Jump to content

மாவீரர் நிகழ்வின்பின்... உங்களது நிலைப்பாடு என்ன...? விழ விழ எழுவோமா...???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நமது மண்ணினதும் மக்களினதும் விடிவுக்காக தமது இன்னுயிரினையும் ஈகைதந்த மாவீரச் செல்வங்களின் நினைவு தினத்தினை தமிழீழத்தின் மாவீரர் நாளாய்... தேசிய எழுச்சி நாளாய் அனுஷ்டித்தோம்.

எப்பொழுதும்போல் இல்லாமல் இம்முறை வித்தியாசமான எதிர்பார்ப்புகளோடும், உணர்வுகளோடும் அதை வரவேற்று அனுசரித்தோம்.அவை மிக எழுச்சிபூர்வமானதாகவும் அமைந்திருந்தன.

மாவீரர் நிகழ்வின்பின்... உள்ள நிலைப்பாடுகள் மற்றும் நாம் செய்யவேண்டிய நிகழ்ச்சிநிரல் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன??? எமது போராட்டம் எவ்வகையில் தொடரவேண்டும்? என்பது பற்றி தமிழ் உறவுகளான நீங்கள் உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் முன்வையுங்கள்.

விழ விழ எழுவோமா...???

இங்கு முன்வைக்கப்படுபவை உங்களது தனிப்பட்ட கருத்துக்களாக அமைந்தாலும்..., அவை நமது ஒட்டுமொத்த தமிழினத்தினதும் நலன் சார்ந்ததாய் அமையட்டும்.

நம் மாவீரரின் இலட்சியக் கனவினை நனவாக்குவதாக அமையட்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இனிமேலும் ஒன்றீனைந்து போராட்டத்திற்கு உதவ தயராக தான் இருக்கிறார்கள் ஆனால் யார் தலைமையில் ஒன்றீனைவது என்பதில் தான் குழப்பமாக உள்ளார்கள் என நான் நினைக்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகமே வேண்டாம் தலைவன் கட்டியெழுப்பிய கட்டமைப்பை யார் பொறுப்பெடுத்தாலும் தலைவனின் சிந்தனையில் உருவான கொள்கைகள் அவர்களை வழி நடத்திச் செல்லும் அதிலிருந்து விலகினால் அவர்களுக்கு என்னாகும் என்பது அவர்களுக்கே தெரியும். மக்களே அவர்களுக்கான தண்டனை வழங்கிவடுவார்கள். என்னைப் பொறுத்தவரை தற்போது புலம்பெயர்ந்தவர்களிடம் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. ஈழமண்ணில் தற்போது போராட்டம் செய்யவேண்டிய சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் இல்லை ஆகவே இங்குள்ளவர்களின் பின்னால் அணிவகுப்பதே பொருத்தமாகவிருக்கும். இங்குள்ளவர்களின் செயற்பாட்டினை மாவீரர் தினத்தில் நான் கலந்துகொண்டு பார்த்தபோது என்னுள் ஓர் தெளிவு பிறந்தது. தலைவனே இருந்து வழிநடத்துவதைப்போல் உணர்ந்தேன். சந்தேகமே வேண்டாம் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் நம்பி நட நம்ப நடவாதே

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு காலத்தில் மதமும் அரசியலும் வெவ்வேறாக இருந்தது. ஆனால் இன்று அரசியலும் மதமும் இணைந்து விட்டது. அழிவுகளின் தூரம் அதிகமில்லை.. இந்தியாவிற்கு வால் பிடிக்க சிறிலங்கா எப்பவும் ரெடி. நாடி பிடித்து பார்த்து அரசியல் செய்கின்றார்கள்.
    • போலாட்டின் முர‌ட்டுத‌ன‌மான‌ அடியை  இப்ப‌ தான் யூடுப்பில் பார்த்தேன் கிருப‌ன் பெரிய‌ப்பா என்ன‌ அடி ? ஜ‌பிஎல் அனியான‌ மும்பாய் இவ‌னை 11வ‌ருட‌மாய் வைத்து இருக்கின‌ம் ? அடிக்க‌ தொட‌ங்கினா அடிச்சுட்டே இருப்பான் ,  மைதான‌த்தில் அதிக‌ம் கோவ‌ப் ப‌டும் வீர‌ர்க‌ளில் போலாட்டும் ஒருத‌ர் ? வெஸ்சீன்டீஸ் அனிய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ ந‌ல்ல‌ க‌ப்ட‌ன் இல்லை சாமி தான் சிற‌ந்த‌ க‌ப்ட‌ன் ?    
    • நல்ல பாடல்.மனதுக்கு  அமைதி தரும் பாடல்.
    • "கொரோனா" தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் புதன்கிழமை  இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணைதீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை  இரணைதீவு பகுதியில் இரண்டு இடங்களின் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.         இரணைதீவு பிரதான இறங்கு துரை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள்  தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.       நேற்றைய தினம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்க்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணை  தீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படாத நிலையில் மக்கள் இன்றைய தினம் மேற்படி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.     அதே நேரத்தில் இரணை தீவு பகுதிக்கு செல்லும் மக்களிடன் கடற்படையினர் அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் தீவு பகுதியில் வசிக்கும் மக்கள் தீவுக்கு செல்வதற்கு முன் அடையாள அட்டையை கடற்படையினரிடம் ஒப்படைத்து செல்ல வேண்டும் என பணிக்கப்படுவதாகவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இரணைதீவில் இரு இடங்களில் மக்கள் போராட்டம் | Virakesari.lk
    • எம்.மனோசித்ரா   மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளதாவது , இந்துக்களின் விஷேட தினமான மகா சிவராத்திரி இம்மாதம் 11 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான தயார்படுத்தல்களை சிறப்பாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். இந்துக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேச செயலகப்பிரிவுகளில் இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.     இதன் போது  இந்து மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்கள் கோவில்களுக்குச் சென்று கலாசார நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்து மத விவகாரம் , கலாசார திணைக்களத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலயங்களுக்கு பிரதமரால் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியை சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை | Virakesari.lk
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.