-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இலங்கை அரசு 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, ஏப்ரல் 13) நள்ளிரவு வெளியிட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த வாரம் வழங்கியிருந்த நிலையிலேயே, தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள் 1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ) 2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ) 3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ) 4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ) பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ 5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா 6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா 7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா 8. இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா 9. அல்கய்தா அமைப்பு 10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம் 11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு ஆகியவை நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன. நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இஸ்லாமியவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது செய்யக் கூடாதவை தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின், (அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது. (ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது. (இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது, (ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது. (உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது. (ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது. (எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது. (ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது. (ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது. (ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது, (ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது. (ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது (ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது. எனவும் மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வினைகள் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் இது இவ்வாறிருக்க, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவை, தாம் தடைசெய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தன. எவ்வாறாயினும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த இயக்கம் கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது. மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தாம் ஒரு தடவையேனும் அழைக்கப்படவில்லை என்றும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகும் எனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறிப்பிட்டிருந்தது. அதேவேளை தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. https://www.bbc.com/tamil/sri-lanka-56741831
-
இலங்கையில் சிறுவர்கள் கடத்தப்பட்டுவருவது தொடர்பான ஐ நா வின் கண்டனம் 2006 கார்த்திகை மாதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்படும் சிறுவர்களின் நலன்களுக்கான ஐ நா வின் விசேட பிரதிநிதி அலன் ரொக் இக்கடத்தல்கள்பற்றி விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 2003 ஆம் ஆண்டு ஐ நா வுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட சிறுவர் நலன் தொடர்பான இணக்கப்பாடு குறித்து மீள் உறுதிப்படுத்துவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. யுனிசெப் அமைப்புடன் ஒத்துழைத்து வேலை செய்வதாக அரசும், புலிகளும் இணங்கியிருந்ததுடன் தமது படைகளில் இருக்கும் சிறுவர்களை நீக்கிவிடுவதாகவும் ஒத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது 10 நாள் விஜயத்தின் இறுதியில் நாட்டின் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த அலன், ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில் தனது விசாரணைகள்பற்றித் தெரியப்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின்படி தமது படைகளிலிருந்து சிறுவர்களை நீக்குவதை புலிகள் முற்றாகக்ச் செய்யவில்லையென்று கடிந்துகொண்ட அலன், கருணா குழு தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்களைக் கடத்திச் செல்வதாகக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்துபேசிய அவர் 2006 இன் இறுதி 6 மாதங்களில் மட்டும் கருணா 135 சிறுவர்களைக் கடத்திச் சென்றிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், கடத்தல்கள் அதிகரித்துச் செல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். கருணாவின் சிறுவர் கடத்தல்களுக்குத் துணைபோவதாக அரச ராணுவத்தைச் சாடிய அலன் ரொக், கருணாவுக்கான பாதுகாப்பினையும், அவ்வப்போது கருணாவின் கடத்தல்களில் பங்களிப்பினையும் அரச ராணுவம் செய்துவருவதாக மேலும் கூறினார். அலன் ரொக் தலைமையிலான குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட பல சிறுவர்களின் பெற்றோருடன் உரையாடியிருந்தது. இக்கலந்துரையாடல்களிலிருந்து கருணா குழுவின் கடத்தல்களில் அரச ராணுவம் பெருமளவு பங்களிப்பினை வழங்கியிருந்ததாக அலன் ரொக் கூறுகிறார். அரச ராணுவத்தின் படைப்பிரிவுகள் கருணா குழுவினருடன் கடத்தல்களில் நேரடியாகவே பங்குகொண்டிருந்ததை சாட்சிகள் வாயிலாக இக்குழு அறிந்துகொண்டது. பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அலன் ரொக், அரசும் கருணா குழுவும் யுனிசெப் அமைப்பின் ஆலோசனைப்படி சிறுவர்களை தமது படைகளிலிருந்து விடுவிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார். அத்துடன் அரச ராணுவத்தினர் கருணா குழுவுக்காக சிறுவர்களைக் கடத்துவது தொடர்பான விசாரணைகளை உடனடியாகவே ஆரம்பிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக அலன் ரொக் கூறினார். அரச ராணுவத்தினர் கடத்தல்களில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்பட்டால் தாம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மகிந்த தன்னிடம் கூறினார் என்று அவர் மேலும் கூறினார்.
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு! ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆய்வு முடியும் வரை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசியை பயன்படுத்துவதை இடைநிறுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. தற்போதுவரை அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால், மூன்று கோடியே 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஐந்து இலட்சத்த 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2021/1209728 -
By கிருபன் · பதியப்பட்டது
புதுச்சேரி: முதல்வர் பதவி யாருக்கு? மூன்று வியூகங்கள்! மின்னம்பலம் தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டமன்றமும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தலைச் சந்தித்து விட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கடைசி ஒரு மாதத்தில் அதிரடியாகப் பல மாற்றங்கள் அரங்கேறின. திமுக காங்கிரஸ் கூட்டணியாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த நிலையில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக திடீரென பொங்கியது திமுக. தற்போதைய அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் புதுச்சேரிக்கு வந்து திமுகவின் ஆட்சி அமைப்போம் என்று நிர்வாகிகள் கூட்டத்தைப் பிரமாண்டமாக நடத்திப் பேசினார். இந்த நிலையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார் முதல்வர் நாராயணசாமி. இந்த அதிரடிகள் அரங்கேறிய நிலையில்தான் புதுச்சேரியில் தேர்தல் வந்தது. காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் உருவாகாமல் தடுப்பதோடு பாஜக ஆட்சியை எப்படியாவது புதுச்சேரியில் நிறுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக வேலை செய்கிறது பாஜக. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருந்த நமச்சிவாயம் பாஜகவுக்குச் சென்றார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் பாஜகவுக்குத் தாவினார்கள். ஒருவழியாக அதிமுக - பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து புதுச்சேரியில் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தன. என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் பாஜக 9 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணியில் இருக்கும் பாமக முதலில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிறகு வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. திமுக கூட்டணியில் திமுக 14 தொகுதிகள், காங்கிரஸ் 14 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தலா ஒரு தொகுதி என மொத்தம் 30 தொகுதிகளில் போட்டியிட்டனர். ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் முகாமிட்டிருக்கிறார். புதுச்சேரி பாஜகவின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சரன்லால் குரானா, மத்திய அமைச்சர் மெக்வால் ஆகியோரும் புதுச்சேரியிலேயே இருந்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள். பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, தேர்தல் முடிந்த பிறகு மத்திய அரசும் பாஜகவும் நடத்திய ஆய்வுகளின் முடிவில் தங்கள் அணிக்கு சாதகமான முடிவுகளே வரும் என பாஜக நம்பிக்கையாக இருக்கிறது. அதாவது என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும். அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக - பாஜக ஆகிய கட்சிகளும் ஓரளவு வெற்றி பெறும் என்பதுதான் பாஜக மேலிடத்துக்குக் கிடைத்த அதிகாரபூர்வக் கணிப்பு. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களும் அதிமுகவுக்கு 4 இடங்களும் பாஜகவுக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும் என்பது புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்கள் நடத்திய பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அவர்களுக்குக் கிடைத்துள்ள முடிவு. இதனால் நம்பிக்கையோடு இருக்கும் பாஜக, அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தில் தற்போது தீவிரமாகிவிட்டது. கூட்டணியின் அதிகபட்ச தொகுதிகளில் போட்டியிடுவதால் ஏற்கனவே முதல்வராகவும் இருந்திருப்பதால் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தன் தலைமையில்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற பிடிவாதத்தில் இருக்கிறார். இதுபற்றி அவர் பாஜக தலைவர்களுடனும் பேசிவருகிறார். தேர்தலுக்கு முன் காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பிரச்சாரக் கூட்டத்தில் '2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது நமச்சிவாயம் தலைமையில்தான் ஆட்சி அமைந்திருக்க வேண்டும். ஆனால், நாராயணசாமி டெல்லி சென்று, காந்தி குடும்பத்தினரைச் சந்தித்து முதல்வர் பதவியைத் தனக்குக் குறுக்குவழிகள் மூலம் பெற்றுவிட்டார்' என்று பேசினார். இதன் மூலம் பாஜக அப்போதே நமச்சிவாயத்துக்குத்தான் முதல்வர் பதவி தருவோம் எனக் குறிப்பாக தெரிவித்ததை என்.ரங்கசாமி உணர்ந்துகொண்டார். தேர்தலுக்கு முன்னர் ரங்கசாமியைப் பலவழிகளிலும் பேசி கூட்டணியில் நீடிக்க வைத்தது பாஜக. இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய இந்த ஒரு மாதக் காலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதல்வராக ஆவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். நமச்சிவாயத்தின் சின்ன மாமனார்தான் ரங்கசாமி. இந்த அடிப்படையில் நமச்சிவாயம் குடும்பத்தினரோடு ரங்கசாமி குடும்பத்தினர் தனிப்பட்ட முறையில் பேசி முதல்வர் பதவியை டேர்ம் வைத்து பகிர்ந்துகொள்ளலாமா என்பது வரைக்கும் ஆலோசனை நடத்தி உள்ளார்கள். ஆனால் அமித் ஷாவிடமிருந்து புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்களுக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு என்னவெனில் பாஜக எவ்வளவு குறைவான இடங்களைப் பெற்றிருந்தாலும் புதுச்சேரியில் பாஜக முதல்வர்தான் இருக்க வேண்டும் என்பதுதான். இதனடிப்படையில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரையும் தன்னுடைய கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறது பாஜக. அவர்களுக்கான தேர்தல் செலவையும் பாஜகதான் ஏற்றிருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்து ரங்கசாமி முதல்வராக உரிமை கோரும் பட்சத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை அதிகபட்சமாக பாஜகவுக்கு இழுத்து ரங்கசாமிக்கு நெருக்கடியை உண்டாக்கி பாஜகவைச் சேர்ந்தவரையே முதல்வராக உட்கார வைப்பது என்பதுதான் அமித் ஷாவின் திட்டம். அதுமட்டுமல்ல... இந்தத் தேர்தலில் புதுச்சேரி திமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் பாஜகவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றாலும் திமுக எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுப்பது என்ற ஏற்பாடுகளுக்கும் தயாராகி வருகிறார்கள் புதுச்சேரி பாஜக பொறுப்பாளர்கள். இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வேறுவிதமான திட்டங்கள் தயாராக இருக்கின்றன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக இடங்கள் கிடைக்கும் என்ற கணிப்பு பரவலாக புதுச்சேரியில் இருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படலாம் என திமுக - காங்கிரஸார் ஒரு திட்டம் வகுத்துள்ளனர். அதாவது தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தால்... அக்காட்சியை பாஜகவின் நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் வகையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் ரங்கசாமிக்கு ஆதரவளித்து அவரை பாஜகவின் ஆதரவு தேவை இல்லாமல் முதல்வர் ஆக்குவது... இதன்மூலம் புதுச்சேரி அரசியலில் இருந்து பாஜகவை விரட்டுவது என்ற திட்டத்தில் திமுக - காங்கிரஸ் பிரமுகர்களிடம் ஒரு ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. மத்திய ஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதுச்சேரியில் பாஜக எந்தக் கட்சியை வேண்டுமானாலும் துண்டாடலாம் என்ற நிலை ஏற்பட சாத்தியம் அதிகம் உள்ளது. இதைத் தடுப்பதற்கு தேர்தலுக்கு முன் இருந்த அரசியல் சூழலுக்கு எதிராக... தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணிகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் புதுச்சேரி அரசியலில் ஏற்பட்டுள்ளது. வணங்காமுடி https://minnambalam.com/politics/2021/04/14/32/puducherry-new-cm-who-amitsha-rangasamy-narayasamamy-dmk-plans
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.