை இனத்தவர்) தொண்ணூறுகளில் ஸ்காபுரோ பகுதியில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த பகுதியில் ஆயுதம் ஏந்திய தமிழ் குண்டர் குழுக்களால் அந்த இடத்தை விட்டு பிராம்ப்டனுக்கு குடிபெயர்ந்தவர். அவரின் இடத்தில் எம்மை இருத்திப் பார்த்தோமென்றால் நிலைமை புரியும். அதாவது ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதை.

இங்கு எல்லோருமே ஒண்ட வந்த பிடாரிகள் தான் யாரும் கனேடிய தேசத்தை உரிமை கோர முடியாது ஒரு சின்ன வித்தியாசம் அவர்கள் சற்று முன்னர் வந்து விட்டனர் நாம் காலம் தாழ்ந்து வந்தோம். இதனால் வெள்ளையினத்தவர்களுக்கே கனடா உரித்தானது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் கனேடிய பூர்வ குடீகள் வெள்ளையினத்தவர்களால் மிதமிஞ்சிய சலுகைகள் வழங்க்பப்ட்டு அவர்கள் தங்களை பற்றி சிந்திக்காமல் வாழ வைக்கப்பட்டுள்ளனர். நாம் கனேடியர்களாக அவர்களையே கருத முடியும்! மற்றதெல்லாம் வந்தான் வரத்தான் தான்!

ஐயா நெடுக்கால போவான் கனடா யாருக்கும் சொந்தமில்லை. வந்தேறு குடீகள் சேர்ததே கனடா...

நீங்கள் நினைப்பது போல பிரிட்டன் போல கனடா இல்லை. அதை தெளிவுற அறிந்து பின்னர் கருத்துக்குள் வாருங்கள். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அதே நேரம் எல்லோரும் எல்லாம் தெரியும் என்று காட்ட வேண்டிய தேவை கூட இல்லை!

சமூக நலக்கொடுப்பனவில் இருக்கும் வெள்ளைகளை கனேடியர்களாக ஏற்றுக்கொள்ள முடியும் எனில்... உழைத்து வருமான வரியை செலுத்தும் எம்மை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது கட்டாயமும் கூட!

கனேடிய ஊடகங்களில் பெருமளவில் பணியாற்றுவது வெள்ளையினத்தவர் அல்ல! மாறான ஆசியர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்கால போவான் கனடா யாருக்கும் சொந்தமில்லை. வந்தேறு குடீகள் சேர்ததே கனடா...

நீங்கள் நினைப்பது போல பிரிட்டன் போல கனடா இல்லை. அதை தெளிவுற அறிந்து பின்னர் கருத்துக்குள் வாருங்கள். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. அதே நேரம் எல்லோரும் எல்லாம் தெரியும் என்று காட்ட வேண்டிய தேவை கூட இல்லை!

சமூக நலக்கொடுப்பனவில் இருக்கும் வெள்ளைகளை கனேடியர்களாக ஏற்றுக்கொள்ள முடியும் எனில்... உழைத்து வருமான வரியை செலுத்தும் எம்மை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது கட்டாயமும் கூட!

கனேடிய ஊடகங்களில் பெருமளவில் பணியாற்றுவது வெள்ளையினத்தவர் அல்ல! மாறாக ஆசியர்களே!

கனடாவுக்குள் கடந்த 20 - 30 ஆண்டுகளுக்குள் அகதியாக பிச்சைக்குப் போனவர்களே தமிழர்கள். உலகெங்கும் மக்கள் ஆபிரிக்காவில் இருந்துதான் போயினர். அதற்காக எல்லா தேசங்களுக்கும் பூர்வ குடிகள் என்பது ஆபிரிக்கர்கள் அல்ல... அந்தந்த தேசங்களுக்குள் என்று நுழைந்து அதனை கட்டியமைத்து... தேசியமாக்கி.. வரலாற்றியல் படி வந்த மூத்த மக்களே இன்றைய நிலையில் அந்த தேசத்தின் மூத்த மக்கள்..!

அந்தச் தேசத்தின் மூத்த குடிகள்.. வெள்ளைகள் தான். அவர்கள் தமிழர்கள் அகதிப் பிச்சைகளாகக் குடியேற பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறி.. தமது தேசத்தைக் கட்டியெழுப்பி.. கனடிய தேசியத்தை நிறுவி இருக்கிறார்கள்.

ஒட்டாண்டிய பிழைச்சே பழகின தமிழனுக்கு எதற்கு கனடியப் பட்டம். ஆசியர்களா இருந்தாலும் கூட 20-30 வருடத்துக்குள் கனடாவுக்குள் கள்ளமாக நுழைந்து களவெடுக்கும் கொள்ளையடிக்கும் கொலை செய்யும் தமிழர்களை தமிழர்கள் என்று விளிப்பதில்ல் எந்தத் தவறும் இல்லை. என்ன தவறு இருக்கிறது..??!

நான் மேலே சொன்ன உதாரணத்தில்.. ஊரில் வீட்டு வேலைக்கு அமர்த்தும் மலையக மக்களை நீங்கள் அல்லது உங்கள் மூதாதையோர் எப்படி நடத்தினீர்கள். தமிழர்கள் என்றா..??! அவர்கள் களவெடுத்தால்.. என்னென்று அழைத்தீர்கள்.. வடக்கத்தை.. களவெடுக்குது. தோட்டக்காட்டான் களவெடுக்கிறான். 180 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவனையே உங்களால் தமிழன் என்று அடையாளம் காண முடியவில்லை. கனடாவுக்குள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறி.. அதனைக் கட்டி எழுப்பி.. தேசியமாகக் கொண்டு வாழும் வெள்ளை.. உங்களுக்கு ஏற்றுக் கொண்ட மனிதாபிமானச் சட்டங்களுக்கு அமைய அகதி அந்தஸ்து தந்து கனடியன் என்று ஆக்கினதற்காக.. கனடியன் என்று மதிப்பளிக்கனும் என்பதற்கு வரலாறு படிச்சிட்டு கருத்தெழுத வேண்டும் என்ற அவசியமில்லை.

கனடா மட்டுமல்ல.. ஈழத்தில் கூட உங்களுக்கு வரலாறில்லை. எப்ப வந்தீங்க.. குடியேறினீங்க.. என்று. இத்தனை வருட போராட்டத்தின் பின் கூட.. உலகின் முன் உங்களால் அத்தாட்சிப்படுத்திய உங்கள் வரவை இலங்கைத் தீவில் சமர்ப்பிக்க முடியல்ல. அதை உலகம் ஏற்கச் செய்ய முடியல்ல. அப்படி இருக்கு உங்கட வரலாறு. இதற்குள்.. கனடாவுக்குள் 20 - 30 ஆண்டுக்குள் நுழைந்த நீங்கள்.. அதனை பரிபாலனம் செய்யும் அதன் மூத்த குடிகள்.. (அதிகார பூர்வ வரலாற்றுப் பதிவுகளுடன் குடியேறிய மக்கள். கள்ளமாக பாஸ்போட் கிழிச்சிட்டு வந்தவர்கள் அல்ல) வெள்ளைகள் உங்களை கனடியர்கள் என்று அழைக்கனும் என்பதில் பெருமை காண விளைவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

கனடிய ஊடகங்களாவது உங்களில் நிலையை சரிவர விளங்கிச் செய்தி இடுகின்றன என்பதை இட்டு நான் உண்மையில் பெருமைப்படுகிறேன்.

ஏன் லண்டனில் கூட சில இடங்களில் தமிழர்கள் அல்லது இந்தியர்கள் மட்டும் போகும் கார்களை பொலிஸார் மறித்து சோதனை செய்வர். அவர்களுக்குத் தெரியும்.. தமிழர்கள் எவ்வளவு சுத்துமாத்துக் கள்ளர் என்று. நேர்மையற்ற உங்கள் நடத்தைகளே உங்களை அந்தந்த சமூகங்கள் உள்வாங்கத் தயங்குகின்றமைக்குக் காரணமே அன்றி.. மற்றவர்களைக் குறைசொல்ல இதில் எந்த நியாயமும் உங்களிடம் இல்லை..! <_<

Link to comment
Share on other sites

.

கனடாவுக்குள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறி.. அதனைக் கட்டி எழுப்பி.. தேசியமாகக் கொண்டு வாழும் வெள்ளை.

அப்ப பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு எங்களுடைய பரம்பரை கனடியன் தான் ,அவனும் பிரதமராக வரலாம் என்று சொல்லுறீயள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு எங்களுடைய பரம்பரை கனடியன் தான் ,அவனும் பிரதமராக வரலாம் என்று சொல்லுறீயள்

ஈழத்திலேயே உங்களுக்கு உங்கட பரம்பரைக்கு வரலாறில்லை. கனடாவில.. கனவுதான்..! <_<:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுங்கால போவான் அவர்களே... பல நூறு ஆண்டுகளாக வெள்ளைகள் ஒன்றும் வெட்டி புடுங்கல்ல கனடா என்ற தேசம் கட்டமைக்கப்பட்டு வெறும் 143 ஆண்டுகள் தான் ஆகுது. அப்பிடி பார்க்க போனாலும் கனேடிய பொருளாதாரத்தில அதன் கட்டமைப்புக்களில் தங்கள் உயிர்களை கூட அர்பணித்தது சீனர்களே.... கொட்டும் பனிக்குள்ளும் வெயிலுக்குள்ளும் 3000 கீலோ மீற்றர் நீளமான ரெயில் பாதையை அமைத்தது முதல் சீனர்கள் தான் கனேடிய கட்டுமானத்தில் கை கொடுத்தவர்கள்.

அதை விடுத்து விடயத்துக்கு வருவோம்....

நீங்கள் நினைப்பது உங்களது குறுகிய மனப்பாங்கு அல்லது தாழ்வு மனப்பாங்கு என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதாவது நான் நான் இப்படித்தான் வாழ வேண்டும் ஏன் எனில் நான் இப்படித்தான் வாழ்ந்தேன் என்று நினபை;பது. அந்த தாழ்வு மனப்பாங்குக்குள் வாழும் தமிழர்களாக நாம் இருக்க விரும்பவில்லை. உங்கள் ஊர்களில் இந்திய தமிழர்களை நீங்கள் உங்கள் முப்பாட்டன்கள் மதிக்க வில்லை என்பதற்க்கா எமது சுய மரியாதையை கிடைக்க வேண்டிய இடத்தில் நாம் இழக்க அனுமதிக்க முடியாது. நீங்கள் சொல்லும் வெள்ளையினத்தவர்கள் அரசாங்கம் அமைக்க தமிழர்களாக எமது வரிப்பணமும் உழைப்பும் கூட காரணமாகின்றது.

நீங்கள் நினைப்பது போல அல்லது நீங்கள் கருத்தை உள்வாங்கியது போல நாம் முரண்படுவது நாம் கனேடியர்களா இல்லையா என்பதில் அல்ல. மாற்றினத்தவர்களை ஏன் அவர்களது பூர்வீகம் கொண்டு அழைக்கவில்லை? ஏன் தமிழர்கள் மட்டும் அப்படி அழைக்கப்படுகின்றனர் என்பதே?

அவர்கள் அழைப்பது தவறு என்று சொன்னாலும் இங்கிலாந்தில் இருந்து கொண்டு இல்லை இல்லை இவர்களை அப்படித்தான் அழையுங்கள் என்று நீங்கள் சொல்வீர்கள் போல கிடக்கு.

கனடா... பல்கலாச்சார நாடு - இது மற்றைய நாடகளில் இருந்து வேறுபடுவதும் இதில் தான். இது ஒரு குடியேற்ற நாடு என்ற வகையில் தான் குடியேற்றியவர்களை சமனாக மதிக்க கற்றுக்கொண்டுள்ளது. அரசியல்... பொருளாதார.... மற்றும் சமூக ரீதியில் கனேடியர்கள் என்ற ரீதியில் சகல உரிமைகளையும் அது எமக்கு வழங்கியுள்ளது.

ஆனால்... கனாவில் இயங்கும் ஊடகங்களால் ஏன் அப்படி செய்ய முடியவில்லை....

எனக்கு ஒரு வெள்ளையின நீதிபதி ஒருவர் கேட்டார்.. எங்கிருந்து வந்தாய் என்று? நான் இலங்கை என்றேன..... இல்லை இல்லை இல்லை நீ எங்கிருந்து வந்தாய் என்றார் மீண்டும்... அப்போது தான் டவுன்ரவுன் என்றேன்... அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். இது தான் இங்கிருக்கும் பிரச்சினை என்று....

எனவே தெளிவாக அவர்கள் எம்மை அங்கீகரிக்கின்றனர். அவர்களோடு நாம் சிற்சில சந்தர்பங்களில் முரண்பட்டுக்கொள்கின்றோம் ஆனால் இங்கு பிரச்சினை எல்லாம் ஊடகங்களே!

பிரதமர் ஸ்ரீபன் ஹர்பர் வருடப்பிறப்பு வாழ்த்தை சொல்லும் போதோ... அல்லது நாங்கள் போராட்டங்களை நடாத்தி போதோ.. ஊடகங்கள் தமிழ் -கனேடியர்கள் என்ற பதத்தையும்.... ஒரு குழுவுக்கிடையேயான சண்டைகளின் போது தமிழர்கள் அல்லஐ இலங்கை -தமிழர்கள் என்று இரு வேறு நிலையில் எழுத வேண்டிய தேவை என்ன?

.

அப்ப பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு எங்களுடைய பரம்பரை கனடியன் தான் ,அவனும் பிரதமராக வரலாம் என்று சொல்லுறீயள்

அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஸ் ரீபன் ஹர்பர் பிரதமாராக முடியும் எனில்....

கறுப்பினத்தை சார்ந்த ஒருவர் கவர்னல் ஜெனரல் ஆக முடியுமெனில் எம்மாலும் முடியும்

(அதுக்கு முதல் அரசியல் ஒற்றுமை வேணும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா... பல்கலாச்சார நாடு - இது மற்றைய நாடகளில் இருந்து வேறுபடுவதும் இதில் தான். இது ஒரு குடியேற்ற நாடு என்ற வகையில் தான் குடியேற்றியவர்களை சமனாக மதிக்க கற்றுக்கொண்டுள்ளது. அரசியல்... பொருளாதார.... மற்றும் சமூக ரீதியில் கனேடியர்கள் என்ற ரீதியில் சகல உரிமைகளையும் அது எமக்கு வழங்கியுள்ளது.

நல்லது. கனடா பல்கலாசார நாடு என்று சொன்னதற்காக நீங்கள் அகதிகளாக கள்ளமாகப் போனவர்கள் கனடியர்கள் என்று சான்றிதழ் அளிக்கப்பட்டதன் பெயரில் கனடியர்கள் என்று விளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் பூர்வீகம்.. சொல்லப்படுவதில் உங்களுக்கு விருப்பமில்லை.

இதையே சிறீலங்கா பல்கலாசார நாடு.. அங்குள்ள தமிழர்கள் ஏன் தங்களை சிறீலங்கன் என்று அழைக்க விரும்புகிறார்கள் இல்லை. தமிழர்களாக இனங்காட்ட விரும்புகின்றனர் என்று கேட்டால் அதற்கு உங்களின் பதில் என்ன..???!

நீங்கள் இலங்கையின் மூத்த குடிகள் என்று சொல்வீர்களாக்கும்..???!

ஐயா தாழ்வுமனப்பான்மையும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல. நான் யதார்த்தைச் சொல்கிறேன். நீங்கள் கனடாவில் உள்ள தமிழர்கள் பலர் தான் எதற்கு எடுத்தாலும் அடுத்தவனுக்கு தாழ்வுமனப்பான்மை என்கிறீர்கள். நான் தமிழனாக இனங்காட்டுவதில்.. பல் கலாசாரத்துள் என்னை தனித்துவமாக இனங்காட்டுவதில் எனக்குப் பிரச்சனை இல்லை. அதனை வரவேற்கிறேன்.

இப்போ தமிழர்கள் யூதர்கள் போல சாதனைகள் செய்தும்.. வன்முறைகள் அற்றும்.. கனடிய பூர்வ குடிகளால் மதிப்பளிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டமாக இருந்து.. அப்போது கனடிய பத்திரிகைகள் உங்களை தமிழர்கள் என்று விளித்து பெருமை பேசின் அப்போதும் இதே கனடியன் என்று சொல்ல வேண்டும் என்றா அடம்பிடிப்பீர்கள்..??!

இல்லை.. மெளனமாக அதை உங்கள் கெளரவமாக ஏற்றுக் கொள்வீர்கள்.

ஆக நீங்கள் உங்கள் செயல்களின் மூலம் தீர்மானித்ததன் படியே கனடாவில் இனங்காணப்படுகிறீர்கள். அதற்கு ஏன் கனடிய பிற இனத்தவரை இழுத்து வைத்துப் பேசுகிறீர்கள். அதுதான் உங்கள் வழக்கமாச்சே. அடுத்தவன்ர பிள்ளை 4 ஏ எடுத்திட்டா என்ர பிள்ளை ஏன் எடுக்கல்லை என்று திட்டிற கூட்டம் தானே.

ஐயா அவன் அந்த பல்லின தேசத்தில் தனது இனத்துவத்தை மற்ற இனங்கள் மதிக்க பாதுகாத்துக் கொண்டதால்.. அவ்வாறு வேறுபாடுகளுக்கு அப்பால் அந்த மக்களால் உள்வாங்கப்பட்டிருக்கக் கூடும்.

ஒரு ஆட்டு மந்தையில் ஒரு ஆடு கோணல் என்றால் அதை கோணல் என்று சொல்வீர்களா.. இல்ல ஆடு என்பீர்களா..??! நீங்காள் பல்லின தேசத்தில்.. கோணல் ஆடு போன்றவர்கள். அப்படி நடந்து கொண்டுவிட்டீர்கள். நீங்கள் தான் உங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதைச் செய்துவிட்டு.. உங்களுக்கான கெளரவத்தை மற்றவர்களிடம் எதிர்பாருங்கள். மற்றவன் உங்க கூட வாழ முடியாது என்று ஊரை விட்டே ஓடுகிறான்.

நானும் கவனித்தேன்.. இத்தனை போராட்டங்கள் நடந்த இடத்தில் வேற்றினத்தவர்கள் உங்களோடு கூடி இயங்கவில்லை. அதுவே நீங்கள் ஒரு தனிமைப்பட்ட நிலையில் அங்கு வாழ்கிறீர்கள்.. அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்கிறீர்கள் என்று இனங்காட்டியது.

நீங்கள் எப்படி ஊரில் சாதிக்கொரு கிராமம் வைச்சிருந்தீங்களோ.. அப்படியே கனடாவிலும் இருக்க விரும்புகிறீர்கள். ஆகப் போனால் கறுப்பர்கள் போல மாறிடலாம் என்றீர்கள்.

இல்லை.. உங்களுக்கென்றான தனித்துவத்தோடு மற்றைய இனங்களோடு உறவாடி.. வாழும் நிலை உங்களிடம் இல்லை. மற்றவனுக்கு எது அசெளகரியம்.. எது செளகரியம் என்று அறியாத ஜென்மங்களே தமிழர்கள். அப்படியாக வாழ்ந்து கொண்டு எப்படி கனடியர்கள் உங்களைக் கனடியர்களாக வழங்கப்பட்ட சான்றிதழ்களின் கீழ் அடையாளம் காண வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.

எனக்குப் புரியவில்லை.. கனடாவில் உங்களுக்கு கனேடியன் என்று சொல்லவில்லை என்று கோபம். சிறீலங்காவில் உங்களை தமிழன் என்று சொல்லவில்லை என்று கோபம்.

அடிப்படையில் கனடாவும்.. சிறீலங்காவும் பல்லின மக்கள் வாழும் தேசங்கள் தானே. கனடாவில் பல்லினத்துவத்தை ஏற்கும் நீங்கள்.. சிறிலங்காவில் மறுதலிக்கிறீர்கள்..??! சுயமுரண்பாடுகள்.. நிறைந்த உங்களை எப்படி மற்றைய சமூகங்கள் உள்வாங்கும்.. கனடியர் என்று இனங்காணும்..???! :lol:<_<

------------------------

Canada (pronounced /ˈkænədə/) is a country occupying most of northern North America, extending from the Atlantic Ocean in the east to the Pacific Ocean in the west and northward into the Arctic Ocean. It is the world's second largest country by total area[7] and shares the world's longest common border with the United States to the south and northwest.

The land occupied by Canada was inhabited for millennia by various groups of Aboriginal people. Beginning in the late 15th century, British and French expeditions explored, and later settled along, the Atlantic coast. France ceded nearly all of its colonies in North America in 1763 after the Seven Years' War. In 1867, with the union of three British North American colonies through Confederation, Canada was formed as a federal dominion of four provinces.[8][9][10] This began an accretion of provinces and territories and a process of increasing autonomy from the United Kingdom. This widening autonomy was highlighted by the Statute of Westminster of 1931 and culminated in the Canada Act of 1982, which severed the vestiges of legal dependence on the British parliament.

A federation comprising ten provinces and three territories, Canada is a parliamentary democracy and a constitutional monarchy, with Queen Elizabeth II as its head of state. It is a bilingual and multicultural country, with both English and French as official languages both at the federal level and in the province of New Brunswick. Technologically advanced and industrialized, Canada has a diversified economy reliant upon its abundant natural resources and upon trade—particularly with the United States, with which Canada has had a long and complex relationship. It is a member of the G8, NATO, OECD, WTO, the Commonwealth of Nations, the Francophonie, the OAS, APEC, and the United Nations.

The name Canada comes from a St. Lawrence Iroquoian word, kanata, meaning "village" or "settlement". In 1535, indigenous inhabitants of the present-day Quebec City region used the word to direct French explorer Jacques Cartier towards the village of Stadacona.[11] Cartier later used the word Canada to refer not only to that particular village, but also the entire area subject to Donnacona (the chief at Stadacona); by 1545, European books and maps had begun referring to this region as Canada.[12]

From the early 17th century onwards, that part of New France that lay along the Saint Lawrence River and the northern shores of the Great Lakes was named Canada, an area that was later split into two British colonies, Upper Canada and Lower Canada, until their re-unification as the Province of Canada in 1841. Upon Confederation in 1867, the name Canada was adopted as the legal name for the new country,[13] and Dominion was conferred as the country's title;[14] combined, the term Dominion of Canada was in common usage until the 1950s. Thereafter, as Canada asserted its political autonomy from Britain, the federal government increasingly used simply Canada on state documents and treaties, a change that was reflected in the renaming of the national holiday from Dominion Day to Canada Day in 1982.[15]

Ethnic groups 80.0% White/European (English, French, Scottish, Irish, German, others)[2]

4.0% South Asian

3.9% Chinese

3.8% Aboriginal

3.3% Other Asian

2.5% Black/African

2.5% Others[3]

http://en.wikipedia.org/wiki/Canada

----------------------

Sri Lanka..!

Ethnic groups (2001) ≈73.8% Sinhalese,[3]

≈13.9% Tamil,[4]

≈7.2% Moors,[5]

≈4.6% Indian Tamil,[6]

≈0.5% Others.[7]

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஸ் ரீபன் ஹர்பர் பிரதமாராக முடியும் எனில்....

கறுப்பினத்தை சார்ந்த ஒருவர் கவர்னல் ஜெனரல் ஆக முடியுமெனில் எம்மாலும் முடியும்

(அதுக்கு முதல் அரசியல் ஒற்றுமை வேணும்)

அதுதானே முடியும் ,என்ன கொஞ்ச காலம் எடுக்கும் ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.