• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

தெளிவு பிறந்தது ...........

Recommended Posts

தெளிவு பிறந்தது .................

அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடுமையால் தாயின் அருகாமையயை விட்டு விலகவே இல்லை . பள்ளி விடுமுறை வேறு . எங்காவது கூடி போங்கள் என்று சாருமதி கேட்டு இருந்தாள். மாதக் கடைசி விடுப்பு எடுக்க முடியாது அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

அலுவலகத்தில் டைபிஸ்டு இந்திரா , சற்று ஒரு மாதிரியானவள் என்று கேள்வி பட்டு இருந்தான் . ஆனால் அவனுடன் எந்த விதமான் , செயல்களுக்கும் இடம் கொடுபவளாக் காட்டிக் கொடுக்க வில்லை. . ராகவன் தன் தேநீர் இடைவேளை முடிந்து , மீண்டும் தன் இருக்கையை அடைந்தான். எதோ சந்தேகம் கேட்க வந்தவள் , சார் இன்று , ஏதும் சுகவீனமா ? ஏதும் பிரசினியா ? வீடுக்கு போகும் போது நம்ம வீடு பக்கம் வந்து போங்க சார் என்று ........சூசகமாக சொன்னாள்.

ராகவன் மனம் கிடந்து அல்லாடியது. இரவு மனைவியின் அணைப்பு கிடைக்க வில்லை எதோ ஒன்றுக்காக மனம் ஏங்கியது. அவனது வாழ்வில் என்றுமே அப்படியான இடங்களுக்கு போனதில்லை. வாலிபத்திலும் சரி இப்போதும் சரி , "அப்படியான " கதைகளை நண்பர்களுடன் பேசி கொள்ளவதுடன் சரி . அந்த இடத்திலே அந்த நினைப்பை விட்டு விடுவான். இன்று ஏனோ ஒரு தடுமாற்றம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் என்று ..... என்று மனம், அமைதி அடைய வில்லை.

எதோ ஒரு தவிப்பு ........ஒரு தடவை போய் தான் பார்ப்போமே....என்று மனம் ஏங்க , வேலை முடிந்ததும் தன் வாகனத்தை ,அவள் வீடு நோக்கி ஓட்டினான். வீட்டை அண்மித்தும் சற்று தூரத்தில் நிறுத்தினான். கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான். களவு மாங்காய் ருசிக்கும் என்பார்கள். அவள் வீட்டை அண்மித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். அழைப்ப்பு மணியை , அழுத்த கையை உயர்த்தியவன் , வாயிலில் இருக்கும் ஆண்களின் காலணிகளை பார்த்தும் திடுக்கிட்டான். யாரோ உள்ளிருக்கிறார்கள். சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு . விறு விறு என்று , தன் காரை நோக்கி நடந்தான். வேகமாக் வீடு நோக்கி சென்றான். வீட்டை அடைந்ததும் , சாருமதி , ஏனுங்க இவ்வளவு லேட்டு , மாதுளனை டாக்டரிடம் அழைத்து போனேன் , மாத்திரைகள் தந்தார், நன்றாக் வேர்த்து காய்ச்சல் , குறைந்து விட்டது. சமர்த்தாக் தூங்குகிறான் என்றாள்.

குளித்து இரவு உணவை முடித்தவன் .........சற்று நேர தொலைக்காட்சி பார்த்தவன், நித்திரைக்கு சென்றான். சமையலறை வேலை முடித்து வந்தவள் , மாதுளனுக்கு இரவு மருந்தை புகட்டி விட்டு , நன்றாக் போர்வையை இழுத்தி போர்த்து விட்டு , படுக்க சென்றாள். ராகவன சலனமற்று காத்திருந்தான். என்னங்க தூங்கிடீங்க்களா? நேற்று மாதுளனுக்கு ,முடியலைங்க , அது தான் அவனுடன் படுக்க வேண்டியதாயிற்று என்றாள். . அடியே என் ராசாத்தி கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும். ஒரு சின்ன் அஜச்த்மேண்டு (adjustment )...இது கூடவா முடியாது ? என்று அவளை இறுக அணைத்தான். விடிந்ததும் நல்ல பொழுதாக் விடிந்தது , . வேலைக்கு போகும் வழியில் அட சீ .....இப்படி ஒரு , சபலமா ? அநியாயமாக் ஒரு சாக்கடையில் விழ இருந்தேன். ஜென்மம் முழுது ம ஒரு கறையை தேட இருந்தேன். அப்படி போய் இருந்தால் மனம் அமைதியடையுமா? சாருவுடன் , இணயும் போது குற்ற உணர்வால் அல்லவா கூனி குறுகி இருப்பேன். என் சாருவுக்கு துரோகம் செய்ய இருந்தேனே. கடவுளே என்னை மன்னித்து விடு ...........இனி மேலும் தடுமாற விடாதே என்று மனதுள் கும்பிடான். அலுவலகம் சென்றவன், அமைதியாக தன் வேலையில் ஈடு படான். டைபிச்டுவை கூபிட்டு ..........தான் ஒரு வாரம் குடும்பத்துடன் விடுமுறை செல்வதாகவும் அந்த வாரதுக்கான் வேலையை குறிபெடுக்க் வரச் சொல்ல அழைப்புமணியை யை அழுத்தினான்.

மறு நாள் ராகவன் சாரு , குழந்தைகள் மாதுளன் , மனோஜனுடன் விடுமுறை விடுதி ..........நோக்கி பயணமாயினர்.

குறிப்பு .....நான் இப்படி யான கதை எழுவது இது தான் முதல் தடவை .

குறை நிறை சொல்லுங்க.

அப்படியே என் தளத்துக்கும் ஒரு விசிட் mathinilaa.blogspot.com ..........வாங்கோ .

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கா....நீங்கள் எழுதும் கதைகள் அணைத்தையும் விரும்பி வாசிப்பேன். சிறிதாகவும், சுவாரசியத்துக்காக உப்பு, புளி சேர்க்காமல் யதார்த்தமாக நீங்கள் எழுதும் கதைகள் அணைத்தும் அழகு.

Share this post


Link to post
Share on other sites

சபேஷ் என்னிடம் உப்பு புளி பற்றாக்குறை.........கொஞ்சம் அனுப்பவும்.(சும்மா )உங்க வரவுக்கும்பதிவுக்கும் நன்றி

104 .......பேர் வாசித்து இருக்கிறார்கள் நீங்களாவது கருத்து சொனீர்கள். நன்றி. .

Share this post


Link to post
Share on other sites

சபேஷ் என்னிடம் உப்பு புளி பற்றாக்குறை.........கொஞ்சம் அனுப்பவும்.(சும்மா )உங்க வரவுக்கும்பதிவுக்கும் நன்றி

104 .......பேர் வாசித்து இருக்கிறார்கள் நீங்களாவது கருத்து சொனீர்கள். நன்றி. .

அக்கா கருத்து எழுதுவம். எழுதிற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

எங்க உறவுகளை சிங்கள காடையன்கள் கொல்லுற காட்சியை பார்த்திட்டு.......... :icon_mrgreen::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அக்கா கருத்து எழுதுவம். எழுதிற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

எங்க உறவுகளை சிங்கள காடையன்கள் கொல்லுற காட்சியை பார்த்திட்டு.......... :icon_mrgreen::icon_idea:

:D

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் நிலாமதி.. எழுதுவதற்கு இதுதான் எல்லையென்றில்லை..எல்லாவற்றைய

ும் தொட்டுச்செல்லாம் .. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்..

Share this post


Link to post
Share on other sites

நல்ல கதை நிலாக்கா...தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

கதை நன்றாக உள்ளது தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி மேலும் மெருகேற வாழ்த்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

யாழில் குறிப்பிட்ட உறுப்பினர்களின் கதைகளைத்தான் இதுவரை வாசித்து வந்தேன். முதன் முறையாக உங்களின் கதை ஒன்றை இன்று தான் வாசித்தேன். வாசிப்பவர்களைக் கவரும்படி சுவரஸ்யமாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். மற்றைய உங்களது ஆக்கங்களையும் நேரம் கிடைக்கும் போது வாசித்து எனது கருத்துக்களை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி,

சற்று நேரத்தில் வாசித்துவிடக்கூடிய வகையில் எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்.

கதையின் வேகம் கதையோடு வாசகஒட்டுத்தன்மையில் இக்கதையில் புதுப்பித்துள்ளீர்கள் அதுவே உங்களின் இதுவரையான கதைகளிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

உங்கள் கதையின் நாயகிகள் ஒன்றில் ஆணுடனான ஒட்டி வாழ்தல் அதைத்தாண்டினால் இக்கதையில் ரைப்பிஸ்ட் போன்ற உருவகிப்பு இவற்றை சற்று மாற்றினால் கதையின் உயிரோட்டம் துணிச்சல் மிக்க பரப்பிற்கு சென்றடையும்.

எங்கள் பெரும்பாலான வளர்ந்த அல்லது முதிர்ந்த எழுத்தாளர்களின் பெண் என்றால் இப்படித்தான் ஆண் என்றால் இப்படித்தான் என்ற வரையறைக்குள் உங்கள் நாயகிகளையும் சரி நாயகன்களையும் சரி கட்டி வைத்துவிடாமல் இன்றைய உலகோட்டத்தில் ஒளிப்புகளை தாண்டிய ஆண் பெண் வளர்ச்சிகளையும் தொட்டு எழுதலாம்.

ஒருநாள் மனைவி பக்கத்தில் இல்லையென்றதும் மறுநாள் இன்னொருத்தியைத் தேடும் கணவன் என்ற விபரிப்பு அவனது முழுமையான பலவீனத்தைத்தான் காட்டுகிறது. ரமணிச்சந்திரன் சுஜாதா லக்ஸ்மி போன்ற தமிழக எழுத்தாளர்களின் ஒருபாலினரை குற்றமும் மறுபாலினரை சமூகத்தின் உயர்ச்சிப்பீடத்தின் கடவுள் தன்மையை மாற்றிய தனித்துவ வெளிப்பாடுகள் உங்களால் எழுதப்பட வேண்டும்.

உங்களால் முடியும். எழுதுங்கள். இதை எழுதவா இதை எழுதக்கூடாதா என்ற பயத்தை விட்டு எழுதுங்கள். நிச்சயம் உங்களுக்குள் உள்ள புதிய மனிசி புறப்படுவாள்.

(கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்)

Share this post


Link to post
Share on other sites