Jump to content

மாவீரர் நிகழ்வின்பின்... உங்களது நிலைப்பாடு என்ன...? விழ விழ எழுவோமா...???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நமது மண்ணினதும் மக்களினதும் விடிவுக்காக தமது இன்னுயிரினையும் ஈகைதந்த மாவீரச் செல்வங்களின் நினைவு தினத்தினை தமிழீழத்தின் மாவீரர் நாளாய்... தேசிய எழுச்சி நாளாய் அனுஷ்டித்தோம்.

எப்பொழுதும்போல் இல்லாமல் இம்முறை வித்தியாசமான எதிர்பார்ப்புகளோடும், உணர்வுகளோடும் அதை வரவேற்று அனுசரித்தோம்.அவை மிக எழுச்சிபூர்வமானதாகவும் அமைந்திருந்தன.

மாவீரர் நிகழ்வின்பின்... உள்ள நிலைப்பாடுகள் மற்றும் நாம் செய்யவேண்டிய நிகழ்ச்சிநிரல் பற்றி உங்களின் கருத்துக்கள் என்ன??? எமது போராட்டம் எவ்வகையில் தொடரவேண்டும்? என்பது பற்றி தமிழ் உறவுகளான நீங்கள் உங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் முன்வையுங்கள்.

விழ விழ எழுவோமா...???

இங்கு முன்வைக்கப்படுபவை உங்களது தனிப்பட்ட கருத்துக்களாக அமைந்தாலும்..., அவை நமது ஒட்டுமொத்த தமிழினத்தினதும் நலன் சார்ந்ததாய் அமையட்டும்.

நம் மாவீரரின் இலட்சியக் கனவினை நனவாக்குவதாக அமையட்டும்.

Link to post
Share on other sites

மக்கள் இனிமேலும் ஒன்றீனைந்து போராட்டத்திற்கு உதவ தயராக தான் இருக்கிறார்கள் ஆனால் யார் தலைமையில் ஒன்றீனைவது என்பதில் தான் குழப்பமாக உள்ளார்கள் என நான் நினைக்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகமே வேண்டாம் தலைவன் கட்டியெழுப்பிய கட்டமைப்பை யார் பொறுப்பெடுத்தாலும் தலைவனின் சிந்தனையில் உருவான கொள்கைகள் அவர்களை வழி நடத்திச் செல்லும் அதிலிருந்து விலகினால் அவர்களுக்கு என்னாகும் என்பது அவர்களுக்கே தெரியும். மக்களே அவர்களுக்கான தண்டனை வழங்கிவடுவார்கள். என்னைப் பொறுத்தவரை தற்போது புலம்பெயர்ந்தவர்களிடம் போராட்டம் கையளிக்கப்பட்டுள்ளது. ஈழமண்ணில் தற்போது போராட்டம் செய்யவேண்டிய சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் இல்லை ஆகவே இங்குள்ளவர்களின் பின்னால் அணிவகுப்பதே பொருத்தமாகவிருக்கும். இங்குள்ளவர்களின் செயற்பாட்டினை மாவீரர் தினத்தில் நான் கலந்துகொண்டு பார்த்தபோது என்னுள் ஓர் தெளிவு பிறந்தது. தலைவனே இருந்து வழிநடத்துவதைப்போல் உணர்ந்தேன். சந்தேகமே வேண்டாம் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும் நம்பி நட நம்ப நடவாதே

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.