Jump to content

வேலி பாய்ந்து போன சேவல்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Cock.jpg

இஞ்சருங்கோ.. எங்கட வீட்டுச் சேவல் அடுத்த வளவுக்க போய் அவையின்ர பேட்டோட கலைபடுகுது.. ஒருக்கா சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்திக் கொண்டு வாங்கோப்பா. அங்க போய் பழகிட்டு என்றால் பிறகு அங்கையே தங்கிடும் அப்பா. இந்த முறை எங்கட புள்ளிக் கோழிக்கு அடை வைக்கலாம் என்றிருக்கிறன்.

ஓமடியப்பா.. நானும் கவனிச்சனான். அவர் இப்ப கொஞ்ச நாளா அங்கதான் அதிகம் மிணக்கடுறார். உந்த ஊரல்லாம் திரிஞ்சு சாவகச்சேரி சந்தையில வேண்டி வந்த வெள்ளைடையன் சேவல் என்று வளர்த்தா.. அவர் எனக்கு உச்சிக் கொண்டு திரியுறார். ஆக மிஞ்சிப் போனா காலை முறிச்சு கறிச் சட்டிக்க போட வேண்டியதுதான்.

இல்லையப்பா.. அது நல்ல சாதிச் சேவல். எங்கட கோழிக்கு விட்டு அந்த முட்டையில அடை வைச்சா நல்ல குஞ்சுகள் வருமப்பா. சும்மா கறி சட்டி என்று விசர்க்கதை கதையாமல் சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்தி விடுற வேலைச் செய்யுங்கோப்பா.

சரியடியப்பா. கொஞ்சம் பொறு. உவன் தம்பியின்ர கடிதம் வந்திருக்குப் போல வாச்சிட்டுப் போறன்.

என்ன தம்பின்ர கடிதமா. எப்பைங்க வந்தது. தபால்காரன் மணி அடிச்ச சத்தம் கேட்கல்லையே.

நான் றோட்டுக் கூட்டிக் கொண்டு நிண்டனான். அதுதான் அவன் தபால்காரப் பொடியன் கையில தந்திட்டுப் போட்டான்.

அப்படியே.. எங்க பிரிச்சுப் பெலத்தாப் படியுங்கோ கேட்பம். என்ர பிள்ளையின்ர கடிதம் கண்டு 6 மாசமாச்சு. பீ ஆர் (P.R) கிடைச்சிட்டு அம்மா என்று அப்ப எழுதினதுக்குப் பிறகு ஒரு கடிதமும் போடல்ல என்ர பிள்ளை.

சரி சரி உந்த புராணத்தை விட்டிட்டு கடிதத்தை வாசிக்கிறன் கேள்...

சரி வாசியுங்கோப்பா.. பெலத்தா.

"அன்புள்ள அம்மா அப்பாவிற்கு..

நான் இங்கு நலம். உங்கள் நலனிற்கு கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நான் இம்முறை எழுதும் விடயம் உங்களுக்கு அதிர்ச்சியை தரலாம். இருந்தாலும் எழுத வேண்டும் என்ற கட்டாய நிலையில் எழுதுகின்றேன்."

என்னவாம் அப்பா. தம்பி இப்படி எழுதி இருக்கிறான். ஏதேனும் பிரச்சனையோ என்ர பிள்ளைக்கு. கெதியா மிச்சத்தையும் வாசிங்கோப்பா.. கை கால் எல்லாம் பதறுது.

உன்ர அவசரத்துக்கு.. என்னால வாசிக்க ஏலாதடியப்பா. கண்ணு பூஞ்சு கட்டி கிடக்குது. இந்தா மிச்சத்தையும் வாசிக்கிறன் கேள்.

"அம்மா.. நான் சொல்லப் போகும் விடயம் உங்களை தான் அதிகம் பாதிக்கலாம். அதனால் தையிரியமா மனசை வைச்சுக் கொள்ளுங்கோ.

நான் ஊரில் இருந்த போது கோணேசர் மாமாவின் மகள் மஞ்சுளாவை காதலித்தேன் என்ற விடயம் அரசல் புரசலாக உங்களுக்கு தெரிய வந்திருக்கும் என்றே நினைக்கிறேன். கோணேசர் மாமா உங்கள் ஒன்றுவிட்ட தம்பி என்பதால் நிச்சயம் உங்கட காதுக்கும் அந்தச் செய்தி வந்திருக்கும். இருந்தாலும் இப்ப சொல்லுறன்.. நானும் அவரின்ர மகளும் காதலிச்சது உண்மை. அவளைக் கலியாணம் செய்வன் என்று சொன்னதும் உண்மை. ஆனால்.. இப்ப இங்க கனடாவில என்னோட இரவு விடுதியில் வேலை செய்யுற ரோஸ் மேரியைக் காதலிக்கிறன். அவளையே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எனது நிலை இப்போ இருக்கிறது.

அவளை ஓர் நாள் இரவு விடுதியில் சந்தித்ததில் இருந்து நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போது அவள் கர்ப்பமாக வேறு இருக்கிறாள். அதனால் திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள். இதற்கு மேலும் என்னால் அவளிற்கு சமாதானம் சொல்ல முடியாத நிலை எனக்கு இங்கு. அதனாலேயே இந்த முடிவை எடுத்துவிட்டு இக்கடிதத்தை சிரத்தையோடு எழுதுகிறேன்.

ரோஸ் மேரி ஒரு வெள்ளைக்காரப் பெட்டை. அவளின் பெற்றோர் பற்றி அவளுக்கு தெரியாது. அவள் பெற்றோரை விட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒரு இரவு விடுதியில் வேலை செய்து வந்தவள். அங்கே போன இடத்தில் எனக்கும் அவளுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு விட்டது. அதன் பின் அந்த விடுதியை விட்டுவிட்டு என்னோடு நான் வேலை செய்யும் விடுதியில் வேலை செய்து வருகிறாள்.

இந்த விடயத்தை கோணேசர் மாமாவிற்கும் மஞ்சுளாவிற்கும் எப்படியாவது சொல்லிவிடுங்கள்.

வேறு புதினம் இல்லை. கலியாணம் முடிந்த கையோடு படங்கள் அனுப்பி வைக்கிறேன்.

இப்போதைக்கு இந்த விடயத்தை கோணேசர் மாமா வீட்டுக்குத் தவிர வேறு எவருக்கும் சொல்ல வேண்டாம்.

இப்படிக்கு,

அன்பு மகன் முகுந்தன்."

என்னப்பா.. இது. இப்ப கோணேசருக்கு என்ன பதில் சொல்லுறது. அவர் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், நியூசிலண்ட் என்று அவள் மஞ்சுளாவுக்கு பேசி வந்த கலியாணங்களையும் இவனை நம்பி வேண்டாம் என்று போட்டு பெட்டையை காக்க வைச்சிருக்கிறார். அவளும் இவனையே நினைச்சுக் கொண்டு இருக்கிறாள். என்னப்பா செய்யுறது இப்ப.

என்னைக் கேட்டால் நான் என்னத்தையடிப்பா சொல்ல. உன்ரை பிள்ளை இப்படிச் செய்வான் என்று யார் கண்டது.

ஆமா அவன் காசு அனுப்பேக்க உங்கட பிள்ளை எண்டுங்கோ.. இப்ப பிரச்சனைக்க மாட்டிவிட்ட உடன என்ர பிள்ளை எண்டுங்கோ.

இஞ்ச பார்.. சரசு.. இந்த விசயத்தை கோணேசற்ர காதுக்கு போட சரியான ஆள் எங்கட சோமண்ணை தான். அவரட்ட போய் பேசிப் பாக்கிறனே.

அவன் தம்பி சொல்லுறான் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம் என்று. நீங்க.. சோமண்ணைக்கு சொல்லுவம் என்றீங்கள்.

இல்ல சரசு.. அவன் தம்பின்ர கதையை விடு. அவனுக்கு இங்கத்தை நிலைமை தெரியாது. ஏற்கனவே கோணேசரும் வந்து சம்பந்தமும் பேசி முடிச்சிட்டுப் போயிட்டார். நாங்களும் சரி என்று சொல்லிப் போட்டம். இவன் முகுந்தன் வெள்ளைக்காரியோட போவான் என்று நாங்கள் என்ன சாத்திரமே பார்க்கிறது. இப்படியான நிலையில.. நாங்கள் நேர போய் கதைச்சா ஏமாத்திப் போட்டினம்.. தங்கட குமர் வாழ்வை பாழாக்கிப் போட்டினம் என்று கோணேசரும் மனுசியும் சும்மா இருக்குங்களே. அதுதான் சொல்லுறன் சோமண்ணையை அனுப்பி விசயத்தைச் சொல்லுவம்.. பக்குவமா என்று சொல்லுறன்.

நீங்க சொல்லுறது தாங்க சரி. அப்படியே செய்வம். நானும் வரட்டே.. சோமண்ணை வீட்ட.

நீயும் வந்தா நல்லம்.. தானே.

பொறுங்கோ.. உந்தச் சீலையை ஒரு சுத்து சுத்திட்டு ஓடிவாறான். உவன் தம்பி இப்படிச் செய்வான் என்று நான் கனவிலும் நினைக்கல்லங்க.

அதை விடடியப்பா. நடந்தது நடந்து முடிஞ்சுது. இப்ப ஆக வேண்டியதைப் பாப்பம். அதுசரி உந்தச் சேவலை என்ன செய்யுறது..

பெத்து வளர்த்ததே படி தாண்டிப் போட்டுது.. சேவலாம் சேவல். அது படுக்கைக்காவது மாமரத்துக்கு வரும். பேசாமல் இருங்கோ. விசரக் கிளப்பா. நான் இந்தா சீலையை சுத்திட்டு வந்திடுறன்.

சரியடியப்பா.. கெதியா வந்து சேர். நான் உந்தப் பின் கதவுகளைப் பூட்டிப் போட்டு வாறன்.

நானும் இந்தா ஓடி வந்திடுறன். நீங்கள் போய் பூட்டிக் கொண்டு வாங்கப்பா.

source: http://kundumani.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா சேவலை விடுங்கள் அது வாயில்லா சீவன் அதுக்கு வேற ஐந்று அறிவு தான்.ஆறு அறிவு மனிதனுக்கு புத்தி எங்கே ஐயா போச்சு....?கண்றாவி பயலுகள் கண்டதும் காதல் எண்டு நிக்கிறார்கள்...வருவாரு.....வருவ

ாரு எண்டு காத்திருக்கிற பெண்கள் காலம் முழுக்க காத்திருக்க வேண்டியது தான் மிச்சம்.நன்றி உங்கள் கதைக்கு...

யாயினி.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா சேவலை விடுங்கள் அது வாயில்லா சீவன் அதுக்கு வேற ஐந்று அறிவு தான்.ஆறு அறிவு மனிதனுக்கு புத்தி எங்கே ஐயா போச்சு....?கண்றாவி பயலுகள் கண்டதும் காதல் எண்டு நிக்கிறார்கள்...வருவாரு.....வருவ

ாரு எண்டு காத்திருக்கிற பெண்கள் காலம் முழுக்க காத்திருக்க வேண்டியது தான் மிச்சம்.நன்றி உங்கள் கதைக்கு...

யாயினி.

இங்கபார்டா 2010 ஜோக்கை? யாரய்யா இப்பவே லீக்கவுட் ஆக்கினது?? :icon_mrgreen: பேஸ் புக், ஹாய்5, எம்.எஸ்.என், வீக்கண்ட் & ஈவினிங்க் பிறி போனால நம்ம குமரிகள் படுற அவஸ்த்தை யாருக்குதெரியும்? ஆண்கள் தான் இப்ப காக்க வைக்கபடுகிறார்கள், கொஞ்சுண்டு அழகை வைச்சிருக்கிற நம்ம தமிழ் உலக அழகிகள் (அப்படி மனசில நினைப்பு) என்னமா கஸ்ரப்படுத்துறாளேயல் பசங்களை.

பெண்கள் விழிமேல் விழி வைத்து காத்திருந்த காலம் நெ.மு முன்னம் (நெட் வருவதற்கு முன்னம்) இப்ப, பேஸ் புக்கிலையோ, ஹாய்5 இலையோ புக்கிங்கில இருக்கிற பையனிகளில ஒருத்தனை பிடிக்கிறது இந்தகாலம், வேனுமெண்டா யாயினி ஒரு பேஸ் புக் அக்கவுண்ட் ஓப்பின் பன்னலாமே? ( நாட்டு நிலைமைகளை அறிந்துகொள்ளத்தான்)...

நெடுக்கர், நீங்கள் எழுதிய கதை நெ.மு முன்னர், இப்ப உந்த கதை அப்படியே தலைகிழா மாறீட்டுது, எப்பவோ எழுதின கதையை தூசி தட்டி இருக்கிறியள் போல... :icon_idea:

Link to comment
Share on other sites

டன் அப்ப இந்தப்பாட்டுக்களை வச்சு இனி என்ன செய்கிறது..?

பார்த்து பார்த்து கண்கள் பூத்துஇருப்பேன் நீ வருவாயென.. பூத்து பூத்து புன்னகை சேர்த்துவச்சேன் நீ வருவாயென..

தென்றலாக நீ வருவாயா யன்னல் ஆகிறேன்..

நலம் நலமறிய ஆவல்.. நான் இங்கு சுகமே நீ அங்கு சுகமா...

உதுகளை கெதியில உல்டா பண்ணினால் நல்லதோ?

Link to comment
Share on other sites

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாயென

பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

தென்றலாக நீ வருவாயா

ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா

மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாயா

பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாயா

கவிதை ஆகிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாயென

பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்

குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்

கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்

கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்

ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாயென

பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோதியில்லை

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை

உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி

சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி

மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்

நீ வருவாயென

பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாயென

தென்றலாக நீ வருவாயா

ஜன்னலாகிறேன்

தீர்த்தமாக நீ வருவாயா

மேகமாகிறேன்

வண்ணமாக நீ வருவாயா

பூக்களாகிறேன்

வார்த்தையாக நீ வருவாயா

கவிதை ஆகிறேன்

நீ வருவாயென நீ வருவாயென

நீ வருவாயென நீ வருவாயென

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா?

நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா?

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே

வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே

என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?

இரவினில் கனவுகள் தினம் தொல்லையே

உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே

கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே

உன் முகம் நான் பார்க்க கடிதமே தானோ

வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ

நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே

நிஜமின்றி வேரில்லை என்னிடமே

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

ஓ...நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா?

நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா?

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் வாசிப்பவர்களைக் கவரும் படி அழகாக இக்கதையை எழுதியிருக்கிறார். நன்றாக இருக்கிறது.

உப்பிடிக் கன ஆக்கள் ஊரில காதலித்துப் போட்டு வெளினாட்டுக்கு வந்தவுடன் வேறு ஆக்களை கல்யாணம் செய்திருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கபார்டா 2010 ஜோக்கை? யாரய்யா இப்பவே லீக்கவுட் ஆக்கினது?? :icon_idea: பேஸ் புக், ஹாய்5, எம்.எஸ்.என், வீக்கண்ட் & ஈவினிங்க் பிறி போனால நம்ம குமரிகள் படுற அவஸ்த்தை யாருக்குதெரியும்? ஆண்கள் தான் இப்ப காக்க வைக்கபடுகிறார்கள், கொஞ்சுண்டு அழகை வைச்சிருக்கிற நம்ம தமிழ் உலக அழகிகள் (அப்படி மனசில நினைப்பு) என்னமா கஸ்ரப்படுத்துறாளேயல் பசங்களை.

பெண்கள் விழிமேல் விழி வைத்து காத்திருந்த காலம் நெ.மு முன்னம் (நெட் வருவதற்கு முன்னம்) இப்ப, பேஸ் புக்கிலையோ, ஹாய்5 இலையோ புக்கிங்கில இருக்கிற பையனிகளில ஒருத்தனை பிடிக்கிறது இந்தகாலம், வேனுமெண்டா யாயினி ஒரு பேஸ் புக் அக்கவுண்ட் ஓப்பின் பன்னலாமே? ( நாட்டு நிலைமைகளை அறிந்துகொள்ளத்தான்)...

நெடுக்கர், நீங்கள் எழுதிய கதை நெ.மு முன்னர், இப்ப உந்த கதை அப்படியே தலைகிழா மாறீட்டுது, எப்பவோ எழுதின கதையை தூசி தட்டி இருக்கிறியள் போல... :D

டன் உங்கள் கருத்தையும் ஆமோதிக்கிறேன்.

இந்த கதையில் ஊர்ச் சேவல்.. வேலி தாண்டி வந்து செய்யும் செயல்கள் அம்பலம்படும் படி எழுதி இருக்கினம். ஆனால் ஊர்ப் பேடுகள் வேலி தாண்டி வந்து செய்யும் செயல்கள் அம்பலப்படுத்த இதை எழுதவில்லை. அதற்காக அது நடை பெறவில்லை என்பது பொருள் அல்ல. அதுவும் தாராளமாக நடக்கிறது.

இங்கு கூட அச்சேவலின் செயலை நியாயம் என்றோ அநியாயம் என்றோ சொல்ல முயலவில்லை. ஒரே குடும்பத்தில் இரு வேறு சூழ்நிலைகளில் அவர்கள் அதைக் கையாளும் முறைகளே இங்கு முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. பிள்ளைகள் செய்யும் செயல்களால் பல அப்பாவிப் பெற்றோர் படும் அவஸ்தைகள்.. பிரச்சனையை கையாள நாடும் வழிமுறைகள்.. தர்மசங்கடங்களை எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது.

நானே அறிவேன்.. வேலி தாண்டி வந்த பல ஊர்ப் பேடுகள்.. பெற்றோருக்கு தெரியாமலே.. காதலிச்சு.. கைவிட்டு.. பிறகு காதலிச்சு.. கைவிட்டு.. இப்படியும் வாழ்ந்து கொண்டு பேஸ் புக்.. எம் எஸ் என் என்று கொண்டும் இருக்குதுகள்..! இந்தியா அது இதென்று நாடுகள் கடந்து போய் தலைமறைவாயும் இருக்குதுகள்..!

எல்லா மனிதனும் சந்தர்ப்பம் கிடைத்தால்.. அது பேஸ் புக் என்றால் என்ன எம் எஸ் என் என்றால் என்ன.. யுனி என்றால் என்ன.. பஸ் என்றால்.. என்ன தொடரூந்து என்றால் என்ன.. இப்படியான சமாச்சாரம் என்றா தெரிஞ்சு கொண்டும்.. தெரியாமலும் சறுக்கி விழுகிறதுக்கு சந்தர்ப்பங்கள் உள்ளது.

நாங்கள் பெண்களிடம் குடும்பப்பாங்கை எதிர்பார்க்கும் தம்மையை எமது சமூகம் வளர்த்திருக்கிறது. அது அந்த சமூகத்தில் அந்த வேலிக்குள் எதிர்பார்க்கப்படலாம். ஆனால் வேலி தாண்டி வந்திட்டு... அதனை எதிர்பார்க்கக் கூடாது..!

அந்தச் சேவல் ஒரு எடுகோள் மட்டுமே. இதே கதையை ஒரு பேட்டுக்கும் போட்டுக்கலாம்..! :icon_mrgreen::(

(பேஸ் புக்கில நடக்கிற ஒன்றைச் சொல்லுறன் பாருங்கோ..!)

ஒரு பொண்ணு படத்தில இருக்கும் ஐடி.. ஐ மிஸ்... என்று எழுதுது.

அதற்கு ஒரு தாடிக்காரன் எழுதுகிறான்..

ஐ மிஸ் _ _ _

அப்புறம் அந்தப் பொண்ணு..

அவனுக்கு ரோஸ் (படமா) கொடுக்கிறா...!

அவன் கேட்கிறான்.. இதனை வீட்ட அனுப்பன் என்று..!

அதற்கு அவள்..

உங்கள் வீடு தெரியாதே..!

அதற்கு அவன்..

நீயா அதை என் வீட்டுக்கு கொண்டு வருவியா என்றான்..

அதற்கு அவள்..

ரெடி என்றாள்..!

அப்புறம் என்ன..

இருவரும் பிரைவேட் சற்றுக்கு போய் விடுகிறார்கள்..!

பேஸ் புக் நல்ல சிக்னல் கொடுக்கிற இடமா இருக்கிற படியா.. பேடுகளும் சேவல்களும் நல்லா ரூட்டு விடுகின்றன.

விடுப்புப் பார்க்க விருப்பமா.. இல்ல நீங்களும் ரூட்டு விட விருப்பமா.. நல்ல அழகான பெண் ஒருத்தியின் படத்தைப் போட்டுக் கொண்டு எக்கவுண்ட் திறவுங்கள். கூட்டம் அலைமோதும்..! :(:D

-------------------

மேலும் இதை வாசிச்சு கருத்துப் பகிர்ந்து கொண்ட யாயினி தங்கச்சி.. மாப்பிள்ளை.. கந்தப்பு தாத்தா எல்லோருக்கும் நன்றிகள் பல..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு.. சிற்றுவேசன் சோங் எல்லாம் பிரமாதம்..! நன்றிகள்..! :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எல்லோருக்கும் பொருந்த‌க் கூடிய‌ உதார‌ண‌மான‌ க‌தை இது!

பேஸ்புக்க்கில் ப‌ழைய‌ கூட‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளை கூட‌ ச‌ந்திச்சு பேசி ம‌கிழ‌லாம்!

அதை நீங்க‌ சொன்ன‌து போல‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்..

இது பேஸ்புக்குக்கு ம‌ட்டுமா இன்டெர்நெட்டுக்கும் பொருந்தும்..

பிழையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து அவ‌ர‌வ‌ரை பொறுத்த‌தே!

இப்ப‌டி சொல்லுவேன் என்று நினைத்தீர்க‌ளா? :( இல்லை இல்லை :)

இப்ப‌டி எத்த‌னை வாத‌ங்க‌ளை இங்கே வாதிட்டு இருக்க‌ம்..

ஏதாச்சும் திருந்தியா இருக்கு இல்லை தானே...

அத‌னால‌..வாசிச்சு ர‌சிச்சிட்டு..சிரிப்பு வ‌ந்த‌ சிரிச்சிட்டு போய்க்கிட்டே இருப்ப‌மே... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கர் வேலி பாயிறதில கில்லாடி ஆமா நெடுக்கர் முகுந்தன் நீரோ நீர் வேலிபாஞ்சுபோட்டு சேவலை எதுக்கு இழுக்கிறியல்

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் அண்ணா சேவலை விடுங்கள் அது வாயில்லா சீவன் அதுக்கு வேற ஐந்று அறிவு தான்.ஆறு அறிவு மனிதனுக்கு புத்தி எங்கே ஐயா போச்சு....?கண்றாவி பயலுகள் கண்டதும் காதல் எண்டு நிக்கிறார்கள்...வருவாரு.....வருவ

ாரு

எண்டு காத்திருக்கிற பெண்கள் காலம் முழுக்க காத்திருக்க வேண்டியது தான் மிச்சம்.நன்றி உங்கள் கதைக்கு...

யாயினி.

காத்திரு என்று சொன்னால் கூட இந்தக் காலத்தில யாரும் யாருக்காகவும் காத்து இருப்பதில்லையே... :unsure:

இந்த உலகத்தில ஒருமுறை தான் எல்லோரும் வாழப் போறோம், ஆசீர்வாதத்துடன் சந்த்தோசமா வாழ்ந்தது விட்டுப் போலகாமே?

எனக்குத் தெரிந்து உறவினர் ஒருவர், வேற்று இனப் பெண்ணைத் திருமணம் செய்து, 30 வருடங்களாக சந்தோஷமாக இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பொருந்த‌க் கூடிய‌ உதார‌ண‌மான‌ க‌தை இது!

பேஸ்புக்க்கில் ப‌ழைய‌ கூட‌ ப‌டித்த‌வ‌ர்க‌ளை கூட‌ ச‌ந்திச்சு பேசி ம‌கிழ‌லாம்!

அதை நீங்க‌ சொன்ன‌து போல‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்..

இது பேஸ்புக்குக்கு ம‌ட்டுமா இன்டெர்நெட்டுக்கும் பொருந்தும்..

பிழையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து அவ‌ர‌வ‌ரை பொறுத்த‌தே!

இப்ப‌டி சொல்லுவேன் என்று நினைத்தீர்க‌ளா? :o இல்லை இல்லை :(

இப்ப‌டி எத்த‌னை வாத‌ங்க‌ளை இங்கே வாதிட்டு இருக்க‌ம்..

ஏதாச்சும் திருந்தியா இருக்கு இல்லை தானே...

அத‌னால‌..வாசிச்சு ர‌சிச்சிட்டு..சிரிப்பு வ‌ந்த‌ சிரிச்சிட்டு போய்க்கிட்டே இருப்ப‌மே... :)

அதெல்லாம் இருக்கட்டும்.. எங்க போனனீங்க சகோதரி. கால்கட்டு கீல்கட்டுப் போட்டுவிட்டிட்டினமா..??! :D :D

நெடுக்கர் வேலி பாயிறதில கில்லாடி ஆமா நெடுக்கர் முகுந்தன் நீரோ நீர் வேலிபாஞ்சுபோட்டு சேவலை எதுக்கு இழுக்கிறியல்

பிகர் எல்லாம்.. தேடி வரேக்கல்லையே பாயல்லையாம்.. இப்ப சிந்திக்கத் தெரிஞ்ச.. நாலு நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து பார்க்கக் கூடிய பக்குவத்தில இருக்கும்.. நாமா போய் பாயப் போறம்..! :lol::D

காத்திரு என்று சொன்னால் கூட இந்தக் காலத்தில யாரும் யாருக்காகவும் காத்து இருப்பதில்லையே... :unsure:

இந்த உலகத்தில ஒருமுறை தான் எல்லோரும் வாழப் போறோம், ஆசீர்வாதத்துடன் சந்த்தோசமா வாழ்ந்தது விட்டுப் போலகாமே?

எனக்குத் தெரிந்து உறவினர் ஒருவர், வேற்று இனப் பெண்ணைத் திருமணம் செய்து, 30 வருடங்களாக சந்தோஷமாக இருக்கிறார்.

எங்கட தமிழ் பொம்பிளையளோட எப்படித்தான் எங்கட ஆண்கள் காலம் தள்ளினமோ தெரியல்ல. வெள்ளையளோட.. ஒரு வைன் போத்தலும்.. ஒரு பிசாவும்.. நாலு கிஸ்ஸும் இருந்தா.. வடிவா வாழ்க்கையைக் கொண்டு நடத்தலாம்..! :lol::D

Link to comment
Share on other sites

...

எங்கட தமிழ் பொம்பிளையளோட எப்படித்தான் எங்கட ஆண்கள் காலம் தள்ளினமோ தெரியல்ல. வெள்ளையளோட.. ஒரு வைன் போத்தலும்.. ஒரு பிசாவும்.. நாலு கிஸ்ஸும் இருந்தா.. வடிவா வாழ்க்கையைக் கொண்டு நடத்தலாம்..! :unsure::)

நிறத்தில் வித்தியாசமே தவிர தமிழ் பாரம்பரியம் விளங்கி நடக்கக் கூடிய மனநிலையைக் கொண்ட பெண்ணாகவே இன்னும் இருக்கிறார். அவ குடிப்பதில்லை, தமிழ் சாப்பாடு புட்டு, தோசை, சப்பாத்தி, சோறு, மீன் குழம்பு என்று எல்லாம் தானே சமையல் குறிப்புப் பார்த்து, படித்து சமைக்கத் தெரிந்தவர். தமிழும் விளங்கிக் கதைக்கத் தெரிந்தவர். ஊருக்கு வரும் போது சேலை கட்டித் தான் அவவைப் பார்த்து இருக்கிறேன்.

பொதுவாக வெள்ளைகள் குடிப்பவர்கள் தான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் எல்லாரும் குடிச்சுக் கொண்டு தான் குடும்பம் நடத்தினம் என்று இல்லை. ஓரிரு நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். எங்களுக்கு மூத்த சந்ததியினர் என்ற படியாலோ தெரிய இல்லை, இப்ப இருக்கிற வெள்ளிகளை விட எவ்வளவோ மேல்.

ஏன் தமிழ் பொம்பிளையள் ஒரு வைன் போத்தலும்.. நாலு கிஸ்ஸும், ஒரு பிசாவும் பார்த்ததில்லையா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறத்தில் வித்தியாசமே தவிர தமிழ் பாரம்பரியம் விளங்கி நடக்கக் கூடிய மனநிலையைக் கொண்ட பெண்ணாகவே இன்னும் இருக்கிறார். அவ குடிப்பதில்லை, தமிழ் சாப்பாடு புட்டு, தோசை, சப்பாத்தி, சோறு, மீன் குழம்பு என்று எல்லாம் தானே சமையல் குறிப்புப் பார்த்து, படித்து சமைக்கத் தெரிந்தவர். தமிழும் விளங்கிக் கதைக்கத் தெரிந்தவர். ஊருக்கு வரும் போது சேலை கட்டித் தான் அவவைப் பார்த்து இருக்கிறேன்.

பொதுவாக வெள்ளைகள் குடிப்பவர்கள் தான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் எல்லாரும் குடிச்சுக் கொண்டு தான் குடும்பம் நடத்தினம் என்று இல்லை. ஓரிரு நல்லவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். எங்களுக்கு மூத்த சந்ததியினர் என்ற படியாலோ தெரிய இல்லை, இப்ப இருக்கிற வெள்ளிகளை விட எவ்வளவோ மேல்.

ஏன் தமிழ் பொம்பிளையள் ஒரு வைன் போத்தலும்.. நாலு கிஸ்ஸும், ஒரு பிசாவும் பார்த்ததில்லையா? :)

எனக்கும் தெரிந்த பலர் வெள்ளைப் பெண்களை மணந்து சந்தோசமா வாழ்கின்றனர். சிலர் சிக்கல்களில் மாட்டியதும் உண்டு. வெள்ளை ஆண்களை திருமணம் செய்த தமிழ் பெண்களும் உள்ளனர். ஆனால் குறைவு..!

தமிழ் பொம்பிளையளுக்கு வைன்.. பிசா.. கிஸ் தேவையோ இல்லையோ.. நகை நட்டு.. விலையுயர்த்த.. சாறி.. கார்.. ஆடம்பர பாட்டிகள் வேணுமே..! அதோட ஒப்பிடும் போது..! :(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெத்து வளர்த்ததே படி தாண்டிப் போட்டுது.. சேவலாம் சேவல். அது படுக்கைக்காவது மாமரத்துக்கு வரும். பேசாமல் இருங்கோ. விசரக் கிளப்பா. நான் இந்தா சீலையை சுத்திட்டு வந்திடுறன்

சேவல் அந்தமாதிரி கூவுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.