-
Tell a friend
-
Topics
-
19
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
5
By உடையார்
தொடங்கப்பட்டது -
0
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல் பெங்களூரு: மூச்சுத்திணறலால் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி ஆனது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுடன் நீண்ட கால நுரையீரல் பாதிப்பும் உள்ளது. அவருக்கு இன்சுலின், ஹெபரின் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளும் வழங்கப்பட்டு இருந்தன. பவுரிங் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிந்துரையின் பேரில் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நேற்று அழைத்து வரப்பட்டு இருந்தார். அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்ததில் நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு காய்ச்சல் அதிகமானதால் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடுமையான நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. நுரையீரலிலும் தீவிர தொற்று உள்ளது. இதனால் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.maalaimalar.com/news/topnews/2021/01/22090954/2277956/Tamil-News-Sasikala-affected-pneumonia-fever-hospital.vpf
-
இதே சிங்கள காட்டு மிராண்டிகள் இதுவரை செய்தவற்றை நாம் மறந்துவிட்டோம், இனியும் சிங்கள மீனவர்களுக்கு தொடர்ந்து துணை போவார்கள், குரல் கொடுக்க நமது தமிழ்நாட்டு மீன்வர்கள் மட்டும்தான், அவர்கள் மேட்டுகுடிகள் அல்ல, நல்ல மனதுள்ள மோட்டு குடிகள்👍
-
கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசிகலா மருத்துவமனையில் இருப்பார் பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சசிகலாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வரும்போது அவருக்கு காய்ச்சல் இருந்தது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 79 சதவீதமாக இருந்தது. உடனே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்தனர். காய்ச்சலை கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்பட்டன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் டி.டி.வி.தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்பட அ.ம.மு.க.வினர் சிலர் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர். டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர், சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுடன் ஆலோசனை செய்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர். அதன் பிறகு மதியம் 2 மணியளவில் சி.டி.ஸ்கேன் பரிசோதனைக்காக சசிகலா, ஆம்புலன்சில் போலீஸ் பாதுகாப்புடன் விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை சக்கர நாற்காலியில் வைத்து ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து ஆம்புலன்சுக்கு அழைத்து வந்தனர். அப்போது கட்சியினரை பார்த்த அவர் தனது வலது கையை அசைத்து, தான் நலமுடன் இருப்பதை உணர்த்தினார். அதன் பிறகு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. சசிகலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதையொட்டி விக்டோரியா ஆஸ்பத்திரி முன்பு அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். டி.டி.வி.தினகரன் மட்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்து அவரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து விக்டோரியா அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- பெங்களூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 63 வயதாகும் சசிகலாவுக்கு 2-வது வகை சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்றவை இருப்பது தெரியவந்தது. அவருக்கு நீண்டகால நுரையீரல் பாதிப்பும் (எஸ்.ஏ.ஆர்.ஐ.) இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருக்கு பவுரிங் மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இன்சுலின், ஹெபரின், ஸ்டெராய்டு போன்ற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பவுரிங் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரை அடிப்படையில் சசிகலா இன்று (அதாவது நேற்று) மதியம் 2.30 மணிக்கு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. சசிகலா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று அறிய ஆன்டிஜென் விரைவு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று வந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதற்கான முடிவு நேற்று இரவு வெளியானது. அதில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்டோரிய ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. வழக்கமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தது 10 நாட்கள் சிகிச்சை அளிப்போம். கொரோனாவோடு கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/22112737/Sasikala-currently-has-no-fever-and-is-in-stable-condition.vpf
-
அதே சிங்கள மீனவர்கள் முல்லை தீவில் கொள்ளை கொள்ளையாக சூறையாடுகின்றார்களே, அப்போது கேள்வி கேட்டார்களா இந்த சுமே? அதே தமிழக மீனவர்கள் எமது போராட்டதிற்கு எத்தனையோ விதமாக உதவி செய்தார்களோ அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? எமது வளத்தை கொள்ளையிடும் சிங்கள அல்லது சீனாவைவிட, தமிழக சகோதரங்களிடம் போவதே மேல், டக்ளஸ் சிங்கள மீனவர்களுக்கு துணை போவதை யாராவது கேட்டீர்களா? வாலி & சுவைக்கு மட்டும் : சிங்களத்தைவிட தமிழக தமிழர்களில்தான்னகாழ்புண்ர்வு. நல்லயிருக்கு. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
-
இலங்கை உண்மைகளை பொய்யாக்க முயல்கின்றது- கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை Digital News Team 2021-01-22T09:23:19 இலங்கை உண்மைகளை பொய்யாக்க முயல்வதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். கட்டுவாப்பிட்டிய சென்செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எந்த சக்தியாலும் தன்னை மௌனிக்க செய்ய முடியாது என மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தவறான விடயங்கள் குறித்து தவறு எனவும் சரியான விடயங்கள் குறித்து சரியானது எனவும் தெரிவிப்பதற்கான துணிச்சல் மக்களுக்கு அவசியம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சரியான விடயமொன்றை அல்லது தவறான விடயமொன்றை செய்தவர் எந்த கட்சியை மதத்தை இனத்தை சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை சரியான செயலை செய்வதே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருதேசமாக நாடாக எங்கள் மனசசாட்சிகள் இறந்துகொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் மக்களும் தேசமும் ஒரு சில அடையாளங்களுக்குள் சிக்குப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உண்மைகளை பொய்யாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு;ள்ளோம் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் உரக்க கூச்சலிடுவதால் உண்மைகளை பொய்களாக மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். உண்மை என்பது உண்மை பொய் என்பது பொய் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ தலைமை துணிச்சலுடன் பேசவேண்டும் ஒரு பேராயராக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நான் அதனையே செய்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது எனது உரிமை நான் இதிலிருந்து தப்ப முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் தீடீர் மாற்றங்கள் ஏற்படும்போது பலர் முகநூல் ஊடாக என்னை நிந்திக்கின்றனர் அது பரவாயில்லை சென் செபஸ்டியன்கள் மரணத்தினை பார்த்து அச்சப்படுவதில்லை,உங்கள் பேராயரும் அச்சப்படுவதில்லை,நான் உங்களிற்காக குரல்கொடுப்பேன் நீங்கள் உங்கள் உரிமைக்காக குரல்கொடுக்கவேண்டும் எந்த சக்தியாலும் என்னை மௌனமாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/106589
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.