Sign in to follow this  
Nada

தமிழர்களின் அறியாமையும் குபேராவும்

Recommended Posts

மூடநம்பிக்கைகள் மூலம் எந்த மக்களையும் ஏமாற்றமுடியுமென்பதற்கு தற்போது வலம்வந்து கொண்டிருக்கும் குபேராசிலை ஒரு உதாரணமாக அமைகின்றது. சீனர்களின் தயாரிப்பான இந்த சிலை வீட்டில் இருந்தால் நீங்கள் வேலைசெய்யாமல் சும்மா இருந்தாலும் பணத்தை அள்ளிக்கொட்டுமாம். நீங்கள் பணத்தை வைக்குமிடத்தில் இந்த சிலையை வைத்தால் பிறகென்ன நீங்களும் குபேரர்கள்தான். அதிலும் மற்றவர்கள் வாங்கி அன்பளிப்பாக கொடுத்தால்தான் சிறப்பாக வேலை செய்யுமாம்.

நான் நினைக்கின்றேன் தற்சமயம் குபேராசிலை இல்லாத தமிழர்வீடுகள் ஐரோப்பாவில் அநேகமாக இருக்காது என்று. வியாபாரிகளிள் விளம்பர தந்திரத்தில் ஏமாறுகின்றவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகின்ற தன்மை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த குபேராசிலையினால் ஒருவர் குபேரர் ஆகியிருக்கின்றார். யார் அவர் என்று அறிய ஆவர் கொள்கின்றீர்களா? அது அந்த சிலையை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்தான். நிச்சயமாக அந்த நிறுவனம் அதை தயாரிப்பதில் உலகில் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்குமென்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.

Share this post


Link to post
Share on other sites

வெளிநாட்டுக்கு வந்த பிறகு நாங்கள் அதிகம் ஏனைய இனங்களிடமிருந்து அறிந்து கொண்டது இதுகளைத்தான்.,வாழும்நாடுகளில

் இருக்கும் அரசியல் சட்டங்களைவிட இதுகளை நல்லாய் அறிந்து வைத்துள்ளோம்.எமது அடுத்த தலைமுறையாவது மாறும் என்று பார்த்தால் அதுகளையும்`நாங்கள் விடுகிறமாதிரி தெரியவில்லை

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this