Jump to content

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு

Recommended Posts

வணக்கம் ஐயா பின்னூட்டங்களுக்கு நன்றி!

டிங்கிரி - சிவகுரு இரட்டையர்கள் பற்றி வாசிக்கும் போது.. அவர்கள் வெளியிட்டுள்ள நகைச்சுவை நாடகங்கள் ஞாபகத்திற்க்கு வந்து விட்டன...

அவர்கள் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் சரியா ? ?

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஐயா பின்னூட்டங்களுக்கு நன்றி!

டிங்கிரி - சிவகுரு இரட்டையர்கள் பற்றி வாசிக்கும் போது.. அவர்கள் வெளியிட்டுள்ள நகைச்சுவை நாடகங்கள் ஞாபகத்திற்க்கு வந்து விட்டன...

அவர்கள் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் சரியா ? ?

தம்பி தர்மராஜ்

நான் ரசித்த நகைச்சுவை இரட்டையர்கள் என்றால், சக்கடத்தார் இராஜரத்தினம் - சசி நாகேந்திரா, அடுத்தது டிங்கிரி கனகரத்தினம் - எம்.சிவகுரு. முதலாவது ஜோடியை நான் கொழும்பில் நடந்த நிகழ்ச்சிகளில் பார்த்தேன் கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது ஜோடியை யாழ்ப்பாணத்தில் திறந்தவெளியரங்கில் நடந்த பௌர்ணமிக்கலைவிழாவில் ஒரு நீண்டநாடகத்தில் பார்த்துவிட்டு, அவர்களை தனியாக நிகழ்ச்சி செய்யச்சொல்லி, கொழும்புக்கு அழைத்துச்சென்றேன். அங்கே கலக்கிவிட்டார்கள். பின்னர் எனது நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அவர்களை அழைத்துச்செல்வேன்.

நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த "வாடைக்காற்று" திரைப்படத்தில் அவர்களை நடிக்க வைத்தேன்.

அதைப்பார்த்துவிட்டு ஜோதேவ் ஆனந்த என்ற இயக்குனர் தனது இரத்த்தின் இரத்தமே திரைப்படத்தில் டிங்கிரியை நடிகர் நாகேசுடன் (இருவரும் ஒரேமாதிரி தோற்றமுடையவர்கள்) நடிக்க வைத்தார்.

எளிமையான கிராமியத்தன்மை வாய்ந்த நகைச்சுவைக்கலைஞர்கள்.. ஆனால் இப்போது அவர்கள் இருவரும் இல்லை என்பதுதான் சோகமான செய்தி.

பழைய நினைவுகளில் தோயச்செய்து விட்டீர்கள். நன்றி

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கரையைத்தேடும் கட்டுமரங்கள்" வெளியீட்டு விழா

postcover.jpg

[தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்தான் என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது. - கே.எஸ்.பாலச்சந்திரன்

.

கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் -

கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வெளியீட்டுவிழா

ஒக்டோபர் 3 2009

சனிக்கிழமை

மாலை 5.30க்கு

இடம்:

அஜின்கோட் சமூக நிலையம்

31, கிளென் வாட்போர்ட் டிறைவ்

ஸ்காபரோ, ஒன்ராரியோ

கனடா

Link to comment
Share on other sites

வணக்கம் ஐயா,

உங்கள் நாவலை நான் ஏற்கனவே இணையவழி வடலியூடாக பெற்று இருக்கின்றேன். உங்களை இன்னமும் நேரில் பார்க்க இல்லை. தொலைக்காட்சியில் பார்த்து இருக்கின்றேன். காலம், சூழ்நிலை இடம்கொடுத்தால் நிச்சயம் நானும் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வேன். தகவலுக்கு நன்றி!

அன்பான தம்பி கலைஞன்,

நேரில் சந்திக்ககிடைத்தால் சந்தோசப்படுவேன். கனடாவாழ் யாழ்கள அன்பரெல்லாம் விழாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களிற்கு,

அண்ணறைற் இளமையில் என்னை மிகவும் மகிழ்வித்த படைப்பு. சில வசனங்கள் இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றன.

"சங்கானையில இருக்கிற வாழக்குலை எல்லாம் பழுக்கிறது எங்கட பஸ் விர்ர புகையாலதானே".

"மணியண்ண பருத்த நேர்ஸிட மடியில"

:lol:

வாடைக்காற்று படம் பார்த்து இருக்கிறேன். மற்றும் உங்கள் நாடகங்கள் சிலவும் பார்த்ததாக ஞாபகம்.

ம‌கிழ்ச்சிக‌ர‌மான‌ பொழுதுக‌ளைத் த‌ந்த‌த‌ற்கு மிக‌வும் ந‌ன்றி.

த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் வாசித்து ப‌ல‌ ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌ன‌. உங்க‌ள் புத்த‌க‌ம் நிச்ச‌ய‌ம் வாசிப்பேன்.

வாழ்த்துக்க‌ள் க‌லைஞ‌ரே.

Link to comment
Share on other sites

அன்பான தம்பி கலைஞன்,

நேரில் சந்திக்ககிடைத்தால் சந்தோசப்படுவேன். கனடாவாழ் யாழ்கள அன்பரெல்லாம் விழாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

நன்றி ஐயா. எனக்கு அறிமுகமான கனடாவாழ் யாழ் கள நண்பர்களிடம் தகவலை சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஈசன்,

மேடை நிகழ்ச்சியில் 'அண்ணை றைற்' நிகழ்ச்சியும், வானொலி நாடகங்களில் 'தணியாததாகமும்', திரைப்படத்தில் 'வாடைக்காற்றும் என் அடையாளங்களாகின. இப்போது என்நாவல் உங்கள்முன் வருகின்றது.

மாப்பிள்ளை, உங்கள் ஆதரவுக்கு நன்றி

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடலி வெளியீடான கே.எஸ் பாலச்சந்திரனது கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் குறித்த அறிமுகம் குமுதம் தீராநதி செப்டம்பர் இதழில் வெளியாகியுள்ளது. பி.எச்.அப்துல் ஹமீத் இவ் அறிமுகத்தை எழுதியிருக்கிறார். இதழின் பிரதியெடுக்கப்பட்ட பக்கங்களை இங்கு காணலாம். கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் தற்போது தமிழக புத்தகக் கடைகளில் கிடைக்கிறது. கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் 3 இதன் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது.

theera1.jpg

theera2.jpg

Link to comment
Share on other sites

சயந்தன்,

குமுதம் குழுமம் சார்ந்த "தீராநதி" என்ற இலக்கியப்பத்திரிகை நமது நாட்டு எழுத்தாளரின் நாவலுக்கு இரண்டு பக்கச்செய்தி போட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதானே..

இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச்சொலகிறேணே என்பதை உறுதிப்படுத்தமுடியாது, யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் உள்ள "ஸ்ரான்லி பேர்ணிச்சஸ" உரிமையாளர் சிங்கம் என்பவருடன் நான் அண்ணைறைற்ரைப் பார்த்திருக்கிறேன். இவர் யாழ வீரசிங்கம் மண்டபத்தில் இறைவரித்திணைக்களத்தில் வேலைசெய்ததாக ஞாபகம். எனக்கும், எனது நடபு வட்டத்திற்கும் கே.எஸ் பாலச்சந்திரன் என்றால் உடனடியாக மனதில் அடையாளம் கொள்வது சிரமம் "அண்ணைறைற்" என்றால் உடனடியாக மனதில் ஒன்றிவிடுவார். தணியாததாகம் அக்காலங்களில் வாணெலி நாடகத்தின் தடத்தினையே மாற்றிப்போட்டிருந்தது. அதன்போதுதான் அந்நாடகத்தின் இடைச்செருகலாக "அண்ணைரறைற்" நாடகத்தை நான் முதல்முதலாகக் கேடடேன். தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வடலி தற்போது தமிழ்ப்புத்தக வெளியீட்டில் பாரிய புரட்சியையே நிகழ்த்தியுள்ளதை கே.எஸ் அவர்களது வெளியீடு கட்டியம் கூறுகிறது. அனைவருக்கும் எனது வாழத்துக்கள். காலக்கிரமத்தில் கே.எஸ் அவர்களது புத்தகத்தை வாங்க முயற்சிசெய்கிறேன். வடலியின் ஏனைய வெளியீடுகளையுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாவல் அருமை.

நன்றி அக்பர் கான். நாவலைப்பற்றிய விரிவான உங்கள் கருத்தை நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

அன்புடன்

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாகச்சொலகிறேணே என்பதை உறுதிப்படுத்தமுடியாது, யாழ்ப்பாணத்தில் ஸ்ரான்லி வீதியில் உள்ள "ஸ்ரான்லி பேர்ணிச்சஸ" உரிமையாளர் சிங்கம் என்பவருடன் நான் அண்ணைறைற்ரைப் பார்த்திருக்கிறேன். இவர் யாழ வீரசிங்கம் மண்டபத்தில் இறைவரித்திணைக்களத்தில் வேலைசெய்ததாக ஞாபகம். எனக்கும், எனது நடபு வட்டத்திற்கும் கே.எஸ் பாலச்சந்திரன் என்றால் உடனடியாக மனதில் அடையாளம் கொள்வது சிரமம் "அண்ணைறைற்" என்றால் உடனடியாக மனதில் ஒன்றிவிடுவார். தணியாததாகம் அக்காலங்களில் வாணெலி நாடகத்தின் தடத்தினையே மாற்றிப்போட்டிருந்தது. அதன்போதுதான் அந்நாடகத்தின் இடைச்செருகலாக "அண்ணைரறைற்" நாடகத்தை நான் முதல்முதலாகக் கேடடேன். தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வடலி தற்போது தமிழ்ப்புத்தக வெளியீட்டில் பாரிய புரட்சியையே நிகழ்த்தியுள்ளதை கே.எஸ் அவர்களது வெளியீடு கட்டியம் கூறுகிறது. அனைவருக்கும் எனது வாழத்துக்கள். காலக்கிரமத்தில் கே.எஸ் அவர்களது புத்தகத்தை வாங்க முயற்சிசெய்கிறேன். வடலியின் ஏனைய வெளியீடுகளையுமே.

ஆமாம் இளஞாயிறு - 81,82 ஆண்டுகளில் யாழ்வீரசிங்கம் மண்டபத்தில் இருந்த இறைவரித்திணைகள் கிளையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். சிங்கம் என் நண்பர். தொடர்பு விட்டுப்போய்விட்டது. அவரது சகோதரரை கனடவில் சிலகாலத்தின் முன் சந்தித்தேன். எனது நாவலை என்னிடமிருந்தே பெற்றுக்கொள்ளலாம். அனுப்பிவைப்பேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

உங்கள் புத்தக வெளியீட்டு விழா நன்றாக நடந்திருக்கும் என நம்புகிறேன். படங்கள் இருந்தால் இணையுங்களேன்.

மேலும் லண்டனில் விழா எப்போது நடைபெற உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் புத்தக வெளியீட்டு விழா நன்றாக நடந்திருக்கும் என நம்புகிறேன். படங்கள் இருந்தால் இணையுங்களேன்.

மேலும் லண்டனில் விழா எப்போது நடைபெற உள்ளது?

அன்பின் ஈஸ்- கீழேயுள்ள யாழ்கள இனைப்பில் கலைஞன் உதவியோடு விழாப்படங்கள் இணைக்கப்ப்பட்டிருக்கின்றன.

பாருங்கள் நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=63615

கே.எஸ்.பாலச்சந்திரன்

Link to comment
Share on other sites

நன்றி ஐயா. உங்களைப்போல பெரியவர்களுடன் இணையத்திலாவது தொடர்பு கொள்வது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். உங்கள் நாவலைத் தேடிப்படிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மிகச் சிறந்த கலைஞர்களால்தான் சிறந்த நகைச்சுவை நடிகர்களாக முடியும் என்கிற கருத்தை அண்மைக் காலங்களில் கோடம்பாஅத்தில் அடிக்டி கேட்க்க நேரிடுகிறது. உண்மையில் அது என்னுடைய நெடுநாளைய தோழன் கே.எஸ்.பாலாவை நினைவு படுத்துகிற கூற்றகும். தோழரின் நாவல் கையில் கிடைத்ததும் நான் அதனை வாசித்துவிட்டு விரிவாக எழுதுவேன். நிழலியின் குறிப்புகள் அவரது தலை முறை இளைஞர்கள் பற்றிய பயனுள்ள பதிவு. எனக்கு யாராவது உள்ளம் வர் கள்வன் பாலாவின் மின் அஞ்சல் முகவரியைத் தர முடியுமா

- வ.ஐ.ச.ஜெயபாலன்

அன்பின் ஜெயபாலன்,

உங்கள் கவிதைகளில் மோகம் கொண்டவ்ன். உங்களின் நீண்டகால நண்பன். அண்மைக்காலத்தில் தொடர்புகள் அற்றுப்போய்விட்டாலும் உங்களின் செயற்பாடுகளை(திரைப்படங்களில் நடிப்பது உட்பட) அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன். குறிப்புக்கு நன்றி. யாழ்களம் மூலமாக எனக்கு செய்தி அனுப்பலாம்.

கே.எஸ்.பாலச்சந்திரன்

நன்றி ஐயா. உங்களைப்போல பெரியவர்களுடன் இணையத்திலாவது தொடர்பு கொள்வது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். உங்கள் நாவலைத் தேடிப்படிக்கிறேன்.

அன்பின் ஈஸ்- நாவலைப்படித்தபின் அபிப்பிராயத்தை எழுதுங்கள். நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் அண்னை சொல்லபோனால் உங்களை பற்றி எனக்கு தெரியாது இருந்தாலும் தமிழர்களுக்கு[ஈழ] முற்று புள்ளிவைக்கும் இந்த காலத்தில் உங்களைப் போன்றோர்களால் நம் தமிழர்களுக்கு இன்னும் பல புத்தகங்கள் வெளியீட்டு இன்னும் பல படைப்பாளிகள் உருவாக வேண்டும் என்பது எனது அவா

பல படைப்பாளிகள் இடம்பெயர்ந்தாலும் உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதுவே போதுமாகவுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.