Jump to content

தினமும் கண்ணீரோடயே வீடு திரும்புகிறேன் உன் நினைவுகளை சுமந்தபடி

Recommended Posts

கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன்

என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல்

காலடிச்சத்தம் கேட்டது

இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது

இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம்

மெதுவாகக்கண் திறந்தேன்

ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம்

மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன்

என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள்

மறக்க முடியாத நாளும் கூட

கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன்

உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை

என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா

என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன்

கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன்

நான் திட்டியது அவன் காதில் கேட்டதோ தெரியவில்லை

நீயும் ஒரு முறையில்லைப்பல முறை என்னைத்திரும்பிப்பார்த்தாய்

நீ பார்த்த முதல்ப்பார்வையிலே நான் உன் வசம் ஆனேன்

ஆனாலும் என்ன பிரயோசனம்

உன்னைத்திரும்பப்பார்க்கும் சந்தர்ப்பத்திலாவது

என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று

உன்னைத்தேடிக்கோயிற்படி ஏறி வருகிறேன்

ஒவ்வொரு அந்தி மாலைப்பொழுதிலும்

என் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

நீ என் கண்ணில் படவே இல்லை

தினமும் கண்ணீரோடயே வீடு திரும்புகிறேன்

உன் நினைவுகளை சுமந்தபடி

இதில் பிழைகள் இருக்கலாம்...தவறுகள் இருந்தால் சுட்டி காட்டலாம்... சும்மா எழுதி பார்த்தேன்... கிண்டல் அடிக்காதிர்கள் யாரும் என்னை சொல்லிப்போட்டன் :):blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி கவிதை நன்றாக இருக்கிறது.

கிறுக்கல் மாதிரி தெரியலையே..நல்லா இருக்கு :)

முயற்சி திருவினையாக்கும்...கால் தேய்ந்தாலும் சீக்கிரமா கைகூட வாழ்த்துக்கள் :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி

காதல் மனதில் புகும் முதல் வாசல் பார்வை.... அந்த வாசல் வரை வந்தவனுக்காக வாசலைத்திறந்த வண்ணம் ஏங்கித்தவித்திருக்கும் ஓர் உள்ளத்தின் காதல் வலியாகவே உங்கள் வரிகள் சுஜி... அழகு...

Link to comment
Share on other sites

இது சுஜின் சொந்த அனுபவம் போலிருக்கிறது.

இருந்தாலும் கவிதை அருமையாக உள்ளது தொடர்ந்தும் எழுதுவதற்கு எனது வாழ்த்துக்கள்..

கோவிலில் கண்டவனை விரைவில் கை பிடிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

Link to comment
Share on other sites

ஜீவா மச்சான் இளங்கவி அண்ணா நூணா அண்ணா தினேஸ் அனைவருக்கும் என் நன்றிகள்...கருத்து சொன்னமைக்கு...

அட சும்மா எழுதி பார்த்தேன் இதுக்காக இப்படியா முடிவு கட்டுவிர்கள்... கர்ப்பனையில் எழுதி பார்த்தேன் அவ்வளவுதான்....

நூணா அண்ணா முயற்சி திருவினையாக்கும் என்று கவிதைத்தானே சொன்னிர்கள் எனக்கு சொல்லவில்லைத்தானே... :D :D

மச்சான் கடவுளின் தரிசனமே கிடைக்கவில்லை இதுலை காதலன் தரிசனம் வேண்டி கிடக்காக்கும் எனக்கு... ஐயோஓஓஒ கடவுளே :lol: :lol: :D

இளங்கவி அண்ணா சும்மா ஆவது கவிதை அழகு என்று போட்டதர்க்கு நன்றி :):D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை சுஜி...

இதைத் தான் சொல்கிறது ஏறி வந்த ஏணியவே உதைச்சு தள்ளுவது எண்டு.இல்ல..உங்களை யாழுக்கை கவிதையோடு தள்ளி விட்ட என்னையே மறந்துட்டயள் அது தான் சொல்கிறன்.நான் சும்மமா பகிடிக்கு சொல்கிறன் சுஜி.எனக்கு ஒண்டும் வேண்டாம்.உங்கள் ஆக்கம் தொடரட்டும்.அப்புறம் என் அறிவுக்கு எட்டியவரைக்கும் சின்ன..சின்ன எழுத்துப் பிளைகள் இருக்க காணப்படுவது போல் இருக்கிறது.அது ஒவ்வொருத்தர் வாசிக்கும் தன்மையைப் பொறுத்துக் காணப்படும்.எனக்கு பிளையாகப் படுவது சிலருக்கு சரியாகப் படும். :D

அப்புறம் ஜீவா மச்சான் இளங்கவி அண்ணா நூணா அண்ணா தினேஸ் அனைவருக்கும் நன்றி. இவர்கள் எல்லோரும் ஒருவரா? :)

இல்லையே..ஜீவா,இளங்கவி,மச்சான்,நுணா அண்ணா,தினேஸ் என்று வரவேண்டும்.என் சிற்றறிவுக்கு எட்டியவரைகும் இப்படி எழுதுவது சரி எண்டு நினைக்கிறன் சுஜி.இல்லை எண்டால் என் கருத்தை படிப்பவர்கள் திருத்தட்டும்.

இல்லை....யாரும் என்னைப் பார்த்துக் கோவிச்சுடாதீங்கோ சுஜிக்காவது ஆசிரியையாக இருந்து பார்ப்போம் எண்டு தான் இந்த சின்ன..சின்ன திருத்தங்களை கண்டு பிடிச்சுக் கொண்டு வந்தன்.இன்னமும் நிறைய திருத்தக் கிடக்கு.எல்லாத்தையும் சொன்னால் பாவம் சுஜி பயந்துடும்.அப்புறம் முயற்சி திருவினை ஆக்கும்.தொடருங்கள்.சுஜி போட்டு வாறன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி நல்லகவிதை.

ஆனால் ஐயர்தான் பாவம் :)

Link to comment
Share on other sites

பிள்ளை சுஜி...

இதைத் தான் சொல்கிறது ஏறி வந்த ஏணியவே உதைச்சு தள்ளுவது எண்டு.இல்ல..உங்களை யாழுக்கை கவிதையோடு தள்ளி விட்ட என்னையே மறந்துட்டயள் அது தான் சொல்கிறன்.நான் சும்மமா பகிடிக்கு சொல்கிறன் சுஜி.எனக்கு ஒண்டும் வேண்டாம்.உங்கள் ஆக்கம் தொடரட்டும்.அப்புறம் என் அறிவுக்கு எட்டியவரைக்கும் சின்ன..சின்ன எழுத்துப் பிளைகள் இருக்க காணப்படுவது போல் இருக்கிறது.அது ஒவ்வொருத்தர் வாசிக்கும் தன்மையைப் பொறுத்துக் காணப்படும்.எனக்கு பிளையாகப் படுவது சிலருக்கு சரியாகப் படும். :lol:

அப்புறம் ஜீவா மச்சான் இளங்கவி அண்ணா நூணா அண்ணா தினேஸ் அனைவருக்கும் நன்றி. இவர்கள் எல்லோரும் ஒருவரா? :o

இல்லையே..ஜீவா,இளங்கவி,மச்சான்,நுணா அண்ணா,தினேஸ் என்று வரவேண்டும்.என் சிற்றறிவுக்கு எட்டியவரைகும் இப்படி எழுதுவது சரி எண்டு நினைக்கிறன் சுஜி.இல்லை எண்டால் என் கருத்தை படிப்பவர்கள் திருத்தட்டும்.

இல்லை....யாரும் என்னைப் பார்த்துக் கோவிச்சுடாதீங்கோ சுஜிக்காவது ஆசிரியையாக இருந்து பார்ப்போம் எண்டு தான் இந்த சின்ன..சின்ன திருத்தங்களை கண்டு பிடிச்சுக் கொண்டு வந்தன்.இன்னமும் நிறைய திருத்தக் கிடக்கு.எல்லாத்தையும் சொன்னால் பாவம் சுஜி பயந்துடும்.அப்புறம் முயற்சி திருவினை ஆக்கும்.தொடருங்கள்.சுஜி போட்டு வாறன். :lol:

கி கி கி யாயினி சிஸ்ரர் நன்றி.... சிஸ்ரர் என்ன சின்ன பிழைதானே விட்டதுக்கு இவ்வளவு பெரிய கொமென்ஸா ஐயோஓஓஓஓ முடியல்லை... கவிதை கொண்டு போய் யாழ்ழை இணைக்க சொல்லிவிட்டு இங்க வந்து திருத்துறிங்களா... அங்கே வாங்கோ தல்லாம். :lol: :lol: ... நான் சும்மா யாயினி நன்றி உங்களால்தான் இதில் இணைக்கவேண்டி வந்தது....சரி சரி திரும்ப கவிதை எழுதி இணைத்தால் நீங்கள் சொன்ன திருத்த்தங்களை பண்ணுகிறேன்

தங்கச்சி நல்லகவிதை.

ஆனால் ஐயர்தான் பாவம் :D

நன்றி குமாரசாமி அண்ணா.....ஏன் ஜய்யர் பாவம் எனக்கு ஒன்றும் புரியவில்லையே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி நல்லகவிதை.

ஆனால் ஐயர்தான் பாவம் :o

ஏன் இவவுக்கு முன்னுக்கு வந்து நிண்ட அந்தப் பாவப்பட்ட சீவன் அய்யரா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன்

என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல்

காலடிச்சத்தம் கேட்டது

இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது

இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம்

மெதுவாகக்கண் திறந்தேன்

ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம்

மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன்

என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள்

மறக்க முடியாத நாளும் கூட

கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன்

உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை

என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா

என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன்

கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன்

நான் திட்டியது அவன் காதில் கேட்டதோ தெரியவில்லை

நீயும் ஒரு முறையில்லைப்பல முறை என்னைத்திரும்பிப்பார்த்தாய்

நீ பார்த்த முதல்ப்பார்வையிலே நான் உன் வசம் ஆனேன்

ஆனாலும் என்ன பிரயோசனம்

உன்னைத்திரும்பப்பார்க்கும் சந்தர்ப்பத்திலாவது

என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று

உன்னைத்தேடிக்கோயிற்படி ஏறி வருகிறேன்

ஒவ்வொரு அந்தி மாலைப்பொழுதிலும்

என் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

நீ என் கண்ணில் படவே இல்லை

தினமும் கண்ணீரோடயே வீடு திரும்புகிறேன்

உன் நினைவுகளை சுமந்தபடி

இதில் பிழைகள் இருக்கலாம்...தவறுகள் இருந்தால் சுட்டி காட்டலாம்... சும்மா எழுதி பார்த்தேன்... கிண்டல் அடிக்காதிர்கள் யாரும் என்னை சொல்லிப்போட்டன் :lol: :lol:

கவலைப்படாதீங்க வந்துட்டனில்ல. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தில் பெண்கள் எழுதும் கவிதைக்கு அதிக மவுசான் கிடைக்கிறது :lol:

கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன்

என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல்

காலடிச்சத்தம் கேட்டது

இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது

அன்ன நடை பழகும் ஓர் அழகிய பாவை

மெதுவாகக்கண் திறந்தேன்

ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம்

மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன்

அவள் இடையோ என்னை வளைத்தது இழுத்து சென்றது :unsure:

மறக்க முடியாத நாளும் கூட.......

கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன்

உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை

என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா

என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன்

கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன்

நான் திட்டியது அவள் காதில் கேட்டதோ தெரியவில்லை

நீயும் ஒரு முறையில்லைப்பல முறை என்னைத்திரும்பிப்பார்த்தாய்

நீ பார்த்த முதல்ப்பார்வையிலே நான் உன் வசம் ஆனேன்

ஆனாலும் என்ன பிரயோசனம்

உன்னைத்திரும்பப்பார்க்கும் சந்தர்ப்பத்திலாவது

என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று

உன்னைத்தேடிக்கோயிற்படி ஏறி வருகிறேன்

ஒவ்வொரு அந்தி மாலைப்பொழுதிலும்

என் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

நீ என் கண்ணில் படவே இல்லை

தினமும் கண்ணீரோடேயே வீடு திரும்புகிறேன்

உன் நினைவுகளை சுமந்தபடி

அவள் நினைவில் தொலைந்து போனேன் வந்தாள் ஒரு வெள்ளி

அன்று முதல் வெள்ளி சனியாகிது சனியாகியது[அவள் குழந்தையுடன்] :lol::(:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ.... என்ட அய்யோ.... ஆர் 'தினமும் கண்ணீரோட வீடு திரும்புறது' எண்டு எனக்கு விளங்குதிலையே...!

:unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன்

என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல்

காலடிச்சத்தம் கேட்டது

இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது

இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம்

மெதுவாகக்கண் திறந்தேன்

ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம்

மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன்

என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள்

மறக்க முடியாத நாளும் கூட

கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன்

உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை

என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா

என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன்

கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன்

நான் திட்டியது அவன் காதில் கேட்டதோ தெரியவில்லை

நீயும் ஒரு முறையில்லைப்பல முறை என்னைத்திரும்பிப்பார்த்தாய்

நீ பார்த்த முதல்ப்பார்வையிலே நான் உன் வசம் ஆனேன்

ஆனாலும் என்ன பிரயோசனம்

உன்னைத்திரும்பப்பார்க்கும் சந்தர்ப்பத்திலாவது

என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று

உன்னைத்தேடிக்கோயிற்படி ஏறி வருகிறேன்

ஒவ்வொரு அந்தி மாலைப்பொழுதிலும்

என் கால்கள் தேய்ந்ததுதான் மிச்சம்

நீ என் கண்ணில் படவே இல்லை

தினமும் கண்ணீரோடயே வீடு திரும்புகிறேன்

உன் நினைவுகளை சுமந்தபடி

இதில் பிழைகள் இருக்கலாம்...தவறுகள் இருந்தால் சுட்டி காட்டலாம்... சும்மா எழுதி பார்த்தேன்... கிண்டல் அடிக்காதிர்கள் யாரும் என்னை சொல்லிப்போட்டன் :unsure::lol:

சரி சுஜியை இப்படி ரொம்ப கலாய்க்காதீர்கள்.

சுஜி இது கற்பனையில் எழுந்த கவிதையாக இருந்தால் தொடர்ந்து எழுதி முன்னேற வாழ்த்துக்கள். மற்றப்படி கைசேர வாழ்த்துக்கள் என்று என்னால் சொல்ல முடியாது ஏனென்றால் இந்தக் கவிதை பெண்ணின் பார்வையாக இருந்தால் ஆணுக்கும் ஒரு பக்கம் இருக்குமல்லவா... ஆணின் மனமும் இதே போன்ற தேடலில் திளைத்திருந்தால் இரு மனம் இணையும் சாத்தியம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று

உன்னைத்தேடிக்கோயிற்படி ஏறி வருகிறேன்.......

...காதலை யாசிக்கும்,அழகான, உணர்வுகளை வெளிபடுத்தும் வரிகள்.

நிறைவேற வாழ்த்துக்கள்.

நன்றி சாகாரா அக்கா உங்கள் கருத்துக்கு....உண்மைதான் ஆணுக்கு ஒரு பக்கம் இருக்குதானே

என் காதலை உன்னிடம் சொல்லலாம் என்று

உன்னைத்தேடிக்கோயிற்படி ஏறி வருகிறேன்.......

...காதலை யாசிக்கும்,அழகான, உணர்வுகளை வெளிபடுத்தும் வரிகள்.

நிறைவேற வாழ்த்துக்கள்.

நிறைவேற வாழ்த்துக்களா??????? ஐயோஓஓஓஓஒ கடவுளேஏஏஏஏஎ.... நன்றி நிலாமதி அக்கா உங்கள் கருத்துக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பாக் விளங்காதீர்கள் சுஜி.........கவி வரி எழுதியவருடைய .....காதல் நிறைவேற வாழ்த்துக்கள். ..

Link to comment
Share on other sites

தப்பாக் விளங்காதீர்கள் சுஜி.........கவி வரி எழுதியவருடைய .....காதல் நிறைவேற வாழ்த்துக்கள். ..

ஒ நோ அக்கா தப்பாக விளங்கவில்லை... காதல் இருந்தால்தானே நிறைவேறுவது சும்மா கர்ப்பனையில் எழுதியவை அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் காதலும்

தொட்டால் விடாது

கடவுளும் காதலும்

கண்ணைக்குருடாக்கும்

கோயிலடிக்காதல் எல்லோருக்கும்வருவது

குடும்பக்கோவிலுக்கு

வழி சமைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.