Innumoruvan

நள்ளிரவுக் கூட்டம்

Recommended Posts

மதிலொன்று மறித்துக் கிடக்கிது.

கருங்கல்லாய் இருக்கலாம்

காரிரும்பாய் இருக்கலாம்

ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம்

மதில் தெரியிது

அதன் பலம் தெரியிது

முன்னர்:

பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார்

பரியாரி வந்து மூலிகை வைச்சார்

பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார்

கைமருந்து பலிக்கேல்ல

சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள்,

கேரள மாந்திரீகர்,

மட்டக்களப்புச் சமாச்சரம்,

ஒண்டும் தான் பலிக்கேல்ல

மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது

பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது

கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார்

"உதுக்கும் ஒரு சாமானிருக்கு

கிண்டாத கிணறில்லை தோண்டாத கிடங்கில்லை

பாக்காத பேயில்லை, போகாத ஊரில்லை

உந்த மதிலுக்கும் மருந்திருக்கு அதைக் கையாளவெண்டொரு முறையுமிருக்கு

வெளியாலை நிண்டு வேலைக்காவாது

புறத்தால தோண்டி ஆளமாய்ப் போகோணும்,

ஆளமாய்ப் பக்குவமாய் அடியில வைக்கோணும்

அத்திவாரம் ஆடினால் மசிர நிண்டிச்சு"

கண்ணெல்லாம் மின்னச் சனம் கிழவரைப் பாத்திச்சு

குளியெல்லாம் தோண்டிக் கிழவர் விளையாட்டைத் தொடங்கினார்

விரல்கள் பின்னச் சனம் நிரையாய் நிண்டிச்சு

பெடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாய்ப் பின்னிச்சு

குளிக்குள்ள புகைச்சதை எல்லாரும் கண்டவை

வெடியும் கேட்டதை எல்லாரும் கேட்டவை

ஆனால் மதில் இன்னும் மறிச்சுத் தான் நிண்டிச்சு

மினுமினுப்புக் குறையாமல் விறைச்சுத் தான் நிண்டிச்சு

கிழவர் இப்ப பகிடியாய்ப்போனார்

பொத்தச் சொல்லி குஞ்சுகுருமான் சிரிச்சுது

இளந்தாரிப் பொடியள் கொடுக்குக் கட்டினர்

சனத்துக்கு மீண்டும் கண்கள் மின்னிச்சு

சனம் விரல்கள்பின்னி நிரை கட்டி நிண்டிச்சு

பொடியள் உம்மேல்ல நல்லாத் தான் செய்தாங்கள்

நாட்டு வெடிக் கிழசுகளும் ஒத்துத் தான் கொண்டினம்

முதல் முதலா மதிலில சிறுசாய் ஒரு ஆட்டம்

மினுமினுப்பை இப்ப மதிலில காணேல்ல

ஒருநாள் மதிலின் ஒரு பெரும் துண்டு பொடியாய்ப் போச்சுது

நினைச்சும் பாக்கேல்ல ஆனால் உண்ணாண நடந்திச்சு

மதிலின் ஓட்டேக்கால சனம் பூந்து திரிஞ்சுது

மசிர்க்கூச்செறிய பெருமிதம் பொங்கிச்சு

முழுசா மதில விழுத்தலாம் எண்டு நம்பிக்கை கூட சனத்துக்கு வந்திச்சு

விரல்கள் பின்னிச் சனம் நிரை கட்டி நிண்டிச்சு

பொடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாயப் பின்னிச்சு

ஒருநாள் காலையில் பரப்பரப்பாய்ச் சத்தம்

ஊருக்க சனமெல்லாம் தெருவில ஓட்டம்

ஏதோ நடப்பது எல்லார்க்கும் தெரிஞ்சுச்சு

என்னெண்டு தெரிய கொஞ்ச நாள் செண்டிச்சு

மதில் தன் ஓட்டையை நிரவத் தொடங்கிச்சு

இளந்தாரிப் பொடியள்,

அருக நிண்ட சனங்கள்,

மரஞ் செடி கொடியள்,

மாடாடு உசிர்கள்

மதில் எல்லாத்தையும் திண்டிச்சு

மதில் தின்னத்தின்ன ஒட்டை சிறுத்திச்சு

மதில் நிறையத் தான் திண்டிச்சு

ஓட்டை இப்ப காணாமல் போச்சுது

மறுபடி மதிலிப்ப மினுமினுத்துக் கிடக்கிது

அது திண்ட சனங்களின் என்பு மச்சைதான் காரணமாம்: பேச்சும் இpருக்கிது

இனி:

மதிலிற்கு சந்தண குங்கும மலர்மாலை சாத்தி வணங்கலாமெண்டு ஒரு யோசனை

மதில் பெருசுதானே ஒரு சுருவமும் அங்கால கீறுவம் எண்டு சந்தில சில சிந்து

"அதிகாரம் அனுசரிக்கப்படவேண்டும்" கோசங்கள் கேக்குது

"நோகுது" என்ற குரல்களை விட "நோகும்" எண்டு அதிகம் குரல்கள்

பூசாரி, மந்திரவாதி, வெடிவச்ச கிளவற்ற சந்ததி, பரியாரி எல்லாரும் கதைக்கீனம்

இளந்தாரிப் பொடியளின் கொடுக்கில கிடந்த ஓட்டைகள் பற்றிக் கனக்கக் கதைக்கினம்

எல்லாரும் கதைக்கீனம்

மதில் இப்ப மினுமினுத்துக் கிடக்கிது

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

Share this post

Link to post
Share on other sites

எங்கடை சமகால நிலமையை வேற ஒரு வடிவத்தில பார்வையில அழகாய்ச் சொல்லி இருக்கிறீங்கள். சிக்கல்கள் நிறைந்த ஒரு விசயத்தை, பிரச்சனையை நேராய் சொல்லாமல் இப்படி வேறு கோணத்தில நின்று படம் பிடிச்சு இருப்பது அருமை. யாழில் இப்படியான ஓர் கவிதையை கண்டது மகிழ்ச்சி. உண்மையில நீங்கள் ஒரு ஏபீதான் இன்னுமொருவன். :lol:

Share this post

Link to post
Share on other sites

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம்!

மதில் இப்பவும் மினுமினுப்புக் கூடி நின்றாலும், மதிலே இல்லை அதை உருக்கிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வோம்.

புரியாமல் புரியும் கவிதை..

Share this post

Link to post
Share on other sites

innumoruvan

கனவாய்த் தோன்றி கவிதையில் சொல்லப்பட்ட சரித்திரம் வித்தியாசமான சிந்தனை.... வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

மாப்பிள்ளை, கிருபன், இளங்கவி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

புரியாமல் புரியும் கவிதை..

இது முழவதும் கனவா? அல்லது narrative மற்றும் கனவு கலந்ததா? அவ்வாறு கலந்தாயின் எப்பகுதி கனவு? என்ற குளப்பம் வாசிப்பவர்களிற்கு வரலாம் என எதிர்பார்த்தேன்.

வந்ததா தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஊர் நிலவரம் பற்றிய எண்ணங்கள் மூளையின் எங்கோ ஒரு பாகத்தில் இருக்கத் தான் செய்கின்றன. வாழ்வியல் விடயங்களில் மூள்கிப் போகும் போது அடிமனதிலும், சும்மாயிருந்தால் வெளிப்படையாகவும் ஊர் நிலவரம் தொடர்பான சிந்தனை இருக்கவே செய்கிறது. படுத்துக் கிடந்தால் எண்ணங்கள் இரைமீட்கப்படுகின்றன. பின் கண்ணயரும் போது, முழிப்புலக எண்ணங்கள் உறக்க நிலை உலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தொடர்வதாய்ப் படுகிறது. சுpல சயமயங்களில் எது கனவு எது இரைமீட்பு என்று தெரியாபடிக்கு விடயங்கள் தோன்றுகின்றன. இந்தக் குளப்பத்தை அப்படியே இப்பதிவில் வெளிக்காட்ட முயன்றமை தான் மேற்படி குளப்பத்திற்கான காரணம்.

எனினும் “நள்ளிரவுக் கூட்டம்” என்ற தலைப்பும் கடைசி வரியில் கனவு கண்டதான ஒத்துக்கொள்ளலும் இருக்கின்ற நிலையில்,

பதிவில் உள்ள நள்ளிரவுக் கூட்டம் தொடர்பான காட்சி மட்டும் கனவு என்று கொள்வது ஏற்புடையது.

கனவில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள் எனது பரிந்துரைகளா என்ற கேள்வி ஆரிற்கும் வரின், “காணாத காட்சி கனவாகாது” என்ற வரி அக்கேள்விக்காக எழுதப்பட்டது.

காணல் என்பது நேரடியாய்க் கண்டவை, வாசித்து அறிந்தவை, செய்தியில் பார்த்தவை, ஆரும் சொல்லக் கேட்டவை, விருப்பத்தின் அடிப்படையில் கற்பனை செய்தவை என பலவகைப் படலாம்.

கனவு முடிந்து விழித்தபோது மகிழ்ச்சி நிலைத்தது என்றால் மேற்படி பரிந்துரைகளோடு நான் உடன்படுகின்றேனா என்ற கேள்வியும் பிறக்கலாம். இப்போது உடன்படுகின்றேனா, நாளை உடன்படுவேனா, சில ஆண்டுகளின் பின் உடன்படுவேனா என்று நுணக்கமாகக் கூறத் தெரியவில்லை, ஆனால் நேரத்தின் அச்சில் ஏதோ ஒரு ஆள்கூறில் எப்போதோ, சிலவேளை இப்போதும், மேற்படி பரிந்துரைகள் எனக்கு மகிழ்சி அளிப்பனவாக இருந்திருக்கின்றன என்றே படுகின்றது.

எழுதுவது அரைப்பங்கு தான். வாசிப்பர்கள் சார்ந்தது மீதி அரைவாசி. எனவே இப்பதிவின் பொருளை வாசகர் கைகளில் விட்டுவிடுகின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

கவிதை சூப்பராய் அமைஞ்சு இருக்கிது. வாசகர்களுக்கு கலைரசனையும், சிறிதளவு பொறுமையும், மற்றும் தாயகம்பற்றிய சிறிதளவாவது கரிசனையும் இருந்தால் இந்தக்கவிதை நிச்சயம் வெறும் கனவாகத் தெரியாது. நான் வாசிக்கும்போது தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க இல்லை. ஆனால்.. நீங்கள் இறுதியில் கனவு என்று சொன்னது கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள கவிதைக்கு ஓர் முழுப்பரிணாமத்தை கொடுக்க உதவி இருக்கிது.

வித்தியாசமான ஓர் படையல். தொடருங்கள். பாராட்டுக்கள்!

Share this post

Link to post
Share on other sites

மாப்பிள்ளை,

கவிதையைப் புரிந்து இரசித்தமைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி

Share this post

Link to post
Share on other sites

பொடியள் உம்மேல்ல நல்லாத் தான் செய்தாங்கள்

நாட்டு வெடிக் கிழசுகளும் ஒத்துத் தான் கொண்டினம்

முதல் முதலா மதிலில சிறுசாய் ஒரு ஆட்டம்

மினுமினுப்பை இப்ப மதிலில காணேல்ல

ஒருநாள் மதிலின் ஒரு பெரும் துண்டு பொடியாய்ப் போச்சுது

நினைச்சும் பாக்கேல்ல ஆனால் உண்ணாண நடந்திச்சு

மதிலின் ஓட்டேக்கால சனம் பூந்து திரிஞ்சுது

மசிர்க்கூச்செறிய பெருமிதம் பொங்கிச்சு

முழுசா மதில விழுத்தலாம் எண்டு நம்பிக்கை கூட சனத்துக்கு வந்திச்சு

விரல்கள் பின்னிச் சனம் நிரை கட்டி நிண்டிச்சு

பொடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாயப் பின்னிச்சு

ஒருநாள் காலையில் பரப்பரப்பாய்ச் சத்தம்

ஊருக்க சனமெல்லாம் தெருவில ஓட்டம்

ஏதோ நடப்பது எல்லார்க்கும் தெரிஞ்சுச்சு

என்னெண்டு தெரிய கொஞ்ச நாள் செண்டிச்சு

மதில் தன் ஓட்டையை நிரவத் தொடங்கிச்சு

இளந்தாரிப் பொடியள்,

அருக நிண்ட சனங்கள்,

மரஞ் செடி கொடியள்,

மாடாடு உசிர்கள்

மதில் எல்லாத்தையும் திண்டிச்சு

மதில் தின்னத்தின்ன ஒட்டை சிறுத்திச்சு

மதில் நிறையத் தான் திண்டிச்சு

ஓட்டை இப்ப காணாமல் போச்சுது

மறுபடி மதிலிப்ப மினுமினுத்துக் கிடக்கிது

அது திண்ட சனங்களின் என்பு மச்சைதான் காரணமாம்: பேச்சும் இpருக்கிது

இனி:

மதிலிற்கு சந்தண குங்கும மலர்மாலை சாத்தி வணங்கலாமெண்டு ஒரு யோசனை

மதில் பெருசுதானே ஒரு சுருவமும் அங்கால கீறுவம் எண்டு சந்தில சில சிந்து

"அதிகாரம் அனுசரிக்கப்படவேண்டும்" கோசங்கள் கேக்குது

"நோகுது" என்ற குரல்களை விட "நோகும்" எண்டு அதிகம் குரல்கள்

பூசாரி, மந்திரவாதி, வெடிவச்ச கிளவற்ற சந்ததி, பரியாரி எல்லாரும் கதைக்கீனம்

இளந்தாரிப் பொடியளின் கொடுக்கில கிடந்த ஓட்டைகள் பற்றிக் கனக்கக் கதைக்கினம்

எல்லாரும் கதைக்கீனம்

மதில் இப்ப மினுமினுத்துக் கிடக்கிது

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

இந்த வரிகள் சொல்ல விளைவதென்ன இன்னுமொருவன்?

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

Share this post

Link to post
Share on other sites

இன்னுமொருவன்....

உங்களின் கனவுக் கவிதை கொஞ்சம் பெரியதாயினும் நன்றாகவே உள்ளது.நன்றி உங்களுக்கு.

யாயினி.

Share this post

Link to post
Share on other sites

" நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

இந்த வரிகள் சொல்ல விளைவதென்ன இன்னுமொருவன்?" --

இந்தத் தலைப்பில் மேலுள்ள பின்னூட்டத்தை (Post #5) வாசித்தீர்களோ தெரியவில்லை. அப்பின்னூட்டத்தில் உங்களின் கேள்விக்கான பதில் உள்ளது என்றே நம்புகின்றேன்.

இன்னுமொருவன்....

உங்களின் கனவுக் கவிதை கொஞ்சம் பெரியதாயினும் நன்றாகவே உள்ளது.நன்றி உங்களுக்கு.

யாயினி.

பிரச்சினை பெரியது என்பதால் பதிவும் பெரிதாகிவிட்டது :D உங்களின் கருத்துக்கு நன்றி.

Share this post

Link to post
Share on other sites

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

அருமையாக , ஆனால் ,நடக்க வேண்டியதை அழகுபடுத்தியுள்ளவிதம் சிறப்பானது. தொடரட்டும் இதுபோன்ற படைப்புகள். தொலைட்டும் இனி முடியாதென்ற முதிர் குணம்.

Share this post

Link to post
Share on other sites

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

X-Files, ஏலியன்கள் பற்றிய படங்கள் பார்த்ததன் தாக்கமோ?

என்ன கோதாரியையோ செய்யுங்கோ ஆனா மீண்டும் மக்களுக்கா என்று சொல்லி எங்களை மாட்டி விடாதையுங்கோ... !

ஆக மொத்தத்தில "அதிரடித்தாக்குதலில் படையினர் பலி, பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு, இராணுவத்தினரின் சடலங்கள் கையளிப்பு, கிளைமோர் தாக்குதலில் இராணுவ உயரதிகாரி பலி, கொழும்பில் பாரிய குண்டுவெடிப்பு, மீண்டும் விமானத்தாக்குதல்" போன்ற செய்திகள் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு கஸ்டமாக இருக்கிறது!

Share this post

Link to post
Share on other sites

சாணக்கியன் அண்ணை, மதில் உடைப்பு வன்முறைரீதியாக நடைபெறவேணும் என்று இல்லைத்தானே. நீங்கள் ஏன் மீண்டும் பிறகு கிளைமோரையும், பாரிய குண்டு வெடிப்பையும் கொண்டு வாறீங்கள். அடக்கமாய் இருந்து வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலை உடைக்க வழி இல்லையா? சிந்தனைகள் சரியான விதத்தில் செயல்வடிவம் பெற்றால் வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலுடைப்பு நிகழமுடியும். எங்களால் அப்படியாக சிந்தித்து செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால்... எங்கள் இயலாமையை காரணம் காட்டி இதர வழிமுறை இல்லை என்று தீர்மானம் சொல்ல முடியாது.

Share this post

Link to post
Share on other sites

சிந்தனைகள் சரியான விதத்தில் செயல்வடிவம் பெற்றால் வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலுடைப்பு நிகழமுடியும். எங்களால் அப்படியாக சிந்தித்து செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால்... எங்கள் இயலாமையை காரணம் காட்டி இதர வழிமுறை இல்லை என்று தீர்மானம் சொல்ல முடியாது.

மாப்பிள்ளை,

தப்பித்தவறி நீங்கள் கௌரவ, குரோத, பழிக்குபழி என்ற கண்ணாடிகளை கழட்டிப்போட்டு சிந்தித்தீங்கள் என்றா அந்த மினுமினுப்பா தெரியிறது ஒரு மதிலே இல்லை அது ஒரு கதவு என்கிற விசயம் தெரியவரும். ஆனா பிறகு நீங்கள் துரோகியாகி டக்கிளசோட சேர வேண்டி வரும் பறவாயில்லையா?

Share this post

Link to post
Share on other sites

சாணக்கியன் அண்ணை,

நான் கெளரவ, குரோத, பழிக்குப்பழி என்கின்ற கண்ணாடிகளை கழற்றிப்போட்டு பார்த்தாலும் மதில் மதிலாகத்தான் தெரியும். குடு அடிச்சுப்போட்டு இல்லாட்டிக்கு குடிச்சுப்போட்டு பார்த்தால் சிலவேளைகளில் அது கதவாகவோ இல்லாட்டிக்கு அண்டவெளியாகவோ தெரியக்கூடும்.

டக்லஸ் சந்தர்ப்பவாத அரசியல்செய்து இப்போது மகாத்மா காந்திபோல சிலருக்கு தெரிகின்றார். ஆனால்.. டக்லஸ் செய்த கொலைகளை, அட்டூழியங்களை மறப்பது என்பது கடினமானது. என்னைப்பொறுத்தவரை நான் அவரை துரோகியாக பார்க்கவில்லை. ஓர் கொலைகாரனாகவே பார்க்கின்றேன்.

இனி அடுத்து நீங்கள் சொல்லுவீங்கள் புலிகளும் கொலைகாரர்தானே என்று. சரி... டக்லஸ் தமிழர்களுடன் மட்டும் மோதினார், ஆனால்.. புலிகள் பொதுவான எதிரிகளுடனும் மோதினார்கள் என்று சொன்னால் பிறகு நீங்கள் சொல்லுவீங்கள் சிங்களவர் தமிழருக்கு எதிரிகளே இல்லையே என்று.

மதில் மதில்தான் சாணக்கியன் அண்ணை. கண் குருடாய் இருந்தால் அது உங்களுக்கு மதிலாக தெரியாமல் போகலாம். அல்லது தேய்த்துக்கொள்வதற்கும், முதுகு சொறிவதற்கும் வசதியாக இருப்பதால் சிலவேளைகளில் மதில் உங்களுக்கு நெடுக்காலபோவான் சொல்கின்ற மாங்கனியாகக்கூட தெரியலாம்.

சிங்களப்பேரினவாதம் தனது அதிகாரங்களை ஜனநாயகம் என்கின்ற முகமூடியைப்போட்டு சர்வதேச அங்கீகாரத்தை பயன்படுத்தி அக்கிரமங்கள் செய்து, அயோக்கியத்தனங்கள் செய்து, அவலங்களை ஏற்படுத்தி அப்பட்டமான அநீதிவழியில செல்கின்றது. நீதி என்பது துட்டர்களின் கையில் சிக்கித்தவிக்கின்றது. துட்டர்கள் மிகச்சிறப்பாக காடைத்தனங்கள் செய்து அதில் வெற்றிபெற்றுச் செல்கின்றார்கள். ஆனால்.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக.. துட்டனை நல்லவன் என்று பயத்தில் சொல்லமுடியாது.

புலிகள் மதிலை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. ஆனால்.. நிச்சயம் ஒரு நாளில் மதில் உடையத்தான் போகின்றது. வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான். சிங்களப்பேரினவாதத்தின் கொட்டத்தை ஒருநாள் தமிழனாக இல்லாவிட்டாலும் யாரோ ஒருத்தன் நிச்சயம் அடக்குவான் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அது இயற்கை அன்னையாகக்கூட இருக்கலாம். இந்த மதிலை இயற்கை அன்னைகூட உடைப்பாள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

Share this post

Link to post
Share on other sites

சிலவேளைகளில் மதில் உங்களுக்கு நெடுக்காலபோவான் சொல்கின்ற மாங்கனியாகக்கூட தெரியலாம்.

அப்படின்னா சாணக்கியனுக்கு நல்ல சந்தோசம். கள்ள மாங்காய் பறிக்கலாம் எல்லோ. எதையும் களவெடுத்து தட்டிப்பறிச்சு சாப்பிடுறதென்றால் சாணக்கியனுக்கு அலாதி பிரியம். ஏன்னா.. அவரின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தா தமிழர்களிடம் அதைத்தானே செய்து.. மதிலை கதவாக்கி.. மாநிலத்தை உள்ளூராட்சி சபையாக்கி வைச்சிருக்கிறார்..!

சாணக்கியன் நாளைக்கு வந்து அது கதவில்ல கடப்புத்தான் என்றும் சொல்லுவார். தமிழர்கள் என்ற செம்மறியாடுகளின் கழுத்தில் பனை மட்டதான் தொங்குது.. ஒரு மாதிரி மட்டையை நுழைச்சு கிழைச்சு கடப்பை தாண்டி வந்திட்டா.. தும்பினியின் இடுப்பில் எல்லோரும் கூடிக் குதூகலிக்கலாம் என்றும் சொல்லுவார். அவருக்கு அதில தான் சுதந்திரமே பொதிந்திருக்குது. ஏன்னா அவர் மட்டும் மரணத்தை வென்று இந்த உலகில் சிங்களவரோடு கூடி வாழப் போகும் சிரஞ்சீவி..! இல்ல உவர் கிளைமோருக்கும்.. குண்டுக்கும் பயப்பிடுறதைப் பார்த்தா.. அப்படித்தான் தெரியுது..! :unsure::lol:

உவற்ற கண்ணுக்கு பேரா ஆத்துக்குள்ள மிதக்கிற தமிழிச்சிகளின் உடலங்கள் தெரிவதில்லை. அதில மனிதாபிமானம் மலர்வதில்லை..!

(Bodies of 2 Up-Country Tamil women found in canal in Colombo HSZ.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30015 )

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

மாப்ஸ்,

நான் கெளரவஇ குரோதஇ பழிக்குப்பழி என்கின்ற கண்ணாடிகளை கழற்றிப்போட்டு பார்த்தாலும் மதில் மதிலாகத்தான் தெரியும். குடு அடிச்சுப்போட்டு இல்லாட்டிக்கு குடிச்சுப்போட்டு பார்த்தால் சிலவேளைகளில் அது கதவாகவோ இல்லாட்டிக்கு அண்டவெளியாகவோ தெரியக்கூடும்.

அதுதான் முதலிலேயே சொன்னேனே... கழட்டிப் போட்டு பாக்க வேணும் என்று. நீங்கள் கழட்டாமலேயே அது அப்படித்தான் இருக்கும் இது இப்படித்தான் தெரியும் என்கிறீர்கள். 30 வருசமா போட்டுக்கொண்டு இருந்ததை அவ்வளவு சீக்கிரமாக கழட்டுவது கஸ்டம்தான். அதுவும் கனடாவில இருந்து கொண்டு கழட்டுவது என்றா கனவுதான்.

சிங்களப்பேரினவாதம் தனது அதிகாரங்களை ஜனநாயகம் என்கின்ற முகமூடியைப்போட்டு சர்வதேச அங்கீகாரத்தை பயன்படுத்தி அக்கிரமங்கள் செய்துஇ அயோக்கியத்தனங்கள் செய்துஇ அவலங்களை ஏற்படுத்தி அப்பட்டமான அநீதிவழியில செல்கின்றது. நீதி என்பது துட்டர்களின் கையில் சிக்கித்தவிக்கின்றது. துட்டர்கள் மிகச்சிறப்பாக காடைத்தனங்கள் செய்து அதில் வெற்றிபெற்றுச் செல்கின்றார்கள். ஆனால்.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக.. துட்டனை நல்லவன் என்று பயத்தில் சொல்லமுடியாது.

இன்னமும் குழந்தைப்பிள்ளை மாதிரி சிங்களவன் கெட்டவன், நீதி, நியாயம் என்று கதைக்கிறியள். ஒரு எதிரி என்ற முறையில் அவன் செய்யிறதை சிறப்பா செய்யிறான். இனி அவனோடதான் வாழ்வு. அவன் எங்களுக்கு நல்லவனாக நடக்க வேணும் என்றா நாங்கள் முதலில நட்பாக நடந்து சந்தேகங்களை அகற்ற முயற்சிக்க வேணும். இனியும் புலி, தமிழீழம், நாடுகடந்த தமிழீழ அரசு என்று பேசிக் கொண்டு அதை சாதிக்க முடியாது.

புலிகள் மதிலை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. ஆனால்.. நிச்சயம் ஒரு நாளில் மதில் உடையத்தான் போகின்றது. வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான். சிங்களப்பேரினவாதத்தின் கொட்டத்தை ஒருநாள் தமிழனாக இல்லாவிட்டாலும் யாரோ ஒருத்தன் நிச்சயம் அடக்குவான் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அது இயற்கை அன்னையாகக்கூட இருக்கலாம். இந்த மதிலை இயற்கை அன்னைகூட உடைப்பாள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். அதாவது நீங்கள் உங்கடை நம்பிக்கைகளோடு நாளாந்த வாழ்கையை சீராக நடத்தமுடியும். அது உங்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சம். நம்பிக்கை பலிக்காவிட்டால் ஒரு நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, நீங்கள் உங்கடை பதவி உயர்வுக்கான பரீட்சையை எழுத போய்விடுவீர்கள்.

எங்களுக்கு வெறும் நம்பிகையை வைச்சு இன்றைக்கு சாப்பிட முடியாது, தொழில் செய்ய முடியாது. நீங்கள் காசையும், ஒரு நாள் லீவையும், வைச்சு போராட்டம் நடத்துவீங்கள். ஆனா நாங்கள் அதற்கு ஈடா எங்கட உயிரையும் எதிர்காத்தையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் அழிச்சு போராட வேணும்.

இதை பற்றி இனி நான் கனக்க அலட்ட வேண்டியதில்லை, நீங்கள் சொன்ன மாதிரி உண்மைதான் எப்பவும் வெல்லும், இனியும் அது வெல்லும்! மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம் வணக்கம்!

நெடுக்ஸ்,

நல்லா எழுதுறியள் வாழ்த்துக்கள். வணக்கம்!

Share this post

Link to post
Share on other sites

மதிலொன்று மறித்துக் கிடக்கிது.

....

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

...

உட்கருத்துக்கள் நிறைந்த அருமையான, வித்தியாசமான வடிவில் நோக்கப்பட்ட கவிதை, பாராட்ட வேண்டியது... வாழ்த்துக்கள் இன்னுமொருவன்!

Share this post

Link to post
Share on other sites

ஓம் சாணக்கியன் அண்ணை...

சிங்களவன் எள் என்று சொன்னால்... நாங்கள் எண்ணெய் என்று ஒழுகி நம்பிக்கை ஏற்படுத்தும்படியாக நடக்கவேண்டும். அவன் கழட்டச்சொல்லி செய்தால்... நாங்கள் தமிழர் கழட்டிப்போட்டு திரியவேணும். அத்தோட கழட்டிப்போட்டு திரியாத ஆக்களை பலவந்தமாக கழட்ட வைக்கவேணும்.

சிங்களப்பேரினவாதத்துக்கு எல்லாத்தையும் திறந்துகாட்டி.. உரிஞ்சாங்குண்டியோட அவனுடன் நண்பனாக வாழ நீங்கள் ஆசைப்படுறீங்கள். உதுவும் ஒரு நம்பிக்கைதான். உரிஞ்சாங்குண்டியோட அவனோட சேர்ந்து வாழ்ந்தால்.. உங்கள் இருப்பை, உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நீங்கள் நம்புறீங்கள். உங்கள் நம்பிக்கைப்படி நீங்கள் தாராளமாக வாழ்ந்துகொள்ளுங்கோ.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • அரசியல் அறிவு என்பது தாமாக வளர்த்துக்கொள்வது. அதை விளங்கிக்கொள்ளக் கூடியவர்களுக்கே விளங்கப்படுத்தலாம். உங்களுக்கு விளங்கிக்கொள்ளும் தன்மை இருந்தால் இந்த திரி உங்களுக்கு உதவலாம். https://yarl.com/forum3/topic/234083-ஆட்டத்தை-அடியோடு-மாற்றி-விட்ட-214/ கெஹெலிய ரம்புக்வெல தமது அரசு ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடனான MCC, SOFA உடன்படிக்கைகளை பரிசீலனை செய்து இரு நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் கையெழுத்திடுவோம் எனவும் கூறினார். மகிந்த ஆட்சியின் போது மகிந்த தான் MCC கொடையை தமக்கு தரும்படி அமெரிக்காவை கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோத்தபாய வந்தால் சீனாவை முற்றாக வெளியேற்றுவார் என நான் கூறவில்லை. அமெரிக்காவோ இந்தியாவோ வழங்காத பணத்தை சீனா வழங்கும் போது சீனாவிடம் பணம் வாங்கி அபிவிருத்திகளை செய்வார்கள். சீனா ஏற்கனவே உள்ளே தான் உள்ளது. 2015 மைத்திரி ஜனாதிபதியாக வந்ததும் சீன அபிவிருத்திகளை நிறுத்தினார். பின் தானே ஒன்றொன்றாக முன்னெடுக்க தொடங்கினார்.  தாமரைக்கோபுரம் இன்னும் இலங்கையின் கைகளில் தான் உள்ளது. அபிவிருத்தி முழுமையாகாத நிலையில் அது திறந்து வைக்கப்பட்டது. அபிவிருத்தி தொடர்கிறது. மைத்திரி தாம் கடனை திருப்பி செலுத்திக்கொண்டிருக்கிறோம் என கூறியிருந்தார். திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை வந்தால் அதையும் குத்தகைக்கு கொடுக்க யோசிக்கலாம்.
  • கோட்டபாய கை கட்டி பணிவது போல் படம் உள்ளது ஆனால் ஜெய்சங்கருக்கு முகம் சரியில்லை.  அவர்களின் சஜித் கணக்கு பிழைச்ச கோவம்.
  • ஏலவே அதளபாதளத்தில் கிடக்கும் சொறீலங்காவின் பொருளாதாரம் மீள வழியைக் காணம். இதில கோத்தா வரவு வேற.  பிரதான கடன் வழங்கும் நாடுகள்... கோத்தாவின் வரவை எச்சரிக்கையுடனேயே பார்க்கின்றன. எனி கோத்தாவுக்கு வாக்குப் போட்டோர்.. பாணும் சாப்பிட முடியாது. மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் யுகத்துக்குப் போய் இலைக்கஞ்சி தான் குடிக்க வேண்டும். இனவாதத்திற்கு சிங்கள மக்கள் வாக்களித்துக் கொண்டே வந்தால்.. அவர்கள்.. மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தொடர்ந்து வாழ நேரிடும். மிக விரைவில்.. சிங்களவர்களின் கையில் 10 ஆயிரம் ரூபா நோட்டுப் புழங்கினாலும்.. ஆச்சரியமில்லை. சிம்பாபேக்கு ஒரு முகாபே போல்.. சொறீலங்காவுக்கு ஒரு ராஜபக்ச குடும்பம். நவீன உலக ஒழுங்கில் நவீனமாக.. லிபரலாகச் சிந்திக்க மறுப்பின்..  சிங்களம்.. அதன் இனவெறிக்கு அதுவே பலியாகும் நாள் தொலைதூரத்தில் இல்லை.  ---------------------------------------------------- https://www.bbc.co.uk/news/world-africa-50454812
  • சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன் சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள்  உடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்தேசிய உணர்வுடன் அனைவரும் துணிவுடன் பயணிக்கவேண்டும் பயணித்து எமது இனத்தினுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இந்தத் தேர்தலில் நாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம். இந்த இலங்கைத் தீவில் சிறுபான்மை தேசிய இனங்கள் ஆகிய நாங்கள் பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோருகிறோம் என்பதுமாகும்  இதைப் புரிந்து கொண்டு புதிதாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதி செயற்படுவார் எனவும் எண்ணுகின்றேன் என்றார். இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/69317
  • கோத்­தாபயவின் வெற்­றியில் மலை­யக மக்­களை பங்­கா­ளி­யாக்­கி­யது இ.தொ.கா.   கோத்­த­பாய ராஜபக் ஷவை மிகப் பெரிய பூச்­சாண்­டி­யாகக் காட்டி அவ­ரது வெற்­றியைத் தடுக்க முனைந்­த­வர் கள் இப்­போது தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.  இந்­நி­லையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­யவின் வெற்­றிக்கு தோள் கொடுத்து மலை­யக மக்­களை வெற்­றியின் பங்­கா­ளர்­க­ளாக்கி இருக்­கின்­றது. இதன் மூலம் எமது மக்கள் பல்­வேறு சாதக விளை­வு­க­ளையும் பெற்றுக் கொள்­வது உறு­தி­யாகும் என்று முன்னாள் மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், இலங்­கையின் தேர்தல் வர­லாற்றில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் மிகவும் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக கரு­தப்­பட்­டது. இத்­தேர்­தலில் 35 வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கி­ய­போதும் கோத்­தா­வுக்கும், சஜித்­துக்கும் இடை­யி­லேயே போட்டி நில­வி­யது. எனினும் இத்­தேர்­தலில் பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அமோக வெற்றி பெற்று நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகி இருக்­கின்றார்.  இவ­ரது வெற்றி ஒரு மிகப்­பெரும் சாத­னை­யாகும். கோத்­தாவின் வெற்­றிக்கு இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் காத்­தி­ர­மான பங்­காற்றி இருக்­கின்­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆறு­முகன் தொண்­ட மான் கள ­நி­ல­வ­ரங்­களை  ஆராய்ந்து எடுத்த முடிவு மலை­யக மக்கள் தலை நிமிர்ந்து வாழ்­வ­தற்கு உந்­து­சக்­தி­யாகி இருக்­கின்­றது. கோத்­த­பாய ராஜபக் ஷ யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதிப் பூங்­காற்று வீசு­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்­கின்றார். ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருக்­கின் றார். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் ஊடாக நாட்டின் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கும், அபி­வி­ருத்­திக்கும் அவர் வித்­திட்­டி­ருக்­கின்றார். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­வ­தற்­கு­ரிய சகல தகு­திகளும் அவ­ருக்கு இருக்­கின்­றன. அவர் செயல் வீர­ராக விளங்­கு­கின்றார். அவ­ரது சிந்­தனை மற்றும் செயற்­பாடு தொடர்பில் ஆறு­முகன் தொண்­ட­மானும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸும் அதி­க­ளவில் நம்­பிக்கை கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும். இந்­நி­லையில் ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அல்­லது ஐ.தே.க.வை ஆத­ரிக்கும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் கோத்­த­பாய ராஜபக் ஷவை பல்­வேறு வித­மாக விமர்­சித்து வந்­தனர். கோத்­த­பா­யவை மிகப்­பெரும் பூச்­சாண்­டி­யாகக் காண்­பித்து அவ­ரது வாக்­கை தடுக்க முயன்­றனர். எனினும் இது சாத்­தி­ய­மா­காத நிலையில் இப்­போது கோத்­தாவை விமர்­சித்­த­வர்கள் தோல்வி கண்­டுள்­ளனர். நல்ல ஒரு பாட­மாக அவர்­க­ளுக்கு அமைந்­தி­ருக்­கின்­றது. தனது அர­சியல் இருப்பை தக்க வைத்துக் கொள்­ளவும், சுய­நலன் கரு­தியும் செயற்­பட்­ட­வர்கள் இப்­போது மண்­ கவ்­வி­யுள்­ளனர். மக்கள் நலன் கருதி செயற்­ப­டா­த­வர்கள் தூக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். ஏனை­யோ­ருக்கு இது ஒரு பாட­மாகும். கோத்­த­பா­யவின் தலை­மையில் நாடு பல்­வேறு நன்­மை­க­ளையும் பெற்றுக் கொள்ளும். நாட்டின் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மேலோங்கும். சிறு­பான்மை மக்கள் பல்வேறு வழிகளிலும் நன்மையடைவர். மலையக மக்களின் அபிவிருத்தியும் மேம்படும். இ.தொ.கா. 32 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோத்தபாய ராஜபக் ஷ பூரண ஒத்துழைப்பை வழங்குவார். கோத்தவின் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இ.தொ.கா. தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.    https://www.virakesari.lk/article/69305