Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலைகஞ்சி பற்றி பலருக்கும் தெரிந்து இருக்கும் ஆனால் இன்று இதை காதால் கேட்ககூடாமல் இருக்கிறது நாங்கள் ஊரில் இருக்கும் போது பல இலை கஞ்சிகள் குடித்திருப்போம் என்ன அப்படித்தானே நீங்கள் சுவைத்த இலை கஞ்சிகள் பற்றி குறிப்பை தாருங்கள்

எனக்கு தெரிந்தது முல்லை இலை கஞ்சி ஆனால் செய்முறை தெரியாது :wub:

இலைகஞ்சி பற்றி தெரிந்தவர்கள் செய்முறை தரவும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமா டெய்..சத்தியமா எனக்கு ஒரு அறுப்பும் தெரியாது இதை பற்றி தெரிஞ்சா சொல்லி இருப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kuddipaiyan26

Posted 25 October 2009 - 06:59 PM

மாமா டெய்..சத்தியமா எனக்கு ஒரு அறுப்பும் தெரியாது இதை பற்றி தெரிஞ்சா சொல்லி இருப்பேன்

புது கட்டைகளுக்கு எதுவும் தெரியாது பாருங்க குட்டி பையா இந்தாங்க ஒரு கஞ்சி நம்ம தமிழ் சிறி அண்ணாவோட வல்லாரை கஞ்சி செய்து பாருங்க :D:D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36241&view=findpost&p=394116

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது கட்டைகளுக்கு எதுவும் தெரியாது பாருங்க குட்டி பையா இந்தாங்க ஒரு கஞ்சி நம்ம தமிழ் சிறி அண்ணாவோட வல்லாரை கஞ்சி செய்து பாருங்க :wub::(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36241&view=findpost&p=394116

முனிவர் ஜீ , உங்களுக்காக இங்லிஷ் இலை கஞ்சி செய்யும் முறை கீழே உள்ளது.

செய்து பார்த்து ....., சிஷ்யைகளுக்கும் கொடுத்து ..... சுவை எப்படி இருக்கு என்று சொல்லவும். :D

Link to comment
Share on other sites

புது கட்டைகளுக்கு எதுவும் தெரியாது பாருங்க குட்டி பையா இந்தாங்க ஒரு கஞ்சி நம்ம தமிழ் சிறி அண்ணாவோட வல்லாரை கஞ்சி செய்து பாருங்க :D:)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36241&view=findpost&p=394116

முனிவர் ஜீ வல்லாரைக் கஞ்சி செய்து பார்த்தாச்சோ...... நீங்க தனிய இலைகஞ்சி எண்டு எழுதி செய்முறை பற்றி கேட்டுருக்குறீங்க...இலையின் பெயரை சொல்லிக் கேட்டிருந்தால் சில வேளை குட்டிப்பையனுக்கும் தெரிஞ்ருக்கலாம். நானும் இலைகஞ்சி பற்றி இப்பத்தான் கேள்வி படுறன். :)

தமிழ் சிறி உங்களுக்கு எப்படி இந்த வல்லாரை கஞ்சி செய்முறை தெரிஞ்சுது ? :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

தமிழ் சிறி உங்களுக்கு எப்படி இந்த வல்லாரை கஞ்சி செய்முறை தெரிஞ்சுது ? :lol::)

இலங்கையில் இருக்கும் போது ...... அம்மா இந்தக் கஞ்சியை ஒருகிழமைக்கு ஒரு முறையாவது செய்து தருவா.மிகவும் சுவையாக இருக்கும். சிறிது தேசிக்காய் புளியும் விட்டால் சுவையாக இருக்கும்.

இங்கு நாங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது செய்வோம்.எல்லோரும் விரும்பி குடிப்பார்கள்.

அனிதா , நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து சுவை எப்படியிருக்கின்றது என்று சொல்லுங்கள். :D

Link to comment
Share on other sites

இலங்கையில் இருக்கும் போது ...... அம்மா இந்தக் கஞ்சியை ஒருகிழமைக்கு ஒரு முறையாவது செய்து தருவா.மிகவும் சுவையாக இருக்கும். சிறிது தேசிக்காய் புளியும் விட்டால் சுவையாக இருக்கும்.

இங்கு நாங்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போது செய்வோம்.எல்லோரும் விரும்பி குடிப்பார்கள்.

அனிதா , நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து சுவை எப்படியிருக்கின்றது என்று சொல்லுங்கள். :)

ஓ வல்லாரை இலை கசப்பான இலை தானே ? அப்ப இந்த கஞ்சி குடிக்கும் போது கசக்காதோ ? வீட்ட வல்லாரையில் சம்பல் செய்தாலே சாப்பிடுவதில்லை ..:lol:

சரி செய்து பார்த்திட்டு சொல்லுறன்... ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அனிதா அக்கா நீங்களும் கஞ்சி செய்ய வெளிகிட்டிங்கள் போல நடக்கட்டும்

தூதுவளை பற்றி தேடினபோது இந்த தூதுவளை குழம்புதான் கிடைத்தது இதையும் உலையரசிகள் செய்து பாருங்கள்

தூதுவளை கஞ்சியும் செய்வார்கள் அதையும் தேடி பார்ப்போம்

[மு.குறிப்பு] சமையல் விளக்கம் என்னிடம் கேட்க கூடாது]

தூதுவளை இலைக் குழம்பு

மூலிகை மருத்துவத்தில் தூதுவளைக்கும் முக்கியமான பங்கு உண்டு. இருமல், சளி, தொண்டை நோவுக்கு இலைகளை அவித்து எடுத்து கைமருந்தாகக் குடிப்பர். (சமையறை மருத்துவம் பதிவில் பார்க்கவும்).

இது ஈரலிப்பான இடங்களில் கொடியாகப் படரும் தன்மையுடைய ஒரு செடியாகும். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது.

கிராமப்புறங்களில் பெரும்பாலும் சமையலில் அடிக்கடி இடம் பிடித்துக் கொள்ளும். இச்செடியின் பூக்கள் நீல (ஊதா) நிறத்தில் இருக்கும். பூவின் நிறம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது.

கொடியிலும் இலையிலும் முட்கள் காணப்படும்.

அதனால் இதன் இலைகளைப் பறித்து எடுப்பது சிரமமான காரியம்தான்.

இச்செடியை ஆங்கிலத்தில் Purple Fruited Pea Eggplant என அழைப்பர். இதனது தாவரவியல் பெயரானது Botanical name: Solanum trilobatum ஆகும். இது Solanaceae (Potato family) குடும்பத்தைச் சேர்ந்தது.

வீட்டுத் தோட்டங்களில் இயற்கையாக முளைத்து நின்று பயன்கொடுக்கும்.

பெரும்பாலும் சம்பல் (சட்னியாக) அரைத்து எடுத்து உண்பார்கள்.

அதன் காய்கள் கசப்பானவை. காய்களை வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி எடுத்து, கசப்பு நீங்க நெய்யில் பொரித்து எடுத்து உண்பார்கள்.

வெளிர்ப் பச்சைக் காய்கள் பழுக்கும்போது கண்ணைக் கவரும் சிவப்பு நிறமாக மாறும்.

இலையில் ரசம், பாற்சொதி, சூப் என்பனவும் தயாரிக்கலாம்.

இலையைப் பொரித்து எடுத்து பொரியலாகவும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இன்று குழம்பு தயாரித்துக் கொள்ளுவோம்.

தூதுவளை இலைக் குழம்பு

குழம்பு தடித்து வருவதற்காக வாழைக்காய் அல்லது கிழங்கு சேர்த்துக் கொண்டால் சுவையும் கூடும். அல்லது வெங்காயம், பூண்டு கூடியளவு சேர்த்து செய்து கொள்ளலாம்.

கையில் முள் குத்தாதவாறு மிகவும் கவனமாக கையாளுங்கள்.

வேண்டியவை

1. தூதுவளை இலை – 2 கப்

2. வாழைக்காய் அல்லது கிழங்கு – 1

3. பூண்டு – 5 பல்லு

4. பம்பாய் வெங்காயம் - 1

5. பச்சை மிளகாய் - 1

6. தேங்காய்ப்பால் - ¼ கப்

7. கடுகு – சிறிதளவு

8. வெந்தயம் - 1 ரீஸ்பூன்

9. எண்ணை – ¼ லீட்டர்

10. மிளகாய்ப் பொடி - 2 ரீஸ்பூன்

11. தனியா பொடி - 1 ரீஸ்பூன்

12. மஞ்சள்பொடி – சிறிதளவு

13. உப்பு தேவைக்கு எற்ப

14. புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

செய்து கொள்வோம்

இலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள். (கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளலாம்)

பின்பு இலையைக் கழுவி நன்கு நீர் வடிய விட்டுவிடுங்கள்.

வாழைக்காயை சிறிய துண்டங்களாக வெட்டுங்கள்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் தனித்தனியாக வெட்டி வையுங்கள்.

ஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

எண்ணையை விட்டு கொதிக்க, வாழைக்காயை பொரித்து எடுத்து வையுங்கள்.

இலையையும், பொரித்து எடுத்து பேப்பர் ரிசூவில் போடுங்கள்.

சிறிதளவு எண்ணையில் கடுகு, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் என்ற நிரையில் தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்து, புளிக் கரைசல் விடுங்கள்.

இத்துடன் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து வாழைக்காய், பொரித்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்து வர இறக்கி வையுங்கள்.

பொரித்த இலை வாசத்துடன் குழம்பு கமழும்.

பூண்டு வெங்காய வாசமும் தூக்கி நிற்கும்.

சாதம், பிட்டு, இடியாப்பம், பிரட்டுக்கு இக் குழம்பு சுவை கொடுக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.