Jump to content

எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனத்திற்கான ஏதாவது பிரயோசனமான படிப்புகள் என்றால் ... Journalism, Political Science, Law, போன்ற Social Sciences துறைகள்.

http://en.wikipedia.org/wiki/Social_sciences

எல்லோரும் டாக்டர் இஞ்சினியர் என்று படித்ததால் தான் அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை இட்டுநிரப்ப ஒருவர் கூட இருக்கவில்லை. எம்மிடம் சர்வதேச விடயங்கள் அரசியல் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் இருந்திருந்தால் இன்றிந்த அவல நிலைக்கு வந்திருக்கமாட்டோம்.

எனது அவா என்னவென்றால் எம்மிடம் இருக்கும் கட்டமைப்புகள் இப்படியான துறையில் படிப்போருக்கு புலமை பரிசில் (scholarship) மற்றும் பல உதவிகளை செய்வதன் மூலம் பலரை இந்த துறைகளில் படிக்க ஊக்கம் கொடுத்து அவர்களை இந்த இனத்திற்கான சிற்பிகளாக உருவாக்குவது.

உண்மை தான் காட்டாறு , தற்போதைய சூழ்நிலையில் தமிழ் புத்திஜீவிகளின் மத்தியில் ஒரு வெற்றிடம் உள்ளது .

இது எமது எதிர்காலத்திற்கு ஆபத்தாக முடியும் . நீங்கள் குறிப்பிட்டது போல் ..... எமது கட்டமைப்புகள் இதில் அதிக கவனம் செலுத்தி , தகுந்த விழிப்புணர்வை வருங்கால சந்ததியினர்க்கு ஏற்படுத்த வேண்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னனா சொன்னால் இது ஒரு பெரிய விடயம்..

என்னுடைய விருப்பம். நாங்கள் படிக்கிற படிப்பால வீட்டில மற்ற மற்ற காரியங்கள் தடைபட கூடாது..அக்கா டொக்ரருக்கு படிக்க வெளிக்கிட்டா அவ அதை முடிக்கும் மட்டும் மற்றக்களின்ற கலியாணம் பிந்துமென்றால்..இல்லாட்டி தம்பி படிக்க பெரிய கடன் எடுத்துப் போட்டு மற்றாக்கள் ஒன்றும் செய்யேலாம இருக்கிற நிலை.

மற்றப்படி, வீம்புக்கு படிக்க தேவையில்லை, அம்மாவும் அப்பாவும் 60 வயதுமட்டும் பக்ரியில வேலை செய்யேக்க 7,8 வருட லோ படிக்க தேவையில்லை..

நான் சொல்லுவன் விரலுக்கேத்த படிப்பு..

எனக்கு பிள்ளைக்கு பிடித்த துறையில படிப்பு பெரிச நம்பிக்கையில்லை..கனபேர் இங்க சைக்கொலொகி படிச்சுபோட்டு டெற்ர என்றிக்கு வாரவை..எங்களுக்கு படிப்பின்ர தொழில்வாய்ப்பு கட்டாயம் தெரிந்திருக்க வேணும்..அதுவும் நங்கள் இங்க முதல்சந்ததி ஆட்கள்..4 வருடம் படிச்சுபோட்டு 10 டொலர்ர் வேலைக்கு போனால் ஆர் லோன் கட்டுவது?

செய்யிர தொழிலை சந்தொசமாய் செய்யிர மனம் வந்தால் சரி..

சுத்துமாத்து தொழில் பற்றி..நம்பர் வண்..நான் விரும்புகிறதும் எனக்கு இல்லாததும்,..."மனெச்மன்ற்" அது தெரியாட்டி இன்ரவியு போகவேண்டாம்..

அது படித்து வரக்கூடாது.. இரத்ததில ஊறவேண்டும்..

15 நாள் கழித்து வாரன் தலை போகிற சோதிணை இருக்கு..முடியவாரன்

வொல்கானோ , இங்கும் பலர் தாங்கள் தங்களின் படிப்பின் எதிர்கால வேலைவாய்ப்பை பற்றி அறியாமல் படித்துவிட்டு ,

தாங்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் விரக்தியுடன் வேலைசெய்கின்றார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி நல்ல கேள்விதான் கேட்டுப் போட்டியள்...........

எல்லாரும் தங்கட மேல் படிப்பை முடிச்சு இந்த உலகத்தில நின்மதியாய் வாழ

முதலில இந்த உலகம் சூடேறாமல் பாதுகாத்துக் கொள்ள வேணும்

அதால இனி புதிசாய் அது சம்பந்தமான படிப்புக்களை படித்தால் தான் உந்த என்சினியரும் டொக்டரும் வேலை செய்யிறதுக்கு மனிசர் உலகத்தில இருப்பினம்...............எங்கட

நாசமாய் போன வாழ்க்கை முறையால பாருங்கோ உலகத்தில தினம் தினம் அழிவுகள்

நடந்து கொண்டிருக்கின்றன..........

அந்த அழிவில நாங்களும் அகப்பட போறம்..............அதால அதை தடுக்கிற சம்பந்தமாய் ஏதாவது

படிச்சால் மனிசர் வாழ வழி வகுக்கும் எண்டுறன்...............

மனிசர் இருந்தால் தானே...............மற்ரதுகளை செய்யலாம்!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி எதிர்காலத்துக்கு எது நல்ல படிப்பு உதவும்? எனும் கேள்வி நல்ல கேள்வி தான். யாருடைய எதிர்காலம், உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு என்றால்

எனது கருத்துப்படி

எதிர்காலத்தில் நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு பெரிய வீடு, பென்ஸ் கார், நீச்சல் குளம், இப்படி டாம்பிகமான வாழ்க்கை வேணுமா?

அப்படி வேண்டும் எனில் அதற்கேற்பவும், நீங்கள் இருக்கும் நாடு, அங்குள்ள தொழில் முயற்சிகள்/ பொருளாதரம் எதில் தங்கியுள்ளது என்பதை பார்த்து அதற்கேற்ப தீர்மானிக்கலாம்.

அதல்ல,

மனதுக்கு பிடித்தமாதிரியான, நாளந்தம் வேலைக்கு போகும் போது விருப்பத்துடன் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா?

அந்தவேலை நடுத்தர வருமானமாய் இருந்தாலும் அதனுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாய் வாழ முடியும் என நினைக்கிறீர்களா?

அப்பிடி எனில் உங்களுக்குகாக இருந்தல் உங்கள் விருப்பப்படி / உங்கள் பிள்ளைகளுக்காய் இருந்தால் உங்கள் பிள்ளைகள் விரும்பும் படிப்பை படிப்பதே நல்லது.

நீங்கள்/ உங்கள் பிள்ளை விரும்பு படிப்பு என்பதும் நீங்கள் இருக்கும் நாட்டின் கல்வி வாய்ப்பில்/ கொள்கையிலேயே தங்கியுள்ளது.

சிறி லங்கா எனில் நீங்கள் பொறியியல் படிக்க விரும்பினாலும் தரப்படுத்தலில்ன் படிப்படையில் கிடைக்கும் பல்கலைகழக பட நெறிக்கே போக முடியும்.

அப்படி ஒரு சூழ்நிலையெனில் அந்த குறிப்பிட்ட பாட நெறியில் எந்த வகையான பாடப்பரப்பு உங்களை கவருகிறதோ/ அல்லது அதிக தொழில் வாய்ப்பு உள்ளதோ அதை தெரிவு செய்து அதை சிறப்பு பாடமாக எடுத்து படிப்பது சிறந்தது உதாரணமாக பொறியியலில் இலத்திரனியல், கணனி, சுரங்கதுறை ...... இப்படி பாடப்பரப்புகள், அல்லது பொது விஞ்ஞானம் எனில் இரசாயனவியல், பௌதீகவியல், நுண்ணுயிரியல் இப்படி ஏதும் ஒன்று.

ஆனால் புலம் பெயர் நாடுகளில் பொதுவாக மருத்துவம் தவிர்ந்த ஏனைய துறைகளை நீங்கள் விரும்பியபடி தெரிவு செய்யலாம். எனவே நீங்கள் விரும்பும் பாடத்தை படிப்பதில் சிரமம் இருக்காது.

உதாரணமாக இங்கு எனக்கு அறிமுகமான கனேடிய நண்பன் ஒருவன் தனது கற்கையை தெரிவு செய்த முறையை சொல்கிறேன்.

முதலில் அவர் பொது விஞ்ஞானம் படிக்க பல்கலைகழகம் சென்றார், அவருக்கு அத்துறை பிடிக்க வில்லை ஒரு வருடத்தின் பின் பார்மசி படிப்புக்கு மாற்றம் எடுத்து 2 வருடங்கள் அத்துறையை பயின்றார் அதுகும் அவரை கவரவில்லை. மீண்டும் பொது விஞ்ஞான பிரிவில் படிக்க சென்று உளவியல் (சைக்கொலொயி) ஐ சிறப்பு பாடமாக படித்து பட்டம் பெற்று இப்போது குடும்ப வன்முறை போதை பழக்கங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு படசாலையில் அவர்களுக்கு வழிகாட்டியாக/ கவுனிசிலராக வேலைசெய்கிறார். அத்துடன் சமூகப்பணி இல் முதுமாணி பட்டபடிப்பை மேற்கொள்கிறார். சமூக நல பணித்துறை என்பது அதிக பணம் தரும் துறை இல்லை. ஆடம்பர வாழ்க்கைக்கு போதிய பணம் கிடைப்பது கடினம். அது அவருக்கு தெரிந்தே இருக்கிறது. ஆனால் அவருக்கு அந்த பணியில் மனதிருப்தி கிடைக்கிறது, ஆனால் ஏனைய கற்க்கைத்துறைகள் அவருக்கு போதிய திருப்தியை தரவில்லை என சொன்னார்.

இதை முதலில் கேட்ட போது அவர் தனது கல்வியில் பல வருடங்கலை விணாக்கி விட்டர் என யோசித்தேன் ஏன் எனில் நாங்கள் அப்படி பல துறைகளையும் மாறி படிக்கும் பழக்கம் அற்றவர்கள். ஒரு கோடு கீறி அதன் வழியே பயணிக்க நினைப்பவர்கள். அதுவே சில நேரம் உயற்ச்சிக்கும் வழியாக இருக்கும் சில நேரம் எம்மை நரகத்துள் தள்ளவும் காரணமாக அமையலாம்.

என்ன படிப்பது எனும் தெரிவு உங்ளதே, அதில் மற்றவர்களின் ஆலோசனையை விட உங்களுக்கு எது பிடிக்கிறது என்பது முக்கியம்.

குளக்காடன் ,பிள்ளைகள் படித்தபின் கிடைக்கப் போகும் வேலை ....... நடுத்தர வருமானத்திற்கு மேற்பட்டதாக இருப்பதையே விரும்புகின்றேன் .

அதற்காக வீட்டில் நீச்சல் குளம் எல்லாம் கொஞ்சம் அதிகம் . :rolleyes:

சில படிப்புகளுக்கு தற்போது அதிக வேலை வாய்ப்பிருந்தாலும் ...

குறிப்பிட்ட சிலவருடங்களில் படித்து முடித்த பின் ...... அந்த படிப்புக்கு வேலை இல்லாது விடில் என்னும் கேள்வி எழும் போது தான் மிக குழப்பமாக உள்ளது .

நீங்கள் குறிப்பிடுவது போல் நாம் வாழும் நாட்டில் ...... கல்வி வாய்ப்பில் / கொள்கையிலேயே அதிகம் தங்கி தங்கி இருக்க வேண்டியுள்ளது என்பதை

மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதியும் கணக்காய்வும் நல்லது என்று நினைக்கிறேன். பல்கலைக்கழகம் போய் படிப்பதுதான் படிப்பல்ல. CIMA, ACCA போன்ற கல்வி நெறிகளைக் கற்று பலர் நல்ல தகுதியான வேலைகளில் இருக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் போய் BEng வாங்கியவர்கள் வங்கிகளில் CIMA, ACCA படித்தவர்களை விட கீழ் நிலையில் வேலை செய்ய வேண்டிய நிற்பந்தத்தில் இருக்கிறார்கள்.

வர்த்தகத்துறை சார்ந்த கல்வி சோரம் போகாது என்பது எனது அபிப்பிராயம். எல்லாக் கல்வியும் அடிப்படையில் வர்த்தகம் சார்ந்து தான் இருக்கிறது. அது சேவை வர்த்தகமாகட்டும்.. பொருள் பண்ட வர்த்தமாகட்டும்..!

வெளிநாடுகளில் மருத்துவத்துறை என்பது குறிப்பாக மருத்துவர் என்பது அவ்வளவு இலகுவான பணியல்ல. மிகப் பொறுப்பு வாய்ந்த பணி. சிறிய கவனக் குறைவும் வேலையைப் பறித்துவிடும்.

நிதி கணக்காய்வு முகாமைத்துவம் பங்கு வர்த்தகம் வர்த்தக தகவற்தொழில்நுட்பம்.. போன்ற துறைகளில் நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

ஆனால் ஒன்று.. பொருளாதார நெருக்கடிகள் நிலவும் போது வேலை இழப்பிற்கான வாய்ப்பும் இவர்களுக்கு சற்று அதிகம்..! :rolleyes:

மருத்துவர்களாக இருந்து சில தவறுகளால் வேலை இழந்தவர்கள் உண்மை தான் நெடுக்ஸ் .

அதிலும் ஆசியா போன்ற நாடுகளில் ....... சிலவற்றை பணத்தின் மூலமோ , அரசியல் செல்வாக்கின் மூலமோ மூடி மறைத்து விடலாம் .

ஆனால் எல்லா இடமும் தப்ப முடியாது . பத்திரிகை , நீதிமன்றம் என்று ஒழு வழி பண்ணிவிடுவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை எல்லாற்ரை கதையையும் பாக்கேக்கை...........

எல்லாருக்கும் டாக்குத்தர் எஞ்சினியர் எக்கவுண்டன் எண்டு எல்லாம் சுழல்கதிரை நினைப்பிலைதான் இருக்கினம் போலை கிடக்கு????

அதுசரி நீங்கள் மூண்டு நேரமும் வாய்க்கு ருசியாய் கொட்டுறதுக்கு நேரகாலமில்லாமல் வெய்யில் மழை பனி பாரமல் ஒரு மனிசகூட்டம் அதுதான் உங்கடை பாசையிலை தோட்டக்காரன் எருப்பெட்டிகாவியள் அதுகளைப்பத்தி கொஞ்சமாவது யோசிச்சியளோ?

ஏன் அப்பிடியான வேலையளுக்கு ஒருத்தரும் போகவிரும்பேல்லை?

என்ன அது கூடாத வேலையோ?

இல்லாட்டி...

தோட்டவேலை கொஞ்சம் இளக்காரமோ?

ஒரு மனிசவாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகளை சிந்திக்க முடியாத சனங்கள்?????????

விடுதலையை பற்றி கொக்கரிக்குதுகள்

குமாரசாமி அண்ணை , தோட்ட வேலையை பற்றி யாரும் இளக்கமாக கதைக்கவில்லை ,

வெளிநாடுகளில் உள்ள சாதாரண தமிழ் குடும்பத்திடம் தோட்டம் செய்வதற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் காணி இருக்க வேண்டும்.

மற்றும் படி , நான் வாழும் நாட்டில் தோட்டக்காரர் என்பது பரம்பரையாக செய்து வருபவர்கள்.

அதாவது ..... ஒரு விவசாயம் செய்யும் தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால் ...... அதில் மூத்தமகனுக்கே அடுத்த வாரிசாக பழக்கப் படுகின்றது .

அதில் அந்த தோட்டக் காணிகளை தாய் , தகப்பன் விரும்பினாலும் மற்றைய பிள்ளைகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுக்க முடியாது.

நானும் ஒரு தோட்டக்காரன் தான் . பல்கனியிலை நாலு தக்காளி கண்டும் , அஞ்சு பச்சை மிளகாயும் பயிரிட்டுள்ளேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொருத்தவரை நிம்மதியாக வாழ ஒரு நிலம் வேண்டும்.எங்காவது அணு தொழில்நுட்பம் பெற்ற நாடுகளுடன் ஏதாவது ஒரு அண்டைய சக்தி முண்டுவதாக இல்லை.எடுத்த எடுப்பிலே ஏதாவது ஒன்றை பெற முடியாது. எனவே இப்பொழுது இருந்தே அவை தொடர்பான கற்கைகளில் ஈடுபட்டால்தான் குறிப்பிட்ட வொரு காலப்பகுதியில் எமது இலக்கை அடைய முடியும்.தமிழரால் முடியாது என்று ஒன்றில்லை......

(B)பிசிதமிழன் ,

ஈரான் , கொரியா போண்ற நாடுகளே அணுதொழில் நுட்பத்தை தெரிந்து கொண்டு இருந்தும் ......

மேலதிகமாக ஒரு அடி எடுத்து வைக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் போது ........

தனிப்பட்ட ஒருவர் அணு தொழில் நுட்பத்தை படித்து ...... அதன் மூலம் தனது தாய்நாட்டுக்கு உதவலாம் என்று நம்புகின்றீர்களா ?

அதிலும் பார்க்க .... அரசியல்வாதியாக படித்தால் நல்லது .

Link to comment
Share on other sites

வாழும்புலம் பகுதியில் போட்டுள்ளதால் புலம்பெயர் வாசிகளுக்கானது என்றே எடுத்துக்கொள்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில், எந்தப் படிப்பை எடுத்தாலும் அதில் ஆர்வம் என்பது முதலில் இருக்க வேண்டும். படிப்பதை மேம்போக்கில் செய்யாமல், புள்ளிகள் பெறுவதற்கு மாத்திரம் செய்யாமல் ஒவ்வொரு காரண காரியங்களையும் அறிந்து கொள்ளல் வேண்டும்.

அடுத்ததாக வேலை அனுபவமும் அதன்மூலம் நீங்கள் வளர்த்துக்கொள்ளும் நிபுணத்துவமும். இந்த இரண்டையும் பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது ஆகும். அதுவரைக்கும் ஓயாது உங்கள் அறிவுத்தேடல்களையும், அதற்கேற்றாற்போல் வேலை அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள வேலைத்தள மாற்றங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பணம் ஈட்டுவது எல்லோருக்கும் ஒரு முக்கியமான விடயமாக இருக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளைப் பொறுத்தவரையில், மக்களின் நலனுக்கு பங்கம் வரக்கூடிய பொறுப்புக்கள் நிறைந்த கூடிய தொழிலுக்கு ஊதியம் அதிகம். குறிப்பாக வைத்தியர், பொறியியலாளர் போன்ற தொழில்களுக்கு.

ஒரு முக்கோணத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். அதன் மேல் முனை எவ்வாறு ஒடுங்கி உள்ளதோ அதுபோன்று குறுகியதே பொறுப்புக்கள் குறைந்த தொழில்களுக்கான ஊதியமும். மாறாக அகண்ட அடிப்பாகத்தை ஒத்ததே பொறுப்புக்கள் கூடிய தொழில்களுக்கான ஊதியமும். இதை விளங்கிக் கொண்டால் ஏன் ஒரு சாதாரண வைத்தியருக்கும், சத்திரசிகிச்சை வைத்தியருக்கும் ஒப்பீட்டளவில் ஊதிய வித்தியாசம் உண்டென்பது விளங்கும். சில இடங்களில் வியாபாரத் தேவை நிமிர்த்தம் சில மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொதுவில் இந்த முக்கோணத் தேற்றமே அடிப்படையான எதார்த்தம்.

Link to comment
Share on other sites

தற்பொழுது கனடாவில் எந்தத்துறையில் வேலைவாய்ப்பு அதிகம் காணப்படுகிறது? நான் nursing செய்ய வேணும் என்று நினைத்திருக்கிறன் ஆனா எனக்கு கணிதத்துறையில் ஆர்வம் கூட. எதைப்படிக்கிறது என்று ஒரே குழப்பமா இருக்கு. 2010 எனது கல்லூரி படிப்பை தொடங்க வேணும்.யாரவது தெரிந்தவர்கள் அறிவுரை கூறுங்களேன்.

1. Surgeon

2. Chief Executive Officer (CEO)

3. Engineering Manager

4. Airline Pilot $134,090

5. Dentist

6. Lawyer

7. Air Traffic Controller

8. Computer and Information Systems Manager

9. Marketing Manager

10. Natural Sciences Manager

Source(s):

http://www.askmen.com/money/career_150/1…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தழிழ் சிறி நான் நினைக்கிறன் வெளிநாட்டை பொறுத்தவரையில் மருத்துவர் அல்லது இன்சினியர் நல்லது ஏனண்டா கால் மேல் கால் போட்டு இருக்கலாம்.

நல்ல சேவை செய்ய வேண்டும் என்ரறால் ஆசிரியராக அல்லது தாதியாக வரலாம்.யாலியான வேலை வேண்டும் என்றால் சிகை அலங்கார வேலைக்கு வரலாம்.

என்னுடைய கருத்து எந்த வேலை எங்கள் தாயகத்தை காப்பாற்றுமோ அதுதான் சிறந்த படிப்பு.

ஜான்சிராணி மருத்துவர் , எஞ்சினியர் வேலை எல்லாம் காலுக்கு மேல் கால் போட்டு செய்யும் வேலைகளா ?

வேணுமென்றால் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து ........ அப்பாடா என்று காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருக்கலாம் .

நீங்கள் குறிப்பிடுவது போல் ..... ஆசிரியர் , தாதியர் வேலைகளை சிலர் தமது வாழ்வின் குறிக்கோளாகவே நினைத்து , அந்த வேலையில் ஈடுபாட்டுடன் வெலை செய்கின்றார்கள்.

சிகை அலங்காரம் அவ்வளவு ஜாலியான வேலையா ? இளமையில் அதனை செய்ய ஜாலியாக இருக்கலாம் .

அந்த வேலையையே வாழ் நாள் முழுக்க ( 50 - 60 வயது வரை ) செய்ய முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறிஇ உங்கள் கேள்வி பொதுப்படையாக இருப்பதால் சரியாகப் பதலளிக்கமுடியாது. ஆனால்இ பொதுவாகஇ பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு எப்போதும் வசதி வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமின்றிஇ நீங்கள் ஒரு கம்பனிக்குள் புகுந்துவிட்டால்இ கம்பனியே உங்களைப் படிப்பிக்கும் அல்லது படிப்புச் செலவில் ஒரு பகுதியை அளிக்கும். பத்துவயதிற்குட்பட்ட உங்கள் பிள்ளைகளுக்காகக் கேட்கிறீர்கள் எனில்இ அவர்களை நீங்கள் விரும்பும் எந்தத் துறைக்கும் அனுப்ப முடியும். நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம்இ அவர்களுக்கு அந்தத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டுமே. இதனை நீங்கள்இ அவர்களுக்கு அந்தத்துறை சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதுஇ சிறுவர்களுக்கான அந்தத் துறை சார்ந்த நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது அல்லது உங்களுக்குத் தெரிந்த அந்தத் துறை சார்ந்தவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் அப்பிள்ளைகளுக்கு அத்துறையின் மீது ஆர்வம் வரச்செய்யலாம். வளர்ந்த பிள்ளைகளாயின்இ அவர்கள் விரும்பும் துறையை அறிந்துஇ அத்துறைசார்ந்தவர்களிடம் உங்கள் பிள்ளைகளோடு நீங்களும் சேர்ந்து அறிந்து அவற்றின் நன்மை தீமைகளை அறிந்து முடிவெடுப்பது நல்லது. பலநேரங்களில்இ பிள்ளைகளுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளதென அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் எண்ணப்போக்கு மாறிக் கொண்டே இருக்கும். எனவேஇ இவற்றைப் பற்றி ஓரளவேனும் ஆராய்ச்சி செய்து முடிவெடுப்பதே சிறந்தது.

வொல்கானோஇ நீங்கள் கூறுவது உண்மை. கனடாவைப் பொறுத்தமட்டில்இ உளவியலில் கலாநிதிப்பட்டம் எடுத்தால்தான் நல்லவேலை எடுக்க முடியும் என்பது அது சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே தெரிந்தவிடயம். இங்குஇ பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கே இது தெளிவாகத் தெரியும். நீங்கள் குறிப்பிட்ட பிள்ளைகள்இ ஏதோ டிகிரி எடுத்தால் போதும் என்று நினைக்கும் பிள்ளைகளாகவிருப்பார்கள்.

செவ்வந்திஇ நீங்கள் கணக்கில் புலி என்றால்இ அதனைப் படிப்பது சிறந்தது. statistics படிப்பிற்கும் இங்கு வேலைவாய்ப்பு அதிகம். கணக்கியல் இல்லாவிட்டால்இ எக்கவுண்டிங் படிப்பதும் நல்லது. எக்கவுண்டிங் எனில்இ CGA, CMAஎனப் படித்தால்இ உங்கள் சம்பளம் மிகவும் உயர வாய்ப்புள்ளது. இவற்றை நீங்கள் வேலை செய்து கொண்டே படிக்கலாம். அதோடுஇ வேலையிலும் பணஉதவி செய்வார்கள். இவைஇ மாலைநேர வகுப்புகளாக மட்டும்தான் படிக்கமுடியும். படித்துமுடிய 5 வருடங்கள் எடுக்கும். ஆனால்இ ஒவ்வொரு லெவலும் முடிக்கும்போதுஇ உங்கள் சம்பளம் உயர வாய்ப்புள்ளது.

தமிழச்சி , நீங்கள் சொல்வது போல் ........ எனது அயலவர் ஒருவர் படிக்கும் போதே ஒரு கார் கொம்பனியில் இணைந்து இன்று கார் Design maker ஆக உயர்ந்த, கௌரவமான பதவியில் இருக்கின்றார் . அவரை படிப்பித்தது எல்லாம் அந்த நிர்வாகமே . நாம் பல்கலைக்கழகம் மட்டும் செலவு செய்து படித்து விட்டு ..... பின் அதற்குரிய வேலையை தேடுவதை விட , இது எவ்வளவோ சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும்புலம் பகுதியில் போட்டுள்ளதால் புலம்பெயர் வாசிகளுக்கானது என்றே எடுத்துக்கொள்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில், எந்தப் படிப்பை எடுத்தாலும் அதில் ஆர்வம் என்பது முதலில் இருக்க வேண்டும். படிப்பதை மேம்போக்கில் செய்யாமல், புள்ளிகள் பெறுவதற்கு மாத்திரம் செய்யாமல் ஒவ்வொரு காரண காரியங்களையும் அறிந்து கொள்ளல் வேண்டும்.

அடுத்ததாக வேலை அனுபவமும் அதன்மூலம் நீங்கள் வளர்த்துக்கொள்ளும் நிபுணத்துவமும். இந்த இரண்டையும் பெற்றுக்கொள்வதற்கு குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது ஆகும். அதுவரைக்கும் ஓயாது உங்கள் அறிவுத்தேடல்களையும், அதற்கேற்றாற்போல் வேலை அனுபவங்களையும் பெற்றுக்கொள்ள வேலைத்தள மாற்றங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பணம் ஈட்டுவது எல்லோருக்கும் ஒரு முக்கியமான விடயமாக இருக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளைப் பொறுத்தவரையில், மக்களின் நலனுக்கு பங்கம் வரக்கூடிய பொறுப்புக்கள் நிறைந்த கூடிய தொழிலுக்கு ஊதியம் அதிகம். குறிப்பாக வைத்தியர், பொறியியலாளர் போன்ற தொழில்களுக்கு.

ஒரு முக்கோணத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். அதன் மேல் முனை எவ்வாறு ஒடுங்கி உள்ளதோ அதுபோன்று குறுகியதே பொறுப்புக்கள் குறைந்த தொழில்களுக்கான ஊதியமும். மாறாக அகண்ட அடிப்பாகத்தை ஒத்ததே பொறுப்புக்கள் கூடிய தொழில்களுக்கான ஊதியமும். இதை விளங்கிக் கொண்டால் ஏன் ஒரு சாதாரண வைத்தியருக்கும், சத்திரசிகிச்சை வைத்தியருக்கும் ஒப்பீட்டளவில் ஊதிய வித்தியாசம் உண்டென்பது விளங்கும். சில இடங்களில் வியாபாரத் தேவை நிமிர்த்தம் சில மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பொதுவில் இந்த முக்கோணத் தேற்றமே அடிப்படையான எதார்த்தம்.

உண்மை தான் டங்குவார் ,

ஆர்வம் இல்லாத படிப்பு பிற்காலத்துக்கு உதவாது.

அதில்லும் வேலைக்கு சேர்ந்தவுடன் , அந்த வேலையுடன் திருப்திப்பட்டுக் கொள்ளாது , அதற்கு அடுத்த நிலையை அடைய குறி வைக்க வேண்டும் . வாழ்க்கையில் எப்போதும் தேடல் இருந்து கொண்டே இருப்பது சுவராசியமாகவும் இருக்கும்.

நீங்கள் கூறிய முக்கோண உதாரணம் நல்ல ஒரு எடுத்துக்காட்டு .

Link to comment
Share on other sites

தமிழ்சிறி நல்ல கேள்விதான் கேட்டுப் போட்டியள்...........

எல்லாரும் தங்கட மேல் படிப்பை முடிச்சு இந்த உலகத்தில நின்மதியாய் வாழ

முதலில இந்த உலகம் சூடேறாமல் பாதுகாத்துக் கொள்ள வேணும்

அதால இனி புதிசாய் அது சம்பந்தமான படிப்புக்களை படித்தால் தான் உந்த என்சினியரும் டொக்டரும் வேலை செய்யிறதுக்கு மனிசர் உலகத்தில இருப்பினம்...............எங்கட

நாசமாய் போன வாழ்க்கை முறையால பாருங்கோ உலகத்தில தினம் தினம் அழிவுகள்

நடந்து கொண்டிருக்கின்றன..........

அந்த அழிவில நாங்களும் அகப்பட போறம்..............அதால அதை தடுக்கிற சம்பந்தமாய் ஏதாவது

படிச்சால் மனிசர் வாழ வழி வகுக்கும் எண்டுறன்...............

மனிசர் இருந்தால் தானே...............மற்ரதுகளை செய்யலாம்!!!!!!!!!

அதாவது இன்னொருவிதத்தில சொல்வதானால் படிக்காமல் இருக்கிறது எதிர்காலத்துக்கு உதவும் எண்டு சொல்லறிங்கள்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது கனடாவில் எந்தத்துறையில் வேலைவாய்ப்பு அதிகம் காணப்படுகிறது? நான் nursing செய்ய வேணும் என்று நினைத்திருக்கிறன் ஆனா எனக்கு கணிதத்துறையில் ஆர்வம் கூட. எதைப்படிக்கிறது என்று ஒரே குழப்பமா இருக்கு. 2010 எனது கல்லூரி படிப்பை தொடங்க வேணும்.யாரவது தெரிந்தவர்கள் அறிவுரை கூறுங்களேன்.

செவ்வந்தி , Nursing நல்ல வேலை . ஆனால் அநேகமாக மூன்று Schift மாறி மாறி வேலை செய்ய வேண்டிவரும் .

ஒரு குடும்ப தலைவியாக இருந்து உங்களால் சமாளிக்க முடியுமா ? என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள் .

மற்றும் படி உங்களுக்கு கணனித்துறையில் ஆர்வம் உள்ளதாக கூறுகின்றீர்கள் . ஆர்வம் உள்ள வேலை எப்போதும் மகிழ்ச்சியை தரும் .

Link to comment
Share on other sites

பத்துவயதிற்குட்பட்ட உங்கள் பிள்ளைகளுக்காகக் கேட்கிறீர்கள் எனில்இ அவர்களை நீங்கள் விரும்பும் எந்தத் துறைக்கும் அனுப்ப முடியும். நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம்இ அவர்களுக்கு அந்தத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது மட்டுமே. இதனை நீங்கள்இ அவர்களுக்கு அந்தத்துறை சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதுஇ சிறுவர்களுக்கான அந்தத் துறை சார்ந்த நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது அல்லது உங்களுக்குத் தெரிந்த அந்தத் துறை சார்ந்தவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றின் மூலம் அப்பிள்ளைகளுக்கு அத்துறையின் மீது ஆர்வம் வரச்செய்யலாம்.

வயது குறைந்த பிள்ளைகள் ஆயின் எம்மால் அடைய முடியாத ஆசைகளை / படிப்புக்களை அவர்கள் மூலம் அடைவதற்கு அவர்களை எப்படி மூளைச்சலவை செய்யலாம் என்று நல்ல ஆலோசனை. :icon_mrgreen:

ஆனா வயது கூடினா எங்கட ஆசைய திணிச்சா பொலிசுக்கு போகிடுங்கள் பொடியள் எண்டு முன்னெச்சரிக்கையாய் இருக்கோணும் எண்டுறியளோ. :(

Link to comment
Share on other sites

அப்பிடி நீங்கள்தான் நினைக்கிறீங்கள்.. இந்த போட்டிமயமான உலகத்தில உங்கள் பிள்ளைக்கு சுத்துமாத்து தெரியாவிட்டால்.. என்ன தெரிஞ்சாலும் முன்னுக்கு வர வாய்ப்பு இல்லை. அட்லீஸ்ட் கொஞ்சம் புளுகவாவது தெரிஞ்சு இருக்கோணும்

உண்மை மாப்பிள்ளை... கசப்பான உண்மை.... அண்மையில் தான் உணர்ந்துகொண்டேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தமிழ்சிறி,

இன்னொரு விடயத்தையும் சொல்ல வேணும். எந்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் போதும், அத்துறையோடு தொடர்புள்ள ஒரு வேலையை பகுதி நேரமாகவேனும் செய்து கொண்டு படிப்பது மிகவும் பயனுள்ளது.

நான் கணக்கியல் படிக்கிறேன். அண்மையில் ஒரு இது தொடர்பான வேலையில் இணைந்து கொண்ட பின்னர் இத்துறையில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. படிப்பதற்கும் இலகுவாக உள்ளது. இனி பகுதி நேரமாக படித்துக்கொண்டு, முழு நேர வேலை செய்யலாம் என யோசிக்கிறேன்.

எத்துறை என்றாலும் அனுபவக்ககல்வி மிகவும் முக்கியம். என்ன பாடுபட்டாவது நீங்கள் படிக்கும் / படிக்கவுள்ள துறையில் ஒரு வேலையில் நுளைய முயற்சிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

இன்னொரு விடயத்தையும் சொல்ல வேணும். எந்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் போதும், அத்துறையோடு தொடர்புள்ள ஒரு வேலையை பகுதி நேரமாகவேனும் செய்து கொண்டு படிப்பது மிகவும் பயனுள்ளது.

நான் கணக்கியல் படிக்கிறேன். அண்மையில் ஒரு இது தொடர்பான வேலையில் இணைந்து கொண்ட பின்னர் இத்துறையில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. படிப்பதற்கும் இலகுவாக உள்ளது. இனி பகுதி நேரமாக படித்துக்கொண்டு, முழு நேர வேலை செய்யலாம் என யோசிக்கிறேன்.

எத்துறை என்றாலும் அனுபவக்ககல்வி மிகவும் முக்கியம். என்ன பாடுபட்டாவது நீங்கள் படிக்கும் / படிக்கவுள்ள துறையில் ஒரு வேலையில் நுளைய முயற்சிக்கவும்.

இது நல்ல யோசனை மல்லிகைவாசம்.

படிக்கும் போதே ...... அந்தவேலையின் நெளிவு , சுழிவுகளை கற்றுக்கொள்ளவும் முடியும்.

அத்துடன் படிப்பு செலவுக்கு தேவையான பணமும் கிடைக்கும்.

படித்து முடித்த பின் வேலையும் நிச்சயம் .

ஒரு கல்லில் பல மாங்காய். :(

Link to comment
Share on other sites

குளக்கட்டான். எல்லோராலும் இதனைச் செய்யமுடியாது. நன்றாக விபரம் அறிந்தவர்களால் மட்டுமே இது முடியும். நான் உளவியல் படித்ததனால், என்னால் இதனை உணரமுடிந்தது. பரீட்சித்தும் பார்த்துவிட்டேன். ஆனால், எனக்குத் தெரிந்த பல கல்விமான்களால்கூட இது சாத்தியமற்றதாகியிருக்கிறதை எனது அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். ஆனால், மிகவும் சிறுவயதில் செய்தால் ஒரளவு வெற்றியீட்டமுடியும்.

கலைஞன், மல்லிகைவாசம், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால், அதற்காக அதிகளவில் சுத்துமாத்துச் செய்வது கூடாது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் நிச்சயமாகத் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பதை நானும் எனது அனுபவத்தில் அறிந்து கொண்Nடேன். மல்லிகைவாசம், கூறுவதுபோல, படிக்கும்போதே அத்துறையில் நிச்சயம் வேலை செய்யவேண்டும். காரணம், நாம் படித்த துறையிலேயே வேலை செய்தாலும், நாம் படிக்கும் படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தம் இருப்பது மிகவும் குறைவு. ஆகவே, உங்கள் பிள்ளைகளை அவர்கள் படிக்கும்போதே அந்தத் துறை சம்பந்தமாக வேலை செய்யவிடுவது, பிள்ளைகளுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இன்றைய உலக அதிவேக மாற்றத்தில் , எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ?

இந்தக் கேள்வி என்னை பல காலம் குழப்புகின்றது .

எல்லா தமிழ் பெற்றோரும் தம் பிள்ளைகளை மருத்துவராகவோ , பொறியியலாளாராகவோ வருவதை தமது குறிக்கோள் என்று செயல் படுகின்றார்கள் .

உலகத்தில் அது இரண்டும் தான் வேலையா .......? அது சரியில்லை என்று நான் நினைக்கின்றேன் .

இங்கு களத்தில் கருத்தாடுபவர்கள் பல துறைகளையும் சார்ந்தவர்களாக உள்ளார்கள் .

உங்கள் அபிப்பிராயங்களையும் , அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் பலருக்கு உதவியாக இருக்கும் .

இங்கு MIT Audio/Video Courses சென்றீர்களானால் ஒவ்வரு துறையை பற்றிய ஆழமான முதலறிவை பெற்றுக்கொள்ளலாம், பின்பு ஆர்வமுள்ள ஒரு துறையை தெரிவு செய்வது இலகுவாகும் ...

அந்த ஆர்வத்தை நிர்ணையம் செய்வது இலக்கு : வரும் 30 ஆண்டுகளில் எதை அறிய, மாற்ற அல்லது தயரிகரிக்க விரும்புகீர்கள் , அல்லது இன்ணும் 30 ஆண்டுகளில் எதைச்சாதிக்க விரும்புகீர்கள்.

உதாரணமாக :

- பாலைவனத்தை பசும் சோலையாக மற்றவேண்டும்

- எமது மக்கள் எல்லோரையும் விஞ்ஞாணிகளாகமாற்ற வேண்டும்

- எமது மக்கள் எல்லோரையும் மார்சில் குடியேற்ற வேண்டும்

...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை , தோட்ட வேலையை பற்றி யாரும் இளக்கமாக கதைக்கவில்லை ,

வெளிநாடுகளில் உள்ள சாதாரண தமிழ் குடும்பத்திடம் தோட்டம் செய்வதற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் காணி இருக்க வேண்டும்.

மற்றும் படி , நான் வாழும் நாட்டில் தோட்டக்காரர் என்பது பரம்பரையாக செய்து வருபவர்கள்.

அதாவது ..... ஒரு விவசாயம் செய்யும் தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால் ...... அதில் மூத்தமகனுக்கே அடுத்த வாரிசாக பழக்கப் படுகின்றது .

அதில் அந்த தோட்டக் காணிகளை தாய் , தகப்பன் விரும்பினாலும் மற்றைய பிள்ளைகளுக்கு துண்டு துண்டாக பிரித்து கொடுக்க முடியாது.

நானும் ஒரு தோட்டக்காரன் தான் . பல்கனியிலை நாலு தக்காளி கண்டும் , அஞ்சு பச்சை மிளகாயும் பயிரிட்டுள்ளேன். :lol:

ஓ.......

நீங்கள் புலம்பெயர் டமிழர்களை பற்றிகதைக்கிறீயளே?

பணியாரம் நான் இப்பவும் ஊருக்கையே சுத்திக்கொண்டெல்லே நிக்கிறன் :lol:

Link to comment
Share on other sites

இன்றைய உலக அதிவேக மாற்றத்தில் , எதிர் காலத்துக்கு என்ன படிப்பு உதவும் ?

இந்தக் கேள்வி என்னை பல காலம் குழப்புகின்றது .

இண்று எல்லாமே கணீனி மயமாகி உள்துபோல்

வரும் காலத்தில் எல்லாமே நுண்தொழில்நுட்ப மயமாக விருக்கின்றது.

ஆர்வமுளதா என்று பரிசோதித்துப் பாருங்கள் :

Nanotechnology, sometimes shortened to nanotech, refers to a field of applied science whose theme is the control of matter on an atomic and molecular scale. Generally nanotechnology deals with structures 100 nanometers or smaller, and involves developing materials or devices within that size.

Nanotechnology is an extremely diverse and multidisciplinary field, ranging from novel extensions of conventional device physics, to completely new approaches based upon molecular self-assembly, to developing new materials with dimensions on the nanoscale, or the scale of nothing, even to speculation on whether we can directly control matter on the atomic scale.

molecular nanotechnology

Nanotechnology's Global Risk and Promises of Resilience

நல்ல உதாரணங்கள் :

NanoAntenna solar shows incredible promise!!

self-charging AA battery

Extreeme one :Bionic cyborg etc...

தமிழருக்கு தெரிந்த மிகச்சிறிய அளவு ... 1/2323824530227200000000 - தேர்த்துகள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு MIT Audio/Video Courses சென்றீர்களானால் ஒவ்வரு துறையை பற்றிய ஆழமான முதலறிவை பெற்றுக்கொள்ளலாம், பின்பு ஆர்வமுள்ள ஒரு துறையை தெரிவு செய்வது இலகுவாகும் ...

அந்த ஆர்வத்தை நிர்ணையம் செய்வது இலக்கு : வரும் 30 ஆண்டுகளில் எதை அறிய, மாற்ற அல்லது தயரிகரிக்க விரும்புகீர்கள் , அல்லது இன்ணும் 30 ஆண்டுகளில் எதைச்சாதிக்க விரும்புகீர்கள்.

உதாரணமாக :

- பாலைவனத்தை பசும் சோலையாக மற்றவேண்டும்

- எமது மக்கள் எல்லோரையும் விஞ்ஞாணிகளாகமாற்ற வேண்டும்

- எமது மக்கள் எல்லோரையும் மார்சில் குடியேற்ற வேண்டும்

...

இண்று எல்லாமே கணீனி மயமாகி உள்துபோல்

வரும் காலத்தில் எல்லாமே நுண்தொழில்நுட்ப மயமாக விருக்கின்றது.

ஆர்வமுளதா என்று பரிசோதித்துப் பாருங்கள் :

Nanotechnology, sometimes shortened to nanotech, refers to a field of applied science whose theme is the control of matter on an atomic and molecular scale. Generally nanotechnology deals with structures 100 nanometers or smaller, and involves developing materials or devices within that size.

Nanotechnology is an extremely diverse and multidisciplinary field, ranging from novel extensions of conventional device physics, to completely new approaches based upon molecular self-assembly, to developing new materials with dimensions on the nanoscale, or the scale of nothing, even to speculation on whether we can directly control matter on the atomic scale.

molecular nanotechnology

Nanotechnology's Global Risk and Promises of Resilience

நல்ல உதாரணங்கள் :

NanoAntenna solar shows incredible promise!!

self-charging AA battery

Extreeme one :Bionic cyborg etc...

தமிழருக்கு தெரிந்த மிகச்சிறிய அளவு ... 1/2323824530227200000000 - தேர்த்துகள் !!

உங்கள் பயனுள்ள‌ இணைப்புகளுக்கு மிகவும் நன்றி ஜெகுமார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்களுக்கு..... " இந்த ஜந்திரங்கள் விஞ்ஞானக் கற்பனையல்ல ! "

கீழே .... உள்ள‌ சிவப்பு இணைப்பை அழுத்தவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=65273&pid=547817&st=0&#entry547817

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நுண் உயிரியல் பற்றி அறிய ...http://www.eurekascience.com

EurekaScience.com
pages contain a great deal of information about cells and cell biology for classroom and homeschool teachers, parents, and students of all ages. This page is designed to serve as a hub in all of the information to direct you to your area of specific interest...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.