Jump to content

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !


Recommended Posts

இங்கு யாரென்றே தெரியாத உங்களிற்கும் எனக்கும் பொருத்தம் பார்க்க புறப்பட்டுவிட்டார்கள் இனி திருமணம் இல்லை கள்ள தொடர்பை ஏற்படுத்தி பிள்ளையும் பெற வைத்து விடுவார்கள் அதனால்தான் நான் இங்கிருந்து விலகிக்கொள்கிறேன்..வாழ்க கற்பு.

அடுத்தவர்களின் புலம்பல்களுக்காக எனது கருத்துச் சுதந்திரத்தை நான் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. கருத்தில் தவறிருந்து அதை முறையாகச் சுட்டிக் காட்டும் போது ஏற்றுக் கொள்ளத் தயங்கியதுமில்லை. மொத்தத்தில் புலம்பல்களை நான் காதில் வாங்குவதில்லை.

:rolleyes: அதுசரி " வாழ்க கற்பு " என்று வாழ்த்தியுள்ளீர்கள். யாரின் கற்பை ?? :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காளுக்கு தம்பி, மாமாவுக்கு மருமேன், என்னைப்போய் மாமாவேலை பார்க்கிறதென்று சொல்ல......... அக்கா ஊதா நிறத்தில் சாயம்பூசிக்கொண்டு உதட்டையும் ஒருமாதிரி கடிச்சுக்கொண்டு உரசித்திரியிறா, மாமாவும் தோல்வியில தாடி வளர்த்திருக்கிற மாதிரியிருக்கு, கருத்தாலயும் ஒன்றியிருக்கிறினம், கரைசேர்த்திடுவம் எண்டு பார்த்தா, கலியாணம் வேண்டாம் கள்ளமாத்தான் பிள்ளைபெறுவம் எண்டு நாண்டுபிடிச்சுக்கொண்டு நிக்கினம். :unsure:

Link to comment
Share on other sites

உங்கள் வாதம் புரிகின்றது. சுமங்களா தொடுகைகள் மூலம் இன்பம் பெறுபவர்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று தவறாகக் குறிப்பிட்டாலும் பிறிதொரு இடத்தில், தான் எல்லோரையும் சொல்லவில்லை என்றும் எழுதியுள்ளார். அவரின் நோக்கம் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒருவழியில் (தொடுகை போன்ற) தமது இன்பத்தை ஓரளவாவது அடைய முயல்கின்றார்கள் என்பதே. இது ஆண்களுக்கும் பொருந்தும். அதற்காக இப்படியான விதத்தில் இன்பம் பெறுபவர்களை நாம் ஓரினச் சேர்க்கையாளளர் பட்டியலில் சேர்ப்பது தவறு என்பதைத் தான் நானும் வலியுறுத்துகின்றேன்.

மேலும் எல்லோரும் வெளிப்படையாக இப்படியான விடயங்களை பேசவோ அல்லது அது பற்றிய தமது சுய அனுபவத்தை சொல்வதை விரும்புவதோ எமது சமுதாயத்தில் கிடையாது. சமுதாயத்திற்காகவும் பிறருக்காகவும் மட்டுமே தமது கருத்தை தெரிவிப்பவர்களே அதிகம். அதற்காக உண்மையைச் சொல்ல விழைபவர்களெல்லாம் தமது தவறுகளுக்காக சமுதாயத்தைக் கெடுக்கின்றார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொளள்ள முடியாது. ஒருமுறை அறிஞர் அண்ணாவைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளரர் உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புள்ளதா எனக் கேட்ட போது, அண்ணா சொன்னார் நான் முற்றும் துறந்த முனிவருமல்ல, பானுமதி படிதாண்டாப் பத்ததினியுமல்லவென. அதனால் அண்ணா சமுதாயத்தை தன் தவறுக்காக கெடுக்கின்றாரென்று சொல்லிவிட முடியுமா ??

தற்போது வட இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்படுகின்றது. காரணம் அதில் திருமணமான பெண்களை அழைத்து அவர்களின் பாலியல் தொடர்பான கேளள்விகளை முன் வைக்கின்றார்கள். அவர்கள் உண்மையைச் சொன்னால் ஒவ்வொரு பதிலிற்கும் ஒரு இலட்சம் ரூபா பரிசு. அவர்கள் உண்மையையச் சொல்கின்றார்களா என்பதைக் கண்டு பிடிக்க அதற்குரிய இயந்திரமும் பயன்படுத்தப்படுகின்றது. அதில் பல பெண்கள் திருமணத்தின் முன்பும், திருமணத்தின் பின்பும் தமக்குள்ள பிற தொடர்புகளை ஒப்புக் கொண்டு பல இலட்சம் ரூபாய்களை அள்ளிச் சென்றிருக்கின்றார்கள்.

சமீபத்தில் பிரபல சித்தார் மேதை ரவிசங்கர் அவர்களின் புதல்வி பற்றி வந்த பரபரப்பான செய்தியை சிலவேளை நீங்களும் அறிந்திருக்கலாம். அவர் தன்னை நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை கணனியில் சேமித்து வைத்து, பின் அவற்றை அழித்துவிட்டு அப்பிள் கொம்பனிக்கு சேர்வீஸ் செய்யக் கொடுத்தார். சேர்வீஸ் செய்தவர் அவர் அழித்த படங்களை அதற்குரிய மென்பொருளைப் பாவித்து மீட்டெடுத்து அதனை மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அதனை வைத்தே இன்னொருவன் ரவிசங்கரின் மகளை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சித்து மாட்டியிருக்கின்றான்.

இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் பல விடயங்கள் வெளிவராததாலேயே எமக்குத் தெரியாமல் போய்விடுகின்றன. வெளிவருவன சில தான். அவை கூட பிரபலமானவர்களாக இருந்தால்த் தான் வெளி வருகின்றன. இன்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னரே கள்ளக் காதலனுடன் சேர்ந்து தனது கணவனைக் கொன்ற பல பெண்கள் பற்றிய கதையை எமது சமுதாயத்திலேயே அறிந்துமுள்ளோம். இன்று காலம் எவ்வளவோ மாறி விட்டது. தற்போது நிலை இன்னும் அதிகரித்திருக்குமா ?? குறையுமா ?? இன்று யதார்த்தமாக யோசித்தால் ஆண் என்ன பெண் என்ன கற்பென்ற சொல்லை ஒரு மாயத் தோற்றத்திற்காகவே பாவிக்கின்றார்கள். நடைமுறையில் கற்பென்றால் கிலோ என்ன விலை என்பதே இருபாலாரரின் கேள்வியும்.

வசம்பண்ணா,

முதலில் நன்றிகள், எனது ஆதங்கத்தை புரிந்துகொண்டதற்கு.

"நடைமுறையில் கற்பென்றால் கிலோ என்ன விலை என்பதே இருபாலாரரின் கேள்வியும்"

ஒரு அறையில் பத்துபேர் இருந்தால் அதில் ஆறுபேர் திருடர்கள் நால்வர் திருடுவதே தப்பு என்பவர்கள்,

ஆனால் அந்த அறையில் இருக்கு எல்லோருமே திருடர்கள் என்று சொல்வதைதான் என்னால் ஏற்று கொள்ளமுடியாது.

மற்றவை நீங்கள் கூறுவதுசரிதான்.

[கட்டி வைக்கவேண்டியதை யாழில் அவுத்து விட்டுடாங்க, கு.சா சொல்வதுபோல் ஊசிபோடவேண்டிவரும் வுடு ஜூட்ட்ட்ட் :unsure: ]

Link to comment
Share on other sites

அக்கா ஊதா நிறத்தில் சாயம்பூசிக்கொண்டு உதட்டையும் ஒருமாதிரி கடிச்சுக்கொண்டு உரசித்திரியிறா, மாமாவும் தோல்வியில தாடி வளர்த்திருக்கிற மாதிரியிருக்கு,

தாங்கள் ஏன் அடுத்தவர்களின் கருத்துகளைப் பாரக்காமல் அவதாரிலுள்ள படங்களைப் பார்த்து அசடு வழிகின்றீர்கள். சுமங்களா என்ற பெயரில் ஒரு ஆண் கூட வரலாம். ஆனால் ஒரு சொண்டுப்படம் அவதாரில் இணைத்தாலேயே அவர் பிரபலமானார் என்றால், :unsure: அதில் யாரது பலவீனம் வெளிப்படுகின்றது ?? பதிந்தவரினதா ?? பார்வையாளர்களினதா ?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் ஏன் அடுத்தவர்களின் கருத்துகளைப் பாரக்காமல் அவதாரிலுள்ள படங்களைப் பார்த்து அசடு வழிகின்றீர்கள். சுமங்களா என்ற பெயரில் ஒரு ஆண் கூட வரலாம். ஆனால் ஒரு சொண்டுப்படம் அவதாரில் இணைத்தாலேயே அவர் பிரபலமானார் என்றால், :unsure: அதில் யாரது பலவீனம் வெளிப்படுகின்றது ?? பதிந்தவரினதா ?? பார்வையாளர்களினதா ?? :rolleyes:

மாமா உங்கட அவதார போட்டது நீங்கள்தான், அக்காதான் அவாண்ட அவதாரயும் போட்டிருக்கா. போடுறதையும் போட்டிட்டு பாக்காதே எண்டு சொல்லுறது நல்லா இல்ல. :lol:

Link to comment
Share on other sites

மாமா உங்கட அவதார போட்டது நீங்கள்தான், அக்காதான் அவாண்ட அவதாரயும் போட்டிருக்கா. போடுறதையும் போட்டிட்டு பாக்காதே எண்டு சொல்லுறது நல்லா இல்ல. :unsure:

:rolleyes:அவரவர் அவதாரை அவரவர் தான் அடுத்தவர் பார்ப்பதற்காக போடுவினம் மாமோ. ஆனால் உங்களைப் போல் அதை பார்த்த அசடு வழியச் சொல்லி எவரும் போடுவதில்லை மாமோ. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது.. :rolleyes:

திறந்திருக்கும் ஊதா உதட்டில் மதித்தாத்தாவும் சொக்கிப் போனார்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது.. :lol:

திறந்திருக்கும் ஊதா உதட்டில் மதித்தாத்தாவும் சொக்கிப் போனார்.. :unsure:

இஞ்ச ஒண்டு மதித்தாத்தாவெண்டுகொண்டு எனக்குப் பின்னாலயே திரியிது. :rolleyes:

:oஅவரவர் அவதாரை அவரவர் தான் அடுத்தவர் பார்ப்பதற்காக போடுவினம் மாமோ. ஆனால் உங்களைப் போல் அதை பார்த்த அசடு வழியச் சொல்லி எவரும் போடுவதில்லை மாமோ. :(

அவதாரைப்பார்த்தும் அசடு வழியலாமோ மாமோ? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச ஒண்டு மதித்தாத்தாவெண்டுகொண்டு எனக்குப் பின்னாலயே திரியிது. :unsure:

எல்லாம் கை பிடிச்சு நடக்கத்தான் :rolleyes:

Link to comment
Share on other sites

ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகின்றது.. :o

திறந்திருக்கும் ஊதா உதட்டில் மதித்தாத்தாவும் சொக்கிப் போனார்.. :unsure:

:rolleyes::lol:கிருபன் பெயரை நன்றாகக் கவனியுங்கள். இவர் மதித் தாத்தா இல்லை. மாமோ தாத்தா :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்குப் பொருத்தமான கட்டுரை..

----------------------

கற்பு

--------------------------------------------------------------------------------

பத்மா அரவிந் (அமெரிக்கா)

இன்னமும் காலுக்கு இடையில்தான் பெண்களின் கற்பு இருப்பதாக சொல்வது அறிவீனம். கற்பு என்பது உறவுகளின் நம்பிக்கையில் நேர்மையில் இருக்கிறது - பெண்கள் மீது மட்டும் தடை எதற்கு?

புராண கதைகளாக இருந்தாலும் நவீன செய்திகளாக இருந்தாலும் பெண்களின் கற்பு என்ற ஒன்று முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது. கந்தர்வனுடன் கலந்ததால் கல்லாகி போன அகலிகை, கந்தர்வரின் நிழல் பார்த்ததால் கற்பிழந்தவளாக கருதப்பட்டு, மகனாலேயே தலை கொய்யபட்ட ஜமதக்னி முனிவரின் மனைவி என்று கதைகள் உண்டு.

அதே சமயம் குழந்தை பேறு இல்லாத இராணிகள் முனிவர்களின் ஆசியினால் குழந்தை பேறு பெற்றதும், இன்னும் பரிசென ஐவருக்கு மனைவியாக பாஞ்சாலி பணிக்க பட்டதும் இதே புராண கதைகளில் உண்டு. இதில் பாஞ்சாலியின் விருப்பம் என்ன என்று யாரும் கேட்கவில்லை என்பது புறமிருக்க, பந்தயத்தில் அவளையே பணயம் வைத்த கணவன் கதையும் உண்டு. சபை நடுவே துகிலுறிய துச்சாதனன் முற்ப்பட்ட போது மூத்தோர் கூடிய அவையில் அனைவரும் உயிரை பணயம் வைத்து காத்திருக்க வேண்டாமா? இல்லை ஏன் என்றால் அவமானப்பட்டது பெண் அல்லவா?

இராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா? இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா? ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று? ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.

இதற்கு பின் வந்தது தீவக கற்பு என்பார். அப்போது பார்ப்பதோ பேசுவதோ தவறில்லை, தொட்டால்தான் தவறு கற்பிழந்தவர் என்ற நிலை வரும். இந்நிலையில் தான் கம்பர் சீதையை குடிலுடன் இராவணன் தூக்கி சென்றதாக கூறுகின்றான்.

பேருந்துகளின் இடிமன்னர் இடையில் சிக்கி தினசரி அலுவலகம் இன்ன பிற இடங்களுக்கு பெண்கள் செல்வது தங்களுக்கும் தேவையானதாக இருக்க, அதே சமயம் பெண்களுக்கும் உரிமை தருவது போல ஆண்கள் இதை ஏற்று கொண்டனர்.

நான் இரண்டு வருடம் முன் இந்தியா தஞ்சை பெரியகோவிலுக்கெ சென்றேன். அங்கே பள்ளி சிறுவர், சிறுமிகள் தூணுக்கு இருவராய் அமர்ந்து கொண்டு உறவாடிக்கொண்டிருந்தனர். திருமணத்துக்கு முன் உறவாடுதலில் தவறில்லை எனவும், உறவு கொள்வதாகவும் கருத்து கணிப்புகள் பல Bரிடிஷ் மெடிcஅல் ஜொஉர்னல் இல் வெளியாகி இருக்கின்றன. இதில் ஆண் என்ன பெண் என்ன? ஆண்கள் செய்தால் அது சரியாகிவிடுமா? புகை பிடித்தல் மது அருந்துதல் போல இது தனிநபர் செய்கை அன்று. இரண்டு பேர் வேண்டும் அது ஓரின சேர்க்கையாக இருந்தாலும். அப்படி இருக்க பெண்கள் மீது மட்டும் தடை எதற்கு? பள்ளி சிறுமிகளிடம் பலாத்ககரம் செய்யும் ஆசிரியர்களை தண்டிப்பீர்களா?

திருமணமான ஆண்கள் அனைவரும் உத்தம சீலர்களாயின் இத்தனை குடும்ப பெண்களுக்கு ஆஈDஸ், ஸ்TD வந்தது எப்படி? புள்ளிவிவரங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

குழந்தைப்பேறு இல்லை என்ற காரணத்திற்காக தன் மைத்துனன், மானார் போன்றோருடன் வலுக்கட்டாயாமாக உறவு கொள்ள செய்யப்படும் பெண்களை பற்றி அறிவீர்களா? இல்லை என்றால் தனக்கு வேலை இல்லை என்பதாலும் தன் தந்தையின் சொத்துக்களில் வாழ்வதாலும் தன் மனைவியின் குற்றச்சாட்டுக்களை ஒதுக்கி என் அப்பாதானே இப்ப என்ன வந்தது என்று சொல்லும் கணவர்களை பார்த்திருக்கிறீர்களா?

நாடுவிட்டு நாடுவந்து தன் மனைவியை தன் தம்பி மற்றும் தந்தையுடன் கட்டயாப்படுத்தி நிர்வாணமாக்கி துன்புறுத்திய கணவனை பற்றி என்ன சொல்கிறீர்கள்? இங்கே இல்லாமல் கற்பிழந்தவளாக நீங்கள் சொல்லும் அந்த நிலைக்கு வற்புறுத்தியவர்கள் சீலர்களோ?

மெஹ்ரோலி என்ற ஊரில் பல ஏழை குடும்ப குழந்தைகளுக்கு மரபணு பரிசோதனைகள் செய்திருக்கிறேன். குழந்தைகளின் தந்தை ஒருவரே இருந்தது இல்லை. இது பற்றி அவர்களும் அறிவார்கள். இது சகஜமாக ஏற்று கொள்ள பட்டிருக்கிறது.

குடியின் மயக்கத்தில் தன் 5 வயது பெண்ணை வன்புணர்ந்த தந்தைக்கு தண்டனையே இல்லை. தாயிடம் 5000 ரூபாய் தந்ததாக படித்தேன். 16 வயதான தன் பெண்ணிடம் உறவு கொண்டு அந்த பெண் தன் தந்தையின் கருவையே தாங்கி இருக்கும் அவலத்தையும் ஜூனியர் விகடனில் படித்தேன். தன் அண்ணியுடன் உறவு கொள்ள அவளை வற்புறுத்தி அவள எரிந்து போன கோரத்தையும் பார்த்தேன்.

அது கணவன் மனைவி உறவாயினும், நட்பாயினும் அல்லது சகோதர சகோதரி உறவாக இருந்தாலும். ஒழுக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதற்கென அவரவர்க்கு அளவுகோல் உண்டு.

இப்படிப்பட்ட சில சட்டதிட்டம் கூக்குரல்களால் பாதிக்கப்படுவது பெண்களே. எத்தனை சிறுமிகள் கடத்தப்பட்டிருக்கின்றனர்? எத்தனை பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா கோவிச்சுக் கொண்டு போனதாலை ...... இந்த தலைப்பு சப்பெண்டு கிடக்குது. :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.