Jump to content

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை கைவிட்டது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை கைவிட்டது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

2009-12-11 05:47:52

வேட்பு மனுத் தாக்கலின் பின்னரே தேர்தல் நிலைப்பாடு முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், அத்தகைய நடவடிக்கை எதையும் முன்னெடுப்பதில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துவிட்டது. எனினும், நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து பின்னர் கூடி ஆராய்வது என்றும் அது தீர்மானித்துள்ளது.

ஆனாலும், எதிர்வரும் 17 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்க் கூட்டமைப்பின் முழுமையான நாடாளுமன்றக் குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கருதப்படுவதால், அதன் பின்னரே கூட்டமைப்பின் முடிவு தொடர்பான தீர்மானம் எட்டப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. எதிர்வரும் 17 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினம் என்பதால் அதற்கு முன்னர், பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய யோசனை குறித்துத் தீர்மானிக்கவேண்டும் எனக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்விடயத்தின் சாதக, பாதகங்களை ஆராய்ந்த கூட்டமைப்பு எம்.பிக்கள் பொதுத் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் திட்டத்தைக் கைவிடுவது என முடிவு செய்தனர். எனினும், இந்தத் தேர்தல் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்துத் தமிழ் மக்களுக்கு என்ன ஆலோசனை வழங்குவது என்பதைப் பின்னர் கூடி முடிவுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

இரு பிரதான வேட்பாளர்கள் சார்பிலும் முன்வைக்கப்படும் கருத்துகள், உறுதிமொழிகள் போன்றவற்றை உள்வாங்கி, அதன் பின்னர் அவர்களுள் ஒருவரை ஆதரிப்பது குறித்தோ அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பது குறித்தோ அல்லது பிரதான வேட்பாளர்கள் இருவர் தவிர்ந்த பிறிதொருவரை ஆதரிப்பது குறித்தோ முடிவு செய்யலாம் என்று கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதேசமயம், ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நடைபெறவிருக்கும் ஒரு கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காகத் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. போன்றோர் வார இறுதியில் அங்கு செல்லவிருப்பதால் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு வேட்புமனு தாக்கலாகும் தினத்துக்கு முன்னர் தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும இரு பிரதான வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசிநேரத்தில் தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மூலம்- உதயன்

பின் குறிப்பு: பொருத்தமான தலைப்பிட்டது தவறல்ல. ஆனால் மூலத்தின் தலைப்பை குறிடாதது தவறு தான். இணையவன் யாழ் இணையத்தின் கட்டுபாடுகளுக்கேற்ப தனது சேவையை செய்துள்ளமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் வெளிநாடு செல்லவிருப்பது உள்ளுர் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காகத்தான். அப்ப பாராளுமன்றத் தேர்தலிலும் ஒருதரும் நிற்காமல் சிங்களக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவளிப்பது நல்லது. மக்கள் முடிவைச் சரியானபடி எடுப்பார்கள்.அட சரியான முடிவைத்தான் எடுக்கவில்லை.தமிழரின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து ஆதரித்து வரும் விக்கிரபாகு கருணாரத்தினாவை எல்லா வேட்பாளரையும் சந்தித்தோம் என்று சொல்வதற்காகவாவது சந்திக்கவில்லையே?அது சரி வெல்லுற குதிரையில தானே அவை காசு கட்டுவினம்.தலைவர் இல்லை? என்று எல்லோருக்கும் குளிர் விட்டுப் போய்ச்;சுது.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.