Jump to content

பூகோள அரசியல் சதுரங்கம் : சீன-இந்தியப் போர் மூளுமா?


Recommended Posts

மிக நீண்டதும் பொறுமையாக படிக்க வேண்டியதும் உண்மையை சொன்னால் நான் அரைசியை இப்ப தான் தாண்டி இருக்கிறேன்.... இதை படித்து உணர்ந்து மொழி பெயர்க்கும் இசைக்கு பொறுமையின் சிகரம் எனும் வாழ்த்தை சொல்ல வேண்டும்...

படிச்சு முடிச்சு கருத்தை எழுதுகிறேன்..

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

மிக நீண்டதும் பொறுமையாக படிக்க வேண்டியதும் உண்மையை சொன்னால் நான் அரைசியை இப்ப தான் தாண்டி இருக்கிறேன்.... இதை படித்து உணர்ந்து மொழி பெயர்க்கும் இசைக்கு பொறுமையின் சிகரம் எனும் வாழ்த்தை சொல்ல வேண்டும்...

படிச்சு முடிச்சு கருத்தை எழுதுகிறேன்..

நன்றிகள் தயா.. எழுதத் தொடங்கியதும்தான் பிரச்சினையின் ஆழம் புரிகிறது. இப்படி என்று தெரிந்திருந்தால் அநேகமாக தொட்டிருக்கவே மாட்டேன்..! :o அநேகமாக இன்னும் இரண்டு பாகங்கள்தான் என்பதில் ஒரு ஆறுதல். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட கட்டுரைத் தொடர். முழுவதையும் படித்து உள்வாங்கி,அனைவருக்கும் புரியும் வகையில் கருச்சிதையாமல் தமிழாக்கம் செய்துள்ள டங்குவின் பொறுமையும், பணியும் பாராட்டுக்குரியது.

Link to comment
Share on other sites

மிக நீண்ட கட்டுரைத் தொடர். முழுவதையும் படித்து உள்வாங்கி,அனைவருக்கும் புரியும் வகையில் கருச்சிதையாமல் தமிழாக்கம் செய்துள்ள டங்குவின் பொறுமையும், பணியும் பாராட்டுக்குரியது.

தங்களின் ஊக்கத்துக்கு நன்றிகள் ராஜவன்னியன்..! :o

Link to comment
Share on other sites

பாகம் 14:

"நாகரிகங்களிடையேயான மோதல்" என்பது யுரேசியாவில் எதற்கு?

நாகரிகங்களிடையேயான மோதல் எனும் தத்துவத்தை பாகிஸ்தானின் மேட்டுக்குடியினர் அந்நாட்டின் சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் அநீதிகளை திசைதிருப்ப நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர். வேதமும், இந்தியாவும் தமது நாட்டுக்கு எதிரானது என அங்கு போதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்தி எனும் பதம் உள்ளூர் மக்களை திசைதிருப்ப அங்குள்ள அரசியல்வாதிகளால் எப்போதும் பயன்படுத்தப்படுவதாகும். இந்தியத் துணைக்கண்டத்தில், சில பூர்வீக வட்டங்கள் அதிகாரத்தை தம்வசம் வைத்திருப்பதற்கு பிரித்தானியாவால் கையாளப்பட்ட பிரித்தாளும் சூழ்ச்சியை இன்னும் உபயோகத்து வருகின்றன.

நாகரிகங்களிடையே எழும் முரண்பாடுகளால் யார் அதிகம் பலனடைகிறர்கள் என்று பார்த்தால், எந்த நாகரிகத்தார் அதிகம் வேற்று மக்களிடம் தொடர்புகளைக் கொண்டவரோ அவரே அதிக ஆதாயம் அடைபவராவார். இதன் காரணம் அந்த நாகரிகத்தாரே அதிகளவு எதிரிகளையும் கொண்டிருப்பர். ஹன்ரிங்ரனின் தத்துவ வடிவத்திலிருந்தும் இதை விளங்கிக் கொள்ளலாம். வர்த்தக அடிப்படையிலும், அதிக தொடர்புகளைப் பேணுபவர்களே அதிக மோதல்களையும் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. காரணம், அந்த நாகரிகத்தாருக்கு இருக்கும் அதிக வெளித் தொடர்புகளால் சில நண்பர்களை இழந்தாலும் அதிகம் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

பொதுவில், கூட்டுறவும், நாணயமான வர்த்தகமும் முன்னிலைப்படுத்தப்படும் இக்காலச் சூழ்நிலையில், பாரிய அளவிலான யுத்தம் ஒன்று ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் தன்னாதிக்கத்தை முன்னிலைப்படுத்தும் போட்டிநிறைந்த அனைத்துலகச் சூழலானது அத்தகைய ஒரு பாரிய யுத்தத்தை நோக்கியே இட்டுச் செல்கிறது. முதலாளித்துவத்துக்கு எதிரானவர்கள் இத்தகையதொரு சாத்தியத்தையே முதலாளித்துவக் கொள்கையின் செயற்கைத்தன்மையாகச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், இது முதலாளித்துவம் அல்ல. இதை அதிமுதலாளித்துவம் (Uber-capitalism) என்று கூறலாம். அதிமுதலாளித்துவம் என்பது சட்டம், சட்ட ஒழுக்க நெறிகள் மற்றும் வரி அறவிடல் போன்றவை மேட்டுக்குடிகளால் தமது சுயநலத்துக்காக நெறிப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படும் ஒரு நிலையாகும். மார்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் தத்துவத்தின்படி ஒரு அரசு என்பது மேட்டுக்குடிகளின் நலனுக்கான ஒரு எந்திரம் மட்டுமே ஆகும். கட்டற்ற வர்த்தகம் (Laissez-faire Commerce) எனும் முதலாளித்துவ சிந்தனை கூட இன்று இந்த மேட்டுக்குடிகளால் உதாசீனப்படுத்தப்படுகிறது. ஏனெனில், அரசும், வர்த்தகமும் இவர்களால் கட்டுப்படுத்தப்படுவதாகும்.

நாகரிகக் குழுமங்களிடையே நியாயமான வர்த்தகம் என்று ஒன்று இருக்குமானால், அங்கு மோதல்களுக்கு இடமில்லை. ஆனால் இந்த ஒரு காரணம் மட்டுமே மோதலைத் தவிர்க்கப் போதுமானது அல்ல. அரசியல் சித்தாந்தங்கள், நம்பிக்கைகள், மேல்வர்க்கப் பெருமைகள் போன்றவைகூட காரணிகளாகும். இவற்றுள் அரசியல் சித்தாந்தங்களும் நம்பிக்கைகளும் மறைமுகமாக திருத்தியமைக்கப்பட்டு கட்டியெழுப்பப் படுவதாகும். இதன்மூலம் பொருளாதார அமைப்பு பலப்படுத்தப்படுகிறது. யுத்தங்களும், ஆளும்வர்க்கத்தின் செயற்பாடுகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. நியாயமற்ற வர்த்தகங்களுக்கும், வளங்களின் மேலான ஆதிக்கத்துக்கும் திணிக்கப்பட்ட யுத்தங்கள் தேவையாக இருக்கின்றன. செல்வத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் இந்த ஒரு வழி மூலமே தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது.

நாகரிகங்களிடையான மோதல்கள் எனும் பேச்சுக்கள் அடிபட்டாலும், சமுதாய வளர்ச்சிக்கு காத்திரமான வழி அமைதியும் கூட்டுறவும் மட்டுமே. தனிப்பட்ட நாகரிகப் பண்புகள் எனும் அடிப்படையில் லத்தீன் அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், மேற்குலகம், சீனா, இஸ்லாம் உலகு, அடிப்படை கிறிஸ்தவ நாடுகள், புத்த சமய நாடுகள் என்று பிரித்துப் பார்ப்பது தவறான கற்பிதமும், வெறும் கொள்கைரீதியிலானது மட்டும் ஆகும். இந்த நாகரிகப் பிரிவுகளுள் வேற்றுமைகள் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் அவற்றுள் நிலவும் ஒற்றுமைகளை ஒப்பிடுகையில் வேற்றுமைகள் வெகு குறைவானவையே ஆகும். ஹன்ரிங்ரனின் நாகரிக வடிவத்தை நிலைநிறுத்த இந்த குறைந்த அளவிலான வேற்றுமைகள் போதுமானவை அல்ல.

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர வாழ்த்துக்கள்

முழுக்க வாசித்துவிட்டு சொல்கின்றேன் என்று எழுதமுடியவில்லை

ஏnனெனில் வாசிப்பது என்பது எனக்கு கசப்பானது

முயற்சிக்கின்றேன்

நன்றிகள் தமிழருக்கான தங்களது நேரத்திற்கு.....

Link to comment
Share on other sites

தொடர வாழ்த்துக்கள்

முழுக்க வாசித்துவிட்டு சொல்கின்றேன் என்று எழுதமுடியவில்லை

ஏnனெனில் வாசிப்பது என்பது எனக்கு கசப்பானது

முயற்சிக்கின்றேன்

நன்றிகள் தமிழருக்கான தங்களது நேரத்திற்கு.....

நன்றிகள் விசுகு அண்ணா தங்கள் கருத்துக்கு. எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்று நினைக்காமல் முதல் ஓரிரு பகுதிகளை மட்டும் படித்துப் பாருங்கள். பிற்பாடு எல்லோரும் கருத்துப்பதிவுகளை ஆரம்பிக்கும்போது மீதி விடயங்கள் தானாகவே வெளிச்சத்துக்கு வரும்.

Link to comment
Share on other sites

பாகம் 15:

புதுடில்லி செல்லும் திசை: மீண்டும் பிரித்தானிய ஆட்சி?

இந்தியா பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் இருந்த நிலைமைகளை மீண்டும் உருவாக்கிக் கொள்கிறதா? பெருங்கூட்டணி என்கிற முடிவையும் தாண்டி இப்போது அது சென்றுகொண்டிருக்கிறது. சூரியனில் தமக்கான ஒரு இடம் எனும் நிலையை அடைவதற்கு சில "முதன்மை நாடுகளின்" சமூக-பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை கைக்கொள்ள வேண்டும் என இந்திய மேட்டுக்குடிகள் திடமாக நம்புகின்றனர். இங்கு முதன்மை நாடுகள் எனக் குறிப்பிடப்படுபவை உலகப் பொருளாதார சக்தியினை தம்வசம் வைத்திருக்கும் சில சுற்று வட்டார நாடுகளாகும். இந்தியாவின் அணிசேராக்கொள்கை என்பது இப்போது பெயரளவில் மட்டுமே உள்ளது. ஜவஹர்லால் நேருவின் வெளிநாட்டுக் கொள்கைகள் கைவிடப்பட்டு விட்டன.

உள்நாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக, இந்தியா தன்னைத் தானே காலனிகளாக்கிக் கொண்டு வருகிறது. சமூகங்களும், இனக்குழுமங்களும் ஒன்றுக்கொன்று எதிராக செயற்பட்டு வருகின்றன. இதற்கு உறுதுணையாக, உள்ளூர் மற்றும் வெளியூர் மேட்டுக்குடிகள் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். எண்ணற்ற மக்களின் வளங்கள், சொத்துக்கள் மற்றும் உரிமைகளை ஆளும் மேட்டுக்குடியினர் இந்திய அரசின் துணையுடன் அபகரித்து வருகின்றனர். சொந்த மக்களைச் சுரண்டுவது குறித்து அவர்களிடத்தில் எள்ளளவு கரிசனையும் இல்லை. நீர்வளம், தேசியச் சொத்துக்கள் போன்றவை தனியார்மயப் படுத்தப்பட்டு, வேலைக்கு அடிமைகளை அமர்த்தும் முறைமை மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. அதாவது மகாத்மா காந்தியும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவிலில் களையெடுக்க முனைந்த அடிமை வர்க்கம் மீண்டும் உருவாக்கம் பெறுகிறது.

உலகப் பொருளாதார ஒழுங்கில் இந்தியாவும் கைகோர்க்கும்போது யுரேசியாவின் ஆதிக்கம் அப்புறப்படுத்தப்படுகிறது. அத்துடன், இந்தியாவின் பரந்த ராணுவ விரிவாக்கம், சீனாவுடனான மோதலிலேயே முடியும். அவ்வாறான ஒரு மோதலில் உண்மையான வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளப் போவது இந்தியாவோ சீனாவோ அல்ல. மாறாக அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளுமே ஆகும்.

தனது நழுவல் போக்கின்மூலம் இந்தியா தனது போக்கை மாற்றிக்கொள்ளக் கூடும். ஆனால் அது நடக்காத விதத்தில் இந்தியாவை யுரேசியாவில் அதன் அயல்நாடுகளுக்கெதிராக தயார்ப்படுத்தும் வேலை துரிதமாக நடந்துவருகிறது. "நாகரிகங்களிடையேயான மோதல்" எனும் தத்துவத்தின் உண்மையான அர்த்தமும், சிந்தனையும் அதன் பின்னேயுள்ள நோக்கமும் இதுவேயாகும். இந்திய ராணுவத்தின் பார்வையில், சீனா இந்தியா இடையே அணுவாயுத யுத்தம் ஒன்றுக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆனால் இத்தகைய ஒரு யுத்தம் என்பது, யுரேசிய நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான சுற்று வட்டார நாடுகளுக்கும் இடையேயான பரந்துபட்ட ஒரு யுத்தத்தின் ஒரு பகுதியே ஆகும் என்பதை இங்கு விளங்கிக் கொள்வது முக்கியமானது ஆகும்.

Indian%20Ocean%20Bases.jpg

முற்றும்

Link to comment
Share on other sites

வணக்கம் டங்க்ஸ்,

இன்று உங்கள் ஆராய்ச்சிக்கட்டுரை மொழிபெயர்ப்பை முழுமையாக வாசித்து முடித்தேன். இந்தக்கட்டுரையை தாயக பிரச்சனையுடன் எப்படி தொடர்புபடுத்தி பார்க்கலாம் என்று உடனடியாக என்னால் கூறமுடியவில்லை. பொதுவாக பல விசயங்களை அறிந்துகொண்டேன். நன்றி உங்கள் ஆராய்ச்சிக்கும் நேரத்திற்கும்..

Link to comment
Share on other sites

இப்பதான் படித்து முடித்தேன் டங்கு... உண்மையை சொன்னால் புதிய உலக ஒழுங்கை( தென்னாசிய காரணிகளை) மிக நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள்...

ஆனாலும் டங்குவிடம் ஒரு வேண்டுதல் உங்களது இந்த கட்டுரையை யாழின் Blog கிலும், வேறு இடங்களிலும், இணைத்து பாதுகாருங்கள்...

இதனுடன் எங்களை பொருத்தி பார்க்கும் போது யாரும் உலகில் எங்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை.. இனியும் இருக்க போவது இல்லை என்பது மட்டும் ஆணி அறைந்தது போல புரிகிறது... எங்களுக்கு ஆதரவு நிலை வர வேண்டுமானால் எங்களில் மாற்றம் பல வேண்டும்.... அதுக்கு ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் தான் உண்டு...

எங்களில் பலருக்கு தோல்வி ஏன் வந்தது என்பதுக்கு கூட காரணம் தெரியாது... புலிகள் பேச்சு வார்த்தைக்கு போனது, 2005ல் இரணிலை அரசாட்சிக்கு கொண்டு வராதது என்பது வரை தான் சிந்திக்கிறார்கள்... அல்லது சிந்திக்க தூண்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்...

ஆனால் உண்மை என்பது வேறு அதுக்கு நாங்கள் 2005 ம் ஆண்டின் மாவீரர் நாள் உரையை மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.. அப்போது எங்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை பார்த்தால் கொஞ்சம் புரியலாம்...

விரிவாக இன்னும் பேசுவோம்...

Link to comment
Share on other sites

"இன்னும் மூன்றே ஆண்டுகளில், அதாவது 2012ம் ஆண்டுக்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கப் போகிறது" என்று அடித்துச் சொல்கிறார் பரத் வர்மா. ‘இண்டியன் டிஃபென்ஸ் ரிவ்யூ’ என்ற புகழ்பெற்ற பாதுகாப்புத் துறை பத்திரிகையின் ஆசிரியரான இவர், தேசத்தின் முக்கியமான பாதுகாப்பு நிபுணரும்கூட!

எதிர்காலம் பற்றிய கணிப்புகள் கலவரமூட்டுபவை. அந்தக் கணிப்பில் கசப்பு மருந்தும் கலந்திருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. இந்தியாவின் 113 கோடி மக்களையும் தூக்கமிழந்து, துக்கத்தில் தவிக்கவிடும் ஒரு கணிப்பைச் செய்திருக்கிறார் பரத் வர்மா. இதற்கு வர்மா பல காரணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுக்கிறார். எல்லாமே சரியாக இருப்பதுதான் நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

விவசாயத் தொழிலாளர்களின் ஆதரவோடு சீனப்புரட்சியை சாத்தியமாக்கினார் மாவோ. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இறுக்கமான பிடியில் அந்த தேசம் இருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற வளர்ச்சியை கிடப்பில் போட்டுவிட்டு, நகர்ப்புறங்களை தொழில்மயம் ஆக்குவதில் ஆர்வம் காட்டியது அரசு. இந்த தொழில்புரட்சி விஸ்வரூபம் எடுத்ததன் விளைவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் என எந்த வித்தியாசமும் இன்றி, எல்லா நாடுகளின் மார்க்கெட்டையும் சீனப் பொருட்கள் நிறைத்தன. ‘மேட் இன் சைனா’ என்ற முத்திரை கொண்ட பொருள், மலிவான விலையில் கிடைக்காத நாடே இல்லை என்கிற அளவுக்கு சீனாவின் ஏற்றுமதி அபரிமிதமாக இருந்தது.

இப்போது உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், சீன பொம்மைகளையும் எலெக்ட்ரானிக் அயிட்டங்களையும் சீந்துவாரில்லை. ஏற்றுமதி வர்த்தகம் அதல பாதாளத்துக்குச் சரிந்துவிட, சீன நிதிச் சந்தையிலிருந்து கோடிக்கணக்கான டாலர் அந்நிய முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. அந்நியச் செலாவணி கையிருப்பு பெரிதும் குறைந்துவிட, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.இன்னொரு பக்கம் கிராமப்புற விவசாயிகள் மத்தியில் எழுந்த கசப்புணர்வு, அரசுக்கு எதிரான போராட்டமாக ஆங்காங்கே வெடிக்கிறது.

எப்போதும் இல்லாதபடி இனக்கலவரங்களும் புதிய முரண்பாடுகளை உருவாக்க, சீன சமுதாயத்தின் மீது அரசின் பிடி தளர்ந்து வருகிறது. அரசின் எந்த முடிவையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிற இரண்டு தலைமுறைகளை உருவாக்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்த திருப்திகளை எப்படி சமாளிப்பது என்று புரியவில்லை. போருக்கு இது முதல் காரணம்!

இரண்டாவது காரணம் பாகிஸ்தான்... இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கும்விதமாக பாகிஸ்தான் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சீனாவின் ஆசி உண்டு. தீவிரவாத முகாம்களை அமைத்து, பயிற்சி கொடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ வைக்கும் குழப்பங்களுக்கும், வங்க தேசம், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து தலைவலி தரும் தீவிரவாத இயக்கங்களுக்கும் பாகிஸ்தான் நேரடிக் காரணமாக இருக்கிறது என்றால், சீனா மறைமுகக் காரணம்! இப்போது தாலிபன் அமைப்பு பாகிஸ்தானிலேயே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்த, பாகிஸ்தானின் முழு கவனமும் அங்கு குவிந்துவிட்டது.அமெரிக்காவும் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இப்போது பெரிய அளவில் எதுவும் செய்யமுடியாத நிலை.

மூன்றாவது காரணம் அமெரிக்கா... அணுசக்தி ஒப்பந்தத்தில் ஆரம்பித்து, ராணுவக் கூட்டுப்பயிற்சி வரை அமெரிக்காவும் இந்தியாவும் ரொம்பவே நெருங்கி வருவது சீனாவின் கண்களை உறுத்துகிறது. ஆசியாவின் வல்லமை பெற்ற சக்தியாக,சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவை உருவாக்குவதுதான் அமெரிக்காவின் நோக்கமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்திருக்கிறது.

இதுபோன்ற சூழலில் மக்களின் கவனத்தை திசைதிருப்பி,அவர்களிடம் தேசபக்தியை ஏற்படுத்தவும், ஆசியாவின் ‘சூப்பர் தாதா’ எப்போதும் சீனாதான் என்பதை நிரூபிக்கவும், சீனா இந்தியா மீது போர் தொடுக்கும் என்கிறார் பரத் வர்மா. ‘‘வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளுக்கு மறைமுக உதவி செய்வது சீனாதான்.வடகொரியாவை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் கண்டித்துவரும் வேளையில் அந்தநாடுகளில் ஏதோ ஒன்றின் மீது சீனா போர் தொடுக்கலாமே என்ற கேள்வி எழலாம். பொருளாதார மந்தநிலை நிலவும் வேளையில், இந்த நாடுகளை பகைத்துக்கொண்டால் பொருளாதாரத்தடை போன்ற நடவடிக்கைகளால் சீனா இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இந்தியா மாதிரியான தன்னைவிட பலம் குறைந்த தேசத்துடன் போரிடவே அது விரும்பும். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பகுதியை அபகரித்துக்கொள்ளவும் இந்தப்போர் உதவும். இப்படி ஒருபுறம் சீனாவும், இன்னொருபுறம் பாகிஸ்தானும் போருக்கு வந்தால், அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்’’ என்கிற பரத் வர்மா, ‘‘இப்போதைய நிலையில் இப்படி ஒரு சூழ்நிலைக்கு இந்தியா தயாராக இல்லை’’ என வருத்தத்துடன் சொல்கிறார்.

இமயமலைக்கு இருபுறமும் இருக்கும் இந்த இரண்டு தேசங்களுக்கு இடையே நட்புறவை வளர்க்க எத்தனையோ முயற்சிகளை இந்தியா எடுத்திருந்தாலும்,இமயமலை அளவுக்கு நம்பிக்கையின்மை இருதரப்பிலும் வளர்ந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நேரத்தில் சீனாவில் புரட்சி தீவிரமாக இருந்தது. தேசியவாதிகள்பக்கமோ, புரட்சியாளர்களான கம்யூனிஸ்டுகள் பக்கமோ சாயாமல் இந்தியா நடுநிலை வகித்தது.கம்யூனிச தேசமாக சீனா உதயமானபோது அதை அங்கீகரித்த, கம்யூனிச ஆட்சியற்ற இரண்டாவது நாடு இந்தியா. (முதல் நாடு பர்மா). ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இணைவதற்கும் இந்தியா ஆதரவளித்தது. பரஸ்பரம் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மதித்து, அடுத்த நாட்டு உள் விவகாரங்களில் தலையிடாமல் இணைந்து செயல்பட வேண்டும்; எல்லை பிரச்னை போன்ற விஷயங்களை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ‘பஞ்சசீலக் கொள்கை’ 1954ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. சீன பிரதமர் சூ என் லாய் இந்தியாவுக்கு வந்து நட்புறவுடன் நேருவோடு கைகுலுக்கினார்.

ஆனால் உதட்டளவிலான இந்த நட்பை நீண்ட நாட்கள் நீடிக்க விடவில்லை சீனா. 58-ம் ஆண்டில், அசாம் மாநிலத்தின் வடபகுதியை தங்கள் தேசத்தின் ஒரு பகுதியாக சேர்த்து சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மேப் வெளியாக, இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரின் லடாக் பகுதியிலுமாக சேர்த்து சுமா 40 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள பகுதியை, ‘இவை எல்லாமே சீனாவின் அங்கம்’ என வெளிப்படையாக சொந்தம் கொண்டாடினார் சூ என் லாய். அடுத்த ஆண்டே திபெத்தில் சீனர்களின் ஆக்கிரமிப்புப் படை நிகழ்த்திய அட்டகாசங்களைத் தாங்கமுடியாமல் இந்தியா வந்து தஞ்சம் புகுந்தார் தலாய் லாமா. அவருக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுக்க, சீன - இந்திய உறவில் வெளிப்படையான விரிசல் ஆரம்பித்தது.

லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தருவோம் என சர்வதேச வட்டாரங்களில் அவதூறு பிரசாரங்களை ஆரம்பித்த சீனா, 1962ம் ஆண்டு திடீரென எல்லையில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் தலைப்பகுதியாக இருக்கும் காஷ்மீரில் இரண்டை கொண்டைகள் போலத் தெரியுமே... அதில் வலதுபுறக் கொண்டை ஏரியா ‘அக்சாய்சின்’ பகுதி. ஆக்கிரமித்த திபெத்தோடு சாலைத் தொடர்புகளை ஏற்படுத்த, சீனாவுக்கு இந்த ஏரியா தேவை. இதற்காகவே போர் ஆரம்பித்தது. தன் லட்சியம் நிறைவேறியதும், ஆறே மாதங்களில் போர் முடிந்துவிட்டதாக சீனாவே அறிவித்தது.

காஷ்மீர் மாநிலத்தில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை இப்படி வசப்படுத்தி வைத்திருக்கிறது சீனா. இது போதாதென்று, இன்னும் கொஞ்சம் இடங்களை அது பாகிஸ்தானிடமிருந்து வாங்கியது. ஏற்கனவே சுதந்திரம் வாங்கிய கையோடு, காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான், காஷ்மீரின் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

அதிலிருந்து 5120 சதுர கிலோமீட்டர் பகுதியை அது 63ம் ஆண்டு, சீனாவுக்கு தானமாக வழங்கி,தன் நட்பை பலப்படுத்திக் கொண்டது. கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, இப்படிப் போன இடங்களில் ஒரு கையகல நிலத்தைக்கூட நம்மால் திரும்பிப் பெறமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம்!

இந்தியாவுடனான வர்த்தக உறவுகளில் அக்கறை கொண்டிருப்பது போல சீன தலைவர்கள் அவ்வப்போது டெல்லி வந்து நடிக்கிறார்கள்; நம் பிரதமரோ, ஜனாதிபதியோ பெய்ஜிங் போகும்போதும் நடிக்கிறார்கள். ஆனால் சீன பொருட்கள் அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி ஆகுமாறு பார்த்துக் கொள்வதுதான் அவர்களின் வேலையாக இருக்கிறது. என்ன இருந்தாலும், 113 கோடி மக்கள் கொண்ட உலகின் பெரிய மார்க்கெட்டில் வியாபாரம் செய்யாமல் இருக்கமுடியாதே!

அதேசமயம், ‘எல்லை பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம்’ என ஒருபக்கம் சொல்லிக்கொண்டே, வேட்டியை உருவும் கலையை நன்றாகவும் செய்கிறார்கள் அவர்கள். அருணாசல பிரதேசத்தின் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை தங்கள் நிலம் என்று சொந்தம் கொண்டாடும் சீனா, அதை இந்தியா ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பிரசாரம் செய்து வருகிறது.

‘தெற்கு திபெத்’ என அருணாசல பிரதேசத்தை சீனா அழைக்கிறது. கடந்த ஏப்ரலில் அருணாசல பிரதேசத்தில் சில நீர்மின் திட்டங்களை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டது இந்திய அரசு. ‘அது சர்ச்சைக்குரிய பகுதி. எங்கள் இடம். அதில் இந்தியா எப்படி அணைகளும் மின் நிலையங்களும் கட்டலாம்?’ என்று எதிர்கேள்வி கேட்டு, நிதியுதவி கிடைக்காமல் தடுத்துவிட்டது சீனா.

இந்த ஏரியாவில் அடிக்கடி விளையாட்டுத்தனமாக சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும், அப்புறம் கொஞ்ச நேரத்தில் சிரித்துக்கொண்டே திரும்பிப் போய்விடுவதும் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டறிக்கை, ‘காஷ்மீரில் தாங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இந்தியப் பகுதிகள் வழியாக சீனாவும் பாகிஸ்தானும் சாலை தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக’ தெரிவிக்கிறது.

அதாவது இந்திய நிலத்தை ஆக்கிரமித்து, ரோடு போட்டு, ஆயுதங்களையும் தீவிரவாதிகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் இந்திய எல்லையை ஒட்டி, தனது படைப்பிரிவில் 30 டிவிஷன்களை சீனா குவித்து வைத்திருப்பதாகவும், அவர்கள் அடிக்கடி எல்லை தாண்டி ஊடுருவல் நிகழ்த்துவதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது. 30 டிவிஷன் என்பது கிட்டத்தட்ட 3 லட்சம்ராணுவ வீரர்கள். இந்திய & சீன எல்லை கிட்டத்தட்ட 4050 கிலோமீட்டர் நீளமானது. இந்த எல்லையின் சீனப் பகுதியில் சாலை வசதிகளும் ராணுவத்துக்குத் தேவையான கட்டிட வசதிகளும் சமீப ஆண்டுகளில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டன.

திடீரென போருக்குத் தேதி குறித்தால், ஒரே நாளில் பல படைப்பிரிவுகளை இங்கே கொண்டுவந்து இறக்க சீனாவால் முடியும். நம் பகுதியில் மண் ரோடுகள்தான் அதிகம். மாட்டு வண்டிகளில் ராணுவ வீரர்கள் போவது சாத்தியம் என்றால் நாமும் இதே ‘வேகத்தில்’ படைகளைக் குவிக்கலாம்!

பிரச்னை இதோடு முடியவில்லை... பாகிஸ்தானுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணை போன்ற பல ஆயுதங்களைக் கொடுத்திருக்கும் சீனா, பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை நவீனப்படுத்துவதில் ஏகப்பட்ட பணத்தைச் செலவிடுகிறது. அநேகமாக இதற்குப் பிரதிபலனாக அங்கு சீனா கடற்படை தளம் அமைத்துக்கொள்ள பாகிஸ்தான் அனுமதி வழங்கக்கூடும்.

இதேபோல வங்க தேசத்துக்கு போர் விமானங்களை வழங்கியிருக்கும் சீனா, அந்த நாட்டுக்கு அணு உலை அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதற்கு கைமாறாக, சிட்டகாங் துறைமுகத்தில் தனது கடற்படை கப்பல்களை நிறுத்திக்கொள்ள சீனா அனுமதி வாங்கப்போகிறதாம்!

இலங்கையிலும் இதே கதைதான்... புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயன்படுத்த எஃப் 7 ரக விமானங்கள் உட்பட ஏராளமான ஆயுதங்களை அளித்த சீனா, அங்கிருக்கும் ஹம்பந்தோடா துறைமுகத்தை நவீனப்படுத்தி வருகிறது. அநேகமாக இங்கும் அதன் கடற்படை முகாமிட வாய்ப்பிருக்கிறது.

நேபாளத்தில் மட்டும்தான் சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தியாவால் முறியடிக்க முடிந்திருக்கிறது. பிரசாந்தா தலைமையில் அமைந்த மாவோயிஸ்ட் அரசு, இந்திய - நேபாள ஒப்பந்தத்தை முறிக்க முயன்றது. பிரசாந்தாவுக்கு சீனாவுன் முழு ஆசி உண்டு. ஆனால் நேபாள காங்கிரஸ் கட்சி சீனாவை எதிரியாகவும், இந்தியாவை நண்பனாகவும் பார்க்கும் கட்சி என்பதால், அங்கு சீன முயற்சிகள் ஜெயிக்கவில்லை.

இருந்தபோதிலும் இந்தியாவைச் சுற்றி கண்காணிப்பு மற்றும் படை வளையங்களை குவிப்பதில் சீனா வெற்றிபெற்று விட்டதாகவே தோன்றுகிறது. ஏற்கனவே நடந்த இந்திய & சீனப் போரில் விமானப்படையோ, கப்பற்படையோ பயன்படுத்தப்படவில்லை. காரணம், அது டெக்னாலஜி வளராத காலத்தில் மலைமுகடுகளில் நிகழ்ந்த யுத்தம். இப்போது நவீன போர்க்கப்பல்களும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளுமே போர் வெற்றிகளை தீர்மானிக்க வல்லவை எனும்போது, அந்த சக்தியில் சீனாவை மிஞ்சும் திறன் நமக்கு இல்லை என்பது கவலை தரும் உண்மை!

இன்னொரு பக்கம் பாகிஸ்தானும் எல்லைப் பிரதேசத்தில் பதுங்கு குழிகளையும் கண்காணிப்பு கோபுரங்களையும் அதிகம் அமைத்து வருகிறது என்ற செய்தியும் வருத்தம் தருகிறது. ‘‘மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தக் கட்டுமானங்கள் அதிகமாகி இருக்கிறது. நாங்கள் எத்தனையோ ஆட்சேபங்கள் தெரிவித்தும் அவர்கள் தரப்பில் எந்த மாற்றமும் இல்லை’’ என இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் யு.கே.பன்சால் தெரிவித்திருக்கிறார்.

பரத் வர்மாவின் ஜோதிடம் பலிப்பதற்கு இப்படி ஏராளமான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அது பலிக்காமல் போகக் கடவது என்றே நினைப்போம். சீன பாதுகாப்பு நிபுணர்களும் அப்படித்தான் ரீயாக்ட் செய்திருக்கிறார்கள். ‘இப்படி பாதுகாப்பு நிபுணர்களை பேசவிட்டு, ராணுவத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது’ என குற்றம் சாட்டுகிறார்கள் சீன நிபுணர்கள்.

சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளைவிட ராணுவத்துக்கு பல மடங்கு அதிகம் செலவிடுவது என்பது இந்தியா போன்ற வறிய நாடுகளுக்கு சாபம்! அந்த சாபம் பாகிஸ்தான் பிரிவினைக் காலத்திலிருந்தே நம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

அது இன்னும் மோசமாவதற்கு சீனா காரணமாவதுதான் வருத்தம் தருகிறது.

- நாடோடி

http://www.thenaali.com/thenaali.aspx?A=499

நன்றி இசை உங்கள் ஆராய்வு கட்டுரைக்கு.

Link to comment
Share on other sites

வணக்கம் டங்க்ஸ்,

இன்று உங்கள் ஆராய்ச்சிக்கட்டுரை மொழிபெயர்ப்பை முழுமையாக வாசித்து முடித்தேன். இந்தக்கட்டுரையை தாயக பிரச்சனையுடன் எப்படி தொடர்புபடுத்தி பார்க்கலாம் என்று உடனடியாக என்னால் கூறமுடியவில்லை. பொதுவாக பல விசயங்களை அறிந்துகொண்டேன். நன்றி உங்கள் ஆராய்ச்சிக்கும் நேரத்திற்கும்..

மச்சான்.. நான் சொல்ல நினைத்ததை தயா சொல்லிவிட்டார்.. நன்றி தயா..

அதாவது எங்கள் போராட்டத்தில் ஏற்பட்ட தேங்குநிலையை கிளிநொச்சி, தூரநோக்கு, அரசியல் பிரிவுத் தலைவர், கரந்தடிப் போர், மரபுப் போர் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறோம். ஆனால் விடயம் அதையெல்லாம் தாண்டி வேறு எங்கோ சென்று விட்டது / சென்றுகொண்டு இருக்கிறது.

புலிகள் 2005 இல் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் மட்டுமே எமது மக்களின் பேரழிவு தடுக்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் புலிகள் எவ்வாறாயினும் அழிக்கப்பட்டிருப்பார்கள். இந்தக் கட்டுரை சொல்லும் செய்திகளை வைத்துப் பார்க்கும்போது எமது தலைமை காணாமல் போவது தவிர்க்க முடியாததாகவே தெரிகிறது.

அத்துடன், உலகம் எப்படி இயங்குகிறது என்பதையும் கட்டுரை ஓரளவுக்கு தொட்டுச் செல்கிறது. இதை வைத்து நாம் ஏதாவது செய்யமுடியுமா என்பதே அடுத்து உள்ள கேள்வி. உதாரணமாக, இந்தியாவில் செல்வாக்கில் உள்ளவர்கள் எப்படி நிலைமைகளை மாற்ற வல்லவர்கள் என்பது தெரிகிறது. அவர்களுடனான தொடர்பாடலுக்கு புலம்பெயர் தமிழரின் சக்தி ஒரு பிரதானமான அனுகூலம். இதையும் நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். மிகுதி பிறகு.. :)

தயா.. 2005 இன் மாவீரர் உரை இணைப்பு இருந்தால் தர முடியுமா? நன்றி.

Link to comment
Share on other sites

டங்க்ஸ், அது தெரிஞ்சவிசயம்தானே. பூமிப்பந்தில இருக்கிற ஒருகுட்டித்தீவுக்குள்ளை நாங்கள் அடிபட்டுக்கொண்டு இருக்கிறம். ஒவ்வொருத்தனும்.. வேற வேற பிரச்சனையில திரிகிறான்ங்கள்.

ஆனால்.. நம்மவர்களுக்கு.. முக்கியமாய் பத்திபத்தியாய் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிற ஆக்கள் இப்பிடி வெளி உலகம் பற்றின விசயங்களை அறிஞ்சுகொண்டால் நல்லது.

தலாய் லாமாவுக்கு அரசியல் நோக்கத்துக்காக நோபல் பரிசு கொடுத்தாங்கள். இப்ப பார்த்தீங்களோ செய்திவந்து இருக்கிது ஓபாமா தீபெத்துக்கு ஆப்பு வச்சுப்போட்டான் எண்டு.

நாங்கள் குண்டுச்சட்டியுக்கை இருந்து குதிச்சுக்கொண்டு இருக்காமல் வெளியால வந்து என்ன நடக்கிது எண்டு விரிவான பரந்த பார்வையில பார்க்கிறது மிகவும் அவசியம்தான்.

Link to comment
Share on other sites

மாவீரர் உரை 2005

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.

இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக ஒளிவிட்டு எரிவதை நாம் எமது நெஞ்சில் நினைவு கொள்வோமாக.

சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்.

மாவீரர்களே, உங்களது ஒப்பற்ற தியாக வரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீர விடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது.

எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது மாவீரன், எனது பிரியமான தோழன் சத்தியநாதன் எனது மடியில் உயிர்நீத்து இன்றுடன் இருபத்துமூன்று ஆண்டுகளாகக் காலநதி ஓடிவிட்டது. இந்தக் கால நீட்சியிற் கட்டவிழ்ந்த போராட்ட வரலாற்றில் பதினேளாயிரத்துத் தொள்ளாயிரத்து மூன்று (17,903) மாவீரர் தேச விடுதலைக்காகக் களமாடி வீழ்ந்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொகைப் போராளிகளைவிடப் பலமடங்கு தொகையில் பொதுமக்களும் எதிரியாற் கொன்றொழிக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்தத்தில் எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த உயிர்ப்பலி மிகப் பெரியது. அளப்பரியது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை.

சிங்களத் தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப் புராணக் கருத்துலகிற் புதைந்து போய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள்.

அடிமனதில் ஆழமாக உறைந்து, அசைவற்றதாக இறுகிப் போன இந்தப் புராணக் கருத்து நிலையிலிருந்து சிங்களத் தேசம் விடுபடப்போவதில்லை. இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத் தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்ந்நிலைகளையும் சிங்கள மக்களாலும் அவர்களது அரசியல், மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தைத் தாயகத் தேசமாகக் கொண்டு, தமிழீழ மக்கள் என்ற வரலாற்றுத் தொன்மைமிக்க ஓர் இனம் இருப்பதையும் அவர்கள் ஒரு தனித்துவத் தேசமாக வாழ்ந்து வருவதையும் அவர்களுக்கு அடிப்படையான அரசியல் உரிமைகள், சுதந்திரங்கள் உள்ளன என்பதையும் சிங்களவராற் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை.

தமிழரது இருப்பு நிலைபற்றிய உண்மையைக் கிரகித்து, அவர்களது அரசியல் அபிலாசைகளைப் புரிந்துகொள்ளச் சிங்களத் தேசம் மறுத்து வருவதாலேயே தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினை தீர்வின்றி, முடிவின்றிச் சிக்கலடைந்து இழுபட்டு வருகிறது.

சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.

தென்னிலங்கை அரசியற் களத்தில் அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் உறுதியான இலட்சியமாக இருந்து வருகிறது.

சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து நீதி கிடைக்கப்போவதில்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து, எமது உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்க வேண்டும் என உறுதிபூண்டிருந்தபோதும் தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்ற நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். பிரதேச வல்லரசான இந்தியாவின் தலையீடு ஒரு கால கட்டத்திலும், சர்வதேச நாடுகளின் அழுத்தம் இன்னொரு கட்டத்திலுமாகச் சமாதான முயற்சிகளில் எம்மை ஈடுபடச் செய்தன. அத்தோடு பேச்சுக்களில் நாம் பங்குபற்றியதற்கு வேறு காரணங்களும் இருக்கவே செய்தன.

தமிழீழ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியில் எமது அமைப்புக்குச் சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் பேச்சுவார்த்தை ஒரு சாதனமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி, சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது.

அடுத்ததாக நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது. இறுதியாக, எல்லாவற்றிலும் முக்கியமாகத் தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் எமது தேச விடுதலைப் போராட்டத்தில், வௌவேறு கால கட்டங்களில், வௌவேறு வரலாற்றுச் சூழ்நிலைகளில், நாம் போருக்கு ஓய்வு கொடுத்துச் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றினோம். எதிரியானவன் கபட நோக்கும் வஞ்சக நெஞ்சும் கொண்டவன் என்பது எமக்குத் தெரியும். அத்தோடு சமரசப் பேச்சுக்களால் பயன் எதுவும் கிட்டப் போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும்.

சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி என்பதையும் நாம் நன்கு அறிவோம். இத்தனையையும் தெரிந்தும் நாம் நேர்மையுடனும் நேரிய நோக்குடனும் சமாதானப் பாதையில் பயணித்தோம்.

ஆயினும் நாம் மிகவும் விழிப்புடனும் விவேகத்துடனும் செயற்பட்டோம். சமாதானப் பயணத்தின் போது - சமரசப் பேச்சுக்களின் போது சிக்கலான பல சவால்களையும் நெருக்குவாரங்களையும் நாம் எதிர்நோக்க நேரிட்டது. எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையிற் பொறிகள் வைக்கப்பட்டன.

சதிவலைகள் பின்னப்பட்டன. ஆனால் நாம் நிலைமையைப் புரிந்து சாதுரியமாகக் காய்களை நகர்த்தியதால் பொறிகளுக்குள் மாட்டிக் கொள்ளவுமில்லை சதிவலைப் பின்னல்களுக்குட் சிக்கிவிடவுமில்லை. சிங்கள ஆட்சியாளரும் அவர்களுக்கு முண்டுகொடுத்து நின்ற வல்லரசுகளும் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் எமது மக்களின் நலனுக்கும் விரோதமாகச் செயற்பட எத்தனித்த போதெல்லாம் எமது இயக்கம் அம்முயற்சிகளை வன்மையாக எதிர்த்து நின்றது.

இந்தியத் தலையீடு நிகழ்ந்த காலத்தில், எமது மக்களின் நலனுக்கும் எமது தேசச் சுதந்திரப் போராட்டத்திற்கும் அச்சுறுத்தல் எழுந்தபோது இந்திய வல்லரசையும் அதன் இராணுவ இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடவும் நாம் துணிந்தோம் என்பதை எமது மக்கள் அறிவார்கள்.

எமது விடுதலை இயக்கம், திம்புவில் தொடங்கிப் பல்வேறு கட்டங்களில், பல்வேறு சமாதான முயற்சிகளிற் பங்குபற்றியபோதும் இம்முறையே எமது போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நீண்ட கால இடைவெளியை - கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால இடைவெளியைச் சமாதானத்திற்கு நாம் அர்ப்பணித்தோம். இந்த நீண்ட கால விசாலத்தில் எமது மக்களின் பிரச்சினைகளுக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் அயராது மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே அர்த்தமற்றுப்போயின.

இம்முறை நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் சாராம்சத்தில் வித்தியாசமானவை, முக்கியத்துவமானவை. மூன்றாம் தரப்பு உலக நாடொன்றின் அனுசரணையில், சர்வதேசச் சமூகத்தின் கண்காணிப்பில் இந்தப் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முதலில் ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடனும் பின்னர் சந்திரிகாவின் ஆட்சிபீடத்துடனும் நிகழ்ந்த பேச்சுக்களின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், உடன்பாடுகள் எவையுமே செயல்வடிவம் பெறவில்லை. நாம் பொறுமையின் எல்லையைக் கடந்து சகிப்புத்தன்மையின் சிகரம்வரை சென்றோம். எத்தனையோ விடயங்களில் விட்டுக்கொடுத்து, சகல வாய்ப்புக்களையும் நாம் வழங்கியபோதும் சிங்களப் பேரினவாத ஆட்சிப்பீடங்கள் எமது மக்களுக்கு நீதி வழங்க மறுத்துவிட்டன.

2001ஆம் ஆண்டு, டிசம்பர் 24 ஆம் நாளன்று, நாமாகவே தன்னிச்சையாகப் போரை நிறுத்திச் சமாதானக் கதவுகளைத் திறந்துவிட்டோம். வன்னி மாநிலத்தை மீட்டெடுத்து, ஆனையிறவுப் படைத் தளத்தை துவம்சம் செய்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாக நிலைநிறுத்தி, பலத்தின் அத்திவாரத்தில் நின்றவாறே சிங்களத் தேசத்திற்கு நாம் நேசக் கரம் நீட்டினோம். நோர்வே அரசு நடுநிலை வகிக்க ரணில் விக்கிரமசிங்காவின் அரசுடன் உலகத் தலைநகர்களில் நிகழ்ந்த பேச்சுக்கள் பற்றி நான் இங்கு விபரித்துக்கூறத் தேவையில்லை.

எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சினைகளையும் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளையுங்கூட ரணிலின் ஆட்சிபீடத்தால் தீர்த்துவைக்க முடியவில்லை. ரணிலின் அரசாங்கமானது பேச்சுக்களை இழுத்தடித்துக் காலத்தைக் கடத்தியதோடு, உலக வல்லரசு நாடுகளுடன் இரகசியக் கூட்டுச் சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் ஒரு சூழ்ச்சிகரச் சதிவலையைப் பின்னுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இந்தச் சதித்திட்டத்தின் ஒரு முக்கிய ஏற்பாடாகவே 2003ஆம் ஆண்டு, ஜுன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேறவிருந்தது. இதனை அறிந்து கொண்ட நாம் டோக்கியோ மாநாட்டைப் பகிஸ்கரித்ததுடன் பேச்சுக்களிலிருந்தும் விலகிக் கொண்டோம்.

சமாதான முயற்சியில் எதையுமே சாதிக்காது ரணிலின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சமாதானத்திற்கு விரோதமான இனவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்ந்து புதிய அரசை அமைத்தார் சந்திரிகா. நாம் ஏற்கெனவே முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டம்பற்றிப் பேசுவதற்கு எமது இயக்கம் இணக்கம் தெரிவித்தபோதும் சந்திரிகா அதற்கு இணங்காது காலத்தை இழுத்தடித்தார்.

இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, அரசியல் வெறுமைக்குட் காலம் ஓடியது. இந்த அரசியற் சூனியத்திற்குள், இந்த நிச்சயமற்ற வெறுமைக்குள் எம்மைச் சிக்கவைத்து, எமது விடுதலைப் போராட்டத்தைத் திசை திருப்பி மழுங்கடிப்பதே சிங்கள ஆட்சியாளரின் வஞ்சக நோக்கம் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். இனித் தொடர்ந்தும் சமாதான மாயைக்குள் செயலற்று இருப்பது அபத்தம் என எண்ணிய நாம் எமது தேச விடுதலைப் போராட்டத்தைக் காலதாமதமின்றி முன்னெடுக்கத் தீர்மானித்தோம். அதற்கான செய்திட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்த வேளையிலேயே, அதாவது சென்ற ஆண்டுக் கடைசியில், இயற்கையின் அந்தக் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது.

திடீரென எவருமே எதிர்பாராத் தருணத்தில் இந்தப் பேரவலம் நிகழ்ந்தது. எமது தாயகப் பூமியின் கிழக்குக் கரையோரக் கிராமங்கள், குடியிருப்புகள் மீது சுனாமிப் பேரலைகள் தாக்கி என்றுமில்லாத பேரழிவுகளை ஏற்படுத்தின. இயற்கையின் இரக்கமற்ற இந்த ஊழிக் கூத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இருபதினாயிரம் பேர் கொன்றொழிக்கப்பட்டனர். மூன்று லட்சம் பேர்வரை வீடுகள், சொத்துக்களை இழந்து அகதிகளாக அல்லற்பட்டனர். ஏற்கெனவே யுத்தத்தினாற் சிதைந்து போயிருந்த தமிழர் தேசம்மீது இன்னொரு பேரழிவு ஏற்பட்டதால், சுமக்க முடியாத துன்பப் பளுவைச் சுமக்க எமது மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

உடனடியாகவே இப்பேரவலத்திற்கு முகங்கொடுக்க எமது விடுதலை இயக்கம் முடிவெடுத்தது. எமது இயக்கத்தின் படைத்துறைப் பிரிவுகளும் மற்றும் நிர்வாக, சமூக சேவைக் கட்டமைப்புகளும் களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான, நிவாரணப் பணியில் ஈடுபட்டன.

ஆழிப்பேரலை அனர்த்தம் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டதால், பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணத்திற்கெனப் பெரும் தொகையில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு உலக நாடுகள் முன்வந்தன. அதேசமயம், எமது விடுதலை இயக்கத்துடன் கூட்டுச்சேர்ந்து, ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குச் சந்திரிகா அம்மையார் விருப்பம் தெரிவித்தார்.

பேரவலத்திற்கு ஆளாகி நிற்கும் தமிழ் பேசும் மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை அன்று எமக்கு எழுந்தது. இதனால் சந்திரிகா அரசாங்கத்துடன் பேசி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் பெற்றுக்கொடுக்க முடிவெடுத்தோம்.

நோர்வேயின் அனுசரணையுடன் இரு தரப்புச் சமாதானச் செயலகங்கள் மட்டத்திற் பேச்சுக்கள் நிகழ்ந்தன. முடிவின்றி, நீண்ட காலத்திற்கு இப்பேச்சுக்கள் இழுபட்டுச் செல்வதை நாம் விரும்பவில்லை. ஆகையால் நாம் மென்போக்கைக் கடைப்பிடித்து, சில முக்கிய விடயங்களில் நெகிழ்ந்து கொடுத்து, ஒரு நிர்வாகக் கட்டமைப்பை நிறுவுவதற்கு இணங்கினோம். இதற்கான உடன்பாடும் கைச்சாத்தாகியது.

சிறீலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து உருவாக்கிய இந்த நிவாரணக் கட்டமைப்புக்கு அனைத்துலக நாடுகளும் தமது நல்லாதரவை வழங்கின. முரண்பட்டு நின்ற இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படும் நல்லெண்ணச் சூழ்நிலை பிறந்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்தன. ஆயினும் இந்த நல்லெண்ணச் சூழ்நிலை உருவாகுவதையோ, தமிழருக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதையோ சிங்கள - பௌத்த இனவாதச் சக்திகளாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது.

சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது. சர்வ அதிகாரம் படைத்த ஜனாதிபதி சந்திரிகாவினாற்கூட, சிங்கள இனவாதச் சக்திகளை மீறித் தமிழ் மக்களுக்கு ஒரு நிவாரணத் திட்டத்தைத்தானும் நிறைவுசெய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்கும்பொழுது பேரினவாதச் சகதியில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள அதிகார வர்க்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்புக்கே தென்னிலங்கையில் இத்தகைய எதிர்ப்பு என்றால் தமிழர் தாயகத்தில் தன்னாட்சி அதிகாரமுடைய ஆட்சியமைப்பைச் சிங்கள அரசியல் தலைமைகளுடன் பேசிப் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது வெறும் பகற் கனவு. கடந்த நான்கு ஆண்டுகாலச் சமாதான முயற்சியின் பயனாக நாம் பட்டுணர்ந்துகொண்ட மெய்யுண்மை இது. இந்தச் சமாதான நாடகத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்துவந்த உலக நாடுகளுக்கும் இந்த உண்மை தெளிவாகியிருக்கும் என்றே நாம் நம்புகிறோம்.

எனது அன்பான மக்களே,

சிங்கள ஆட்சியாளரின் நயவஞ்சக அரசியலுக்கு நல்லதொரு எடுத்துக் காட்டாக இன்னொரு பாரதூரமான விடயத்தையும் நான் இங்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். சமாதானத்தின் திரைக்குப் பின்னால், மறைமுகமாக, எமது இயக்கத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் ஓர் இரகசிய யுத்தம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எமது விடுதலை இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, எமது போராட்டத்திற்குப் பங்கம் விளைவிக்கும் நோக்குடன் இந்த நாசகார நிழல் யுத்தம் ஏவிவிடப்பட்டது.

எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய போராளிகள், ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவான அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என்ற வகையில் பெருந்தொகையானோர் மிகவும் கோழைத்தனமாகக் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இந்த நிழல் யுத்தத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது எமக்கு நன்கு தெரியும். இராணுவப் புலனாய்வுத் துறையின் வழிநடத்தலில் இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றபோதும் இதன் பின்புலத்திற் சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அரூப கரங்கள் செயற்படுவதையும் நாம் அறிவோம்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அரச படையினரின் பாதுகாப்புக் கவசத்துடன் ஒட்டுப் படைகளான தமிழ் ஆயுதக் குழுக்களை கருவிகளாகக் கொண்டு இந்த மறைமுக யுத்தம் நடத்தப்படுகிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக நின்று அரசியற் பணிகளில் ஈடுபட்ட எமது போராளிகள் கொலை செய்யப்படுவதையும், எமது அரசியற் செயலகங்கள் தாக்கியழிக்கப்படுவதையும் நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால், சிங்கள அரசு எமது ஆட்சேபனைகளைப் பொருட்படுத்தவில்லை. இதனால் இறுதியில் எமது அரசியற் போராளிகளை எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் மீள அழைக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

போருக்கு ஓய்வு கொடுத்ததால் உருவாகிய சமாதானச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு வித்தியாசமான மென் தீவிர யுத்தம் எம்மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. போர்நிறுத்த விதிகளுக்கு அமையத் தமிழ்க் கூலிப் படைகளின் ஆயுதங்களைக் களைய வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு. இந்த முக்கிய கடப்பாட்டை நிறைவுசெய்யத் தவறிய சிங்கள அரசு, இந்த ஆயுதக் குழுக்களையே கருவிகளாகப் பயன்படுத்தி எமது விடுதலை இயக்கத்திற்கு எதிராக வன்முறையை ஏவிவிட்டிருப்பது ஒரு பாரதூரமான போர்க் குற்றமாகும். ஒரு கையால் அரவணைப்பது போல நடித்து மறுகையாற் குத்தும் நம்பிக்கைத் துரோகச் செயலிது.

சமாதான முயற்சியிலும் சமரசத் தீர்விலும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு உண்மையான ஆர்வமும் அக்கறையும் இருக்கவில்லை என்பதையே இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது. இராணுவ அணுகுமுறையை இவர்கள் இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. சமாதானச் சூழலிலும் ஒரு புதிய வடிவிற் போரை உருமாற்றம் செய்து இராணுவப் பயங்கரவாதத்தைத் தொடர்கிறது சிங்கள அரசு. இந்த நிழல் யுத்தத்தின் நிஜ வடிவத்தையும் அதன் அசிங்கமான முகத்தையும் அந்தரங்க நோக்கத்தையும் சர்வதேச சமூகம் கண்டுகொள்ளும் என நாம் நம்புகிறோம்.

சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன. சமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேசச் சதிவலைப் பின்னல் - இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையிற் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது.

நிலையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் பெற்றுத்தராத சமாதானத்தில், வாழ்விடங்களை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தை அகற்ற முடியாத போர்நிறுத்தத்தில், தீராது தொடரும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடித்தராத பேச்சுக்களில், எமது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

நிலையற்ற வாழ்வையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது மக்கள் பொறுத்துக்கொள்ளத் தயாராகவில்லை. பொறுத்துப் பொறுத்து பொறுமையிழந்த தமிழ் மக்களின் பொங்குணர்வாகவே அவர்களது அரசியல் அபிலாசைகளின் ஆவேச வெளிப்பாடாகவே தமிழீழத் தாயகமெங்கும் வெகுசனப் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. சமீப காலமாக, தமிழ் மாவட்டங்கள் தோறும் மாறி, மாறி அரங்கேறிவரும் தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிற் சமுத்திரமாக மக்கள் திரண்டெழுந்து உரிமை முழக்கம் செய்து வருகிறார்கள்.

சுயநிர்ணய உரிமைகோரி, தம்மைத் தாமே ஆட்சிபுரியும் அரசியற் சுதந்திரங்கோரி, தமிழீழ மக்கள் எழுப்பும் உரிமைக் குரலானது உலக மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது. ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட தேசமாக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்தின் உரிமைக் குரலைச் சர்வதேசச் சமூகம் இனியும் அசட்டை செய்யமுடியாது. தமது அரசியல் தகைமையைத் தாமாகவே நிர்ணயித்துக்கொள்ள எமது மக்கள் விரும்புகிறார்கள். காலங்காலமாக அரச ஒடுக்குமுறைக்கு ஆளாகிய ஒரு தேசிய மக்கள் சமுதாயம் என்ற ரீதியில், தமது அரசியல் அபிலாசைகளைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எமது மக்களின் அறைகூவலாகும்.

எமது சுயநிர்ணயப் போராட்டப் பயணத்தில் நாம் இன்று ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்புமுனையை அடைந்துள்ளோம். தென்னிலங்கை அரசியல் அதிகார வர்க்கம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை என்றுமே அங்கீகரிக்கப் போவதில்லை. சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்திலும், அந்தச் சட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் சுயநிர்ணயத்திற்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை. நாமாகவே போராடி, எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள். சுயநிர்ணயம் என்பதே சுயமாக, சுதந்திரமாக, மற்றவர்களின் தலையீடின்றி, எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான். அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது.

தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர். சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காதமை இந்தப் புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்.

சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்தபோதும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு வெறுப்பாகவோ அவர்களது கட்சிகள், கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு. ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான விரக்தியினதும் நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இத்தேர்தற் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது. தமிழரின் அரசியற் போராட்ட வரலாற்றில் இதுவொரு பாரதூரமான திருப்பத்தை சுட்டிக்காட்டுகிறது. சிங்கள அரசியல் ஆட்சிமுறையில் நம்பிக்கையிழந்த தமிழீழ மக்கள், தனிவழி சென்று தமது அரசியல் தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கத் துணிந்துவிட்டனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

சிங்களத் தேசமானது ஒரு புதிய தேசத் தலைவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்தத் தலைவனின் கீழ் ஒரு புதிய ஆட்சிபீடம் பதவி ஏறியுள்ளது. இந்த ஆட்சியமைப்பானது பிரத்தியேகமாகச் சிங்களப் பெரும்பான்மை மக்களால், அவர்களது வாக்குப் பலத்தால் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சியமைப்பிற் சிறுபான்மைத் தேசிய இனத்தவரின் பங்களிப்பு இருக்கவில்லை.

இது முற்று முழுதாகவே ஒரு சிங்களப் பௌத்த ஆட்சிபீடமாகும். இதனால் மகிந்த ராஜபக்சா இலங்கை வாழ் மக்கள் சமூகங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சிங்கள - பௌத்த மக்களின் நலனைப் பேணும் அரச அதிபராகவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அரச அதிபர் மகிந்தாவின் சிந்தனைகளையும் கொள்கைகளையும் நாம் நன்கறிவோம். தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அவரது அரசியல் தரிசனத்திற்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கும் மத்தியிலான இசைவற்ற இடைவெளிகளையும் இணங்காத முரண்பாடுகளையும் நாம் அறிவோம். இவைபற்றி நான் இங்கு ஒப்பீட்டு மதிப்பாய்வு செய்ய விரும்பவில்லை.

சமீபத்திய அரச அதிபர் தேர்தலும் அதனை எமது மக்கள் புறக்கணித்ததால் ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் தமிழ், சிங்கள தேசங்கள் மத்தியில், அரசியல் ரீதியாக, ஆழமான ஒரு பிளவை ஏற்படுத்தியுள்ளன. தென்னிலங்கையில், சிங்கள - பௌத்தம் மேலாண்மை பெற்றுள்ள அதே சமயம், தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியம் நிலைப்பட்டு, பலப்பட்டு, எழுச்சிபெற்று வருகிறது. சிங்களத்தில் மகிந்த ராஜபக்சாவின் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தமிழீழத்திலும் தமிழ்த் தேசிய எழுச்சியின் திண்ணிய வடிவமாக எமது விடுதலை இயக்கத்தின் ஆட்சியமைப்பு விரிவடைந்து, வலுவடைந்து இயங்கி வருகிறது.

சிங்கள இராணுவ ஆதிக்கத்திலிருந்து எமது தாயக நிலத்தின் பெரும் பகுதியை நாம் மீட்டெடுத்து, அங்கு தன்னாட்சி அதிகாரமுள்ள ஆட்சியமைப்பை நிறுவி, அதனை நேர்த்தியாக நிர்வகித்து வருகிறோம் என்பது இன்று உலகறிந்த உண்மை. பெருந்தொகை மக்கள் வாழும் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களையும் அதனைக் கட்டிக்காக்க பலம்பொருந்திய படைத் துறையையும் சட்டம் ஒழுங்கைப் பேணக் காவல்துறையையும் நீதித்துறையையும் அத்தோடு ஒரு நிழல் அரசாங்கத்திற்குரிய அடித்தளக் கட்டுமாணங்களையும் கொண்டதாக பிரமாண்டமான நிர்வாக அமைப்பை நாம் இயக்கி வருகிறோம்.

பெரும் தொகையான எமது மக்கள் இன்னும் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த போதும், உணர்வாலும் இலட்சியத்தாலும் அவர்கள் எமது விடுதலை இலட்சியத்திற்குப் பின்னால் அணிதிரண்டு நிற்கிறார்கள். இந்தக் கள யதார்த்தத்தை, அரசியல் மெய்ம்மையைச் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், எமது விடுதலை இயக்கத்தை ஒரு 'பயங்கரவாதக் குழு|'என உலகத்திற்குச் சிறுமைப்படுத்திச் சித்திரித்துக்காட்ட முனைந்து வருகிறார்கள். இந்தப் பொய்யான பரப்புரைகளை நம்பி, உலக நாடுகள் சில எமது இயக்கத்தைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடர்ந்தும் வைத்திருப்பது எமக்கு வேதனையையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

சமாதான முயற்சியின் பாதுகாவலர் என உரிமை கோரி, இலங்கையின் இனப்பிரச்சினையில் ஆர்வமும் அக்கறையும் காட்டிய உலக வல்லாதிக்க நாடுகள், ஒரு தரப்பினரான எமது விடுதலை இயக்கத்தைப் ஷபயங்கரவாதிகள்| என ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு, மறுதரப்பினரான சிறீலங்கா அரசின் நலன்களுக்குச் சார்பாக நிலைப்பாடு எடுத்தன. இது பேச்சுக்களிற் பங்கு கொண்டோரது சமநிலை உறவை வெகுவாகப் பாதித்தது.

அத்தோடு எமது அரசியல் தகைமையை நாமே தீர்மானிக்கும் சுதந்திரத்தையும் பாதித்தது. இந்நாடுகளின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாடும் குறுக்கீடும் சமாதானப் பேச்சுக்கள் முறிந்துபோவதற்கும் ஒரு காரணமாக அமைந்தன. பயங்கரவாதம் என்ற சொற்பதத்திற்கு ஒரு தெளிவான, தீர்க்கமான வரைவிலக்கணம் இல்லாததால் தர்மத்தின் வழிதழுவி நிகழும் நியாயமான அரசியற் போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன.

இந்தவகையில் இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு பூசப்படுகிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் இராணுவப் பயங்கரவாதம் மூடிமறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்தத் துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.

நோர்வே நாட்டின் அனுசரணையுடனும் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் கடந்த நான்கு ஆண்டுக் காலம்வரை இழுபட்ட சமாதான முயற்சியின்போது சிங்கள அரச தரப்பினால் ஏற்பட்ட சிக்கல்கள், போடப்பட்ட முட்டுக்கட்டைகள், இழைக்கப்பட்ட நம்பிக்கைத் துரோகங்கள் எல்லாவற்றையுமே உலகம் நன்கறியும். எத்தனையோ இம்சைகள், ஆத்திரமூட்டல்கள் மத்தியிலும் நாம் பொறுமையை இழந்து, சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை என்பதையும் சர்வதேசச் சமூகம் அறியும். நான்கு ஆண்டுக்கால அமைதிப் பயணத்திற் சமாதானத்தின் மீதான எமது பற்றுறுதியை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டிவிட்டோம்.

எனது அன்பான மக்களே,

எமது போராட்ட இலட்சியத்தை அடையும் அணுகுமுறை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டிய காலத்தை நாம் நெருங்கிவிட்டோம். இந்த வரலாற்றுத் திருப்புமுனையான கட்டத்தில், எமக்கு ஒரு புதிய சவாலாக, சிங்களத் தேசத்தில் ஒரு புதிய அரச அதிபரின் தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தப் புதிய அரசு எமக்கு நேசக் கரம் நீட்டுகிறது. எமது விடுதலை இயக்கத்துடன் பேசுவதற்கு விருப்பம் தெரிவிக்கிறது.

போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து அமைதி பேணப் போவதாகச் சொல்கிறது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்து வருகிறது. ஜனாதிபதி மகிந்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால், சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும், தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே, ஜனாதிபதி ராஜபக்சாவின் நகர்வுகளை, அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்.

பொறுமையிழந்து, நம்பிக்கையிழந்து, விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே, வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள், எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில், ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

இது எமது இறுதியான, உறுதியான, அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, கடும்போக்கைக் கடைப்பிடித்து, காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும், எமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவுகூரும் இப்புனித நாளில், எத்தகைய இடர்களையும் எத்தகைய துன்பங்களையும் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்போமென உறுதிபூணுவோமாக.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

Link to comment
Share on other sites

மேற்குலக நாடுகளின் இந்தியா, சீனா தொடர்பான திட்டம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது தான் பிரதான திட்டம். இந்தியா தனக்கென வைத்திருக்கும் திட்டம் அல்லது சீனா தனக்கென வைத்திருக்கும் திட்டம் என்பன இரண்டாம் பட்சம்.

கட்டுரையாளர் மேற்குலகத்தின் திட்டம் பற்றி பெரிதாக சொல்லவில்லை.

இந்திய‌ சீன‌ப் போருக்கான‌ பிர‌தான‌ கார‌ண‌ங்க‌ளாக‌ இவர் சொல்வ‌து,

1. சீனாவின் அண்மைய‌ ப‌ல‌ம‌டைத‌ல் ( இராணுவ‌, பொருளாதார‌)

2. இந்தியா மேற்கின் ப‌க்க‌ம் சாய்த‌ல்

3. இந்தியாவின் இராணுவ‌ முனைப்பு

4. வ‌ள‌ங்க‌ளுக்கான‌ போட்டி

மேலும் இந்திய‌ வ‌ட்டார‌ங்களின் ப‌டி சீனாவே போரைத்தொட‌க்கும் என்கிறார்.

இவ‌ர் சொல்லும் கார‌ண‌ங்க‌ள் ஒரு போரை தொட‌க்குவ‌த‌ற்குப் போதுமான‌வை அல்ல.

சீனா இந்தியா மீது போர் தொட‌க்குவ‌த‌ற்கு, இந்தியா சீனாவிற்கு ஒரு அச்சுறுத்த‌லாக‌ இருக்க‌ வேண்டும். அடுத்து வ‌ரும் முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளை எடுத்துக் கொண்டால், இந்தியா சீனாவை ஆயுத‌, பொருளாதார‌ ,ஆள் ப‌ல‌த்தில் மேவ‌ இக்கால‌ க‌ட்ட‌த்தில் முடியாது. ஆக‌வே அடுத்த‌ முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளில் இந்தியாவால் சீனாவிற்கு அச்சுறுத்த‌லாக‌ இருக்க‌ முடியாது.

அதே நேர‌ம் இந்தியா சீனாவை ஒரு போதும் இக்காலத்தில் தாக்க‌ப் போவ‌தும் இல்லை.

ஆக‌வே அடுத்த‌ முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு சீன‌ இந்திய‌ப் போர் சாத்திய‌மில்லை.

சீனாவின் பிரதான இல‌க்கு அமெரிக்க‌, மேற்குல‌க‌ அதிகார‌த்தை மேவுவ‌துதான். இந்த‌ இல‌க்கை அடைவ‌த‌ற்கு அது உல‌கின் முத‌லாவ‌து வ‌ல்ல‌ர‌சாக‌ வேண்டும். இதை நோக்கித் தான் அத‌ன் முய‌ற்சிக‌ள் உள்ள‌ன‌. சீன இந்தியப் போர், சீனா இந்த இலக்கை அடைவதைத் தவிர்க்கும்.

த‌ன்னுடைய‌ இராணுவ‌, விண்வெளி , சமூக அபிவிருத்தி முய‌ற்சிக‌ளுக்கான‌ பொருளாதார‌த்தை க‌ட்டி எழுப்புவ‌த‌ற்கான‌ ச‌க‌ல வ‌ழிக‌ளிலும் சீனா முய‌ல்கின்ற‌து. இந்தியாவுட‌ன் வ‌ள‌ங்க‌ளுக்கான‌ போட்டி மிக‌வும் குறைவு.

ஏனெனில் சீனாவுக்கென்று போட்டிய‌ற்ற‌ முறையில் வ‌ள‌ங்க‌ளை வ‌ள‌ங்க‌ ஆபிரிக்க‌ , ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளும், ஈரான் போன்ற‌ன‌வும் உள்ள‌ன.

சோவிய‌த் யூனிய‌ன் , வோர்சோ கூட்ட‌மைப்பை உடைத்த‌ மேற்குல‌கு இப்போது சீனாவைக் குறிவைத்துள்ள‌து. சீன‌ இந்திய‌ப் போரினால் ந‌ன்மை அடைய‌ப் போவ‌து இவர்க‌ளே.

ஆக‌வே போரை ஏற்ப‌டுத்த‌க் கூடிய‌ கார‌ணிக‌ளை இவ‌ர்க‌ள் தூண்டிவிடப் போகின்றார்க‌ளா?

உதார‌ண‌மாக‌, இந்தியாவின் இராணுவ‌ இய‌ந்திர‌த்தை சீனாவுக்கு அச்சுறுத்த‌ல் ஏற்ப‌டுத்த‌க் கூடிய‌ வ‌கையில் உருவாக்க‌ப் போகின்றார்க‌ளா ?

இவ‌ர்க‌ள‌து திட்ட‌ம் என்ன‌ என்ப‌தை அறிந்து கொள்வ‌த‌ன் முக்கிய‌த்துவ‌ம் இத‌ன் மூல‌ம் புல‌ப்ப‌டும்.

ஏனெனில் இந்த‌ப் பெரிய‌ திட்ட‌த்தில் எம‌க்கும் ஒரு சிறிய‌ திட்ட‌ம் இருக்க‌லாம். இன்னும் எமெக்கென்று ஒரு சிறிய திட்ட‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லாவிட்ட‌ல் அதை எமெக்குச் சார்பாக‌ உருவாக்க‌க்கூடிய‌ முய‌ற்சியில் நாம் இற‌ங்க‌ வேண்டும். ஏற்க‌னவே இருந்தால் அதையும் எமெக்குச் சார்பாக மாற்றக்கூடிய‌ முய‌ற்சியில் நாம் இற‌ங்க‌ வேண்டும்.

Link to comment
Share on other sites

விரிவான தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் ஈசன்..! இந்தியா - சீனா இடையே போர் மூளுமா என்று தலைப்பு இட்டதால் கட்டுரையாளர் மேற்குலகைப் பற்றி அதிகம் பேசாமல் போய்விட்டார் போலும். அதேசமயத்தில் இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதி சீனாவைப் பற்றி கிட்டத்தட்ட ஒன்றுமே எழுதாதது வியப்பாக இருக்கிறது.

இந்த மாதம் நடந்த நிகழ்வுகளில் இரண்டு கவனிக்கப்படவேண்டியவை.

முதலாவது, சரத் பொன்சேகா அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறார். பின்னர் கோத்தபாயவுக்கு எதிராக சாட்சி சொல்லுமாறு கேட்க்கப்பட்டதாக செய்தி பரவுகிறது. இலங்கை திரும்பும் பொன்சேகா அரசுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு வருகிறார். இந்தியாவின் முகர்ஜி ஓடோடி வருகிறார்.

இரண்டாவது, சீனாவுக்குச் செல்லும் ஒபாமா திபெத்தை சீனாவின் ஒரு பகுதி என்கிறார். இது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாறானது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நிகழ்வுகள் போலத்தான் தோன்றுகிறது. இந்தியா தற்போது மதில்மேல் பூனை நிலையில் இருக்கிறது என்பதே கட்டுரையாளர் சொல்வது. அத்தகைய நிலையிலிருந்து இந்தியாவை தம்பக்கம் வரவழைக்க மேற்குலகம் செய்யும் வேலைகளாக மேலே சொன்ன இரண்டு விடயங்களும் இருக்கலாம்.

மேலும், இந்தியா உறுதியாக ஏதாவது ஒரு அணியின் பக்கம் சாய்வதே நமக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும். மேற்குலகம் ஈழத்தின் மனித உரிமைப் பிரச்சினைகள், மற்றும் சீன உறவுகளின் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகித்து இந்தியாவை தம் பக்கம் எடுத்துக்கொள்வது சாத்தியப்படக்கூடிய ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

:D

மேற்குலக நாடுகளின் இந்தியா, சீனா தொடர்பான திட்டம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது தான் பிரதான திட்டம். இந்தியா தனக்கென வைத்திருக்கும் திட்டம் அல்லது சீனா தனக்கென வைத்திருக்கும் திட்டம் என்பன இரண்டாம் பட்சம்.

கட்டுரையாளர் மேற்குலகத்தின் திட்டம் பற்றி பெரிதாக சொல்லவில்லை.

இந்திய‌ சீன‌ப் போருக்கான‌ பிர‌தான‌ கார‌ண‌ங்க‌ளாக‌ இவர் சொல்வ‌து,

1. சீனாவின் அண்மைய‌ ப‌ல‌ம‌டைத‌ல் ( இராணுவ‌, பொருளாதார‌)

2. இந்தியா மேற்கின் ப‌க்க‌ம் சாய்த‌ல்

3. இந்தியாவின் இராணுவ‌ முனைப்பு

4. வ‌ள‌ங்க‌ளுக்கான‌ போட்டி

மேலும் இந்திய‌ வ‌ட்டார‌ங்களின் ப‌டி சீனாவே போரைத்தொட‌க்கும் என்கிறார்.

இவ‌ர் சொல்லும் கார‌ண‌ங்க‌ள் ஒரு போரை தொட‌க்குவ‌த‌ற்குப் போதுமான‌வை அல்ல.

சீனா இந்தியா மீது போர் தொட‌க்குவ‌த‌ற்கு, இந்தியா சீனாவிற்கு ஒரு அச்சுறுத்த‌லாக‌ இருக்க‌ வேண்டும். அடுத்து வ‌ரும் முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளை எடுத்துக் கொண்டால், இந்தியா சீனாவை ஆயுத‌, பொருளாதார‌ ,ஆள் ப‌ல‌த்தில் மேவ‌ இக்கால‌ க‌ட்ட‌த்தில் முடியாது. ஆக‌வே அடுத்த‌ முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளில் இந்தியாவால் சீனாவிற்கு அச்சுறுத்த‌லாக‌ இருக்க‌ முடியாது.

அதே நேர‌ம் இந்தியா சீனாவை ஒரு போதும் இக்காலத்தில் தாக்க‌ப் போவ‌தும் இல்லை.

ஆக‌வே அடுத்த‌ முப்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு சீன‌ இந்திய‌ப் போர் சாத்திய‌மில்லை.

சீனாவின் பிரதான இல‌க்கு அமெரிக்க‌, மேற்குல‌க‌ அதிகார‌த்தை மேவுவ‌துதான். இந்த‌ இல‌க்கை அடைவ‌த‌ற்கு அது உல‌கின் முத‌லாவ‌து வ‌ல்ல‌ர‌சாக‌ வேண்டும். இதை நோக்கித் தான் அத‌ன் முய‌ற்சிக‌ள் உள்ள‌ன‌. சீன இந்தியப் போர், சீனா இந்த இலக்கை அடைவதைத் தவிர்க்கும்.

த‌ன்னுடைய‌ இராணுவ‌, விண்வெளி , சமூக அபிவிருத்தி முய‌ற்சிக‌ளுக்கான‌ பொருளாதார‌த்தை க‌ட்டி எழுப்புவ‌த‌ற்கான‌ ச‌க‌ல வ‌ழிக‌ளிலும் சீனா முய‌ல்கின்ற‌து. இந்தியாவுட‌ன் வ‌ள‌ங்க‌ளுக்கான‌ போட்டி மிக‌வும் குறைவு.

ஏனெனில் சீனாவுக்கென்று போட்டிய‌ற்ற‌ முறையில் வ‌ள‌ங்க‌ளை வ‌ள‌ங்க‌ ஆபிரிக்க‌ , ல‌த்தீன் அமெரிக்க‌ நாடுக‌ளும், ஈரான் போன்ற‌ன‌வும் உள்ள‌ன.

சோவிய‌த் யூனிய‌ன் , வோர்சோ கூட்ட‌மைப்பை உடைத்த‌ மேற்குல‌கு இப்போது சீனாவைக் குறிவைத்துள்ள‌து. சீன‌ இந்திய‌ப் போரினால் ந‌ன்மை அடைய‌ப் போவ‌து இவர்க‌ளே.

ஆக‌வே போரை ஏற்ப‌டுத்த‌க் கூடிய‌ கார‌ணிக‌ளை இவ‌ர்க‌ள் தூண்டிவிடப் போகின்றார்க‌ளா?

உதார‌ண‌மாக‌, இந்தியாவின் இராணுவ‌ இய‌ந்திர‌த்தை சீனாவுக்கு அச்சுறுத்த‌ல் ஏற்ப‌டுத்த‌க் கூடிய‌ வ‌கையில் உருவாக்க‌ப் போகின்றார்க‌ளா ?

இவ‌ர்க‌ள‌து திட்ட‌ம் என்ன‌ என்ப‌தை அறிந்து கொள்வ‌த‌ன் முக்கிய‌த்துவ‌ம் இத‌ன் மூல‌ம் புல‌ப்ப‌டும்.

ஏனெனில் இந்த‌ப் பெரிய‌ திட்ட‌த்தில் எம‌க்கும் ஒரு சிறிய‌ திட்ட‌ம் இருக்க‌லாம். இன்னும் எமெக்கென்று ஒரு சிறிய திட்ட‌ம் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லாவிட்ட‌ல் அதை எமெக்குச் சார்பாக‌ உருவாக்க‌க்கூடிய‌ முய‌ற்சியில் நாம் இற‌ங்க‌ வேண்டும். ஏற்க‌னவே இருந்தால் அதையும் எமெக்குச் சார்பாக மாற்றக்கூடிய‌ முய‌ற்சியில் நாம் இற‌ங்க‌ வேண்டும்.

இந்தியாவில் அரசியல்,இராணுவ ரீதியான தளம்பல்களை ஏற்படுத்த சீனா இன்று முயற்சிகாவிட்டாலும் ஒரு சில வருடங்களில் தமது பலத்தை அமெரிக்காவுக்கும் ,உலகுக்கும் காட்டும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் தான் ஒரு அதி சக்தி வாய்ந்தவர் என காட்டும் சந்தர்ப்பத்தை சீனா என்ன எந்த நாடாகினும் ஒரு வெருட்டுகாவது சிலரை வெருட்ட வேணுமல்லவா. இந்தியா, ஒரு இழிச்ச வாய் என்பது சீனாவுக்கல்ல உலகுக்கே தெரியும். அத்தோடு ட்னது நண்பர்களான பாகிஸ்தான், ஈரான் போன்றவர்களின் வேண்டுகோளானான இந்தியாவின் மீதான தாக்குதல்கள் தவிர்க்க முடியாதவை தான்.ஐரோப்பிய நாடுகள் இராணுவ ரீதியாக இந்தியாவுக்கு உதவும் என்பதும் ஐயமானது.காரணம் இந்தியாவின் மதில் மேல் பூனையான அரசியல் கொள்கைகள்.

பெரிய நியூகிளியர் சண்டைகள் நடைபெறாவிட்டாலும் சிறிய சண்டைகள் அதாவது இந்தியாவின் பிரதேசங்களை சீனா கைப்பற்றும் சனி எங்கு எப்படி மாறினாலும். :):D

Link to comment
Share on other sites

2005 ம் ஆண்டின் மாவீரர் நாள் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களை படித்து வைத்து கொள்ளுங்கள்... அதைப்பற்றி பிறகு கவனிக்கலாம்...

அதுக்கும் முன்னம் சிலர் சொல்லும் புலிகளின் தமிழீழ கனவு கனவாகவே போனது எனும் பதம் உண்மையில் சரியானதா எண்று யோசிக்க வேண்டும்... 2001ம் ஆண்டி மார்கழி மாதம் 24ம் திகதி புலிகள் தன்னிச்சையாக போர் நிறுத்தம் ஒண்றை மேற்கொள்கிறார்கள்... அப்போது புலிகளில் நிலை என்னவாக இருந்தது என்பதை ஞாபகப்படுத்தி கொண்டால் சில விடயங்கள் தெளிவாகலாம்....

ஆனையிறவை தகர்த்து பல பகுதிகளையும் மீளக்கைப்பற்றி கிட்டத்தட்ட 70% மான தமிழீழப்பகுதியை புலிகள் கையுக்குள் வைத்து இருந்த போதும், நிலையான தனிநாட்டு ஆட்ச்சிக்கு தேவையான கட்டுமானங்கள் அனைத்தையும் புலிகள் வைத்து இருந்த போது புலிகள் நோர்வேயின் அனுசரனையுடனான போர் நிறுத்தம் ஒண்றுக்கு போனார்கள்... ( அதன் பின்னர் அமெரிக்க படைகளின் திட்டமிடலுடன் நடந்த தீச்சுவாலையை புலிகள் எதிர் கொள்ள வேண்டியும் இருந்தது.)

அதாவது புலிகளிடம் அந்த நாளில் இல்லாது இருந்த ஒண்றுக்காக புலிகள் போர் நிறுத்தம் செய்ய இணங்கினார்கள்.... அது தமிழீழத்துக்கான சர்வதேச அங்கீகாரம்... தமிழீழ தனிநாட்டுக்கான அனைத்து வகையாக அலகுகளும் புலிகளால் நிர்மானிக்க பட்டு நிர்வகிக்க பட்டு வந்தன... அப்போது எங்களிடம் இல்லாமல் போன சர்வதேச அங்கீகாரம் வேண்டி பிரகடனப்படுத்த இல்லை... அதாவது புலிகளும் தலைவரும் தமிழீழம் கண்டு வைத்து இருந்தார்கள்...

(எமது தலைவர் தனது இலச்சியமான தமிழீழத்தை நீண்டகாலம் அமைத்து நிர்வகித்தாரென்பதுதான் உண்மையும் கூட)

நாங்கள் ஒரு லீற்றர் மண்ணெண்ணை ஈழத்துக்கு கொண்டு போக வேண்டும்... அதுக்கு அங்கீகாரம் வேண்டும்... அதுக்காகத்தான் தமிழ் மக்களின் உணர்வுகளை கொட்டும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் எல்லாம் உலகம் எல்லாம், தாயகம் பூராகவும் நிகழ்ந்தப்பட்டு காட்டப்பட்டது...

இப்போ மாவீரர் நாள் உரையில் தலைவர் சொன்ன ஒரு சிறுவிடயம்....

எமது சுயநிர்ணயப் போராட்டப் பயணத்தில் நாம் இன்று ஒரு தீர்க்கமான வரலாற்றுத் திருப்புமுனையை அடைந்துள்ளோம். தென்னிலங்கை அரசியல் அதிகார வர்க்கம் தமிழரின் சுயநிர்ணய உரிமையை என்றுமே அங்கீகரிக்கப் போவதில்லை. சிங்களப் பௌத்தப் பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்திலும், அந்தச் சட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆட்சியமைப்பிலும் தமிழினத்தின் சுயநிர்ணயத்திற்கு என்றுமே இடமிருக்கப் போவதில்லை. நாமாகவே போராடி, எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்பதை எமது மக்கள் இன்று உணர்ந்து விட்டார்கள். சுயநிர்ணயம் என்பதே சுயமாக, சுதந்திரமாக, மற்றவர்களின் தலையீடின்றி, எமது அரசியல் வாழ்வை நாமாகத் தீர்மானிப்பதுதான். அந்தக் காலமும் சூழலும் இப்போது கனிந்துவிட்டது
.

எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டி இராணுவம் புதுக்குடியிருப்பு போகுவரைக்கும் நாங்கள் வீதிக்கு இறங்கி போராடவில்லை... வெறுமனே புலிகளே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் எண்று இருந்த எங்களிலேயே பழி உண்டு....

இப்போ மற்றவர்கள் புலிகள் மீது சாட்டும் குற்றங்கள் எண்று டங்கு எழுதியதில் எதில் புலிகள் பிழை விட்டார்கள் என்பதை சொல்லுங்கள்...

ழத்தில் நடந்து முடிந்த புலிகளின் அழிப்பின் பின் அந்த அழிவு தொடர்பாக பலவாறான கருத்துக்கள் தமிழர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல புலிகளின் அணுகுமுறையில் தவறுகளை இனம்காண்பவையாக உள்ளன. உதாரணமாக,

1) புலிகள் அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்காமை

2) ராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை வழங்கியமை

3) கருணாவின் பிளவு

4) தலைவரின் தூரநோக்கற்ற சிந்தனை

5) தக்க தருணத்தில் கெரில்லா போர்முறைக்கு மாறாதமை

6) மரபுப் போர் முறையைக் கைக்கொண்டமை.

சுனாமிக்கு பின்னரான தலைவரின் உரையில் எமக்கான தகவல்கள் நிறையவே இருக்கின்றன... அதுவும் சர்வதேச சதி வலைகள் பற்றி அவர் வெளிப்படையாகவே குறிப்பிட்டும் இருக்கிறார்...

Link to comment
Share on other sites

புலியை பிடிச்சுத்தந்தால் சிறிலங்கா உங்கள் அடிமை என்று மகிந்தா சொன்னதை நம்பி எல்லோரும் சேர்ந்து புலியை மகிந்தாவிடம் பிடிச்சு கொடுத்து இருக்கினம்,இனிமேல் நடப்பதை பொருத்திருந்து பார்ப்போம்

புதிய உலக ஒழுங்கு முறை ,சிரிலங்கா இனவாத அரசியலில் எடுபடுமா? என்பதுதான் இப்ப உள்ள கேள்வி.

மகிந்தா இந்தியாவுடன் சேர்ந்து டமிழ்ஸ் க்கு அதிகாரங்களை வழங்கப்போகிரார் என்று சரத் பொன்சேகா அறிக்கைவிட்டால் மகிந்தா பாடு திண்டாட்டம்தான்

தவறனை அரசியல் ஆய்வாளர் ....ஜில்

Link to comment
Share on other sites

நாடக அரங்கேற்றம் - 01

காட்சி : இந்தியா அமெரிக்காவிடம் தனது பூகோள இருப்புக்காக கெஞ்சுதல்

வசனம் :

அணு​குண்டு சோத​னைக்கு தானா​கவே முன்​வந்து தடை விதித்​துக்​கொண்​டுள்ள நாடு இந்​தியா. அதன் நேர்​மைக்கு சான்று தேவை​யில்லை. எனவே அணு​சக்தி ஒத்​து​ழைப்பு உடன்​பாடு அம​லாக்​கத்​தில் அடுத்த கட்​டத்​துக்கு சென்று தேவை​யான தொழில்​நுட்​பத்தை அமெ​ரிக்கா தாரா​ள​மாக வழங்க முன்​வ​ர​வேண்​டும் என்று கோரி​யுள்​ளார் பிர​த​மர் மன்​மோ​கன் சிங்.

அமெ​ரிக்க பய​ணம் தொடர்​பாக நியூஸ்​வீக் பத்​தி​ரி​கைக்கு அளித்த பேட்​டி​யில் பிர​த​மர் கூறி​ய​தா​வது:​ இந்​திய அமெ​ரிக்க அணு​சக்தி உடன்​பாட்​டுக்கு அமெ​ரிக்கா மரி​யாதை தரு​கி​றதா இல்​லையா என்​பது பற்றி கவலை இல்லை. இருப்​பி​னும் அதன் அம​லாக்​கத்தி ன் அடுத்த கட்​டத்​துக்கு போகத் தயார் என அமெ​ரிக்கா ​ உறு​தி​மொழி தர​வேண்​டும்.

இரு​த​ரப்பு உற​வில் புதிய அத்​தி​யா​யத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்ள உடன்​பாடு இது. ​ இந்த உடன்​பாட்​டின் நோக்​கங்​கள் முழு அள​வில் செயல்​பாட்​டுக்கு வர​வேண்​டும். ​

​ அமெ​ரிக்​கா​வு​ட​னான உடன்​பாடு இந்​தி​யா​வின் நீடித்த மேம்​பாட்​டுக்கு துணை​பு​ரி​வ​தாக அமை​யும் நோக்​கி​லா​னது. புதிய சரி​அ​மர்​வு​நி​லைக்​கான தேடு​த​லா​கும் இது. ​

​ அணு ஆயுத சோதனை ஒப்​பந்​தத்தை நாடா​ளு​மன்​றத்​தில் நிறை​வேற்​றிட தீவி​ர​மாக ஒபாமா இருப்​பது பற்றி இந்​தியா கவலை அடை​ய​வில்லை. அணு ஆயுத சோத​னைக்கு தானே முன்​வந்து தடை விதித்​துக்​கொண்ட நாடு இந்​தியா. இப்​போ​தும் இதே நிலை​தான். அணு ஆயு​த​மில்லா உலகு அமை​ய​வேண்​டும் என்​பதே இந்​தி​யா​வின் நிலை. இதை ஆத​ரிக்​கும் பிற நாடு​க​ளும் இந்த நோக்​கம் ஈடேற உத​வ​வேண்​டும். அணு சக்தி ஒத்​து​ழைப்பு ஒப்​பந்​தத்தை அம​லுக்கு கொண்​டு​வ​ரும் அடுத்த நிலைக்கு அமெ​ரிக்கா சென்று அணு சக்தி தொழில்​நுட்​பம்,​ சாத​னங்​களை இந்​தி​யா​வுக்கு தடை​யின்றி வழங்​க​வேண்​டும்.

​ அணு ஆயு​தப்​ப​ர​வலை முழு​ம​ன​து​டன் எதிர்க்​கும் நாடு இந்​தியா. இந்த விஷ​யத்​தில் அதன் நேர்​மையை யாரும் எள்​ள​ள​வும் சந்​தே​கிக்​க​மு​டி​யாது. எனவே அணு சக்தி தொழில்​நுட்​பங்​களை வழங்​கு​வ​தற்கு அமெ​ரிக்கா தடை​போ​டக்​கூ​டாது என்​றார் மன்​மோ​கன் சிங்.

பாடல் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு ...

கதாநாயகன் :

post-7175-12589518461782_thumb.jpg

Link to comment
Share on other sites

நன்றி அன்புச்செல்வன். புஷ் நிர்வாகம் (மென்போக்கு வலதுசாரி குடியரசுக் கட்சி) இந்தியாவுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டில் இருந்தது. அதன் விளைவே பழைய அணுசக்தி ஒப்பந்தம். ஆனால் ஒபாமா நிர்வாகம் (மென்போக்கு இடதுசாரி ஜனநாயகக் கட்சி) சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதுபோல் தெரிகிறது. ஆட்சிகள் மாறினாலும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் பெரிதும் மாறாதவை என்கிற வாதம் இங்கே சரியாக வரவில்லை. ஆட்சி மாற்றங்களுடன் நிகழும் அதிகாரிகள் மட்டத்திலான மாற்றங்கள் இங்கே கவனிக்கப்பட வேண்டியவை.

என்ன இருந்தாலும், இந்திய ஆதரவிலிருந்து சீன ஆதரவுக்கு ஒரு அமெரிக்க அரசு செல்கிறது என்றால் பாரிய அளவிலான கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும்..!

Link to comment
Share on other sites

  • 1 month later...

நாடுகயுக்கிடையிலான யுத்தங்கள் அவ்வளவு இலகுவில் நடந்துவிடப் போவதில்லை. அதுவும் மிக அருகில் இருக்கும் நாடுகள் யுத்தத்தில் ஈடுபட்டால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் அறியாதவர்களல்ல. சீனா, இந்தியாவிற்கிடையல் தோற்றுவிக்கப்படும் பகையுணர்வை அவைகள் தத்தமது நலன் கருதித் தவித்துக்கொள்ளும்.

Link to comment
Share on other sites

இந்திய நிலங்களை ஆக்கிரமிக்கும் சீனா!

வீரகேசரி இணையம் 1/11/2010 12:16:57 PM - எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், கணிசமான இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருகிறது.

கடந்த 20 - 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இந்திய நிலத்தை சீனா தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதியில், மாநில உள்துறை அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. இதில் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சீனாவின் இரகசியமான நில ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், லே பகுதி குறித்த முறையான, சரியான வரைபடம் இல்லாதது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

சரியான வரைபடம் இல்லாத காரணத்தால் Line of Actual Control எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் பல நிலங்களை இந்தியா இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

லே பகுதி குறித்து இந்திய அரசுத் துறைகளிடையே வெவ்வேறு விதமான வரைபடங்கள் உள்ளமை பெரும் பின்னடைவாக உள்ளது.

மேலும், லே பகுதியின் சரியான புள்ளி விவரங்களும் இல்லை. இதுகுறித்த ஆவணங்களும் படுமோசமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எந்தெந்த பகுதிகள் நம்முடையது என்ற முக்கியமான தகவல்கள் கூட அரசுத் துறைகளிடம் இல்லை என்றே கூறப்படுகிறது.

முறையான, சரியான வரைபடத்தை தயாரிப்பதில் இந்தியா படு நிதானமாக செயல்பட்டு வருவதன் காரணமாக கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் கணிசமான பகுதிகளை இந்தியா, சீனாவிடம் இழந்து வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு லே பிராந்திய ஆணையர் தலைமை தாங்கினார். இராணுவத் தரப்பில் பிரிகேடியர் சரத் சந்த், கர்ணல் இந்திரஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=19841

http://www.deccanchronicle.com/national/india-has-lost-land-china-025

http://www.defence.pk/forums/india-defence/43925-s-official-india-s-lost-land-china.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் நிதானமாக வாசிக்க முடிந்த தொடர் மொழிபெயர்ப்பு ஆக்கம். இதனை அழகாகத் தொகுத்து வழங்கிய ஆக்கதாரருக்கு நன்றியும் பாராட்டும். தொடரட்டும் விவாதங்கள். எல்லாமே பயனாகவே இருக்கின்றன. தொடர் தேடலில்தான் விடைகள் கிட்டும். என் பங்குக்கு நானும் ஒரு கேள்வியை முன் மொழிகிறேன்.

'ஆசியர்' என்ற கருத்துரு எதிர் காலத்தில் பலமானதொரு சக்தியாக விளங்கும் வாய்ப்புண்டாகுமா?

Link to comment
Share on other sites

யாழில் நிதானமாக வாசிக்க முடிந்த தொடர் மொழிபெயர்ப்பு ஆக்கம். இதனை அழகாகத் தொகுத்து வழங்கிய ஆக்கதாரருக்கு நன்றியும் பாராட்டும். தொடரட்டும் விவாதங்கள். எல்லாமே பயனாகவே இருக்கின்றன. தொடர் தேடலில்தான் விடைகள் கிட்டும். என் பங்குக்கு நானும் ஒரு கேள்வியை முன் மொழிகிறேன்.

'ஆசியர்' என்ற கருத்துரு எதிர் காலத்தில் பலமானதொரு சக்தியாக விளங்கும் வாய்ப்புண்டாகுமா?

சுழியன்.. உங்கள் பதிவுக்கு நன்றிகள்..

ஆசியர் என்கிற கருத்துரு பற்றிக் கேட்டிருந்தீர்கள். இத்தகைய ஒரு கருத்துருவாக்கத்தை ஆசியப் பிராந்தியத்தின் முதன்மை சக்திகளுள் ஒன்றான சீனா மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இந்தியாவின் சில மட்டங்களில் இந்தக் கருத்துரு முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆகையால், சீனாவைத் தவிர்த்த இந்தக் கருத்துருவாக்கம் வலுப்பெறுமா என்பது சந்தேகமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.