Jump to content

இந்தியாவை மீறி தமிழீழம் அடைவதற்கான இரண்டு வழிகள்


Recommended Posts

லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கட்டுரை எழுதி அனுப்பிய பிற்பாடுதான் „அவரும் இந்தியாவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார், இவரும் இந்தியா சம்பந்தமாகத்தான் எழுதியிருக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த அந்த நேரங்களில் பரப்பாக இருக்கின்ற விடயங்கள் பற்றி பலரும் எழுதுவது இயல்பான விடயம்தான்.

இப்படித்தான் „நாடு கடந்த அரசு“ பற்றிய அறிவிப்பு வந்தவுடன் ஒரு பேப்பரில் அதைப் பற்றி ஏழு கட்டுரைகள் வந்தன. என்னுடைய கட்டுரையும் அதற்குள் அடக்கம். அதே போன்று கடந்த முறை பல இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் ஒரு பேப்பரில் இடம் பெற்று விட்டன. இந்திய எதிர்ப்புப் பரப்புரையை ஒரு பேப்பர் முன்னின்று நடத்துவது போன்று ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்தியிருக்கலாம்.

இதில் அப்படி ஒன்றும் தவறும் இல்லை. இந்தியா பற்றிய தெளிவை தமிழ் மக்களுக்கு வழங்குவது ஊடகங்களின் கடமை. இந்தியாவின் காலில் விழுந்தால் தமிழ் மக்களின் உரிமை கிடைத்து விடும் என்று நம்புகின்ற அரசியல் அறிவிலிகள் பல மட்டங்களில் காணப்படுகின்ற நிலையில் இது மிகவும் தேவையானது.

…………………………….

„இந்தியா என்கின்ற வந்தி“ என்று நான் எழுதிய கட்டுரைக்கு பல தமிழ்நாட்டுத் தோழர்கள் வரவேற்பை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சில ஈழத் தமிழர்களுக்கு ஒரு அச்சம் வந்து விட்டது. இப்படி தொடர்ந்து இந்தியாவை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தால்;, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா செல்வதற்கு விசா பெறுவது சிக்கலாகி விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இப்படியான மனிதர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றியும்;, இந்திய வல்லாதிக்கத்தின் பிடியில் சிக்குப்பட்டிருக்கும் பல இனங்களின் விடுதலை பற்றியும் பேசுகின்ற பொழுது தமது சுற்றுலா பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதர்களும் எமக்குள் இருக்கின்றார்கள் என்பது வேதனையானது.

…………………………….

தமிழீழத்திற்கான ஆயதப் போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தவர்கள் சொன்ன காரணங்களில் ஒன்று „இந்தியாவை மீறி தமிழீழத்தை எம்மால் அடைய முடியாது“ என்பது. ஆகவே தமிழீழப் போராட்டத்தைக் கைவிட்டு இந்தியா அனுமதிக்கின்ற ஒரு அரைகுறைத் தீர்வோடு தமிழர்களை இணங்கிப் போகும்படி இவர்கள் அறிவுறித்தினார்கள்.

அரைகுறைத் தீர்வுகள் தமிழினத்திற்கு நீண்ட கால நோக்கில் பலத்த அழிவையே கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்த விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக நின்றார்கள். இப்பொழுதும் அப்பொழுதும் இந்தியாவை மீறி தமிழீழத்தை அமைப்பதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன.

இந்தியாவில் வெல்லப்பட முடியாத ஒரு படையணியை கட்டி எழுப்புவது என்பது அதில் ஒரு வழி. இதையே விடுதலைப் புலிகள் முயற்சித்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்தியா தமிழீழத்தை அமைக்க விடாது என்பதிலும் ஒரு நேரத்தில் இந்தியாவோடு மோத வேண்டி வரும் என்பதில் தேசியத் தலைவர் தெளிவாகவே இருந்தார்.

முடிந்தவரை மோதலை தவிர்க்க முயல்வது என்பதன் அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களையும் அவர் செய்தார். ஆயினும் 87இல் இந்திய ஈழப் போர் மூண்டது. கரந்தடிப் போர் முறையில் சண்டையிட்டபடி ராஜதந்திர வழிகளையும் கையாண்டு அந்த நெருக்கடியில் இருந்து தமிழீழப் போராட்டத்தை தேசியத் தலைவர் காப்பாற்றினார்.

அதன் பின்பு நடைபெற்ற ராஜீவ்காந்தி அழித்தொழிப்பு நடவடிக்கையின் பயனாக இந்தியா ஒரு பத்தாண்டு காலம் தமிழீழப் போராட்டத்தில் தலையிடாமல் சற்றுத் தள்ளியே நின்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழப் விடுதலைப் புலிகளின் படைபலத்தை தேசியத் தலைவர் அதிகரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா மீண்டும் தலையிட்டு தமிழீழப் போராட்டத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கத் தொடங்கியது. ஓயாத அலைகள் மூன்றில் இந்தியாவின் தலையீட்டை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியாவோடு முடிந்தளவு நட்பாக போவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தனர். இந்தியாவால் வெல்லப்பட முடியாத பலத்தை அடையும் வரை இந்தியாவுடனான மோதலை தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளையும் கையாண்டனர். வெல்லப்பட முடியாத பலம் என்கின்ற இலக்கை அடைந்து விட்டால் இந்தியா வேறு வழியின்றி தமிழீழத்தை சகித்துக் கொள்ளும் என்பது விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்திருக்கக் கூடும்

…………………………….

இன்றைக்கு இந்தியா சொந்தம் கொண்டாடும் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வைத்திருக்கிறது. ஒரு பகுதியை சீனா வைத்திருக்கிறது. இந்தியா வாயை மூடிக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவாவது இந்தியாவை விட பலமானது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா அளவிற்கு பலமானது அல்ல. அப்படியிருந்தும் பாகிஸ்தானுடனான போரில் தனக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை கணக்குப் போட்டு விட்டு இந்தியா வாயை மூடிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் காஸ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நின்று விடவில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு போராளிகளை பயிற்சி கொடுத்து அனுப்புகிறது. மும்பை போன்ற இடங்களில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியா பாகிஸ்தானோடு போருக்குப் போகவில்லை.

இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது.

இதைப் பற்றி பின்பு பார்ப்போம். இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். வெல்லுவது கடினம் என்றாலோ, போரில் தனக்கு ஈடு செய்ய முடியாத அழிவு வரும் என்றாலோ எதிரியை சகித்துக் கொண்டு இந்தியா பேசாது இருந்து விடும். தமிழீழ தேசத்தையும் வெல்லப்பட முடியாத ஒரு நாடாக விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றமும், தமிழீழப் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் இந்தியா காட்டிய உறுதியும் எமது இலக்கை நாம் அடைய முடியாதபடி செய்து விட்டது.

…………………………….

இந்தியாவை அனுசரித்தும் சமாளித்தும் குறுக்கால் ஓடி தமிழீழத்தை உருவாக்கும் எமது முயற்சி வெற்றியை தரவில்லை. மிகப் பெரிய அழிவுகளைத்தான் எமக்கு தந்திருக்கின்றது. இப்பொழுது மீண்டும் சிலர் இந்தியாவின் மனதை மாற்ற முடியும் என்று புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வெளியுறவு பற்றி வகுப்பெடுக்க முனைகின்றார்கள்.

சீனா சிறிலங்காவை பயன்படுத்தி இந்தியாவின் தென்பகுதியை அச்சுறுத்துமாம். ஆகவே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்க வேண்டுமாம் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் எழுதியும் கூறியும் வருகிறார்கள். இதனால் இந்தியாவின் மனது மாறி விடும் என்று நம்புகின்றார்கள். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காத ஒன்றை தாம் சிந்தித்து விட்டதாகவும் இவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவினை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையை பற்றி சிந்திக்காது, இந்தியாவை தமிழீழத்திற்கு ஆதரவாக மாற்றலாம் என்று நம்புவது மிகப் பெரும் ஏமாற்றத்தையே மீண்டும் கொடுக்கும்.

இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி தமிழீழத்தை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது இல்லை. அவர்கள் இந்தியா பற்றி தெளிவாகவே இருந்தார்கள். கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி பலர் பலவிதமாகப் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சி தோற்று பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தம்மை ஆதரிக்கும் என்று விடுதலைப் புலிகள் நம்பியதாக சிலர் கூறுகிறார்கள். இது மிகப் பெரிய தவறான கூற்று. விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்படி நம்பியிருக்கவில்லை.

இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டில் பெரிதான மாற்றம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை என்பது விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரியும். ஆயினும் விடுதலைப் புலிகள் காங்கிரஸ் கட்சி தோற்பதை விரும்பினார்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடுவது போன்று அறைகூவலும் விடுத்தார்கள். ஆனால் இதற்கான காரணம் வேறு. காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களைப் பெறுவதன் மூலம் ஒரு வலுவற்ற ஆட்சி இந்தியாவில் உருவாகும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்தியாவில் வலுவற்ற ஆட்சி உருவானால் அப்பொழுது ஏற்படும் குழப்பங்களை சமாளிப்பதற்கே இந்தியாவிற்கு நேரம் போதுமாக இருக்கும். இந்த நிலையில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கு துணியும் என்றும் அவர்கள் கணித்திருந்தார்கள். மேற்குலக நாடுகள் தலையிடுவதன் மூலம் அழிவுகளை தடுப்பதோடு ஒரு தற்காலிக ஓய்வையும் அமைதியையும் உருவாக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் நினைத்தார்கள். ஆனால் முன்பு இருந்ததை விட இந்;தியாவில் ஒரு வலுவான ஆட்சியே உருவானது. இதனால் மேற்குலக நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்னடித்தன.

…………………………….

மொத்தத்தில் இந்தியாவை அருகில் வைத்துக் கொண்டே அதைக் கையாள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனைத் தரவில்லை. எமது முதலாவது வழி முறை தோல்வியை தழுவி விட்டது. பலத்த அழிவையும் தந்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ளாது மீண்டும் இந்தியாவை நம்பிக் கொண்டு யாராவது புறப்பட்டால் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தான் தெரிவிக்க முடியும்.

இப்பொழுது இரண்டாவது வழி பற்றி நாம் பேச வேண்டும். இரண்டாவது வழி என்பது இந்தியாவை இல்லாமல் செய்வதுதான். ஏற்கனவே சொன்னது போன்று இந்தியா தமிழீழத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடாது. தமிழீழ தேசத்திற்கு இன்றைக்கு இருப்பது இரண்டு எதிரிகள்தான். ஒன்று சிறிலங்கா மற்றது இந்தியா. இந்தியாவை வெற்றி கொள்ளாது எம்மால் சிறிலங்காவை வெற்றி கொள்ள முடியாது.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல நாடுகள் விருப்பத்தோடும் கட்டாயத்தோடும் இணைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் இந்தியா. தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து வடபகுதியில் உள்ள காஸ்மீர் வரை விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். ஒரிசாவில் இருந்து புதுடில்லிக்குப் போவதை “இந்தியாவிற்கு போகிறோம்” என்று சொல்கின்ற மக்கள் வாழ்கின்ற நிலப்பரப்புதான் இந்தியா.

பீகாரில் இருந்து ஆந்திரா வரை மாவோயிச தீவிரவாதிகளின் ஆதிக்கம் வேறு இருக்கின்றது. இந்தியாத் துணைக் கண்டத்தின் பல காடுகளும் கிராமங்களும் இவர்களின் செல்வாக்கில்தான் இருக்கின்றன. சிறிலங்காப் படைகளின் முற்றுகை இறுக்கமடைந்திருந்த நிலையில் தேசியத் தலைவர் தப்பிச் செல்லக் கூடிய இடமாக மாவோயிச தீவிரவாதிகளின் காடுகள் சிலரால் சுட்டிக்காட்ப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள்.

ஆயினும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் உள்ள போராளி இயக்கங்களோடு சரியான முறையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. அவர்களின் காடுகளில் தமது தளங்களை உருவாக்கியருக்கவில்லை. இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், இந்தியாவை அதிகம் கோபப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையில் இவைகளை தவிர்த்து விட்டார்கள்.

இப்பொழுது நாம் விடுதலைப் புலிகள் செய்யத் தவறியவைகள் பற்றியும் பேச வேண்டும். இந்தியாவில் விடுதலைக்குப் போராடும் மக்களோடு இணைந்து வேலை செய்வது பற்றி நாம் விவாதிக்க வேண்டும். தமிழீழ தாகத்தை கைவிடாது விடுதலைக்கான வழிகள் பற்றி தொடர்ந்து பேசுவோம்.

Link to comment
Share on other sites

எங்கட மக்களுக்கு இந்தியா மீது ஒரு அளவு கடந்த மயக்கம் இருக்கிறது... புலிகள் யாரையும் வெளிப்படையாக கண்டிப்பது இல்லை... பட்டும் படாமலும் சொல்லி விட்டு இந்தியா தனது நிலையை மாற்ற வேண்டும் எனும் பதத்தை கடைசியில் சேர்த்து விடுவது உண்டு... அதைக்கூட சிலர் புலிகள் இந்தியாவை வந்து காப்பாத்துங்கள் எண்று கெஞ்சுகிறார்கள் எண்று சொல்வது அதிகம்...

புலிகளின் சசிகுமார் மாஸ்ரர் ஒருநாள் வகுப்பு எடுக்கும் போது எனக்கு இருந்த சந்தேகம் ஒண்றை கேட்டேன்... அவர் மிகவும் விளக்கமாக அதுக்கு பதிலை சொன்னார்... அதுக்கு இந்திய இராணுவ காலங்களில் ஏன் நாங்கள் இந்தியாவிடம் அடிமையாக போகவில்லை என்பதில் இருந்து எங்களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் எண்று எதிர்பார்க்கின்றோம் என்பது வரைக்கும் சொன்னார்..

அவர் சொல்லதின் சுருக்கம்.. இந்தியா எங்களுக்கு உதவி செய்ய வேண்டாம். ஆனால் உபத்திரவம் தராமல் இருந்தால் போதும்...

சில மாற்று கருத்து கோமாளிகளின் வளியில் சொன்னால் "பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கோ"...

புலிகள் அசாம் மானில ULFA ( United Liberation Front of Asom) களுடன் தொடர்பை பேணுகிறார்கள் எண்று நீண்டகாலமாக இந்திய உளவுப்பிரிவு சொல்லி வந்தது.. ஆனால் மாவோக்களோடு தொடர்பு எண்று இப்போதுதான் சொல்கிறது..

Link to comment
Share on other sites

இங்கு பல ஆய்வாளர்கள்கு தாங்கள் எத்தனை பந்தி எழுதுகின்றார்கள் என்பதில் தான் அக்கறை,என்ன எழுதுகின்றோம் என்பதில் அல்ல, இதற்கு மேலுள்ளவர் நல்ல உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இங்கு பல ஆய்வாளர்கள்கு தாங்கள் எத்தனை பந்தி எழுதுகின்றார்கள் என்பதில் தான் அக்கறைஇஎன்ன எழுதுகின்றோம் என்பதில் அல்லஇ இதற்கு மேலுள்ளவர் நல்ல உதாரணம்."

அர்யுன் சீ அப்பிடியோ! அப்ப நீர் விபரமாக ஏதாவது எழுதும் பாப்பம்.

Link to comment
Share on other sites

இங்கு பல ஆய்வாளர்கள்கு தாங்கள் எத்தனை பந்தி எழுதுகின்றார்கள் என்பதில் தான் அக்கறை,என்ன எழுதுகின்றோம் என்பதில் அல்ல, இதற்கு மேலுள்ளவர் நல்ல உதாரணம்.

இதோடா அர்ஜீன் பேராசிரியர் வந்திட்டாரு. வைக்கோல் பட்டடை ..... பற்றி தெரியுமா? புரிந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்தியா எனும் நாடு இருபதுபகுதிகளுக்குமேல் சிதற வேண்டும்.

அப்போதுதான் ஈழத்தமிழனுக்கு விடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னது போன்று இந்தியா தமிழீழத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடாது. தமிழீழ தேசத்திற்கு இன்றைக்கு இருப்பது இரண்டு எதிரிகள்தான். ஒன்று சிறிலங்கா மற்றது இந்தியா. இந்தியாவை வெற்றி கொள்ளாது எம்மால் சிறிலங்காவை வெற்றி கொள்ள முடியாது.

தமிழீழத்தை இரு எதிரிகளான இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் வெகு தொலைவில் உள்ள வட அமெரிக்காவில் அல்லது மேற்கு ஐரோப்பாவில் நிறுவிவிட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. மக்கள் உள்ள இடத்தில்தானே நாடு இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

சபேஷ் அண்ணா சபாஷ்!

நல்ல கருத்துகள். புலிகள் இந்தியாயாவையோ ஒபாமாவிண்ட கப்பலையோ நம்பி ஒருபோதும் போராடவில்லை. தேர்தலில் காங்கிரஸ் தோற்று பாரதீய ஜனதா வந்திருந்தால் வன்னி பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்திருக்கும். தயா அண்ணா சொன்ன கருத்து அருமையானது. பாரதீய ஜனதா வந்திருந்தால் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கும். தயா அண்ணா சொன்ன கருத்தை தான் ஒருதடவை புலிகளின் பொட்டம்மானுக்கு முன்னர் உளவு பிரிவு பொறுப்பாளராக இருந்தவர் ஒரு நாள் ஒரு விடயத்தை பற்றிய விவாதத்தின் போது என்னிடம் சொன்னவர். ஆனால் சபேசன் நீங்கள் சொன்ன ஒரு கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. புலிகள் மாவோகளுடன் தொடர்பு ஏற்படுத்தவில்லை என்பதை எந்த அடிபடையில் உறுதியாக சொல்கிறீர்கள்? தெளிந்த சிந்தனையும் தீர்கதரிசன பார்வையும் கொண்ட எம் தலைவர் இந்த வரலாற்று நெருக்கடியை எவ்வாறு எதிர் கொண்டு எமது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார் என்பதை வரலாறு ஒரு நாள் சொல்லும். தயா அண்ணா பல விடயங்களை இங்கு என்னால் சொல்ல முடியாது. காலத்தின் கைகளில் அதற்கான பதிலை விட்டுவிட்டு எம்மால் இயன்றவரை எதாவது செய்ய முயல்வோம். அல்லது செய்பவர்களையாவது உபத்திரவம் செய்யாமல் இருப்போம். இங்கு பலர் புலிகளுக்கும் தலைவருக்கும் சேறு பூச முயல்கிறார்கள். பொயட் என்ற பெயரில் எழுதும் வ.ச. ஜெயப்பாலன் ஒரு சுப்பர் காமெடி சொன்னார் ஒரு நாள் யாழில். அவர் கொடுத்த புவியியல் தரவுகளின் அடிபடையில் புலிகள் ஜெயசிக்குருவையும் ஓயாத அலைகளையும் நடத்தி வெற்றி கொண்டு அவர் சொல் கேளாததால் தற்போதைய வன்னி போரில் அழிந்து விட்டார்களாம். அருமையான காமெடி. நல்ல ஒரு கவிஞரான ஜெயபாலனிடம் இந்த ஒரு காமெடியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் பால்ராஜ் அண்ணா அடிக்கடி சொல்வாராம் அரசியல் கதைப்பவர்களுக்கு போராட்டத்தின் வலி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்று. பலர் சொல்கிறார்கள் புலிகள் மரபு போர் முறையில் இருந்து கொரில்லா போர் முறைக்கு மாறாதது தான் அவர்களின் அழிவுக்கு காரணம் என்று. புலிகள் ஒரு கொரில்லா பாணியிலமைந்த பகுதி மரபு படையணியாகவே செயல் பட்டார்கள்.

அவர்களது தாக்குதல் உத்திகள் கூட ஒரு கொரில்லா போரியல் கலந்த ஒரு மரபு போர் பாணியிலேயே அமைந்திருந்தது.

இதனை பொட்டம்மான் மிக தெளிவாக ஒரு உரையில் சொல்லியிருந்தார்.

Link to comment
Share on other sites

சீமான்.. புலிகள் இந்தியாவுக்கு எதிராக முழுமையான சக்திகளுடன் வலுவாக கைகோர்க்காமல் இருக்க இந்திய புலநாய்வு பிரிவு சில இந்திய( தமிழ், வேற்று மொழி) அரசியல் தலைவர்களை பயன் படுத்தியது, புலிகளுக்கு நம்பிக்கை ஊட்டியது என்பதை நான் ( நான் மட்டுமே) நம்புகிறேன்... அதை நம்ப பல காரணங்கள் இருக்கின்றன... சிலவேளை காலம் கூட அதை உண்மை எண்று சொல்லும்...

இந்திய தமிழ் மக்களில் புலிகள் காட்டிய நம்பிக்கையை பயன் படுத்தினர்...

புலநாய்வு போரில் இது சர்வ சாதாரணம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பல துண்டுகளாக நிச்சயம் உடையும் அப்போது தமிழரருக்கு உலகில் 2நாடுகள் இருக்கும்.ஆனானப்பட்ட வல்லரசான சோவியத் யூனியனனே துண்டு துண்டாக உடைந்த போது இது எம் மாத்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகமயமாதல் பற்றிக் கொஞ்சம் படித்தால் சில விடயங்கள் தெளிவாகும்.

Link to comment
Share on other sites

நான் எவரையும் மனம் நோகடிப்பதற்காக அப்படி எழுதவில்லை.புலம் பெயர் பத்திரிகைகளில் பலர் எழுந்தமானமாக,இப்படித்தான் இருக்கும் என்று ஒரு அனுமானத்தில் அல்லது ஒரு பக்கமாக செய்திகளைப் பார்த்து ஆய்வுகளை எழுதுகின்றார்கள்.அதை விட பல‌பேர் தேசியத்திற்காக என்று இல்லாதுகளை எழுதி மக்களை நம்பவைக்க முயலுகின்றார்கள்.

உண்மையில் எத்தனை ஆய்வாளர்கள் நம்பகமான இடங்களில் இருந்து தகவல்களை பெற்று ஆய்வு எழுதுகின்றார்கள்.பத்திரிகைகளின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை பெரும்பாலான பத்திரிகைகள் மற்றவர்களில் காழ்ப்பைக் கொட்டியே பிழைப்பை நடாத்துகின்றன.அதில் பல‌ருக்கு ஒரு அற்ப சந்தோசம். நாங்கள் என்ன செய்திருக்க‌ வேண்டும் என்பதைப் பற்றி யார் எழுதினார்கள்.நிண்டவன்,போனவன்,வந்தவனை

எல்லாம் திட்டு திட்டென்று திட்டி வியாபாரம் செய்தீர்கள். யாரை விட்டு வைத்தீர்கள்.போனகிழமை சிவத்தம்பியுடன் நேர்காணல் பேட்டி கண்டவர் இந்தியாவை கடித்துகுதற தொடங்க,சிவத்தம்பி அவருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இந்தியாவுடனான உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை முதல் தெளிவுபடுத்தி பின்னர் மற்றதை கதையும் என்றால் இவரிடம் பதில் இல்லை.

எமது போராட்டம் இந்தியாவை அடித்தளமாக வைத்தே ஆரம்பித்தது.(யாருக்கும் ஆரம்பமே தெரியாதென்றால் கஷ்டம் தான்) பயிற்சி எடுக்கப் போகும் போது ஏன்,ஏதிற்கென்று யாரும் கேட்டீர்களா?

பின்னர் நாங்கள் தமிழ்நாட்டில் காம்ப் அடித்து பயிற்சி எடுக்க ஜெ.ஆர்.சத்தம் போட இந்தியா அப்படி ஒன்றும் இங்கு இல்லை என்றதை மறந்து போனீர்களா? ஆயுதம் தரும் போதாவது மரமண்டைகளுக்கு விளங்கவில்லயா? இந்தியாவை சுத்தலாம் என நினைத்திருந்தால் நாங்கள் அரசியலில் அருவரியே படிக்கவில்லை என்பது தான் உண்மை.

அதுதான் வேண்டாம், எங்களுக்கு ஆதரவாக இருந்த எத்தனையோ பத்திரிகைகாரர்கள் திரும்ப திரும்ப சொன்னார்கள்.வேண்டாம் விஷப்பரீட்சை என்று கேட்டீர்களா? எழுதியது யாரென்று முக்கியமில்லை 'வங்கம் தந்த பாடம்" வாசித்தீர்களா?

ஆயுதம் மட்டும் வைத்து நாடு பிடிக்கலாம் என்றும், பத்தாததிற்கு தற்கொலை தாக்குதல் வேறு செய்து தனிநாடு கிடைக்கும் நினைத்தது எவ்வளவு பெரிய பிழை என்று யாரும் நினைத்ததுண்டா? வெல்ல முடியாத போராட்டத்திற்கு எதிர்புக்காட்ட, உலக கவனத்தை ஈர்க்க நடாத்தப்படுவதுதான் தற்கொலைத்தாக்குதல் நாடு கேட்பவன் செய்வதெல்ல.பலஸ்தீனியர் மாதிரி காலம் முழுக்க போராடிகொண்டே இருக்கலாம், தீர்வு கிடைக்காது. ‌

Link to comment
Share on other sites

உலகமயமாதல் என்பது தேசிய இனங்களை அடிமையாக வைத்திருப்பது அல்ல. உலகமயமாக்கலின் அடிப்படையில் நாடுகள் நெருங்கி வருகின்றன. கூட்டமைப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் சுதந்திரமான நாடுகளே கூட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. தேசிய இனங்கள் பிரிந்து சுதந்தரம் அடைந்து பின் சேர்கின்றன.

இந்தியாவுக்குள் உள்ள நாடுகள் சுதந்திரம் அடைவதும், பின்பு அவைகள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவதும் உலகமயமாக்கல் என்னும் விதியிலேயே நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகமயமாதல் என்பது தேசிய இனங்களை அடிமையாக வைத்திருப்பது அல்ல. உலகமயமாக்கலின் அடிப்படையில் நாடுகள் நெருங்கி வருகின்றன. கூட்டமைப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் சுதந்திரமான நாடுகளே கூட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. தேசிய இனங்கள் பிரிந்து சுதந்தரம் அடைந்து பின் சேர்கின்றன.

இந்தியாவுக்குள் உள்ள நாடுகள் சுதந்திரம் அடைவதும், பின்பு அவைகள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவதும் உலகமயமாக்கல் என்னும் விதியிலேயே நடக்கும்.

இந்தியாவ விடுங்கண்ணே அது இப்பவும் கூட்டமைப்பாத்தான் இருக்கு. இதைவிட அதுக்குமுதல் போட்ட திட்டம் பறவாயில்ல. கியூறியஸ் அதுக்கு ஐடியா எப்பவோ போட்டிருக்கார் அது வேக்கவுட் ஆகுமான்னு யோசிச்சுப்பாருங்க! :D

Link to comment
Share on other sites

நாம் இன்னும் இந்தியாவின் ஈழ எதிர்ப்பு கொள்கையானது இந்தியாவை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையே என்று நினைத்துக் கொண்டிருப்போமாயின் அது எமது அறியாமையே.

பிராமண சமூகம் இந்திய அரசியலில் ஏகபோக செல்வாக்கை கொண்டதல்ல. மாதஜி சோனியா, தலைப்பா சிங்கு , எம்.கே. அந்தோனி (பாதுகாப்பு) இவர்கள் பிராமணர்கள் அல்ல. றோ வின் தலமை அதிகாரி கே.சி. வர்மா ஒரு சத்திரியர்.

ஆக, இந்தியாவின் ஈழ எதிர்ப்புக்கு நாம் நினைத்துக் கொண்டிருக்கும் "ஆரிய பார்ப்பனிய" காரணம் அடிப்படையற்றது.

ஈழப் பிரிவினை, இந்தியாவின் பூகோள அரசியல் சூழலில் தனக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்தியா பார்க்கின்றது. ஈழம் பிரிந்தால் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்று நம்புவதற்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெரு விரல் சூப்பிக் கொண்டு திரிபவர்கள் அல்ல.

தமிநாட்டில் இருக்கு சில பிராமணர்கள், திராவிடக் கட்சிகளின் தீவிர பிராமண எதிர்ப்புக் கொள்கைகளை எதிர்த்து, பழி தீர்க்கும் முகமாக ஈழ எதிர்ப்பை தீவிரமாக கடைப் பிடிக்கின்றார்கள். இவர்கள் பேச்சுக்கு தலையாட்டுவதற்கு மத்திய அரசுத் தலைவர்கள் பிராமணர்கள் அல்ல. அங்கு இவர்கள் பேச்சு எடுபடாது. சுப்பிர மணிய சுவாமி அவர்களுக்கு ஒரு கோமாளி. சுப்பிர மணிய சுவாமி சோனியாவைப் பற்றி எழுதியதை சந்தர்ப்பம் கிடைக்கும் போது வாசியுங்கள்.

இந்த தமிழக பிராமணர்களின் கருத்தைக் கேட்டு, அதை அடிப்படையாகக் கொண்டு இந்திய கொள்கைய நாம் அனுமானிப்போமாயிருந்தால் அதுவும் எமது அறியாமையே.

இன்று உல‌க‌ மாற்ற‌ம் ஈழ‌ப் பிர‌ச்ச‌னையை இந்தியாவின் ஏக‌போக‌ க‌ட்டு பாட்டில் இருந்து வெளியே கொண்டு வ‌ந்திருக்கின்ற‌து. இந்தியாவின் செல்வாக்கு ஈழ‌ப் பிர‌ச்ச‌னையைப் பொறுத்த‌ மட்டில் நன்கு குறைக்கப் பட்டு இன்று அது ஒரு தாதாவாக அல்லது ஒரு வில்லனாக, இனப்படுகொலை ஆதரவாளியாக்கியிருக்கின்றது.

இந்தியாவால் தொடர்ந்து தாதாவாக இருக்கமுடியாது. இந்தியா ஒன்றும் தான்னிறைவு பெற்ற அபிவிருத்தி யடைந்த நாடல்ல. ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நாடுதான்.

நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்முடைய பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது தான், இந்தியாவின் எதிர்ப்பை நிரந்தரமாகச் சமாளிப்பதற்கு உதவும். இந்தியாவை எமது சூழலில் இருந்து வெளியேற்றும். இந்தியா துண்டாடப் படும் வரை பொறுத்திருப்போம் என்பதைவிட இது இலகுவானது. நடைமுறைச் சாத்தியமானது.

இதற்கு முதற் கட்டம் நாம் எமது சர்வதேச அமைப்பைக் கட்டியெளுப்புவது தான். உருத்திர குமாருக்கும் ஏனையோருக்கும் எம்முடைய ஆதரவையும், பின் பலத்தையும் வளங்குவது மிக அவசியம்.

Link to comment
Share on other sites

நாம் இன்னும் இந்தியாவின் ஈழ எதிர்ப்பு கொள்கையானது இந்தியாவை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையே என்று நினைத்துக் கொண்டிருப்போமாயின் அது எமது அறியாமையே.

பிராமண சமூகம் இந்திய அரசியலில் ஏகபோக செல்வாக்கை கொண்டதல்ல. மாதஜி சோனியா, தலைப்பா சிங்கு , எம்.கே. அந்தோனி (பாதுகாப்பு) இவர்கள் பிராமணர்கள் அல்ல. றோ வின் தலமை அதிகாரி கே.சி. வர்மா ஒரு சத்திரியர்.

ஆக, இந்தியாவின் ஈழ எதிர்ப்புக்கு நாம் நினைத்துக் கொண்டிருக்கும் "ஆரிய பார்ப்பனிய" காரணம் அடிப்படையற்றது.

ஈழப் பிரிவினை, இந்தியாவின் பூகோள அரசியல் சூழலில் தனக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்தியா பார்க்கின்றது. ஈழம் பிரிந்தால் தமிழ்நாடு பிரிந்துவிடும் என்று நம்புவதற்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பெரு விரல் சூப்பிக் கொண்டு திரிபவர்கள் அல்ல.

தமிநாட்டில் இருக்கு சில பிராமணர்கள், திராவிடக் கட்சிகளின் தீவிர பிராமண எதிர்ப்புக் கொள்கைகளை எதிர்த்து, பழி தீர்க்கும் முகமாக ஈழ எதிர்ப்பை தீவிரமாக கடைப் பிடிக்கின்றார்கள். இவர்கள் பேச்சுக்கு தலையாட்டுவதற்கு மத்திய அரசுத் தலைவர்கள் பிராமணர்கள் அல்ல. அங்கு இவர்கள் பேச்சு எடுபடாது. சுப்பிர மணிய சுவாமி அவர்களுக்கு ஒரு கோமாளி. சுப்பிர மணிய சுவாமி சோனியாவைப் பற்றி எழுதியதை சந்தர்ப்பம் கிடைக்கும் போது வாசியுங்கள்.

இந்த தமிழக பிராமணர்களின் கருத்தைக் கேட்டு, அதை அடிப்படையாகக் கொண்டு இந்திய கொள்கைய நாம் அனுமானிப்போமாயிருந்தால் அதுவும் எமது அறியாமையே.

இன்று உல‌க‌ மாற்ற‌ம் ஈழ‌ப் பிர‌ச்ச‌னையை இந்தியாவின் ஏக‌போக‌ க‌ட்டு பாட்டில் இருந்து வெளியே கொண்டு வ‌ந்திருக்கின்ற‌து. இந்தியாவின் செல்வாக்கு ஈழ‌ப் பிர‌ச்ச‌னையைப் பொறுத்த‌ மட்டில் நன்கு குறைக்கப் பட்டு இன்று அது ஒரு தாதாவாக அல்லது ஒரு வில்லனாக, இனப்படுகொலை ஆதரவாளியாக்கியிருக்கின்றது.

இந்தியாவால் தொடர்ந்து தாதாவாக இருக்கமுடியாது. இந்தியா ஒன்றும் தான்னிறைவு பெற்ற அபிவிருத்தி யடைந்த நாடல்ல. ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நாடுதான்.

நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்முடைய பிரச்சனையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது தான், இந்தியாவின் எதிர்ப்பை நிரந்தரமாகச் சமாளிப்பதற்கு உதவும். இந்தியாவை எமது சூழலில் இருந்து வெளியேற்றும். இந்தியா துண்டாடப் படும் வரை பொறுத்திருப்போம் என்பதைவிட இது இலகுவானது. நடைமுறைச் சாத்தியமானது.

இதற்கு முதற் கட்டம் நாம் எமது சர்வதேச அமைப்பைக் கட்டியெளுப்புவது தான். உருத்திர குமாருக்கும் ஏனையோருக்கும் எம்முடைய ஆதரவையும், பின் பலத்தையும் வளங்குவது மிக அவசியம்.

மிக நல்ல கருத்துக்கள் ஈசன்..!

Link to comment
Share on other sites

காங்கிரஸ் தற்போது பாக்கிஸ்தானுடனும் சீனாவுடனும் மோதுகிறது....புலம் பெயர் தமிழர்கள் காஷ்மீர் தனி நாடாகவும் அருணாச்சல பிரதேசம் சீனாவின் பகுதி என்றும் பரப்புரை செய்ய வேண்டும் (இந்த பரப்புரை சீனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் கேட்கும்படி செய்யவேண்டும்).இதுவே தற்சமயம் சீனாவையும் பாக்கிஸ்தானையும் சிறிலங்காவிடமிருந்து பிரிக்க வழிகோலும்.

Link to comment
Share on other sites

மகிந்த தமிழ் பேசுவதையும், அவருடைய அமைச்சரவையில் தமிழ் பேசுபவர்கள் இடம்பெற்றுள்ளதையும் வைத்து அவரை சிங்கள பேரினவாதி இல்லை என்று வாதிட முடியாது. அதே போன்று இந்தியாவின் ஆரிய பார்ப்பனியம் அணிந்துள்ள முகமூடிகளைக் காரணம் காட்டி அதனை மறுதலிக்க முடியாது. இந்துத்துவ பிஜேபியின் ஆட்சியில்தான் இஸ்லாமியரான அப்துல்கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சீக்கியர் பிரதமராக இருக்கிறார். மலையாளிகள் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். இத்தாலிப் பெண்மணி சக்தி மிக்கவராக இருக்கிறார் என்றெல்லாம் சும்மா சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கண்ணுக்குப் புலப்படாத ஒரு மிகப் பெரிய சக்தி இந்தியாவில் இருக்கிறது. அதுவே ஆரியப் பார்ப்பனியம்.

ஆனால் இங்கே இது குறித்து அதிகம் பேசி விவாதத்தை இதற்குள் சுருக்க விரும்பவில்லை. இதைப் பற்றி தனியாக விவாதிக்கலாம்.

ஆனால் முக்கியமான ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்தியாவை மீறி மேற்குலகின் உதவியோடு தமிழீழம் பெறலாம் என்பது மிகப் பெரிய கனவு. நடக்கவே நடக்காது. முள்ளிவாய்க்காலில் இத்தனை படுகொலைகள் நடைபெற்ற பின்பும், மக்களை மீட்பது பற்றி அமெரிக்க மரீன் படையினர் ஆலோசனை என்று கூட சொல்லி விட்டு கடைசியில் பின்வாங்கியதற்கு காரணம் இந்தியாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழர்களை விட இந்தியாவின் சந்தை உலகநாடுகளுக்கு மிக முக்கியம்.

இந்தியா உடையும் என்பது உண்மை. ஆனால் அதுவரை காத்திருக்கச் சொல்லவில்லை. தமிழர்கள் அந்த உடைவை துரிதப்படுத்தப்படுத்துவதற்கு உழைக்க வேண்டும். இந்த உடைவுதான் தமிழீழத்தை பிறக்கச் செய்யும்.

Link to comment
Share on other sites

  • 3 years later...

இந்தியாவை உடைக்க நினைக்க வேண்டும்ஜ் என்று  நினைப்பவன் பயங்கரவாதி .................ஆனால் இந்தியாவை ஒருமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளையும் ,அவர்கள் சார்ந்த ஈழத்தமிழினத்தையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய படுபாவிகளை .என்ன என்று சொல்ல ,எப்படி சொல்ல''''''.............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் நியானியின் பழைய  பகுதியில் பொக்கிசமாக பதியணும் :lol::D :D :D :D

Link to comment
Share on other sites

இப்பொழுதும் சொல்கிறேன். இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்தியா உடைந்து தமிழ்நாடு தனிநாடாக மாறினால் அப்பொழுது தமிழீழம் அமைவதற்கு சந்தர்ப்பம் உண்டு. இப்படியான கட்டுரைகளை எடுத்து விவாதிக்க முனையும் தமிழ்சூரியனுக்கு நன்றி

இதை விவாதத்தில் சொல்லியிருக்கிறேன்

ஆனால் முக்கியமான ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்தியாவை மீறி மேற்குலகின் உதவியோடு தமிழீழம் பெறலாம் என்பது மிகப் பெரிய கனவு. நடக்கவே நடக்காது. முள்ளிவாய்க்காலில் இத்தனை படுகொலைகள் நடைபெற்ற பின்பும், மக்களை மீட்பது பற்றி அமெரிக்க மரீன் படையினர் ஆலோசனை என்று கூட சொல்லி விட்டு கடைசியில் பின்வாங்கியதற்கு காரணம் இந்தியாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழர்களை விட இந்தியாவின் சந்தை உலகநாடுகளுக்கு மிக முக்கியம்.

Link to comment
Share on other sites

சபேசன் வணக்கம் உங்களுடைய நேரத்தையும் எழுத்தையும் மதிக்கிறேன் ,,,,,,,,,,,,,,,,,உண்மையில் எம் தோப்பில் கோடி உறவுகள் அங்கே உள்ளதால் தான் எங்களுக்கு இன்றுவரை இந்தியாவில் அக்கறை ..................இதையே தமிழீழ விடுதலைப்புலிகளும் செய்தார்கள் ,அவர்கள் இந்தியாவை உடைக்க நினைத்திருந்தால் ,,,,,,,,,,,,,,,இன்று ராஜ வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள் ................புரியும் என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

மேற்குலகாலும் இந்தியாவாலும் தமிழர்களுக்கு சில உரிமைகள் கிடைக்கும். இயல்பு வாழ்க்கை திரும்பும். அதை வைத்துக் கொண்டு தொடர்ந்து முயற்சித்தால் 100 ஆண்டுகளில் தமிழீழம் கிடைக்கும். அல்லது கட்டுரையில் சொன்னது போன்று இந்தியா உடைந்தால், இன்னும் விரைவாக தமிழீழம் கிடைக்கும்.

மாணவர் போராட்டம் இந்தியாவை உடைக்காது என்பதே என்னுடைய கணிப்பு. ஆகவே தமிழீழத்தை நான் அருகில் எங்கும் காணவில்லை. இப்பொழுது உடனடியாக சில உரிமைகளோடும், இயல்புவாழ்வோடு தமிழ் சமூகத்தை மீண்டும் பலம் மிக்கதாக கட்டுவதே சரியான நகர்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதும் சொல்கிறேன். இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்தியா உடைந்து தமிழ்நாடு தனிநாடாக மாறினால் அப்பொழுது தமிழீழம் அமைவதற்கு சந்தர்ப்பம் உண்டு. இப்படியான கட்டுரைகளை எடுத்து விவாதிக்க முனையும் தமிழ்சூரியனுக்கு நன்றி

இதை விவாதத்தில் சொல்லியிருக்கிறேன்

ஆனால் முக்கியமான ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இந்தியாவை மீறி மேற்குலகின் உதவியோடு தமிழீழம் பெறலாம் என்பது மிகப் பெரிய கனவு. நடக்கவே நடக்காது. முள்ளிவாய்க்காலில் இத்தனை படுகொலைகள் நடைபெற்ற பின்பும், மக்களை மீட்பது பற்றி அமெரிக்க மரீன் படையினர் ஆலோசனை என்று கூட சொல்லி விட்டு கடைசியில் பின்வாங்கியதற்கு காரணம் இந்தியாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. தமிழர்களை விட இந்தியாவின் சந்தை உலகநாடுகளுக்கு மிக முக்கியம்.

 

இதை  தவறு என்று இன்று இந்தியா உட்பட பல நாடுகளும் உணர்கிறார்களா இல்லையா????

 

புலிகள் விட்ட தவறை  மட்டும் தான் திருத்தவேண்டுமா?

இவர்களுக்கும் கட்டுரை எழுதலாமே தலைவா???????

Link to comment
Share on other sites

ஐயா எங்களையும் முட்டாள்கள் என்று நினைப்பது தவறு .....................ஆனால் அன்று ஒரு தீர்க்கதரினம் தெரிந்த தலைவரால் சொல்லப்பட்டது இப்போ நடக்குது ......................இது ஆரம்பம் .........ஆகவே .முடிவும் அவர் சொன்னதுபோலவே நடக்கும் ..............அதையே நம்புகிறோம் ....என்னில் செயல்பாடு மட்டுமே எம்மிடம் உள்ளது ...........வெறும் எழுத்து அல்ல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.