Jump to content

Sex Un-Sells: No blood for Panties


Recommended Posts

புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தை முன்னெடுக்கும் அமெரிக்கா வாழ் தமிழ் இளைஞர்கள் - அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் காணொலித் தொடரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் முதற்கட்டமாக - கற்பனை வளத்தோடும், புதிய எண்ணத்தோடும் - உருவாக்கப்பட்ட அந்தக் காணொலியை கீழே நீங்கள் காணலாம். No blood for Panties என்ற தலைப்பில் செய்யப்பட்ட இந்தக் காணொலி வெளியீட்டைப் பற்றிக் - புறக்கணி சிறிலங்கா செயற்திட்டத்தின் பிரதிநிதியான அஞ்சலி மணிவண்ணன் குறிப்பிடும்போது - இந்தக் காணொலித் தொடர் தாம் வாங்கும் பொருட்களின் பின்னணி பற்றி அக்கறையற்றிருக்கும் அமெரிக்கர்களை தாம் சென்றடைவதற்கு துணைபுரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி:

Check the Label: Boycott Sri Lanka

Sex Un-Sells: "No blood for Panties" video urges boycott of products made in Sri Lanka

Washington, D.C., January 4, 2010 – Boycott Sri Lanka released a shockingly innovative No Blood For Panties video series today. No Blood For Panties is part of a campaign to boycott products made in Sri Lanka in an effort to end the suffering of Sri Lanka's Tamils.

“Boycott Sri Lanka is very excited about its release of No Blood For Panties,” says Boycott Sri Lanka representative Anjali Manivannan. “This video series allows us to reach Americans who might otherwise be unaware of the repercussions of their consumer habits. Sri Lanka uses tax revenue from its textile industry to oppress Tamil civilians and detain them in IDP internment camps. No Blood For Panties sends the powerful message that buying 'Made in Sri Lanka' items and supporting state-sponsored human rights violations is unsexy. It sends the message that consumer conscience is true sexiness.”

The video series follows a couple who experience problems after the man is repelled by the “Made in Sri Lanka” label on the woman's underwear.

“The narrative of No Blood For Panties portrays how events in the far corners of the world impact our very personal lives,” said Michael O'Rourke of Dimension7, who directed the series. “This video series turns the popular axiom of 'sex sells' on its head by using the same approach to actually promote activism.” O'Rourke notes that Sri Lanka is one of the largest producers of lingerie to major brands, including Victoria's Secret.

Sri Lanka relies heavily on its textile exports to the U.S., UK, and India. The taxes paid by textile manufacturers in Sri Lanka are used to fund government operations including post-conflict militarization and the systematic colonization of traditional Tamil lands. Due to Sri Lankan government-imposed media restrictions, many Americans are unable to grasp the gravity of the Tamil people's plight in Sri Lanka.

About Boycott Sri Lanka & About Sri Lanka

Boycott Sri Lanka is a human rights group composed of American citizens and international members concerned about the crisis in Sri Lanka. It was formed in 2009 to encourage Americans to promote a sustainable solution to Sri Lanka’s conflict. Sri Lanka has experienced a brutal ethnic conflict between the Sinhalese-dominated government and the Tamil population, who have been discriminated against since Sri Lanka’s independence. Over 125,000 lives have been lost in the conflict

மூலம்: http://transcurrents.com/tc/2010/01/sex_unsells_no_blood_for_panti.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ இது "same side goal" ஆக போகும் போலதான் இருக்குது. தவறான பின்னுட்டல் என்றால் பிரசுரிக்க/ அனுமதிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காணொலி பலருக்கு மூக்கை சுளிக்க வைக்கும்.

இப்படியான விடயங்களில் திறைமையுள்ளவர்கள்..

சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள் நிறைய சிறிலங்காவிலிருந்து வருகின்றன.

அவற்றை வைத்து நிறைய விடயங்கள் செய்யலாமே.

அது சிலவேளைகளில் முக்கியகவனத்தை ஈர்க்கலாம்?

Link to comment
Share on other sites

தயாரித்தவர்களின் மனநிலையை இந்த விளம்பரம் நன்கு காட்டி நிற்கிறது.

தமிழர்களின் சாபக்கேடுகளில் ஒன்று, கடந்த 10 - 15 வருடங்களாக போதையில் மிதக்கும், சபலம் நிறைந்த கீழ் தரமானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா உலகத்தால் வெளியிடப்படும் கீழ்த்தரமான தமிழ் படங்களும், தொலைக்காட்சி தொடர்களும், சபலப் பாடல்களும் தான். இவற்றை தொடர்ந்து பார்பவரின் மனநிலை பலவீனப்பட்டுவிடும் என்பது சிறிதளவு மனோதத்துவம் தெரிந்தவர்களுக்குக் கூட நன்கு விளங்கும்.

இந்த பின்னணியில் மேற்படி விளம்பரத்துக்கு பலவீனமான மனமுடையவர்களின் முன்னுரிமையும் ஆதரவும் ஆச்சரியத்தை தராது.

இலங்கையில் சக்தி தொலைகாட்சி மற்றும் சகல எப். எம். அலைவரிசைகளின் உதவியுடன் பல மலையாக, கொழும்புத் தமிழ் இளைஞர்கள் மற்றும் வீடுத் தாய்மார்கள் பலவீனமாகி வருவது தமிழ் இனத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட பலரைக் கவலையடைய வைத்துள்ளது.

தற்போது யாழ் இளைஞர்களும் மிகவேகாமாக இந்த நோய்க்கு ஆட்பட்டு வருகிறார்கள். அங்கு போய்வருபவர்கள் கவலையுடன் கூறும் செய்தி இளைஞர்களின் "கலாசார சீரழிவு" பற்றியதாகவே உள்ளது. இது தமிழரின் பயந்த சுபாவத்துக்கும், கோளைத்தனத்துக்கும், அடிமை மனோபாவத்துக்கும் வழி வகுத்துவிடும். நீதிக்கும் நியாயத்துக்கும் குரல் கொடுக்கும், போராடும் தன்மையை அழித்துவிடும்.

சம்பத்தப்பட்டவர்கள் சற்று சிந்தித்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழரின் பயந்த சுபாவத்துக்கும்இ கோளைத்தனத்துக்கும்இ அடிமை மனோபாவத்துக்கும் வழி வகுத்துவிடும். நீதிக்கும் நியாயத்துக்கும் குரல் கொடுக்கும்இ போராடும் தன்மையை அழித்துவிடும்

சம்பத்தப்பட்டவர்கள் சற்று சிந்தித்தால் நல்லது.

உண்மைதான்

எதற்கோ வழியை மறிக்க தொடங்கப்பட்டு

எதற்கோ வழி சமைப்பதாக முடிந்துவிடும்

அதேநேரம்

இப்படித்தான் தமிழர்களால் சிந்திக்கமுடியும் என்றும் பார்ப்பதாகிவிடும்

Link to comment
Share on other sites

உள்ளுடுப்புக்கு தடை போடுவதை விட

உள்ளே பார்க்க வைக்கிறது விளம்பரம்.

சிறீலங்காவை எதிர்ப்பதாக

சிகப்பு விளக்கு பகுதிக்கல்லவா வழி காட்டுகிறது.

கவனம்.

கண்ணாடி அழகுதான்

அது குருடர்களுக்கு தேவை.

கண் பார்வை உள்ளவர்களுக்கு அல்ல.

இதென்னவோ பலரை குருடர்களாக்கலாம்.

Link to comment
Share on other sites

லேபில் வடிவா தெரியேல ஒருக்கா இஞ்சாலபக்கமும் திருப்பினால் வடிவா தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை பத்திரிகையா எழுதியும், கூட்டமும் போட்டுச் சொல்லியும், பல பத்திகளில் ஏலுமான அளவுக்கு ரோசம் வரும்வரை குறிப்பிட்டும், சிங்கள அரசால் பல்லாயிரம் பேரை இழந்த மானம் கெட்ட புலம் பெயர் தமிழ் சனமான நாமே இன்னும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க காணோம்...அதற்குள் கிரியேட்டிவாக சிந்தித்து முகத்தில் அடித்தால் போல் மேற்கத்தையருக்காக [ தயாரித்த பிரச்சார ஒளிப்படத்தில் ஆயிரம் கலாச்சார குத்தம் காணுகினமாம்.... இதில் குற்றம் சொன்ன எத்தனை பேரின் குசினிக்குள் இலங்கைப் பொருட்கள் இருக்கின்றன என மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்

இந்த பிரச்சார ஒளிப்படம் மேற்கத்தையருக்காக தயாரிக்கப்பட்டது... எத்தனை பேர் இதனை உங்களுடன் வேலை புரியும் சக மேற்கத்தையவருக்கு forward பண்ணியுள்ளீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்....? சரி, இதில் குத்தம் இருந்தால், உங்களின் தனிப்பட்ட முயற்சியால் எத்தனை மேற்கத்தையரை/ புலம் பெயர் ரமில்ஸை இலங்கைப் பொருட்களை வாங்காமல் பண்ணியிருக்கின்றீகள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்படியான பிரச்சாரம் எந்தளவுக்கு எடுபடும் என்பதற்கு அண்மையில் கனடாவில் Ashley Madison என்ற இணையத்தளம் செய்த விளம்பர உத்தியே சாட்சி

Link to comment
Share on other sites

பத்திரிகை பத்திரிகையா எழுதியும், கூட்டமும் போட்டுச் சொல்லியும், பல பத்திகளில் ஏலுமான அளவுக்கு ரோசம் வரும்வரை குறிப்பிட்டும், சிங்கள அரசால் பல்லாயிரம் பேரை இழந்த மானம் கெட்ட புலம் பெயர் தமிழ் சனமான நாமே இன்னும் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க காணோம்...அதற்குள் கிரியேட்டிவாக சிந்தித்து முகத்தில் அடித்தால் போல் மேற்கத்தையருக்காக [ தயாரித்த பிரச்சார ஒளிப்படத்தில் ஆயிரம் கலாச்சார குத்தம் காணுகினமாம்.... இதில் குற்றம் சொன்ன எத்தனை பேரின் குசினிக்குள் இலங்கைப் பொருட்கள் இருக்கின்றன என மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்

இந்த பிரச்சார ஒளிப்படம் மேற்கத்தையருக்காக தயாரிக்கப்பட்டது... எத்தனை பேர் இதனை உங்களுடன் வேலை புரியும் சக மேற்கத்தையவருக்கு forward பண்ணியுள்ளீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்....? சரி, இதில் குத்தம் இருந்தால், உங்களின் தனிப்பட்ட முயற்சியால் எத்தனை மேற்கத்தையரை/ புலம் பெயர் ரமில்ஸை இலங்கைப் பொருட்களை வாங்காமல் பண்ணியிருக்கின்றீகள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்படியான பிரச்சாரம் எந்தளவுக்கு எடுபடும் என்பதற்கு அண்மையில் கனடாவில் Ashley Madison என்ற இணையத்தளம் செய்த விளம்பர உத்தியே சாட்சி

என்ன செய்ய சிறீலங்கா அரசு தந்த பிறப்பு அத்தாட்சிப் பத்திரமும், அடையாள அட்டையும் , அதற்கு மேலும் உள்ள ....... பல அடிப்படைகளை தூக்கி எறிய முடியவில்லை.

விபசாரத்தை எதிர்பதற்காக , சிகப்பு விளக்கு பகுதியில் தொழில் தொடங்கியது போலுள்ளது இந்த விளம்பரப் படம்.

எம் தமிழரை வைத்தே அதை நடிக்க வைத்திருந்தால், நல்லா இருந்திருக்கும். நம்பவும் முடிந்திருக்கும்.

ஜட்டிக்குள் எமது எதிர்ப்பு , சுருங்கி விட்டது மற்றுமொரு சோகம்.

என்ன செய்ய நமது நாகரீகம் - கலாச்சாரம் எல்லாம் கொக்கோ முனிவர் கையில் இருந்து நம் புலத்தவர் கையில் சிக்கி விட்டது.

இனி பாலான படங்களையாவது நம்மவர் உருவாக்குவார்கள் என நம்பலாம்.

நானாக இருந்தால்

இவ்வளவு அழகான பெண்ணை மறந்து , ஜட்டிக்காக எனது வேலையை தொடராமல் இருந்திருக்க மாட்டேன்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நல்ல வைத்தியர் உதவி தேவைப்படும்.

வயகரா உதவி செய்யும்.

இது நல்லாயிருக்கு:

http://www.break.com/index/petas-banned-2009-superbowl-ad2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

இப்படியான விளம்பரங்கள் தான் விளம்பர நோக்கில் அநேகம் பார்வையாளர்களைப் போய் சேரவல்லது. தகவல்களையும் காவிச் செல்லத்தக்கது.

இங்கு சிலர் இதைக் கண்டு முகஞ்சுழிப்பதும்.. கலாசாரா சீர்கேடு என்பதும்.. சிவப்பு விளக்குக்கு வழிகாட்டுது என்பதும் அடிப்படை விளக்கமற்ற கருத்துக்கள் என்றே நினைக்கிறேன்.

எம்மவர்கள் செக்ஸ் என்றால் ஏதோ ரகசியமாக செய்யப்படும் விடயம் என்ற ஒன்றை புகுத்த நினைக்கின்றனர். ஆனால் அது ஒன்றும் அப்படிப்பட்ட விடயம் அல்ல..! செக்ஸ் வெளிப்படையாக இருந்தால்.. கள்ளக்காதல்.. ஒட்டம்.. சிவப்பு விளக்குக்கு களவாப்போதல்.. பத்தைக்குள்ள படுத்திருந்தல்.. இப்படி இன்னோரென்ன எம்மவரின் ரகசியங்கள்.. பரகசியங்களாகவே இருந்துவிடும்.

நான் என் கண் முன்னால் கண்டிருக்கிறேன்.. எவன் / எவள் எல்லாம் பத்தன்.. பத்தினி வேசம் போட்டானோ.. ளோ.. அவன்/ அவள் எல்லாம் பலரை ஏமாற்றி ஏமாற்றி பல தொடர்புகளைப் பேணி மிருக வாழ்கையிலும் கேடான வாழ்கையை வாழ்ந்து வருவதை..! இப்படியான மிருகங்களை விடக் கீழான நடத்தையுள்ள பத்தினிகளை உருவாக்கிய எமது சமுதாயம்.. இதை சகிக்க முடியாதாமோ.

போர்த்துக் கொண்டு திருபவள் எல்லாம் பத்தினி கிடையாது. அதிலும் வெளிப்படையாக இருப்பவள் நடப்பவள் எவ்வளவோ மேல்..! இனங்காணவும் விலகி நடக்கவும் இன்றேல் நெருங்கிப் போகவும் இலகுவாக இருக்கும்..!

எம்மவர்கள் நிறைய விடயங்களை இன்னும் நாலு சுவர்த்துக்க வைச்சு அமுக்கமா பண்ணனும் என்று நினைக்கினம் போல. அதுதான் உலகிலேயே எயிட்ஸ் அதிகம் பரவும் இடமாக கலாசாரத்தின் சிகரம் இந்தியா விளங்குகிறது. இந்த நிலை எம்மவருக்கு வேண்டாம்.

இந்த விளம்பரம் காத்திரமான ஒன்று என்றே கொள்ள வேண்டும். நல்ல ஒரு விளம்பர யுக்தி..! :D

Link to comment
Share on other sites

இந்த முயற்ச்சி சிறிலங்காவிற்க்கு கவலையை ஏற்படுத்தி உள்ளத்தை இந்தச் ச்ய்தி உறுதிப்படுதுகிறது.இந்த விளம்பர யுக்டி வெற்றி பெற்றிருப்பதயே இது காட்டுகிறது. நான் அறிந்தவரை இது அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோரால் வடிவமைத்து பணம் செலவழித்து வெளியிடப்பட்டுள்ளது.குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட்டு விட்டு இவ்வாறான் முயற்ச்சிகளுக்கு எமது ஆதரவை வழங்குவோம்.அத்தோடு இந்தப் பதிவையும் பார்க்கவும்.தற்போதைய யாழ்ப்பாணம் எங்கே நிற்க்கிறது என்பதை அறிய. நெடுக்காலபோவான் எழுதியதைப் போல் வெளிப்படையாகாப் பேசி வளர்க்கப்படும் பிள்ளைகள் மிகத் தெளிவாக இருகிறார்கள்.ஆனால் வெளிப்படையான பேச்சு அற்ற யாழ் சமூகம் மிகவும் சீரழிவான நிலையை அடைந்து மிக விகாரமான் பாலியற் சீரழிவுகளுக்கு உள்ளாக்கப்படுள்ளது.

Concern over Boycott Lanka move in West

By Leon Berenger

The United States yesterday distanced itself from a well-organized campaign there against the purchase of Sri Lankan manufactured garments.“We have seen reports of the boycott. Private citizens have organized the action and it is not backed by the U.S. Government. In the United States, citizens have the right to organise such campaigns and to decide what they buy,” U.S. Ambassador Patricia. Butenis said.

She was responding to the ‘No-Blood-For-Panties’ video campaign released in the U.S. this week by a group calling itself ‘Boycott Sri Lanka’ to protest over the alleged oppression of the minority Tamils and their continued internment in welfare centres.

U.S. Ambassador Patricia. Butenis

The campaigners have charged that taxes paid by textile manufacturers in Sri Lanka were being used to fund government operations including post-conflict militarization and the systematic colonization of traditional Tamil lands.

Sri Lanka is one of the largest exporters of lingerie to major brands in the U.S., Britain and India. Anjali Manivannan from Boycott Sri Lanka said:

“This video series allows us to reach customers who might otherwise be unaware of the repercussions of their consumer habits.”

The campaigners have also staged protests outside malls in the U.S., Britain and other European countries calling on shoppers to boycott Sri Lankan products.

Local apparel industry official A. Sukumaran said they were watching the situation closely and hoped the Government would act effectively.

“This is a political issue and it should be handled at Government level,” he said.

http://www.sundaytimes.lk/100110/News/nws_05.html

யாழ்-கலாச்சாரம்-பதின்மவயது- பாடசாலைக்காலம் 6-11

இந்த 11-16 வயசிலதான் பையன்களுக்கு ஒரு விலங்கமான விடயத்துக்கு அறிமுகம் கிடைக்குது.. அதாங்க கசமுசா பற்றிய ஒரு மாயப்படிவம்..

ஆம்பிளைக்கும் பொம்பிளைக்கும் உடல் ரீதியாகவே வித்தியாசம் தெரியாமல இருந்த கணத்தில் சடாரென்று பலப்பல விடயங்கள் அறிமுகப்படுத்தி “டேய்! இப்பிடித்தாண்டா நீ பிறந்தே” எண்டு சொல்லப்படும்போது ஏற்படும் ஒரு அதிர்ச்சி இருக்கிறதே .. அது முன்னால் இருக்கும் பல பாதைகளில் வாழ்க்கைக்கான சரியான பாதையை குழப்பமாக காட்ட முயல்கிறது..

கூட இருக்கிற , தெரிந்த கலியாணம் கட்டின பெரியாக்களை எல்லாம் பாத்து ”அட நாசமாப்போனவங்களே நீங்களுமா? நாதாரிகளே ! வெளில இன்னா ஸ்டைல் பண்றீங்க இப்பிடியா நீஙகல்லாம் ! உவ்வேக் !” எண்டு முதலில அருவருப்படைந்து .....

பிறகு அது ”உண்மையா பொய்யா? இப்பிடித்தான் நடக்குமா? ஆதாரம் இருக்கா ? டெஸ்ட் டியுப் உடைஞ்சு பாம்படி ஸ்கூல் பிள்ளை செத்ததா? பாலியல் வல்லுறவுன்னா? ” இப்பிடில்லாம் ஆராய வெளிக்கிட்டு ....

அதனுடைய தார்ப்பரியம் தெரிவதற்காக பெரிய குழப்படி அண்ணாப்பெடியன்களுடன் சேர்ந்து ....

அவர்களுடன் நட்பை தொடர்வதற்காக சிகரட் குடி நீலப்படம் என்று போய்....

அப்புறம் அப்பிடி வெளிக்கிட்டதில பாதி நாசமாப்போய் மிச்சம் ஓல் பாஸ் பண்ணிட்டு ஏல் போகும்;..

இதுதான் யாழில் வழமை.. நடைமுறை..

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு..

இதையெல்லாத்தையும் சரியாக புரிய வைத்தது எங்கள் ஹெல்த் சயன்ஸ் சேர்.. பெயர் ரோனிகணேசன்.. அந்த வயதில பலருக்கு புரியாத கணத்தில பலகுழப்பங்கள் இருந்தநேரத்தில சும்மா ஒரு வகுப்பில மளமளவெண்டு சொல்லி , 11 ஆம் ஆண்டு சயன்ஸ் புத்தகத்தை ஒரு பையனை விட்டு எடுப்பிச்சு எடுத்து வாசிக்க சொல்லி விட்டார்.. ஆரம்பத்தில அதிர்சியா இருந்தாலும் அது ஒரு பாதுகாப்பான அறிமுகமாகவே நான் தற்போது நினைக்கிறேன்.. எதெது செய்யக்கூடாது , ஏன் அப்பிடி , பின்விளைவுகள் என்ன என்பது குறித்த பல விடயங்களை அவர் அன்று தெளிவு படுத்தியது எம்மில பலரை காப்பாற்றியிருக்கலாம்..

அடுத்தநாள் வாழ்ககையே ஒரே குழப்பமாக இருந்தவேளை அசெம்பிளியில் எமது கட்டைத் தமிழ் வாத்தியாருக்கு ஆண்குழந்தை கிடைத்ததாக அதிபர் அறிவித்தார்.. அவரும் ஏதோ பெரிய சாதனை செய்து விட்டதை போல எழும்பி நிற்க எல்லாரும் கைதட்டினார்கள்.. நானோ அவரை வைத்து எதையோ விலங்கமாக கற்பனை செய்து விட்டு சிரிப்பை கஷ்டப்பட்டு மண்டபத்துக்கு வெளியில் பார்த்தவாறு அடக்கிக்கொண்டிருந்தேன்.. ஆனால் என்னுடைய போதாத காலத்திற்கு வெளியில் ஒரு குட்டைச் சேவல் ஒரு கோழியை கெக்கக்கபெக்கக்க என்று கத்தியவாறு துரத்த ஆரம்பித்தது..

அன்று அசெம்பிளி முடிந்தபின் விழுந்த நாலாவது அறையில் ,

சிரித்ததற்கான காரணத்தை அழுதுகொண்டு சொன்னபோது ,

அந்த பிரிபெக்ட் அண்ணைமார் சிரிக்க ஆரம்பித்தார்கள்..

ஆனாலும் வயசு விடவில்லை.. அதைத்தொடர்ந்தும் இரண்டாம் கட்ட ஆபத்தை நோக்கி என் நண்பர்கள் சிலருடன் போனேன்..

அதுதான் “அது” குறித்து பெரிய அண்ணாமாரிடம் ஏதாவது கேட்பது..

அந்த காலத்தில் நீலப்படங்கள் பெரிதாக இரந்ததாக தெரியாது.. ஆனால் ஏதோ புத்தகங்கள் வருவது வழக்கம்.. அதில் ஒன்றை வாங்குவதாகத்தான் பிளான்..

ஆனால் அந்த அண்ணாமார் கடுமையாக எச்சரித்து துரத்திவிட்டனர்.. ஆனாலும் ஒருவர் கூப்பிட்டு “டேய் இவங்கள் தரமாட்டாங்கள் நீங்கள் நல்லூர் லைப்ரரியில நல்ல இங்கிலிஸ் புத்தகங்கள் கிடக்கும் ... சுப்பர் படங்கள் போட்டிருப்பாங்கள் பாருங்கடா “ எனச் சொல்லி ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையும் எழுதி தேடச்சொல்லி தந்தனுப்பினார்..

பெரிய மகிழ்ச்சியோட அவற்ற காலில விழுந்து கும்பிடாத குறையா திரும்பி வந்து நல்லூர் லைப்ரரி பளானுக்கு ஸ்கெட்ச் போட்டம்..

லைப்ரரிய சனிக்கிழமை தாக்குறது .. வெள்ளை அன்ரி (நாங்கள் சிறுவர் பகுதில தொடர் வாசகர்கள் … மிருகங்களின்ட படங்கள் பாக்கிறதுக்காக எங்களுக்கு பெரியார் பகுதியில ஸ்பெசல் அனுமதி உண்டு .. அதன் பதிவாளர்தான் வெள்ளை அன்ரி) டீ குடிக்கபோற நேரம் பாத்து சட்டென்று ஒராள் வாசலில காவலுக்கு நிக்க மிச்ச மூண்டு பேர் டக்கெண்டு 4 புத்தகத்தை எடுத்துட்டுபோய் நம்ம பிளேசில போய் இருக்கிறது..

ப்ளான் படி களத்தில இறங்கியாச்சு.. நாலுமணிக்கு அன்ரியும் டீ குடிககப்போட்டா.. மளமளவெண்டு ஒருத்தன காவலுக்கு போட்டுட்டு ஒற்றையில குறிப்பிட்டதன் படி மெடிசின் பக்கம் போயாச்சு .. ஒருத்தன் ஸ்ரூல வச்சு ஏற நான் கீழ நிண்டு எடுக்க வேண்டிய புத்தகத்திண்ட ஸ்பெலிங்க சொல்லுறன்..

டேய் G இல தொடங்குதுடா.. அந்த அங்கால இருக்குபார் அதுதான்டா.. GYN அதேதான்.. GYNECOLOGY..

டேய் அஞ்சாறு கிடக்கே எதை எடுக்க..

டேய் பிசாசு ... பெரிசா இருக்கிற நாலை எடுத்து தள்ளு.. மனுசி வரப்போகுது..

மளமளவெண்டு அவன் தள்ள , நான் பிடிக்க , மற்றவன் அதை தூக்கிட்டு போய் அதை நம்ம மறைவு மேசையில வைக்க , அன்ரி வரவும் நாங்கள் எல்லாரும் ஆளாளுக்கு ஒரு புக்குடன் மறுபடிசெட்டாகவும் கணக்காயிருந்தது..

ஆர்வமும் படபடப்பும் இதயத்துடிப்பை அதிகரிக்க நான் திறப்பதற்கிடையில் மற்றவர்கள் அந்தரக்கொட்டைகளாக அர்வத்துடன் உருட்ட அரம்பித்தார்கள்..

திடீரென்று மயான அமைதி ..

மதன் ஒரு முறை ஒரு போட்டோவை பார்த்தவன் அதை ஒரு அதிர்ச்சியுடன் உற்று பார்த்து விடடு விழியெல்லாம் மேலே செருக கிறக்கமாகி...

” உவ்வேக் ”..

நீளமாக ஒரு சப்பாத்தி போட்டதில்.

காலை சாப்பிட்டது முழுவதும் கலர்புல்லாக மேசையில் இருந்தது.. பக்கதிலிருந்தவனும் தன் புத்தகத்தை வினோதமாக ஒரு முறை பார்த்துவிட்டு வாயைப்பொத்தியவாறு எங்கோயோ ஓடினான்.. நான் திறந்த பக்கத்தில ஒரு தவளை போல உருவமைப்புடைய குழந்தையொன்று படு பயங்கரமாக பெ்பரப்பே என என்னை பார்த்து இளித்தவாறு இருந்தது.. படீரென்று அடித்து மூடினாலும் எனக்கு உண்மையாகவே தலைசுற்றியது..

மதன் பார்த்தது ஏதோ அந்த பகுதியில் வரும் கான்சர் பற்றிய புத்தகம்.. என்னுடையது தவறான கர்ப்பததடை மருந்து பாவனையால் ஏற்படும் விளைவுகள் குறித்தானது….

அந்த அசிங்கமும் அருவருப்பும் ரத்த களரியும் கர்ணகடூரமாக மனதில பதிந்து விட அன்று ஏற்பட்ட அந்த அடி ஆறுவருசத்துக்கு தாங்கியது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. ஸ்சப்பா இப்போ நினைத்தாலும் நடுங்குகிறது.. ஆனாலும் அந்த அண்ணை காட்டிய விளையாட்டை நினைத்தால் இன்னும் சிரிப்பாகத்தான் இருக்கிறது அதேவேளை நன்றியாகவும் இருக்கிறது..

இப்படி நாங்கள் பிரச்சனைக்குரிய காலங்களினின்றும் காமெடியாக தப்பித்துக்கொண்டோம்.. எமக்கு பின்னாட்களில் வழிதவறிப்போவதற்கான சற்தர்ப்பங்கள் கிடைத்தாலும் பக்குவமடையும் வயதில் எவற்றை தவிர்க்கNவுண்டும் அளவு எது லிமிட் எது என தெரிந்து விடுவதால் சிக்கல்களில் மாட்டி சீரழியும் சூழ்நிலை வருவதில்லை..

ஆனால் தற்போது யாழில் அந்த வயதில் சரியான வழிகாட்டல கிடைக்காத சமூகத்தின் சில பகுதிகள் கலாச்சார சீரழிவுக்கான வாய்கால்களாக தொழிற்படுகிறன….

அப்போ யாழில் இருந்த அந்தகால நிலமைக்கும் தற்போதைக்கும் என்ன வி;த்தியாசம்? ஏன் கலாச்சார சீர்கேடு குறித்து இருந்தாற்போல் ஒரு பீதி?

கொஞ்சம் உண்மை உதாரணங்களை தருகிறேன் ..

என்னுடைய சுகாதார பரிசாதக நண்பன் ஒருத்தனின கூற்றுப்படி இராணுவத்தினரும் பொலீசாரும் நிறைய பாதுகாப்பு உறைகளை வாங்கிச்செல்கிறார்கள்.. மருத்துவ நண்பர்களின் படி பல தவறான கர்ப்பங்கள்.. ஊர் மக்களின் தகவல்படி பல வீட்டை விட்டு ஓட்டங்கள்.. நண்பர்களின் கூற்றுப்படி அவர்களே ஆளுக்கு ஐந்தாறு பேருடன் தொலைபேசியில் பலான தொடர்பில் இருக்கிறார்கள்.. உண்மையில் அவை உண்மை அத்துடன் பயங்கரமானவை..

காரணம் என்ன என்று ஆராயத்தலைப்பட்டவேளையில் பிரதானமாக சில காரணிகளை பிடிக்க முடிந்தது

..

பொலீசாரும் ராணுவமும் அங்கு பெண்களை கற்பழிக்கவில்லை.. இழுத்துப்போய் காவோலைகளில் வைத்து பலாத்காரம் செய்யவில்லை..

அப்போ வாங்கிச்சொல்லும் உறைகளை வைத்து ஊதி விளையாடுகிறார்களோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

இல்லை அதற்கு காரணம் இருக்கிறது.. அதுதான் விபச்சாரம்..

புலிகளின் காலப்பகுதியில் மரணதண்டனை வழக்கப்படும் இத்தகைய செயற்பாடுகளை பணத்துக்காக செய்கிறார்கள் பல கீழ் மட்ட பெண்கள்.. இது பற்றி ஏதாவது பிரச்சனையை ஊரவர் கிளப்பினால் இராணுவத்தினரால் பிரச்சனை வருமெனப்பயந்து யாரும் எதுவுமு; சொல்லாமல் மனதுள் கறுவிக்கொண்டிருக்கிறார்கள்.. இந்த விபச்சாரிகள் காசு பணத்திற்காக குழப்பத்திலிருக்கும் பக்குவமற்ற விடலைப்யைன்களின் வாழ்க்கையிலும் விiளாயாடிவிடுகிறார்கள்.. அவர்களும் திசைதிருப்பபட்டு சமூக காவாலிகளாக மாறிவிடுகிறார்கள்.. இதை தடுக்க ஒரு வழியும் இருப்பதாக எனக்கு புலப்படவில்லை ..

அடுத்து நீலப்படம்..

இது ஒரு பயங்கரமான ஆயுதம்.. 2000க்கு முன் யாழில் இருந்திருக்குமோ தெரியாது . பின்னர் 2002 இல் புலிகள் இவற்றை வேட்டையாடினார்கள்.. வினியோகித்தவர்களை சுட்டார்கள்.. ஆனால் தற்போது மீள பெருகிவிட்டது..

தற்போது சிறு பெண்களை விழுத்துவதற்கு காவாலிப் பெடியன்கள் பயன்படுத்தும் பாரிய ஆயுதமாக மாறிவிட்டது இது..

தற்போது வீட்டுக்கு வீடு கணணிகளும் நவீன வசதிகளுடைய செல்போன்களும் காணப்டுவது பெண்கள் நீலப்படம் பார்ப்பதை அல்லது திட்டமிட்டு காண்பிக்கப்படுவதை இலகுபடுத்திவிடுகிறன… ஆண்கள் அதை பார்த்துவிட்டு சாதாரணமாக சென்றுவிட்டாலும் பெண்களில் அதன் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கிறது.. மிகவும் வல்நறபிள் ஆனவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்..

( எப்படி எனக்கு தெரியும் என்று கேட்கவேண்டாம்.. ஹிஹி.. ) யாழில் இதை ஒரு சுப்பர் டெக்னிக்காக பயன்படுத்துவதாக போனில் 5 பெண்களுடன் கிளுகிளு தொடர்பு வைத்திருக்கும் நண்பன் சொன்னான்..

ஆனால் இந்த அழிவாயுதம் தடுக்கப்படகூடியது.. தம் பெண்பிள்ளைகள் மீது பெற்றோர் மிகவும் கடுமையான கண்காணிப்பு செலுத்தவேண்டும்.. ஆபத்துக்கு பாவமில்லை என பதின்ம வயது தாண்டும் வரையாவது கடும் கண்டிப்பு செலுத்த வேண்டும்..

ஒரு உண்மைக்கதையை சொல்வதெற்க்கென்ன? 1996 ஆம் ஆண்டு நடந்த ஒரு பாலியல் வல்லுறவு கொலை நாட்டை உலுக்கியது உங்களுக்கு தெரிந்திருக்கும்.. அந்தக்கொலை ஒரு விபத்துடன் தொடர்புடையது.. இராணுவம் ஏற்படுத்திய தன் நண்பியின் மரணத்துக்காக இராணுவத்துடன் வாக்குவாதப்பட்ட ஒரு பெண் தன் குடம்பத்துடன் அகொர முடிவை தேடிக்கொண்டார்.. அதைத்தொடர்ந்து அந்த விபத்துக்குட்பட்ட பெண்ணின் தந்தையும் புலிகளுக்குதவியதாக கொலைசெய்யப்பட்டார்.. அந்த குடும்பத்து பெண்ணொருத்தி தனது தந்தையினதும் சகோதரியினதும் மரணத்துக்கு களங்கம் தரும்வகையில் ஒரு இராணுவத்துடன் ஓடிவிட்டார்.. காரணம் உந்த நீலப்படம் எனத்தான் அவளது நண்பர் வட்டாரத்தகவல்.. என்ன கொடுமை பப்ளிக் இது?

ஆகவே கவனம் பெற்றோரே.. ஏதாவது சிடிக்கள் வீட்டில் காணப்பட்டால் உடனடியா போட்டுபாருங்கள்.. பென்ட்ரைவுகளை சோதியுங்கள்.. செல்போன்களை வீடிுயோ வசதிகளுடன் வழங்காதீர்கள்..மகள் இணைய இணைப்பிலிருக்கும் போது கூட இருங்கள்..

அடுத்து கல்வியறிவு குறைந்த பெற்றோர்.. , உடல் ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் குறித்த சமூக அறிவின்றி இயங்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் தவறான அழிவுகளில் இறங்குவது தவிர்க்க முடியாது.. அண்மையில் ஒரு பிரபல பாடசாலையில் நடந்த சம்பவத்தின் படி ஒரு பையனிடம் ஆணுறைகள் கைப்பற்றப்பட்டதன் பின்னரான விசாரணையில் , அது தன்னுடைய திருமணமாகாத முதிர்ந்த ஒன்று விட்ட சகோதரியின் உபத்திரவம் தாங்காமல் தான் அவளை திருப்பதிப்படது;துவதாக வாக்குமூலத்தில் முடிந்துள்ளது.. இதையெல்லாம் கவனத்திலெடுக்காமல் இருக்குமளவுக்கு பெற்றோர்.. ஹ்ம்ம்..

அதை விட இன்னொரு குடும்ப தற்கொலை கேஸ் ... மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல்... அது ஆகக்கொடுமை.. அசிங்கம்.. பிள்ளைகளிடம் இருந்த உறவு குறித்தான பூச்சிய அறிவால் ஏற்பட்ட விளைவு .. அவர்கள் படித்த மரியாதைகுரிய மக்கள்.. அதனால் தொங்கிவிட்டார்கள் ...

அதை இங்கே எழுத முடியாது..

இதை , இந்த நிலமையை சீரமைக்கத் தான் தற்போது சுகாதார உத்தியோகத்தர்கள் களமிறங்கியுள்ளார்கள்.. விழிப்புணர்வு ஏற்படுத்துமுகமாக பல கூட்டங்கள் நடைபெறுகிறன.. விரசமில்லாமல் பதின்மவயதினருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.. பதின்ம வயதினரின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது..

என்ன இருந்தாலும் பிழை செய்தால் சுடுவேன் என்று சொல்லி எவ்வளவு காலம்தான் கட்டுப்படுத்தி வைப்பது? தாமாக திருந்தும் நிலைக்கு சமூகத்தை உயர்த்துவதே மேல்.. அதைத்தான் தற்போது பொறுப்பிலுள்ள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளார்கள்..

ஆனால் எல்லோரும் ஊதிப்பெருப்பிப்பது பொல அங்கே பெண்களெல்லாரும் ஆண்பிள்ளைக்கு அலைவதாகவொ இல்லை பெடியன்கள் கழிசடைகளாகி விட்டதாகவோ இல்லை.. படிப்பறிவு குறைந்த கீழ்மட்ட சனங்களின் பிள்ளைகள் தமது பெற்றோரின் அறியாமையை அட்வான்டேஜாக எடுத்துக்கொள்கிறார்கள்.. ஆனால் அதேவேளை படித்த மரியாதைக்குரிய குடும்பங்களின் பிள்ளைகள் தமது குடும்பத்துக்கான எதையும் தூக்கியெறியும் நிலையில்தான் இருக்கிறார்கள்..

ஆகவே ஓளட் ஒப் ஜப்னா சமூகமே நீங்கள் கவலையடைய வேண்டியதில்லை… ஏற்றுமதி செய்ய சிறந்த பெண்கள் மற்றும் பையன்கள் (இப்போ அவர்களையும் ஏற்றுகிறார்கள்) நிறையவே யாழில் இருக்கிறார்கள்.. என்ன சந்தோசம்தானே?

ஹாஹா

அது சரி உனக்கென்ன பெரிய சமூக அக்கறை எண்டு கேக்கிறீங்களா.. இன்னும் கொஞ்ச காலத்தில நானும் யாழ்ப்பாணத்தில பெண்ணெடுக்கணும்.. அப்போது ஏதாவது காவாலி அணில் கடிச்ச ப்ரூட் அம்பிட்டுவிடுமோ என்ற பயம்தான்.. யாழ்ப்பெற்றோரே ! எப்படியாவது நான் கலியாணம் கட்டும் வரையாவது பிள்ளைகளை வடிவா பாத்துக்கொள்ளுங்கோ.. என்ன நான் சொல்லுறது.. ஹிஹி

ஆகவே டோன்ட் வொரி பீ ஹப்பி… !

http://ariyalion.blogspot.com/2010/01/6-11_09.html

Link to comment
Share on other sites

ஆடுகிற மாட்டை ஆடித்தான் கறக்க வேண்டும்..

எடுபடக் கூடிய விளம்பரம். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நல்ல உக்தியான விளம்பரம்... உண்மையில் பாரட்டப்பட வேண்டும்.. மேற்குலக நாடுகளை குறி வைத்த இந்த விளம்பரம் பாராட்ட தக்கது... மேற்குலகினர் செக்ஸ் என்பதில் தமிழர்களை போல முகம் சுளிப்பது இல்லை..

எல்லாருக்கும் பிடித்த விடயம் பிடிக்காத மாதிரி நடிக்கும் விடயமும் ஆண்பெண் உறவு... அப்படியும் எனக்கு செக்ஸ் பிடிக்காது என்பவர்கள் குறைப்பாடு உள்ளவர்கள் என்கிறது ஒரு மருத்துவ குறிப்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை புறக்கணிப்பு புறணிப்போராட்டம் மிளகாய்த்தூள் சரக்குதூள்ளை தொடங்கி இப்ப நாகரீக கோமணத்திலை வந்து நிக்குது.

"தமிழரின் தாகம் தணியாத தாகம்"

Link to comment
Share on other sites

எங்கடை புறக்கணிப்பு புறணிப்போராட்டம் மிளகாய்த்தூள் சரக்குதூள்ளை தொடங்கி இப்ப நாகரீக கோமணத்திலை வந்து நிக்குது.

"தமிழரின் தாகம் தணியாத தாகம்"

எங்கடை போராட்டம் , இப்ப கோமணத்திலை வந்து நிக்குது.

Very , very good

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை போராட்டம் , இப்ப கோமணத்திலை வந்து நிக்குது.

Very , very good

உள்ளாடைகளையும் (கோமணமும் அடக்கம்) வித்துத்தானே சிங்களவர்கள் தமிழர்களை கோமணமும் இல்லாமல் ஓடவிட்டுச் சுட்டுக்கொலை செய்யமுடிந்தது. எனவே லேபிளைப் பார்த்து நீங்களும் வாங்கினால் நல்லது.

Link to comment
Share on other sites

புதிய வீடியோ :

Link to comment
Share on other sites

மேற்குலக மக்களை செக்ஸ் விளம்பரம் மூலம் கவர்ந்துவிடலாம் என்பவர்கள், "மேற்குலகினர் செக்ஸ் பிரியர்கள்" என்று கொண்டிருக்கும் தப்பு அபிபிராயத்தை வெளிப்படுத்துகிறது.

அந்த அபிபிராயம் சரி என்று கொண்டாலும், இந்த விளம்பரம் மேற்கு உலகத்தினரை எவ்வாறு அடைகிறது? யாழ் தளத்தில் (தமிழ் தளங்களில்) மட்டும் இணைப்பதன் மூலம் எத்தனை மேற்கு உலகத்தினரை அடையமுடியும் - விளம்பர நோக்கத்தை அடைய முடியுமா? என்பது பெரும் கேள்விக்குறியே?

அதுவும் பல வயதினரும் சஞ்சரிக்கும் யாழ் தளத்தில் இது தொடர்ந்தும் முன்னுரிமை கொடுத்து இணைக்கப் பட்டிருப்பது சரியா? அல்லது மேற்குலக பண்பாட்டையாவது அனுசரித்து யாழ் தளம் "வயது வந்தவர்களுக்கு மட்டும்" என்ற தலைப்பை தாங்கி வருதல் தானே முறை.

இல்லற வாழ்வில் முக்கிய ஒரு பகுதி கணவன் - மனைவி உடலுறவுதான். இது அவர்களிடையே நல்ல புரிந்துணர்வும், விசுவாசமும் உருவாக உதவுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.

உரிய வயதில் இது சம்பந்தமான சிறப்பாக திட்டமிடப்பட்ட பாலியல் கல்விக்கும், தான் தோன்றித்தனமாக விரசம் மற்றும் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகளும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை உணராது எழுதப்படும் கருத்துக்கள் அபாயகரமானவை.

விரசம் மற்றும் காமம் ஒருவனது மனவுறுதியை தகர்த்து அவனை மட்டுமல்லாது அவன் சார்ந்தவர்களையும் அழித்துவிடும் என்பது தலைசிறந்த உளவியலாளர்கள் கருத்து.

செக்ஸ் பிரியர்களாக எம்மவர் பலரால் கருதப்படும் அமெரிக்க மக்கள் தமது ஜனாதிபதியிடம் எதிர்பார்க்கும் பாலியல் ஒழுக்கம், ஒழுக்கம் குன்றிய ஒருசில தளபதிகளால் ஈழத் தமிழ் மக்கள் அடைந்த வீழ்ச்சி, ஒழுக்கம் குன்றிய தலைவனை கொண்ட இயக்கமொன்று எண்பதுகளில் எண்ணிக்கையில் பல போராளிகளை ஈர்த்திருந்தும் அயல் நாட்டு பயங்கரவாதிகளின் கைப்பொம்மை ஆகி எமது இனம் சந்தித்து வரும் அழிவுகள், அயல் நாட்டு சிங்களப்பெண்பித்தர்களாகிய பண்டாரி, தீட்சித், இந்து ராம், நாராயணன், மணிசங்கர ஐயர், ....... அலோ பிரசாத் போன்றவர்கள் ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளின் கைபொம்மையாய் மாறி தமிழின அழிப்புக்கு துணை போய்கொண்டிருப்பது, .............. என ஆயிரம் உதாரணங்கள் மூலம் விரசம் மற்றும் காமத்தின் விஷ தன்மையை அறிந்துகொள்ளமுடியும்.

சிந்தியுங்கள்!!!

மாற்றுக் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையா நான் அந்த ஸ்ரீ லங்கா ஜெனோசைடுக்கு எதிராக வந்த "கோவண சமூக கலாச்சார சீரழிவு" விளம்பரத்தை பற்றி பேச தான் இங்க மெனக்கெட்டு ரெஜிஸ்டர் பண்ணி வந்தனான். உண்மையா அந்த விளம்பரம் சூப்பர். ஸ்ரீ லங்காவில தான் கொஞ்சம் ஹை எண்டு உடுப்புகள் செய்யிறது. டம்மி ஹில்பிகரும், போலோ, விக்டோரியா சீக்ரெட், காப் போன்ற பெரிய நிறுவனங்கள் ஸ்ரீ லங்காவில் சிங்கள பெண்களை வைச்சு 5 ரூபாக்கு செய்து போட்டு வெளிநாடுல 85 பவுண்ட்சுக்கு விப்பான்கள். இதுகள கருப்பு, வெள்ளை இன பதினைந்துக்கும், முப்பதிற்கும் இடையே உள்ளவர்களும் இரண்டாம் தலைமுறை தமிழரும் கண்டபடி கிரெடிட் காட்டுல வேண்டுவினம். அவியலை இருத்தி ஒரு விஷயத்தை சொல்லுரதட்கு செக்ஸ் தான் சரியான விடயம். அவைண்ட வழியிலேயே போய் அலுவல குடுக்குதல் பொடியள் ஆனால் எங்கட கூட்டம் சமூக கலாச்சார சீரழிவு என்று கிழம்பிட்டினம். இவயல போல ஒரு முரண்பாட்டு கூட்டத்தை பார்த்ததில்லை. காம சூத்திரத்தை உலகிற்கு கொடுத்த சிந்து வெளி பள்ளத்தாக்கில் இருந்து வந்தது தான் நமது கலாச்சாரம். இவர்கள் செல்லும் கோவில்களில் இருக்கும் சிற்பங்களை பார்ப்பதில்லை போலும். ஏன் இவர்களுக்கு தாமே அந்த கலாச்சார சீரழிவு நிகழ்வால் தான் பிறந்தார்கள் என்று தெரியாதா? பை த பை, கோவண வியாபார விக்டோரியா சீக்ரெட்ஸ் பெறுமதி 11 பில்லியன் டொலர், சிறி லண்கவிண்ட இனவெறி அரசிண்ட 2009 வருமானம் 7 பில்லியன்! ஏய் பொடிசுகளா இவையல கவனிக்காதைங்கோ, உங்கட அலுவல குடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சம்பந்தமான சிறப்பாக திட்டமிடப்பட்ட பாலியல் கல்விக்கும், தான் தோன்றித்தனமாக விரசம் மற்றும் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகளும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை உணராது எழுதப்படும் கருத்துக்கள் அபாயகரமானவை.

மாற்றுக் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.

ஆசான் அண்ணா, ஓமோம் எங்கட ஆக்கள் நல்லாத்தான் தங்கட பிள்ளைகளை விரசத்தில இருந்து தள்ளி வளர்க்கினம். ஏன் அண்ணா தமிழ் சூப்பர் ஸ்டார் செய்யாத உள்ளாடை கொமடியா? இப்டித்தான் கலாசார சீரழிவு எண்டு எனக்கு தெரிஞ்சவர் ஸ்பீச் குடுத்திட்டு காருக்க ஏறினால், "டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போடா யாரும் இல்லை" என்று கதறுது! அண்ணா, இதை எங்கட பொடியள் தங்கட பேஸ் புக்ல போட்டு பெமசாக்கிடுவான்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தளத்தில் (தமிழ் தளங்களில்) மட்டும் இணைப்பதன் மூலம் எத்தனை மேற்கு உலகத்தினரை அடையமுடியும் - விளம்பர நோக்கத்தை அடைய முடியுமா? என்பது பெரும் கேள்விக்குறியே?

யாழைப் பார்க்கும் எம்மவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேற்று நாட்டவர்களுக்கு இக்காணொளியை அனுப்பலாம் தானே. நான் என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியார்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.

எனது வேலை செய்யும் இடத்தில் நான் அவுஸ்திரெலியாவில் தயாரிக்கும் Nerada தேயிலையை தேனீருக்காப் பயன்படுத்துகிறேன். வேலையில் இருக்கும் டில்மா தேனீரைக் குடிப்பதில்லை. காரணத்தை அறிந்து 2 அவுஸ்திரெலியர்கள் டில்மா தேனீரைக்குடிப்பதை நிறுத்திவிட்டார்கள். தொடர்ந்து தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி அடையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழைப் பார்க்கும் எம்மவர்கள் தங்களுக்குத் தெரிந்த வேற்று நாட்டவர்களுக்கு இக்காணொளியை அனுப்பலாம் தானே. நான் என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியார்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.

எனது வேலை செய்யும் இடத்தில் நான் அவுஸ்திரெலியாவில் தயாரிக்கும் Nerada தேயிலையை தேனீருக்காப் பயன்படுத்துகிறேன். வேலையில் இருக்கும் டில்மா தேனீரைக் குடிப்பதில்லை. காரணத்தை அறிந்து 2 அவுஸ்திரெலியர்கள் டில்மா தேனீரைக்குடிப்பதை நிறுத்திவிட்டார்கள். தொடர்ந்து தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி அடையலாம்.

கந்தப்பு அண்ணே, நானும் டில்மா தேயிலைக்கு பதிலாக கென்யா தேயிலைய வேலைல போட்டுகுடுத்து பேமசாக்கிட்டன். எனக்கு தெரிஞ்சு ஒரு நூறு பேருக்கு இந்த விளம்பரத்தை சனி கிழமை அனுப்பினனான். இப்ப எனக்கே ஆரோ எல்லாம் திருப்பி அனுப்பினம். எண்ட வெள்ளை மேட்சிடம் இது சூப்பர் ஹிட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.