Sign in to follow this  
theeya

ஆறாந்திணை - 01

Recommended Posts

மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும்

எதுவும் விதைக்கப்படாத

வயல்வெளிகள்

யாரும் புதிதெடுக்காத

தரிசுநிலங்களாக…

கண்மூடித் திறப்பதற்குள்

கற்சிலையாய் அமைந்துபோன

மனிதர்கள்

வாழ்தல் எப்படிக் கொடூரமானது?

கரடுமுரடான பாதை போல்

கடினமானதா என்ன?

எதுவுமே புரிவதில்லை…

கால் பதிக்க முடியாத

சேற்று வயல்வெளிகள்

கட்டாந்தரையாகிக்

கண்ணீர் வடிக்கக் கண்டேன்.

ஆற்றுப்படுக்கைகளில்

ஆங்காங்கே

பிளவுகள்.. வெடிப்புகள்.

உடைப்பெடுத்துப் பாயும்

வெற்றுக்குளங்களில்

செத்துக் கிடந்தன

நீர்க்காக்கைகள்.

குளக்கட்டின் மரநிழலில்

சிலையாகச் சமைந்திருந்தார்

பிள்ளையார்…

Edited by theeya

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு... போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன்.  அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து,  மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார். கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை... முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்.... சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவானது அல்ல. மேலும்... அவர்கள் வருமானம்... பரண் அமைத்து கொடுப்பது... இந்திய ரூபாயில் 5 லட்ச்சம்.... சாப்ட்வேர்... தீவனம்... பயிட்சி.. அப்புறம் ஸ்டாக்.. ஆடுகள்... கோழிகள்...  ஆக 10 லட்ச்சம் பார்த்து விடுவார்கள்.    ஒரு 10 பேர் கிளம்பி வந்தாலே போதும். அவர்கள் பணம் பார்த்து விடுவார்கள்... ஒரு விமானம் takeoff ஆக முதல்.... ஊர்ந்து, வேகமெடுத்து ஓடி தான்.... ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும்... இவர் என்ன சொல்வது.... என்று நினைத்திருப்பார்... விழலுக்கு இறைத்த நீர்...  அவரது அண்ணர் அண்மையில் அழைத்து.... 40 லட்ச்சம் நட்டம்... போய்.... எவ்வளவு விரைவாக முடியுமோ... அவ்வளவு விரைவாக ஸ்டோக்க்கை வித்து விட்டு வந்தேன் என்றார்... சதுரங்க வேடடை படத்தில், கதாநாயகன் நட்டி, நடராஜன் சொல்லுவார்..... ஒருவனை ஏமாத்த வேண்டும் என்றால்... அவனில் கனவை விதைத்து, ஆசையை, பேராசையை தூண்ட வேண்டும்.. பல, பல ஆண்டுகளாக, நிலத்தில், கொட்டிலில் வளர்த்த ஆடுகளை.... பரணில் வளர்க்க வேண்டும்.... என்று சொன்னால்.... நம்பி பணத்தினை போடுவதா? இதனை ஏன் எழுதுகிறேன் என்றால்..... யாழ்ப்பாணத்தில் கூட... சில நம்மவர்கள் எடுபட்டு.... இத்தகைய இந்திய நிறுவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். இன்னும் சிலர், றால் பண்ணை என்று கிளம்புகின்றனர்...... முதலில் அது குறித்து அனுபவம் பெறவேண்டும்.... வேலையாள் வராவிடில்... றாலுக்கு என்ன தீவனம், எப்ப போடவேணும் எண்டு தெரியாவிடில்.... றால் ஸ்டாக் காலி... அவர்களுக்கு முதல் தரக்கூடியவர்களுக்கு சொல்லக் கூடியது இதுதான். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே அது தொடர்பான தொழிலில் உதவுங்கள். இல்லாவிடில் சிறிதாய் ஆரம்பித்து, நெளிவு சுளிவுகளை அறிந்து, பின்னர் பண்ணையினை பெருக்க சொல்லுங்கள். இல்லாவிடில் முதலுக்கு மோசம்.
    • கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி Report us Tamilini 2 hours ago பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையை சேர்ந்த தமிழ் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக செயற்பட்ட 74 வயதான வைத்தியர் அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்பவரே உயிரிழந்துள்ளார். வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். மேலும் இவர் ஒரு எழுத்தாளர் எனவும் மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/uk/01/242829?ref=home-imp-parsely
    • கடைக்கு போனால் விமானநிலையத்தை விட மோசனான கட்டுப்பாடாய் கிடக்குது. திரும்பி வீட்டை வந்தால் செத்தவீட்டுக்கு போய் வந்தமாதிரி உடுப்பெல்லாம் தோய்க்கப்போட்டு குளிச்சு முழுகித்தான் வீட்டுக்குள்ள வர வேண்டிக்கிடக்கு... கொரோனா அவலங்கள்# 
    • ரணில் வந்தால் சுஜித்த் வரமாட்டார் எல்லோ? 😁