• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

எனது டி வீ .............

Recommended Posts

...எனது டி வீ .....

குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீட்டுக்கு வந்திருந்தார் .அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன் ஒரே கொண்டாட்டம்.

அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில் டி வீ யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைப் படவே . அம்மம்மா .........My T.V is not working ...........கொஞ்ச நேரம் காத்திரு என்று இவர் சொல்லி இருக்கிறார். மீண்டும் நஞ்சரித்து இருக்கிறான் . வழக்கமாக் "தடங்கலுக்கு வருந்து கிறோம் " என்று ஆங்கிலத்தில் போடுவார்கள் ஆனால் அன்று போடவில்லை. குழந்தை எழு நிமிடமாக் காத்திருந்து விட்டு .........மீண்டும் அம்ம்மாம்மா ....வொர்க் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கிறான். அவரும் வேலையாக் இருந்தவர ஜீசஸ் இடம்கேளு என்று சொல்லியிருகிறார். சில நிமிடங்கள் சத்தத்தை காணவில்லை......

அவர் வீட்டில் இருந்த பூஜை அறையில் இவன்.....கண்களை மூடியவாறே .......Jesus give my t.v. back ........Jesus give my t.v back ..இருகரங்க்கூப்பியவாறே .....சத்தமாக பிராத்தித்து கொண்டிருக்கிறான் பின் ஓடி வந்து .டி வீ யை பார்த்தான் திடீரென டி வீ வேலை செய்ய தொடங்கி விட்டது ....அம்மம்மா .....my t.v is back......அம்மம்மாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை. அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை...........

...இவன் வீடில் தமிழ் கதைத்தாலும் அங்குள்ள் பெரியவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என தெரியும் ஆங்கிலத்திலே தான் உரையாடுவான். சில சமயம் அரைத் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவான். . எப்டியாவது தனக்கு தேவையானதை பேசி சாதித்து கொள்வான். அம்மம்மாவும் தாயின் கவலை ....வரக்கூடாது என்பதால் அணைத்து இரு மொழியிலும் பேசுவார். சிலசமயம் தாய் வேண்டுமென்று அடம் பிடித்தால் யாரையாவது வரச்சொல்லி அத்தாயிடம் அனுப்பி விடுவார். இளம் வயதிலே கடவுள் தருவார் என்ற நம்பிக்கை அவன் பிஞ்சு மனதிலே முளை விடும் என்பதில் ஏது வித ஐயமும் இல்லய். வருகிறது கிறிஸ்மஸ் பண்டிகை , இப்பவே ஆயத்தங்கள் .....எதிர் பார்ப்புகள் பரிசுக்காக.

சின்ன சின்ன சந்தோஷங்கள் என்னையும் தொற்றி கொள்ள உங்களுடன் நானும் பகிந்து கொள்கிறேன் . சந்தோஷத்துடன்.......

Share this post


Link to post
Share on other sites

அபப நிலாமதி அக்காவீட்டை கிறிஸ்துமஸ்துக்கு பெரிய கொண்டாட்டமோ? நாங்களும் வரலாமோ?

Share this post


Link to post
Share on other sites

மச்சான் வரலாம்...........இல்லந்தேடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லமாடோம். எத்தனையோ பேர் வாசித்தார்கள் சிரித்து விட்டு போனார்கள் (?) மச்சானுக்கு மட்டும் ஒரு வரி எழுத தோன்றியது. நன்றி மச்சான்.

Share this post


Link to post
Share on other sites

அங்காலப்பக்கம் வந்தால் வாறன் அக்கா. எதுக்கும் எனது கேக்கு பலகாரங்களை பத்திரப்படுத்தி வையுங்கோ. எல்லாருக்கும் எழுதிறதுக்கு பொறுமை இருக்காது, பலருக்கு ஒவ்வொரு பதிவாய் தேடிக்கண்டுபிடிக்கிறதே கஸ்டமான காரியம்.. யோசிக்காதிங்கோ.. தொடர்ந்து எழுதுங்கோ.

Share this post


Link to post
Share on other sites

நிலாமதி அக்கா,

கிறிஸ்மஸ் மரம் எல்லாம் வைத்து இருக்கின்றீர்களா ?

நாங்கள் சைவசமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,

எமது பிள்ளைகளின் சந்தோசத்துக்காக நத்தாருக்கு வீட்டை அலங்கரிப்போம்.

ஏனெனில், அவர்களின் பள்ளிக்கூடத்தில் படிக்கும் வகுப்பு நண்பர்கள் ,

உங்களுக்கு நிக்கோலவுஸ் தாத்தா என்ன தந்தவர் என்று கேட்கும் போது ......

ஒன்றும் தரவில்லை என்று சொன்னால் ..... எல்லோருக்கும் கவலையாக இருக்கும்.

பொங்கல் , தமிழ்வருடப் பிறப்பு நாட்களில் எமக்கு லீவு கிடைப்பதில்லை.

இந்த மாதத்தில் எல்லோரும் குடும்பமாக இருந்து மகிழ நல்ல ஒரு மாதம். :wub:

Share this post


Link to post
Share on other sites

நகைச்சுவை நன்றாக இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

நத்தார் வாழ்த்துக்கள் சோதரி! நல்ல சிறிய கதை! :unsure::unsure:

Share this post


Link to post
Share on other sites

மச்சான் ............தமிழ் சிறி..........rajeev ......சுவி ......வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

நிலா கோவிக்க கூடாது.நானும் வாசிச்சுப்போட்டேன்.இந்தக்கதையில்

எனக்கொரு ஆதங்கம்.எதைக்கேட்டாலும் கடவுள் தருவார் என்ற எண்ணம்

குழந்தைகளுக்கு கூடாது.உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

விளங்குது .........சஜீவன். எதைக் கேடாலும் தருவார்..............கடவுள் .

அது ஒரு சக்தி ...............மின் சக்தியாகவுமிருக்கலாம். :unsure:

Share this post


Link to post
Share on other sites