Jump to content

நள்ளிரவுக் கூட்டம்

Recommended Posts

மதிலொன்று மறித்துக் கிடக்கிது.

கருங்கல்லாய் இருக்கலாம்

காரிரும்பாய் இருக்கலாம்

ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம்

மதில் தெரியிது

அதன் பலம் தெரியிது

முன்னர்:

பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார்

பரியாரி வந்து மூலிகை வைச்சார்

பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார்

கைமருந்து பலிக்கேல்ல

சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள்,

கேரள மாந்திரீகர்,

மட்டக்களப்புச் சமாச்சரம்,

ஒண்டும் தான் பலிக்கேல்ல

மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது

பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது

கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார்

"உதுக்கும் ஒரு சாமானிருக்கு

கிண்டாத கிணறில்லை தோண்டாத கிடங்கில்லை

பாக்காத பேயில்லை, போகாத ஊரில்லை

உந்த மதிலுக்கும் மருந்திருக்கு அதைக் கையாளவெண்டொரு முறையுமிருக்கு

வெளியாலை நிண்டு வேலைக்காவாது

புறத்தால தோண்டி ஆளமாய்ப் போகோணும்,

ஆளமாய்ப் பக்குவமாய் அடியில வைக்கோணும்

அத்திவாரம் ஆடினால் மசிர நிண்டிச்சு"

கண்ணெல்லாம் மின்னச் சனம் கிழவரைப் பாத்திச்சு

குளியெல்லாம் தோண்டிக் கிழவர் விளையாட்டைத் தொடங்கினார்

விரல்கள் பின்னச் சனம் நிரையாய் நிண்டிச்சு

பெடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாய்ப் பின்னிச்சு

குளிக்குள்ள புகைச்சதை எல்லாரும் கண்டவை

வெடியும் கேட்டதை எல்லாரும் கேட்டவை

ஆனால் மதில் இன்னும் மறிச்சுத் தான் நிண்டிச்சு

மினுமினுப்புக் குறையாமல் விறைச்சுத் தான் நிண்டிச்சு

கிழவர் இப்ப பகிடியாய்ப்போனார்

பொத்தச் சொல்லி குஞ்சுகுருமான் சிரிச்சுது

இளந்தாரிப் பொடியள் கொடுக்குக் கட்டினர்

சனத்துக்கு மீண்டும் கண்கள் மின்னிச்சு

சனம் விரல்கள்பின்னி நிரை கட்டி நிண்டிச்சு

பொடியள் உம்மேல்ல நல்லாத் தான் செய்தாங்கள்

நாட்டு வெடிக் கிழசுகளும் ஒத்துத் தான் கொண்டினம்

முதல் முதலா மதிலில சிறுசாய் ஒரு ஆட்டம்

மினுமினுப்பை இப்ப மதிலில காணேல்ல

ஒருநாள் மதிலின் ஒரு பெரும் துண்டு பொடியாய்ப் போச்சுது

நினைச்சும் பாக்கேல்ல ஆனால் உண்ணாண நடந்திச்சு

மதிலின் ஓட்டேக்கால சனம் பூந்து திரிஞ்சுது

மசிர்க்கூச்செறிய பெருமிதம் பொங்கிச்சு

முழுசா மதில விழுத்தலாம் எண்டு நம்பிக்கை கூட சனத்துக்கு வந்திச்சு

விரல்கள் பின்னிச் சனம் நிரை கட்டி நிண்டிச்சு

பொடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாயப் பின்னிச்சு

ஒருநாள் காலையில் பரப்பரப்பாய்ச் சத்தம்

ஊருக்க சனமெல்லாம் தெருவில ஓட்டம்

ஏதோ நடப்பது எல்லார்க்கும் தெரிஞ்சுச்சு

என்னெண்டு தெரிய கொஞ்ச நாள் செண்டிச்சு

மதில் தன் ஓட்டையை நிரவத் தொடங்கிச்சு

இளந்தாரிப் பொடியள்,

அருக நிண்ட சனங்கள்,

மரஞ் செடி கொடியள்,

மாடாடு உசிர்கள்

மதில் எல்லாத்தையும் திண்டிச்சு

மதில் தின்னத்தின்ன ஒட்டை சிறுத்திச்சு

மதில் நிறையத் தான் திண்டிச்சு

ஓட்டை இப்ப காணாமல் போச்சுது

மறுபடி மதிலிப்ப மினுமினுத்துக் கிடக்கிது

அது திண்ட சனங்களின் என்பு மச்சைதான் காரணமாம்: பேச்சும் இpருக்கிது

இனி:

மதிலிற்கு சந்தண குங்கும மலர்மாலை சாத்தி வணங்கலாமெண்டு ஒரு யோசனை

மதில் பெருசுதானே ஒரு சுருவமும் அங்கால கீறுவம் எண்டு சந்தில சில சிந்து

"அதிகாரம் அனுசரிக்கப்படவேண்டும்" கோசங்கள் கேக்குது

"நோகுது" என்ற குரல்களை விட "நோகும்" எண்டு அதிகம் குரல்கள்

பூசாரி, மந்திரவாதி, வெடிவச்ச கிளவற்ற சந்ததி, பரியாரி எல்லாரும் கதைக்கீனம்

இளந்தாரிப் பொடியளின் கொடுக்கில கிடந்த ஓட்டைகள் பற்றிக் கனக்கக் கதைக்கினம்

எல்லாரும் கதைக்கீனம்

மதில் இப்ப மினுமினுத்துக் கிடக்கிது

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

Link to comment
Share on other sites

எங்கடை சமகால நிலமையை வேற ஒரு வடிவத்தில பார்வையில அழகாய்ச் சொல்லி இருக்கிறீங்கள். சிக்கல்கள் நிறைந்த ஒரு விசயத்தை, பிரச்சனையை நேராய் சொல்லாமல் இப்படி வேறு கோணத்தில நின்று படம் பிடிச்சு இருப்பது அருமை. யாழில் இப்படியான ஓர் கவிதையை கண்டது மகிழ்ச்சி. உண்மையில நீங்கள் ஒரு ஏபீதான் இன்னுமொருவன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம்!

மதில் இப்பவும் மினுமினுப்புக் கூடி நின்றாலும், மதிலே இல்லை அதை உருக்கிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வோம்.

புரியாமல் புரியும் கவிதை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

innumoruvan

கனவாய்த் தோன்றி கவிதையில் சொல்லப்பட்ட சரித்திரம் வித்தியாசமான சிந்தனை.... வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை, கிருபன், இளங்கவி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

புரியாமல் புரியும் கவிதை..

இது முழவதும் கனவா? அல்லது narrative மற்றும் கனவு கலந்ததா? அவ்வாறு கலந்தாயின் எப்பகுதி கனவு? என்ற குளப்பம் வாசிப்பவர்களிற்கு வரலாம் என எதிர்பார்த்தேன்.

வந்ததா தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஊர் நிலவரம் பற்றிய எண்ணங்கள் மூளையின் எங்கோ ஒரு பாகத்தில் இருக்கத் தான் செய்கின்றன. வாழ்வியல் விடயங்களில் மூள்கிப் போகும் போது அடிமனதிலும், சும்மாயிருந்தால் வெளிப்படையாகவும் ஊர் நிலவரம் தொடர்பான சிந்தனை இருக்கவே செய்கிறது. படுத்துக் கிடந்தால் எண்ணங்கள் இரைமீட்கப்படுகின்றன. பின் கண்ணயரும் போது, முழிப்புலக எண்ணங்கள் உறக்க நிலை உலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தொடர்வதாய்ப் படுகிறது. சுpல சயமயங்களில் எது கனவு எது இரைமீட்பு என்று தெரியாபடிக்கு விடயங்கள் தோன்றுகின்றன. இந்தக் குளப்பத்தை அப்படியே இப்பதிவில் வெளிக்காட்ட முயன்றமை தான் மேற்படி குளப்பத்திற்கான காரணம்.

எனினும் “நள்ளிரவுக் கூட்டம்” என்ற தலைப்பும் கடைசி வரியில் கனவு கண்டதான ஒத்துக்கொள்ளலும் இருக்கின்ற நிலையில்,

பதிவில் உள்ள நள்ளிரவுக் கூட்டம் தொடர்பான காட்சி மட்டும் கனவு என்று கொள்வது ஏற்புடையது.

கனவில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள் எனது பரிந்துரைகளா என்ற கேள்வி ஆரிற்கும் வரின், “காணாத காட்சி கனவாகாது” என்ற வரி அக்கேள்விக்காக எழுதப்பட்டது.

காணல் என்பது நேரடியாய்க் கண்டவை, வாசித்து அறிந்தவை, செய்தியில் பார்த்தவை, ஆரும் சொல்லக் கேட்டவை, விருப்பத்தின் அடிப்படையில் கற்பனை செய்தவை என பலவகைப் படலாம்.

கனவு முடிந்து விழித்தபோது மகிழ்ச்சி நிலைத்தது என்றால் மேற்படி பரிந்துரைகளோடு நான் உடன்படுகின்றேனா என்ற கேள்வியும் பிறக்கலாம். இப்போது உடன்படுகின்றேனா, நாளை உடன்படுவேனா, சில ஆண்டுகளின் பின் உடன்படுவேனா என்று நுணக்கமாகக் கூறத் தெரியவில்லை, ஆனால் நேரத்தின் அச்சில் ஏதோ ஒரு ஆள்கூறில் எப்போதோ, சிலவேளை இப்போதும், மேற்படி பரிந்துரைகள் எனக்கு மகிழ்சி அளிப்பனவாக இருந்திருக்கின்றன என்றே படுகின்றது.

எழுதுவது அரைப்பங்கு தான். வாசிப்பர்கள் சார்ந்தது மீதி அரைவாசி. எனவே இப்பதிவின் பொருளை வாசகர் கைகளில் விட்டுவிடுகின்றேன்.

Link to comment
Share on other sites

கவிதை சூப்பராய் அமைஞ்சு இருக்கிது. வாசகர்களுக்கு கலைரசனையும், சிறிதளவு பொறுமையும், மற்றும் தாயகம்பற்றிய சிறிதளவாவது கரிசனையும் இருந்தால் இந்தக்கவிதை நிச்சயம் வெறும் கனவாகத் தெரியாது. நான் வாசிக்கும்போது தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க இல்லை. ஆனால்.. நீங்கள் இறுதியில் கனவு என்று சொன்னது கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள கவிதைக்கு ஓர் முழுப்பரிணாமத்தை கொடுக்க உதவி இருக்கிது.

வித்தியாசமான ஓர் படையல். தொடருங்கள். பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை,

கவிதையைப் புரிந்து இரசித்தமைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடியள் உம்மேல்ல நல்லாத் தான் செய்தாங்கள்

நாட்டு வெடிக் கிழசுகளும் ஒத்துத் தான் கொண்டினம்

முதல் முதலா மதிலில சிறுசாய் ஒரு ஆட்டம்

மினுமினுப்பை இப்ப மதிலில காணேல்ல

ஒருநாள் மதிலின் ஒரு பெரும் துண்டு பொடியாய்ப் போச்சுது

நினைச்சும் பாக்கேல்ல ஆனால் உண்ணாண நடந்திச்சு

மதிலின் ஓட்டேக்கால சனம் பூந்து திரிஞ்சுது

மசிர்க்கூச்செறிய பெருமிதம் பொங்கிச்சு

முழுசா மதில விழுத்தலாம் எண்டு நம்பிக்கை கூட சனத்துக்கு வந்திச்சு

விரல்கள் பின்னிச் சனம் நிரை கட்டி நிண்டிச்சு

பொடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாயப் பின்னிச்சு

ஒருநாள் காலையில் பரப்பரப்பாய்ச் சத்தம்

ஊருக்க சனமெல்லாம் தெருவில ஓட்டம்

ஏதோ நடப்பது எல்லார்க்கும் தெரிஞ்சுச்சு

என்னெண்டு தெரிய கொஞ்ச நாள் செண்டிச்சு

மதில் தன் ஓட்டையை நிரவத் தொடங்கிச்சு

இளந்தாரிப் பொடியள்,

அருக நிண்ட சனங்கள்,

மரஞ் செடி கொடியள்,

மாடாடு உசிர்கள்

மதில் எல்லாத்தையும் திண்டிச்சு

மதில் தின்னத்தின்ன ஒட்டை சிறுத்திச்சு

மதில் நிறையத் தான் திண்டிச்சு

ஓட்டை இப்ப காணாமல் போச்சுது

மறுபடி மதிலிப்ப மினுமினுத்துக் கிடக்கிது

அது திண்ட சனங்களின் என்பு மச்சைதான் காரணமாம்: பேச்சும் இpருக்கிது

இனி:

மதிலிற்கு சந்தண குங்கும மலர்மாலை சாத்தி வணங்கலாமெண்டு ஒரு யோசனை

மதில் பெருசுதானே ஒரு சுருவமும் அங்கால கீறுவம் எண்டு சந்தில சில சிந்து

"அதிகாரம் அனுசரிக்கப்படவேண்டும்" கோசங்கள் கேக்குது

"நோகுது" என்ற குரல்களை விட "நோகும்" எண்டு அதிகம் குரல்கள்

பூசாரி, மந்திரவாதி, வெடிவச்ச கிளவற்ற சந்ததி, பரியாரி எல்லாரும் கதைக்கீனம்

இளந்தாரிப் பொடியளின் கொடுக்கில கிடந்த ஓட்டைகள் பற்றிக் கனக்கக் கதைக்கினம்

எல்லாரும் கதைக்கீனம்

மதில் இப்ப மினுமினுத்துக் கிடக்கிது

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

இந்த வரிகள் சொல்ல விளைவதென்ன இன்னுமொருவன்?

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்....

உங்களின் கனவுக் கவிதை கொஞ்சம் பெரியதாயினும் நன்றாகவே உள்ளது.நன்றி உங்களுக்கு.

யாயினி.

Link to comment
Share on other sites

" நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

இந்த வரிகள் சொல்ல விளைவதென்ன இன்னுமொருவன்?" --

இந்தத் தலைப்பில் மேலுள்ள பின்னூட்டத்தை (Post #5) வாசித்தீர்களோ தெரியவில்லை. அப்பின்னூட்டத்தில் உங்களின் கேள்விக்கான பதில் உள்ளது என்றே நம்புகின்றேன்.

இன்னுமொருவன்....

உங்களின் கனவுக் கவிதை கொஞ்சம் பெரியதாயினும் நன்றாகவே உள்ளது.நன்றி உங்களுக்கு.

யாயினி.

பிரச்சினை பெரியது என்பதால் பதிவும் பெரிதாகிவிட்டது :D உங்களின் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

அருமையாக , ஆனால் ,நடக்க வேண்டியதை அழகுபடுத்தியுள்ளவிதம் சிறப்பானது. தொடரட்டும் இதுபோன்ற படைப்புகள். தொலைட்டும் இனி முடியாதென்ற முதிர் குணம்.

Link to comment
Share on other sites

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

X-Files, ஏலியன்கள் பற்றிய படங்கள் பார்த்ததன் தாக்கமோ?

என்ன கோதாரியையோ செய்யுங்கோ ஆனா மீண்டும் மக்களுக்கா என்று சொல்லி எங்களை மாட்டி விடாதையுங்கோ... !

ஆக மொத்தத்தில "அதிரடித்தாக்குதலில் படையினர் பலி, பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு, இராணுவத்தினரின் சடலங்கள் கையளிப்பு, கிளைமோர் தாக்குதலில் இராணுவ உயரதிகாரி பலி, கொழும்பில் பாரிய குண்டுவெடிப்பு, மீண்டும் விமானத்தாக்குதல்" போன்ற செய்திகள் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு கஸ்டமாக இருக்கிறது!

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ணை, மதில் உடைப்பு வன்முறைரீதியாக நடைபெறவேணும் என்று இல்லைத்தானே. நீங்கள் ஏன் மீண்டும் பிறகு கிளைமோரையும், பாரிய குண்டு வெடிப்பையும் கொண்டு வாறீங்கள். அடக்கமாய் இருந்து வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலை உடைக்க வழி இல்லையா? சிந்தனைகள் சரியான விதத்தில் செயல்வடிவம் பெற்றால் வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலுடைப்பு நிகழமுடியும். எங்களால் அப்படியாக சிந்தித்து செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால்... எங்கள் இயலாமையை காரணம் காட்டி இதர வழிமுறை இல்லை என்று தீர்மானம் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

சிந்தனைகள் சரியான விதத்தில் செயல்வடிவம் பெற்றால் வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலுடைப்பு நிகழமுடியும். எங்களால் அப்படியாக சிந்தித்து செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால்... எங்கள் இயலாமையை காரணம் காட்டி இதர வழிமுறை இல்லை என்று தீர்மானம் சொல்ல முடியாது.

மாப்பிள்ளை,

தப்பித்தவறி நீங்கள் கௌரவ, குரோத, பழிக்குபழி என்ற கண்ணாடிகளை கழட்டிப்போட்டு சிந்தித்தீங்கள் என்றா அந்த மினுமினுப்பா தெரியிறது ஒரு மதிலே இல்லை அது ஒரு கதவு என்கிற விசயம் தெரியவரும். ஆனா பிறகு நீங்கள் துரோகியாகி டக்கிளசோட சேர வேண்டி வரும் பறவாயில்லையா?

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ணை,

நான் கெளரவ, குரோத, பழிக்குப்பழி என்கின்ற கண்ணாடிகளை கழற்றிப்போட்டு பார்த்தாலும் மதில் மதிலாகத்தான் தெரியும். குடு அடிச்சுப்போட்டு இல்லாட்டிக்கு குடிச்சுப்போட்டு பார்த்தால் சிலவேளைகளில் அது கதவாகவோ இல்லாட்டிக்கு அண்டவெளியாகவோ தெரியக்கூடும்.

டக்லஸ் சந்தர்ப்பவாத அரசியல்செய்து இப்போது மகாத்மா காந்திபோல சிலருக்கு தெரிகின்றார். ஆனால்.. டக்லஸ் செய்த கொலைகளை, அட்டூழியங்களை மறப்பது என்பது கடினமானது. என்னைப்பொறுத்தவரை நான் அவரை துரோகியாக பார்க்கவில்லை. ஓர் கொலைகாரனாகவே பார்க்கின்றேன்.

இனி அடுத்து நீங்கள் சொல்லுவீங்கள் புலிகளும் கொலைகாரர்தானே என்று. சரி... டக்லஸ் தமிழர்களுடன் மட்டும் மோதினார், ஆனால்.. புலிகள் பொதுவான எதிரிகளுடனும் மோதினார்கள் என்று சொன்னால் பிறகு நீங்கள் சொல்லுவீங்கள் சிங்களவர் தமிழருக்கு எதிரிகளே இல்லையே என்று.

மதில் மதில்தான் சாணக்கியன் அண்ணை. கண் குருடாய் இருந்தால் அது உங்களுக்கு மதிலாக தெரியாமல் போகலாம். அல்லது தேய்த்துக்கொள்வதற்கும், முதுகு சொறிவதற்கும் வசதியாக இருப்பதால் சிலவேளைகளில் மதில் உங்களுக்கு நெடுக்காலபோவான் சொல்கின்ற மாங்கனியாகக்கூட தெரியலாம்.

சிங்களப்பேரினவாதம் தனது அதிகாரங்களை ஜனநாயகம் என்கின்ற முகமூடியைப்போட்டு சர்வதேச அங்கீகாரத்தை பயன்படுத்தி அக்கிரமங்கள் செய்து, அயோக்கியத்தனங்கள் செய்து, அவலங்களை ஏற்படுத்தி அப்பட்டமான அநீதிவழியில செல்கின்றது. நீதி என்பது துட்டர்களின் கையில் சிக்கித்தவிக்கின்றது. துட்டர்கள் மிகச்சிறப்பாக காடைத்தனங்கள் செய்து அதில் வெற்றிபெற்றுச் செல்கின்றார்கள். ஆனால்.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக.. துட்டனை நல்லவன் என்று பயத்தில் சொல்லமுடியாது.

புலிகள் மதிலை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. ஆனால்.. நிச்சயம் ஒரு நாளில் மதில் உடையத்தான் போகின்றது. வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான். சிங்களப்பேரினவாதத்தின் கொட்டத்தை ஒருநாள் தமிழனாக இல்லாவிட்டாலும் யாரோ ஒருத்தன் நிச்சயம் அடக்குவான் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அது இயற்கை அன்னையாகக்கூட இருக்கலாம். இந்த மதிலை இயற்கை அன்னைகூட உடைப்பாள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் மதில் உங்களுக்கு நெடுக்காலபோவான் சொல்கின்ற மாங்கனியாகக்கூட தெரியலாம்.

அப்படின்னா சாணக்கியனுக்கு நல்ல சந்தோசம். கள்ள மாங்காய் பறிக்கலாம் எல்லோ. எதையும் களவெடுத்து தட்டிப்பறிச்சு சாப்பிடுறதென்றால் சாணக்கியனுக்கு அலாதி பிரியம். ஏன்னா.. அவரின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தா தமிழர்களிடம் அதைத்தானே செய்து.. மதிலை கதவாக்கி.. மாநிலத்தை உள்ளூராட்சி சபையாக்கி வைச்சிருக்கிறார்..!

சாணக்கியன் நாளைக்கு வந்து அது கதவில்ல கடப்புத்தான் என்றும் சொல்லுவார். தமிழர்கள் என்ற செம்மறியாடுகளின் கழுத்தில் பனை மட்டதான் தொங்குது.. ஒரு மாதிரி மட்டையை நுழைச்சு கிழைச்சு கடப்பை தாண்டி வந்திட்டா.. தும்பினியின் இடுப்பில் எல்லோரும் கூடிக் குதூகலிக்கலாம் என்றும் சொல்லுவார். அவருக்கு அதில தான் சுதந்திரமே பொதிந்திருக்குது. ஏன்னா அவர் மட்டும் மரணத்தை வென்று இந்த உலகில் சிங்களவரோடு கூடி வாழப் போகும் சிரஞ்சீவி..! இல்ல உவர் கிளைமோருக்கும்.. குண்டுக்கும் பயப்பிடுறதைப் பார்த்தா.. அப்படித்தான் தெரியுது..! :unsure::lol:

உவற்ற கண்ணுக்கு பேரா ஆத்துக்குள்ள மிதக்கிற தமிழிச்சிகளின் உடலங்கள் தெரிவதில்லை. அதில மனிதாபிமானம் மலர்வதில்லை..!

(Bodies of 2 Up-Country Tamil women found in canal in Colombo HSZ.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30015 )

Link to comment
Share on other sites

மாப்ஸ்,

நான் கெளரவஇ குரோதஇ பழிக்குப்பழி என்கின்ற கண்ணாடிகளை கழற்றிப்போட்டு பார்த்தாலும் மதில் மதிலாகத்தான் தெரியும். குடு அடிச்சுப்போட்டு இல்லாட்டிக்கு குடிச்சுப்போட்டு பார்த்தால் சிலவேளைகளில் அது கதவாகவோ இல்லாட்டிக்கு அண்டவெளியாகவோ தெரியக்கூடும்.

அதுதான் முதலிலேயே சொன்னேனே... கழட்டிப் போட்டு பாக்க வேணும் என்று. நீங்கள் கழட்டாமலேயே அது அப்படித்தான் இருக்கும் இது இப்படித்தான் தெரியும் என்கிறீர்கள். 30 வருசமா போட்டுக்கொண்டு இருந்ததை அவ்வளவு சீக்கிரமாக கழட்டுவது கஸ்டம்தான். அதுவும் கனடாவில இருந்து கொண்டு கழட்டுவது என்றா கனவுதான்.

சிங்களப்பேரினவாதம் தனது அதிகாரங்களை ஜனநாயகம் என்கின்ற முகமூடியைப்போட்டு சர்வதேச அங்கீகாரத்தை பயன்படுத்தி அக்கிரமங்கள் செய்துஇ அயோக்கியத்தனங்கள் செய்துஇ அவலங்களை ஏற்படுத்தி அப்பட்டமான அநீதிவழியில செல்கின்றது. நீதி என்பது துட்டர்களின் கையில் சிக்கித்தவிக்கின்றது. துட்டர்கள் மிகச்சிறப்பாக காடைத்தனங்கள் செய்து அதில் வெற்றிபெற்றுச் செல்கின்றார்கள். ஆனால்.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக.. துட்டனை நல்லவன் என்று பயத்தில் சொல்லமுடியாது.

இன்னமும் குழந்தைப்பிள்ளை மாதிரி சிங்களவன் கெட்டவன், நீதி, நியாயம் என்று கதைக்கிறியள். ஒரு எதிரி என்ற முறையில் அவன் செய்யிறதை சிறப்பா செய்யிறான். இனி அவனோடதான் வாழ்வு. அவன் எங்களுக்கு நல்லவனாக நடக்க வேணும் என்றா நாங்கள் முதலில நட்பாக நடந்து சந்தேகங்களை அகற்ற முயற்சிக்க வேணும். இனியும் புலி, தமிழீழம், நாடுகடந்த தமிழீழ அரசு என்று பேசிக் கொண்டு அதை சாதிக்க முடியாது.

புலிகள் மதிலை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. ஆனால்.. நிச்சயம் ஒரு நாளில் மதில் உடையத்தான் போகின்றது. வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான். சிங்களப்பேரினவாதத்தின் கொட்டத்தை ஒருநாள் தமிழனாக இல்லாவிட்டாலும் யாரோ ஒருத்தன் நிச்சயம் அடக்குவான் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அது இயற்கை அன்னையாகக்கூட இருக்கலாம். இந்த மதிலை இயற்கை அன்னைகூட உடைப்பாள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். அதாவது நீங்கள் உங்கடை நம்பிக்கைகளோடு நாளாந்த வாழ்கையை சீராக நடத்தமுடியும். அது உங்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சம். நம்பிக்கை பலிக்காவிட்டால் ஒரு நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, நீங்கள் உங்கடை பதவி உயர்வுக்கான பரீட்சையை எழுத போய்விடுவீர்கள்.

எங்களுக்கு வெறும் நம்பிகையை வைச்சு இன்றைக்கு சாப்பிட முடியாது, தொழில் செய்ய முடியாது. நீங்கள் காசையும், ஒரு நாள் லீவையும், வைச்சு போராட்டம் நடத்துவீங்கள். ஆனா நாங்கள் அதற்கு ஈடா எங்கட உயிரையும் எதிர்காத்தையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் அழிச்சு போராட வேணும்.

இதை பற்றி இனி நான் கனக்க அலட்ட வேண்டியதில்லை, நீங்கள் சொன்ன மாதிரி உண்மைதான் எப்பவும் வெல்லும், இனியும் அது வெல்லும்! மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம் வணக்கம்!

நெடுக்ஸ்,

நல்லா எழுதுறியள் வாழ்த்துக்கள். வணக்கம்!

Link to comment
Share on other sites

மதிலொன்று மறித்துக் கிடக்கிது.

....

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

...

உட்கருத்துக்கள் நிறைந்த அருமையான, வித்தியாசமான வடிவில் நோக்கப்பட்ட கவிதை, பாராட்ட வேண்டியது... வாழ்த்துக்கள் இன்னுமொருவன்!

Link to comment
Share on other sites

ஓம் சாணக்கியன் அண்ணை...

சிங்களவன் எள் என்று சொன்னால்... நாங்கள் எண்ணெய் என்று ஒழுகி நம்பிக்கை ஏற்படுத்தும்படியாக நடக்கவேண்டும். அவன் கழட்டச்சொல்லி செய்தால்... நாங்கள் தமிழர் கழட்டிப்போட்டு திரியவேணும். அத்தோட கழட்டிப்போட்டு திரியாத ஆக்களை பலவந்தமாக கழட்ட வைக்கவேணும்.

சிங்களப்பேரினவாதத்துக்கு எல்லாத்தையும் திறந்துகாட்டி.. உரிஞ்சாங்குண்டியோட அவனுடன் நண்பனாக வாழ நீங்கள் ஆசைப்படுறீங்கள். உதுவும் ஒரு நம்பிக்கைதான். உரிஞ்சாங்குண்டியோட அவனோட சேர்ந்து வாழ்ந்தால்.. உங்கள் இருப்பை, உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நீங்கள் நம்புறீங்கள். உங்கள் நம்பிக்கைப்படி நீங்கள் தாராளமாக வாழ்ந்துகொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.