Sign in to follow this  
வல்வை சகாறா

ஊர் மனையேறியே உறங்குவதாய் சபதம் எடு. - வல்வை சகாறா -

Recommended Posts

சகாறா அக்கா..இன்றின் நிலையை இதைவிட அழகாக ஆழமாக அற்புதமாக இனி யாரும்

சொல்லிவிடமுடியாது.அவநம்பிக்

Share this post

Link to post
Share on other sites

ஏன்யா தமிழ்சிறி.. நானே கொஞ்சம் கவிதை அது இதுவெண்டு பில்டப் பண்ணி வச்சிருக்கிறன்..! பொறுக்காதே உங்களுக்கு..! :)

மச்சி , நான் சொம்மா தமாசுக்கு சொன்னேன் . கண்டுக்காதீங்க . :):(

என்றாலும் ......... வல்வைசகாரா சொன்னது சந்தேகமாய் தான் இருக்குது . :icon_idea::D

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு

எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.

முடியுமா இனிமேல் எம்மால் எதிரிக்கு கண்டத்தை உருவாக்க?

Share this post

Link to post
Share on other sites

கண்ணெதிரே கரையுமா கனவு?

மண்ணெனவே உதிருமா மனது?

நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்

ஒப்பேற முன்னரே உருகியா போகும்?

இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட

மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை?

இது காலச்சுழி

இன்றைய பொழுதுகள் எமக்கானவை.

மெய்யுரைத்துத் தீக்குளிக்கும் தைரியம் பெறு.

புலத்திற்குள் பொருந்திக் கொள்.

புலன் தெளிவுறு.

உன் புன்னகையைப் பறித்துப் புதைகுழியில் இட்டோர்க்கு

எண்ணிப்பார்க்காத கண்டத்தை உருவாக்கு.

பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே!

உன்னை இனி நானே பாடுவேன்.

அன்னை தமிழ்கொண்டு உன்னைப் பண்செய்த

என் ஆசான் மீண்டுவந்து அடுத்தபாடல் செய்யும்வரை

உன்னை இனி நானே பாடுவேன்.

யதார்த்தத்தைப் தொட்டுச்செல்லும் வரிகள். பாராட்டுகள்.

சுயத்தினை வென்று எம் பயத்தினைக் களைந்தே தமிழ் ஈழ நிலத்தினை நாமேயாண்டிடும் வகைதனை காட்டிய எம் தலைவனின் சிந்தனை கொண்டினியெழுந்திடும் எம் சந்ததி வாகை சூடிடும். முயன்றிடும் மனிதரும் முயற்சியும் இருந்தால் பகைதனை வென்றிடப் பாதையும் துலங்கிடும். முடியாதென்பதை முடித்துவைத்து, முடியும் எம்மாலென்று ஒற்றுமையாவோம். வெற்றிக்கான முதற்பாதை ஒற்றுமையே.

Edited by nochchi

Share this post

Link to post
Share on other sites

புலம்பெயர்ந்த தமிழரை சோர்விலிருந்து எழுந்து வாருங்கள் என்று கவிதை சொல்கின்றது. எங்கு வாருங்கள் என்று சொல்லவில்லையே..

முட்கம்பிகளுக்குப் பின்னால் மலம் கரைந்து வெள்ளம் ஓடும் வடிகாலுக்குப் பக்கத்தில் தனது குழந்தையைக் கழுவும் ஒரு சகோதரியின் பரிதாப நிலையைகண்டு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வேதனைதான் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?act=a...post&id=796

Share this post

Link to post
Share on other sites

சகாறா அக்கா..இன்றின் நிலையை இதைவிட அழகாக ஆழமாக அற்புதமாக இனி யாரும்

சொல்லிவிடமுடியாது.அவநம்பிக்

Edited by valvaizagara

Share this post

Link to post
Share on other sites

quote name='Jil' date='Aug 21 2009, 03:35 AM' post='535854']

முடியுமா இனிமேல் எம்மால் எதிரிக்கு கண்டத்தை உருவாக்க?

Share this post

Link to post
Share on other sites

நொச்சி நீங்கள் சுட்டிக்காட்டிய வரிகள் உண்மையிலேயே என்னுடையவை அல்ல. எங்கள் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்களின் வரிகள்.

'........கண்ணெதிரே கலைந்து போகிறது கனவு

மண்ணெனவே உதிர்ந்து போகிறது மனம்

நெஞ்சுக்குள்ளே கோடுகளால் வரைந்த உருவம் கூட

ஒப்பேற முன்னர் உருகிப்போகிறது

நம்பிக்கை மட்டும் நமக்கற்றுப் போயிருந்தால்

வெம்பிப் போய் என்றோ விழுந்திருப்போம்......"

என்று அவர்பாடிய வரிகளிலிருந்தே இக்கவிதையை ஆரம்பித்தேன்.

கண்ணெதிரே கலையுமா கனவு

மண்ணெனவே உதிருமா மனது

நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம்

ஒப்பேற முன்னரே உருகியா போகும்

இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட

மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை

...........

புலம்பெயர்ந்த தமிழரை சோர்விலிருந்து எழுந்து வாருங்கள் என்று கவிதை சொல்கின்றது. எங்கு வாருங்கள் என்று சொல்லவில்லையே..

முட்கம்பிகளுக்குப் பின்னால் மலம் கரைந்து வெள்ளம் ஓடும் வடிகாலுக்குப் பக்கத்தில் தனது குழந்தையைக் கழுவும் ஒரு சகோதரியின் பரிதாப நிலையைகண்டு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வேதனைதான் உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?act=a...post&id=796

கிருபன் உங்களுக்கான பதில் இங்கு இருக்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62983

Edited by valvaizagara

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் வல்வை சகாரா அக்கா,

உங்கள் கவிதைக்கும் சக உறவுகள் கருத்துக்கும் என் கருத்தாக நிறைய எழுத வேண்டி இருக்கு....

எனக்கு நேரம் கிடைப்பது மிக அரிது தாமதத்திற்கு மன்னிக்கவும்

உங்கள் கவிதை அருமை ஆனாலும் நன்றியோ பாராட்டோ தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைப்பது ஒவ்வொரு கலைஞனினதும் கடமை.

(உதாரணத்திற்கு போராட்டம் மிகப்பெரும் சவாலையும் மனிதப்பேரழிவையும் சந்தித்துக்கொண்டிருந்த மே மாத தொடக்கத்தில் ஒரு போராளியுடன் பேசும் சாத்தியம் கிடைத்தது. அப்போது பின்னணியில் குண்டுச் சத்தங்களுக்கு மத்தியில் தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. என்ன அண்ணா இந்த நேரத்தில் கவிதை எனக் கேட்டேன். அதற்கு “ அண்ணை எங்களுக்கு காயத்திற்கு மருந்து சாப்பாடு இரத்தம் எல்லாமே இப்ப இதுதான் தருது என்றார். கவிதையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விடயம் இது. கவிதைக்கு பெருமை சேர்க்கின்ற விடயம். உலகப்போரியல் வரலாற்றில் விடுதலை வேண்டி போராடும் இனங்களின் வரலாற்றில் அந்தக் கவிதை சிகரம்.

ஆனால் துரதிஸ்ட வசமாக அந்தக்கவிதை இன்னும் வெளிவரவில்லை. அந்தக்கவிதை குறிப்பிட்ட போராளிகளை இன்னும் சாதிக்கவைத்தது. நம்பிக்கையை அதிகமாக்கியது. இராணுவ முற்றுகையை உடைத்த அந்தப்போராளிகள் தற்போது உயிருடன் உள்ளார்கள்.

ஆகையால் அந்தக் கவிதை வெளி உலகிற்கு வரும்.)

சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றி வட்டமேசை போடவும் அங்கே தவறு இங்கே தவறு என்று மேடைபோட்டு முழங்கவும் நாங்கள் ஆய்வாளர்களோ அரசியல்வாதிகளோ அல்ல.

இன்னும் சொல்லப்போனால் போராட்டம் முன்னேற்றம் கண்ட காலத்தில் பெற்ற தாயை இரத்த உறவுகளை விட தமிழீழத்தாய் மண்ணின் விடுவு மட்டுமே கண்களுக்கும் உணர்வுக்கும் தெரிந்த அந்த அப்பழுக்கற்ற தமிழ்த்தாய் மைந்தர்கள் போல் போராட்டம் பின்னடைவைக் கண்டிருக்கும் இந்தக் காலத்தில் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் இன்னும் இன்னும் அதிகமாய் விதைக்கும் அப்பழுக்கற்ற எழுத்துப்போராளிகள் நிறையத் தேவை.(யாழ் களத்தைப் பார்க்கும் போதே புரிகிறது)

ஏனெனில் இன்றைய நிலையில் எதிரிகளும் துரோகிகளும் தமிழரின் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் சிதைக்கும் கருத்து யுத்தத்தை தீவிரப்படுத்துகின்றார்கள். நாங்களும் எங்கள் பணியை தீவிரப்படுத்துவோம். எதிரிகளையோ துரோகிகளையோ கண்டு அஞ்சத்தேவையில்லை அவரவர் கடன் அவரவர் பணி செய்து கிடப்பதே ஆகும். ஆகவே எல்லோரு தொர்வோம்.

உதாரணத்திற்கு “இன்னுமொரு மில்லர் பிறப்பான் அவன் முன்னைவிட பெரிதாய் வெடிப்பான்” என்று எழுதினால் அது கற்பனை பண்ணுவதாயோ உசுப்பேத்தி விடுவதாயோ அர்த்தம் ஆகாது.

தேவையேற்படின் அந்த இன்னுமொரு மில்லர் நானாக தயாரான பின்னரே அப்படி எழுதுகின்றேன். (எனக்கு யாரும் மண்டையை கழுவவும் இல்லை. எனக்கு வாழ கஸ்டமும் இல்லை. சிறு வயதில் இருந்தே சுகபோகமாய் வெளிநாட்டில் வாழும் பல்லாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்)

அத்துடன் மாவீரர் பட்டியலிலும் முகம்தெரியாக் கரும்புலிகள் பட்டியலிலும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது வாழ்ந்தவர்களி;ன் பெயர்கள் உள்ளன. யார் எதை அழித்தாலும் தமிழீழ ஆண்மாவின் வரலாறு நிச்சயம் பதியப்படும். அப்போது பெயர்கள் வெளிவரும்.

புரட்சிகள் கண்டம் கடந்தும் தேசம் கடந்தும் நடந்தது வரலாறு. புரட்சியின் சரித்திரம் சாய்ந்ததில்லை அது புது வழி காணாமல் ஓய்ந்ததில்லை. நாங்களும் நிச்சயம் வழி காணுவோம். யூதர்கள் போல் ஊர்மனையேறியே உறங்குவவதாய் சபதம் எடுப்போம்.

மாறிவரும் உலக சூழலுக்கேற்ப காய் நகர்த்த வேண்டும் என்பது உண்மை. அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு என்ற தகவல் ஒவ்வொரு தமிழனின் மரபணுவிலும் பொதிந்து கிடக்கம் பரம்பரைச்செய்தி என்பதும் உண்மை.

என் சொந்தங்கள் ஐம்பத்தி எட்டுப்பேரை பேரினவாத யுத்தம் தின்றுவிட்டது. இன்னும் நூற்றி அறுபத்தி எட்டுப்பேர் முகாமுக்குள்ளும் சிறைக்குள்ளும்

இன்றைய செய்தியாக

இரண்டு கால்களையும் இழந்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவனுக்கு பல்கலைக்கழகம் செல்ல அனுமதி மறுப்பு

ஈர நிலத்தில் அமர்ந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுத வேண்டிய நிலையில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள்

தங்களை அறியாமலேயே கர்ப்பமாகியிருக்கும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழச்சிகள்.

சீழ்ப்பிடித்த சித்திரவதைக்காயங்களால் மடியும் சிறப்பு முகாம் தமிழ்ர்கள்

இப்படி நீள்கிறது... சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் ஆண்மாவில் ஏற்படுததும் ஆழமான காயங்கள். இவை என்றுமே ஆறிவிடவோ மாறிவிடவோ போவதில்லை.

ஆகையால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான். (மாறாக ஆய்வாளப்பெருந்தகைகளோ கருத்துக் கந்தசாமிகளோ அல்ல)

மானத்தமிழினத்தின் தலைவன் சொன்னதிலிருந்து ” எனது மக்களிற்கான தீர்வை சர்வதேசத்திடமும் வரலாற்றிடமும் விடுகின்றேன்”

இது சர்வதேசம் தீர்ப்புச் சொல்ல வேண்டிய காலம். தவறினால் வரலாறு நிச்சயமாக தீர்ப்புச்சொல்லும். ஆனால் அதற்கு நாங்கள் விதைக்க வேண்டியது நம்பிக்கையும் விடுதலை வேட்கையும் அன்றி சாத்தியம் சாத்தியம் இன்மை பற்றிய ஆய்வுகளோ சரி தவறு பற்றிய வாதப்பிரதி வாதங்களோ அல்ல.

சகாரா அக்கா

எங்கள் போராட்ட வரலாற்றை பேணிப் பாதுகாக்கவும் நம்பிக்கையையும் விடுதலை வேட்கையையும் விதைக்கவும் உங்களுக்கு முன்னால் விளங்கும் ஒளிபொருந்திய கண்களையும் உணர்ச்சி மிக்க இதயங்களையும் பயன்படுத்துவது தவறில்லை.

Jun 27 2009, 02:43 PM Post #1

“விடுதலை” செய்யுங்கள்

புல்லோடும் புயலோடும்

கல்லோடும் கடலோடும்

பேச முடிந்த

கவிஞர்களே!

என்ன திடீர் மௌனம்

உங்களுக்குள்ளே?

புயலுக்கு முந்தியதா?

பிந்தியதா?

என

உங்கள் மௌனங்களுக்கு

உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?

நல்ல கதை.

புயல்களை

புதிது புதிதாய்

பிறப்பிப்பதே

நீங்கள்தானே.

நீங்களே தூங்கினால்

நாளைய பொழுதுகளின்

நம்பிக்கையை

யார் கொடுப்பது?

நீண்ட இரவுகளின்

இராச்சியத்திற்கு

உங்கள் இமைகளை

அனுமதிக்காதீர்

கசியும் உங்கள்

கண்களைத் துடையுங்கள்

கடலலை மோதும்

ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்

முள்ளிவாய்க்காலில்

சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை

சாட்சியுடன் எழுதுங்கள்

காற்றில் தவழும்

அத்தனை அலைகளுடனும்

உரையாடுங்கள்

கஞ்சிக்கு உயிர் விலை

கொடுத்ததையும்

காற்றே களவாடப்பட்டு

கந்தகமும் பொசுபரசும்

பரிசளிக்கப்பட்டதையும்

மருந்துக்கு

மண் அள்ளிப் போட்டதையும்

பெற்றதாய் மார்பில்

செத்தபின் பால்குடித்த

துயரத்தையும்

என

எங்கள் துயரத்தை

எங்கள் நியாயத்தை

எங்களுக்கு இழைக்கப்பட்ட

கொடுமைகளை

நீதிக்கு இழைக்கப்பட்ட

அநீதியை

மொத்தமாய்

பதிவுசெய்யுங்கள்

இலக்கு

தெளிவாய் தெரியும்

விடுதலைப்பயணத்தில்

இருள் என்று ஒன்று இல்லை.

இருப்பின்

அதன் பெயர்

குறைந்த வெளிச்சம்

என்று

உங்கள் கவிதைகள்

தீக்குச்சி கிழிக்கட்டும்

கேளுங்கள் தரப்படும்

தரப்படாவிட்டால்

தரும்வரை கேளுங்கள்

தட்டுங்கள் திறக்கப்படும்

திறக்கப்படாவிட்டால்

திறக்கும் வரை தட்டுங்கள்

என்று

மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்

உங்கள் கவிதைகள்

கவிஞர்களே!

தயவு செய்து

உங்கள்

மௌனங்களை உடையுங்கள்

செத்த கவிஞர்கள்

கடமையையும்

நீங்கள் தான் செய்யவேண்டும்

பிறக்க இருந்து

இறந்த கவிஞர்களையும்

நீங்கள் தான்

உருவாக்க வேண்டும்

அவர்கள்

எழுத நினைத்தவற்றையும்

நீங்கள் தான்

எழுதவேண்டும்

அவர்கள்

தொடக்கிவைத்தவற்றையும்

நீங்கள்தான்

முடிக்கவேண்டும்

புறப்படுங்கள்

தூரங்களும்

இதயங்களும்

சுருங்கிப்போன உலகில்

உங்கள் கவிதைகள்

காவியங்களாய் ஊடுருவட்டும்

புயல்களை எதிர்பார்க்க

பூகம்பங்களை எதிர்கொள்ள

ஓவ்வொரு தமிழனுக்கும்

கற்றுக் கொடுங்கள்

அதோ

தொலைவில்..

“போர் இன்னும் ஓயவில்லை

எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”

ஒரு கவிஞன் உடைத்த

மௌனம் பேசுகிறது

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”

இன்னொரு கவிஞனின்

நம்பிக்கை பேசுகிறது.

எங்கே

நீங்களும்

உங்கள்

மௌனங்களை உடையுங்கள்

உடைக்கும் போது

மறக்கவேண்டாம்

நம்பிக்கையையும்

விடுதலை வேட்கையையும்

விதைப்பதற்கு

அன்பானவர்களே!

உங்கள் பேனாக்கள்

துளித்துளியாய்

கரையட்டும்

வார்த்தைகள்

தீப் பொறியாய் வீழட்டும்

அதுவே

தமிழர் மனங்களில்

உலகின் திசைகளில்

ஈழ விடுதலைப் பெருந்தீயை

அணையாது எரிக்கட்டும்.

எங்கள் பணி நாங்கள் தொடர்வோம்

நன்றி என்ற ஒற்றைச் சொல்லுடன் உங்களுக்கான பதில் வரைவை முடிக்க எண்ணவில்லை. இதனைப்பற்றி நிறையவே பேசவேண்டி இருக்கிறது. இப்போதைக்கு நன்றியை மட்டும் உரைத்துக் கொள்கிறேன் ரவி இந்திரன்.

Share this post

Link to post
Share on other sites

நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.

மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.

மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.

உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்

சகாராவில் இப்படி கவிதை பூக்கள் பூக்கும் என்று இன்று தான் பார்த்தேன்

இந்த வரிகள் இன்று எமக்கு தேவை

வளர்க வாழ்த்துக்கள்

Edited by jhansirany

ஜான்சிராணி போட்டதுதான் போட்டீர்கள் முழுப்பந்தியையும் போட்டிருக்கலாமே... உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்

இது காலச்சுழி

சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது.

சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும்.

தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும்.

நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும்.

மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும்.

மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும்.

உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this