Jump to content

தமிழ் எண்களும் அளவீடுகளும்


Recommended Posts

தமிழ் எண்களும் அளவீடுகளும் ...

தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை

ஏறுமுக எண்கள்

1 = ஒன்று -one

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் -?

10000000000000000000 = பரார்த்தம் —?

100000000000000000000 = பூரியம் -?

1000000000000000000000 = முக்கோடி -?

10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

இறங்குமுக எண்கள்

1 - ஒன்று

3/4 - முக்கால்

1/2 - அரை கால்

1/4 - கால்

1/5 - நாலுமா

3/16 - மூன்று வீசம்

3/20 - மூன்றுமா

1/8 - அரைக்கால்

1/10 - இருமா

1/16 - மாகாணி(வீசம்)

1/20 - ஒருமா

3/64 - முக்கால்வீசம்

3/80 - முக்காணி

1/32 - அரைவீசம்

1/40 - அரைமா

1/64 - கால் வீசம்

1/80 - காணி

3/320 - அரைக்காணி முந்திரி

1/160 - அரைக்காணி

1/320 - முந்திரி

1/102400 - கீழ்முந்திரி

1/2150400 - இம்மி

1/23654400 - மும்மி

1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001

1/1490227200 - குணம்

1/7451136000 - பந்தம்

1/44706816000 - பாகம்

1/312947712000 - விந்தம்

1/5320111104000 - நாகவிந்தம்

1/74481555456000 - சிந்தை

1/489631109120000 - கதிர்முனை

1/9585244364800000 - குரல்வளைப்படி

1/575114661888000000 - வெள்ளம்

1/57511466188800000000 - நுண்மணல்

1/2323824530227200000000 - தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

10 கோன் - 1 நுண்ணணு

10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!

8 அணு - 1 கதிர்த்துகள்

8 கதிர்த்துகள் - 1 துசும்பு

8 துசும்பு - 1 மயிர்நுணி

8 மயிர்நுணி - 1 நுண்மணல்

8 நுண்மணல் - 1 சிறுகடுகு

8 சிறுகடுகு - 1 எள்

8 எள் - 1 நெல்

8 நெல் - 1 விரல்

12 விரல் - 1 சாண்

2 சாண் - 1 முழம்

4 முழம் - 1 பாகம்

6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)

4 காதம் - 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை - 1 குன்றிமணி

2 குன்றிமணி - 1 மஞ்சாடி

2 மஞ்சாடி - 1 பணவெடை

5 பணவெடை - 1 கழஞ்சு

8 பணவெடை - 1 வராகனெடை

4 கழஞ்சு - 1 கஃசு

4 கஃசு - 1 பலம்

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி - 1 வராகனெடை

10 வராகனெடை - 1 பலம்

40 பலம் - 1 வீசை

6 வீசை - 1 தூலாம்

8 வீசை - 1 மணங்கு

20 மணங்கு - 1 பாரம்

முகத்தல் அளவு

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

பெய்தல் அளவு

300 நெல் - 1 செவிடு

5 செவிடு - 1 ஆழாக்கு

2 ஆழாக்கு - 1 உழக்கு

2 உழக்கு - 1 உரி

2 உரி - 1 படி

8 படி - 1 மரக்கால்

2 குறுணி - 1 பதக்கு

2 பதக்கு - 1 தூணி

5 மரக்கால் - 1 பறை

80 பறை - 1 கரிசை

48 96 படி - 1 கலம்

120 படி - 1 பொதி

Link to comment
Share on other sites

தமிழில் நூறு ஆயிரம் எண்டுற சொல் பாவிக்கிறவர்களா? வழமையாக ஒரு லட்சம் என்றுதானே சொல்வீனம்? இதுபோல பத்து லட்சம் என்று சொல்வீனம்.

சங்கம் எண்டுறது இவ்வளவு பெரிய இலக்கம் எண்டால்: 1000000000000000 = சங்கம் -one zillion

சங்ககாலம் எண்டுறதுக்கும் இந்த இலக்கத்துக்கும் தொடர்பு இருக்கிதோ? அப்பிடி எண்டால் ஏதோ குழப்பம் இருக்கிது.

Link to comment
Share on other sites

காலம் கடக்க முன்பு எங்கள் பாட்டன் பாட்டியிடம் கேட்க்க வேண்டிய பெரிய கேள்விகள் என்னவென்றால்:

"8 மயிர்நுண = 1 நுண்மணல் அல்லது 10^-22 " இந்த அளவு சிறிய அளவின் அவசியம் என்ன? எதை அளந்து என்ன செய்தார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

அதேபோல் "10^22 " இந்த பெரிய அளவின் அவசியமும் உபயோகமும் என்ன ...

உதாரணம்:

கிரமத்திலே ஒரு வயோதிபரிடம் கோவிலுக்கு போக வழி கேட்ட போது

அந்த வயோதிபர் "கோவிலோ ? இஞ்ச வடக்குப்பக்ம் ஒரு கூப்பிடு துலைதானே! " எனறார்

So, those who want to know how much is that "கூப்பிடு துலை" can go here

The lower limit of audibility is defined to 0 dB, (!other noise disturbance!)thats give more than 1.2Km (the logical first estimation is 5Km!)

post-6858-1255819569629_thumb.gif

Link to comment
Share on other sites

தமிழில் நூறு ஆயிரம் எண்டுற சொல் பாவிக்கிறவர்களா? வழமையாக ஒரு லட்சம் என்றுதானே சொல்வீனம்? இதுபோல பத்து லட்சம் என்று சொல்வீனம்.

சங்கம் எண்டுறது இவ்வளவு பெரிய இலக்கம் எண்டால்: 1000000000000000 = சங்கம் -one zillion

சங்ககாலம் எண்டுறதுக்கும் இந்த இலக்கத்துக்கும் தொடர்பு இருக்கிதோ? அப்பிடி எண்டால் ஏதோ குழப்பம் இருக்கிது.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில்

பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால்

ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே

இருக்கிறது. ...

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற

எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக்

குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது ...

...

இலக்கியத்தில் சங்கம், பத்மம் போன்ற மிகப்பெரும் இலக்கத்தைச்

சுட்டிக் காட்டும் வார்த்தைகள் உள்ளன. மஹாபாரதத்தில் பெரிய எண்களைக்

குறிக்கும் சொற்கள் வரிசையாக உள்ளன:

...

அயுதம் என்றால் பதினாயிரத்தைக் குறிக்கும்.

ப்ரயுதம் என்றால் பத்து லட்சத்தைக் குறிக்கும்.

சங்கு என்றால் பத்துலட்சம் கோடியைக் குறிக்கும்.

பத்மம் என்றால் நூறு கோடியைக் குறிக்கும்.

அற்புதம் என்றால் பத்துக் கோடியைக் குறிக்கும்.

கர்வம் என்றால் ஆயிரம் கோடியைக் குறிக்கும்.

சங்கம் என்றால் லட்சம் கோடியைக் குறிக்கும்.

நிகர்வம் என்றால் பதினாயிரம் கோடியைக் குறிக்கும்.

மஹாபத்மம் என்றால் நூறுலட்சம் கோடியைக் குறிக்கும்.

மத்யம் என்றால் பதினாயிரம் லட்சம் கோடியைக் குறிக்கும்.

பரார்த்தம் என்றால் லட்சம் லட்சம் கோடியைக் குறிக்கும்!

...

கார்ல் சகன் அதிசயித்த விஷயம் ஹிந்து புராணங்களில் உள்ள யுகம், கல்பம்

ஆகியவற்றை பற்றிய தீர்மானமான கருத்துக்கள் பற்றிவை! முடிவில்லாது சுழற்சி

முறையில் தோன்றி (பிரளய காலத்தில்) அழியும் பிரபஞ்சம் பற்றிய கருத்து அவரை

வியக்க வைத்தது.

...

விஞ்ஞானி கார்ல் சகன் வியந்த ...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சங்கநிதி பதுமநிதி என்பதெல்லாம் இதைப் பாரத்தவுடன்தான் விளங்குகின்றது.

அது மட்டுமல்ல

ஒற்றைக் காலடி நாலிலைபப பந்தலடி என்று கம்பன் ஒளவையாரைப் பார்த்து இகழச்சியாக விடுகதை கேட்க

எட்டே கால் (8-அ கால்-வ)லட்சணமே (அவலட்சணமே)

எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே

குலராமன் தூதனே குரங்கே ஆரையடா

சொன்னாய் நீ

என்று இறுதியில் புதிருக்கு விடையும் (ஆரை) தந்து கம்பனுக்கு பதிலடியும் கொடுத்து கணிதத்தையும் அதற்குள் புகுத்தியதை எண்ணிப் பார்க்கையில் தமிழின் சிறப்பு வியக்க வைக்கிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உங்கள் பஃகிர்விற்கும் விளக்கத்திற்கும் மிகவும் நன்றி! புலவரே ...

...

சோழர் காலத்தில் விரல் கணக்கு,
,
கௌவெள்ளி பலகை என்ற இராப்பலகை
,
டப்புப் பலகை
ஆகியவையும் ஓரளவிற்குப் பயன்படுத்தப் பட்டன. இவற்றால் அறிந்த அளவுகள் தற்கால நுண் கருவிகளின் அளவுகளை ஒத்திருந்தன.

நாழிகை வட்டில்
:
ஒரு கடாரத்திலே
நீரை நிரப்பி, அடியிற் சிறு தொளையுள்ள
ஒரு வட்டிலை
இட்டாற் கடாரத்து நீர் அப் புழைவழியே வட்டிலினுள் ஊறும்; அங்ஙனம் ஊறும் நீரினளவுக்குத் தக நாழிகை கணக்கிடுவர்.

-

இந்தக் கருவிகளின் படங்கள் உண்டா?

செயுள்களிலும் கவிதைகளிலும் இருந்து அவற்றை மீண்டும் வரையறுக்க முடியுமா?

இப்படிப் பழமையான தமிழரின் அனறாட வாழ்ககை நுட்பங்களை எடுத்துக்காட்டும் கருவிகள், ஆயுதங்கள், உபகரணங்கள் எல்லாவற்றையும் மீண்டும் படமாக வரைய முடியுமா?

...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.