Jump to content

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Recommended Posts

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Nithy.jpg

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..

இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

பின்னர் சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கி விட்டது. இலங்கை வானொலியில் தினமும் குறைந்தது இரண்டு தடவையாவது போடுவாரகள்.

தமிழில் மட்டுமல்ல சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

ஒரு காலத்தில் உச்சத்திலிருந்த தமிழ்ப் பொப்பிசை காலப்போக்கில் தாழ்ந்து விட்டதற்குப் புதிய கலைஞர்கள் தோன்றாமையும் தொலைக்காட்சியின் அறிமுகமும் தான் என்கிறார் நித்தி.

அவர் சொன்ன ஒரு சம்பவம்:

"மலேசியாவில் 45வது சுதந்திர தின விழாக் காட்சிகளை மலேசியாவில்

நின்ற சமயம் தொலைக்காட்சியில் பார்த்தேன். மலே, சீனம் தமிழ் மொழிகளில் மக்கள் பாடிக் கொண்டு சென்றார்கள். தமிழர் சென்ற ஊர்வலத்தில் எனது பாடல்களை அம்மக்கள் பாடிக்கொண்டு சென்றாதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தேன். எங்கோ பிறந்த பாடல், எங்கெங்கோ சென்று மக்களின் மனத்தில் இடம் பிடித்திருக்கிறது".

தமிழகத்தில் எம்ஜிஆர் முதல்வராகப் பதவி ஏற்ற சமயம் மதுவிலக்கு மீண்டும் அமுலுக்கு வந்த போது அங்கு பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பான பாடல் நித்தியின் "கள்ளுக்கடைப் பக்கம் போகாதே".

ரஜனியின் அவசர அடி ரங்கா, எஸ்பியின் சிவரஞ்சனி, விஜயகாந்தின் ரமணா படங்களிலும் நித்தியின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. (இதற்காக நித்திக்கு எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை).

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

மகிழ்ச்சியான ஒரு விடயம்: என் இசையும் என் கதையும் என்ற நூலை நித்தி இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.

சின்னமாமி பாடல் வரிகளை வாசித்து விட்டு பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே

பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ

அட வாடா மருமகா என் அழகு மன்மதா

பள்ளிக்கு தான் சென்றாள் படிக்கத் தான் சென்றாள்

ஐயோ மாமி அவளை அங்கே விடாதே

அவளை என்னும் படிக்கவென்று கெடாதே

ஊர் சுழலும் பெடியெளெல்லாம்

கன்னியரைக் கண்டவுடன்

கண்ணடிக்கும் காலமல்லவோ - சின்ன மாமியே

ஐயோ தம்பி அவளை ஒன்றும் சொல்லாதே

அவள் வந்தால் உதைத்திடுவாள் நில்லாதே

அடக்கமில்லாப் பெண்ணிவள் என்றா

என்மகளை நினைத்து விட்டாய்

இடுப்பொடியத் தந்திடுவேனே - சின்ன மாமியே

ஏனணை மாமி மேலே மேலே துள்ளுறியே

பாரணை மாமி படுகுழியில் தள்ளுறியே

ஏனணை மாமி அவளெனக்கு

தெவிட்டாதவள் எனக்கு

பாரணை மாமி கட்டுறன் தாலியை - சின்ன மாமியே

பாடலை நித்தியின் குரலில் கேட்டு மகிழ இங்கே சொடுக்குங்கள்:

http://www.tfmpage.c...d/chinnamami.rm

http://rapidshare.com/files/269670955/491.htm.html

மக்கள் மயப்பட்டவை நித்தியின் பாடல்கள். எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கப்போகின்றன.

http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_13.html

Link to comment
Share on other sites

  • Replies 95
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..

இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது. இன்றும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடல். இப்பாடலுக்கு 40 வயதாகிறது.

இப்பாடலைப் பாடியவர் பொப்பிசைப் பிதா நித்தி கனகரத்தினம். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர். சுகததாச ஸ்டேடியத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகள் நடக்கும்.

அக்காலத்தில் நான் அவரை அறிந்தது ஒரு பொப் பாடகராக அல்லது மேடை பாடகராக மட்டுமே. பல காலத்துக்குப் பிறகு அன்றைய மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் (வந்தாறுமூலையில்) விரிவுரையாளராக சேர்ந்த போது தான் நித்தியை முதன் முதலாகச் சந்தித்தேன். பொப் பாடகராக அல்ல. பல்கலைக்கழக விரிவுரையாளராக. ஆமாம், விவசாயபீடத்தில் விரிவுரையாளராக இருந்தார். மேடைகளில் துள்ளிசை பாடிய அந்த மனிதரா இவர். ஆச்சரியமாக இருந்தது. மிகவும் அமைதியானவர். மிகவும் பண்பானவர். சிறந்த ஒரு விரிவுரையாளர். அப்போது அவர் பாடுவதை நிறுத்தி விட்டார் என்பது ஒரு கவலைக்குரிய விடயம் (அது ஏன் எண்டது பற்றிப் பிறகு சொல்லிறன்). ஆறு மாதங்கள் தான் அங்கு இருந்தேன். அந்த ஆறு மாதங்களும் மறக்க முடியாத நாட்கள். (இனப்பிரச்சினை மும்முரமாகத் தலைதூக்கியிருந்த நேரம் அது). முடிந்து வெளிக்கிடும் போது ஒரு பிரிவுபசார ஒன்றுகூடலை சக ஆசிரியர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். நித்தியும் கலந்து கொண்ட அந்த ஒன்றுகூடலை மறக்க முடியாது.

அண்மையில் மெல்பேர்ணில் இருந்து வெளியாகும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்கள் நித்தி கனகரத்தினம் அவர்களுடன் நடத்திய நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. (இப்பத்திரிகையில் இப்படி இடைக்கிடை ஒரு சில நல்ல தகவல்கள் வரும், அதுக்காகவே இந்த இலவசப் பத்திரிகையை இங்கு பலசரக்குக்கடையில் இருந்து பொறுக்கிக் கொண்டு வருவேன் என்பது வேறு விதயம்). அந்நேர்காணலில் சில முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிரலாம் என்றிருக்கிறன்.

நித்தி தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். அத்துடன் தமிழ் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.

ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார்.

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.

நன்றி நுணா! :)

சின்ன மாமியே பாட்டு எங்கட சனம் ஊரில பாடேக்க தான் சின்ன வயதில கேட்டு இருக்கிறேன். உண்மையான பாட்டுகாறரை பற்றி அறிய தந்தற்கு நன்றி.

அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

:icon_idea::):D

1983இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளினால் பெரிதும் விரக்தியடைந்திருந்த நித்தி இனி மேடைகளில் பாடுவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறார். அதை இன்றுவரையில் கடைப்பிடித்தும் வருகிறார்.

:(:(:(

Link to comment
Share on other sites

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Nithy.jpg

....

1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்டார். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவற்றில் ஒரு பாடல்:

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி smiley-laughing021.gif

இப்படியான பாடல்களைத் தானே இயற்றிப் பாடினார்.

.....

http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post_13.html

இணைப்பிற்கு நன்றி நுணா. இவர் தான் இந்தப் பாடலைப் பாடினாரா? சிலோன் மனோகர் என்று ஒரு பாடகர் இருந்தார், அவர் தான் இந்தப் பாடலைப் பாடினார் என்று சொல்லிக் கேள்வி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வருடமென்று நினைக்கிறேன்.... நித்தி கனகரத்தினமே இல் ஒரு பேட்டியில் இந்தப் பாடல் தானே பாடியதாகவும் ஆனால் அனேகமானோர் சிலோன் மனோகரே பாடியதாகவும் நினைத்துக்கொண்டிருக்கிராறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மாமியே நித்தி கனகரத்தினம்

Nithy.jpg

ஆமணக்கம் சோலையிலே

பூமணக்கப் போற பெண்ணே

உன்னழகைக் கண்டவுடன்

கோமணங்கள் துள்ளுதடி

உண்மையில் எங்களுக்கு ஏற்ற நல்ல கருத்துள்ள பாட்டு .

:D:icon_idea:

நித்தி கனகரத்தினம் தொடர்ந்து பாடாமல் விட்டது , எமது தூரசிஷ்டமே .

அருமையான ஈழத்து பாடகர் பற்றி நினைவூட்டியமைக்கு நன்றி நுணாவிலான் . :)

Link to comment
Share on other sites

நித்தி கனகரட்ணத்தைப் பற்றி ஞாபகப் படுத்தியதற்க்கு நன்றி. நான் கனடா பயண அனுப்வைத்து எழுதிவரும் நாவலில் வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும் தானே தாயகத்தைத் தக்க வைத்துக்கொண்டு வாழ்கிறோம் என்று எழுதினேன். அது எவ்வளவு உண்மை. நித்தி பற்றிய சேதி என்னதைப் போலவே பலரது மனதிலலும் தாயக நினைவுகளைக் கிளரவைக்கும்.1980பதுகளின் ஆரம்பத்தில் நான்னுடைய என் ஜப்பானிய தோழி ஆரியுடன் அவருடைய வீட்டில் தலைமறைவாக இருந்திருக்கிறேன். அமைதியானவர் ஆனால் மிகுந்த துணிச்சல் உள்ளவர். என்னுடைய தோழி ஆரி உலகப் புகழ் சினிமா காரர் அக்கிறொ குறசோவாவின்மாணவ உதவியாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஆரியும் நல்ல பாடகி. அவருடய மனைவி மிகவும் இனிமையானவர். பிள்ளைகள் பட்டாம்பூச்சிச் சிறுவர்களாக இருந்தார்கள். அச்சத்துக்குப் பதைலாக கலைஞர்களின் திருவிழாப்ப்போல அந்த தலைமறைவு நாட்க்கள் கழிந்தது. அதுபற்றி ஒரு நாவல் எழுத விருப்பம். தலைமறைவின் பின்னணி சுவாரஸியமானது. வன்னியில் இருந்து நானும் ஆரியும் வவுனியா வந்தபோது டாக்டர் ராஜசுந்தரம் கைதாகியிருந்தார். ஆரியின் தந்தை ஜப்பனின் பெரிய தொலைக்காட்ச்சியான அசாக்கி சிம்பொனில் இயக்குனராக இருந்தார். நான் ஆரியை டாக்டர் ராஜசுந்தரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். பல தகவல்கள் ஆவணங்கலை டாக்டரின் மனைவியிடமிருந்து சேகரித்தோம். அவற்றை கடத்திவர ஆரி சம்மதித்தாள். பின்னர் திருமலை சென்று வாகரை றெஸ்ற் ஹவுசில் தங்கியிருந்தோம். அங்கு பொலிஸ் எஸ்பியின் தம்பியான சிங்கள ததா ஒருவர் பேரழகியான ஆரியில் மோகமாகியதில் பிடித்தது தொல்லை. என்னைக் கைது செய்வதற்க்கு அவர் சூட்ட்சி செய்தார். நான் அவருக்கு செருப்பால் அடித்து விட்டேன். மக்களும் வாகரை டாக்கடராக இருந்த சிவராசாவும் ((பின்னர் சென்னையில் TRROநிர்வாகியாக இருந்தவர்) என்னக்கு உதவினர். எனக்கு முன்னமே தெரிந்த தமிழ் பொலிஸ் அதிகாரி பதவியில் இருந்தார். அவர் பெயர் தீசனோ தீபனோ என்று நினைக்கிறேன். அந்த தாதாவை கண்துடைப்புக்காக தடுத்து வைத்துக்கொண்டு என்னோடு பேரம் பேசினார்கள். இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தைவிட்டு உடனடியாக ஆரியும் நானும் வெளியேறவேண்டும் என உத்தரவிட்டார்கள். தனிப்படவும் அந்த அதிகாரி உடனே மட்டக்கலப்பை விட்டுப் போய்விடு ஆபத்தான கும்பல் என எச்சரித்தார். இந்த நிலையில் நான் நித்தியின் விருந்தினனாக மட்டகளப்பில் தங்கி இருந்தேன். நித்தி நல்ல கலைஞன். நல்ல கணவன். நல்ல தந்தை. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதன். ஒரு பாடகன் என்கிற முறையில் நித்தி மீண்டும் பாடவேண்டிய காலம் இதுதான். ஒரு படுகொலையில் மெள்னித்த குரல் இன்னொரு படுகொலையில் உயிர்க்க வேண்டும். யாராவது நித்தியின் மின்னஞ்சல் விலாசத்தை அனுப்புங்கள் visjayapalan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு நுணாவிலான். பொயற் உங்கள் பழைய நினைவுகளை மீட்டியுள்ளீர்கள். நித்தி போன்ற கலைஞர்கள் தொடர்ந்து பாட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயற்றும் , இப்படியான பாடல்களை முசுப்பாத்திக்காக இயற்ற முயற்சிக்கலாமே ......

ஜெயபாலனால் முடியும் .

தயக்கம் ஏனோ ......

Link to comment
Share on other sites

நித்தியின் பாடல்கள் சில:

http://tamilamutham.net/site/?p=Ceylon%20T...a&Itemid=27

http://tamilamutham.net/site/?p=Ceylon%20T...a&Itemid=27

நித்தி அவுஸ்திரேலியாவில் மீளப் பாடி வெளியிட்ட பாடல்கள் (எனினும் பழமை என்றும் இனிமைதான். :icon_mrgreen:

http://tamilamutham.net/site/?p=Australia%...a&Itemid=27

Link to comment
Share on other sites

சில பாடல்களின் வரிகள்:

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும்

நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும் உனக்கு நானும்

வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும்

பேரறிஞன் ஆகிடுவானே.

2.

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்?

அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்

ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்

மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்

போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்

லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்

கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்

என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

தோழன் நித்தியைசென்ற தடவை எங்கே சந்தித்தேன் என்பது ஞாபகமில்லை. சமாதானப் பேச்சுவார்த்தை காலம் என்றும் ஏதோ ஒரு மேற்க்கு நாட்டு அரங்கம் என்றும் நினைக்கிறேன். எங்கள் காலத்து நாயகனான அந்த தோழன்னோடு அரங்கத்தின் ஓரத்தில் அமர்ந்து அவனது கிட்டார் இசைக்கு ஒரு பாடல் எழுத ஆரம்பித்தது ஞாபகத்தில் இருக்கு. நித்தியும் இசை அல்பம் வெளியிட்டு அடி வாங்கி இருப்பார் என்றே நினைக்கிறேன். பாடல் எழுதுங்கள் தொகுப்பு போடுங்கள் என்கிற கோரிக்கை ஆரோக்கியமானதுதான். கடன்மேல் கடன்பட்டாவது அதை செய்யுங்கள் என்கிற எதிர்பார்ப்புத்தான் கோபப்படுத்துகிறது. ஏற்கனவே கையைச் சுட்டபுண் இன்னும் ஆறவில்லை. நித்தியும் நானும் சேர்ந்து ஈழப்போர் IV ன்பின்னரான துயரத்தையும் மீண்டு எழும் கனவுகளையும் பதிவு செய்து ஒரு தொகுப்பு சென்னையில் தயாரிக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்த யார் இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் புகைந்திடும்

நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

இந்த "பிற்போக்குத் தனமான" வரிகளை ஒரு முன்னாள் குடிமகன் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கள்ளு உடம்புக்குக் குளிர்ச்சியான பானம், விற்றமின்கள் நிறைந்தது. யாரப்பா அங்க..கு.சா, யாழ் நிலவன் ஓடிவாங்கோ, கள்ளின் மகிமையை எடுத்து விடுங்கோ..! :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த "பிற்போக்குத் தனமான" வரிகளை ஒரு முன்னாள் குடிமகன் என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கள்ளு உடம்புக்குக் குளிர்ச்சியான பானம், விற்றமின்கள் நிறைந்தது. யாரப்பா அங்க..கு.சா, யாழ் நிலவன் ஓடிவாங்கோ, கள்ளின் மகிமையை எடுத்து விடுங்கோ..! :(:lol:

விற்றமின்களை விமர்சித்தவர்களை வன்மையாகக் கண்டியுங்கோ. சாத்திரியை மறந்திட்டிட்டீங்கள் யஸ்ரின். அழகான பனைமரங்களின் நினைவு சாத்திரியிடமும் நிறைய உண்டல்லவா :(

Link to comment
Share on other sites

பாடல் எழுதுங்கள் தொகுப்பு போடுங்கள் என்கிற கோரிக்கை ஆரோக்கியமானதுதான். கடன்மேல் கடன்பட்டாவது அதை செய்யுங்கள் என்கிற எதிர்பார்ப்புத்தான் கோபப்படுத்துகிறது. ஏற்கனவே கையைச் சுட்டபுண் இன்னும் ஆறவில்லை. நித்தியும் நானும் சேர்ந்து ஈழப்போர் IV ன்பின்னரான துயரத்தையும் மீண்டு எழும் கனவுகளையும் பதிவு செய்து ஒரு தொகுப்பு சென்னையில் தயாரிக்கலாம். ஆனால் அதைச் செயல்படுத்த யார் இருக்கிறார்கள்?

இந்தப்பக்கத்துக்கு எமது ஊக்குவிப்புகள் இன்னும் முன்னேற்றம் காணவில்லை ஜெயபாலன் அவர்களே, சந்தைப்படுத்தல் எமது படைப்புகளுக்கு பெருத்த வரவேற்பை இன்னும் பெறவில்லை. இதற்கான காரணங்கள் இங்கு இதுவரை காலமும் குறிப்பிட்ட சிலருக்காக சிலரால் விதிக்கப்பட்ட விதிமுறைகள். இத்தைகய முயற்சிகளை வரவேற்று அதற்கு சிறிய பங்களிப்புகளைச் செய்வோரும் குறிப்பிட்ட சிலரே. அவர்கள் தான் எல்லாத்திற்கும் எள்ளாய் பங்கிடவும் வேண்டிய நிலமை. இவற்றைத் தாண்டிய முன்னெடுப்புகளை இன்னும் எமது கலையுலகம் செய்யவில்லை. முயலவுமில்லை.

நோர்வேயில் வசீகரன் முன்னெடுத்த முயற்சி எத்தனை தடைகளை நட்டங்களைத் தாண்டி வந்தது. முதல் தொகுப்பான காதல் கடிதம் இந்தியப்பாடலாசிரியர்களுக்க

Link to comment
Share on other sites

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

நல்ல நல்ல மாப்பிள்ளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சீதனத்தை அள்ள நிக்கிறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஏமாந்து போனாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஏமாறப்போறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

இந்த நாட்டினுள்ளே நரிகள் என்று யாருக்குப் புரியும்?

அன்றொருநாள் நடந்ததொரு அவசரக்கலியாணம்

ப்ளேனிலேதான் பறந்துவந்தார் மாப்பிள்ளை டாம்பீகம்

மாப்பிள்ளையும் பெண்ணுமாக வெளியூர் பிரயாணம்

போன ப்ளேனில் திரும்பி வந்தாள் போச்சுது அவள் மானம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

எஞ்சினீயர் எண்டு சொல்லிப் புளுகித்தள்ளினாராம்

லண்டனிலோர் ஹோட்டலிலே வெயிட்டர் வேலைதானாம்

கொண்டுபோன காசிலேதான் காரும் வாங்கினாராம்

என்று அந்த பெண்ணும் வந்து சொல்லி அழுதாளாம்

ஐயைய்யோ வெட்கக்கேடு யாருக்குத்தெரியும்?

வெளி நாட்டில் இன்று நடப்பதுதான் யாருக்குப்புரியும்?

லண்டனிலே மாப்பிளையாம் பெண் கேக்கிறாங்க

ஆயிரமாய் சம்பளமாம் எண்டு சொல்லுறாங்க

எத்தனையோ பொம்பளைங்க ஊர்பார்த்து வந்தாங்க

இன்னும் சில பொம்பளைங்க ஊர்பார்க்கப்போறாங்க

:lol:

இந்தத் தொப்பியார் யாருக்கு அளவாகுதோ, அவர்களும் என்னுடம் சேர்ந்து போட்டுக் கொள்ளலாம் :(

Link to comment
Share on other sites

  • 4 months later...

அருமையான பாடல் பதிவுக்கு நன்றியப்பு :D:lol::lol::lol:

கள்ளுக்கடைப் பக்கம் போகாதே

காலைப்பிடித்துக் கெஞ்சுகிறேன்

கண்ணும் புகைந்திடும்

நெஞ்சும் வரண்டிடும்

கைகால் உலர்ந்திடும் இந்த கள்ளாலே

ஆச்சி எந்தன் அப்புவும் இந்தக் கடையில் தான்

அடுத்தவீட்டு வாத்தியாரும் கடையில்தான்

விட்டமின் பீ எண்டு வைத்தியரும் சொன்னதாலே

விட்டேனோ கள்ளுக்குடியை நான்

பாவிப் பயலே கொஞ்சம் கேளடா

பாலூட்டி வளர்த்த நானுன் தாயடா

பற்றி எரியுதெந்தன் வயிறடா

பனங்கள்ளை மறந்து நீயும் வாழடா

கடவுள் தந்த பனைமரங்கள் தானடா

கடவுள் கள்ளைத் தொட்டதுண்டோ கேளடா

வாய்க்கொழுப்பும் மனத்திமிரும் வளர்ந்துவரும் உனக்கு நானும்

வாலறுக்கும் நாளும் வருமோ

கள்ளுக்குடி உன் குடியைக் கெடுத்திடும்

கடன்காரனாக உன்னை மாற்றிடும்

கண்டகண்ட பழக்கமெல்லாம் பழக்கிடும்

கடைசியில் கட்டையிலே கொண்டு போய்ச் சேர்த்திடும்

கடவுளே என் மகனும் இதனை உணரானோ

கள்ளுக்குடியை விட்டொழிந்து திருந்தானோ

அன்னை சொல்லு கேட்பானென்றால்

ஆறறிவு படைத்த அவனும்

பேரறிஞன் ஆகிடுவானே.

பேசாமல் நெடுக்கரும் எண்டு போட்டிருக்கலாமே

:lol:

இந்தத் தொப்பியார் யாருக்கு அளவாகுதோ, அவர்களும் என்னுடம் சேர்ந்து போட்டுக் கொள்ளலாம் :(

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்த பாடலுக்கும் ஒரு வரலாறே உண்டு

நான் சிறு வயதில் நன்றாக பாடுவேன்

சங்கீதத்தில் O/L இல் D எடுத்தேன்

எனது மாமியாரின்(எனது அம்மாவின் தமையனின்மனைவி) வீட்டுக்கு போனால் பாட்டுப்பாடச்சொல்லிக்கேட்பார்

அவரும் நன்றாக பாடுவார்

நான் இந்தப்பாட்டைத்தான் பாடுவேன்

அவரும் என்னோடு சேர்ந்து பாடுவார்

இறுதியில்

அவரது சின்ன மகளையே கட்டிக்கிட்டேன்

பாட்டை பாட வைத்து மகளை தள்ளீ விட்டா எனச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

பாட்டை பாட வைத்து மகளை தள்ளீ விட்டா எனச் சொல்லுங்கள்.

இப்போ தானே உள்ளது வருகிறது, ரதி. :):huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டை பாட வைத்து மகளை தள்ளீ விட்டா எனச் சொல்லுங்கள்.

மகளைத்தள்ளிட்டு போறதுக்காக பாடினேன் என்று சொல்லாதது

என்மீது தாங்கள் வைத்திருக்கும் மதிப்பை குறிக்கிறது..............?????????

நன்றி

இப்போ தானே உள்ளது வருகிறது, ரதி. :(:lol:

வரலாறு என்பது பொய் சொல்வதால் வருவதில்லை தோழரே..

ஆனால்

யாழில் பல பொய்கள் உலாவுவது மெய்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடிப் பெற்ற பரிசு :( என்று சொல்லலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடிப் பெற்ற பரிசு :D என்று சொல்லலாமா?

smiley-music021.gifsmiley-music025.gifsmiley-music009.gif :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேளதாளங்களுக்கு நன்றி சிறி

ஆனால் தாமதமாக

இன்னும் 3 வருடத்தில் 1/4 நூற்றாண்டு

Link to comment
Share on other sites

  • 7 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.