Jump to content

தமிழீழக் குடியேற்ற நாடு


Recommended Posts

கிழிங்சுது போ...... சிங்களவனோட இவ்வளவு காலமா டீல் பன்னியும் புத்திவரவில்லையா

இனி இலங்கையில் எல்லோரும் ஒருதாய் மக்களாக வாழ்வார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் உருவாவது நடக்காது என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். அதைப் பற்றி கடந்த வாரங்களில் இரண்டு பதிவுகளை செய்திருக்கிறேன்.

------

இந்தியா , ஈழத்தமிழனுக்கு செய்த அநியாயாம் , கொஞ்ச நஞ்சமல்ல.

பெரும்பாலான ஈழ‌ இந்து சமைய‌த்தவர்களையும் , கத்தோலிக்க சமைய‌த்தவர்களையும் கொன்று குவித்த அகிம்சை வாந்தி நாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இருக்கும் வரை தமிழீழம் உருவாவது நடக்காது என்பதை நானும் வலியுறுத்த விரும்புகிறேன். அதைப் பற்றி கடந்த வாரங்களில் இரண்டு பதிவுகளை செய்திருக்கிறேன்.

இந்தியா இருக்கும். பொருளாதார ரீதியில் முதல் 20 நாடுகளுக்குள் வரும் இந்தியா விரைவில் ஒரு வல்லரசாகவும் வரும். சோவியத் யூனியன் உடைந்ததுபோல் இந்தியா உடையும் என்று நினைக்கக்கூடாது. அத்துடன் இந்தியாவின் கிளர்ச்சிகளின் வரலாற்றினைப் பார்த்தால் அவை வெறும் கொசுக்கடி போன்றுதான் உள்ளன.

எனவே முடிவை நீங்களே அனுமானிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு வேற தீவுகள வேண்டவேணாமாம், ஸ்ரீலங்கா கெதியில வங்குரோத்தாகி விலைக்கு வருமாம். உலகம் முழுக்க கடனாம், கட்டக்கூட காசில்லயாம். எங்கட கனவு நிறைவேற கனநாள் காத்திருக்கத்தேவையில்;லையாம்.. குளொபல்தமிழ்நியூஸ் நெட். :lol:

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல, வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி, நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.

ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது. வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும், இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை. ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு தந்திரத்தில், ஏதோ ஒரு முறையில் அவர்களின் இலக்குகள் அடையப்பட்டே தீரும்;. உண்மையான நியாயமான தமது இலட்சியங்களை இன்று அடையாதவர்கள் நிற்சயம் அதை நாளை அடைந்தே தீர்வார்கள்.

தொடர்ந்தும் துரத்தப்படும், அழுத்தப்படும் இனமாக இருந்த யூதர்கள் சிந்தித்தனர்.

நமக்குத் தேவை நாம் நின்மதியாக வாழ்வதற்கு எமக்கேயான நிரந்தரமான ஒரு தேசம். எத்தனைகாலம்தான் நாம் இப்படி ஓடிக்கொண்டே இருப்பது? உலகில் பெரும்பான்மையான இனங்களுக்கு தாம் வாழ்வதற்கென்று நிரந்தரமான தேசங்கள் இருக்கின்றன. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு என்று எங்கள் நிலமான பாலஸ்தீன் இருக்கின்றதே! அதை நாங்கள் எப்படி அடைவது? இன்றைய உலகியலின் பார்வையில் அது சாத்தியமே இல்லையே! சாத்தியப்படாதவற்றையும் நாம் எப்படி சாத்தியப்படவைப்பது? என இவற்றைத்தான் அவர்கள் சிந்தித்தார்கள். சிறு சிறு குழுக்களாக கூடிப்பேசினார்கள். எல்லாமே இரகசியக்கூட்டங்கள். சுற்றியிருக்கும் சுவர்களில் ஒருவார்த்தைகூட எதிரொலிக்காத வண்ணம் தமது வார்த்தைகளை மிக இரகசியமாகப்பேசினார்கள்.

இவர்களில் தியொட்டர் ஹெசில் என்ற ஜெர்மனியில் இருந்த யூதர், பாலஸ்தீனத்தை நாம் கைப்பற்ற என்ன வழி என்று ஒரு பாரிய திட்டமே போட்டு வைத்திருந்தார்.

அந்த திட்டத்தை நிறைவேற்ற யூதப்பணக்காரர்களின் உதவிகளை அவர் நாடினார். எவ்வளவுதான் பணக்காரர்களாக யூதர்கள் மற்ற நாடுகளில் மாறியிருந்தாலும் அவர்கள் யூதர்கள் என்ற இன உணர்வு மிக்கவர்களாகவே இருந்தார்கள். ஹெசில் இந்த திட்டம் குறித்து பல யூதப்பணக்காரர்களுடன் இரகசியப்பேச்சுக்களை நடத்தினார். ஹெசிலின் இந்த திட்டம் ஜியோனிசம் எனப் பெயரிடப்பட்டிருந்தது.

முதலில் யூதர்களை ஒருங்கிணைக்கவேண்டும். மிகப்பிரமாண்டமான வலையமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும், உலகில் யூதர்கள் எந்த மூலையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அனைவரினதும் எண்ணங்கள் ஒரே புள்ளியை நோக்கித்தான் குவியவேண்டும். அந்தப்புள்ளிதான் யூதர்களின் பூமியாகிய பாலஸ்தீன். அதனை அடைய எத்தனை காலம்வேண்டுமானாலும், எத்தனை இழப்புக்களை சந்திக்கவேண்டுமானாலும் யூதர்கள் தயாராக இருக்கவேண்டும். சுருக்காகச்சொல்வதென்றால் ஜியோனிஸத்தின் அர்த்தம் கொள்கை நோக்கம் எல்லாம் இதுதான்.

இந்த ஜியோனிஸம், 1975 களில் மிகத்தீவிரமாக மிக இரகசியமாக யூதர்களிடம் பரவிக்கொண்டிருந்தது. ரபிக்கள் ஜியோனிஸம் பற்றி யூதமக்களிடம் விரிவாக, ஆழுத்தம் திருத்தமாக எடுத்துக்கூறினர்.

“யூதர்களிடையே இந்த எண்ணத்தினை மிக ஆழமாக விதைக்கவேண்டும். யூத தேசிய உணர்வை அவர்களுக்குள்த் தூண்டவேண்டும். நமக்கு நாடு வேண்டும் என்றால் நாம்தான் அதற்காக உழைக்கவேண்டும். கலாலங்காலமாக நாம் எத்தனையோ பாhர்த்தாகிற்று, எத்தனையோ இழந்தாயிற்று. யாரும் எமக்கான தனிநாட்டை தட்டில்வைத்து தூக்கிக்கொடுத்துவிடப்போவதில்லை. எல்லோரும் அவர் அவர்களின் சுயநலங்களிலேயே தங்கிருக்கின்றனர். ஆனால் எமக்கான நாட்டை நாமே மலரச்செய்யவேண்டும்”

நாடு என்றால் என்ன? ஒரு நிலப்பரப்பு. குடியிருபுக்கள். வணிகநிலங்கள், வயல்வெளிகள் தோட்டங்கள் என பலவற்றை அடுக்கியது. அவ்வளவுதானே? நாம் அவற்றை விலைகொடுத்துவாங்குவோம். வீடுகளில் இருந்து பெரிய நிறுவனங்கள்வரை வாங்குவோம், விவசாயம் செய்ய நிலங்களை வாங்குவோம். வாங்கி வாங்கி யூதர்களுக்கே உரியதாக சேர்ப்போம். சேர்த்துக்கொண்டே போவோம். இப்படி நாம் செய்துகொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பினை நாம் காசு கொடுத்துவாங்கியிருப்போம். கிட்டத்தட்ட ஒருதேசமே யூதர்களுக்குச்சொந்தமாக இருக்கம். அந்த நிலப்பரப்பு பாலஸ்தீனமாக இருக்கட்டும் அது தானே எம் பல நூற்றாண்டுக்கனவு! ஹெசிலின் இந்தத்திட்டம் யூதப்பணக்காரர்களை மெய்சிலிர்க்க வைத்தது. உணர்சிவசப்பட்டவர்களாக எவ்வளவு பணம் என்றாலும் வழங்க தாம் தயார் என்றனர்.

இதன் முதற்கட்டமாக 1896ஆம் ஆண்டில் “உலக யூதர் கொங்கிரஸ்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு சுவிட்ஸர்லாந்தில் மிக இரகசியமாக அழைக்கப்பட்ட ஒரு சிலருடன் நடைபெற்றது. இங்குதான் ; The grand Plane என்ற நூறுபக்க அறிக்கையினை ஹெசில் வாசித்தார். அதை “ஒபரேஷன் பாலஸ்தீன்” என்று கூட அழைக்கலாம். யூதர்கள் இனிவரும் காலங்களில் எப்படி எல்லாம் தமது புத்திசாலித்தனங்களை உபயோகித்து தந்திரமாக காய்களை நகர்த்தவேண்டும். எப்படி எல்லாம் செயற்படவேண்டும், எப்படி எல்லாம் செயற்படக்கூடாது என சகலவற்றையும் விலாவாரியாக தெரிவிக்கப்பட்ட அறிக்கையாக அது இருந்தது.

அந்த அறிக்கையில் யூதர்கள் அன்றைய நிலையில் எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என சொல்லப்பட்வைகளில் முக்கியமானதை பார்த்தோமானால்,

“யூதர்களுக்கு என்று ஒரு தேசத்தை அமைத்தே தீருவோம் என நாம் சபதம் எற்றுக்கொள்வோம். எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்தாலும், எத்தனைபேர்களை நாம் இழந்தாலும், எந்தச்சூழ்நிலையிலும் எமக்கான தேசம் என்ற நிலையில் இருந்து நாம் பின்வாங்கக்கூடாது. எம் தேச உருவாக்கலை தகர்க்க பல சக்திகள் எம்மைத்தடுக்க எப்படியான சதித்திட்டங்களையும் தீட்டும், அவற்றை உடனடியாக இனங்கண்டு நாம் தகர்க்கவேண்டும். எம் இனம்மீதான பற்றும், எமக்கான நாடு என்ற உறுதியும் எம்மனங்களில் இருந்தால் எவராலும் எதனையும் செய்துவிடமுடியாது”

நல்ல முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருப்பது நண்று!!!!

நல்ல முயற்சி சபேசன் அண்ணா.....

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எனும் வலிமை மிக்க பாலிய நண்பன் இருந்தான். இது தான் இஸ்ரேல் உருவாக மிக முக்கிய காரணம். ஆனால் நாம் நண்பர்கள் அற்ற அனாதைகள் என்பதை புரியுங்கள்.வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நண்பன் முக்கியம் என்பதை முள்ளி வாய்க்கால் எமக்கு உணர்த்தியிருக்கும் என நினைக்கிறேன்.

சபேசன், வித்தியாசமான சிந்தனை. ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்று சொல்ல தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்களும் தமிழர்களும் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை யாழ் களத்திலேயே உள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=61982

கொலை செய்யப்பட்டாலும் துரத்தியடிக்கப்பட்டாலும் அதே இடங்களில் மீண்டும் வந்து வாழ்வதற்கு யூதர்கள் தயங்கியதே கிடையாது. உலகமெல்லாம் பரவி தங்கள் வியாபாரங்களை வலைப்பின்னலாக பரவச் செய்தவர்கள் யூதர்களே. அதாவது Multi Level Marketing ஐ யூதர்கள் 17அம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டார்கள்.

வியாபாரத்தை விஸ்தரிக்க எந்தவிதமான குறுக்கு வழிகளில் நுளைய அவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால் தமது வாடிக்கையாளர்களை அவர்கள் சிறிதளவும் ஏமாற்றவில்லை. எவ்வளவு தாம் முன்னேறினார்களோ அவ்வளவு தமது இனமும் முன்னேற வேண்டும் என்பதில் யூதர்கள் மிக உறுதியாக இருந்தார்கள்.

தம்மினத்தில் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு துறையில் சிறப்பானவராக இருந்தார் என்றால் அவர் அதேதுறையில் உச்சத்திற்கு செல்ல சகல உதவிகளையும் மற்ற யூதர்கள் வழங்கினர்.

யூதர்களின் இந்த திட்டங்களை நிறைவேற்ற பணம் தேவை. அதற்காக யூதர்களால் ஒரு வங்கி உருவாக்கப்படும். அதன் பெயர் “யூத தேசிய வங்கி” யூதர்கள் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாஙகுவதற்கான சகல உதவிகளையும் அந்த வங்கி தரும் என அறிவிக்கப்பட்டது.

சொன்னபடியே எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக இயங்கியது யூத தேசிய வங்கி. பிற நாடுகளிலும் இருந்த யூதர்கள் மெல்ல மெல்ல பலஸ்தீனத்தை நோக்கி நகரத்தொடங்கினார்கள். பலஸ்தீன யூதர்கள் மௌனமாக புரட்சிக்கு தயாராகிகொண்டிருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டு பிறந்தபோது, பலஸ்தீனத்தில் இருந்த மொத்த யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தை தாண்டியது.

மெல்ல மெல்ல பலஸ்தீனத்தில் யூத நில வங்கிகள் முளைக்க ஆரம்பித்தன. அதிக இலாபம் கிடைக்குதென எண்ணி அரேபியர்கள் யூதர்களின் வலையில் விழுந்தனர். அரேபியர்கள் அபபோது நினைத்ததெல்லாம் ஒன்றுதான். இன்னும் எவ்வளவு அதிகமாக விலை சொல்லலாம் என்பதுதான.; அதன்படியே புறம்போக்கான தங்கள் நிலங்களுக்கு எல்லாம் தாறுமாறாக விலைகளைச்சொன்னார்கள், எவ்வளவு சொன்னாலும் யூதவங்கிகள் அவற்றை வாங்கிப்போட்டுக்கொண்டே இருந்தன. மறுபுறம் யூத வங்கியின் நிலங்கள் பெருகிக்கொண்டே இருந்தன.

இன்னொருபுறம் உலகமெங்கும் உள்ள யூதர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடையாக தமது பணத்தினை இந்த வங்கிக்கு வழங்கிக்கொண்டே இருந்தனர். பணம் இல்லாத யூதர்கள் கூட, தம்மாலான வழிகளில், புத்தகம்விற்று, கலைநிகழ்வுகளை நிகழ்த்தி, சாகசங்கள் புரிந்து, என உணர்வுடன் இந்த வங்கிக்கு பணம் வழங்கிக்கொண்டே இருந்தார்கள்.

தமிழர்களும் யூதர்கள் போல் இருக்கவேண்டுமென்றால் இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதிகளில் உள்ள காணிகளை வாங்கித்தான் குடியேறவேண்டும். தனித்தீவில் அல்லது வேறொரு நாட்டில் குடியேற முனைவது (ஆயிரம் பேர் என்றாலும்) ஒரு பயனையும் தராது ஏனெனில் புலம் பெயர்ந்த நாடுகளில் சிலவற்றில் இலட்சக் கணக்காக இருந்தும் நம்மை யாரும் ஏறெடுத்துப் பார்க்காத அளவிற்குத்தான் நமது பொருளாதார, அரசியல் பலம் உள்ளது.

Link to comment
Share on other sites

இந்தியா விரைவில் ஒரு வல்லரசாகவும் வரும். சோவியத் யூனியன் உடைந்ததுபோல் இந்தியா உடையும் என்று நினைக்கக்கூடாது.

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? சோவியத் யூனியன் அழிய முதல் அது அழிந்து போகாது என்று நினைத்தவர்கள் பலர். இந்தியாவை பொறுத்தளவில் நீங்களும் அப்படி ஒருவராக இருக்கலாம் அல்லவா?

இந்தியா அழிந்து சிறிய நாடுகளாவதினால் சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான், தலிபான் பொன்ற பல நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் நன்மை கிடைக்க இருக்கிறது.

Link to comment
Share on other sites

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் தமிழர்களினுடையவைதான். அதன் காணி உறுதிப் பத்திரங்களும் எங்களின் பெயரில்தான் இருக்கின்றன. எங்களின் பெயரில் இருக்கின்ற காணிகளையே நாம் எப்படி நாமே வாங்க முடியும்? அத்துடன் அந்த நிலத்தில் தமிழர்கள் வாழவும் செய்கிறார்கள்.

ஆகவே இந்த இடத்தில் யூதர்கள் போன்ற தமிழர்களும் நடந்து கொள்ள வேண்டிய தேவை எழவில்லை. பாலஸ்தீனத்தில் யூதர்களிடம் நிலம் இருக்கவில்லை. ஆகவே அவர்கள் அதை வாங்கினார்கள்.

இலங்கைத் தீவில் உள்ள தமிழர் தாயகத்தை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. ஆனால் இப்படியே போனால் ஒரு நேரத்தில் அந்த நிலை எமக்கு ஏற்படலாம். இப்பொழுது தமிழர்களுக்கு சொந்தமாக இருக்கின்ற தாயகத்தை மீட்கின்ற தேவையே இருக்கின்றது.

தாயகத்தை மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஒரு நிலப் பரப்பு எமக்குத் தேவை. அதைப் பற்றித்தான் நான் இங்கே பேசுகிறேன்.

வடக்கு கிழக்கில் காணி வாங்கி எங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் என்றால் எங்கள் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும். காணி இன்னமும் எங்களிடம் இருக்கின்றது. அதை எதிரி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான். அவனிடம் இருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு நாங்கள் போராட வேண்டும். நாங்கள் இழந்தவைகளை கட்டி எழுப்ப வேண்டும். கட்டி எழுப்ப ஒரு தளம் வேண்டும். அதற்கு ஒரு நிலம் வேண்டும்.

இணைந்து முயற்சிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்? சோவியத் யூனியன் அழிய முதல் அது அழிந்து போகாது என்று நினைத்தவர்கள் பலர். இந்தியாவை பொறுத்தளவில் நீங்களும் அப்படி ஒருவராக இருக்கலாம் அல்லவா?

இந்தியா அழிந்து சிறிய நாடுகளாவதினால் சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான், தலிபான் பொன்ற பல நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் நன்மை கிடைக்க இருக்கிறது.

சோவியத் யூனியன் அழிந்ததற்கான அடிப்படைக்காரணம் கம்முயூனிசத்தின் தோல்விதான். முதலாளித்துவ நாடுகளில் உள்ள "ஜனநாயக ஆட்சிமுறை" தான் இந்தியாவில் நிலவுகின்றது. எனவே இந்தியாவை உடைக்க மேற்கு நாடுகள் விரும்பமாட்டா. இந்தியாவின் உடைவினால் மேற்கு நாடுகளுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தாலும் இந்தியாவில் உள்ளவர்களைத் தூண்டி உடைவைக் கொண்டுவருவதில் வெற்றி பெறச் சாத்தியங்கள் மிக அரிதாகவே உள்ளன.

எம்மில் பலர் இந்தியாவின் தவறான வெளியுறவுக்கொள்கைப் போக்கால்தான் தமிழீழப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெரியாத விடயங்கள் தமக்குத் தெரியும் என்ற ரீதியில் கருத்து வைக்கின்றார்கள். இந்தியா தமிழீழத்தை ஒருபோதும் விரும்பவில்லை, அத்துடன் இலங்கையில் பிரிவினைவாதம் வெல்லக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார்கள். அதனால்தான் பல்வேறு உதவிகளை இலங்கையரசுக்கு வழங்கி புலிகளை அழிக்க உதவினார்கள். இதனால் இந்தியாவில் பிரிவினைவாதப் போராட்டங்களை நடாத்தும்/ நடாத்த முனையும் குழுக்கள் உற்சாகம் இழந்திருக்கின்றனர் என்பது உண்மையே.

மேலும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைய அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும். இந்தியா இந்த விடயத்தில் மிகவும் கவனமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்கு பகிர்ந்துகொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது கர்நாடக மாநிலத்தில் வன்முறைகள் வெடிக்காமல், பங்களூரில் இருக்கும் பல்தேசிய நிறுவனங்களில் வேலைசெய்பவர்களுக்கு எதுவித பாதிப்பும் வராமல் கர்நாடக அரசே பார்த்துக்கொண்டது.

எனவே மாறிவரும் உலக சூழ்நிலையில் உலக நாடுகள் இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் பெரிதும் தங்கியுள்ள நிலையில் இந்தியா உடையச் சாத்தியங்கள் குறைந்துகொண்டுதான் செல்லுகின்றது. இந்தியாவில்் வறுமை இன்னும் இருந்தாலும், ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்துதான் வருகின்றது. எனவே தேசிய இனங்கள் சிறு சிறு நாடுகளாக உடைந்து தமது பொருளாதாரத்தை பழுதாக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் காணி வாங்கி எங்கள் பிரச்சனையை தீர்க்கலாம் என்றால் எங்கள் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும். காணி இன்னமும் எங்களிடம் இருக்கின்றது. அதை எதிரி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறான். அவனிடம் இருந்து நாங்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு நாங்கள் போராட வேண்டும். நாங்கள் இழந்தவைகளை கட்டி எழுப்ப வேண்டும். கட்டி எழுப்ப ஒரு தளம் வேண்டும். அதற்கு ஒரு நிலம் வேண்டும்.

வடக்கு கிழக்கில் அதிகளவு அரச காணிகள் உள்ளதனால்தான் சிங்கள மக்களை குடியமர்த்த முடிந்தது. எனவே தனியார்கள் (தமிழர்கள்) இக்காணிகளை வாங்கிவைத்தால் எதிர்காலத்தில் உரிமை கொண்டாடலாம்.

வன்னிக்குள் பாதுகாப்பாக இருந்த தளம் போய்விட்டது. விடுதலை பெறவேண்டுமானால் தளம் தாயகத்தில்தான் இருக்கவேண்டும். ஆனால் முதலில் எப்படிப்பட்ட விடுதலை என்பதை தமிழ்மக்கள் (குறிப்பாகத் தாயகத்ட்தில் உள்ளவர்கள்) தீர்மானிக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

சோவியத் யூனியன் அழிந்ததற்கான அடிப்படைக்காரணம் கம்முயூனிசத்தின் தோல்விதான். முதலாளித்துவ நாடுகளில் உள்ள "ஜனநாயக ஆட்சிமுறை" தான் இந்தியாவில் நிலவுகின்றது. எனவே இந்தியாவை உடைக்க மேற்கு நாடுகள் விரும்பமாட்டா.

இந்தியாவின் உடைவினால் மேற்கு நாடுகளுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

......

......

எனவே மாறிவரும் உலக சூழ்நிலையில் உலக நாடுகள் இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் பெரிதும் தங்கியுள்ள நிலையில் இந்தியா உடையச் சாத்தியங்கள் குறைந்துகொண்டுதான் செல்லுகின்றது. இந்தியாவில்் வறுமை இன்னும் இருந்தாலும், ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்துதான் வருகின்றது. எனவே தேசிய இனங்கள் சிறு சிறு நாடுகளாக உடைந்து தமது பொருளாதாரத்தை பழுதாக்கமாட்டார்கள்.

சோவியத் யூனியனை அங்கு ஜனநாயக ஆட்சியில்லாத காரணத்துக்காக மேற்கு நாடுகள் அழித்தது என்ற காரணம் ஏற்றுக்கொள்ள தக்கதானால் அரசாட்சி நடக்கும் சவூதி அராபியா போன்ற நாடுகளுக்கு இதே மேற்கு நாடுகள் ஆதரவளித்து வருவது அந்த காரணத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது. சோவியத் யூனியன் அழிந்தது மேற்கு நாடுகளுக்கு இராணுவ மேலாண்மையையும், சிதறுண்ட சோவியத்தின் நாடுகளில் உள்ள எரிபொருள் மற்றும் கனியவளங்கள், வணிக வசதிகள், மலிவான தொழிலாளர் போன்ற பொருளாதார நலங்களையும் தந்திருக்கிறது.

இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பதில் மேற்கு நாடுகளுக்கு உண்மையில் அக்கறை இருப்பதாக நம்புவது கடினமானது. ஆனால் இந்தியா தொழில்நுட்பத்தில் மேற்கு நாடுகளுக்கு போட்டியாக உருவாகி வருவது உண்மை. இந்த போட்டியை குறைத்து, இந்தியாவின் வளங்களையும், மலிவான தொழிலாளரையும் தமது இலாபத்துக்கு பயன்படுத்த மேற்கு நாடுகள், ஒரு முழுமையான இந்தியாவிலும் பார்க்க சிதறுண்ட இந்தியாவின் சிறிய நாடுகள் வசதியானவை என்று கருதும் சாத்தியம் இருக்கிறது. மேலும் இந்தியாவின் இராணுவ கனவுகள் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இந்து சமுத்திரத்தில் ஒரு இடைஞ்சலாக இருக்கலாம். தியாகோ கார்சியாவில் அமெரிக்கா ஒரு மிகவும் இரகசியமான தளத்தை பேணிவருவதும், இலங்கை பிரச்சினையில் இந்தியாவுடன் உடன்படாத ஒரு நிலைப்பாட்டை அமெரிக்காவும், மேற்கு நாடுகள் கொண்டிருப்பதும் அவற்றின் இந்து சமுத்திர மேலாதிக்க போட்டிக்கு ஒரு உதாரணமாக கொள்ளப்படலாம்.

Link to comment
Share on other sites

இந்தியா உடைத்தால்..

சைனாவின் மீதிருக்கும் கொஞ்சம் நஞ்சம் கட்டும் போய்விடும்.. மேற்கு மேலேபாக்கவேண்டியதுதான். அதேநேரம் இந்தியா...... சைனா ரஷ்யா பகீரங்ககூட்டு ஆரம்பிக்கவும் இடமிருக்கிறது.

யார் எப்ப வழுக்குவான் எண்டு பாத்துகொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.