Jump to content

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன

எங்கள் இமைகள் கவிந்துள்ளன

எங்கள் உதடுகள் அண்டியுள்ளன

எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன

நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக

எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக

எங்கள் முதுகில் கசையால் அடிக்குக

எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து போகட்டும்

தாழ்ந்த புருவங்கள் ஒருநாள் நிமிரும்

கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்

இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்

கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க

அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக

சண்முகம் சிவலிங்கத்தின் மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பிலிருந்து (பலர் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாகத் தோன்றியதால் இணைத்தேன்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.