Sign in to follow this  
theeya

கனவுகள் வாழ்கின்றன.

Recommended Posts

வாழ்க்கை - 1

தென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது.

தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன்.

இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது.

நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன.

மூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில்

வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம்.

மூன்றாண்டுகள் நான் எப்பிடி இருந்தேன்… எங்கிருந்தேன்… என்பதெல்லாம் இப்போது எனக்குத் தேவையற்றதாகிப் போயிருந்தது.

எந்த ஊர் என்றாலும் சொந்த ஊருக்கு நிகராக வராது என்ற உண்மையை இங்கு காலடியெடுத்து வைத்த இந்தக் கணத்தில் நான் உணரத் தலைப்பட்டேன்.

இப்போது என் உயிர்… மூச்சு… சுவாசம் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘செம்புலப் பெயல்நீராய்’ உருமாறக் கண்டேன். என் கைஇ கால் நரம்புகள் அனைத்திலும் மின்சார வேகம் பாய்ந்ததாய்ப் புத்துணர்வு பெற்று மீண்டுகொண்டிருக்கிறேன்.

செம்மண் கிரவல் வீதியில் ஆங்காங்கே புற்கள் முளைவிட்டிருந்தன. சேறும் சகதியுமாக பள்ளங்கள் நிரம்பியிருந்தன.

பல பழைய மனிதர்களை ஊரில் காணமுடியவில்லை. ஒருவேளை முதுமையின் சீற்றத்தில் அவர்கள் மாண்டிருக்கலாமோ என்னவோ…

ஊரில் புதிதாக யாரும் வேலிகள் போட்டதற்கான சுவடுகள் தென்படவில்லை. எல்லாரும் சகிப்புத்தன்மை பெற்றவர்களாகி

புதுப்பிறப்பெடுத்திருப்பதா

Share this post


Link to post
Share on other sites

தியா ..........உங்கள் கனவுப்பகிர்வுகள் தரமானதாய் இருக்கின்றன ஊர் பற்று உள்ள ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய கனவு...கனவுகள் மனதின் ஆசைகள் என்பார்கள் ஆசைகள் பலிக்க வேண்டி இறைவனை வேண்டுவோம். நட்புடன் நிலாமதி.

Share this post


Link to post
Share on other sites

தியா ..........உங்கள் கனவுப்பகிர்வுகள் தரமானதாய் இருக்கின்றன ஊர் பற்று உள்ள ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய கனவு...கனவுகள் மனதின் ஆசைகள் என்பார்கள் ஆசைகள் பலிக்க வேண்டி இறைவனை வேண்டுவோம். நட்புடன் நிலாமதி.

நன்றியக்கா உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி

தொடர்ந்து பார்த்துக் கருத்துக்களைச் சொல்லுங்கள்

உங்கள் வலைத்தளம் நன்றாக உள்ளது.

Edited by theeya

Share this post


Link to post
Share on other sites

தியா,

இப்படி நிறையவே ஒவ்வொரு தமிழருக்குள்ளும் கனவுகள் உண்டு.எல்லாம் விரைவில் நிறைவேறவேண்டும் அந்த நம்பிக்கையோடு மிகுதி நாட்களையும் நகர்த்திச் செல்வோம்.நானும் ஒரு புத்த பூச்சி தான் இப்போ யாழை விரும்பி பார்க்கும் பூச்சி ஆகிவிட்டேன்.உங்கள் கதையில் என்னைக் கவர்ந்த வரிகள்.........

எனக்குச் சின்ன வயதிலிருந்து புத்தகங்கள் என்றால் உயிர். ஒரு நல்ல புத்தகம் பத்து நண்பர்களுக்கு நிகரானது என்ற சீரிய கொள்கையுடையவன் நான்

யாயினி.

Share this post


Link to post
Share on other sites

தியா,

உங்களின் எழுத்து நடை அழகாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கை 1,2,3 என்று பிரித்திருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி யாயினி

yagini Posted Today, 01:39 AM

தியா,

இப்படி நிறையவே ஒவ்வொரு தமிழருக்குள்ளும் கனவுகள் உண்டு.எல்லாம் விரைவில் நிறைவேறவேண்டும் அந்த நம்பிக்கையோடு மிகுதி நாட்களையும் நகர்த்திச் செல்வோம்.நானும் ஒரு புத்த பூச்சி தான் இப்போ யாழை விரும்பி பார்க்கும் பூச்சி ஆகிவிட்டேன்.உங்கள் கதையில் என்னைக் கவர்ந்த வரிகள்.........

எனக்குச் சின்ன வயதிலிருந்து புத்தகங்கள் என்றால் உயிர். ஒரு நல்ல புத்தகம் பத்து நண்பர்களுக்கு நிகரானது என்ற சீரிய கொள்கையுடையவன் நான்

தொடர்ந்து பார்த்து கருத்துரைத்து வருகிறீர்கள் உங்கள் பதிலுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நன்றி சபேசன்

தியா,

உங்களின் எழுத்து நடை அழகாக இருக்கிறது. ஆனால் வாழ்க்கை 1,2,3 என்று பிரித்திருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி

சும்மா ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்றுதான் அப்படி வைத்தேன் வேற ஒன்றுமில்லை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அதுக்கு சீன நாடு தொடக்கம் பாகிஸ்தான் வரை நாடுகளும் வேறு அமைப்புக்களும் உண்டு. ஆகவே, எமது விரலுக்கு ஏற்ப, ச்சீ, எமது வேலையை அதாவது எமது நாட்டுடன் மட்டுமே நிற்போம் !
  • சூப்பராக இருக்கிறது.  இல்லறம் ஒரு நல்லறம்!
  • இலங்கையுடன் ஒப்பிடிகையில், பிரித்தானியாவில் சிசேரியன் அதிகம். இது குறித்து நமது டாக்டர் இடத்தில் கேட்ட போது சொன்னார்.... அங்கே தவறு இழைக்கும் டாக்டர்களுக்கு இன்சூரன்ஸ் தொல்லை இல்லை.... அதனால் புதியவற்றை முயலலாம். உதாரணமாக தலைக்குப் பதிலாக காலால் பிறந்த பிள்ளைகள் அங்குண்டு. டாக்டர்களுக்கு அதை எப்படி கையாண்டு டெல்வரி பண்ணமுடியும் என்று அனுபவத்தில் கற்றுக்கொண்டு விடுவார்கள். இங்கே அப்படி நிலையெண்டால், சிசேரியன் தான். ஆகவே அனுபவம் கிடையாது. லண்டணில் ஒரு சோமாலி பெண்ணக்கு காலால் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு சிசேரியனுக்கு தேதி குறிக்கப்படுகின்றது. ஆனாலும் முன்னதாகவே பிரசவவலி. ஒரு சிங்கள டாக்டர், பிரசவம் பார்கிறார். சிசேரியன் செய்ய உடனடி வசதி இல்லை. ஆனாலும் தன்னால் டெல்வரி பண்ணமுடியும், உறுபபில் சிறிய வெட்டு போட்டு, பிரசவத்தின் பின் தையல் போடலாம் என்று சொல்லி ஒப்புதல் பெற்று வெற்றிகரமாக செய்கிறார். ஆனாலும் வெள்ளைகளால் கோள் மூட்டப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ள, பிறப்புறுப்பு விருத்த சேதனம் தான் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ சங்க ஆதவுடன், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டார். இது தான் அமெரிக்கா, இந்தியா போன நிதர்சனம்.  
  • வரும். வரும். 👍 அன்னாள் என் வாழ்வின் இனிய பொன்னாள். 😀 எங்களுக்கு தனி நாடு கிடைக்குதோ இல்லையோ, இந்தியா என்கின்ற நாடு உலகின் வரைபடத்திலிருந்து மறைய வேண்டும் 😡
  • டமிலனா கொக்கா ?  அவர்களின் வீட்டிற்கு கைக் குத்தரிசி கொண்டுவருபவர் ஒரு வயதான அம்மா. அவரின் காதோ கடுக்கன்/ தோட்டின் (?) (பழைய கால டிசைன்)பாரத்தில்   தோள்வரைநீண்டு தொங்கியபடியிருக்கும். பிளவுஸ் இல்லாத குறுக்குக் கட்டிய சேலை. முகத்தில் மூப்பும் கடின உழைப்பின் மினுமினுப்பும் ரேகைகளாக சுருங்கி ஒட்டியபடியிருக்கும்.    தலையில் அரிசி பையை (உரப் பை / சாக்கு / கடகம் ?) வைத்து பல மைல்கள் வெய்யிலில் நடந்து அவ்வூருக்கு கொண்டு வருவார். அவருடன் பலரும் கூடவே வந்து ஊர் எல்லையை அடைந்தவுடன் பிரிந்து தங்களுடைய பிரத்தியேக வீடுகளுக்குச் செல்வர். இந்த அம்மா அரிசியை இந்த வீட்டிற்குத்தான் முதலில் கொண்டு  வருவார். ஏனென்றால் இந்த வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகம். பத்து வளர்ந்த பிள்ளைகளும் பெற்றோரும் உள்ளடங்கலாக பன்னிரெண்டு உருப்படிகளைக்  கொண்ட கடின உழைப்பளிகள் குடும்பம்.  இந்த வயதான அம்மா, வீட்டின் படியிலமர்ந்து அரிசியை அளந்து கொடுத்தவுடன் அருந்துவதற்கு தண்ணீர் கேட்பார். வீட்டுக்கார அம்மாவும் மகிழ்வுடன் பித்தளைச் செம்பில் தண்ணீரைக் கொண்டுவந்து சரித்து ஊத்துவார். அந்த வயதான அம்மாவும் இரு கைகளையும் ஏந்தி அருந்துவார். இது ஒரு காலம். 🙂 பின்பு .... இந்தியன் ஆமி வந்தது. குறிப்பிட்ட காலத்தில் சண்டையும் தொடங்கியது. 😢   இந்த வீட்டுக்கார அம்மாவின் குடும்பமும் கையில் கிடைத்தை எடுத்துக்கொண்டு ஊரோடு  ஓடத் தொடங்கியது. நீண்ட ஓட்டம்.   அவர்கள் ஓடிக் களைத்து,   எதிர்ப்பட்ட பெரிய மதிலினோரமாக  கேற்ருக்கு  அருகில் நின்ற மரத்தின் கீழ் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அவ் வீட்டில் குடியிருந்தோர்  அவர்களை உள்ளே அழைத்து கதிரைகளில் இருத்தி தேனீரும் வழங்கி அவர்களை உபசரித்தனர். திரும்பவும் இந்த வீட்டுக்கார அம்மாவின் குடும்பம் அவர்களுக்கு நன்றி கூறி புறப்பட ஆயத்தமானார்கள். அந்த நேரம் பார்த்து  வீடடினுள்ளேயிருந்து சிறிய இருமலுடன் ஒரு வயதான அம்மா இவர்களுக்கு முன்னே வந்தார். இவர்கள் முகத்தில் ஈயாட......... இந்த விடயத்தில் இந்தியன் ஆமிக்கு நன்றி. 🙂 (இது ஓர் உண்மைச் சம்பவம்) திரியின் தலைப்பிற்கும் இந்தக் கதைக்கும்  தொடர்பில்லையென்றாலும் கிருபனுக்கு ஒருக்கா  முண்டு கொடுப்போமெண்டு நினைச்சன்.....😀