Jump to content

பேராண்மை திரைப்படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

:D இது ஒரு குப்பைத் திரைப்படம். முழுக்க முழுக்க இந்திய போலித் தேசியத்தைக் கட்டிக் காப்பதற்காக எடுக்கப்பட்ட அருவருக்கும் கதை. காட்டுவாசி வன அதிகாரியும் அவரது 4 பெண் மாணவிகளுமாக காட்டுக்குள் பயிற்சிக்குப் போகிறார்களாம். அங்கே, "உலகின் மிகப்பெரிய வல்லர்சாகப்போகும் இந்தியா" ஏவ இருக்கும் செய்மதியைஅழிக்க காட்டிற்குள் மறைவாக வந்து இறங்கியிருக்கும் பல்தேசியக் கொமாண்டோப் படையை வெறும் ஈட்டியாலும், அம்பாலும் அழித்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார்களாம். இந்த அநியாயத்தை எங்கு போய்ச் சொல்வது??

பல்தேசியப் படையை விடுங்கள், சீனா அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தப் பரதேசி நாய்களை ஓட ஓட அடித்து விரட்டி வருகிறான். அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஒளித்து ஒளித்து ஓடி, தனது எல்லையை வேகம் வேகமாக பின்னகர்த்தி வரும் இந்தக் கோழைகளுக்கு கற்பனை நன்றாகத்தான் போகிறது. சீ....இவர்களும் இவர்களின் போலித் தேசியமும். அழிந்து போகட்டும்.!!!!!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"நான் எடுக்கிற சினிமாவை ஒரு பத்துப் பேர் பார்த்தால் போதும் என்பதற்காக நான் சினிமா எடுக்க வரவில்லை. என்னுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு படத்தை எடுத்தால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ...."

நான் எந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டேனோ அதைத்தான் பேராண்மையில் சொல்லியிருக்கிறேன்

பேராண்மை

பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவை கற்று, சீரியஸான கருத்துகளை தம்முடைய படங்களில் சொல்லி வெகுஜன சினிமாவில் வெற்றிப் பெற்றவர். வெற்றிக்குப் பின்னால் எல்லோரும் செல்வார்கள் என்ற பேச்சுகள் இருந்தாலும் வெற்றியின் சூத்திரமும், சினிமா பற்றிய அறிதல்களும் இன்றும் மர்மங்களாகவே உள்ளன. இதைப் போல் பல சந்தேகங்களுடனும், கேள்விகளுடனும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனை புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். அந்த சந்திப்பில் நடந்த நேர்காணலின் சில பகுதிகள்......

- முத்தையா வெள்ளையன்

கே: பேராண்மை படம் வந்த உடன் யார் இந்த ஜனநாதன் என்று பல பரிமாணங்களுடன் எல்லாரும் பேசிக் கொண்டனர். இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

என்னுடைய அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் எழுத படிக்கத் தெரியாது. ஆனால் அப்பா சென்னையிலேதான் இருந்தார். அம்மாவை கிராமத்திலிருந்து திருமணம் செய்து அழைத்துக்கொண்டு வந்தார். எங்கப்பா கல்யாணம் செய்து கொள்வதற்கு ஊருக்குப் பொண்ணுப் பார்க்கப் போகிறபோது, அங்கு உறவு முறையில் மூன்று பெண்கள் இருந்தார்களாம். அப்போது யாரைத் திருமணம் செய்து கொள்வது என்கிற பிரச்சனை வரும்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுங்கள் என்று எங்கப்பா சொல்லியிருக்கிறார். அந்த சீட்ல எங்கம்மா பேரு இருந்ததால், கல்யாணம் பண்ணிக்கொண்டார். இந்தத் தகவல் எனக்கு போன மாதம்தான் தெரியும். ஒருநாள் நானும் என் தங்கை லெட்சுமியும் பேசிக் கொண்டிருக்கும்போது இந்தத் திடுக்கிடும் செய்தியைச் சொன்னார். நான் எடுத்த இயற்கை படத்திற்கு முன்பே எங்கம்மா இறந்துவிட்டார். ஆனால் இயற்கை படத்தில் இதே மாதிரி சீட்டுக்குலுக்கி பார்த்து பெண்ணை திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சியும் வந்திருக்கிறது.

அடுத்ததாக கல்யாணத்திற்கு பத்திரிகை அடிக்கும் போதுதான் எங்கம்மாவுக்குப் பெயரே இல்லை என்று தெரிந்தது. பொதுவாக, பள்ளிக்கூடத்துக்குப் போனாதான் பெயர் வைப்பார்கள். அதனால் வெள்ளையாக இருக்கிறவங்களை வெள்ளச்சி, குட்டையா இருக்கிறவங்களை குட்டச்சி, கருப்பா இருக்கிறவங்களை கருப்பி என்றுதான் கூப்பிடுவார்கள். இன்றைக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கிறது. ஊரிலிருந்து வருகிறவர்கள் எங்கம்மாவை குட்டச்சின்னுதான் கூப்பிடுவார்கள். வாய்க்கு வந்தப் பேரோடுதான் எங்கம்மா வளர்ந்திருக்கிறார். ஆனால் எங்க அம்மா உயரமாக இருப்பார். கல்யாணத்துக்காக பார்வதி அம்மாள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

எனக்கு கூடப்பிறந்தவங்க ஏழு பேர். அதில் ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள். நான்தான் கடைசி. என்னோட தங்கை பிறந்த இரண்டு வருடத்தில் எங்கப்பா இறந்து விட்டார். அப்போது சென்னை மயிலாப்பூர் பஜார் ரோட்டில் பட்டாணிக்கடை எங்களுக்கு இருந்தது. அதற்கு ஆழ்வார் பேட்டையில் இருந்து சரக்கை எடுத்து கொண்டு வரவேண்டும். எங்க குடும்பத்தில் அப்பா என்ற நினைவே இல்லாமதான் வளர்ந்தோம். எங்கம்மா ஏழு பேரையும் வளர்த்து விட்டார்கள். ஆனால் முறைப்படி படிப்புக்கு ஏற்பாடெல்லாம் செய்ய முடியவில்லை. ஏனெனில் தினமும் கடையைப் பார்த்துக்கொள்ள வேண்டும், பட்டாணி வாங்கணும், அதை வறுக்கணும், பிள்ளைகளை பார்த்துக்கணும் என்று இந்த வேலைகளைப் பார்ப்பதற்கே அவங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இன்னொன்று குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்ததும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டால் தொந்தரவு இல்லாமல் கடை வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தார்.

என்னோட அண்ணன்கள் படித்தது எல்லாம் 4-வது, 6-வது, 7-வது தான். எங்க குடும்பத்தில் அதிகமாக படித்தது நான்தான். என்னுடைய படிப்பு பி.யூ.சி. வரைக்கும்தான். நான் பி.யூ.சி. படிக்கும்போது ஒரே பரபரப்பாக இருக்கும். ஏனெனில் எங்க அண்ணனின் நண்பர்களெல்லாம் 4-வது, 5-வது படித்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அதைப்பற்றி யோசித்துப் பாத்தால் சிரிப்புதான் வருகிறது. இந்தச் சூழல்தான் நகரத்தின் கடைசிக்கட்டம். இன்னமும் சென்னை இப்படித்தான் இருக்கிறது. இந்த வாழ்க்கை திரைப்படங்களில் சரியாகப் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன்.

கே: உங்களுக்கு அரசியல் எப்படி அறிமுகமானது?

எங்க அண்ணன் தி.மு.க. அதனால் எனக்கு தி.மு.க. வட்டாரம் பழக்கமானது. என்னுடைய அண்ணனுக்காக எங்கம்மாவுக்கும் தி.மு.க. மேல் ஓர் ஆதரவு இருந்தது. எங்க வீட்டில் நாங்கள் சாமிக் கும்பிட்டதே கிடையாது. அமாவாசை, கிருத்திகை, வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் எல்லாம் எங்களுக்குக் கிடையாது. எல்லா நாட்களும் நாங்கள் கறி சாப்பிட்டு இருக்கிறோம். ஏனெனில் என்னுடைய அண்ணன் மார்க்கெட்டில் மீன் வெட்டிக்கொண்டு இருந்தார். அப்போது வெள்ளிக்கிழமை, புரட்டாசி மாதம் போன்ற விரத நாட்களில் விற்காமல் போன மீதம் இருக்கும் மீன், ஆடு, கோழி, கறி வகைகள் எல்லாம் எங்க வீட்டிற்கு வந்து விடும்.

நான் 6-வது, 7-வது படிக்கும்போது தினமும் எங்க வீட்டிற்கு முரசொலி பத்திரிகை வரும். அப்போது எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்ற ரிக்ஷா ஓட்டுகிறவங்க, கைவண்டி இழுக்குறவங்க, தச்சுவேலை செய்யுறவங்க எல்லாரும் முரசொலி பேப்பரோடு கூடுவாங்க. அந்தப் பேப்பரைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். இன்றைக்கு அதை யோசித்துப் பார்த்தால் அப்போது எனக்குப் படிக்கத் தெரிந்திருக்கிறது; ஆனால் பேப்பரில் என்ன விஷயம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்களுக்குப் படிக்கத் தெரியவில்லை; ஆனால் பேப்பரில் என்ன விஷயம் இருக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தது. நான் படித்துக்கொண்டு இருக்கும்போதே அதை இடை மறித்து விவாதத்தில் ஈடுபடுவார்கள். இப்படிப் போய்க்கொண்டு இருக்கும்போதுதான் எனக்கு அரசியல் அறிமுகமானது. இதன் ஊடாக பெரியாரைப் பற்றி படித்தப்போது பெரியார் இன்னும் ஆழமாக சொல்கிறார் என்று புரிந்தது. எங்கம்மா கடையெல்லாம் முடித்துவிட்டு இரவு வந்தால் அவங்களுக்கும் முரசொலி படித்துக்காட்ட வேண்டும். இதுதான் எனக்குத் தெரிந்த முதல் அரசியல். அதுவும் தி.மு.க. அரசியலாகத்தான் இருந்தது.

அப்போது எங்க தெருவிற்கு பக்கத்தில் இருக்கின்ற சில தோழர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது 1க்கு 16சைஸில் Youths Views என்று ஒரு பத்திரிகை வந்தது. அந்தப் பத்திரிகையில் சங்கராச்சாரி யார் என்ற ஒரு கட்டுரை இருந்தது. சில தோழர்கள் மூலமாக எனக்குக் கிடைத்தது. அடிப்படையில் நான் பெரியாரிஸ்டாக இருந்ததால் அந்தப் புத்தகத்தை உடனேப் படித்தேன். பிறகு அவர்களை சந்தித்தபோது இடதுசாரி சிந்தனைகள் உள்ளவர்களாக சங்கர், டி.எஸ்.எஸ். மணி, பாஸ்கர் ராய், பழனி, நாகராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் பேசுவது இதுவரை எனக்குத் தெரிந்த அரசியலை விட வேறுமாதிரியான அரசியலாகவும், ஆழமாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் இருந்தது. முறைப்படியான படிப்பு என்ற சிந்தனையே இல்லாமல் இவர்களோடு விவாதிப்பது, கூட்டங்களுக்கு செல்வது என்று வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் இலங்கையில் குட்டிமணி, தங்கதுரை கொலை தமிழகத்தையே உலுக்கியது. அதுவும் என்னை மிகவும் பாதித்தது. அப்போது Youths Views என்ற பத்திரிகையின் ஆசிரியர் பாவெல். அவரிடம் தமிழ் ஈழத்துக்காக ஓர் இதழ் கொண்டு வரவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தேன். அவர்களும் நாங்களும் அதை யோசித்துக்கொண்டுதான் இருந்தோம் என்றார்கள். அதுவரைக்கும்1க்கு 16 சைஸில் வந்துகொண்டு இருந்த பத்திரிகையை 1க்கு 4 சைஸில் பெரிதாக கொண்டு வரவேண்டும் என்று அந்தப் பத்திரிகை ஆசிரியர் பாவெல் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தார்.

அந்த இதழில் என்னையும் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். என்னுடைய முதல் கட்டுரையும் அந்த இதழில்தான் பிரசுரம் ஆனது. அந்த இதழை சைக்கிளில் கொண்டுபோய் விற்றபோது ஈழத்திற்காக இருந்த எழுச்சியை உணரக்கூடியதாக இருந்தது. அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். குட்டிமணி, தங்கதுரை போன்றவர்களுடைய கோரிக்கையும் தமிழ் ஈழம்தான். ஆனால் என்னைச் சுற்றி சிலோன் பேக்கரி, சிங்கப்பூர் ஒயின்ஸ், மலேசியா வாட்ச் ரிப்பேர் கடை என்ற பெயர் கொண்ட கடைகள் இருந்தன. அதனால் என் வீட்டின் ஒரு பகுதியை இடித்து, தமிழ் ஈழம் தேநீர் விடுதி என்று பெயர் வைத்து டீ போட்டு விற்றேன். தமிழ் ஈழம் என்பதை முதன் முதலில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. இது அரசு ஆவண காப்பகங்களில் இருக்கிறது. ஏனெனில், டீக்கடையை பதிவு செய்து, லைசென்ஸ் வாங்கும்போது கடைக்கு பெயர் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் பதிவு செய்யப்பட்டது.

இந்த நேரத்தில் இடதுசாரி தோழர்களின் அறிமுகம், அவர்கள் கொடுத்த புத்தகங்கள், நானாக தேடி வாசித்த புத்தகங்கள் என்று இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி நான் பயணம் செய்தேன். நான் இடதுசாரி ஆதரவாளனாக மாறினேன்.

இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்த நீங்கள் சினிமா சரியாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்ததற்கான காரணம்?

என்னிடம் ஏதோ ஒரு கலைத்தன்மை இருக்கிறதாக தோழர் பாவெல் நினைத்துக்கொண்டு இருந்தார். இந்தக் கலையில் நான் சரியாக செயல்படுவேன் என்று அவர் நம்பினார். இன்று வரைக்கும் நான் ஒரு சிறந்த, நுட்பமான கலைஞனாக உணரவில்லை. என்னிடம் கலைத்தன்மை குறைவாக இருக்கிறது என்பதை உணர்ந்து என்னுடைய உதவியாளர் ரோகாந்த் உடன் அடிக்கடி உரையாடவும் செய்கிறேன். பாவெல் என்னிடம் இருக்கும் திறமையைக் கண்டுபிடித்து சினிமாத்துறைக்கு போவது நல்லது என்று சொல்லி ஒரு சுலபமான வழியையும் கண்டுபிடித்தார். அதுவரைக்கும் கூட நான் சினிமாவுக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை.

அப்போது தமிழ்மணி தயாரித்த மலையூர் மம்முட்டியான் படம் வெளிவந்தது. பாவெல் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொல்லி தமிழ்மணி உனக்கு உறவினர், அவரைப் போய் பார் என்று சொன்னார். ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பில் நீ சினிமாவிற்குப் போ என்று என்னை உசுப்பேற்றாமல், சரியான நடைமுறை சாத்தியங்களோடு ஆலோசனையும் கூறினார். சில சமயம் நமக்கு வாழ்க்கையில் சரியான ஆலோசகர்களும் தேவைப்படுகிறார்கள்.

அடுத்ததாக தமிழ்மணி தயாரித்த சோலைக்குயில் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன். அப்போது எதையும் சரியாக படிக்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இந்த விஷயம் இன்றைக்கு இருக்கின்ற இளைஞர்களுக்கும் தேவை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நான் இதை உணர்ந்ததால் சொல்கிறேன். நான் உதவி இயக்குனராக சேர்ந்தபோதே அதன் உள்ளே விழுந்துவிட்டேன். என்னுடைய முதல் படத்திலேயே நெகட்டிவ் என்றால் என்ன? பாசிட்டிவ் என்றால் என்ன? டெவலப்பிங் எப்படி இருக்கும் என்கின்ற விஷயங்கள் எல்லாம் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற உதவி இயக்குனர்கள் எல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் காட்ட வேண்டும். இவர்கள் காட்சி அமைப்பு, படப்பிடிப்பு, நடிப்பு, வசனங்கள் என்று அதற்கு மேல் போகாமல் நின்றுவிடுகிறார்கள்.

நான் கேமிரா மற்றும் அதன் வகைகள், லென்சுகளுடைய வேலை, நெகட்டிவின் வகைகள் மற்றும் எக்ஸ்போஸிங் முறைகள், டெவலப்பிங், புதுப்புது லைட்டிங் போன்றவற்றை இதை கையாளுகிறவர்களிடம் இன்றைக்கும் பேசிக்

கொண்டு இருக்கிறேன்.

ஏதோ ஒரு கருத்துச் சொன்னால் போர் அடிக்கும். தோல்வி அடைந்துவிடும் என்கிற எண்ணத்தைப் பேராண்மை படம் உடைத்திருக்கிறது என்றால் இந்த மாதிரி சினிமா தொழில்நுட்பத்தைக் கையாண்டதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

கே: நீங்கள் சினிமாவில் உதவி இயக்குனராக நுழைந்தபோது உங்களுடைய இருப்பை சினிமாவில் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்ததா?

சினிமாவுக்குள் நுழைந்ததும் எனக்கு மிகுந்த ஆர்வமாக இருந்தது. இரவு, பகல் பார்க்காமல் வேலை செய்தேன். லேபை சுற்றிச் சுற்றி வருவேன். அங்கேயே தூங்குவேன். நான் சினிமாவுக்கு கிளாமருக்காவோ, கிரேஸ்காகவோ வரவில்லை. ஆனால் சினிமா என்னை ஈர்த்தது. சோலைக்குயில் படம் முடிந்தபோது ஒரு சிறந்த உதவி இயக்குனராக நான் அடையாளப்படுத்தப் பட்டேன்.

இந்தப் படத்தின் பைனான்சியர் ஏ. கோதண்டராமன். இவரை எல்லாரும் கே.ஆர். என்றுதான் கூப்பிடுவார்கள். இவரும் அந்தப் படத்தின் இயக்குனரும், கேமிராமேன் நம்பியாத்திரி, இயக்குநர் ராஜன் ஆகியோர் பிலிம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள். அடுத்தப் படத்தை கே.ஆர். தயாரித்து டைரக்ட் செய்தார். அவருக்கு சிறந்த உதவி இயக்குனர் தேவைப்பட்டது. கே.ஆரும் அந்தக் கேமிராமேனும் என்னை விரும்பினார்கள். அதனால் ஈரமான ரோஜா என்னுடைய இரண்டாவது படமாக அமைந்தது. மேலும் கடுமையாக வேலை செய்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். உழைப்பும், கற்றலும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றாக இருந்தால் கற்றுக் கொள்வது சுலபம்.

ஈரமான ரோஜா படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தினோம். இந்தியாவில் முதன் முதலாக உதவி இயக்குனர் ஒருவர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தியதும் இந்தப் படத்தில்தான். இந்தப் படத்தின் எடிட்டர் லெனின். அவர் இருப்பிடம் சினிமாவில் உள்ள பல ஜாம்பவான்கள் சந்திக்கிற இடமாக இருந்தது. லெனின் சாருடைய எடிட்டிங் ரூம் எனக்கு மிகப் பெரிய பட்டறையாக இருந்தது. பல சினிமா வரலாறுகளை கேட்பதற்கும், பல பிரமுகர்களை சந்திப்பதற்கும், பல தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கும் அந்தப் பட்டறை எனக்கு வாய்ப்புக் கொடுத்தது.

கே: சினிமாவில் எடிட்டரின் பாத்திரம் மிக முக்கியமானதுதானே?

சினிமா என்பது பெரிய கடல். அதில் நீச்சல் அடிக்க முடியாது என்கிற மனநிலையில்தான் சோலைக்குயில் படத்துக்குள் சென்றேன். இதில் ஒரு காட்சியை டூ ஷாட், கட் ஷாட், குளோசப் ஷாட் என்று பிரித்து எடுத்தார்கள். இப்படி அந்தப் படத்தின் சூட்டிங் முடிந்ததும் சினிமா என்பது இவ்வளவுதான், பெரிதாக ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். அடுத்து ஈரமான ரோஜாவில் வேலை செய்யும்போது ஒரு படத்தை எடுப்பது, மக்களைப் பார்க்க வைப்பது என்று எல்லா விஷயங்களிலும் நுழைய வேண்டி இருந்தது. ஈரமான ரோஜா படம் முடிந்த போது சினிமா மீண்டும் எனக்குக் கடலாகி விட்டது. சினிமாவுக்குள் நுழைந்ததற்குப் பிறகுதான் சினிமா எடுப்பது கடலாகத் தோன்றி, குளமாக மாறி, அதற்குப் பிறகு மீண்டும் கடலாக மாறியதை உணர்ந்தேன். இன்றைக்கு வரைக்கும் எனக்கு சினிமா ஒரு மாபெரும் கடலாகவே இருக்கிறது. அந்தக் கடலில் ஏதோ ஒரு பகுதியை சரியான நீச்சல் தெரிந்தால் மட்டுமே கடக்க முடியும்.

நான் இன்னும் முழுமையான படம் எடுக்கவில்லை. சரியான படம் எடுப்பதற்கு அபரிமிதமான திறனும் நுட்பமும் தேவை என்ற உணர்வோடுதான் இந்தப் பேட்டியை கொடுக்கிறேன்.

எடிட்டரின் மேசையை விட இயக்குனரின் மேசைதான் முக்கியம் என்று நினைக்கிறேன். இதில் நான் தெளிவாக இருக்கிறேன். அதே நேரம் எடிட்டரின் மேசை என்பது இயக்குனரின் மேசைதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல்பிரேம், இதுதான் கடைசிபிரேம் என்று சொல்லும்போதே இயக்குனர் எடிட்டராகி விடுகிறார். எடிட்டர் என்பவர் வெறுமனே வெட்டி, ஒட்டுபவர் இல்லை.

சினிமாவில் எல்லாவிதமான கலைகளும் இருக்கிறது. சினிமா என்பது என்ன என்பதில் குழப்பம் இருக்கிறது. சினிமா யாருடைய கலை என்ற கேள்வியும் இருக்கிறது. உங்கள் கேள்வியில் இயக்குனருக்கு சமமாக எடிட்டராக இருப்பதால் இதை நான் பேச வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி நான் தோழர் வேட்டைக்கார கண்ணனிடம் பேசும்போது ஓவியம் என்பது ஓவியனுடைய கலை. இசை என்பது இசைக்கலைஞனின் கலை என்பது மாதிரி, சினிமா என்பது இயக்குனரின் கலை என்று சொன்னார். சினிமா என்பதை இயக்குனர்தான் தீர்மானிப்பார்.

உதாரணத்திற்கு பிதாமகன். அந்தப் படத்தில் அப்போது உள்ள கலைஞர்கள் எல்லோரும் இருந்து, இயக்குனர் பாலா இல்லை என்றால் அது பிதாமகன் இல்லை. அதே நேரம் பங்கு பெற்றிருந்த எல்லா கலைஞர்களும் இல்லாமல் பாலா மட்டும் இருந்தால் அது பிதாமகன்தான்.

ஒரு படத்தை முழுமையாப் பார்ப்பதும், தீர்மானிப்பதும் இயக்குனர்தான். நடிகை ஊர்வசி மேடம் பேராண்மை படம் சூட்டிங் வந்தபோது இதை வேற மாதிரியாக சொன்னார். அதாவது ஒரு படத்தை முழுமையாகப் பார்ப்பது இயக்குனர்தான். ஆனாலும் அந்த இயக்குனர்களுக்குக்கூட மக்களுடைய பார்வையில் பார்க்க முடியாது. மேலும் நீ ஒரு பார்வையில் எடுத்து முடிப்பாய். ஆனால் மக்கள் அதை வேற பார்வையில்தான் பார்ப்பார்கள். மக்களுடைய பார்வை எந்த முன் தீர்மானமும் இல்லாமல் இருக்கும். அடுத்தக் காட்சி என்ன என்று கூடத் தெரியாமல்தான் பார்ப்பார்கள். நீ ஒன்றுமில்லாத காட்சிதானே என்று நினைக்கும்போது மக்கள் அதை எமோசனலாக பார்ப்பார்கள். இதே மாதிரி கலையைப் பற்றிய கருத்தை இ.எம்.எஸ். எழுதிய மார்க்சியமும் கலையும் என்ற புத்தகத்தில் காண முடியும்.

ஒரு பிற்போக்கான கலைஞனுடைய படைப்பு முற்போக்கான விளைவுகளை கூட சமூகத்தில் ஏற்படுத்தும். அதே நேரம் ஒரு முற்போக்கு கலைஞனுடைய படைப்பு சமூகத்தில் பிற்போக்கான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக படம் எடுக்கிறபோது துண்டு துண்டாகத்தானே எடுக்கிறோம். அதுவும் ஒரு வருஷமா எடுக்கிறபோது சில வசனங்களை எழுதுவோம். பிறகு அதை மாற்றி எழுதுவோம். பேராண்மை படத்தில் உள்ள சில வசனங்கள் இன்று சிலாகித்துப் பேசப்படுகிறது. அந்த வசனங்களை எடிட்டிங் முடிந்தவுடன் சேர்த்தோம். உதிரி உதிரியாக எடுத்து சேர்த்து, மொத்தமாகப் பார்த்தபோது இந்த மாதிரி படம் எடுக்கிறேன் என்று சொல்லவே இல்லையே என்று எனது உதவியாளர் ரோகாந்த் கேட்டபோது, இந்த படம்தான் எடுக்கிறேன் என்று நானும் தொடங்கவில்லையே என்று சொன்னேன். அதாவது நாங்கள் படம் தொடங்கும்போது ஒரு நோக்கம் இருந்தது. உதிரி உதிரியாக எடுத்து உருமாறும்போது அதனின் வீச்சும், அபரிமிதமான படமாக உருமாறியிருக்கிறது. பேராண்மை படம் எவ்வளவு வரவேற்பை பெறும் என்பதைத் தாண்டி ஆழமாக விவாதத்திற்கு உள்ளாகும், நுட்பமாக ஊடுருவி மக்களிடம் செல்லும், குறைந்தபட்சம் ஐந்து வருடத்திற்கு விவாதங்கள் இருக்கும் என்று இன்றைக்குப் புரிகிறது. படத்தை எடுத்து ரிலீஸ் செய்தபோதுகூட மக்களிடம் மிக வீரியமாக சென்று அடையும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. விளைவு என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். இதைப் பார்க்கும்போது கலை என்பது என்னில் அப்பாற்பட்டதாக இருக்கிறது. எந்த ஒரு தத்துவம் பெரும்பான்மையான மக்களால் ஏற்கப்படுகிறதோ அப்போது அதற்கு பௌதீக சக்தி வருகிறது என்று கார்ல் மார்க்ஸ் சொன்னார். கலைக்கும் இந்தத் தன்மை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கே: சீரியஸாக சொல்லப்படுகிற கருத்துகள் வெகுசன சினிமாவில் பெரும்பாலும் வெற்றிப்பெற முடியவில்லை என்ற கருத்து உள்ளதே?

கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் வெற்றியடைய செய்யமுடியும். மூட நம்பிக்கையைக் கூட மாபெரும் வெற்றிப் படைப்பாக்க முடியும். மூட நம்பிக்கையையே வெற்றிப் படமாக்க முடியும் போது நம்பிக்கையை அதைவிட இன்னும் வெற்றிப்படமாக ஆக்கமுடியும். அப்படி வெற்றிப் படமாக்க முடியவில்லை என்றால் அது ஆக்கம் செய்கிறவனின் குறைதான். அதாவது அவனுக்கு சினிமா பற்றிய பார்வையும், கலையைப் பற்றிய புரிதலும் குறைவாக இருப்பதுதான் காரணம். இதனால் இரண்டு பாதிப்புகளை உணருகிறேன். சினிமா என்கிற கலை வடிவத்தையோ, தொழில்நுட்பத்தையோ சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிறந்த கருத்துகளை வைத்து படம் செய்கிறபோது அந்த படம் தோல்வி அடைகிறது என்றால் இரண்டு பாதிப்புகள் உருவாகிறது. அதில் ஒன்று படம் தோல்வியடைகிறது. மற்றொன்று அந்தக் கருத்துகளும் தோல்வியடைந்தது போலாகிறது.

சினிமா வட்டாரத்திலும், சில முற்போக்காளர்களின் மத்தியிலும் கூட சிறந்த கருத்துகள் சொன்னால் படம் ஓடாது என்கிற கருத்து இருக்கிறது. பொதுவாக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு வருகிறார்கள். அந்த மாணவர்களை எப்படி திருப்தி படுத்துவது என்றுதான் சினிமா வட்டாரங்களில் பேச்சுவார்த்தை நடக்கின்றன. மாணவர்களை பிரதானமாக வைத்து எடுத்த திரைப்படத்தில் கூட வகுப்பறைகளே கிடையாது. அப்படி சில வகுப்பறைக் காட்சிகள் படத்தில் வந்தால்கூட தமிழாசிரியர்களை கிண்டல் செய்கிற மாதிரிதான் எடுக்கிறார்கள். எங்கோ ஒன்று, இரண்டு சிறந்த வகுப்பறைகளான ’பூ ஒன்று பூயலானது’, ‘நூற்றுக்கு நூறு’ போன்ற படங்களில் சந்தித்திருக்கிறோம்.

நான் எடுக்கிற சினிமாவை ஒரு பத்துப் பேர் பார்த்தால் போதும் என்பதற்காக நான் சினிமா எடுக்க வரவில்லை. என்னுடைய நோக்கமும் அதுவல்ல. ஒரு படத்தை எடுத்தால் அதை உலகமே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதை நோக்கிப் போக வேண்டிய வேலையை செய்யவேண்டும். ஒரு முழு படத்தை எல்லாரும் பாசிட்டிவாக பார்க்க முடியாது. படத்தைப் பார்த்து எதிர்த்து சொல்கிறவர்களுக்கும் படம் எடுக்கவேண்டும். பொதுவாக படத்தை பொறுத்தவரைக்கும் பார்வையாளர்களைப் பற்றி ஒரு கணக்கு இருக்கிறது. அதில் உள்ள கிராஃபில் 1 முதல் 100, 50 முதல் 100, 80 முதல் 100 வரைக்கும் போனால் வெற்றிதான். 99ல் தொடங்கி 99ல் நின்றால் அது தோல்விதான். இந்தக் கணக்கில் அறிஞன், விஞ்ஞானி, தத்துவவாதி, பாமரன், குழந்தை, பெண்கள் என்று எல்லாரும் வந்து விடுவார்கள்.

கே: இயற்கை படம் எப்படி வந்தது?

நான் உதவி இயக்குனராக வேலை செய்துகொண்டு இருந்தபோது எனக்கு உடனே படம் எடுக்கவேண்டும் என்று எல்லாம் இல்லை. என்னுடைய உதவியாளர் கல்யாண கிருஷ்ணன் தான் நான் படம் எடுக்கவேண்டும் என்ற அவசியத்தைச் சொன்னான். நான் ஏற்கெனவே சொன்னமாதிரி உண்மையிலேயே பெரிய கலைஞன் இல்லை. என்னுடைய படைப்புகளில் கலைத்தன்மை இருக்கும். ஆனால் கலைஞனுக்கான தகுதியெல்லாம் இல்லை. நான் உதவி இயக்குனராக இருந்தபோது கே.ஆர். சாருடன் காதல் ரோஜா என்கிற படத்தின் டிஸ்கஸில் கலந்துகொண்டேன்.

அந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள், ஒரு கதாநாயகி. அதில் கதாநாயகி தம்மை காதலித்த கதாநாயகனைத் தேடிச் செல்கிறாள். போகிற வழியில் ஒரு பத்திரிகை நிருபரைச் சந்திக்கிறாள். அந்த நிருபர் அவளுக்கு நிறைய உதவிகள் செய்கிறார். காதலனைத் தேடிப் போய்க்கொண்டிருக்கும் போதே இந்த நிருபர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவது சரியா தவறா என்று தெரியவில்லை. ஒரு சங்கடமான பயணம். அங்கே போய்க் காதலனைப் பார்த்தால் அவன் மோசமானவனாக இருக்கிறான். அதனால் நிருபரையே திருமணம் செய்துகொள் என்று படம் முடிகிறது. அப்போது நான் காதலனும் சிறந்தவனாக இருந்தால் படத்தை எப்படி முடிப்பது? என்று கேட்டவுடன் அங்கே ஒரே கசமுசாவாகிவிட்டது. உடனே கே.ஆர். ’ஏண்டா வேணும்னே குழப்பம் பண்றியா’ என்று கேட்டார். 'இல்ல சார் தாஸ்தோவ்ஸ்கி எழுதின வெண்ணிற இரவுகள் கதை இப்படித்தான் இருக்கிறது’. இப்போதுதான் படித்தேன் என்று கூறினேன். அப்போது கே.ஆர். இப்படி ஒரு கதை இருந்தால் அதை தனிப்படமாகவே எடு என்று சொல்லி ஒரு பைனான்சியரையும், விநியோகஸ்தரையும் அறிமுகம் செய்தார். ஆனால் எனக்குப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஏனெனில் அந்தக் கதைக்கான விஷ§வல் போதுமானதாக இல்லை. இப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது. அந்தக் கதைக்கான விஷ§வலை யோசிக்கும்போது கதாநாயகி காத்துக்கொண்டு இருக்கிறாள். நிறைய ரயில்கள் வருகிறது. கடைசி ரயிலில் கதாநாயகன் வருகிறான். எனக்கு இந்த மாதிரி பஸ்ஸ்டாண்ட், ஏர்போர்ட் என்பதெல்லாம் சரியாக வரவில்லை. இடையில் நான் சென்னைத் துறைமுகத்தில் வேலை செய்ததால் கதாநாயகி லைட்ஹவுசில் காத்துக்கொண்டு இருக்கிறாள். கதாநாயகன் கப்பலில் வருகிறான் என்ற காட்சி சரியாகப்பட்டது. கடல் என்பது முடிவில்லாதது. இயற்கை படம் செய்ததே இந்த முடிவில்லாததுதான் காரணம். இந்தக் கதையை சொன்னபோது நிறையபேர், அதாவது சூப்பர் குட் பிலிம்ஸ் சௌத்ரி உட்பட எல்லாரும் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாக இருக்கிறது அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

இந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர் குமார் ஆசைப்பட்டார். துறைமுகம், கப்பல் என்று வந்தவுடன் தயாரிப்பு செலவு அதிகமாகும் என்று யோசித்தார். உடனே நானும், என்னுடைய நண்பன் எட்வினும் தூத்துக்குடிக்குச் சென்று துறைமுகத் தலைவரைப் பார்த்து விஷயத்தைக் கூறினோம். பிறகு அவர் ஒரு நாளைக்கு 4, 500 ரூபாய்க்கு வாடகைக்கு படப்பிடிப்பு நடத்துவதை அனுமதிக்க ஒத்துக் கொண்டார். சென்னையில் சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தினால் 25, 000 ரூபாய் வாடகையும், ஹோட்டலில் 1 லட்ச ரூபாய் வாடகையும் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில் தூத்துக்குடி துறைமுக கழகத்தின் கடிதத்தை தயாரிப்பாளரிடம் காண்பித்து, சாதாரணமாக ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்ன ஆகுமோ, அதே செலவுதான் ஆகும் என்று சொன்னவுடன்தான் தயாரிப்பாளர் படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார். தயாரிப்பாளரைப் பொறுத்தவரைக்கும் புது இயக்குனர், முதலீடு, லாபம் என்பதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. இப்படித்தான் எனக்கு முதல் படம் அமைந்தது.

கே: எதிர்காலத்தில் என்ன மாதிரியான தொழில்நுட்பத்தில் சினிமாவை எடுக்க விரும்புகிறீர்கள்?

நான் சினிமாவை White Screen ஆகத்தான் பார்க்கிறேன். எனக்கு 8 MM, 16 MM, 35 MM, 70 MM ஆகிய ஃபார்மெட்டில் சினிமா எடுக்க ஆசை. இதில் 70 MM தொழில்நுட்பம் வருவதற்கிடையில் சினிரொமோ என்ற தொழில்நுட்பம் வந்தது. இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு என்பது மனிதர்கள் பார்ப்பது மாதிரி திரையில் காண்பிக்க முடியும். அதாவது ஒரு பொருளை மனிதனுடைய கண் 180 டிகிரி கோணத்தில் பார்க்கிறது. இதை 3 கேமராக்களில் சூட் செய்ய வேண்டும். இந்த சினிரொமோ தொழில்நுட்பத்திலும் 3D Filmlலும் படம் பண்ணுவதற்கு ஆசை. அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது.

பிர்லா பிளானிட்டோரியத்தில் புது மாதிரியான ப்ரொஜக்டர் ஒன்று இருக்கிறது. செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஒரு ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, அந்தத் திரையே கோள வடிவத்தில் இருக்கும். அங்கே Multi Projector இருக்கும். நீங்கள் படத்தை அண்ணாந்துதான் பார்க்க முடியும். அப்படிப் பார்க்கும்போது நாம் உண்மையில் அண்டவெளியில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை கொடுக்கும். ஆனால் இது அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்குத்தான் சரியாக இருக்கும். மேலும் குழந்தைகளுக்கான டாக்குமெண்டரி பிலிம்களை இந்தத் தொழில்நுட்பத்தில் செய்வதற்கு ஆசையாக உள்ளது.

கே: உங்கள் அலுவலகத்தில் நிமாய் கோஷின் படம் உள்ளது. அவரைப் பற்றி.....

நிமாய்கோஷை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து இது இளவேனிற் காலம் என்ற ஒரு திரைப்படம் எடுத்தார்கள். கோயமுத்தூர் ஆனந்துதான் இந்தப் படத்தை இயக்கினார். ஆனந்த் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை. இந்தப் படத்திற்கு நிமாய் கோஷ்தான் கேமிரா. தோழர் பாவெல்தான் என்னைக் கூட்டிக்கொண்டுப் போனார். அப்போது எனக்கு சினிமாவைப் பற்றி அதிகம் தெரியாது. இரண்டு, மூன்று தடவை சூட்டிங் பார்க்க அனுமதி கிடைத்தது. இண்டோ-சைனா பிரெண்ட்ஷிப் அசோசியேஷன் தலைவராகவும், பிலிம் சொசைட்டிகளையும் நடத்தி வந்தார் நிமாய் கோஷ். ஒருமுறை அவரை சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு தொடர வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது ஐயங்கரன் அலுவலகத்தில் உள்ள என்னுடைய அறையில், என் தலைக்கு மேலே நிமாய்கோஷின் படம் இருப்பதைப் பார்க்க முடியும்.

நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் சேர்ந்து முதன் முதலில் மியூசிக் அசோசியேஷன் தொடங்கினார்கள். நிமாய்கோஷின் படங்களையும் பார்த்து இருக்கிறேன். நிமாய்கோஷ், எம்.பி. சீனிவாசன் ஆகியோர் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட செய்தி என்பது மார்க்சிய பார்வை உள்ளவர்கள் முதன் முதலாக எல்லாத் துறைகளிலும் முன்னோடியாக இருக்கிறார்கள். உதாரணமாக நிமாய்கோஷ் இந்தியாவில் திரைப்படங்களை 16 MMல் எடுத்து சினிமாஸ்கோப்பில் வெளியிட முயற்சி செய்து இருக்கிறார். அதை என்லார்ஜ் செய்கிற போது படத்தில் உள்ள காட்சிகள் புள்ளி புள்ளிகளாக படங்கள் தெளிவில்லாமல் தெரிந்தன. அதனால் நடைமுறையில் வராமல் போய்விட்டது. ஆனால் இன்றைக்கு வெற்றிகரமாக ஓடிய ‘சுப்பிரமணியபுரம்’, ‘பசங்க’ ஆகிய திரைப்படங்கள் 16 MMல் எடுக்கப்பட்டு என்லார்ஜ் செய்யும்போது இன்றைக்கு புதிய தொழில்நுட்பமான Digital intermediate (DI)னால் சினிமாஸ்கோப்பில் இன்று சாத்தியமாகி இருக்கிறது. ஆனால் நிமாய்கோஷ§க்கு அன்றைக்கு இந்த வசதி இல்லை. நிமாய் கோஷின் ஐடியாதான் ஜெயித்திருக்கிறது. இதற்கு காரணமான நிமாய்கோஷின் பெயர் தெரியாமலேயே போய்விட்டது. அதேபோல 3D படத்தை எடுத்திருக்கிறார்.

நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்ததுபோல சினிமா தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை செலுத்தினர். உதாரணமாக முன்பு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கட்டுப்பாட்டில் இசை அமைப்பாளர், இசைக் கலைஞர்கள் வேலை செய்வார்கள். அந்த இசையமைக்கும் வேலை முடிந்தவுடன் இசையமைப்பாளருக்கு உடனே தயாரிப்பாளர் சம்பளம் கொடுத்து விடுவார். ஆனால் அதில் தபேலா வாசித்தவர் அந்தப் படத்தின் வெற்றி தோல்வி வரை காத்திருந்து பேசிய சம்பளத்திற்கு பேரம் பேசி வாங்கிகொண்டு போவார். இந்த உறவுமுறை மிகக் கடினமாக இருந்தது. இந்த மாதிரியான சூழலில் நிமாய்கோஷ§ம், எம்.பி. சீனிவாசனும் ஒரு யூனியன் ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பாடல் ஒளிப்பதிவு செய்யும்போது பல்வேறு இசைக் கலைஞர்களை இசை அமைப்பாளர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். ரெக்கார்டிங் முடிந்தவுடன் எல்லாருக்கும் பணம் பட்டுவாடா முடித்த பிறகுதான் கேசட் வெளிவரும். இந்த முறையை இவர்கள் இரண்டு பேரும்தான் கொண்டு வந்தார்கள். இந்த முறையால் தமிழ் சினிமாவில் பெரிய மாற்றமே வந்தது. இந்த மியூசிக் யூனியன்தான் முதன்முதலில் ஒரு அரங்கமே கட்டியது. அந்த அரங்கத்தில் சினிமாவின் பல யூனியன்கள் கூட்டம் இன்றும் நடந்து வருகிறது. நிமாய்கோஷ், எம்.பி. சீனிவாசன் ஆகியோர் கொண்டு வந்த இந்த முறை சினிமாவில் உள்ள இருபத்தி நான்கு யூனியன்களிலும் முன்னோடியாக இருக்கிறது. இதனால் உழைத்த பணத்தைப் பெற முடியும். இதை லெனின் சார் ரூமில் நான் கேள்விப்பட்டதுதான். ஏனெனில் நான் பரம்பரை சினிமாக்காரன் கிடையாது.

கே: சினிமாவில் பர்பெக்ஷன் முக்கியம் என்று சொல்கிறார்கள். உங்களுடைய பேராண்மைப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உண்மையிலே என்ன எடை இருக்குமோ அதே எடையில் செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார்களே?

அமீர், பாலா போன்றவர்கள் ஒரு கதாபாத்திரத்தை கச்சிதமாக, சரியாக செய்கிறார்கள். அதனால் Fine Art என்றேன். அதற்கு உடனே அமீர் உங்களுடையது Modern Art என்றார். Fine Art என்பது ஒரு கதாபாத்திரத்தின் உடை, ஹேர்ஸ்டைல். தொழிலாளியாக இருந்தால் எவ்வளவு அழுக்கு இருக்கவேண்டுமோ அந்த அளவுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக காலையில் நடிகர் விக்ரம் குளித்துவிட்டு தான் சூட்டிங் வரும்போது அவர்மேல் ஒரு வாளி மண்ணைக் கொட்டச் சொல்வாராம் பாலா. என்னைப் பொறுத்தவரைக்கும் சின்ன சின்ன விஷயங்கள்கூட கொஞ்சம் சரியில்லை என்றாலும் நான் டேக் எடுத்து முடித்துவிடுவேன். அதற்காக அடுத்த டேக் எல்லாம் போவதில்லை. பேராண்மை படத்தில் வரும் இடைவேளைக் காட்சியை இப்போது பிரம்மாண்டமாக சொல்கிறார்கள். அது ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட காட்சிதான்.

என்னுடைய உதவியாளர்கள் நீங்கள் சரியாக கவனமில்லாமல் எடுக்கிறீர்கள் என்று சொல்வார்கள். என்னுடைய படத்தின் அளவு பெரியது. தயாரிப்பு செலவு குறைவு. அதனால் அடிதடியாக அடுத்தக் காட்சிக்கு போய்க்கொண்டே இருப்பேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி ஆயுதங்கள் மற்ற விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றதோ அப்படியே இருக்கவேண்டும் என்று நான் கவனம் செலுத்திக் கொண்டே இருப்பேன். இதில் ஏதோ ஒன்று பொய்யாக இருந்தால் காட்சியே பொய்யாகிவிடும். ஏனெனில் காட்சி புனைவாக இருக்கிறது. பேராண்மை படத்தில் நடித்த ரோலண்ட் கிங்லேங்கர் ஒரு ’மிசைலை’ நிறுத்துகிறார் என்கிறபோது அந்தப் பொருள் பொய் என்றால் அந்தக் காட்சியின் முக்கியத்துவம், டெம்போ எல்லாம் குறைந்துவிடும். பார்வையாளருக்கு அந்தக் காட்சியும் பொய்யாகிவிடும். அதனால் இவைகளில் கவனம் செலுத்துவது நல்லது.

பேராண்மை என்று தொடங்கும்போதே ஸ்டோரி போர்டை ட்ராட்ஸ்கி மருது வரைந்து கொடுத்தார். அதில் இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகளை ஆறு பேர் கொண்ட குழு கடந்து செல்ல வேண்டும். அந்தக் காட்சி மிக ரிஸ்காக இருந்ததால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் செய்தோம். இதற்காக ஒரு வருடம் வேலை செய்தோம். படம் முடியும்போது சேர்க்கலாம் என்று திரும்ப போட்டுப் பார்த்தால் அதில் இரண்டு, மூன்று ஷாட் உண்மையற்றதாக இருந்தது. அதைப் பார்த்தால் கிராபிக்ஸ் என்று தெரியும். இது பொய் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் மிகுந்த மனக்கஷ்டத்தோடு 300 அடியை வெட்டி எறிந்தோம். என்னுடைய சினிமா வாழ்க்கையில் வேறு படத்திலும் இதை பயன்படுத்த முடியாது.

கே: பேராண்மை வெற்றி பெரும் என்று நினைத்தீர்களா?

உறுதியாக வெற்றிப் பெறும் என்று நம்பினேன். எப்படி என்றால் மக்களை நம்பினேன். பொதுவாக மக்கள் நிறைய படம் பார்க்கிறார்கள். ஒரு தடவை என் நண்பர் தாஸ் சொல்லும்போது தமிழ் சினிமாவில் ஒரே கதையை வேற வேற மாதிரி எடுக்கிறார்களா? அல்லது வேற வேற கதையை ஒரே மாதிரி எடுக்கிறார்களா? என்றார். இந்தக் கேள்வி மக்கள் மத்தியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மக்கள் மத்தியில் இந்தக் கேள்வி இல்லாமல் இருக்க முடியாது. மக்கள் காசு கொடுத்து சினிமாவை கமிட்டடாகப் பார்க்கிறார்கள். தொடர்ந்து படம் பார்க்கும்போது ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்புத்தன்மை கண்டிப்பாக இருக்கும். அதே நேரம் டப்பிங் செய்யப்பட்ட ஹாலிவுட் படங்களை, சீரியஸான படங்களை தொலைக்காட்சி மூலமாக பார்க்கிறார்கள். இப்போது படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கமும் வந்திருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் பேட்டியில் முன்பு சொன்னது மாதிரி என்னுடைய வீட்டுக்கருகில் இருந்த ரிக்ஷாகாரர்களும், கைவண்டிக்காரர்களும் தியேட்டரில் ஓடும் ஆங்கிலப் படத்தைப் பார்த்துவிட்டு கதை அமைப்புகளையும், காட்சி அமைப்புகளையும் டிஸ்கஸ் பண்ணுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் படத்தின் பெயரும், ஆங்கிலமும் தெரியாது. ஆனால் என்னிடம் ’தேவி காசினோ தியேட்டரில் இங்கிலீஷ் படம் ஓடுது. பார்த்துவிடு’ என்று சொல்லி இருக்கிறார்கள். பென்ஹர் படத்திற்கு என்னுடைய அண்ணன் எங்கம்மாவை கூட்டிக்கொண்டுப் போனார். படம் நன்றாக இருக்கிறது என்று எங்கம்மாவும் எங்களை கூட்டிக்கிட்டுப் போனார். எங்கம்மாவுக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரியாத போதும், ஆங்கிலமும் தெரியாத போதும் நல்ல படம் என்பதை அடையாளப்படுத்த முடிந்தது. ‘டென் காமாண்மெண்ட்ஸ்’, அமிதாப்பச்சன் நடித்த தீவார் படமும் இப்படித்தான் பார்த்தேன். ஆனால் எங்கம்மா நிறைய சினிமா பார்க்கிறவர் கிடையாது.

இதைப் பார்க்கின்ற போது ஒரு சாதாரண தமிழ் படத்திற்கு ஐம்பது ரூபாய் கொடுத்துப் பார்ப்பது, பென்ஹர் படத்திற்கும் ஐம்பது ரூபாய் கொடுத்துப் பார்ப்பது என்பதை ஒப்பு நோக்கும்போது மொழியைத் தாண்டி பென்ஹர் பார்க்கும்போது பயன் மதிப்பு அதிகமாக தெரிகிறது. அதனால் சரியான சினிமாவை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம்.

கே: டாக்கீஸ் 75 என்ற நிகழ்ச்சியை நடத்தி உள்ளீர்கள், அதைப் பற்றி கூறுங்கள்....

சினிமா எனக்கு எந்தக் காலத்திலும் கனவாகவோ, ஆர்வமாகவோ இருந்ததில்லை. எங்கள் வீட்டுக்கும் சினிமாவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நான் சினிமாவுக்கு போவேன் என்று ஒருபோதும் எங்கள் வீட்டிலேயோ அல்லது நானோ நினைக்கவில்லை. சோலைக்குயில் படத்தில் நான் வேலை செய்தது என் குடும்பத்திற்கு தெரியாது. பின்னால் உதவி இயக்குனராக வேலை செய்கிறேன் என்று சொன்னபோது சரி என்று சாதாரணமாக பதில் வந்தது. இன்றைக்கும் எங்க வீட்டில் உதவி இயக்குனர் என்றால் என்னவென்றேத் தெரியாது. இப்போதும் என்னுடைய படப்பிடிப்புகள் நடக்கிறபோது என் வீட்டிலிருந்து யாரும் வந்து சூட்டிங் பார்ப்பதில்லை.

அரசியல் ரீதியாக சுற்றிக்கொண்டு சினிமாவுக்கு வந்தபிறகு, நமக்கு முன்னோடியாக சினிமாவில் இருந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் டாக்கீஸ் 75 நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பேசும் படம் வந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதை அறிவித்தார்கள். இந்தியா முழுவதும் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் போக்கு என்பது கலை நிகழ்ச்சி கொண்டாடுவது மாதிரிதான் இருந்தது. வேறு ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் நான் வந்ததால் சினிமாவில் யோசிப்பது மாதிரி யோசிக்காமல், வேறு மாதிரிதான் யோசிக்க வேண்டியிருந்தது.

75 வருட சினிமாவை கொண்டாடும்போது யாரோடு சேர்ந்து கொண்டாடுவது என்ற கேள்வி வருகிறது. சினிமாவின் முக்கியமான 24தொழில் பிரிவுகள் உள்ளன. அந்த தொழில்நுட்ப குழுவினரோடும், யூனியனோடும் கொண்டாடுவோம் என்று முடிவு செய்தோம். சினிமாவில் கால்சீட் என்பது என்ன? இது எங்கே இருந்து வந்தது? நூறு வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் சிக்காகோவில் பல போராட்டங்கள் நடந்து ஒருநாள் உழைப்பு என்பது எட்டு மணி நேரம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனால்தான் கால்சீட்டுக்கு இவ்வளவு பேட்டா என்று இன்று பேசுகிறோம். இதை நினைவுப்படுத்தும் விதமாக அந்த 75 வருட சினிமாவை உலகாயுதா என்ற அமைப்பின் மூலம் கொண்டாடினோம்

http://smuthukumaran.wordpress.com/2009/12/09/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய சினிமாக்காரர் தமது நாட்டை தூக்கிப்பிடிக்கிறார்கள். தப்பில்லை தானே. எமது மக்களும் அப்படைப்புக்களைதான் விரும்புகிறார்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு,

நீங்கள் இணைத்திருக்கும் செய்தி அவரை ஒரு ஈழ ஆதரவாளராகக் காட்டினாலும், படம் முழுக்கவும் இந்தியத் தேசியத்தை உருக்கி வழிந்திருக்கிறது. சுத்த அருவருப்பாக இருந்தது. இந்தியர்கள் வேன்டுமானால் தமது தேசியத்தைப் புகழ்ந்து படம் எடுக்கட்டும், படம் பார்க்கட்டும். ஆனால் அந்தப் போலித் தேசிய வாதத்துக்காக அழிக்கப்பட்ட எமது இனத்தையும் போராட்டத்தையும் நினைக்கும்போது இந்திய தேசியத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் அருவருக்கிறது. அவர் யாராயிருந்தாலென்ன ?!

படம் குப்பை...குப்பை....குப்பை !!!அவ்வளவுதான் !!!!! ஏனெறால் இந்தியத் தேசியவாதம் என்பது குப்பைக்குச் சமன்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.