Jump to content

தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றிரவு, தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழா ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்ததேயன்றி ஒரு எழுச்சிநிகழ்வாக அமையவில்லை. முதலாவதாக, மகளிர் அமைப்பினரின் உடைகளைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்வது போன்றே உடைகளை (சாறிகளை) அணிந்திருந்தார்கள். அவர்களின் உடைகள், மேக்கப்புகள் வெளிச்சத்தில் கண்கூசுமளவிற்கு இருந்தது. அவர்களின் அந்தத் தோற்றத்தைப் பார்த்தபோது, மே மாதம் நடந்த சோகநிகழ்வை நாம் கஸ்டப்பட்டுத்தான் எம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடுத்ததாக, அவர்களின் நிகழ்ச்சிகளும் போன வருடங்கள் நடத்தப்பட்டவை போலவே தலைவரின் பிறந்ததினத்தை சந்தோஸமாகக் கொண்டாடுவது போலவே இருந்தது. அங்கு நடந்தவற்றைப் பார்த்தபோது, என்னால் அங்கிருக்க முடியாமல் இடையிலேயே எழுந்து வந்துவிட்டேன். அது 9:30 இருக்கும். ஆனால், அதற்குப் பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதானிருந்தது. இவ்வளவு செலவு செய்து எமக்கு இப்படியொரு நிகழ்ச்சி தேவைதானா? இந்தப் பணத்தில் அரைவாசியையேனும், இவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைப்பார்களா? அங்கு மக்கள் பட்டினி கிடக்க இவர்கள் விழா எடுக்கிறார்களாம். தமிழன் என்றுமே திருந்த மாட்டான் என்பதற்கு நேற்று இவர்கள் நடத்திய நிகழ்வே உறுதிப்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரின் பிறந்த நாளை எத்தனை சோகமிருப்பினும் அழுதபடி கொண்டாட முடியாது என்பது உண்மையே! இதில் பிழை பிடிக்கும் நீங்கள் மற்றைய நிகழ்வுகளில் மெளனம் சாதித்தது வியப்பாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

அக்கா, அப்ப நீங்களும் அங்கை போனனீங்களோ? நீங்களும் அப்ப பிறந்தநாள் கொண்டாடி கூத்தடிக்கலாம் எண்டுதானே போய் இருக்கிறீங்கள்? ஏன் எண்டால் நீங்கள் எழுதி இருக்கிறதை பார்த்தால் அப்பிடித்தான் இருக்கிது.

சரி அதைவிடுங்கோ.. மகளிர் அமைப்பினர் எண்டு யாரை சொல்லுறீங்கள்? ஆக்களிண்ட நெத்தியில ஒட்டி இருக்கிதோ? மகளிர் அமைப்பினர் அல்லாத மிச்ச ஆக்கள் என்ன உடையில வந்தவேள்?

பிறந்தநாள் விழா எண்டு யாரோ கூடினதாய் சொல்லுறீங்கள்? பிறந்தநாளுக்கு வரேக்க எப்படியான உடையை அணிஞ்சு வரவேணும் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ. பழங்கால ஆச்சிமார் மாதிரி மார்புக்கு கீழ ஒரு பழைய வெள்ளைச்சீலைய சுத்திக்கொண்டு வந்தால் காணுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, அப்ப நீங்களும் அங்கை போனனீங்களோ? நீங்களும் அப்ப பிறந்தநாள் கொண்டாடி கூத்தடிக்கலாம் எண்டுதானே போய் இருக்கிறீங்கள்? ஏன் எண்டால் நீங்கள் எழுதி இருக்கிறதை பார்த்தால் அப்பிடித்தான் இருக்கிது.

சரி அதைவிடுங்கோ.. மகளிர் அமைப்பினர் எண்டு யாரை சொல்லுறீங்கள்? ஆக்களிண்ட நெத்தியில ஒட்டி இருக்கிதோ? மகளிர் அமைப்பினர் அல்லாத மிச்ச ஆக்கள் என்ன உடையில வந்தவேள்?

பிறந்தநாள் விழா எண்டு யாரோ கூடினதாய் சொல்லுறீங்கள்? பிறந்தநாளுக்கு வரேக்க எப்படியான உடையை அணிஞ்சு வரவேணும் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ. பழங்கால ஆச்சிமார் மாதிரி மார்புக்கு கீழ ஒரு பழைய வெள்ளைச்சீலைய சுத்திக்கொண்டு வந்தால் காணுமோ?

அக்கா என்னவோ ..... சொல்லவந்து அம்பிட்டுப் போனா ....

அவ என்ன சாறி கட்டிக்கொண்டு பிறந்தநாளுக்குப் போனவவாம்.

Link to comment
Share on other sites

அக்கா ஊருக்கு புதுசு போல.இவ்வளவு காலமும் நாங்கள் இதைத்தானே செய்கின்றோம் இவ இப்ப புதுசா ஏதோ சொல்லுகின்றா.புலம் பெயர்ந்தா அப்படி இப்படி தான் அக்கா. இரண்டு மூன்று வருடத்தில் உங்களையும் கூறையுடன் காணலாம்.நாங்களும் வீட்டை போகேக்க குளிரில் வந்த களைப்புக்கு ஒண்டு வாங்கிக்கொண்டுதானே போகப் போறம்.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும்.. இங்கு கருத்தாடலை ஆரம்பித்தவரை தனிப்பட தாக்குவது எனது நோக்கம் அல்ல. தற்போதுள்ள நிலமையில் இப்படி எங்கள் மூஞ்சியிலையே நாங்கள் துப்புவது எங்களையே நாங்கள் நிர்வாணம் ஆக்குவது சரியாக தென்படவில்லை. சனத்துக்கு தாங்கள் விரும்பி வெளிக்கிடுவதற்கு கூட உரிமை இல்லையா? தலைவரில் அன்பு வைத்து இருப்பவர்கள் பிறந்தநாள் செய்து இருக்கலாம், கலந்துகொண்டு இருக்கலாம். எங்களுக்கு அதில் ஈடுபாடு விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கி இருக்கவேண்டியதுதானே. உலகத்தில எத்தனையோ கேலிக்கூத்துகள் எல்லாம் நடக்கிது. நம்மட சனத்துக்கு ஒரு கொஞ்சநேரம் கவலைகளை மறந்து ஒரு இடத்தில கூடி இருக்கக்கூட உரிமை இல்லையோ? எதற்கு எடுத்தாலும் பலர் கனடா தமிழரை குறைகூறுவது... டொரோன்டோ தமிழரை சீண்டிப்பார்ப்பது புரியவில்லை. வேறு ஒரு இடமும் இல்லாத, நடக்காத புதினமான விசயங்களா கனடாவில நடக்கிது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாசினியின் வேதனை எனக்கும் புரிகிறது. தலைவரே ஈழத் தமிழனின் இன்றைய நிலையில் இதுபோன்ற கொண்டாட்டங்களை விரும்பமாட்டார் என்பதுதான் எனது கருத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தாளர்கள் தனிப்பட்ட ரீதியில் எழுதுவதை தவிர்த்து ஆக்க பூர்வமாக கருத்தெழுதுங்கள்.

வியாழக்கிழமை நடைபெற்ற தலைவரின் பிறந்தநாள் நிகழ்வில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மக்கள் அதில் மகிழ்ந்தனர் என்பதை மண்டம் நிறைந்து வெளியே நிரையில் நின்ற மக்கள் தெளிவாக சொன்னார்கள்.ஊடகங்கள் ஊடகா மக்களை வரவேண்டாம் மண்டபம் நிறைந்துவிட்டது என்று அறிவிக்கும் நிலைக்கு மக்கள் தலைவவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு செல்வதை விரும்பினார்கள்.

நாங்கள் சோகத்திலிருந்தும் ஒப்பாரிகளிலிருந்தும் மீள உறுதியெடுத்துக்கெள்வோம். மாறாய் முள்ளிவாய்காலுக்காய் ஒப்பாரி வைப்பதில் பயன் இல்லை. இந்நிலைக்கு நாம் எல்லோருமே காரணம் என்ற அடிப்படையில் நாம் அடுத்து செய்யபோகின்ற விடயங்களை உறுதியாகவும் பிரயோசனமாகவும் செய்வோம். மற்றவர்களை பிழை பிடிப்பதை விடுவோம்,!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியும் , பதிலும்.

தலைவரின் பிறந்த நாளை எத்தனை சோகமிருப்பினும் அழுதபடி கொண்டாட முடியாது என்பது உண்மையே! இதில் பிழை பிடிக்கும் நீங்கள் மற்றைய நிகழ்வுகளில் மெளனம் சாதித்தது வியப்பாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

இங்கே கருத்தைப் பதிந்தவரின் கருத்திற்கு பதிலளிப்பதை விட, தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்கிக் கருத்தெழுவதில்த் தான் பலர் குறியாகவுள்ளனர். ஒரு பிறந்த நாள் விழாவென்றால் அது டாம்பீகமாகத் தான் நடக்க வேண்டுமென நினைப்பவர்கள், புலத்தில் சிலர் தமது பிள்ளைகளின் பிறந்த நாளைக் கொண்டாடியதற்கே போட்டு வாங்கு வாங்கென முன்பு வாங்கினார்களே?? அது எதற்காக??

சரி முதல் நாள் தலைவரின் பிறந்த நாளுக்காக ஆட்டம், பாட்டம் போட்டுவிட்டு, அடுத்தநாள் மாவீரர்களுக்காக அழுது வடிகின்றோமே யாரை ஏமாற்ற??

தலைவர் இருக்கின்றாரா?? இல்லையா?? என்ற சந்தேகத்தில் பலரிருக்கும் போது, தலைவரின் பிறந்தநாள் ஆட்டம் பாட்டததுடன் நடக்கின்றதென்றால் அவர் இருக்கின்றாரென்றா அல்லது இல்லையென்றா??

இதற்கு விடை தெரிந்தவர்கள் முடிந்தால் விடையெழுதுங்கள், முடியாதவர்கள் வழமைபோல் தூற்றிவிட்டுச் செல்லுங்கள்.......... :(:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாசினி இவ்வளவு ஆதங்கப்பட்டு மனம் வருந்தி புலமபும் நீங்கள் சுற்றிவளைத்து மூக்கை தொடுவதற்கு

நேரடிhயாக அவர்களின் முகத்திற்கெதிரே சொல்லியிருக்கலாமே..?

அங்கேயே உங்களுக்கு பதிலும் கிடைத்திருக்கும்.

அதை விடுத்து இதை இங்கே வந்து புலம்ப வேண்டிய அவசியம் என்ன?!

இதில் வேறு நோக்கம்தான் தெளிவாக புலப்படுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்தைப் பதிந்தவரின் கருத்திற்கு பதிலளிப்பதை விட, தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்கிக் கருத்தெழுவதில்த் தான் பலர் குறியாகவுள்ளனர். ஒரு பிறந்த நாள் விழாவென்றால் அது டாம்பீகமாகத் தான் நடக்க வேண்டுமென நினைப்பவர்கள், புலத்தில் சிலர் தமது பிள்ளைகளின் பிறந்த நாளைக் கொண்டாடியதற்கே போட்டு வாங்கு வாங்கென முன்பு வாங்கினார்களே?? அது எதற்காக??

சரி முதல் நாள் தலைவரின் பிறந்த நாளுக்காக ஆட்டம், பாட்டம் போட்டுவிட்டு, அடுத்தநாள் மாவீரர்களுக்காக அழுது வடிகின்றோமே யாரை ஏமாற்ற??

தலைவர் இருக்கின்றாரா?? இல்லையா?? என்ற சந்தேகத்தில் பலரிருக்கும் போது, தலைவரின் பிறந்தநாள் ஆட்டம் பாட்டததுடன் நடக்கின்றதென்றால் அவர் இருக்கின்றாரென்றா அல்லது இல்லையென்றா??

இதற்கு விடை தெரிந்தவர்கள் முடிந்தால் விடையெழுதுங்கள், முடியாதவர்கள் வழமைபோல் தூற்றிவிட்டுச் செல்லுங்கள்.......... :(:unsure:

அது எங்களுடைய பிரச்சனை வசம்பு... உண்மையில் தூற்றத் தான் போகின்றேன். ஏனென்றால் உங்களுடைய கருத்தில் நாகரீகமோ, பண்போ இருந்தால் தானே பாராட்டலாம்...

நீங்கள் இந்த அமைப்பு சாராதவரோ, ஆதவராளரோ இல்லைத் தானே, எதுக்கு எங்களின் சிந்தனைக்குள் மூக்கை நுழைக்கின்றீர்கள். இது கூட எங்களின் விருப்பத்தில் உங்களின் கருத்தைப் புகுத்தும் கேவலமான சிந்தனை தானே..

தலைவருடைய பிறந்தநாளை எமது விருப்பத்தின் பெயரில் தான் கொண்டாடுகின்றோம். அவர் எமக்குக் கொண்டாடச் சொல்லிக் கட்டளை இட்டதுமில்லை. அது அவர் மீது கொண்டுள்ள பாசம். வெளிப்படுத்துகின்றோம். முதல் நாள் பிறந்தநாளுக்கு உங்களின் பாசையில் ஆட்டம் போட்டு அடுத்த நாள் மாவீர்ரகளுக்கு அழுது வடிக்கின்றது தப்பு என்றால், 4,5 நாள் தள்ளிப் போட்டு அழுது வடிக்கலாமா?? என்ன விதண்டாவாதம்..

தலைவர் இருக்கின்றாரோ இல்லையோ? என்பது எல்லாம் உங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று தெரியும். ஈழப் போராட்டத்தின் சார்பாக நடக்கின்ற எந்த ஒரு ஆதரவான சிந்தனைக்கும் மக்களின் இணைப்பைத் தடுக்க வேண்டும் என்ற குள்ளநரித்தனத்தின் வெளிப்பாடுகளினை அறிவோம். அதனால் தான் கனடாவிலும் சிங்களக் கைக்கூலியாகத் திரியும் புளோட் நாய்கள் சிலர் மாவீரர் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று, ஏதோ தாங்கள் மாவீரர் மீது பற்றுக்கு கொண்டு நடிக்கின்து போலத் துண்டுப் பிரசுரம் கொடுத்தார்களாம்... யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது 2வது பிரச்சனை.

இந்த சூழ்நிலையில் இப்படித் தொடர்ச்சியாக மக்கள் என்னமும் தலைவர் மீதோ, மறைந்த மாவீரர் மீதோ கொண்டுள்ள பாசத்தை காட்டி விடக் கூடாது என்பதிலும், அவ்வாறு காட்டாவிடத்து, மக்களுக்குப் புலிகள் மீதான பற்றுப் போய் விட்டது என்று நரித்தனமான பிரச்சாரங்களைச் செய்யவே, சிங்கள அரசும், அதன் கைக்கூலிகளும் முயல்கின்றார்கள் என்பது அறியக் கூடியதே...

ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்கின்றேன். எல்லோருக்கும் வாழ்வில் வயதெல்லை இருக்கின்றது. அந்த வயதெல்லையைத் தலைவர் கடந்தாலும், கடக்காவிட்டாலும் தலைமுறை தலைமுறையாகத் தலைவரின் பிறந்தநாளையும், மாவீரர்களையும் நினைவுகூரத் தான் போகின்றோம். வரலாற்றில் பின்னடைவுகளை நாங்கள் சந்தித்திருக்கலாம். ஆனால் அந்தப் பின்னடைவுகள் என்பது நக்கிப் பிழைப்பதற்கான வழியைத் தேர்வு செய்வதற்கானது அல்ல...

Link to comment
Share on other sites

கனடாவில நம்மவர்கள் சுதந்திரமாக ஒன்றுகூடுவதே எவ்வளவுபாடு எண்டு இதில இருக்கிது. உதிலை பரதேசியாய் லூசு மாதிரி வெளிக்கிட்டு போக இல்லை எண்டு நாங்கள் வேற கவலைப்படுறம்.

This year, he said, organizers met with officials from CSIS, the RCMP, Toronto and Peel police officials a month in advance and secured a non-harassment pledge in exchange for assurances that Tamils would not use the event to raise money for the Tigers, which is illegal given their terrorist designation. A Peel police spokesman said officers were aware of the event and would be "monitoring" it for criminal activity, but planned no disruptive action: http://www.theglobeandmail.com/news/national/toronto-area-tamils-observe-martyrs-day/article1381345/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைமுறை தலைமுறையாகத் தலைவரின் பிறந்தநாளையும், மாவீரர்களையும் நினைவுகூரத் தான் போகின்றோம்

இனி இவை மட்டும்தான்.

Link to comment
Share on other sites

அது எங்களுடைய பிரச்சனை வசம்பு... உண்மையில் தூற்றத் தான் போகின்றேன். ஏனென்றால் உங்களுடைய கருத்தில் நாகரீகமோ, பண்போ இருந்தால் தானே பாராட்டலாம்...

நீங்கள் இந்த அமைப்பு சாராதவரோ, ஆதவராளரோ இல்லைத் தானே, எதுக்கு எங்களின் சிந்தனைக்குள் மூக்கை நுழைக்கின்றீர்கள். இது கூட எங்களின் விருப்பத்தில் உங்களின் கருத்தைப் புகுத்தும் கேவலமான சிந்தனை தானே..

அட நம்ம குத்தகைத்தாரத் தம்பியோ?? உங்களிடமிருந்து தூற்றலைத் தவிர வேறு எதை எதிர் பார்க்க முடியும். சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். உங்களைப் போல பலர் கன நாளாய், நாங்கள் தான் தமிழீழத்தை குத்தகைக்கு எடுத்தனாங்கள் என்ற நினைப்பிலை இருந்தது தானே, பல பிரைச்சினைகளுக்கே காரணம். ஆனால் அந்தத் தவறை இன்னும் உணர்ந்ததாகவே தெரியவில்லை..

தலைவருடைய பிறந்தநாளை எமது விருப்பத்தின் பெயரில் தான் கொண்டாடுகின்றோம். அவர் எமக்குக் கொண்டாடச் சொல்லிக் கட்டளை இட்டதுமில்லை. அது அவர் மீது கொண்டுள்ள பாசம். வெளிப்படுத்துகின்றோம். முதல் நாள் பிறந்தநாளுக்கு உங்களின் பாசையில் ஆட்டம் போட்டு அடுத்த நாள் மாவீர்ரகளுக்கு அழுது வடிக்கின்றது தப்பு என்றால், 4,5 நாள் தள்ளிப் போட்டு அழுது வடிக்கலாமா?? என்ன விதண்டாவாதம்..

பிறந்தநாள் ஆட்டம் பாட்டங்களோ அல்லது மாவீரர் அழுது புலம்பல்களோ இப்ப மானசீகமாகச் செய்யாமல் வருமானத்தை அடிப்பபடையாகக் கொண்டு தானே உங்களைப் போன்ற ஆதரவாளர்களால் நடாத்தப்படுகின்றது. மாவீரர் தினத்தில் வெள்ளிக்கிழமையானாலும் கொத்துரொட்டிக் கடை களை கட்டுது. துயரம் தாங்காமல் கொத்துரொடடியை சாப்பிட்டும், வீட்டுக்கு பாசலில் எடுத்துச் சென்றும் துயரத்தை நீங்கள் தீரத்துக்கொள்வதே வியப்பபானது தானே. :(

தலைவர் இருக்கின்றாரோ இல்லையோ? என்பது எல்லாம் உங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று தெரியும். ஈழப் போராட்டத்தின் சார்பாக நடக்கின்ற எந்த ஒரு ஆதரவான சிந்தனைக்கும் மக்களின் இணைப்பைத் தடுக்க வேண்டும் என்ற குள்ளநரித்தனத்தின் வெளிப்பாடுகளினை அறிவோம். அதனால் தான் கனடாவிலும் சிங்களக் கைக்கூலியாகத் திரியும் புளோட் நாய்கள் சிலர் மாவீரர் தினத்தைக் கொண்டாட வேண்டாம் என்று, ஏதோ தாங்கள் மாவீரர் மீது பற்றுக்கு கொண்டு நடிக்கின்து போலத் துண்டுப் பிரசுரம் கொடுத்தார்களாம்... யாரும் கண்டு கொள்ளவில்லை என்பது 2வது பிரச்சனை.

உண்மைகள் தெரிந்தாலும் இன்னும் மக்களை ஏமாற்றி, பணம் சுருட்டலாம் என்ற உங்கள் சிந்தனைகளுக்கு எமது கருத்துகள் குள்ள நரித்தனமாகத் தான் தெரியும். :unsure:

இந்த சூழ்நிலையில் இப்படித் தொடர்ச்சியாக மக்கள் என்னமும் தலைவர் மீதோ, மறைந்த மாவீரர் மீதோ கொண்டுள்ள பாசத்தை காட்டி விடக் கூடாது என்பதிலும், அவ்வாறு காட்டாவிடத்து, மக்களுக்குப் புலிகள் மீதான பற்றுப் போய் விட்டது என்று நரித்தனமான பிரச்சாரங்களைச் செய்யவே, சிங்கள அரசும், அதன் கைக்கூலிகளும் முயல்கின்றார்கள் என்பது அறியக் கூடியதே...

இதையே எவ்வளவு காலத்திற்கு மக்களை ஏமாற்ற கூறிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்?? உங்கள் தவறுகளை மறைக்க அடுத்தவர்களில் பழி போட்டு, எனியும் மக்களை ஏமாற்றலாமென்று கனவுலகில் வாழாதீர்கள். மக்கள் உண்மைகளை உணரத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு விடயத்தைச் சொல்லிக் கொள்கின்றேன். எல்லோருக்கும் வாழ்வில் வயதெல்லை இருக்கின்றது. அந்த வயதெல்லையைத் தலைவர் கடந்தாலும், கடக்காவிட்டாலும் தலைமுறை தலைமுறையாகத் தலைவரின் பிறந்தநாளையும், மாவீரர்களையும் நினைவுகூரத் தான் போகின்றோம். வரலாற்றில் பின்னடைவுகளை நாங்கள் சந்தித்திருக்கலாம். ஆனால் அந்தப் பின்னடைவுகள் என்பது நக்கிப் பிழைப்பதற்கான வழியைத் தேர்வு செய்வதற்கானது அல்ல..

பிறந்தவர்கள் யாவரும் என்றோ ஒருநாள் இறந்து தான் ஆக வேண்டும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாம் வாழும் காலத்தில் அடுத்தவனுக்கு நன்மை செய்யாவிட்டாலும், தீமையாவது செய்யாது வாழ நினைக்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் புலத்தில் தங்களை போல் வீராப்பு பேசிய 500 க்கு அதிகமானவர்கள் சில வாரங்கள் முன்பு கொழும்பு சென்று மகிந்தவிடம் பாவமன்னிப்புக் கேட்டு திரும்பியிருக்கினம், தாங்கள் அறியவில்லையோ?? முன்னாள் போராளிகள் பலர் தான் இன்று கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் வேறு இடங்களிலும் முன்னாள் புலிகளைக் காட்டிக் கொடுக்கும் சேவகம் அரசிற்குச் செய்கின்றார்கள். நீங்கள் கூறும் பின்னடைவுகளுக்குக் காரணமே உங்களைப் போன்றவர்கள் தான். அடுத்தவர்களை முன்பு நக்கிப் பிழைப்பதாக கதையளந்தவர்கள்தான் இன்று அரசிடம் நக்கிப் பிழைக்க முண்டியடித்துக் கொண்டுள்ளார்கள். ஒரு பக்கம் அரசை எதிர்பதாக வசனம் பேசுவோர், புலிகளைச் சாட்டியும் மக்களைச் சாட்டியும் சுருட்டிய பணத்தை அமுக்குவதில் குறியாகவிருக்க, மறுபுறம் எதையும் சுருட்ட வாய்ப்பபில்லாது போனவர்கள் அரசிடம் காலில் விழுந்துள்ளனர். இவ்வளவும் நடந்த பின்னும், என்னுமா கதையளக்கின்றீர்கள்??

Link to comment
Share on other sites

மறுபுறம் எதையும் சுருட்ட வாய்ப்பபில்லாது போனவர்கள் அரசிடம் காலில் விழுந்துள்ளனர். இவ்வளவும் நடந்த பின்னும், என்னுமா கதையளக்கின்றீர்கள்??

யார் அண்னை அந்த முன்னாள் போராளிகள்....??? நிர்மலாவும், ராஜேஸ் குமார் எண்ட ராகவனுமே...?? :lol:

Link to comment
Share on other sites

யார் அண்னை அந்த முன்னாள் போராளிகள்....??? நிர்மலாவும், ராஜேஸ் குமார் எண்ட ராகவனுமே...?? :D

:lol:அட போனவை உங்களுக்குச் சொல்லிப் போட்டு போகவில்லைப் போல. அதாலை உங்களுக்கும் போயிட்டு வந்தவை யாரெண்டு தெரியலை. :lol: புலத்தில் புலிகளையும் மக்களையும் சாட்டி தங்கடை வயிறு வளர்த்தவையை நான் குறிப்பிட, நீங்கள் அவையை முன்னாள் போராளிகளாக்கி, உண்மையான போராளிகளையும் கேவலப் படுத்துகின்றீர்கள். :)

Link to comment
Share on other sites

உண்மையான போராளி உமாமகேஸ்வரன் லொஸ் ஏஞெயல்ஸ்(Los angels) வைத்தியர் காருண்யம் அவர்கள் கொடுத்த 2 மில்லியன் டாலர்களையும் சுவிஸ் பாங்கிலையெல்லோ போட்டவர். அக்காசு "உண்ணா சொத்து மண்ணாகி உடாப் புடைவை வண்டூதிய" கதையாகிவிட்டது. :lol:

Link to comment
Share on other sites

உண்மையான போராளி உமாமகேஸ்வரன் லொஸ் ஏஞெயல்ஸ்(Los angels) வைத்தியர் காருண்யம் அவர்கள் கொடுத்த 2 மில்லியன் டாலர்களையும் சுவிஸ் பாங்கிலையெல்லோ போட்டவர். அக்காசு "உண்ணா சொத்து மண்ணாகி உடாப் புடைவை வண்டூதிய" கதையாகிவிட்டது. :wub:

உதைவிட பல மில்லியன் இப்ப சுவிஸ் பாங்கிலை மாட்டிக்கிட்டு முழிக்குது. அதாலை பல புடைவை கிழியிற அளவிற்கு புடுங்குப்பாடுகள் நடந்தன :( , நடக்கினறன :lol: , நடக்கும் :) . இதை என்ன செய்ய?? :lol::D

Link to comment
Share on other sites

உதைவிட பல மில்லியன் இப்ப சுவிஸ் பாங்கிலை மாட்டிக்கிட்டு முழிக்குது. அதாலை பல புடைவை கிழியிற அளவிற்கு புடுங்குப்பாடுகள் நடந்தன :wub: , நடக்கினறன :lol: , நடக்கும் :) . இதை என்ன செய்ய?? :lol::D

ஏன் வசம்பு நீங்கள் நடுநிலையாக எழுதுகிறீர்கள் என்றால் ஏனைய விடுதலை இயக்கங்கள் விட்ட பிழைகளையும் எழுத வேண்டுமல்லவோ? உண்மையான கருத்தாளனுக்கு அது தான் அழகு.அதை விட்டு புலிகளின் பிழைகளை மட்டும் விமர்சிப்பதால் மீண்டும் எம்மை மேலும் மேலும் சிறு கூறுகளாக முயல்கிறோம் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

ஏன் வசம்பு நீங்கள் நடுநிலையாக எழுதுகிறீர்கள் என்றால் ஏனைய விடுதலை இயக்கங்கள் விட்ட பிழைகளையும் எழுத வேண்டுமல்லவோ? உண்மையான கருத்தாளனுக்கு அது தான் அழகு.அதை விட்டு புலிகளின் பிழைகளை மட்டும் விமர்சிப்பதால் மீண்டும் எம்மை மேலும் மேலும் சிறு கூறுகளாக முயல்கிறோம் என்பது எனது கருத்து.

நன்றி நுணாவிலான் தங்கள் கருத்திற்கு.

நீங்கள் என்னில் சொல்லும் அதே தவறைத் தானே தாங்களும் செய்கின்றீர்கள். நான் பொதுவாகவே புலிகளையும் மக்களையும் சாட்டி பிழைப்பு நடத்துபவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டினால், நீங்கள் உட்பட பலர் நான் புலிகளை எதிர்ப்பதாகவே எடுக்கின்றீர்கள். பல வேளைகளில் நீங்கள் கூட தவறுகளை நியாயப்படுத்தவே முயன்றீர்கள். அது தவறாகத் தங்களுக்குத் தெரியவில்லையா??

அத்துடன் தற்போது நடைமுறையில் யாரின் தவறுகள் அதிகம் நடைபெறுகின்றனவோ, அதையே நாம் சுட்டிக் காட்ட முடியும். அதைவிடுத்து முன்பு ஏனையவர்கள் செய்த தவறுகளைக் கூறி, தற்போதைய தவறுகளை நியாயப்படுத்துவது எந்த வகையில் சரியான அணுகுமுறை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்??

கடந்த காலங்களில் எல்லோரும் விட்ட தவறுகளை உணர்ந்து, அவற்றைத் திருத்திக் கொண்டு அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்பதே எனது ஆசையும். ஆனால் இன்றும் சிலர் அதே தவறுகளை மீண்டும் செய்து, மக்களையும் ஏமாளிகளாக்கி தம்மை வளப்படுத்தவே முயல்கின்றனர். இப்படியானவர்களை இன்னும் வளர்த்து விடச் சொல்கின்றீர்களா??

உங்களை எதிர்த்துக் கருத்து எழுத வேண்டுமென்ற எண்ணம் எனக்கொரு போதும் வந்ததில்லை. காரணம் களத்தில் நான் மதிக்கும் கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் கருத்திற்கு என் கருத்தையும் நான் முன் வைத்துள்ளேன். புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான் தங்கள் கருத்திற்கு.

நீங்கள் என்னில் சொல்லும் அதே தவறைத் தானே தாங்களும் செய்கின்றீர்கள். நான் பொதுவாகவே புலிகளையும் மக்களையும் சாட்டி பிழைப்பு நடத்துபவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டினால், நீங்கள் உட்பட பலர் நான் புலிகளை எதிர்ப்பதாகவே எடுக்கின்றீர்கள். பல வேளைகளில் நீங்கள் கூட தவறுகளை நியாயப்படுத்தவே முயன்றீர்கள். அது தவறாகத் தங்களுக்குத் தெரியவில்லையா??

அத்துடன் தற்போது நடைமுறையில் யாரின் தவறுகள் அதிகம் நடைபெறுகின்றனவோ, அதையே நாம் சுட்டிக் காட்ட முடியும். அதைவிடுத்து முன்பு ஏனையவர்கள் செய்த தவறுகளைக் கூறி, தற்போதைய தவறுகளை நியாயப்படுத்துவது எந்த வகையில் சரியான அணுகுமுறை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்??

கடந்த காலங்களில் எல்லோரும் விட்ட தவறுகளை உணர்ந்து, அவற்றைத் திருத்திக் கொண்டு அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்பதே எனது ஆசையும். ஆனால் இன்றும் சிலர் அதே தவறுகளை மீண்டும் செய்து, மக்களையும் ஏமாளிகளாக்கி தம்மை வளப்படுத்தவே முயல்கின்றனர். இப்படியானவர்களை இன்னும் வளர்த்து விடச் சொல்கின்றீர்களா??

உங்களை எதிர்த்துக் கருத்து எழுத வேண்டுமென்ற எண்ணம் எனக்கொரு போதும் வந்ததில்லை. காரணம் களத்தில் நான் மதிக்கும் கருத்தாளர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் கருத்திற்கு என் கருத்தையும் நான் முன் வைத்துள்ளேன். புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன்.

சில கருத்துக்களோடு நான் உங்களுடன் நான் உடன் பட வேண்டியுள்ளது. அதாவது புலிகள் மக்களுக்காக தம் இனிய உயிர்களை கொடுத்து போராடினார்கள். மக்கள் தம் விமர்சனங்களை அவர்கள் முன் வைக்காதது மக்களின் குற்றம் தான். ஏனெனில் மக்கள் குற்றங்களை வைக்காத போது வி.புலிகளல்ல யாரும் அனுமானிக்க கூடியது தாங்கள் செய்வது சரியென்று தான்.

30000 சகோதரர்கள் நாட்டுக்காக உயிரை கொடுத்த போது நான் வெளிநாடு ஒன்றில் சுகவாழ்வு வந்திருக்கிறேன். இருந்த போதும் பல தடவைகள் முஸ்லிம் மக்கள் யாழில் இருந்து விரட்டப்பட்டது போன்றவற்றை எதிர்த்து பேசாபொருள் பகுதியில் விவாதத்துக்கு விட்டிருந்தேன்.அத்தோடு பல இணைய தளங்களின் புலிகளின் இராணுவதாக்குதல்களை மையமாக கொண்டு செயற்படுபவர்களை கண்டித்துள்ளேன்.

பிழைப்பு நடாத்தும் ஒரு கூட்டத்தை கருத்தில் கொள்ளாமல் பெரிய தொகையில் எம்மக்களின் விடிவு எப்படி நடைபெறும் என்று அங்கலாய்ப்பவர்கள் பக்கம் தான் எனது நேரத்தையும், சக்தியையும் செலவளிக்க விரும்புகிறேன்.

2006ம் ஆண்டு தொடக்கம் உங்கள் கருத்துக்களை வாசித்து வருபவன் என்ற ரீதியில் தான் ஏன் மறு பக்கத்தையும் அதாவது ஏனைய விடுதலை இயக்க தவறுகளையும் சுட்டி காட்ட தவறிவிட்டீர்கள் என்று சொன்னேன். சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமோ அவசரமோ தேவையில்லை. ஒரு ஆதங்கம் தான். ஒவ்வொருவரும் தனது வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை வைத்தே கருத்துக்களை எழுதுகிறார்கள்.ஒரு சிலர் புலிகளிடம் இருந்து சில வேண்டதகாத அனுபவங்களை பெற்றிருக்கலாம். அதே போல இன்னும் சிலர் ஏனைய இயக்களிடம் இருந்து சில விரும்பாத வேண்டதாகாத அனுபவங்களை பெற்றிருக்கலாம்.யாரின் கருத்து சரியானது என்பது மில்லியன் டொலருக்கான கேள்வி? நன்றி வசம்பு. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாய்க்கு எங்கு அடித்தாலும் அத காலைத்தானாம் தூக்கும் அந்த வகையில் யார் என்ன செய்தர்லம் புலிகள் தான் காரணமாக வருவார்கள்... அல்லது அவர்கள் பெயர் தான் முன்னுக்க வரும். இவர்களோடு போட்டியிட்டு சிறிலங்கா அரசே தேற்றிருக்கும். மாற்றங்கள் எங்கள் மத்தியில் அல்ல சகலரிலும் வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளை இறந்த நாளாக கொண்டாட முடியாது அதே போல் இறந்த நாளை பிறந்த நாள் போல் கொண்டாட முடியாது இரண்டுக்கும் வேறுபாடு உண்டு பிறந்த நாளை சந்தோசமாக கொண்டாடுவதில் எந்த பிழையும் கிடையாது அது உங்களுக்கு பிடிக்க வில்லையாயின் விலகினீர்கள் பாருங்கள் kasini பாராட்டதக்கது மற்றும் படி சாதாரண ஊர் நிகழ்வுகளே எப்படி களை கட்டுகின்றது என்று பார்க்க வில்லை போல் புலத்தில் அப்படியிருக்க உலகம் போற்றும் எம் தலைவன் நிகழ்வு கோலகலமாய் நடந்ததை இட்டு சந்தோசப்படுங்கள் காரணம் இன்னும் அந்த மனிசனை மறக்கவில்லையே அது போதும் :lol: kasini

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எமது தலைவர் அவரது வழிநின்று போராடி மாவீரர்களானோர் எமது உடன்பிறப்புக்கள், இதனை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டோரே தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடுபவர்கள். அதினால் அவர்கள் மகிழ்சியடைகின்றனர். அவரது வழிநின்று போராடி மண்ணில் விதையாணோரை மறுநாள் நினைவுகூர்வதால் அவர்கள் எழுர்ச்சி கொள்கிறார்கள். இதைத் தாங்காத எதிரிகள் ஏகடியம் பேசுகிறார்கள். தமிழினம் தமிழீழத்திற்கான தனது போராட்டப்பாதையிலிருந்து விலகிவிடவில்லையென்பதால் பதறுகிறார்கள். ஓய் உண்மையான உணர்வுடன் எவனெருவன் தங்கச்சரிகையிட்ட உடையணிந்தோ அன்றேல் கோமணத்தடனேயோ பங்கு கொள்வார்களாகவிருந்தால் அவைகளை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் எமது பிரச்சனை நீங்களும் விருப்பமெனில் இதில் கலந்துகொள்ளவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.