Jump to content

தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான், பிறந்தநாளை கொண்டாடுவது அவரவர் விருப்பம், எப்படி அதை கொண்டாடுவது என்பதும் அவரவர் விருப்பம். இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்று நீங்கள் திணிக்கமுடியாது, விருப்பமானால் நீங்கள் மரம்நடுகை செய்யலாம், இரத்ததானம் கொடுக்கலாம்.. ஆனால்.. உங்களைப்போல் எல்லாரும் இருப்பார்கள், இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆடம்பரமாக தலைவர் பிறந்தநாளை கொண்டாடிய மக்களில் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம், just funக்கு கொண்டாடுபவர்களும் இருக்கலாம். ஆனால்.. அடிப்படை விசயத்தை பார்த்தால் தலைவரின் பிறந்தநாள் என்பது விடுதலைப்புலிகள் தலைமையினாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் விடயம் என்று தெரிகின்றது. இல்லையென்றால்.. தளபதிகள் எல்லோரும் ஏன் தலைவரின் பிறந்த்நாள் அன்று வாழ்த்து அறிக்கை விடவேண்டும்? அப்படியானால் இந்த செய்தி எதை குறிக்கின்றது? தலைவரின் பிறந்ததினம் கொண்டாடுவதற்கு விடுதலைப்புலிகள் தலைமைகூட மறுப்பு தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்த மக்கள் எல்லாரும் பொருளாதார அகதிகளே, உண்மையான அகதிகள் இல்லையென்று அடித்துச் சொல்லுறீங்களோ? நல்லது.. வெளிநாட்டு அரசாங்கங்கள் இவர்களை பயங்கரவாதிகள் எனும் கோணத்தில் பார்க்கின்றது, நீங்கள் தாயகத்தில் பயங்கரவாதம் செய்வதாக சொல்கின்றது. இந்த மக்கள் பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்வதாக கூறப்படுகின்றது. அப்படிப்பார்த்தால்.. இந்த பொருளாதார அகதிகள் ஏன் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார்கள்? தாயகத்தில் பயங்கவாதிகள் இந்த பொருளாதார அகதிகளின் ஆதரவு கிடைத்து இருக்காவிட்டால் நிச்சயம் வளர்ச்சி அடைந்து இருக்கமுடியாது. உங்கள் பார்வையில் இந்த பொருளாதார அகதிகளின் ஆதரவு தாயகத்தில் உள்ள பயங்கரவாதிகளிற்கு கிடைத்து இருக்காவிட்டால் பத்து வருடங்களுக்கு முன்னரே ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து இருக்கும்.

தலைவர் தான் பிறந்த நாளைக் கொண்டாடுவது இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். அதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

தலைவர் போராளிகளின் மக்களின் உணர்வுகளுக்கு இடமளிக்கும் ஒரு நல்ல மனிதர். அந்த வகையில் மக்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதை அவர் தடுக்கவில்லை. ஆனால் தான் கொண்டாடவில்லை.

தலைவரின் பிறந்த நாள் ஆடம்பரமாக களியாட்ட நிகழ்வாக கொண்டாடப்படுவதில்லை. அதுவும் சமாதான காலத்தில் கூட ஒரு அடையாள நிகழ்வாக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

இங்கு ஆரம்பத்தில் கருத்துப் பதிந்த ஹாசினியில் இருந்து பலரும் சொல்வது இன்றைய சூழலில் தலைவரின் இருப்புப் பற்றிய போராட்டம் பற்றிய நிச்சயமற்ற தன்மைகள் நிழவும் சூழலில் தலைவரை மண்ணைக் காத்து நின்ற மக்களும் போராளிகளும் எதிரியிடம் சிக்கி கடும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தேசிய தலைவரின் பிறந்த தினம் என்பதன் பெயரால் இந்த ஆடம்பரக் கூத்தாட்டம் தேவை தானா..???!

மாவீரர் நாளை ஆடம்பர நிகழ்வு போன்று உடை அலங்காரம் செய்து கொண்டாடுவது சரிதானா.. அதுவா மாவீரர் நாளில் கொள்ளப்படும் தேசிய நினைவெழுச்சி என்பதே கேள்வி..???!

தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது ஒரு தேசிய நிகழ்வாகவே அதை நோக்க வேண்டும். சுப்பனின் குப்பனின் மகனின் மகளின் பிறந்த நிகழ்வு போன்றதல்ல அது. சுப்பனின் குப்பனின் பிள்ளையின் பிறந்த நாளை எவர் வேண்டும் என்றாலும் எப்படியும் கொண்டாடலாம். அதையிட்டு எவரும் விமர்சனம் வைக்கப் போவதில்லை.

ஆனால் இன்றைய சூழலில்.. தேசிய தலைவரின் பிறந்த நாள் என்பதன் பெயரால் இந்தக் களியாட்டம் போன்ற ஒரு நிகழ்வு அவசியமா..??!

தேசிய தலைவர் ஒரு தேசிய இனத்தின் சொத்து. அவரின் குடும்பத்தினர் கூட அவர் மீது கொள்ளாத உரிமையை தமிழினம் கொண்டிருக்கிறது. அந்தக் கடப்பாட்டை மீறி தமிழர்கள் செயற்படுவது எந்த வகையில் நியாயம்..???! என்பதே இங்கு வினவல்.

அதைவிடுத்து எவரும் சுப்பனின் குப்பனின் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அது அந்தச் சுப்பனின் குப்பனின் விருப்பம்..! தேசிய தலைவரும் சுப்பனும் குப்பனும் ஒன்றல்ல..!

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

இண்டைக்கு சுடச்சுட இன்னொரு செய்தி. வெளிநாட்டிலை இருக்கிற புலம்பெயர் அகதிகளிண்ட கதையை வாசியுங்கோ, நிலமையைப் பாருங்கோ. பயங்கரவாதிகளை பற்றி இதிலை சொல்லப்பட்டு இருக்கிது. :wub:

Convicted Tamil says LTTE murderedfather

Arrested In 2006; Toronto man procured weapons for Tigers: U. S.

A Toronto man who will be sentenced in the United States next month for procuring weapons for the Tamil Tigers rebels described in court documents how those same rebels murdered his father.

Thiruthanikan Thanigasalam, 43, said in a sentencing memorandum in U.S. District Court that he fled to Canada after the Tamil Tigers took away his father and shot him eight times for refusing to give them money.

Mr. Thanigasalam did not explain why, while living in Canada years later, he would take part in an illicit conspiracy to buy black market weapons for the very rebel group that had killed his father.

But the memorandum portrays Mr. Thanigasalam as a man traumatized by Sri Lanka's brutal civil war, who spent his youth in temporary camps and was detained, beaten and tortured by both sides in the conflict.

The married father of two is asking the court for no more than the 25-year minimum sentence, as is Sahilal Sabaratnam, another Canadian convicted on the same charges. Prosecutors are seeking sentences of up to life in prison.

The men are among six Canadians arrested by the FBI and RCMP in 2006 after they allegedly tried to buy 500 AK-47 assault rifles and ten SA-18 heat-seeking surface-to-air missiles for the Tamil Tigers, separatist guerrillas who were then fighting for independence from Sri Lanka.

The rebels, also known as the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, were wiped out by government forces in May. Last week, a Tamil nationalist was arrested in Toronto after giving a fiery speech in which he called for the resumption of the war. A Toronto Buddhist temple used by Sri Lankans was torched the next night.

U.S. officials have depicted Mr. Thanigasalam as the technical expert of the group, and allege he had sought missiles that could shoot down the Kfir fighter jets used by the Sri Lankan military.

Mr. Sabaratnam, 30, immigrated to Canada at age nine, studied commerce at Carleton University and later worked at TD Waterhouse in Toronto. He was allegedly in charge of paying for the weapons.

But his lawyer argued that Mr. Sabaratnam was a "last minute participant" in the conspiracy, and had only become involved at the request of his brother-in-law.

"Without a doubt, Sahil made the worst decision of his life and, in turn, has forfeited his liberty, future, hopes and dreams and extinguished hopes and dreams of his parents, family members and fiancee," Bobbi Sternheim wrote.

The pair is to be sentenced on Jan. 12. Another Canadian, Sathajhan Sarachandran, the former president of the Canadian Tamil Students Association, is to be sentenced Jan. 11. All three pleaded guilty. Three more Canadians are awaiting extradition to the U.S.

Asked why Mr. Thanigasalam would support the rebels after they killed his father, his lawyer Lee Ginsberg said, "I can't explain it. I'm not sure my client can explain it.

"If you want my view for what it's worth, it wouldn't surprise me if there are many Tamils who were upset with the way the LTTE was operating in Sri Lanka and had family members displaced because of them.

"On the other hand there are sympathies with the general proposition that the Tamil people were being repressed and other things, and I think it falls somewhere in that category."

sbell@nationalpost.com

Link to comment
Share on other sites

இங்கு ஆரம்பத்தில் கருத்துப் பதிந்த ஹாசினியில் இருந்து பலரும் சொல்வது இன்றைய சூழலில் தலைவரின் இருப்புப் பற்றிய போராட்டம் பற்றிய நிச்சயமற்ற தன்மைகள் நிழவும் சூழலில் தலைவரை மண்ணைக் காத்து நின்ற மக்களும் போராளிகளும் எதிரியிடம் சிக்கி கடும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தேசிய தலைவரின் பிறந்த தினம் என்பதன் பெயரால் இந்த ஆடம்பரக் கூத்தாட்டம் தேவை தானா..???!

முதலில உந்த அக்கா பிறந்தநாளுக்கு போனதே தப்பு. பிறகு அங்கைபோய் யார் யார் என்ன என்ன உடுப்பு புடவை கட்டி இருந்தவையள், முகப்பூச்சு பூசி இருந்தவையள் என்று வேடிக்கை பார்த்தது அடுத்த தப்பு. பிறகு தன்ரை வயித்து எரிச்சலை இஞ்சவந்து கொட்டினது அடுத்த தப்பு. இஞ்ச பலர் வாயுக்கை கொட்டுறதுக்கு அவல் கிடைச்சமாதிரி அக்காவிண்ட கருத்தாடலை வைத்து தங்கள் தங்கள் வயித்தெரிச்சல்களை தீர்த்துக்கொண்டார்கள். ஆகமொத்தத்தில ஒரு ஆளிண்ட புடவையும், முகப்பூச்சும் இத்தனைபெரிய வாதத்துக்கு காரணமாய் இருந்து இருக்கிது. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை முழுசா வாசித்த பின் என் மனதில் தோன்றயது.எங்னள் பெண்களின்

போட்டி,பொறாமை என்ற பிரச்சனைக்கு கூட தலைவனின் பெயர்தான் தேவைப்படுகிது

.இப்படி ஒரு இனத்துக்காக போராடிய தலைவா உனக்கு இதுவும் தேவை இன்னமும்

தேவை. :wub:

Link to comment
Share on other sites

இந்த திரியை தொடர்ந்து அவதானித்தும், வாசித்தும் வருகின்றேனாயினும் பின் வரும் சில காரணங்களிற்காக பதில் எழுதுவதை தவிர்த்து வந்தேன்

1. தலைவரின் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

2. மாவீரர் தினத்திற்கு இந்த முறை தனிப்பட்ட குடும்ப சூழ்நிலையால் என்னால் போகமுடியவில்லை

3. அண்மைய நாட்களில் நடந்த எந்தவிதமான கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளவில்லை

ஒன்றுக்குமே போகாமல், வெறும் கருத்துகளை மட்டும் வந்து கொட்டுவதை விரும்பவில்லை என்பதாலும், அதற்கான தார்மீக உரிமை கிடையாது என்பதாலும், என் கருத்துகளை எழுதாமல் தவிர்த்து வந்தேன். ஆயினும் திரி நீண்டு செல்வதாலும்,சிலரின் அன்பான வேண்டுகோள்களாலும், இந்த திரியை ஒட்டியதும், திரி தொட்டு செல்லும் விடயம் சம்பந்தமாகவும் என் தனிப்பட்ட ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்

1. ஹாசினி தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை, தனிப்பட்ட மகளிர் அமைப்பு மீதான குரோதங்களை மனதில் வைத்து எழுதியுள்ளார் என்பது தெளிவு

2. தலைவரின் பிறந்த நாளை களியாட்டமாக (கவனிக்க: கொண்டாட்டம் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை) நடாத்துவதில் எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை. இந்த விடயத்தில் நெடுக்காலபோவானின் பொதுவான கருத்தை ஆதரிக்கின்றேன். இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் பிரபாகரன் போன்ற உன்னத தலைவரின் பிறந்த தினத்தை களியாட்டமாக கொண்டாடுவதில் தவறிருப்பதாகவே நம்புகின்றேன். களியாட்டமாக நிகழ்த்துபவர்கள், தலைவரின் உன்னத தியாகத்தையும், அவரையும் புரிந்து கொள்ளாமல் கொச்சைப் படுத்துகின்றனர் என்றே நான் கருதுகின்றேன்.

3. மகளிர் அமைப்பு கனடாவில் நிகழ்த்திய, நிகழ்த்தி வருகின்ற போராட்டங்களையும் கவனயீர்ப்புகளையும் அறியாத பலர், அவர்கள் பற்றி நக்கலாகவும், அவதூறாகவும் எழுதுவது மிக மிக தவறானது மட்டுமன்றி கண்டிக்கத்தக்கது. பலர் ஒதுங்கி விட்ட இன்றைய நிலையிலும் அவர்களின் சளைக்காத பங்களிப்பை கொச்சப்படுத்துபவர்கள் முதலில் அவர்களின் போராட்டங்களைப் பற்றிய முன்வாசிப்பை நிகழ்த்துவது நல்லது

4. மூன்றாவதில் சொன்ன அனைத்தும் கனடா இளையோர் சமுதாயத்திற்கும் பொருந்தும்.

5. குடும்பத்தில் எவரையும் இழக்காதவர்கள், காணாமல் போனவர்களை கொண்டிராதவர்கள் தான் இங்கு தலைவரின் பிறந்த தின நிகழ்விற்கு சென்றனர் என்றும், அப்படியானோரே அதனை ஆதரித்து எழுதுகின்றனர் எனவும் பொருள்பட எழுதுபவர்கள் முதலில் தம்மை மாதிரித்தான் அனைவரும் என்ற கனவில் இருந்து வெளி வருவது நல்லது. சொந்த சகோதரியை வன்னி இறுதி யுத்தத்தில் வீரச்சாவின் மூலம் இழந்தவர்களும், தம் உடன்பிறப்புகள் இன்று எங்கிருக்கின்றனர் என்று தினம் தினம் அல்லாடுகின்றவர்களும் கூட இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர் என்பதையும், அப்படியான சிலர் இங்கு இந்த நிகழ்வை ஆதரித்து கருத்தெழுதுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். இழப்பில்லாதவர்கள் தான் ஆதரிக்கின்றனர் என்பது சரியான வாதம் அல்ல.

6. மகிந்தவை கட்டித் தழுவி காதலுடன் உச்சி முகர்ந்தவர்கள் பற்றி எழாத கண்டனங்களையும், அந்த செய்தி தாங்கி வந்த திரிக்கு இடாத பதில்களின் எண்ணிக்கையையும் இந்த திரியில் வந்தவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தெரிகின்றது எம் அரசியல் இழிநிலை

நன்றி வணக்கம்

:நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரி நீண்டு போய்விட்டது என்று பலரும் சொல்லுவதால், எனது அவதானிப்பையும் வைத்து நிறைவு செய்கிறேன்,

இதில், பேசப்பட்ட பிரதான விடயம் தலைவரின் பிறந்ததினத்தை , இந்த வருடம் வழமை போல் கொண்டாடுவது சரியா?

சில பதில்கள் ஹாசினி பற்றியது, அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு பற்றியது, சிலது பொதுவாகவே பெண்கள் பற்றியது, சிலது/ பெரும்பாலனவை முந்தியும் இப்படித்தான் கொண்டட்ப்படது என்பது, இங்குள்ள மகளீர் அமைப்பின் வேலைத்திட்டம் பற்றியது , சிலது நாங்கள் இப்படித்தான் செய்வம் விரும்பமில்லதவர்கள் விலகி நிற்க வேண்டும் என்பது, சிலது ஒப்பீடுகள் மற்றைய பிறந்ததினம், நினைவுதினம் பற்றியது.......

எல்லாவற்றிக்கும் பதில் எழுத முடியாது..

வசம்புவின் அடிக்கோட்டில் உள்ளபடி, புதிய நண்பர் சேர்ப்பதை விட இருக்கிறவ்ர்களுடன் பகைக்காதீர்கள்.....

எனக்கு தெரியாது யார் யார் என்ன நோக்கத்திற்காய் எழுதுகிறார்கள் என்று, என்னை பொறுத்துவரை நான் என்னுடைய மனதுக்கு சரியென்ன பட்டத்தை எழுதுகிறேன்,

தாயகத்துக்கும் புலத்திற்குமான இடைவெளி கூடிக்கொண்டு போகிறது, அதை குறைப்பதற்கான வழி உண்ட என பார்த்து செயற்படுவது நல்லம். ---நான்தான் இப்படி ஒரு கருத்தை கொண்டுவருகிறேன்/ புகுத்துகிறேன் என்று வரவேண்டாம்.....,அங்கு மக்கள் அல்லல் படுகையில் அதை விடுவிக்கிற பணியில் எங்கள் கவனம் இருந்தால், எங்களுக்கு இந்த விழாக்கள், எப்படி நடக்க வேண்டும் என்று யாரும் செல்லத்தேவை இருக்காது, சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கிற பண்பாவது வந்திருக்கும்.

மற்றையது, நாங்கள் செய்வம் இப்படித்தான் நடப்பம், நீங்கள் விரும்பினால் வாங்கோ அல்லாதுவிடில் போங்கோ என்பது , இன்னும் பிளவுகளையும் பிரிவினைகளையும் அதிகரிக்குமே தவிர குறைக்காது, புலத்தில் நாங்கள் எல்லோரும்தான் ஒரு கேள்விகுறியோடு பார்க்கப்படுகிறோம், வேற்று நாட்டவர் எங்களை வேறுபடுத்தி பார்ப்பதில்லை, எல்லாரும் தமிழன் , எல்லாரும் தற்கொலை தாக்குதல் செய்பவர்கள், உயிரின் பெறுமதி தெரியாதவர்கள்,,................

இது எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நடந்திருக்கும், என்னால் மிக இலகுவாக , நான் அப்படியானவன் இல்லை என்று சொல்ல முடியும் , சொல்லிப்போட்டு இங்கு விரும்பின படி எழுத முடியும்-எல்லாரும் அப்படி என்று சொல்லவில்லை...எனக்கு தெரியும், TVI ஒரு பெரிய நிகழ்ச்சி தயாரிப்பாளர் தான் வேலை செய்கிற இடத்தில் தமிழ் ஆட்களுடன் எட்டவாய் நிற்பாரம்.. அது வேண்டாம்...கூடின மட்டும் சொல்லுக்கும் செயலுக்கும் கிடடவாய் இருப்போம்....புது திரி வேண்டாம் ஆர் அந்த TVI ஆள் என்று.

எங்கட போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போவதற்கு நிறைய மாற்றங்கள் தேவை, அதை தனியே ஒரு குழுவோ, சிலரோ செய்ய முடியாது..அது ஒரு மக்கள் கருத்து பரிமாற்றம் முலம் தான் வரும். மற்றையவர்களினதும் கருத்துக்களை ஏற்க பழகுவோம்.

இதற்கு மேல் எதுவும் என்னிடம் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பகாலத்திலிருந்தே தாங்கள் பம்மாத்துக் கதையளப்பதில் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.சும்மா எழுந்த மானத்திற்கு எதையாவது எழுதி மற்றவர்களை முட்டாளாக்க வேண்டாம். மேலே சீமான் விடயமாக யார் தங்களிடம் அப்படிக் கூறியதென்பதை ஆதாரபூர்வமாக நிரூபிப்பீர்களளா?? இங்கே ஒவ்வொருவரின் கருத்தும் அப்படியே உள்ளது. அதனை இலகுவாக இங்கே இணைக்க முடியும்.

உங்களின் அடாவடிதனமற்ற அமைதியான கருத்துக்கு தலைவணங்குகின்றேன்!

எனது கருத்தில் அடாவடிதனம் இருந்தது என்பதை தெரிந்தே எழுதினேன்.................. பதில் வேறுமாதிரியாகவிருக்கும் என்பது எனது நோக்கமாக இருந்தது. நேர்த்தியான கருத்தாடல் எதுவாக இருந்தாலும் அதை இதுவரையில் நான் எனது விசம கருத்துக்களால் ஒருபோதும் எதிர்க்க நினைத்தில்லை. விசமிகளுக்கு அந்த பாசைதான் புரியும் ஆதலாலல் வேறுபாசைகளை எழுதி ஏன் நேரத்தை வீண் அடிப்பான் என்பதே எனது நோக்கம்.

இதை எல்லோரும்தான் வாசித்தார்கள் உங்களுக்கு மட்டும் ஏன் இந்த கருத்து உறுத்தலாக இருந்தது?

சீமானின் குடும்பம் என்ன வன்னி முகாமிலா இருக்கின்றது என்று நீங்களே கேள்வி கேட்டு முன்பு ஒரு தலைப்பின் கீழ் எழுதியிருந்தீர்கள். ஞாபகமறதியிருப்பின் அதற்கு எனது நேரத்தை வீணடித்து தேடிபிடித்து வெட்டி ஒட்வேண்டும் என்ற எந்த அவசியமும் எனக்கில்லை. ஆனால் உங்களின் கேள்வியில் ஒரு நாகரிகம் இருப்பதாக எனக்குபட்டது அதனாலேயே இந்த பதிலை எழுதுகின்றேன்.

அண்ணே சும்மா இருந்துகொண்டு நீதியான கதை அளக்கிறோம் என்ற தோரணையில் கருத்தெழுதுவது என்பதில் என்ன இருக்கின்றது?

எதையாவது செய்ய நினைத்து அதை நேர்தியாக செய்து முடிக்க துடிப்பவனுக்குத்தான் அதன் வலியும் வழியும் தெரியும்!

காசை இங்கே சுற்றினார்கள் என்பதை யார் மறுக்கின்றார்?

தலைவரின் பிறந்தநாளில் ஆடம்பரம் வேண்டாம் என்பதை யார் எதிர்கின்றார்?

மாவீரர் நாள் என்பது அந்த அற்புத மனிதர்களுக்காக நாம் எமது தலைகளை குனியும் ஒரு தேசிய நாள். இதில் அறிவுள்ள எவானாலும் ஆடம்பரத்தைபற்றி எண்ண முடியுமா?

இந்த விடுதலைபோரில் தமது சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்த மக்களின் வலிகள் அவர்களில் ஒருவராக இருந்தால்தான் புரியும். தெரியாத சிலதுகள் சில்லெடுத்து சிலுக்குமாதிரி சேலைகட்டுவதை நாமும்தான் பார்க்கிறோம்.

அதற்காக ஒரு விடுதலைபோரையே கொச்சைபடுத்தும் கருத்துக்களை ஏற்கமுடியுமா?

சுனாமியை புலிகள்தான் அடித்தார்கள் என்ற ஒரே ஒரு குற்றசாட்டுத்தான் இன்னமும் புலிகள் மீது சுமத்தபடாத ஒரே ஒரு குற்றசாட்டு. அது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை? மற்றும்படி அனைத்திற்கும் நேரம் பார்த்திருந்து வந்து எடுக்கும் வாந்திகளை நாம் அப்படியே தின்ன வேண்டுமா? அப்படி என்ன வில்லங்கம் எங்களுக்கு?

இறுதிபோரில் இராணுவத்தினர் மக்களை அப்படியே தோள்மீது சுமந்து காப்பாற்றினார்களாம் புலிகள்தான் கொன்று குவித்தார்களாம் என்ற கருத்துக்களும் அப்டியே இன்னமும் இங்கே இருக்கின்றன......................

ஆனாலும் உண்மைகள் உறங்குவதில்லை................. கோத்தபாயதான் கொல்லசொன்னான்.......நான் வெறும் அம்புதான் என்று இப்போது கொன்றவனே வாக்குமூலம் கொடுத்தும் இங்கே இருக்கின்றது. இந்த வாந்தி எடுக்கின்ற கூட்டம் இப்போது என்ன சொல்லி தமது எஜமானிகளை காப்பாற்ற போகின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் அவர்கள் நடத்திய போராரட்த்தினை நான் இங்கு குறை கூறவில்லையே ..அவர்கள் குளிரிலும் மழையிலும் போராட்டம் நடத்தினார்கள் உண்மைதான்..அதற்காகா அவர்கள் செய்வதெல்லாத்தையும் சரி என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமா??

அவர்களின் போராட்டத்தைபற்றி யார் பேசினார்...............?

அவர்களின் உடையும்................... நடையும்தான் இப்ப பெரியபிரச்சனை!

அவர்கள் சரியாக உடுத்தினால்? தாயகம் விடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் தை மாதத்தில் இருந்து களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் பல நடைபெறவில்லை (சில தடுக்கப்பட்டன, சிலர் "ஏன் வீண் வம்பு" என்று நிகழ்வுகளை நடாத்தவில்லை).

"காலம் எல்லாக் காயத்தையும் ஆற்றும் மருந்து" என்பதால் மீண்டும் கொண்டாட்டங்கள் தலைவரின் பிறந்ததினத்தோடு களைகட்டுவதும் நல்லதுதான்.

Link to comment
Share on other sites

அமைதி.........அமைதி...........அமைதி....................

உங்கள் அனைவரின் வாத பிரதி வாதங்கள் எல்லாம்

கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது................

இந்த புடவையால் வந்த வாக்கு வாதத்தினால்

அடி தடி கொலை காணாமல் போதல் ஆட் கடத்தல்

பழி தீர்த்தல் என இன்னும் பல விபரீதங்கள் ஏற்படலாம்.................

அது மட்டுமல்லாமல் இந்த விவாதம் தனிப்பட்ட பழிவாங்கல்

றேஞ்சலும் நகர்ந்து கொண்டு போகிறதை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டி நிற்கிறது

இதில் கருத்து எழுதிய அத்தனை உறவுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து.....................

அதைவிட பல பற்பல மடங்கு எங்கள் மாவீர தெய்வங்களை மனதில் நிறுத்தி

அவர்களின் புனித நாமத்தால் இந்த வழக்கை ஒரு முடிவிற்கு கொண்டு வரலாம் என

கனம் கோட்டார் அவர்களாகிய நான் வந்திருக்கிறேன்.........................

உறவுகளே நீங்கள் என்ன கொண்டாட்டம் வேணுமோ செய்து கொள்ளுங்கள்...................

ஆனால் எங்கள் மாவீர தெய்வங்களை நினைவு கூரும் அந்த புனித நாளை மிக மிக எளிமையாகவும் உணர்வு

புhர்வமாகவும் கொண்டாட முயற்சி செய்யுங்கள்.......................

அவர்களும் அதையே விரும்பினார்கள்.....................

அவர்களுக்காக அந்த மண்டபங்களில் இருந்து சிறு பிரார்த்தனை செய்யுங்கள்....................

எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதற்கு முன் மண்ணிற்காய் வித்தாகு முன் ஒவ்வொரு

போராளியும் எவ்வளவு துன்பத்தை எமக்காக அனுபவித்திருப்பான் என அவர்கள் இடத்தில இருந்து நீங்கள் எண்ணி பாருங்கள்...........

அத்தோடு இன்றும் இன்னும் தாயகத்தில் அகதி வாழ்வு வாழும் அந்த உறவுகளில் ஒருவனாக உங்களை

நீங்கள் எண்ணிப் பாருங்கள்........................

எளிமையான வாழ்வே என்றும் சிறந்த வாழ்வு என்பதை மறந்து வாழ முற்படாதீர்கள்............

எல்லாவற்றையும் மறந்து பணமும் ஆடம்பரமம் தான் வாழ்க்கை என வாழும் உறவுகளிடம்

நல்ல முறையில் எடுத்துச் சொல்லுங்கள்............................

இதுவே கனம் கோட்டாராகிய என் முடிவு............

ஏற்றுக் கொண்டு சமாதானமாக கை குலுக்கி கொள்ளுங்கள்.....................

குறிப்பு:

யார் எந்த உடை அணிந்தால் என்ன என கேள்வி கேட்ட உறவுகளே!!!!!!!

திருமண நாள் அன்று மணப் பெண் பாண்டும் சேட்டும் போட்டு மண மேடையில் உற்காந்திருந்தால்

ஏற்றுக் கொள்வோமா!!!!!!

அல்லது இப்படியான பொது வைபவங்களில் அரை குறை அடையுடன் வந்தால்

அதை அனுமதிப்போமா!!!!!

அதனால்...........அதனால்.................அதனால்.....................மிகுதி உங்கள் சிந்தனைக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கஸ்டப்பட்டு செய்ய வேண்டிய வேலையை எதிரியானவன் வெகு சுலபமாக எம்முடன் சேர்ந்திருந்தே எங்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறான்

உறவுகளே சிந்தித்து செயற்படுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமெண்டால் மேலை கருத்தெழுதின அத்தனை பேரும்

தமிழீழம் ஈழத்தமிழனுக்கு கட்டாயம் வேணுமெண்டு

ஆம்

எண்டு மட்டும் ஒருபதில் கருத்து எழுதுங்கோ பாப்பம் :)

Link to comment
Share on other sites

பாத்திங்களே கு ம அண்ணை முக்கியமான கட்டத்தில எங்கட ஆக்கள் காலை வா.................ரி விடுவினம் எண்டதுக்கு

உங்கட கேள்விக்கான பதில் தந்தவையின்ர எண்ணிக்கை துல்லியமாய் எடுத்துக் காட்டுதெல்லே!!!!!!

எங்கட சனம் எங்க அங்க போய் வாழப் போகுது.......................

அங்க போய் மனிசன் வாழுவானோ எண்டெல்லே கேள்வி கேக்கினம் இப்ப..........................

வேர்வை மணக்குமாம்............. உடுப்பு அழுக்காகுமாம்

சேறு பிரழுமாம்................நுளம்பு கடிக்குமாம்.................

விலை உயர்ந்த தண்ணி வகை ஒண்டும் கிடைக்காதாம்........................

கதை இப்புடி போகேக்கை எவன் ஜயா தமிழீழத்தை ஆதரிச்சு ஆ.....................ம் எண்டு வாக்கு போடப் போறான்?????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏலுமெண்டால் மேலை கருத்தெழுதின அத்தனை பேரும்

தமிழீழம் ஈழத்தமிழனுக்கு கட்டாயம் வேணுமெண்டு

ஆம்

எண்டு மட்டும் ஒருபதில் கருத்து எழுதுங்கோ பாப்பம் :(

ஒரு பதில் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ..........................

இரண்டாவது பதில், அதற்கு முன் அங்குள்ளவர்களுக்கு ஒரு அறுதல் வேண்டும் ....அவர்கள் இன்னும் இதே மாதிரி செக்கிங், தரப்பால் கொட்டில், எந்த நேரமும் உயிரையும் , மானத்தையும் இலக்காகாமல் இருக்க , அவர்களுக்கு அகதி பேர் நீங்க , பாஸ் பதிவு நீங்க, ஆரிட்டையும் கை ஏந்தி சாப்பிடுகிற நிலை மாற, பிரிந்திருக்கிற குடும்பங்கள் ஒன்று சேர , அவர்களும் வெளியுலகம் பார்க்க, ஒரு மனிதனாய் வாழ, மற்றவர்கள் அவர்களையும் ஒரு சக மனிதனாய் பார்க்க, ஒரு இடைநிலை இருக்கும் எண்டால் அது வேணும் முதலில், எல்லாவற்றிக்கும் முதலில் .............

தமிழ் மாறன்,

எனக்கும் என்னுடைய மனைவிக்கும் 15 / 20 வருட கனடா அனுபவ வித்தியாசம், ஆன அவ வந்தது 18 அல்லது 20 வயசில, அவவிற்கு திரும்பி போக விருப்பமில்லை ... அவவே அப்படி என்றால் அதை விட கூடின வருடம் இங்கே இருப்பவர்களும், குறைந்த வயதில் வந்தவர்களும் திரும்பி போவர்கள் என்று எதிபர்க்கிறது பெரிதாக சாத்தியமில்லை..( எனது மனைவியை ஒரு உதரனத்துக்குத்தன் எடுத்தனான், பலரும் மாறி செய்யலாம்.)

I have some responsibilities to do here, but hopefully we are planing go back..:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.