Jump to content

எதற்காக எங்கள் பெண்கள் கணவரை அப்பா என்று அழைக்கிறார்கள்!!!!


Recommended Posts

எதற்காக எங்கள் பெண்கள் கணவரை அப்பா என்று அழைக்கிறார்கள்!!!!

திருமணமான பின் எங்கள் பெண்கள் கணவனை அப்பா என்று அழைப்பதன் அர்த்தம் தான் என்னவோ?

காதலிக்கும் போது டாலிங் சுவிற்றி மை காட் அது இது எண்டு அழைப்பவர்கள் பின் ஏன் அதை மாற்றுகிறார்கள்

வெள்ளைக்காரர்களும் இதை கேட்கிறார்கள்............

அதாவது உன் மனைவி எதற்காக உன்னை அப்பா என்று அழைக்கிறாள் என்று!!!!!

உங்கள் வீட்டில் உங்கள் மனைவி உங்களை எப்படி அழைப்பாள்? அப்படி அப்பா என்று அழைப்பது முறையா?

என்ர மனிசி என்னை அப்பா என்று அழைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது!!!!

உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

நான் நினைக்கின்றேன்... தம் கணவர் பெயரை சொல்லிக்கூப்பிட்டால் தம் குழந்தையும் அப்படியே தகப்பனை பெயர் சொல்லிக்கூப்பிடும் என்று தான் அப்பா என்று சில தாய்மார் தம் கணவரை கூப்பிடுகின்றார்கள்.

நான் என் கணவரை அப்பா என்று கூப்பிடுவதில்லை...பெயர் சொல்லித்தான் கூப்பிடுகின்றேன் :lol:

யாராவது தம் கணவரை அப்பா என்று கூப்பிடுபவர்கள் வந்து விளக்கம் தந்தால் நன்று.. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரில் பெண்கள் தங்கள் கணவரை பெயர் சொல்லி அழைப்பது மிக குறைவு. அதுவும் அனேகமாக அடுத்தவர் முன்னிலையில் அழைக்க தயங்குவார்கள். அம்மா எப்படி அப்பா என்று கூப்பிடுகிராரோ அதைப்பார்த்து குழந்தை அப்பா என்று கூப்பிட பழகிக்கொள்ளும். அடுத்தவர் முன்னால் அழைக்கவும் வசதி. குழந்தைக்கும் பழக்கிக் கொள்ளலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

Link to comment
Share on other sites

என் பெற்றோர் இவ்வாறுதான் ஒருவரையொருவர் அப்பா / அம்மா எனஅழைத்துக் கொண்டனர். ஏன் எனக் கேட்டதுக்கு, எப்படி ஒருவர் பெயரை மரியாதையில்லாமல் கூப்பிடுவது என்று கேட்டிச்சினம். அத்துடன் பிள்ளைகளும் அப்படிச் கூப்பிடுவதனால் தாமும் கூப்பிட பழகிக்கொண்டனர் என்று அப்பாவிப் பிள்ளைகளான எம் மீதும் ஒரு சாட்டு சொல்லிச்சினம்

இப்போது என் வீட்டில் நானும் மனைவியும், ஒருவரை ஒருவர் பெயர் சொல்லித் தான் அழைப்போம். மனிசி என் சொந்த பெயரின் முன் 'டேய்' என்று போடாதவரைக்கும் மிக சந்தோசம்.

தமிழ்மாறன், நீங்கள் சொல்லும் அடைமொழிகளிலும் எம் வீட்டில் ஒருவரை ஒருவர் கூப்பிடும் தருணங்கள் உண்டு. ஆனால் அவை எப்போது என்று சொல்ல மாட்டேனே...... :lol:

Link to comment
Share on other sites

ம்ம்ம். சில தம்பதிகள்.. என்ன சொல்லுங்கோ... என்னங்கோ...ஞ்சாருங்கோ... எண்டும் கூப்பிடுவினம்..

அதுக்கு முதலில் எனக்கு விளக்கம்.. சொலுஙகவன் யாராவது..

என்னோட அம்மாவை கேட்டால். நான் குழந்தை . எனக்கு விளங்காது எண்டு சொல்லுறார்கள்..அதுதான்

கேக்கிறன்

இங்கே உள்ளவர்களிடம்.. :lol:

Link to comment
Share on other sites

பக்கத்தி வீட்டுக்காரி புருசனை கொத்திக்கொண்டு போகாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு புருசன் பக்கத்துவீட்டுக்காரியோட ஓடிப்போகாமல் இருக்கிறதுக்கு அப்பிடி அப்பா எண்டு கூப்பிடலாம். ஒவ்வொருக்காவும் அப்பா அப்பா எண்டு ஆளைகூப்பிட மச்சானுக்கு பக்கத்துவீட்டுக்காரி ஞாபகம் வந்து காற்சட்டை வீங்கையுக்க தன்ர வயசு, பொறுப்புக்கள், பிள்ளைகுட்டிகள் எல்லாம் நினைவுக்கு வர தன்னிலை இழக்காமல் கொஞ்சம் அம்ச அடக்கமாய் இருப்பார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பவும் அப்படி கூப்பிடடிகினமா :lol: இப்ப உதாரனத்துக்கு

என்னப்பா போவமா என்பதுக்கும் அப்பா போவமா என்பதுக்கும் வித்தியா

சம் இருக்கு.முதலாவது அப்பா இரு பாலுக்கும் பொருந்தும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை தனது தந்தையை அழைக்கும் அப்பாவுக்கும் ,

மனைவி கணவனை அழைக்கும் அப்பாவுக்கும் சரியான வித்தியாசம்.

மனைவி அழைக்கும் அப்பா என்பதற்குள் கன சொற்கள் அடங்கியிருக்கின்றது .

அவை ; டார்லிங் , செல்லம் , என்ரை ராசா , அன்பே , லூஸ்மனுசன் என்று அந்தந்த சந்தர்ப்பத்தில் ....... அழைக்கும் தொனியை வைத்து அதன் பொருள் மாறுபடும்.

அதனை அவதானமாக கற்றுக்கொள்ள நாம் தான் பழகிக்கொள்ள வேண்டும். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாரும் கேட்டுதேப்பா ஒரு தேத்தண்ணி போட்டுத்தாருமன்.

நானப்பா இஞ்சை புட்டுக்கு மா குழைச்சுக்கொண்டு நிக்கிறன்.

தண்ணி சூடாய்த்தான் கிடக்கு நீங்களே வந்து போட்டிக்குடியுங்கோவனப்பா

என்னப்பா மா குழைக்க கஸ்டமெண்டால் என்னட்டை சொல்லுறதுதானே.

இல்லையப்பா நீங்கள் வேலைக்கு போட்டு வந்து மாவும் குழைக்கிறதெண்டால்.....அதுதான்

சரிசரி நான் குழைக்கிறனப்பா

இல்லை விடுங்கோப்பா நான் குழைக்கிறன்

தொடரும்.......

---------------------------------------------------------------------

இதற்கு ஆதரவு வழங்கியவர்கள் சின்னப்பு&சாத்திரி சவுக்கார கொம்பனியினர்.

Link to comment
Share on other sites

'அப்பா' என அழைப்பது தனியே எதிர்ப்பாலாரிடம் மட்டுமன்றி பொதுவான பயன்பாட்டிலிருக்கிறது. அது நண்பர்களிடத்திற்கூட மிகச் சாதாரணமாக பயன்படுத்தப்படும் சொல்.

'என்னப்பா சொல்லிறீர்?' என்றால் அது இரு நண்பர்கள் தமக்குட் பேசிக்கொள்ளும் இயல்பான சொல்லாடலாகவும் இருக்கலாம், கணவன் - மனைவி, காதலன் - காதலி பரிமாறும் சொல்லாடலாகவும் இருக்கலாம்.

'இஞ்சையப்பா' என்பதுகூட தனியே பெண் ஆணை அழைக்கும் முறையென்று சொல்லிவிட முடியாது. ஆண் பெண்ணை அழைக்கும் முறையும் அதுதான்.

பெண் ஆணையழைக்கும் முறைக்கு மட்டும் பொருந்துவது 'இஞ்சருங்கோ' தான்.

Link to comment
Share on other sites

என்னப்பா இதையெல்லாம் யாழிலை போடுறீங்கள். எப்படியென்றாலும் கூப்பிடலாம் எங்கட வசதிப்படி. நான் இரண்டு, மூன்று தரம் அப்பாயென்று கூப்பிடுவன், பதில் சொல்லாட்டி பெயர் சொல்லி ஒருக்கா கூப்பிட்டவுடன் உடன பதில் வரும். அதற்கும் வராவிட்டால், எப்படி கூப்பிடலாம் என்று நீங்களே தீர்மானிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஏனடாப்பா, சொந்த மகனை தாயும் தகப்பனும் "மகனே" என்று அழைக்காமல் "தம்பி" எண்டு கூப்பிடுறதில்லையோ? அது போலத்தான் இதுவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வேற பிரச்சனையாகிட்டுதா..!

நான் நினைக்கிறேன் குழந்தைகளை மையமாக வைத்தே அப்பா என்று அழைக்கிறார்கள்... என்று..!

ஆனால் அவர்கள் அழைக்கும் அப்பாவிற்கும்.. குழந்தை அழைக்கும் அப்பாவிற்கும் பதப் பிரயோகம் ஒன்றாக இருப்பினும் பரிமானம் வேறுபட்டது என்றும் நினைக்கிறேன்.

சிலர் சிலரை கள்ளி கள்ளன் என்று அழைப்பார்கள்..! அது கள்ளி கள்ளன் என்ற பதத்தில் இருந்தாலும் பரிமானம் வேறுபட்டதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதில் எல்லாம் என்னால் கற்பனையில் தான் பதில் சொல்ல முடியும். ஏனெனில் எனக்கு இதில் நேரடி அனுபவமில்லை. எங்கள் வீட்டில் அம்மா.. அப்பாவை.. இஞ்சாருங்கோ என்று தான் அழைப்பா. அப்பா அம்மாவை பிள்ளைகள் அழைப்பது போல அம்மா என்று அழைப்பார்..! இருவருக்கும் அடுத்தவர் பெயரை தம்முன் உச்சரிப்பதில் ஏதோ பாசக்குறைவு என்று உணர்கிறார்கள் போல..!

இப்படி அழைப்பது குழந்தைகளைப் பொறுத்தவரை.. அப்பா அம்மா உச்சரிப்பதில் மட்டுமல்ல.. அப்பா அம்மாவும் மிக நெருக்கமாக அன்பாக இருக்கிறாங்க என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். நான் சின்னனாக இருந்த போது இதை உணர்ந்திருக்கிறேன். அந்த வகையில் குறிப்பிடுகின்றேன். அப்பா அம்மாவை அன்பாக அழைக்கும் தருணங்களை என்னால் இப்பவும் நினைவு கூற முடிகிறது..!

பெயர் சொல்லி அழைக்கும் போது அதில்.. இந்த வேறுபாட்டை உணர்வது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..! :lol:

Link to comment
Share on other sites

பக்கத்தி வீட்டுக்காரி புருசனை கொத்திக்கொண்டு போகாமல் இருக்கிறதுக்கு இல்லாட்டிக்கு புருசன் பக்கத்துவீட்டுக்காரியோட ஓடிப்போகாமல் இருக்கிறதுக்கு அப்பிடி அப்பா எண்டு கூப்பிடலாம். ஒவ்வொருக்காவும் அப்பா அப்பா எண்டு ஆளைகூப்பிட மச்சானுக்கு பக்கத்துவீட்டுக்காரி ஞாபகம் வந்து காற்சட்டை வீங்கையுக்க தன்ர வயசுஇ பொறுப்புக்கள்இ பிள்ளைகுட்டிகள் எல்லாம் நினைவுக்கு வர தன்னிலை இழக்காமல் கொஞ்சம் அம்ச அடக்கமாய் இருப்பார்

மாப்பிள்ளை உங்கட சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி

என்ன நெடுஸ் தனி ராஜாவாய் அந்த மாதிரி வாழ்க்கையை அனுபவிக்கிறியள் போல!!!!!!

பிள்ளை தனது தந்தையை அழைக்கும் அப்பாவுக்கும் இ

மனைவி கணவனை அழைக்கும் அப்பாவுக்கும் சரியான வித்தியாசம்.

மனைவி அழைக்கும் அப்பா என்பதற்குள் கன சொற்கள் அடங்கியிருக்கின்றது .

அவை ; டார்லிங் இ செல்லம் இ என்ரை ராசா இ அன்பே இ லூஸ்மனுசன் என்று அந்தந்த சந்தர்ப்பத்தில் ....... அழைக்கும் தொனியை வைத்து அதன் பொருள் மாறுபடும்.

அதனை அவதானமாக கற்றுக்கொள்ள நாம் தான் பழகிக்கொள்ள வேண்டும்.

சிறி உங்கட நிலமையை நினைத்தால் பாவமாக உள்ளது..............

அடிக்கடி லூ சு மனிசன் எண்ட வார்த்தையை பயன்படுத்திறியள்...........என்ன வீட்டில அவா இப்புடித்தான் அன்பாய் கூப்புடுவாவோ!!!!!!!

Link to comment
Share on other sites

இஞ்சாரும் கேட்டுதேப்பா ஒரு தேத்தண்ணி போட்டுத்தாருமன்.

நானப்பா இஞ்சை புட்டுக்கு மா குழைச்சுக்கொண்டு நிக்கிறன்.

தண்ணி சூடாய்த்தான் கிடக்கு நீங்களே வந்து போட்டிக்குடியுங்கோவனப்பா

என்னப்பா மா குழைக்க கஸ்டமெண்டால் என்னட்டை சொல்லுறதுதானே.

இல்லையப்பா நீங்கள் வேலைக்கு போட்டு வந்து மாவும் குழைக்கிறதெண்டால்.....அதுதான்

சரிசரி நான் குழைக்கிறனப்பா

இல்லை விடுங்கோப்பா நான் குழைக்கிறன்

தொடரும்.......

---------------------------------------------------------------------

இதற்கு ஆதரவு வழங்கியவர்கள் சின்னப்பு&சாத்திரி சவுக்கார கொம்பனியினர்.

கு சா வீட்டில் இன்னும் மா குழைக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் வேறு எதோ குழைக்கப்பட்டதாகவும் ஊர்ஜிதம்

செய்யப்பட்ட தகவல்!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை உங்கட சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி

சொந்த அனுபவம் இல்ல, பார்த்து கேட்டு தெரிஞ்ச அனுபவங்கள். :lol:

Link to comment
Share on other sites

ஏன்டா அம்மாவும் அப்பாவ அப்பா எண்டுதான் கூபிடுவா. அப்பா அம்மாவ அம்மா எண்டு கூபிடுவார், சிலவேளையில பெயர் சொல்லியும் கூபிடுவார். நான் என்கட ஊரில கவனிச்சது, பொதுவா பொம்பிளையள் புருசன அப்பா இல்லடி இஞ்சருங்கோ எண்டு கூபிடுவினம். ஆக்களுக்கு முன்னுக்கு மகன் இல்லாட்டி மகளின்ட பெயர சொல்லி அவரிண்ட அப்பா எண்டுவீனம் :lol: .

எண்ணப் பொருத்தவரைக்கும் அம்மா அப்பாவ அப்பா எண்டு கூபிடுறதில பாசம் மரியாதை எல்லாம் இருக்கும் :) . இருந்திட்டு எப்பவாவது குஞ்சு எண்டு கூபிடுவா, எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கும் :wub: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்க்காக அழைப்பார்கள் அவர்களுடைய கண் கண்ட தெய்வத்திற்கு மரியாதை கொடுக்கதான்

[கணவனே கண் கண்ட தெய்வம்]

அதுவே மனுசன் கொஞ்சம் தண்ணியை போட்டு கொண்டு தள்ளாடி வந்து தனது வீட்டு வாசலில் நின்று மகளிடம் புள்ளேய் கொம்மையை கூப்பிடு என்று சொல்லும் போது பத்திரகாளிகளாக மாறி சொல்லும் வார்த்தை இருக்கே யெப்பா [நெடுக்ஸ் நாமெல்லாம் எவ்வள்வே மேல்] பாவம் அப்பாக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.