Archived

This topic is now archived and is closed to further replies.

theeya

கனவுகள்

Recommended Posts

கனவுகள்

வாழ்க்கையின் எண்ணங்களைத்

தொலைத்து

தினந்தினம்

கனவுகள் காண்கிறோம்.

சொந்த ஊர் திரும்பும்

நினைவுகள்

இதயத்தை அழுத்த

கனவுகளில் கூட

அவைதானே

வந்து தொலைக்கின்றன

Share this post


Link to post
Share on other sites

தியா,

சொர்க்கமே என்றாலும்,

சொந்த ஊரைப்போல வருமா...?எல்லோருடைய கவலைகளும் இது தான்.நன்றி உங்களின் கவிக்கு.

யாயினி

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • உருவாகும் சமுதாயத்தை உருவாக்கும் தூண்களாக இவர்கள் இருந்து, இவர்களது  பணி தொடர வாழ்த்துக்கள். கொரோனாவின் சாதனை. அயலவரின் தேவை அறிந்து உதவ இவர்களை அழைத்திருக்கிறது.   
    • தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு   கரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை உலகம் முழுவதும் அகல விரித்துக்கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரேசில் நாடு தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 4,65,166 தொற்றுகளுடன் இரண்டாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. அதேபோல அங்கே 27 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கரோனாவுக்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்நாட்டின் மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பின் பிரேசில் நிலவரம் இப்படியிருக்க, கரோனாவை முன்னதாகக் கட்டுப்படுத்திவிட்ட வெகுசில நாடுகளில் சீனாவுக்கு அடுத்த நிலையில் மிகவும் பாராட்டப்பட்ட வந்தது தென்கொரிய தேசம். அங்கே 11,441 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 269 பேர் மரணித்திருந்தனர். ஆனால், தற்போது அங்கே மீண்டும் கரோனா தலைவலி கிளம்பிவிட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்து, அங்கே இரட்டை இலக்கங்களிலிருந்து வந்த நிலையில் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 250 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கரோனா ஊரடங்கு முடிந்ததும் திறக்கப்பட்ட மதுபான விடுதிகள் மற்றும் நைட் கிளப்புகளுக்குச் சென்று வந்தவர்கள் என தென்கொரியாவின் பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியதுடன், பூங்காக்கள், மால்கள், கிளப்புகள், பார்கள், மியூசியங்கள் ஆகியவற்றையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசரமாக மூடி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகல் நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய தொற்றுகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்துக்கு மாற்றாக பாம் கிம் என்பவரால் தென்கொரியாவில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி கண்டதுடன், ‘தென்கொரியாவின் அமேசான்’ என்று முதலீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வரும் இணைய வர்த்தக நிறுவனம் கோபாங். தலைநகர் சியோலில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருமல், தும்மல், சளிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட, தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 4000 ஊழியர்களில் 3500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 69 பேருக்கு உடனடியாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்ற அனைத்துத் தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தென்கொரிய சுகாதார அமைச்சகம் இதை கரோனாவின் இரண்டாம் அலையா என்பதைக் கூற மறுத்துவிட்டதாக தென்கொரியாவின் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ‘யோன்ஹாப்’ (Yonhap) கூறியிருக்கிறது.   https://www.hindutamil.in/news/world/557102-corona-in-south-korea.html  
    • முட்டாள்த்தனமாக பதிலளித்து சர்ச்சையில் மாட்டுவது, அல்லது தெனாவெட்டாய் வெருட்டுவது சம்பந்தனுக்கு கைவந்த கலை. உந்தக் கோவத்தை காட்ட வேண்டிய இடம் இதுவல்ல. முண்டு கொடுத்து காப்பாற்றிய இடத்தில் காட்டப் பயம், இங்கு பாய்ந்து விழுகிறார். எங்கே மாட்டிவிடுவேனோ என்கிற பயமும்.  இருக்க, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எப்படி சம்பந்தர் வந்தாரோ, அவ்வாறு வரவேண்டியவர் மாவையே. ஆனால் சுமந்திரன் என்கிற குள்ள நரி, அதுக்கு கண் வைத்து, விக்கியருக்கு எதிராக மாவையை கொம்பு சீவி அந்தப் பக்கம் தள்ளிப்போட்டு, சம்பந்தரின் கக்கத்துக்கய் காவல் காக்கிறார். பாவம்! காலம் யாரை தெரியுமோ, அவர் தான் தலைவர். 
    • சாதாரணமாக வந்து செல்லும் காய்ச்சலாக மாறிவிடும்; கரோனா வைரஸை கண்டு அச்சமடைய வேண்டாம்- பொதுமக்களுக்கு டாக்டர் அஸ்வின் விஜய் அறிவுரை   சென்னை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, 130 கோடி மக்கள் தொகை கொண்டஇந்தியாவில், வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளன. அதனால், கரோனாவைரஸைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் அஸ்வின் விஜய் கூறியதாவது: கரோனா என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சமடைகின்றனர். இந்த வைரஸ் உலக அளவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புதான் இதற்கு காரணம். பரிசோதனைகள் அதிகரிக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதைக் கண்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை. நாம் பாதிப்பின் எண்ணிக்கையை பார்க்கக்கூடாது. இறப்பு விகிதத்தைத்தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழ்தான் உள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். உயிரிழந்த 154பேரில் பலர் சர்க்கரை குறைபாடு,இதய நோய், சிறுநீரகம், நுரையீரல்பாதிப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததும் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம். எனவே, முதியோர்,ஏற்கெனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிதாக ஏற்படும் தொற்றுக்குஉடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில், அந்த தொற்று கட்டுக்குள்வராது. டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா எப்படி நம்முடன்இருக்கிறதோ, அதேபோல்தான் கரோனாவும் இருக்கப் போகிறது. ஆரம்பத்தில் கரோனா பாதிப்பு 10, 20 என வந்தபோது பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். தற்போது தினமும் பாதிப்பு 700, 800 என வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அப்போது இருந்த அச்சம் பொதுமக்களிடம் இப்போது இல்லை. இதற்கு, இறப்பு விகிதம்குறைவாக இறப்பதே முக்கிய காரணம். இன்னும் 3 மாதங்களில் கரோனா வைரஸ் குறித்த அச்சம்பொதுமக்களிடம் இருந்து முழுமையாக நீங்கி சராசரி வாழ்க்கைக்கு திரும்பி விடுவார்கள். இந்தியாவில் கரோனா பாதிப்புஅதிகம் இல்லாததற்கு நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவுபழக்க வழக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. புகை பிடிப்போர்,மது அருந்துவோர், பாஸ்ட்ஃபுட்உணவுகளை சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவாகஇருக்கும். அதனால், அந்த பழக்கத்தில் இருந்து வெளி வரவேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மஞ்சள், இஞ்சி, சீரகம், நெல்லிக்காய், கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழ ஜூஸ் குடிக்கலாம். முக்கியமாக, வைட்டமின் சி அதிகமுள்ள கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும். இவ்வாறு டாக்டர் அஸ்வின் விஜய் தெரிவித்தார் https://www.hindutamil.in/news/tamilnadu/557120-dont-afraid-of-corona-says-dr-ashwin-1.html