Jump to content

20 விதவைப்பெண்களும் அவர்களது பிள்ளைகளுக்குமான உதவிகோரப்படுகிறது.


shanthy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இடைத்தங்கள் முகாமிலிருந்து கணவனை குடும்ப அங்கத்தவர்களை இழந்த 20 விதவைப்பெண்களுக்கான உதவிகள் கோரப்படுகின்றது. இப் பெண்களுக்கான மறுவாழ்வு சுயவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு உளவளநலக் கவனிப்பு போன்றவற்றுக்கான முதல்கட்டமான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

இப்பெண்களின் பிள்ளைகள் கைக்குழந்தைகள் முதல் 18வயதிற்குக் குறைந்தவர்கள். குறைந்தபட்சம் இவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உதவிகள் செய்யலாம். இத்திட்டத்தில் நேசக்கரங்கள் ஊடாக யேர்மன் நாட்டவர்கள் 5பேர் முன்வந்து பிள்ளைகளைப் பொறுப்பேற்றுள்ளார்கள். இவர்களது தொடர்பு நேரடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த யேர்மனியர்களில் ஒருவர் ஒரு நகரத்தின் நகரபிதாவும் அவரது துணைவியாரும் 2பிள்ளைகளைப் பொறுப்பெடுத்துள்ளனர். அப்பிள்ளைகளிற்கு உதவி தேவையான காலம் வரை அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இத்தகைய குடும்பங்களை யாராவது பொறுப்பேற்று உதவ விரும்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

நேசக்கரத்தின் இணைய முகவரி

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.