Jump to content

ஈழ‌த் தமிழர்களின் யூதக் கனவு


Recommended Posts

ஈழ‌த் தமிழர்களின் யூதக் கனவு

புதன், 02 டிசம்பர் 2009 19:46 யதீந்திரா பயனாளர் தரப்படுத்தல்: / 0

குறைந்தஅதி சிறந்த

தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம்

- வரலாற்றியலாளர் டாயன்பீ

1

சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்றைக்குமான உண்மையாகி விடுவதில்லை. இன்று எல்லாமும் முடிந்துவிட்டதே இனி என்ன எழுத்தும் இலக்கியமும் என்ற அங்காலாய்ப்புக்கள்தான் எங்கும் விரவிநிற்கின்றன.

ஒரு வகையில் இந்த அங்கலாய்ப்பு இயல்பான ஒன்றுதான். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றல், அறிவு வளங்கள் அனைத்தையும் தம்மை நோக்கி உள்வாங்கிக் கொண்டதொரு அமைப்பின் வீழ்ச்சி எந்தவொரு தமிழனுக்குமே அதிர்ச்சியையும் சோர்வையும்தான் கொடுக்கும். எனவே இந்தச் சூழலில் நாம் நமது பழைய கருத்துக்களை, நிலைப்பாடுகளை சற்று மீள்பரீசிலனை செய்து கொள்வது நல்லதுதானே. இது ஒரு வகையில் நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ளுதல்தான். சுயவிமர்சனம் என்பது பெரும்பாலும் தற்கொலைக்கு ஒப்பானது என்றே சிலர் எண்ணுவதுண்டு, அதில் உண்மை இல்லாமலுமில்லை. தற்கொலை ஒரு மனிதனின் அதுவரையான இயக்கத்தை நிறுத்தும். சுயவிமர்சனமும் அதுவரைகால தவறுகளை விளங்கிக் கொண்டு புதியதொரு பாதையை வகுக்க உதவும்.

நான் இங்கு சமீபகாலமாக நம்மிடம் நிலவிவந்த ஆனால் இன்று ஒரு நகைச்சுவைக்குரிய ஒன்றாக மாறிவிட்ட நமது யூதக் கனவு பற்றித்தான் சில அபிப்பிராயங்களைப் பதிவு செய்ய விழைகின்றேன். நாம் நம்மை யூதர்களாக எண்ணிக் கொள்ளுவதற்கு ஏதுவாக என்னனென்ன காரணங்கள் இருந்தன என்று யோசித்துப் பார்த்தேன். யூதர்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறி வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். நாங்களும் அவ்வாறு சிங்களத்தின் ஒடுக்குமுறையால் உலகின் பல பாகங்களிலும் வாழும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம். (நம்மில் ஒரு பகுதியினர் வெளிநாட்டு மோகம் கொண்டு எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது லண்டனுக்கோ கனடாவுக்கோ போய்விட வேண்டுமென்ற தீரா ஆசையில் ஓடியதும் உண்டு. அதை எந்த யூதக் கணக்கில் சேர்ப்பது?) யூதப் பெயர்வின் போது அவர்கள் தம்மை உலகளாவிய ரீதியில் ஒருமுகப்படுத்துவதற்காக பயன்படுத்திய புலம்பெயர் சமூகம் (Diaspora) என்ற கருத்தை நாமும் பயன்படுத்திக் கொண்டோம். இதன் மூலம் நாம் யூதர்களுக்கு இணையானவர்கள் என்றதொரு கருத்து வளர்ந்தது. நாம் கல்வியில் மேலோங்கிய சமூகம். இப்படியெல்லாம்தான் எங்களது யூதக் கனவு வளர்ந்தது.

இந்த கருத்தின் பின்னால் எடுபட்டுப் போனவர்களில் நானும் ஒருவன்தான். ஆனால் இப்போது நாம் இருக்கும் நிலையிலிருந்து சற்று திரும்பிப் பார்க்கும்போது அது நாம் தகுதியற்று வளர்த்துக் கொண்டதொரு கற்பனையென்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் நம்மை யூதர்களாக கற்பனை செய்து கொள்வதற்கான எந்தவொரு தகுதியும் நம்மிடமில்லை. அடிப்படையிலேயே ஈழத் தமிழர் சமூகம் தனக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளை கௌரவமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டதொரு சமூகம். சக மணிதர்களையே பறையன், பள்ளன், வண்ணான் எனப் பிரித்தாளுவதில் பெருமை கொண்டவர்கள் நாம். பின்னர் சாதி ரீதியாக பிரிந்து வளர்ந்த சமூகத்தினுள் விடுதலை சார்ந்து இயக்கங்கள் தோன்றிய போதும் விடுதலை அரசியலிலும் ஒரு வகைத்தான தீண்டாமைதான் நிலவியது. ஆளையாள் ஓரங்கட்டுதல், பிரித்தாளுதல் அல்லது அழித்தொழித்தல் என்பதாகவே நமது விடுதலை அரசியல் சுருங்கியது. இன்று கற்பனைகள் கலைந்து நடு வீதியில் திசையற்றுக் கிடப்பது நமது அரசியல் மட்டுமல்ல நன்பர்களே நமது யூதக் கனவும்தான்.

2

கல்வியில் நம்மை மிஞ்ச யாருண்டு என்ற யாழ்ப்பாண மத்தியதரவர்க்க செருக்கை உள்வாங்கி வளர்ந்த ஈழத் தமிழர்கள் கடந்த 60 வருடங்களாக சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் படுதோல்வியடைந்திருப்பதே வரலாறு. மோட்டு சிங்களவர்கள் அவர்களுக்கு என்ன மசிரோ தெரியும் என்ற அரைவேக்காட்டுத்தனமான மத்தியதரவர்க்க மாயையில் நாம் காலத்தை கழித்திருக்கின்றோமே தவிர நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை. சிங்கள இராஜதந்திரம் பற்றி நம்மில் சிலரே வியந்து எழுதியிருக்கின்றனர். இது பற்றி அடிக்கடி தனது எழுத்துக்களில் பதிவு செய்தவர் நமக்கு நன்கு பரிச்சயமான ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு. அவர் அவ்வப்போது பேராசிரியர் இந்திரபாலா குறித்துரைக்கும் ஒரு கருத்தை நினைவுபடுத்துவதுண்டு. இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை பேணிப்பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு இராஜதந்திரம் தேவை. இராஜதந்திரம் இல்லாமல் அது ஓரு போதுமே சாத்தியப்படாது.

இன்று சிங்களம் தன்னை சுற்றி எழும் எத்தனையோ சவால்களை சமாளித்துக் கொண்டவாறு தன்னை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் லலித் அத்துலத் முதலி சொல்லுவது போன்று எங்களிடம் எம் மூதாதையர்கள் வழி வந்த இராஜதந்திர ஆற்றல் என்னும் பொக்கிசம் இருக்கிறது. இதனைத்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கோல்டண்திரட் (Golden thread) என்று வர்ணித்தார். ஆனால் நாங்களோ உலகப் போக்குகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப சிந்திக்க, செயற்பட திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறோம். உசுப்பிவிடும் அரசியல், அதற்கான சுலோகங்கள், பின்னர் அதனைச் சுற்றி விமர்சனமற்ற கற்பனைகள் இதுதான் எங்கள் அரசியல். இது குறித்து யாரையும் நோக்கி விரல் சுட்டுவதல்ல எனது நோக்கம். நம்மை நாம் கற்பனைகளற்று சரியாக அளவிட்டுக் கொள்ளும் பண்பு நமக்குத் தேவை என்பதையே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்ட முயல்கிறது. அவ்வாறு அடுத்தவரை நோக்கி விரல் சுட்டுவதன் மூலம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலும் எழுத்துக்களை இந்தக் கட்டுரை விமர்சிக்க முயல்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நானும், என்னைப் போன்றவர்களுக்கும் இவ்வாறான கற்பனைகளை விமர்சனமற்று பரவ விட்டதில் பங்குண்டு என்னும் எழுத்து நேர்மையுடன்தான் எழுதுகின்றேன். பன்முக நோக்கில் சிந்திக்க வேண்டிய அவசியம் என்பது நம் மத்தியில் ஒரு பண்பாடாகவே வளர வேண்டியிருக்கிறது. வசை மற்றும் துதி பாடுவதில் திருப்தி, விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட வாழ்வை விவாதப் பொருளாக்கும் வக்கிரம் இவ்வாறான பண்புகளிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது.

நான் சமீபத்தில் சிறிலங்காவிற்கான முன்னைநாள் தூதராக இருந்த ஜெப்ரி லுன்ஸ்டேட் எழுதியிருந்த அறிக்கையொன்றைப் பார்த்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் இந்தத் தலைப்புடன் மிகவும் பொருந்தக் கூடிய ஒன்று. “அமெரிக்கா இலங்கை விடயத்தில் பெரிய அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம், அமெரிக்க உள்ளக அரசியலில் (Domestic politics) செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு இலங்கை பிரஜைகள் அமெரிக்காவில் வலுவாக நிலைபெறவில்லை’. இதன் உள் அர்த்தம் அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகள் அமெரிக்க அரசியல் நிலைப்பாடுகளில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய சக்திகளாக இல்லை என்பதாகும். இந்த வாதத்தை அப்படியே யூதர்களுக்கு திருப்பிப் போட்டுப் பார்த்தால் எங்கள் யூதக் கனவின் பின்னாலுள்ள மடைமை வெள்ளிடைமலையாகும்.

யூதர்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அங்கெல்லாம் அவர்களே முதன்மையானவர்களாக இருக்கிறார்கள் அறிவிலும் செல்வத்திலும். இதன் காரணமாக அவர்கள் அந்தந்த நாட்டின் உள்ளக அரசியலை நிர்ணயிக்கக் கூடிய மாற்றும் (Change the polticle Agenda) சக்திகளாக தொழிற்படுகின்றனர். அவர்களது ஆற்றலும் அறிவும் தேவைப்படும் அந்த நாடுகள் அவர்களை தமது நேச சக்திகளாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கரிசனையும் பெருமையும் கொள்கின்றன. இன்று இஸ்ரவேல் அமெரிக்காவின் வரலாற்றுக் கூட்டாளியாக இருக்கும் யதார்த்தத்தை இந்த பின்புலத்தில் நின்றுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமே அல்லாது வெற்று கோஷ‌ங்களை எழுப்புவதிலிருந்தோ வெறும் கற்பனைகளை தலைமுறைகள் சார்ந்து பரப்புவதாலோ அல்ல.

3

இந்தக் கட்டுரை எழுதத் தொடங்கியதும் சிறிது யூத வரலாறு அவர்களின் ஆளுமை குறித்து அறியும் நோக்கில் இணையத்தளங்களில் தேடினேன். யூதக் கனவில் திளைத்த நாம் யூத ஆளுமை, அறிவு பற்றியெல்லாம் எவ்வளவு தூரம் அறிய முற்பட்டிருந்தோம் என்பது வேறு விடயம். ஒரு வேளை அறிந்திருந்தால் தகுதி மீறிய கனவும் வளர்ந்திருக்காதோ என்னவோ! இன்று உலகின் மிகப் பெரும் ஆளுமைகளாக சிலாகிக்கப்படும் பலர் குறிப்பாக மார்க்ஸ் உட்பட பலரும் யூதர்கள் என்பது பலர் அறியாத ஒன்று. லூயிஸ் ரிகன்ஸ்டின் (Lewis Regenstein) என்பவர் எழுதிய யூதர்கள் ஏன் இவ்வளவு செழிப்பாக இருக்கின்றனர் (Why Are Jews So Smart?) கட்டுரையொன்றைப் பார்த்தேன். உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தைத் கொண்ட யூதர்கள் 21ஆம் நூற்றாண்டின் அறிவாற்றலில் எத்தகைய இடத்தை பெற்றிருக்கின்றனர் என்பதை சிறப்பாக குறிப்பிடுகின்றார். மிகச் சிறிய தொகையினரான யூதர்கள் நோபல் பரிசின் 32 வீதத்தை கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை நமது கனவுடன் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். (Jews constitute only about two-tenths of one percent of the world’s population; Jews won 29 percent of the Nobel Prizes in literature, medicine, physics and chemistry in the second half of the 20th century. So far this century, the figure is 32 percent) - http://www.jewishmag.com/115mag/smartjews/smartjews.htm - (மேலதிகமாக அறிய இந்த இணையத்தைப் பார்க்கலாம்)

ஏன் இந்த விடய‌த்தைக் குறிப்பிடுகிறேன் என்றால் கனவு காண்பது பிழையல்ல. ஆனால் அந்தக் கனவை காண்பதற்கு நமக்கு தகுதியிருக்கின்றதா என்பதுதான் இங்கு பிரச்சனை. போலிப் பெருமைகளிலும், அர்த்தமற்ற சடங்குகளிலும், ஒழுக்கக் கோவைகளிலும் (இதிலும் போலித்தனம்தான் அதிகம்) காலத்தை கழிக்கும் நாம் எவ்வாறு யூதர்களுக்கு இணையாவது? அதிலும் வல்வெட்டித்துறை, உரும்பிராய் அளவெட்டி வந்தாறுமுலை கதைகள் அர்த்தமற்ற குலப் பெருமைகள். இப்படி அசிங்கங்களை பெருமையாக சுவைத்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தகுதியிருக்கிறது இப்படியான கனவிற்கு?

1983களில் இருந்தே ஈழத் தமிழர்கள் பல்வேறு ஜரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயரத் தொடங்கிவிட்டனர். இன்று கிட்டத்தட்ட 25 வருடங்களைக் கடந்துவிட்டது நமது புலம்பெயர் வாழ்வு. இந்தச் சூழலில் அந்தந்த நாட்டின் சிந்தனைச் சூழலில், நமது சிந்தனைச் சூழல் விரிவு கொண்டிருக்கிறதா என்றால் நான் அறிந்தவரை அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கனவு மட்டும் அளவுக்கதிகமாகவே நம்மிடம் நிரம்பி வழிகிறது. இன்றும் அந்தந்த நாட்டின் அரசியல் சக்திகளுடனோ அல்லது சிந்தனையாளர்கள் மத்தியிலோ தாக்கம் செலுத்தக் கூடியவர்கள் உருவாகியிருக்கிறார்களா என்றால் இல்லையென்ற பதிலைத் தவிர எதுவுமே இல்லை. இப்போதுதான் ஏதோ ஞானோதோயம் பிறந்தது போல் சில அசைவுகள் தெரிகின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இப்படியான இடங்களில் இருக்கும் உயர் இலக்கியவாதிகள், சிந்தனையாளர், அறிஞர்களோடு ஒரு உரையாடலையாவது எங்களால் செய்ய முடிந்திருக்கிறதா? பின்னர் எதற்கு இந்த வீண் கனவு நமக்கு?

முதலில் தகுதியை வளர்த்துக் கொள்வது பற்றி சிந்திப்போம். பின்னர் கனவுகளைக் காண்போம்.

- யதீந்திரா

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1487:2009-12-02-14-19-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் எல்லோரையும் இதற்குள் அடக்குதல் ஆகாது. இதே ஈழத்தமிழினத்துக்குள் இருந்து எழுந்த விடுதலைப்புலிகள் தான் அமெரிக்க தேர்தலில் ஓசாமாவின் வெற்றிக்காக பண உதவி செய்ததாக சிங்களம் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தனர்.

அதுமட்டுமன்றி இஸ்ரேலிய உளவு அமைப்புக்களையும் விஞ்சி விடுதலைப்புலிகள் சர்வதேச அரங்கில் சாதித்தவை பல.

ஆனால் என்ன யூதர்களிடம் இன பற்றும் நாட்டுப் பற்றும் ஒற்றுமையும் அதிகம். நம்மவர்களிடம் அந்நிய மோகம் அதிகம். அதனால் புலிகளாகிய தமிழர்களிடம் வளர்ந்திருந்த திறமையும் பிரயோசனமற்று இன்று நிர்க்கதியாக நிற்கிறது தமிழினம். இன்னும் சிங்கள இனத்துக்கு சேவகம் செய்தோ மேற்குலக நாடுகளுக்கு குடிபெயர்ந்தோ மிச்ச சொச்ச வாழ்க்கையையும் வாழ்ந்து விடுவோம் என்று நினைக்கும் தமிழர்களே அதிகம். இப்படிப்பட்ட தமிழர்களிடம் யூதக்கனவு ஆகாதது தான். இவர்களிடம் மாற்றங்கள் சாதாரணமாகப் பிறக்கும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு கற்பனை தான்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""""சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது""""

"""கல்வியில் நம்மை மிஞ்ச யாருண்டு என்ற யாழ்ப்பாண மத்தியதரவர்க்க செருக்கை உள்வாங்கி வளர்ந்த ஈழத் தமிழர்கள் கடந்த 60 வருடங்களாக சிங்கள இராஜதந்திரத்தின் முன்னால் படுதோல்வியடைந்திருப்பதே வரலாறு. மோட்டு சிங்களவர்கள் அவர்களுக்கு என்ன மசிரோ தெரியும் என்ற அரைவேக்காட்டுத்தனமான மத்தியதரவர்க்க மாயையில் நாம் காலத்தை கழித்திருக்கின்றோமே தவிர நம்மால் உருப்படியாக எதையும் செய்ய முடியவில்லை.""""

""""இந்த கருத்தின் பின்னால் எடுபட்டுப் போனவர்களில் நானும் ஒருவன்தான"""

""""அடிப்படையிலேயே ஈழத் தமிழர் சமூகம் தனக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகளை கௌரவமாக பேணிப் பாதுகாத்துக் கொண்டதொரு சமூகம்."""'

""""ஆளையாள் ஓரங்கட்டுதல், பிரித்தாளுதல் அல்லது அழித்தொழித்தல் என்பதாகவே நமது விடுதலை அரசியல் சுருங்கியது.""""""""""'

""""நாங்களோ உலகப் போக்குகளை விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப சிந்திக்க, செயற்பட திராணியற்றவர்களாகவே இருந்திருக்கிறோம். உசுப்பிவிடும் அரசியல், அதற்கான சுலோகங்கள், பின்னர் அதனைச் சுற்றி விமர்சனமற்ற கற்பனைகள் இதுதான் எங்கள் அரசியல்."""""""""""""

""""இது குறித்து யாரையும் நோக்கி விரல் சுட்டுவதல்ல எனது நோக்கம்.""""""""'

""""உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தைத் கொண்ட யூதர்கள் 21ஆம் நூற்றாண்டின் அறிவாற்றலில் எத்தகைய இடத்தை பெற்றிருக்கின்றனர் என்பதை சிறப்பாக குறிப்பிடுகின்றார். மிகச் சிறிய தொகையினரான யூதர்கள் நோபல் பரிசின் 32 வீதத்தை கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை நமது கனவுடன் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்"""""""

இது எல்லாம் வாசித்த பின்பு எங்களின் பதில்,

============ஈழத்தமிழர்கள் எல்லோரையும் இதற்குள் அடக்குதல் ஆகாது. இதே ஈழத்தமிழினத்துக்குள் இருந்து எழுந்த விடுதலைப்புலிகள் தான் அமெரிக்க தேர்தலில் ஓசாமாவின் வெற்றிக்காக பண உதவி செய்ததாக சிங்களம் ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் அளவிற்கு முன்னேறி இருந்தனர்.

அதுமட்டுமன்றி இஸ்ரேலிய உளவு அமைப்புக்களையும் விஞ்சி விடுதலைப்புலிகள் சர்வதேச அரங்கில் சாதித்தவை பல.=========

காத்திரமான கருத்துக்கள், உங்களது பதில்களையும் வையுங்கள்...நான் 100 இக்கு 100000 வீதம் கட்டுரையாளரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் கேவலமான இனங்களில் தமிழினமும் ஒன்று. அது போய் இனப்பற்று, அறிவு இவற்றில் உச்சியில் நிற்கும் யூத இனத்தோடு தன்னை ஒப்பிடுவது செம காமடி.

கருணா போல் துரோகிகளை எந்தவொடு நல்ல இனமும் கொண்டிருக்காது.

மற்றது எம்மினத்தின் படிப்பறிவு பற்றி பீற்றுவதும் காமடி தான். ஏதோ கணிதம், பொறியியல், மருத்துவம், கணனி சம்பந்தப்பட்ட படிப்புக்கள் என்று பலர் படித்திருப்பதால் படித்த இனம் ஆகிவிடுமா? சரி அந்த துறைகளிலும் ஒரு அளவாகப் படித்தவர்கள் பலர் உள்ளார்களே தவிர உச்சத்தை தோட்டு உலகின் கணிப்புக்குரியவர்களாக நிற்பவர்கள் எத்தனை பேர்? அரசியல், பத்திரிகைதுறை, போன்ற சமூக விஞ்ஞானத் துறைகளில் எம்மில் படித்தவர்களின் எண்ணிக்கை நகைப்பிற்கிடமானது.

சரி பொருளாதாரத்தில்... கொத்து ரொட்டியையும், இடியப்பத்தையும் சக தமிழனோடு போட்டி போட்டு விற்பது போன்ற செயல்கள் தான் நம்முடையது. உலகில் பெரிய நிறுவனங்கள் என்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஏதனும் ஒன்று ஈழத் தமிழனிடம் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் தங்களுக்கென நாடு அமைத்த காலம் வேறு.

அன்றைய அரசியல் நிலைமைகள் வேறு.

அத்துடன்....

தமிழரிடம் இருக்கும் அத்தனை நல்லகெட்ட குணங்கள் அனைத்தும் ஏனைய இனங்களிடமும் அப்படியே இருக்கின்றன.நடைமுறைகள்தான் வித்தியாசம்.

மற்றும்படி எல்லோரும் சர்வசாதாரண மனிதர்கள்.

நாடுகளுக்கேற்ப....

இனங்களுக்கேற்ப......

நிறங்களுக்கேற்ப........

மதங்களுக்கேற்ப..........

அவர்களின் போராட்டங்கள் வித்தியாசப்படுகின்றன.

பிரித்தானியாக்காரன் தன் சுயநலத்திற்காகவும் பழிதீர்ப்புக்காகவும் உருவாக்கிய நாடுதான் இஸ்ரேல் என எங்கேயோ படித்த ஞாபகம்!?!?!?!?!?!?!

77ல்களில் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்...

யூதனுடன் ஈழத்தமிழனையும் ஒப்பிட்டு

எதற்காக தமிழீழம் என்று தெரியாதவனையும் பந்தாவில் ஏற்றி

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்த்தான்

என வாக்குறுதி கொடுத்து எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றது.

அகிம்சையால் கூட தமிழீழம் ?????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் கல்வியறிவுள்ள இனம்! சிரிப்பாச் சிரிக்கவேண்டும்போலுள்ளது. இவர்கள் என்னத்தப் படித்தவை டாக்குத்தருக்கு, இன்ஜினியருக்கு, வாத்தியார் உத்தியோகம் பார்க்க, கிளறிக்கல் சேவையில் இருந்து அரசாங்கத்தில் லிகிதம் பார்க்க. இதெல்லாம் ஒரு படிப்பு எண்டு நானும் புலம்பெயரமுதல் நினைச்சதுதான். இப்பதான் தெரியுது இதுவெல்லாம் சுத்த வேஸ்ட் எண்டு. இன்னும் எங்கட சனம் திருந்தேல்ல என்பது வேறுவிடையம். இதுக்குள்ள இஸ்ரேலியக் கனவுவேற.

ஆமிக்காரன் அடித்தாலும் உதைத்தாலும் அவங்களுடன் புடுங்குப்பட்டாலும் பறுவாயில்லை வருடத்தில் ஒரு தடவையாகுதல் சொந்த மண்ணுக்குப் போய்வாருங்கள். அப்போதுதான் எமது நாட்டின்மீது பாசம் நிலைத்து நிற்கும். அங்கு என்ன விலை கொடுத்தாவது ஒரு காணியையோ வீட்டடையோ வாங்கிப்போடுங்கோ அப்போதான் உங்கள் பிறந்த மண்ணின்மீது தொடர்பிருக்கும். நான் செய்வது தப்போ அன்றேல் சரியோ எனக்குத் தெரியாது, கூடியவிரைவில் நான் ஒரு காணிவாங்கப்போகிறேன், யாழ்ப்பாணத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு .ச ,

""""""""""""மற்றும்படி எல்லோரும் சர்வசாதாரண மனிதர்கள்."""""""""""'

""""உலக சனத்தொகையில் மிகச் சிறிய வீதத்தைத் கொண்ட யூதர்கள் 21ஆம் நூற்றாண்டின் அறிவாற்றலில் எத்தகைய இடத்தை பெற்றிருக்கின்றனர் என்பதை சிறப்பாக குறிப்பிடுகின்றார். மிகச் சிறிய தொகையினரான யூதர்கள் நோபல் பரிசின் 32 வீதத்தை கைப்பற்றுபவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை நமது கனவுடன் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். (Jews constitute only about two-tenths of one percent of the world’s population; Jews won 29 percent of the Nobel Prizes in literature, medicine, physics and chemistry in the second half of the 20th century. So far this century, the figure is 32 percent)""""

நாங்கள் எப்பவும் இப்படித்தான் , ஒண்டில் கொண்டை இல்லாட்டி மொட்டை ..(சரியானது மறந்து போட்டுது)..

அவர்கள் மிகவும் வலிய இனம்.. முந்தி யாழ்ப்பாணத்தில் இருக்கேக்க, பேப்பர் வாசிச்ச USA இஸ்ரேல் க்கு சப்போர்ட் பண்ணுது , ஒரு நீதியில்லாமல் நடக்குது என்று.. ஆன இப்ப இங்கே இருக்கேக்க தான் தெரியுது usa தீர்மானிக்கிறதே அவங்கள் தான் என்று..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.