Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர் கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப் வந்தடையலாம் என நம்புவோம்.

நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள் பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள், உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம் மனிதர்களுள் நானும் இன்னொருவன். தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.

எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.

இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக் கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது. இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக் குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ் மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.

இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும் குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக் கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது, செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.

இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.

குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர் சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.

இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள் முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.

இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.

அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும், உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம் எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.

இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட் வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.

இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.

செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர் எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.

அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.

இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும் தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக் காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது. இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.

சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.

குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.

தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.

பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.

அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு ஏற்படுகிறது.

இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.

இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.

அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன் இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.

இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின் கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.

இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே. அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர். துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும் துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக் கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே கருதப்பட்டது.

பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள் நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.

ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.

இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.

இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.

அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.

அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.

பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.

அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.

அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள் பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என் போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும், கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக எதிர்த்தோம்.

வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில் பிராமணராக இருந்தேன் என்பதுதான்.

எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான். துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக் காரணம்.

ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள் மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார். அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத் தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம் நீக்கி வைத்திருந்தார். இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார்.

இதன் பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம். புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு பயிற்சிக்கு வந்து போவார்கள்.

அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக் குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன், குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும் அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்.

1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின் அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில் இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஐயரின் வரலாறுச் சாட்சி ஒவ்வொரு வார இறுதியிலும் இனியொருவில் பதியப்படும்…

http://inioru.com/?p=9025

Link to post
Share on other sites
 • Replies 79
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி... தொடர்ந்து பதியுங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

70 களின் நடுப்பகுதியில் எமக்குத் தெரிந்தவையெல்லாம் ஆயுதங்களைச் சேகரித்துக்கொள்வதும் எதிரியை அழித்துவிடுவதும் தான். சந்திகளும் சாலைத் திருப்பங்களும் இருள் சூழ்ந்து கோரமாய்த் தெரிந்த ஒரு காலம்! எங்காவது ஒரிடத்தில் ஒருசில மணி நேரத்திற்கு மேல் தரித்திருக்க முடியாத மரண பயம். மரணத்துள் வாழ்தல் என்பதைத் தமிழ் உணர்வுக்காக நாமே வரித்துக்கொண்டோம்.

மயானமும், கோவில்களும், பாடசாலைகளும், தோட்டங்களும், வயல் வரப்புக்களும் தான் எமது உறங்குமிடம். பல காத தூரங்களை நடந்தே கடந்திருக்கிறோம்! எங்கள் சைக்கிள்கள் கூட எம்மோடு உழைத்து உழைத்து இரும்பாய்த் தேய்ந்து போயின!! முட்களும், புதர்களையும், கற்களும் பல தடவைகள் எமது பாதணிகளாகியிருக்கின்றன. குக் கிராமங்கள், அடர்ந்த காடுகள் என்று எல்லா இடங்களுக்குமே எமது தமிழ் உணர்வு அழைத்துச் சென்றிருக்கிறது.

இவ்வேளையில் தான் எமது மத்திய குழு அமைக்கப்படுகிறது. அதன் பருமட்டான திட்டம் வழி முறை இதுதான்:

1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.

2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.

3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.

4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

நாம் உருவாக்கிய இந்த மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகள்(TNT) என்ற பெயருடனேயே இயங்குகிறது.

எமது சூழல், அரசியல் வறுமை, தமிழரசுக் கட்சியின் உணர்ச்சிப் பேச்சுக்கள், சிங்களப் பேரின வாததின் கோரம் என்று எல்லாமே எம்மை சுற்றி நிற்க எமக்கு நியாயமாகத் தெரிந்தவை தான் இந்தக் கோஷங்கள். நீண்ட அனுபவங்களைக் கடந்து தொலை தூரம் வந்துவிட்ட பின்னர், இந்தச் சுலோகங்கள் கூட எனக்குக் கோரமாய்த் தான் தெரிகின்றன.

அரசியல் திட்டமென்று நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த இந்தச் சுலோகங்கள் எல்லாம் பின்னதாக ஆயிரமாயிரம் போராளிகள் கொன்று போடப்படுவதற்கு ஆதாரமாக அமையும் என்பதை நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. எவ்வாறாயினும் முதல் இயக்கப் படுகொலையை செட்டி தான் ஆரம்பித்து வைத்தார் எனலாம்.

அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும் கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன் எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவி, அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்.

கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி பத்மநாதன் கொலைகளுக்காக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை ஆரம்பிபதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர் என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.

இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி சொன்னதாக எனக்குச் சொன்னார்.

எங்கோ தெருக் கோடியில், உள்ளூரிலேயே அறியப்பட்டத மூலையில், கால்படத கிராமங்களில் எல்லாம் இருந்த இளைஞர்கள், பெண்கள் எல்லாம் உலக வல்லரசுகளின் செய்திகளில் ஈழப் போராளிகளாகவும், உலகின் மிகப்பெரிய கெரில்லா இயக்கமாகவும் பேசப்படுகிற ஒரு சூழல் பிரபாகரனின் விட்டுக்கொடாத உறுதியில்ருந்தே கட்டியமைக்கப்பட்டது எனலாம். பல தடவை அவர் தனித்து யாருமற்ற அனாதையாகியிருக்கிறார். நண்பர்களை இழந்து தனிமரமாகத் தவித்திருக்கிறார். உண்ண உணவும், உறங்க இடமுமின்றி தெருத் தெருவாக அலைந்திருகிறார்.

இவையெல்லாம் அவரைப் போராட்டத்திலிருந்து அன்னியப் படுத்திவிடவில்லை. இறுக்கமான உறுதியோடு மறுபடி மறுபடி போராட்டத்திற்காக உழைத்திருக்கிறார் என்பதை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.

துரையப்பா கொலை நிகழ்ந்து, எல்லாருமே கைது செய்யப்படுகின்றனர். பொலீசாரும் உளவுப் படையினரும் பிரபாகரனை வேட்டையாட அலைகின்றனர்.

துரையப்பா கொலையின் பின்னதாக காங்கேசந்துறையில் தான் தம்பி பிரபாகரன் தலைமறைவாக வாழ்கிறார். ஏனையோரின் கைதுக்குப் பின்னர் அவர் அங்கு வாழ முடியாத நிலை. அவரது ஊரான வல்வெட்டித்துறையோ வடமராட்சியோ அவர் கால்வைப்பதற்குக் கூட நினைத்துப் பார்க்கமுடியாத நிலையிலிருந்தது. போலிசார் வலைவீசித் தேடிக்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தினூடே பயணம் செய்வதென்பதே முடியாத காரியமாக இருந்தது. இந்த நிலையில் தான் செட்டியிடம் முன்னர் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் எமது ஊரான புன்னாலைக்கட்டுவனை நோக்கி வருகிறார்.

அவ்வாறு அவர் வரும் போது அவரிடம் ஒரு சல்லிக் காசு கூட செலவுக்கில்லை. அன்று அவர் உணவருந்தியிருப்பார் என்பது கூடச் சந்தேகமே. அவருடைய சிறிய தொடர்பாளர்கள் கூடக் கைது செய்யப்பட்டுவிட்டனர். எந்த அடிப்படை வசதியுமின்றி அனாதரவான நிலையிலேயே நாம் அவரைச் சந்திக்கிறோம்.

எம்மிடம் வந்த பிற்பாடு முன்னைய தொடர்புகளைச் சிறிது சிறிதாக ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்.

எமக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் இளைஞர்கள் மட்டும் தான். அவர்கள் அனைவருமே கல்வி கற்றுக்கொண்டிருந்தனர். பணம் அவர்களிடம் இருந்திருக்கவில்லை. நான் ஒருவன் மட்டும் தான் கோவிலில் பூசை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது தொழிலை நிறுத்திவிட்டு முழுநேரப் போராளியாகத் தீர்மானித்திருந்தேன். பின்னர் எமது நடவடிக்கைகளுக்குத் தேவைபடும் பணத்தைச் சேகரித்துக் தற்காலிகமாகப் பெற்றுக்கொள்வதற்காக நான் எனது பிராமணத் தொழிலைத் தொடர்வதாகத் தீர்மானித்தேன்.

இதற்கு மேலாக எனது வீட்டிலிருந்த நகைகளை அடகு பிடித்தே போராளிகளின் போக்குவரத்துச் செலவு, புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் பணம் போன்ற செலவுகளைச் சமாளித்துக் கொண்டோம். இதே போல, துரையப்பா கொலையின் திட்டமிடலை மேற்கொள்வதற்காக பற்குணம் தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்தே பணம் திரட்டிக்கொண்டார். சில வேளைகளில் பிரபாகரன் ஒரு வேளை மட்டுமே ஏதாவது உணவருந்தித் தான் வாழ வேண்டிய நிலை இருந்தது. எனது வரலாற்றுப் பதிவில் வருகிற இன்னொரு அத்தியாயத்திலும் பிரபாகரன் தனிமைப்பட்டுப் போகிற இன்னொரு சந்தர்ப்பமும் பதியவுள்ளேன்.

இந்த எல்லா இக்கட்டான சூழலிலும் பிரபாகரனின் உறுதி குலையாத மனோதிடம் கண்டு நான் வியப்படந்திருக்கிறேன்.பலர் அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் இது காரணமாக அமைந்திருக்கிறது எனலாம். பிரபாகரனும் நானும் பெரிதாகப் படித்திருக்கவில்லை. பிரபாகரன் பழகுவதற்கு இயல்பானவர். ஒரு குறித்த இயல்பான தலைமை ஆளுமை கூட இருந்ததை மறுக்க முடியாது.

என்னை பொறுத்த வரை ஆரம்பத்தில் எம்மோடு இணைந்த பலர் மிகத் தவறான சொந்த நலனை முதன்மைப் படுத்தியவர்களாகவே காணப்பட்டனர். புத்தூர் கொள்ளைப் பணத்தில் ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தாம் முழு நேரமாக இயங்குவதானால் தமது குடும்பதைப் பராமரிக்க இந்தப் பணத்தை அவர்கள் கோரினர். இவர்களில் ராஜ் என்னசெய்கிறார் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. ஜெயவேல் மரணமடைந்திருக்க வேண்டும்.

20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன். மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, பெண்கள் பின்னால் அலைவது, சினிமாவுக்குச் செல்வது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஏன் தமது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பது போன்ற எல்லா இளம் பிராயத்தின் இயல்பான பழக்கவழக்கங்கள் எதிலுமே பிரபாகரனிற்கு நாட்டமிருக்கவில்ல்லை. சினிமாக் கூடப் பார்பதில்லை. கதைப் புத்தகங்கள் கூட வாசிப்பதில்லை. துப்பாக்கிகளும் ஆயுதங்களும் வருகின்ற படங்கள் என்றாலோ புத்தகங்கள் என்றாலோ மட்டும்தான் அவர் அவை பற்றிச் சிந்திப்பார். தமிழீழம் மட்டும் தான் ஒரே சிந்தனையாக் இருந்தது. அதற்கான இராணுவத்தைக் கட்டியமைப்பது தான் தனது கடமை என எண்ணினார். இதற்கு மேல் எதைப்பற்றியும் அவர் சிந்திதது கிடையாது. எப்போதுமே தனது சொந்த வாழ்க்கை குறித்தோ, அரசியல் வழிமுறை குறித்தோ சிந்திதது கிடையாது.

இவ்வாறு பெரும் மன உழைச்சல், அர்ப்பணம், தியாகம் என்பவற்றினூடாக ஐந்து பேர் கொண்ட மத்திய குழு தமிழ்ப் புதிய புலிகளின் மத்திய குழுவாக உருவாகிறது. புத்தூர் வங்கிப்பணத்தை வைத்துக்கொண்டே பயிற்சி முகாமைப் புளியங்குழத்தில் உருவாக்கிக் கொள்கிறோம். இவ்வாறு உருவான பயிற்சி முகாமைத் தவிர ஒரு பண்ணை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் தீர்மானிக்கிறோம். புதிதாக போராளிகளை உள்வாங்கி வடிகட்டி அதன் பின்னர் பயிற்சி முகாமிற்கு அனுப்பும் நோக்கத்துடனேயே இந்தப் பண்ணை உருவாக்கப்படுகிறது. இந்தப் பண்ணை வவுனியாப் பூந்தோட்டத்தில் உருவாகிறது. விவசாய நிலம் ஒன்றிலேயே இதை அமைத்துக் கொள்கிறோம். அந்த நிலம் காங்கேசந்துறை தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் சொந்தமானது.

காங்கேசந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசிற்குச் தெரிந்தவரான கணேஸ் வாத்தி என்பவரூடாகவே பண்ணைக்குரிய நிலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். 1976 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தப் பண்ணை செயற்படும் வந்துவிட்டது. இதே ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி தான் புத்தூர் வங்கிக் கொள்ளை நடந்தது. சில மாதங்களின் உள்ளாகவே பண்ணையையும், பயிற்சி முகாமையும் உருவாக்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இவ்வேளையில் தம்பி பிரபாகரனும் நானும் மட்டுமே முழு நேரச் செயற்பாட்டாளர்களாக இருந்தோம்.

இந்தப் பண்ணைக்கு உள்வாங்கும் நோக்குடன் பத்துப் பேர் வரை பேசியிருந்தோம். அவர்கள் அனைவருமே அங்கு வருவதாக உறுதியளித்திருந்தனர். அவர்களுள் புத்தூர் கொள்ளைப் பணத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஜெயவேல் மற்றும் ராஜ் ஆகியோரும் அடங்குவர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக வவுனியா புகையிரத நிலையத்திற்கு அவர்களை வரச் சொல்லியிருந்தோம். அவர்களுக்காக நான் புகையிரத நிலையத்தில் காத்திருந்தேன்.

இதில் ஏமாற்றம் என்னவென்றால் இந்தப் பத்துப் பேரில் ஒரே ஒருவர் மட்டுமே அங்கு வந்து சேர்ந்தார் என்பது மட்டுமே. கற்பனைகளோடு காத்திருந்த எனக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றம் அதிர்ச்சியாகவும் இருந்தது. அங்கு வந்து சேர்ந்தவர் ஞானம் என்ற சித்தப்பா மட்டுமே. இவ்வேளையில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பிரபாகரன் பண்ணைக்கு வரவில்லை. அவர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார். ஆக, நானும், சித்தப்பாவும் பண்ணையில் தனித்துப் போனோம். எம்மிடம் பணம் வாங்கிக் கொண்ட இரண்டு பேரும் கூட அங்கு வரவில்லை என்பது விபரிக்க முடியாத விரக்திமனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது.

இதற்கு மறு நாள் நாம் எதிர்பார்க்காமலே இன்னொருவர் வருகிறார். அவர் பெயர் நிர்மலன். அவரைக் கறுப்பி என்றும் அழைப்போம்.

இவ்வேளையில் எமக்கு எந்த வெளித் தொடர்புகளும் இருக்கவில்லை. மத்திய குழுவிலிருந்த எம்மைத் தவிர, ராகவன் மற்றும் குலம் ஆகியோரே எம்முடன் இருந்தனர். அதிலும் ராகவன் தனது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டு ஆதரவு மட்டத்திலேயெ இருக்கின்றார். குலம் தனது குடும்பச் சுமைகள் காரணமாக முழு நேரமாகச் செயற்பட முடியாத நிலையில் ஆதரவு மட்ட வேலைகளேயே செய்து வந்தார்.

இப்போது பண்ணை ஆரம்பமாகிவிட நான், நிர்மலன், சித்தப்பா பின்னதாக இணைந்து கொண்ட பற்குணா ஆகியோரே பணியாற்றுகிறோம். இங்கு விவசாயத்தையும் ஆரம்பித்துவிட்டோம்.

இதெ வேளை உரும்பிராயைச் சேர்ந்த தமிழர்சுக் கட்சி முக்கியஸ்தரான சேகரம் என்று அழைக்கப்படும் சந்திர சேகரம் என்பவர் எம்மில் சிலரைச் சந்தித்துக்கொள்வார். அவரின் ஊடாக மட்டக்களப்பைச் சார்ந்த மைக்கல் என்பவரின் தொடர்பு எமக்குக் கிடைக்கிறது.

மைக்கல் மட்டக்களப்பில் ஈடுபட்ட அரச எதிர்ப்புப் போராட்டங்களால் பொலீசாரால் தேடப்பட்டு வந்தவராவர். இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் வடக்கிற்கு வந்து உரும்பிராயில் சந்திரசேகரத்தைச் சந்திக்கிறார். சந்திரசேகரம் அவரை எமக்கு அறிமுகப்படுத்த, அவருடனான உறவை நாம் வளர்த்துக் கொள்கிறோம். துடிப்பான கிழக்கு மாகண இளைஞனின் தொடர்பு எமக்குப் புதிய உற்சாகத்தைத் தருகிறது. இந்த உற்சாகத்தின் வேகத்தில் அவரை உடனடியான செயற்திட்டத்திற்குள் உள்வாங்குவதாகத் தீர்மானிக்கிறோம்.

துணிவும், செயற்திறனும் கொண்டவராதலாலும், ஏற்கனவே வன்முறைப் போராட்டங்களில் அனுபவமுள்ளவர் என்பதாலும், எமது புளியங்குளம் பயிற்சி முகாமிற்கு அவரைக் கூட்டிச் செல்கிறோம். அங்கே சில நாட்கள் மைக்கல் எம்முடன் தங்கியிருந்தார். அதன் பேறாக ராஜன் செல்வநாயகத்தைம் என்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்காக அவரை ஏற்படு செய்கிறோம்.

அதன் முதற்படியாக அவரிடம் பணம் கொடுத்து ராஜன் செல்வநாயகத்தின் நடமாட்டத்தை உளவறிவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை அனுப்பி வைக்கிறோம். எம்மிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்ற மைக்கல் பின்னதாக பல நாட்கள் எம்மிடம் தொடர்பு கொள்ளவில்லை.

அவர் மட்டக்களப்பு சென்று தனது வேலைகளை முடித்துத் திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். நாட்கள் கடந்தன மைக்கல் வரவில்லை. அவ்வேளையில் சேகரத்தைச் சந்தித்த போது, அவர் மைக்கல் இன்னமும் யாழ்ப்பணத்தில் தான் தங்கியிருப்பதாக அறியத் தந்தார். அத்தோடு எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து அவர் பகிரங்கமாக பல இடங்களுக்குப் போய் வருவதாகவும். நாம் குறித்த எந்த வேலைகளிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை என்றும் சொன்னார்.

இதை அறிந்து கொண்ட நாம், மைக்கலை பல தடவைகள் எம்மை வந்து சந்திக்குமாறு கோரியும் அவர் எம்மிடம் வரவில்லை.

மைக்கலிற்கு எமது உறுப்பினர்கள் பலரைத் தெரிந்திருந்தது. எமது ரகசிய இடங்களைத் தெரிந்து வைத்திருந்தார். இதனால் நாம் மேலும் பதட்டமடைந்தோம்.

அப்போது தம்பி பிரபாகரன் என்னிடமும் குமரச்செல்வம் என்பவரிடமும் மைக்கலைக் கூப்ப்ட்டு எச்சரிக்க வேண்டும் என்றும் எல்லை மீறினால் கொலை செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறார். இதை அவர் மத்திய குழுவிலிருந்த ஏனையோருக்குச் சொல்லவில்லை. எம்மிருவருக்கு மட்டுமே அதைத் தெரிவிக்கிறார். நாங்கள் இது குறித்து எல்லோரிடமும் விவாதிக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு மத்திய குழுவிலிருந்த பட்டண்ணாவும் சின்னராசும் பயப்படுவார்கள்; அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார். அதாவது மைக்கலைக் கொலைசெய்ய வேண்டிய நிலை ஏற்படுமானால் அதற்கு இவ்விருவரும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் இவ்விவகாரத்தை அவர்களிடம் சொல்ல வேண்ட்டம் என்கிறார் தம்பி பிரபாகரன்.

அந்த வேளையில் பிரபாகரன் சொல்வது எமக்கு நியாயமாகப் பட்டது இதனால், நாம் இந்தச் செயலுக்குச் சம்மதம் தெரிவித்தோம்.

தொடர்ச்சியான எமது வற்புறுத்தலின் பேரில் மைக்கல் புளியங்குளத்திற்கு எம்மிடம் பேசுவதற்காக வருகிறார். யானைகளும், விசப் பாம்புகளும் நடமாடும் இருண்ட காட்டினுள் மயான அமைதி நிலவுகிறது. தீயின் கோரம் நிலவின் ஒளியை விழுங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மைக்கலுடன் உரையாடுகிறோம். பின்னர், நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம்……

(மூன்றாம் பதிவு சில நாட்களில்..)

குறிப்பு : இதனை இனொயொருவில் இருந்து ஏனைய இணையங்களில் மீள் பதிவிடுபவர்கள் கட்டுரைக்கான பின்னூடங்களில் பொறுப்புணர்வுடன் கட்டுரையை மேலும் முழுமையான ஆவணமாகச் செழுமைப்படுத்துமாறும், ஆக்கபூர்வமற்ற, மன உழைச்சலைத் தூண்டும் கருத்துக்களைத் தவிர்ர்குமாறும் வேண்டுகிறோம்.http://inioru.com/?p=9141

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பு : இதனை இனொயொருவில் இருந்து ஏனைய இணையங்களில் மீள் பதிவிடுபவர்கள் கட்டுரைக்கான பின்னூடங்களில் பொறுப்புணர்வுடன் கட்டுரையை மேலும் முழுமையான ஆவணமாகச் செழுமைப்படுத்துமாறும்இ ஆக்கபூர்வமற்றஇ மன உழைச்சலைத் தூண்டும் கருத்துக்களைத் தவிர்ர்குமாறும் வேண்டுகிறோம்.hவவி:ஃஃinழைசர.உழஅஃ?pஸ்ரீ9141 

இந்தத்தொடர் சர்சசைக்குரிய தொடராக வருவதற்குரிய

தொனி தென்படுகிறது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

குறிப்பு : இன்னமும் பாதுகாப்பற்ற சூழலிலேயே வாழும் ஐயர், தனது முழுமையான இயற்பெயரைத் தவிர்த்தே வருகிறார். தமிழ் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வரலாற்றின் ஒரு பெரும் பகுதி ஐயரோடு பிணைந்திருக்கிறது. ஐயரை அறியாத போராட்ட முன்னோடிகளைக் காண்பது அரிது. ஆரம்ப காலங்களில் அமைப்பின் பணத்தேவைகளுக்காக கோவிலில் பிராமணர் தொழிலை மேற்கொண்டவர் என்பதால் இவர் தனக்குத் தானே சூட்டிக்கொண்ட பல்லவன் போன்ற புனை பெயர்கள் கூட நிலை பெறவில்லை. ஐயர் அவரின் “ஐயர்” அடையாளத்தைக் கிஞ்சித்தும் விரும்பாதவர். நாத்திகர். தவிர, இலங்கைச் சாதியமைப்பில் பிராமணர்கள் ஆதிக்க சாதியினர் அல்லர். தமிழ் நாட்டின் ஐயர் அடையாளத்திற்கும் இலங்கையில் அதன் பாவனைக்கும் மலையளவு வேற்றுமைகள் உள்ளன. -இனியொரு.

நானும் சற்குணமும் காட்டிலுள்ள குடிசையில் அமர்ந்திருக்க, பிரபாகரனும் குமரச்செல்வமும் மைக்கலைச் சற்றுத் தொலைவே கூட்டிச்செல்கிறார்கள். மைக்கலைக் கூட்டிச்சென்ற இரண்டு நிமிடத்திற்கு உள்ளாகவே துப்பாக்கி வெடிச் சத்தம் ஒன்று கேட்கிறது. நாம் அதிர்ந்து போகிறோம். மைக்கல் தான் பேசுவது எதையுமே கேட்கிறாரில்லை. அவர் இயக்கத்தை விட்டு வெளியே போகப்போவதாகச் அடம்பிடித்தார் அதனால் நான் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்கிறார்.

ஆம், அது நடந்துவிட்டது மட்டக்களப்பில் தமிழுணர்வுப் போராட்டங்களை நடத்திய மைக்கல் இப்போது எம் மத்தியில் இல்லை. வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங் முறைகளையும் உருவமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.

இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.

இதனால் இந்தக் கொலையெல்லாம் எமக்கு நியாயமாகத் தான் தெரிந்தன. எமது இரகசியங்களைத் தெரிந்து வைத்திருந்த மைக்கல் வழியாக இவையெல்லாம் வெளியே செல்லுமானால், நாம், நமது இருப்பிடங்கள் காட்டிக்கொடுக்கப்படும். நாம் கனவுகண்ட தமிழ் ஈழம் சிதைக்கப்படும். இவ்வாறு தான் நானும் பிரபாகரனும் ஏனையோரும் சிந்தித்திருந்தோம்.

என்ன செய்வது எமது ஆரம்ப அரசியல் தவறுகள் கொலைகளை அங்கீகரிக்கும் வரை எம்மை நகர்த்தி வந்திருக்கிறது என்பதை பிற்காலங்களில் சுயவிமரசன அடிப்படையில் பார்த்திருந்தாலும், அவ்வேளையில் எமக்கு அது நியாயமாகத் தான் தெரிந்தது.

சில நிமிடங்களின் முன்னர் எம்மோடு பேசிக்கொண்டிருந்த மைக்கல் இப்போது எம்மோடு இல்லை. இதயம் கனத்தது. தமிழீழக் கனவுக்காக இதையெல்லாம் தாங்கிக் கொண்டோம். பின்னர் சற்குணம், நான், பிரபாகரன், குமரச்செல்வம் ஆகிய நால்வரும் சேர்ந்து இரவிரவாக மைக்கலின் உடலைக் காட்டினுள் எரிக்கிறோம். கோரம் கவ்விய இரவு! ஓசைபடாத தமிழீழக் கனவு மட்டும் தான் எம்முள் ஒளிர்விட்டுக் கொண்டிருந்தது!!

நாம் உறங்கவில்லை. தம்பியும் குமரச்செல்வமும் புகையிரத்தில் ஏறி யாழ்ப்பாணம் திரும்புகின்றனர். நானும் சற்குணாவும் காட்டினுள் தொடர்ந்து தங்கியிருந்து இறுதியில் எரிந்து முடியும் வரை காத்திருந்துவிட்டு மதியப் புகையிரதத்தில் ஏறுகிறோம். யாழ்பாணம் நோக்கி எமது புகையிரதம் எமது நினைவலைகளோடே நகர்ந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் எமது நான்குபேரையும் தவிர வேறு எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடி கிடைக்கிறது.

அவர்கள், எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாகி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிபிற்கு வருகிறோம்.

இந்த முடிபின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசுப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும், நட்புசக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ TELO என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும், தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்.

பிரபாகரனோ அல்லது புதிய புலிகள் அமைப்பிலிருந்த எவருமோ அவரை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம்.தங்கத்துரை குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையையும், வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்.

இவ்வேளையில் எமக்கு இன்னொரு பிரச்சனை எழுகிறது. மைக்கலைக் கொலைசெய்வதில் பங்காற்றிய குமரச்செல்வம் எம்முடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டமை எமக்கு அதிர்ப்தியையும் பய உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அவரைப் பலதடவை நாம் நேரடியாகவும், மற்றவர்களூடாகவும் அணுகிய வேளைகளிலெல்லாம், சுகவீனம், வேறு வேலைகள் போன்ற காரணங்களைக் கூறியனுப்பினார். சில மாதங்களில் தொடர்புகளை முற்றாகவே துண்டித்துக் கொள்கிறார். இதே வேளை இயக்கத்திற்குரிய இருபதாயிரம் ரூபா வரையிலான பணமும் அவரிடம் இருந்தது. அவற்றை எம்மிடம் ஒப்படைக்கவோ அதற்குரிய செலவீனங்களுக்குரிய காரணங்களை முன்வைக்கவோ அவர் முன்வரவில்லை.

நாம் விசாரித்த வரையில் அவர் மேடை நாடகக் கலைஞனாகவும் இருந்ததால் எமது பணத்தை வைத்து தனது நாடகத் தொழிலில் முதலிட்டு செலவாக்கியிருந்தார் எனத் தெரிந்து கொண்டோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குலம் கூட மைக்கல் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறார். ஆக, நான் மற்றும் குலம் ஆகியோர் மைக்கலைப் போலவே குமரச்செல்வமும் தவறிழைத்திருக்கிறார் அவரும் கூடக் காட்டிக் கொடுப்பாளனாக மாறலாம் என்று பிரபாகரனிடம் சுட்டிக்காட்டுகிறோம்.

மைக்கல் சுடப்பட்டது சரியானால் குமரச்செல்வமும் சுடப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையை முன்வைக்க, பிரபாகரன் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார். குமரச்செல்வம் பிரபாகரனின் நெருங்கிய நண்பரும் ஒரே ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். அவ்வேளைகளில் தனக்குப் பிறகு குமரச் செல்வத்தையே எல்லா விடயங்களிலும் முதன்மைப் படுத்துவார்.

இறுதியில், குமரச்செல்வத்தைப் பேசுவதற்கு அழைத்தால் அவர் வர மறுத்துவிடுவார், தவிர வல்வெட்டித்துறையில் வைத்து பொதுமக்கள் மத்தியில் சுட்டால் ஊரில் பிரச்சனையாகிவிடும் அதனால் வேறு சந்தர்ப்பங்கள் வரும் போது கொலை செய்துவிடலாம் என்கிறார். ஆனால் இறுதிவரை அவர் கொலை செய்யப்படவே இல்லை.

இப்போது மத்திய குழுவில் அவரும் இல்லை. உதயகுமார் தான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன் எனக் காரணம் காட்டித் தொடர்புகளைக் குறைத்துக் கொள்கிறார். பின்னதாக முற்றாக தொடர்பற்றுப் போகிறார். சில மாதங்களுக்கு உள்ளாகவே பட்டண்ணாவும் உடல் நிலை குன்றியிருந்த காரணத்தால் தொடர்புகளை நிறுத்திக் கொள்கிறார். இப்போது மத்திய குழுவில் நானும் தம்பி பிரபாகரனும் மட்டுமே எஞ்சியிருந்தோம். ராகவன் போன்றோர் இன்னும் மாணவர்களாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த சூழலில் ஆதர்வாளர் மட்டத்திலேயே தொழிற்பட்டனர்.

எமது ஆரம்ப உறுப்பினர்களின் நிலையற்ற தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தில் தனது குடும்பச் செலவிற்கு என்று ஐந்தாயிரம் ரூபா பெற்றுக்கொண்ட ஜெயவேல் இப்போது நம்மை நோக்கி வருவதே இல்லை. அவர் ஒரு மீன் பிடித் தொழிலாளி தான். எம்மிடம் பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதை வைத்து ஆடம்பரமாக செலவாடித் திரிவதாக நாம் தகவல் அறிந்திருந்தோம். இவர் பண்ணைக்கு வருவார் என வவுனியா புகையிரத நிலையத்தில் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவத்தை முன்னமே கூறியுள்ளேன். இவையெல்லாவற்றையும் பிரபாகரன் மறுபடி நினைவுறுத்தி, அவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறார்.

பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.வழமை போலவே எமக்கும் அது நியாயமாகப் படுகிறது. ஆக, கொலை செய்யப்பட வேண்டும் என்ற முடிபுக்கு வருகிறோம்.

ஜெயவேலைக் கொலைசெய்வதற்கான பொறுப்பை சற்குணத்திடமும் என்னிடமும் தம்பி பிரபாகரன் ஒப்படைக்கிறார். ஆரம்பத்தில் நாம் தயங்கினாலும், பின்னர் பிரபாகரனின் தொடச்சியான வற்புறுத்தியதால் இணக்கம் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னதாக ஜெயவேலைச் சுட்டுக் கொலை செய்வதைவிட விஷம் கொடுத்துக் கொலைசெய்வதே சிறந்த வழியென்று பிரபாகரன் எமக்கு அறிவுறுத்துகிறார்.

அதற்கான விளக்கத்தை அவரே முன்வைக்கிறார். ஜெயவேல் கராத்தேயில் தேர்ச்சி பெற்றவர். நாங்களோ கொலைக்குப் புதியவர்கள்; அனுபவமற்றவர்கள். ஆக, நாம் கொலைசெய்ய முற்படும் போது அவர் எங்களை மீறி எம்மைத் திருப்பித் தாக்கிவிடுவார் என்பதே பிரபாகரனின் அந்த விளக்கமாக இருந்தது.

இது கூட எமக்கு நியாயமாகத் தான் தெரிகிறது. பின்னதாக ஜெயவேலைப் புளியங்குளத்திற்கு அழைக்கிறோம். கொழுத்தும் வெயிலில், நானும் சற்குணமும், குலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நேரத்தை விரட்டியடித்துக் கொள்கிறோம். நேரம் நகர்கிறது. ஒரு புறத்தில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றி முடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கம். மறுபுறத்தில் எம்மைத் தடுக்கும் மனிதாபிமானமும் பய உணர்வும். எமது நீண்ட மனப் போராட்டம் மூளையில் உட்கார்ந்து சோகமாய் குடைந்து கொண்டிருக்க ஜெயவேல் வருகிறார். நாம் எதிர்பார்த்திருந்தது போலவே அவர் நேரத்தைத் தவறவிடாமல் அங்கு வந்து சேர்கிறார்.

அன்றெல்லாம் பல்தேசியக் கம்பனிகளின் கோலாவும், பன்டாவுமா இருக்கும்? வெறும் சோடா தான். இலங்கையின் தேசிய உற்பத்தி! நாம் ஒவ்வொரு சோடாவையும் வாங்கிக் கொள்கிறோம். அதில் ஒன்று ஜெயவேல் அருந்துவதற்கானது. அது மட்டுமல்ல அது அவரின் உயிரையும் அருந்தப்போகும் பானம். ஆம் அதற்குள் நஞ்சைக் கலந்திருந்தோம். சில நிமிடங்களில் எமது கண்முன்னேயே ஜெயவேல் மரணிக்கப் போகிறார்.

ஜெயவேல் எம்மோடு உட்கார்ந்து கொண்டு நண்பர்கள் போல உரையாடுகிறோம். சோடாவை அவர் தனது வாய்க்கருகே கொண்டு போகிறார். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். சோடாவைச் சுவைத்த ஜெயவேல் அது கசக்கிறது என்றும் தனக்குக் அருந்த விருப்பமின்றி இருப்பதாகவும் கூறி அங்கேயே வைத்துவிட்டு சில மணி நேரங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். ஜெயவேல் இறுதியில் தப்பிவிட்டார். ஒரு கொலை நிகழவில்லை. அவர் நின்று, நேர்கொண்ட பார்வையுடன் எம்மை விட்டு நகர்கிறார்.

இதே காலப் பகுதியில், சில இளைஞர்கள் இணைந்து உரும்பிராய் பெற்றோல் நிலைய நடராஜாவை கொலை செய்கின்றனர். இந்தக் கொலையை மேற்கொண்டவர்கள் உரும்பிராய் பாலா, தங்கா , பேபி சுப்பிரமணியம் ஆகியோர். நான் அறிந்தவரை பேபி சுப்பிரமணியம் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் இதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்றே கூறப்பட்டது. தங்கராஜாவும், பாலாவும் இதில் நேரடியாக ஈடுபட்டனர் என்பது உண்மை.

இந்த நடராஜா என்பவரே சிவகுமாரனைக் காட்டிகொடுத்தார் என்பதே அவர் மீதான குற்றசாட்டு. இது தவிர அப்போது ஆட்சியிலிருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும் கூட. கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய இந்த மூவரும் தன்னிச்சையாகவே இதை மேற்கொண்டனர். இவர்கள் எந்த நிறுவன மயப்பட்ட அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல எனினும் இவர்கள் மூவருமே தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள்.

உரும்பிராய் பாலா இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விபரம் தெரியவர அவர் தேடப்படுகிறார்.சில மாதங்களின் பின்னர் இவ்வாறு தேடப்படும் சந்தர்ப்பத்திலேயே பாலா, பேபி சுப்பிரமணியம், தங்கா ஆகிய மூவரும் எம்மைப்பற்றி அறிந்து எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தொடர்புகளூடான உரையாடல்களின் பின்னர் அவர்களும் எம்மோடு இணைந்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதே வேளையில் லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்த விச்சேஸ்வரன் என்ற விச்சு என்பவரும் எம்மோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்.

இப்போது நாம் இருவரும் தான் எல்லா முடிபுகளையும் மேற்கொள்வோம். மறு புறத்தில் எமது வேலைப் பழு அதிகமாகிக் கொண்டு செல்கிறது. பண்ணைகளை விஸ்தரித்தல், இராணுவப் பயிற்சி, புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளல், பணத்தை ஒழுங்கு படுத்தல் என்ற பல்வேறு சுமைகள் எமது இருவர் பொறுப்பிலும் வந்து சேர்கிறது.

துரையப்பா கொலைச் சம்பவத்தில் திட்டமிடல் ஒழுங்குபடுத்தல்களுக்கு உதவிசெய்த நாகராஜாவும் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார். பின்னர் அவர் கொழும்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் வேலை பார்த்துக் கொண்டே எம்மோடு தொடர்புகளைப் புதுப்பித்து இணைந்து கொள்கிறார். இதே வேளை பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்கான காணியைப் பெற்றுக்கொள்ள உதவிய கணேஸ் வாத்தி எம்மோடு தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்கிறார். இறுதியில் இந்த இருவரும் புதிய புலிகளில் இணைந்து கொள்கிறனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தமது உழைப்பிற்கான தொழிலைக் கைவிட்டாமலே பகுதி நேரமாக எம்மோடு உறுதியாகப் பங்காற்ற முன்வருகின்றனர்.

இரண்டு பேராகச் சுருங்கிப் போன மத்திய குழு தவிர, பண்ணையில்ருந்த உறுப்பினர்கள் முழு நேரமாக பண்ணையில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில் புதிய மத்திய குழு ஒன்றைத் தெரிவு செய்யும் முடிபிற்கு வருகிறோம்.

அந்த மத்திய குழுவில், பேபி சுப்பிரமணியம், நாகராஜா, கணேஸ் வாத்தி, தங்கா, விச்சு, நான், பிரபாகரன், , குலம், பின்னதாக இந்தியாவிலிருந்து வந்து திரும்பி வந்த பற்குணம் ஆகியோர் அங்கம் வகிக்கிறோம். இந்த மத்திய குழுவில் தான் புதிய புலிகள்(TNT) என்ற அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) என்று ” உத்தியோக பூர்வமாக” பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. 1976 இறுதிப்பகுதிதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பமாகவும் அமைகிறது. இந்த மத்திய குழுத் தெரிவுக் கூட்டம் வவுனியா பூந்தோட்டம் பண்ணையில் தான் நடைபெறுகிறது. இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன்மொழிகிறோம். நானும் கூடத் தான். எமது இயக்கத்தின் புதிய பெயரைத் தெரிவு செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டு விவாதிக்கிறோம். வெவ்வேறு பெயர்கள் சொல்லப்பட்டு இறுதியாக பல்வேறு தெரிவுகளின் கூட்டாக “தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்” என்ற பெயர் உருவாகிறது.

மத்திய குழு உறுப்பினர்கள் குறித்த சிறு விபரக் குறிப்பு, இந்தியா சென்றிருந்த பற்குணத்தின் மீழ் வருகை, தமிழீழ விடுத்லைப் புலிகளின் ஆரம்பக் குறிப்புகள், சில தாக்குதல் சம்பங்கள் போன்றன பகுதி நான்கில் வரும்…

பின்னூட்டங்களுக்கான குறிப்பு:

தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பகால நிகழ்வுகள் குறித்த இந்தத் தொடரின் பிரதான நோக்கம் இதனை முழுமைப்படுத்தி ஆவண நூலுருவில் வெளிக்கொணருவதே. இதற்கான ஆரம்ப நிலை முயற்சி மட்டுமே இத்தொடர். இதனூடாக பரந்துபட்ட அனுபவத் தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்வதும், நுண்ணிய தகவல்களை உள்வாங்கிக் கொள்வதும் அவற்றினூடாக எனது நூலை முழுமைப்படுத்துவதுமே எனது நோக்கம். ஆக, ஏனைய வாசகர்களும் ஆர்வலர்களும், என்னோடிணைந்திருந்த சமகாலத்தவர்களும், தகவல்களை மேலும் நுண்ணியமானதாக்க அவர்களின் பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இப்போது எனது குறிப்புகள் அனைத்தும் எனது நினைவுகளின் அடிப்படையிலிருந்தே பதியப்படுகின்றது. போராட்டத்தின் அவலங்களின் நடுவே எனது முன்னைய எழுதப்பட்ட ஆவணம் தொலைந்து போனது துயர் மிக்க சம்பவமாகும்.

நூலுருவில் வெளியிடுவதற்கு முன்பதாக,

1. பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள், புகைப்படங்கள் போன்ற ஆவணங்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

2. என்னோடான சமகாலத்தவர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்தி, திகதி வாரியான தகவல்களைத் திரட்டுகிறேன்.

இந்த முயற்சிகளுக்கு எனது இணையத் தொடர் பங்களிப்பு வழங்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

திருநாவுக்கரசு என்பவர் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதைச் சுட்டிக்காட்டிய வாசகருக்கு எனது நன்றிகள். காங்கேசந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நான் குறிப்பிட்ட காலப்பகுதியில் காங்கேசந்துறையில் தேர்தலில் போட்டியிட்டு, பின்னதாகத் தோற்றுப் போனவர்.

தவிர, இன்று ஐரோப்பா சார் புலம் பெயர் இணையத் தளங்களிடையே நிகழும் குழுவாத கோஸ்டிச் சண்டைக்குள் வரலாற்றுப் பதிவுகள் அமிழ்ந்து போகாது, சமூக உணர்வுடன் அனைவரும் பங்களிக்க முன்வருவதனூடாக புதிய சிந்தனை முறையினை வளர்க்கலாம் என்பதே எனது கருத்து.

http://inioru.com/?p=9321

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகம் 3 பகுதிகளையும் ஒன்றாய் இனைத்தால் நல்லம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதி ஒன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

இந்த இரண்டு இணைப்புகளும்(LINK) சரியாக இல்லை...

மேற்கூறியது போலவே அனைத்து பகுதிகளையும் இணைத்தால் படிக்க எளிதாக இருக்கும்....

மேலும் புதிய பகுதிகள் வந்தால் அவறையும் இவற்றுடன் இணைப்பது நலம்.

Link to post
Share on other sites

காலம் சென்ற புஷ்பராஜா எழுதிய பொய்கள் நிறைய நிறைந்த புலம்பல்களுக்கு பிறகு, இன்னொரு புலம்பல்...என்றுதான் உண்மையான முழுமையான ஈழப் போராட்ட வரலாறை யார் எழுதுவார்களோ தெரியாது

செட்டியை தலைவராக பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார் என்ற வரியில் இருந்து ஆரம்பிக்கின்றது இவரின் நயவஞ்சக வலை.........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

நான் அறிந்தவரை ஜயர்மீது பிரபா மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என அறியமுடிகிறது. அது கடைசி வரைக்கும் இருந்தது. ஐயரை போட்டுத்தள்ள தலைவருக்கு ஆலோசனைகள் ஆரம்பத்தில் வழங்கப்பட்டபோது தலைவர் அதனை மறுத்திருக்கிறார். ஐயர் பின்னாட்களில் புலி எதிர் அணிக்குப்போன பிறகும் அவர்மீதான தலைவரது அபிமானம் தொடர்ந்தது. ஆரம்பகாலங்களில் தலவரை அரவணைத்தவர் ஐயர் என்பதே அதன்காரணம்.

மேலும் செட்டி விடயம் பரவலாக யாவரும் அறிந்ததுதான். ஒரு பதின்ம இளைஞனுக்கே இருக்கக்கூடிய வேகம் பதைபதைப்பு என தலைவருக்கும் இருந்திருக்கலாம். செயல் செயல் செயல் என்ற அச்சிலேயே சுழன்ற தலைவர் செயற்படத்தகுதியானவர் என தான் நம்பும் மனிதர்களோடு நெருங்கியிருந்ததில் தவறெதும் தெரியவில்லை. அதை மறைக்க வேண்டிய தேவையும் இல்லை. சும்மா ஒரு திட்டம்போடுவதற்கே அவரை வைத்து செய்யலாமா இவரை வைத்து செய்யலாமா என்ற ஆயிரம் பதைபதைப்பு நமக்கிருக்கும் போது தலைவருக்கு எந்தளவு படபடப்பும் துடிப்பும் இருந்திருக்கும்..?

Link to post
Share on other sites

காலம் சென்ற புஷ்பராஜா எழுதிய பொய்கள் நிறைய நிறைந்த புலம்பல்களுக்கு பிறகு, இன்னொரு புலம்பல்...என்றுதான் உண்மையான முழுமையான ஈழப் போராட்ட வரலாறை யார் எழுதுவார்களோ தெரியாது

செட்டியை தலைவராக பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார் என்ற வரியில் இருந்து ஆரம்பிக்கின்றது இவரின் நயவஞ்சக வலை.........

நிழலி இப்பிடித்தான் கட்டுரையில் இருக்கு:

பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

----

யார் எதை எழுதினாலும் - உண்மை பொய்களுக்கு அப்பால் - பிரபாகரன் என்கிற பெயர் ஒட்டுமொத்த தமிழினத்தினதும் ஒரு குறியீடாகவே இருக்கும். அந்தக் குறியீடு - அதன் பலம் பலவீனங்கள் என்பவற்றுக்கு அப்பால் - தமிழ்ச் சமூகத்துக்குள் ஆழ வேரூன்றியிருக்கிறது என்பதே உண்மை. பிரபாகரனால் தலைமதாங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தோல்விகள் - அதன் கசப்பான முடிவுக்கும் அப்பால் - தமிழ்ச் சமூகம் தொடரும் விடுதலைப் போராட்டத்தில் பிராபாகரனின் ஆளுமை தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவே இருக்கும். பிரபாகரனை விமர்சிக்கிறவர்கள் + பிரபாகரனால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கிறவர்கள் + எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நினைக்கிறேன், உண்மையான போராட்டமும் அதற்குரிய ஆரம்பகாரனங்களும் , ஆரம்ப போராளிகளைப்பற்றிய விபரங்களும் எப்பவாவது வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே என்று. இதில் தங்கத்துரை, குட்டிமணியை பிரதானமாக கள்ளக்கடத்தல்காரர்கள் எனவும், பிரபாகரன் அதில் இருந்து விலகியவர் எனவும் குறிப்பிடுகிறார். என்ன நோக்கத்திற்காக அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் நான் வாசித்தேன், முறிந்த பனை என்ற புத்தகத்தில் (அது ஒரு பூரணமானது என்று வாதிடவரவில்லை) தங்கத்துரைக்கு கோட்டில் தீர்ப்பு வழங்கியபோது அவர் ஆற்றிய உரை மிகவும் உணர்வு பூர்வமானதும், தமிழரின் வாழ்வியலை, அவர்களின் உரிமைகளை ஒரு முழுமையான வகையில் சொன்னதாவும், எழுச்சி மிக்கது எனவும் பிற்காலத்தில் அவற்றை (அந்த உரையை ) பலரும்(பிரபாகரன் உட்பட) பலச்சந்தற்பங்களிலும் பாவித்தாக. அதேபோல், குட்டிமணி அந்தநேரத்தில் கூட தனது கண்ணை தானம் செய்யமுன்வந்தது பலருக்கும் தெரிந்ததே..அவ்வாறானவர்களை பிரதானமாக கள்ளக்கடத்தல்காரர் என்பது சரியோ என எனக்கு படவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானும் நினைக்கிறேன், உண்மையான போராட்டமும் அதற்குரிய ஆரம்பகாரனங்களும் , ஆரம்ப போராளிகளைப்பற்றிய விபரங்களும் எப்பவாவது வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவே என்று. இதில் தங்கத்துரை, குட்டிமணியை பிரதானமாக கள்ளக்கடத்தல்காரர்கள் எனவும், பிரபாகரன் அதில் இருந்து விலகியவர் எனவும் குறிப்பிடுகிறார். என்ன நோக்கத்திற்காக அவ்வாறு குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் நான் வாசித்தேன், முறிந்த பனை என்ற புத்தகத்தில் (அது ஒரு பூரணமானது என்று வாதிடவரவில்லை) தங்கத்துரைக்கு கோட்டில் தீர்ப்பு வழங்கியபோது அவர் ஆற்றிய உரை மிகவும் உணர்வு பூர்வமானதும், தமிழரின் வாழ்வியலை, அவர்களின் உரிமைகளை ஒரு முழுமையான வகையில் சொன்னதாவும், எழுச்சி மிக்கது எனவும் பிற்காலத்தில் அவற்றை (அந்த உரையை ) பலரும்(பிரபாகரன் உட்பட) பலச்சந்தற்பங்களிலும் பாவித்தாக. அதேபோல், குட்டிமணி அந்தநேரத்தில் கூட தனது கண்ணை தானம் செய்யமுன்வந்தது பலருக்கும் தெரிந்ததே..அவ்வாறானவர்களை பிரதானமாக கள்ளக்கடத்தல்காரர் என்பது சரியோ என எனக்கு படவில்லை.

அவர் உண்மையாய் நடந்ததை தான் எழுதுகிறார்[எழுதுவார் என நம்புவோம்]கதை எழுதவில்லை தானே...குட்டிமனி தங்கத்துரை உண்மையாகவே கடத்தல் தொழில் செய்தவர்கள் தானே அதைத் தான் எழுதியிருந்தார்...அதற்காக அவர்கள் கெட்டவர்கள்[தங்கத்துரை]என அவர் கூறவில்லை.

Link to post
Share on other sites

யார் எதை எழுதினாலும் - உண்மை பொய்களுக்கு அப்பால் - பிரபாகரன் என்கிற பெயர் ஒட்டுமொத்த தமிழினத்தினதும் ஒரு குறியீடாகவே இருக்கும். அந்தக் குறியீடு - அதன் பலம் பலவீனங்கள் என்பவற்றுக்கு அப்பால் - தமிழ்ச் சமூகத்துக்குள் ஆழ வேரூன்றியிருக்கிறது என்பதே உண்மை. பிரபாகரனால் தலைமதாங்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தோல்விகள் - அதன் கசப்பான முடிவுக்கும் அப்பால் - தமிழ்ச் சமூகம் தொடரும் விடுதலைப் போராட்டத்தில் பிராபாகரனின் ஆளுமை தவிர்க்கப்பட முடியாத ஒன்றாகவே இருக்கும். பிரபாகரனை விமர்சிக்கிறவர்கள் + பிரபாகரனால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் போராட்டத்தை விமர்சிக்கிறவர்கள் + எதிரிகள் கூட இதை மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

மிகச் சரியாகச் சொன்னீர்கள் இளைஞனவர்களே!

இதுவே உண்மையுங்கூட

விடுதலையை முன்னெடுத்துச் செல்லப் பலர் புறப்பட்டார்கள். ஆனால்,

பாதிவழியிலே............

விலைபோய்.................

சுயநலம் சார்ந்து..............

கொள்கைசார்ந்து இடைவெளிகள்.............

யார்பெரிது என்ற போக்கு..........

அதீத நம்பிக்கை...................

அவநம்பிக்கை...................

ஈழத்தேசியமா?.....................

தமிழீழதேசியமா?..............

மக்கள் போராட்டமா?.........

ஆயுதப் போராட்டமா?........

இப்படிப் பலவாகி நின்றபோது,

இவற்றைக் காலவரையறைகளோடு கடந்து பெரும் வலி சுமந்து தமிழினம் பல்வேறு அரப்பணிப்புகள் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை நிறுவியுள்ளது. இந்த நிறுவுதலின் குறியீடாய் நிற்பது. எங்கள் தேசியத்தவைரே!

சுயமாகிச் சுயம்புவாகி

இயலாமையை இல்லாமையாக்கி

முயல்வோம் முடிப்போம்

தமிழன்னைக்கு முடி சூட்டுவோம்

என்று தமிழினத்துள் சுடரும் ஒளியாக என்றும் அவரே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தலையங்கத்துக்குள் எழுதுவது மிகவும் கடினமானதொரு காரியம் என்று தெரிந்தும் ஏன் முதல் ஒரு பதிவை இட்டேன் என்று கவலைப்படுகிறேன். முக்கிய பிரச்சனை என்னவென்றால் ஏதோொல்லப்போக ஏதோவாக வந்துமுடியும். கருத்துக்களை விளங்கிக்கொள்வதில் உள்ள இடைவெளிகளை வாய்ப்பாகபயன்படுத்தி சிலர் தெரிந்தும் எழுதுவார்கள், சிலர் தெரியாதுபோலும் எழுதுவார்கள். பிரபாகரன் ஒரு குறியீடு என்று சொல்லுவதனால் கடந்த காலம் பற்றி எழுதுவது எல்லாம் சரியென்று கருதுவது எந்தளவிற்கு சரி என்று எனக்கு தெரியாது, ஆனால் நான் நினைக்கிறேன் பிரபாகரனை விரும்புகிறவர்களுக்கும்/ விரும்பாதவர்களுக்கும் தெரிந்திருக்கும், பிரபாகரன் விரும்புவதில்லை தன்னை ஒரு யுகபுருஷர் என்றோ, பிறவி வீரன் என்றோ குறிப்பிடுவது. பிற்காலத்தில் பிரபாகரன் ஒரு பேட்டியில் சொன்னது "இப்ப என்னைப்பற்றி, எமது போராட்டம் பற்றி எழுதுபவர்கள், ஆராச்சி செய்பவர்கள் நான் ஒரு பிறவி போர்வீரன் என்றும், நாங்கள் போரடப்போனபோதே எங்கள் போராட்டம் இவ்வாறுதான் வளரும்/ வரும் என்று எதிர்பார்த்தனாங்கள் என்று சொல்ல்கிறார்கள் ஆனால் அது அப்படியல்ல, எங்களின் ஆரம்ப இலக்கு/நோக்கம் எங்களை அழிக்கிற,எதிரியின் ஒருவர், இருவரையாவது கொல்லவேண்டும் அல்லது காயப்படுத்த வேண்டும்" அந்த உரை கனடா TVI நிறுவனத்திடம் இருக்கும்...அவர்கள்தான் அதை ஒளிபரப்பியவர்கள். ஆக பிரபாகரனை வாழ்த்துவதற்காக சம காலத்தில் வாழ்ந்தவர்களின்/ வாழ்கின்றவர்களின் வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்.

இப்படியான முயற்சிகளை குறைகூறுவதல்ல எனது விருப்பம், மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்கிறவிடயத்திலாவது உண்மை(கதை) சொல்லவேண்டும்.

யாரும் கதை சொல்லலாம் மூலக்கதை மாறதமட்டும்.

வேறு பலஇடங்களிலும் பலரும் பாவிப்பதால் சொல்லுகிறேன், "நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத்துக்கிற" மாதிரி பிரபாகரனை, அல்லது புலிகளை போற்றி பாடுகிற இடத்தில் கருத்தெழுதினால் அதற்கு எதிரானவர்கள் என்கிற அதிமேதவிதனமான கருத்துத்க்கள் ஆரோக்கியமானவை அல்ல. 30 வருட போராட்டம் நாங்கள்தான் நடத்தினாங்கள் என்று சொல்லவேண்டும் என்றால் அந்த 30 வருட அழிவுகளுக்கும் போருப்பெடுப்பதுடன் அதற்குரிய விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னவோ அது இரண்டும் உண்மையல்லவே... இதையே அர்ஜுன் வேறுவிதமாக இங்கு குறிப்பிடிருந்தார், ஏனோ அந்த கருத்து இங்கு நீக்கப்பட்டுள்ளது...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்ற தேவைக்காக சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிர்ப்பந்ததில் ஊடகங்களும் இணயங்களும் இருப்பது தவிர்க்க முடியாதிருக்கின்றது.இதனால் சில உண்மைகளும்,சில சொல்லப்படவேண்டிய கருத்துகளும் கூட அடிபட்டு போய்விடுகின்றன.உதாரணமாக கிளிநொச்சியை இராணுவம் பிடிக்கப்போகின்றது என்று சாதாரண ஒரு பொது மகனுக்கும் தெரிந்துவிட்டஒரு நிலயில் T.V.அஜ்யில் வந்து ஆய்வாளர்கள் அவர்களுக்கே தெரிந்துகொண்டு படு பொய்யை சொல்லுகின்றார்கள்,அதை நடாத்துபவர் இலை மறை காயாக நாங்கள் இப்படித்தான் நடாத்த வேண்டும் தேசியம் என்ற தேவைக்காக என்கின்றார்.இதனால் பலர் ஆதங்கத்தில் தாங்கள் சொல்ல வேண்டிய கருத்தை மாற்று ஊடகங்களில் வந்து சொன்னார்கள்.

தேவை என்பது ஒன்று,உண்மை என்பது ஒன்று. இரண்டும் எந்த நேரமும் ஒன்றாக இருப்பதில்லை.

30 வருடப் போராட்டம்.வெவ்வேறு காலக்கட்டத்தில் பலர் இதில் இணந்திருக்கின்றார்கள்.70 பதுகளில் இருந்து தலைவருடன் இருந்தவர்களுக்கும்,2000 பின் இணைந்து தலைவருடன் இருந்தவர்களுக்கும் தலைவருடன் பழகுவதில் கட்டாயம் வித்தியாசம் இருக்கும்.இதை விளங்கிக்கொள்ளவிட்டால் இவர் யார் தலைவரை பற்றி இப்படி கதைக்க என்ற எண்ணம் கட்டாயம் வரும். (குசேலன் படம் பார்க்கவும்)

எனக்கு எனது நாடும்,மக்களும் தான் முக்கியமே தவிர யாரால் விடுதலை வந்தது என்பதல்ல முக்கியம். நான் எனது எண்ணத்தையும்,எனக்கு தெரிந்த உண்மைகளையும் தான் எழுதுகின்றேன்.தேசியம் என்று சளாப்பி எழுதும் தேவை எனக்கில்லை. அதை விட்டுவைப்பதும் தூக்குவதும் நிர்வாகத்தின் வேலை.

நன்றி வொல்கானோ உங்கள் கருத்திற்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முக்கோண வலைப்பினலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

1975 ஆம் ஆண்டு ஜீலை மாதம் துரையப்பா கொலை செய்யப்பட்ட நிகழ்வானது இரண்டு பிரதான கருத்தாக்கத்தின் தோற்றுவாயாக அமைந்த்து.

1. தமிழ் மக்கள் மத்தியில், சிங்கள அடக்குமுறைக்கு எதிராக எதிர்த் தாக்குதல் நடத்த எமக்கு மத்தியில் சிலர் தயாராக உள்ளனர் உணர்வு.

2. ஒரு புறத்தில் சிறிமாவோ தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாகவும் மறுபுறத்தில் சிங்கள அடிப்படை வாதிகள் மத்தியில் பய உணர்வையும் உருவாக்கியிருந்தது.

தமிழ் உணர்வாளர்களும், தேசிய வாதிகளும் இப்படுகொலையை பெரும் வெற்றியாகக் கருதினார்கள். இவ்வாறு முழுத் தேசமும் தமிழர்களின் எதிர்ப்புணர்வை ஒரு புதிய பரிணாமத்தில் அலச ஆரம்பித்திருந்தாலும், எம்மைப் பொறுத்தவரை அதற்க்குக் காரணமான பிரபாகரனோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தோம். அந்தக் கொலையை நிறைவேற்றிய தம்பியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் எதிர்காலத் தமிழீழக் கனவு குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். தம்பி பிரபாகரன் எமக்கெல்லாம் “ஹீரோ” வாக, எமது குழுவின் கதாநாயகனாக ஆனதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்.

துரையப்பா கொலையின் எதிர் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கும் புதிய திட்டங்களை மேற்கொள்வதற்கும் எம்மிடம் போதிய அறிவும் அனுபவமும், உலகை ஆராய்வதற்கான தத்துவார்த்தப் பின்புலமும் அற்றிருந்த காலகட்டம் அது. ஒரு புறத்தில் இடதுசாரிகள் தேசிய இன ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளவில்லை; மறு புறத்தில் பாராளுமன்றக் கட்சிகள் எம்மைப் பாவித்துக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் எமது நடவடிக்கைகளுக்குக் கிடைத்த மக்கள் ஆதரவும், சமூக அங்கீகாரமும், எம்மை மேலும் மேலும் தூய இராணுவக் குழுவாக மாற்றியிருந்தது. அதே பாணியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஊக்கம் வழங்கியது.

தமிழ் பேசும் மக்கள் மீதான தேசிய இன அடக்கு முறையும், வன் முறை வடிவில் மேலும் மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஆயுதப்படைகளின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் பொலீசார் எமக்குப் பெரும் தலையிடியாகின்றனர். அவர்களை என்ன செய்வது என்று தீர்மானிப்பதற்கு முன்னமே சிலவேளைகளில் அவர்கள் எம்மை நோக்கி வந்துவிடுகின்றனர்.

21 ஓகஸ்ட் 1975 கிருபாகரனும், சில நாட்களில் 19 செப்டெம்பர் 1975 கலாபதியும் கைதுசெய்யப்பட்ட பின்னர் தான் இலங்கை அரசின் அதிகார மையத்திற்கு துரையப்பா கொலை என்பது சில இளைஞர்களின் கூட்டு நடவடிக்கை என்பது தெரிய வருகிறது. அரசு விழித்துக்கொள்கிறது. ஒரு உள்ளூர் உளவு வலையமைப்பை உருவமைக்கும் வேலையை முடுக்கிவிடுகிறது.

துரையப்பா கொலை தொடர்பாக கலாபதி கைது செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி கொலைசெய்யப்பட வேண்டும் என்பதில் பிரபாகரனும் நாங்களும் ஆர்வமாக இருந்தோம். அவரின் கைதிற்கு மட்டுமல்ல, கலாபதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவரைச் சித்திரவதை செய்வதற்கும் கருணாநிதிதான் முன்நின்றார் என்பதும், நாம் அறிந்திருந்தோம், அவரின் சித்திரவதையில் கலாபதியின் காதைப் பலமாகத் தாக்கி சேதப்படுத்தியிருந்தார் என்று தம்பி அடிக்கடி கூறுவார். கருணாநிதியின் சித்திரவதையின் கோரத்தால் கலாபதியின் ஒருபக்கக் காதின் கேட்கும் தன்மை கூடப் பாதிக்கப்பட்டிருந்து.

14 பெப்ரிவரி 1977 இல் காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற பொலிஸ் அதிகாரி மாவிட்டபுரத்தில் வைத்துக் கொலைசெய்யப்படுதல் என்பது தான் தமிழ் ஈழம் கோரும் போராட்டத்தில் முதல் நடைபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலைச்சம்பவம்.

பல நீண்ட நாட்கள் வேவு பார்ப்பதிலும், நபர்களின் நகர்வுகள் குறித்தும் நீண்ட அவதானமான திட்டமிடலின் பின்னர் பேபி சுப்பிரமணியமும், பிரபாகரனும் இந்தக் கொலைத் தாக்குதலை மேற்கொள்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. மாவிட்டபுரம் நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் செல்ல நாம் முடிவிற்காகக் காத்திருக்கிறோம். இறுதியில் பிரபாகரன் குறிபார்த்துச் சுட்டதில் கருணாநிதி அந்த இடத்திலேயே மரணமாகிறார்.

அப்போது தமிழர் கூட்டமைப்பின் உணர்ச்சிப் பேச்சுக்களும், இடதுசாரிகள் தேசியப் பிரச்சனையை தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து அப்புறப்படுத்தி இருந்தமையும் எமது போராட்டதை உணர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. கருணாநிதி இறந்து நிலத்தில் வீழ்ந்த பின்னர் உணர்ச்சிவயப்பட்ட பிரபாகரன் அவரின் அருகே சென்று அவருடைய காதினுள் மறுபடி துப்பாக்கியால் சுட்டதாக எம்மிடம் கூறினார். கலாபதியின் காதைச் சேதப்படுத்தியற்கான பழிவாங்கல்தான் அது. பழிக்குப் பழிதீர்க்கும் மனோபாவம் நிறைந்த, உணர்ச்சி வயப்பட்ட தாக்குதலின் கோரம் அங்கே வெளிப்பட்டு மனிதத்தை நோக்கி வினாவெழுப்பியது.

பிரபாகரனைப் பொறுத்தவரை தனது பாதுகாப்பிலும், இயக்கம் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்புக் குறித்தும் மிகுந்த அவதானமாக இருப்பவர். யாழ்ப்பாணத்திலிருந்து பயிற்சி முகாமிற்கோ, பண்ணைக்கோ வரும் போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று பஸ் தரிப்பிடங்களின் முன்னதாக வண்டியை விட்டு இறங்கி நடந்தே வருவார். அடிக்கடி யாராவது பின் தொடர்கிறார்களா என்று பார்த்துக்கொள்வது வழமை. தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பற்ற உலகம் இருப்பதாகவே எப்போதும் உணர்வது போன்ற தோற்றப்பாட்டையே அவர் உருவாக்குவார். ஒன்றாக உறங்கும் வேளையிலும் சிறிய சலசலப்புகளுக்கே விழித்துக்கொள்வார். துப்பாக்கி இல்லாமல் எங்கும் வெளியே செல்வதில்லை. தனியேயாகவோ அல்லது கூட்டாகவோ சென்றாலும் தனது இடுப்பில் கைத்துப்பாக்கியைச் செருகி வைத்துக்கொள்வார். இவரோரு கூடச் செல்பவர்களையும் துப்பாக்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவது வழமை. நான் கூட பிரபாகரனுடன் செல்லும் போது துப்பாக்கியின்றி வெளியே செல்வதில்லை.

இதே வேளை எமது எதிர்ப்புப் போராட்டங்கள் ஒருவகையான மக்கள் சாராத தனிமனிதப் படுகொலைகள் என்ற வடிவத்தைக் கொண்டதாக அமைகிறது. பொலிஸ் அதிகாரிகளும், அரச ஆதரவாளர்களும், உளவாளிகளும் என்ற முக்கோண வலைப்பின்னலை உடைத்து, இலங்கை அரச இயந்திரத்தை மக்கள் தொடர்பிலிருந்து பலவீனப்படுத்தலே எமது வரையறுக்கப்படாத, ஆனால் செயல்ரீதியான நோக்கமாக அமைந்திருந்தது.

இவ்வேளையில் துரையப்பா கொலைவழக்கில் தீவிரமாகத் தேடப்பட்டு இந்தியா சென்றிருந்த பற்குணம் இலங்கை திரும்புகிறார்.

பற்குணம் இலங்கைக்கு வந்த நிகழ்வானது எமக்குப் புதிய உற்சாகத்தை வழங்குகிறது. தலைமறைவாக வாழ்ந்த எங்களை மிகுந்த பிரயத்தனத்தின் பின்னர் அவர் சந்திக்கிறார். சில காலங்களின் பின்னர், அவர் எமது மத்திய குழு உறுப்பினராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இந்தச் சூழலில் சண்முகநாதன் என்ற பொலிஸ் அதிகாரி எமக்கு எதிரான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். இவரைப் “போட்டுத் தள்ள வேண்டும்” என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுகிறார். கருணாநிதி கொலை தந்த உற்சாகமும் உத்வேகமும் சண்முகநாதனைக் கொலைசெய்ய வேண்டும் என்ற உறுதியை வழங்குகிறது.

அவரை நாமெல்லாம் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தம்பி பிரபாகரனும், உரும்பிராய் பாலாவும் சண்முகநாதனை, இணுவிலில் உள்ள தேனீர்க் கடையின் முன்னால் காண்கின்றனர். தற்செயலாக அங்கு அவரைக் கண்ட இருவரும் உடனடியாகவே அவரைக் கொலைசெய்யத் திட்டமிடுகின்றனர்.

காங்கேசந்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சண்முகநாதன் இன்னுமொரு பொலீஸ் அதிகாரியுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மற்றவர் யாரென்பதையும் பிரபாகரனும் பாலாவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மற்றைய பொலிசின் பெயரும் சண்முகநாதன் தான். அவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் வேலை பார்ப்பவர். கூடவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர் என்பதையும் பாலாவும் பிரபாகரனும் தெரிந்து வைத்திருந்தனர். கொல்லப்படவேண்டிய காங்கேசந்துறை சண்முகநாதனை பிரபாகரன் குறிவைக்கை அவர் பிரபாகரனை நோக்கி ஓடிவந்து அவரை கட்டிக்கொண்டு தரையில் விழுத்த முயற்சிக்கும் வேளையில், கைத்துப்பாக்கியை வைத்திருந்த பாலா அவரை சுட்டுக்கொலைசெய்து விடுகிறார்.

அதேவேளை அங்கு நின்றிருந்த மற்றைய சண்முகநாதனை நோக்கி, தப்பி ஓடிவிடுமாறு பாலா சத்தமிடுகிறார். அதை அவர் மறுத்து, தனது சக பொலீசைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட அவரைப் பிரபாகரன் தனது துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்துவிடுகிறார். 18ம் திகதி மே மாதம் 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த இரட்டைக் கொலை வடபகுதி எங்கும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. மக்கள் மத்தியில், திருப்பித் தாக்குவதற்கு இளைஞர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுகிறது.

இன்னும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி தீவிரமாக ஈடுபட்டிருந்தது. வட கிழக்கெங்கும் மேடைகளும், உணர்ச்சிக் கோசங்களும், தமிழுணர்வுப் பாடல்களும், உதய சூரியன் கொடியுமாகக் களைகட்டியிருந்தது. சந்திகளும், சாலைத் திருப்பங்களும், மக்கள் கூட்டம் கூட்டமாய்ப் பேசிக்கொள்வதை நாமும் கேட்கிறோம். எங்கும் “தமிழ் உணர்ச்சியின்” அலைகள் இந்துமா கடலையும் தாண்டி ஒலித்தது. தமிழ் தேசியத் தணலின் வெம்மை முழு இலங்கையையும் எரித்துக் கொண்டிருந்தது.

http://inioru.com/?p=9516

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள் அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர் கேள்வியுற்றோம்.

இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு, நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள்.அதிலிருந்து வெளியிலிருப்போரோ, விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ, துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்லை.

..........

பிரபாகரன் எம்மிடம் சொல்கிறார்,கொலை செய்து பழக்கப்பட்டால் தான் மனத்தில் உரமேறும். அதை நீங்கள் தான் இப்போது நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.

நான் நடைவண்டியைப் பிடித்து நடக்கப் பழகிக் கொண்டு இருக்கையில், மக்கள் என்ற பொதுமைக்கான அர்ப்பணிப்போடு மத்திய குழு உறுப்பினராக இருந்த ஐயரை 2010ம் ஆண்டில் விமர்சிப்பது சற்றுச் சங்கடமாகத் தான் இருக்கிறது. இருப்பினும் மேலே மேற்கோளிடப்பட்ட பகுதிகள் பற்றிக் கருத்துக் கூறியே ஆகவேண்டும் என்று படுகிறது.

உலகில் வெற்றி கொள்ளப்பட்ட போராட்டம் எல்லாம் வெற்றி பெற்றதற்கு, மக்களை அரசியல் மயப்படுத்தி, சனநாயக விழுமியங்களைப் பேணி, மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கி கலந்தாலோசித்து, புலியும் மானும் ஒரே குட்டையில் நீரருந்திக் கொண்டிருக்கையில், தேய்காய் விழுந்து பலாப்பழத்தைச் சாறாக்கி, அது வாழப்பழத்தை நனைத்துத் தேனாய் ஓடிக்கொண்டிருக்கையில் ஜௌவனப் பெண்கள் கலகலவென்று காப்புக் கழன்று விழச் சிரித்துக் கொண்டிருந்தது தான் காரணம் என்று 2010ம் ஆண்டில உண்மையில ஐயர் நம்புறார் எண்டால், ஐயற்றை கட்டுரையை வாசிக்கத் தான் வேணுமா என்று தோன்றுது!

எங்கையோ தோன்றி மாக்சின்ர சிநதனையை, முதலில் உள்ளுர் மொழிக்கு மொழிபெயர்ப்பில் இருந்து மொழி பெயர்த்து, அதை மக்களிற்கு விளங்கப்படுத்தி, பாட்டாளி என்று முதலில் ஒரு குடையை உருவாக்கி அதுக்குள்ள சனத்தைக் கொண்டந்து, பின்னர் குட்டி முதலாளித்துவத்திற்கு எதிராய்ப் போராடல் என்று வரும்போது, உண்மையில் அங்கு முதலில் அரசியல் வகுப்பில தான் விடயங்கள் தொடங்க முடியும். எங்கட கதை அப்பிடியில்லை.

வெளியில போனா ஐயரைத் தூக்கித் தார்ப் பீப்பாக்குள் போடுறான், பொடியளைப் பிடிச்சு சித்திரவதை பண்ணுறான், எங்கட வளவுக்கால எங்கட உறுதியால எங்கட தலையில தட்டிக் கலைச்சுப் போட்டு, சிங்களக் குற்றவாளிகளிற்குப் பொது மன்னிப்பு வளங்கி கொண்டந்து குடியிருத்திறான், படிக்கத் தடை போடுறான், உத்தியோகத்தில உயர்விற்குத் தடை போடுறான், மொழியை மறக்கச் சொல்லுறான், வியாபாரங்களை திட்டம் போட்டு எரிக்கிறான், அரசியல் யாப்புக்களைத் தன்ர பாட்டுக்கு மாத்தித் தள்ளுறான், நாகரிமடைந்த சமூக வழமைகள் எல்லாம் அவசரகாலச் சட்டத்திற்குள் செல்லுபடியாகாதெண்டுறான், தசாப்தக் கணக்கில அவசரகாலத்தை நீடிக்கிறான், எல்லாத்தையும் பாத்துப் போட்டு முப்பது வருசமா முயன்ற எங்கட அரசியல் ஜாம்பவான்கள் கடவுள் தான் இனித் தமிழனைக் காப்பாத்தோணும் எண்டு போட்டு ஓய்வு பெறுகினம். இதுக்குள்ள சனம ;76 விழுக்காட்டுக்கு மேல தங்கட சனநாயக உரிமையைப் பயன்படுத்தி தமிழீழமே தீர்வு என்று ஆணையை வேற குடுக்குதுகள். இந்த நிலையில சனம், என் வழி மட்டும் எங்களிற்கு மிச்சமிருக்குது எண்டு நம்பிச்சோ, அரசியல் தலைவர்கள் மேடையில என்னத்தை முழங்கிச்சினமோ, அந்த வழியை அமுல் படுத்தியது மட்டும் தான் அந்த மனுசன் பிரபாகரன் செய்தது. தலைவர் சனம் தங்கட ஆசை அபிலாசை எண்டு வோட்டுப் போட்டுச் சொன்னதை உண்மையாத் தான் சொல்லுதாக்கும் எண்டு நம்பினார். சுனம் கேட்டதைத் தான் அவர் தன்ர உயிரை சுகத்தைத் துறந்து செய்ய முனைஞ்சார்.

ஆனால் இப்ப என்னன்டா ஐயர் வந்து சொல்லுறார் தலைவர் சனத்துக் வகுப்பெடுக்காமல் எல்லாத்தையும் தலைகீழாத் தொடங்கிக் கவிட்டுப் போட்டாராம் எண்டு போட்டுப் பெருமூச்சு விடுகிறாhர்.

மற்றது, இந்தக் கொலை செய்து பழகினால் தான் மனம் உரமேறும் எண்ட விடயத்தை ஐயர் சந்தடி சாக்கில சொல்ல, பின்னூட்டத்தில அதுக்கு ஒரு அறப்படிச்சது உளவியல் விளக்கவுரை குடுக்குது. இப்ப எனக்கு என்ன விளங்கேல்லை எண்டால்:

சனமும் அரசியல் தலைவர்களும் வேறயும் எல்லாருமாச் சேந்து அடிச்சுச் சத்தியம் செய்துத முடிவெடுப்பினமாம் ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்று. இளைஞார்கள் ஆயதங்களை வைச்சுக் காட்டுக்குள்ளையும் பிறகு இஞ்சால இந்தியா லெபனான் பாலஸ்தீனம் எண்டும் எங்கையெல்லாமோ போய் எவ்வளவு திறமாச் சுடலாம், எப்பிடிச் சுட்டால் எதிரிக்கு அதிக இழப்பு வரும் எண்டெல்லாம் பயிற்சி எடுப்பினமாம், எதிரியைக் கொலை செய்யிறதுக்கான வழிகள் பற்றி வகுப்புக்களிற்கெல்லாம் போவினமாம், ஆனால் கொலை செய்தால் தான் மனம் உரம் பெறும் எண்டதை மட்டும் மனநோயாய்த் தான் பாப்பினமாம்.

இப்ப தலைவர் தானே சொல்லுறார் தான் பிறக்கேக்க மாபெரும் இராணுவ விற்பன்னனாய் பிறக்கேல்லை எண்டு. அது போலத் தான் தலைவரோ இதர போராளிகளோ கொலை காரராயோ, கொலை வெறியோடயையோ, மனநோயோடையோ பிறக்கேல்ல. சனம் ஆயுதப்போராட்டம் செய்யுங்கோ எண்டு அந்தத் தலைமுறை இளைஞற்ற தலையில பனங்காயை வைக்குதுகள். பஞ்சமா பாதகம், சித்திர குப்தன், எண்ணெய்க்குதம் அது இது எண்டு வளர்ந்த சின்னஞ்சிறுசுகளின்ர மனசில கொலை என்டுற விசமயம் முளங்கால் நடுங்கச் செய்யுது. ஆயுத போராட்டம் என்றால் என்ன, கெரில்லாப் போரென்றால் என்ன, அதன் நடைமுறை (காட்டிக் கொடுத்தல் முதலியன) எப்பிடி இருக்கும் போன்ற பல விடயங்கள் தொடர்பில் அனுபவம் இல்லாததால பலர் தடுமாறினம். இந்த நிலையில, ஒரு போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவன், காலாதிகாலமா எமது மனதில இருந்த கொலை பற்றிய பெறுமதிக்குள்ளால் இருந்து எப்பிடி நாம் வெளியில் வருவது என்பது பற்றி ஒரு நடைமுறை விடயத்தைச் சொன்னால், அதை, கொன்ரெக்ஸ்ற் இல்லாமல் நாப்பது வருசத்திக்குப் பிறது ஐயர் சொல்லுவாராம், அதை அறப்படிச்சதுகள் மனநோய் என்று பொழிப்புரை வழங்குங்களாம்.

வைதேகி காத்திருந்தாள் என்ற ஒரு படத்தில் ஒரு சின்னப்பெடியன் அடிக்கடி சொல்லுவான் “போங்கடா நீங்களும் உங்கட கலியாணமும் எண்டு”. ஐயற்றை கட்டுரையை வாசிக்கேக் எனக்கும் இப்படித் தான் சொல்லத் தோன்றுது: “போங்கடா நீங்களும் உங்கட கட்டுரையும்”

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

சில மாதங்கள் இடைவெளியில் இருவேறு தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன. இவையெல்லாம் எமது இரத்ததில் புதிய நம்பிக்கை அணுக்களை உருவாக்கியிருந்தது. அனைவருக்கும் அதீத உற்சாகம் பொங்கியது. தமிழீழம் மிக அண்மையில் எட்டிவிடும் தூரத்திலேயே இருப்பதாக உணர்கிறோம்.

தனிமனிதப் படுகொலைகள் என்றாலும் உணர்ச்சியின் உந்துதலுக்கு உட்படுத்தப்பட்ட எமக்கெல்லாம் அவை தாக்குதல்கள் தான். மக்கள் போராட்டங்கள் பற்றியும் அதற்கான அரசியல் வழிமுறை பற்றியும் அறிந்து வைத்துக்கொண்டா இவற்றைத் திட்டமிட்டோம்!

எமது தோளில் புதிய சுமையை உணர்கிறோம். பற்குணமும் இணைந்துகொள்ள விரிவாக்கப்பட்ட மத்திய குழு ஒன்று கூடல்களை பல தடவை நிகழ்த்துகிறோம். ஒரு புறத்தில் உற்சாகத்தில் மக்கள் மக்கள் திளைத்திருக்க மறுபுறத்தில் நாமும் எமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பற்குணம் இந்தியாவில் வாழந்த வருடங்களில் ஈழப் புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர் என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.

எமது மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பிரபாகரனிற்கு அரசியல் விடயங்களில் அக்கறை இல்லை, எமக்கு என்று அரசியல் நிலைப்பாடும் அரசியல் வழிநடத்தலும் தேவை என்ற கருத்தைப் பற்குணம் முன்வைக்கிறார். பிரபாகரனைப் பொறுத்தவரை பலமான ஒரு இராணுவக் குழு தேவை என்பதே பிரதான நோக்கமாக இருந்தது. இந்த விவாதங்கள் எல்லாம் ஒரு குறித்த காலத்தின் பின்பாக, குறிப்பாக மத்திய குழு விவாதங்களின் போது பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையிலான முரண்பாடாக எழுகிறது. பிரபாகரன் அரசியலற்ற வெறும் இராணுவச் சிப்பாய் போலச் செயற்படுவதாகவும் , ஒரு விடுதலை இயக்கத்தை வழி நடத்தத் தகமையற்றவர் என்ற கருத்தையும் கூட்டங்களில் முன்வைக்கிறார். இதற்குப் பிரபாகரனிடம் பதில் இருக்கவில்லை.

அதே வேளை பற்குணம் புகைப்பிடிகும் பழக்கததைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம் அருந்தும் பழக்கததையும் கொண்டிருந்தார்.தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும் இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார். மத்திய குழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்திது, பலதடவைகள் பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை.பற்குணம் ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.

பிரபாகரனைப் பொறுத்தவரை தேனிர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை கடைப்பிடித்திருந்தனர்.

பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம் கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும் விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.

பற்குணத்தின் ஊடாக மன்னார் வீதியில் அமைந்திருந்த கன்னாட்டி என்னும் இடத்தில் ஈரோஸ் அமைப்பினர் ஒரு பண்ணை ஒன்றை நடத்திவருவதாக அறிந்தோம். எம்மைப் போலவே சில புதிய உறுப்பினர்களைப் பயிற்றுவிக்கும் இடைநிலை முகாமாகவிருந்த கன்னாட்டிப் பண்ணையிலிருந்த ஈரோஸ் உறுப்பினர்களுடன் எமக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. அவ்வேளையில் சங்கர் ராஜி, அருளர்,அந்தோனி என்ற அழகிரி போன்ற ஈரோசின் முக்கிய உறுப்பினர்கள் அங்கு தங்கியிருந்தனர். பலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்களில் சில உறுப்பினர்கள் அவர்களிடம் பயிற்சியையும் பெற்றிருந்தனர்.

சில நாட்களுக்கு உள்ளாகவே எமது பூந்தோட்டம் முகாமிற்கு அவர்கள் வருவதும், நாங்கள் அவர்களது முகாமிற்குச் செல்வதுமாக ஒரு நட்ப்பு வளர்ந்திருந்தது. பற்குணம் இது குறித்து மகிழ்ச்சியடைந்திருந்தாலும், எமது இயக்கத்திற்கும் அரசியல் நடைமுறைகள் தேவை என்பதையும், அரசியலற்ற பிரபாகரன் தலைமைக்குத் தகுதியற்றவர் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்.

ஈரோஸ் இயக்கத்தினர் எமது பூந்தோட்டம் பண்ணைக்கு வந்து எம்மோடு உரையாடல்களை நடத்துவார்கள். பெரும்பாலும் இராணுவ நடவடிக்கைகள், தாக்குதல்கள், பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற விடயங்களை நாங்கள் பேசிக்கொள்வோம். 1977 பொதுத் தேர்தலுக்குச் சில காலங்களின் முன்னர் சங்கர் ராஜி என்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்ற ஈரோஸ் உறுப்பினர் எமது முகாமிற்கு வந்திருந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பிரபாகரனோடு சங்கர் ராஜி, பலஸ்தீன விடுதலை இயக்கம் பயிற்சிகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அரசியல் விவகாரங்களில் பிரபாகரன் ஆர்வம் காட்டவில்லை. எமக்கு அருகே இருந்த சிறிய இலக்கு ஒன்றை குறிவைத்துச் சுடுமாறு சங்கர் ராஜியிடம் பிரபாகரன் கேட்க, அவரும் அவ்வாறே சுடுகிறார். குறி தவறி வேறு இடத்தில் சூடு படுகிறது. துப்பாக்கியை வாங்கிக்கொண்ட பிரபாகரன் அதே இலக்கைக் குறிவைத்துச் சுடுகிறார். குறி தப்பவில்லை. இலக்கில் நேரடியாகச் சென்று குண்டு துளைத்ததும், ஈரோஸ் இயக்கதிலிருந்து எமது பண்ணைக்கு வந்த அனைத்து விருந்தினர்களும் ஆச்சர்யப்பட்டுப் போகிறார்கள்.

வங்கிக் கொள்ளை நிகழ்த்தியிருந்த நாம் ஒப்பீட்டளவில் ஈரோஸ் இயக்கத்தை விட வசதி வளங்களைக் கொண்டவர்களாக இருந்தோம். பற்குணதின் சிபார்சின் பேரில் ஈரோஸ் அமைப்பிற்குப் பண உதவி செய்வதென்ற கருத்தை எமது மத்திய குழுவைக் கூட்டி விவாதிக்கிறோம். இறுதியில் பிரபாகரனும் அவர்கள் நட்பு சக்திகள் என்ற அடிப்படையில் ஒரு குறித்த பணத் தொகையை வழங்க வேண்டும் என்று முன்மொழிய நாங்களும் அதை ஒத்துக்கொள்கிறோம். இந்த முடிவின் அடிப்படையில் ஈரோஸ் அமைப்பிற்கு 50 ஆயிரம் ரூபா வரையிலான பணம் வழங்கப்படுகிறது. பிரபாகரனுக்கோ எமக்கோ இலங்கை அரசிற்கு எதிரான இன்னொரு இயக்கம் வளர்வதில் எந்த பய உணர்வோ, காழ்ப்புணர்வோ அன்றைய சூழலில் இருந்ததில்லை.

பேபி சுப்பிரமணியம் , தங்கா போன்றவர்களூடாக, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த அமிர்தலிங்கம், மாவை சேனானதிராஜா போன்றவர்களுன் இறுக்கமான தொடர்புகள் ஏற்படுகின்றன. சேனாதிராஜா தான் முதலில் எமக்குக் ஏற்பட்ட கூட்டணியின் முதல் நம்பிக்கையான தொடர்பு. அவரினுடாக அமிர்தலிங்கத்தின் தொடர்பு ஏற்படுகிறது. சேனாதிராஜா வீட்டிற்கும், அமிர்தலிங்கத்தின் வீட்டிற்கும் பிரபாகரன் வேறு உறுப்பினர்களோடும் தனியாகவும் செல்வது வழமையாகிவிட்டது. தவிர, மத்திய குழு சார்பிலான சந்திப்புக்கள் நடைபெறவில்லை. பின்னதாக நான் இலங்கைக்குத் திரும்பிச் சென்றதும், மத்திய குழுவுடனான சந்திப்பு ஒன்று நிகழ்கிறது. அந்த சந்தர்ப்பத்தில் நானும் அமிர்தலிங்கம் வீட்டிற்குச் சென்றேன் என்பது எனது நினைவுகளில் பதிந்துள்ளது.இவ்வாறான எந்தச் சந்திப்புக்களிலும் பற்குணம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளைகளில், புதிதாக உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான அரசியல் தொடர்புகளையும் பற்குணம் கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணியின் அரசியல் என்பது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அதனால் நாங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பற்குணம் விமர்சிக்கிறார். இந்த வேளைகளிலெல்லாம் எனக்குப் பிரபாகரன் சொல்வது தான் நியாயமாகத் தென்பட்டது. ஒருபக்கத்தில் அரச படைகள் மறுபக்கத்தில் தமிழர்கள் இதற்கு மேல் என்ன அரசியல் என்பது தான் பொதுவான மனோபாவமாக என்னிடமும் காணப்பட்டது. மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பிரபாகரன் பக்கம்தான்.

பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையேயான சச்சரவின் நடுவே நாங்கள் மௌனிகளாகவே இருந்தோம்.

ஈரோஸ் இயக்கம் தம்மை அரசியல் ஆளுமை மிக்கவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளோ அரசியல் என்பதெல்லாம் தேவையற்றதாகவே கருதியிருந்தது. இந்தச் சூழலில் ஈரோஸ் என்ற அரசியல் இயக்கம் தமது இராணுவப் படையாகத் தமிழீழ விடுத்லைப் புலிகளை இணைத்துக் கொள்வதற்காக முயற்சி செய்து வந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதாவது ஈரோஸ் அரசியல் தலைமை வழங்க நாமெல்லாம் அவர்களின் இராணுவக் குழுவாகச் செயற்படுவோம் என்று எதிர்பார்த்தார்கள். தம்பி பிரபாகரனும், நாமும் பற்குணத்தின் ஊடாக அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற எத்தனிப்பதாகக் கருதினோம். பற்குணமும் பல தடவைகள் அவரது விவாதங்களூடாக இதனைத் தெரிவித்திருந்தார். பிரபாகரனைக் குற்றம்சாட்டும் கருப்பொருளாக இதுவே அமைந்திருந்தது.

தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும் அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக் கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.

பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன் எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார் என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.

இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும்ன் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக் குழு; அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது. இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர் கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.

இதனிடையே ஜெயவேல் என்பவர் கைது பொலீசாரின் வலைக்குள் சிக்கிவிடுகிறார். எம்மிடம் வாங்கிய பணத்தை வைத்து ஆடம்பரச் செலவுகள் செய்துவந்ததால் சந்தேகத்தின் பேரில் ஜெயவேல் முதலில் கைதுசெய்யப்படுகிறார். குளிப் பானதினுள் நஞ்சு வைத்துக் கொலைசெய்ய முற்பட போது தப்பித்துக்கொண்ட ஜெயவேல் இப்போது பொலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். விசாரணைகளின் கோரத்தில் அவர் என்னையும் ராகவனையும் காட்டிக்கொடுத்து விடுகிறார்.

இதன் பின்னர் நான் தேடப்படுகிறவன் ஆகிவிடுகிறேன். எனது வீட்டைப் பொலீசார் சோதனையிடுகின்றனர்.

புன்னாலைக்கட்டுவனில் எனது வீட்டைச் சுற்றிவளைத்த பொலிசார், வீட்டைச் சல்லடை போட்டுத் தேடுகின்றனர். எனது பெற்றோரை மிரட்டி என்னைப்பற்றிய தகவல்களைக் கேட்கின்றனர். புத்தூர் வங்கிக் கொள்ளைக்கான திட்டமிடல் நடவடிக்கைகளை எனது வீட்டிலிருந்தே மேற்கொண்டோம்.

ஜெயவேல் ஊடாக இதனை அறிந்துகொண்ட காவற்துறைக்கு இந்த வழக்கில் நான் முக்கிய எதிரியாகிவிடுகிறேன். புன்னைலைக்கட்டுவனில் பல பகுதிகளிலும் எனது நடம்மாட்டம் தொடர்பான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்த அவசர நிலையைக் கருத்தில்கொண்டு ராகவன், பட்டண்ணா ஆகியோரை இந்தியாவிற்குச் செல்லுமாறு பிரபாகரன் கூறுகிறார். ராகவன் பட்டண்ணா ஆகியோர் புலிகளில் ஆதரவாளர்களாக இருப்பினும் ஜெயவேலுக்கு இவர்களின் தொடர்புகள் இருப்பிடங்கள் என்பன தெரிந்திருந்தது. இதனால் இவர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால் பிரபாகரனே இவர்களையும் கூட்டிச் செல்லுமாறு கோருகிறார் தங்கத்துரை யின் கடத்தல் படகு ஒன்ன்றில் மன்னார் சென்று மன்னாரிலிருந்து ராமேஸ்வரம் செல்கிறோம்.

நான் நேசித்த தாய் மண்ணைப் பிரிந்த சோகத்தின் மத்தியில் இந்திய மண்ணிலிருந்த நம்பிக்கை அதன் மீதான மதிப்பாகவும் மாறியது. வெறும் உணர்ச்சிச் சமன்பாடுகள் தான் எமது சிந்தனையைத் தீர்மானிக்கும் வரம்புகளாகியிருந்த காலகட்டத்தில் இதைவிட வேறு எதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்?

அங்கிருந்து சேலத்திற்குச் செல்கிறோம். அங்கே பெரிய சோதி, சின்னச் சோதி என்றி அழைக்கப்படும் வல்வெட்டித்துறையச் சேர்ந்த இருவருடன் நாம் தங்கியிருந்தோம். இவர்கள் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் குழுவைச் சார்ந்தவர்கள். எமக்கு வேறு உழைப்போ பணவசதியோ இல்லாத நிலையில் இவர்கள் தான் எம்மைப் பாதுகாக்கிறார்கள். உணவருந்துதுவதும், உறங்குவதும், தமிழ் சினிமாப் பார்ப்பதும் தான் எமது வேலையாக இருந்தது. சுமார் நான்கு மாதங்கள் வரை சேலத்திலேயே எமது நாட்களைக் நகர்த்துகிறோம்.

உலகம் முழுவதும் எவ்வாறு போராட்டங்கள் முன்னோக்கிச் செல்கின்றன, முற்போக்கு சக்திகளுடனான உறவு, ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுத்து அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு எமது தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தல் போன்ற எந்த விடயங்களைப் பற்றிய எந்த சிந்தனையும் எமக்கு இருந்ததில்லை. பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்து கொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறுத்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

அப்போதெல்லம் குறைந்த பட்சம் போராட்டங்கள் குறித்தும், அரசியல் குறித்தும், மார்க்சியம் குறித்தும் ஆயிரம் விடயங்களைப் படித்துத் தெரிந்துகொண்டாவது இருக்கலாம் என்று இப்போது வருந்துவதுண்டு. எமது குறுகிய உலகத்துள் எமக்குத் தெரிந்ததெல்லாம் தாக்குதலும் எதிர்த் தாக்குதலும் என்பது மட்டும்தான்.

இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.

அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை புளியங்குழம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன் பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக் கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலைசெய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர் அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.

துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும் பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத் தெரியாது.

நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் வேளையில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருகிறது. மறுபுறத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றியீட்டுகிறது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற அங்கீகாரமாக இத் தேர்தலின் வெற்றி கருதப்பட்டது. 1977 ஜூலை 21ம் பெரும்பாலும் எல்லாத் தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களும் பிரிவினைக்கான சுலோகத்தை முன்வைத்துப் போட்டியிட்ட கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர்.

இதே வேளையில் பிரதம மந்திரியாகத் தெரிவு வெற்றியீட்டிய ஜூனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன, யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பொலீசாருக்கு எதிரான கொலைச் சம்பவங்களுக்குப் பொறுப்பான குழுக்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும், இந்த இரு பகுதியினருமே அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

இதே வேளை வன்முறையாக நான்கு பொலீசார் யாழ்ப்பாணத்தில் நடந்த கானிவேல் ஒன்றினுள் அனுமதிசீட்டு இல்லாமல் பிரவேசிக்க முயன்ற போது உருவான தர்க்கத்தில் மக்களால் தாக்கப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உருவான தமிழ் சிங்கள மோதல், இன வன்முறையாக மாற்றம் பெறுகிறது. 12ம் திகதி ஆகஸ்ட் 1977 ஆம் ஆண்டு ஆரம்பமான இவ்வன்முறைகள், அரசின் மறுதலையான ஆதரவுடன், இனப்படுகொலை வடிவத்தை கொள்கிறது.300 தமிழர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்படுகிறார்கள். தமிழர்களுக்கு உரிமை தருவதாகப் பேசி ஆட்சிக்கு வந்திருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, தமிழர்களதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பிரிவினைக் வாதத்தில் ஆத்திரமடைந்த சிங்கள மக்களின் எழுச்சியே இவ் வன்முறைகள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இந்தியாவிலிருந்து இதை அறிந்த நாம் வெறுப்பும் கோபமும் அடைகிறோம்.

30 நாட்கள் நீடித்த இந்த வன்முறைகளின் சில நாட்களில் பிரபாகரன், மாவை சேனாதிராஜா, காசியானந்தன் ஆகியோர் தங்கத்துரை குட்டிமணியின் கடத்தல் படகு மூலமாக இந்தியாவிற்கு வருகின்றனர்.

பேபி சுப்பிரமணியம், தங்கா போன்றோர் ஊடாக நான் இந்தியாவிலி இருக்கும் வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் புலிகளின் தொடர்பு வலுப்பெற்று வளர்ச்சியடைகிறது. பற்குணத்தின் மறைவிற்குப் பின்னர் புலிகளின் மத்திய குழுவுடனான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தொடர்புகள் வலுப்பெறுகின்றன. தேர்தல் வன்முறைகள், ஜெயவர்தன அரசு வெளிப்படையாகவே கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் என்பவற்றின் தொடர்ச்சியாக இச்சந்திப்புக்கள் மேலும் கூட்டணியுடனான இறுக்கத்தை வலுவாக்குகின்றன. பிரபாகரன் நான் இருந்த சேலத்திற்கு வருகிறார். இதே வேளை பேபி சுப்பிரமணியம் விமான மூலமாக இந்தியாவிற்கு வருகிறார்.

நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்தியிகுழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத உடன்பாட்டிற்கு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும், புலிகள் இவற்றிற்கான இராணுவ அமைப்பு என்றும் முடிபிற்கு வருகின்றனர்.

தேர்தல் வெற்றியும், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முரைகளும், அவற்றிற்கு எதிரான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீராவேசப் பேச்சுக்களும் புலிகள் இந்த முடிபிற்கு வரக் காரணமாக அமைந்தது. இது தொடர்பாக தம்பி இந்தியா வந்ததும் என்னிடம் கூறுகிறார். நானும் அவற்றை எந்த மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்கிறேன்.

தமிழ் நாட்டில் இருந்த காலப்பகுதியில் மதுரையில் நடராசா என்ற ஓவிரைப் பிரபாகரன் சந்திக்கிறார். அவர் தான் விடுதலைப் புலிகள் சின்னத்தை வரைந்து கொடுக்கிறார்.

சேனாதிராஜா, காசியானந்தன, பிரபாகரன் மூவரும் கலைஞர் கருணாநிதியை மரீனா பீச்சில் சந்திக்கிறார்கள். அச்சந்திப்பிற்கு சந்தர்ப்பவசமாக நான் செல்லவில்லை ஆனால் என்னோடு தங்கியிருந்த பட்டண்ணா சென்றார் என்பது நினைவிற்கு வருகிறது. இச் சந்திப்பிற்கான ஏற்பாட்டை சேனாதிராஜா தான் ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும்.

இவ்வேளையில் இலங்கையில் எமது வழமையான இயக்க வேலைகள் முடங்கிப் போய்விடக் கூடாது என்பதற்காக நான் இலங்கைக்குப் போவதாக முடிவெடுக்கப்படுகிறது. சின்னச் சோதி நான் திரும்பிச் செல்வதற்கான படகை ஒழுங்கு செய்கிறார். மயிலிட்டிக்குப் படகு வந்து சேர்கிறது. மறுபடி சொந்த மண்ணில் கால்பதித்த உணர்வு மேலிடுகிறது!

http://inioru.com/?p=9766

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ( பாகம் ஆறு) :

ஐயர்

கடத்தல் படகில் இலங்கை வந்து இறங்கியதும், உடனடியாகவே இயக்கவேலைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரு நாட்கள் நிலைமைகளை அவதானித்த பின்னர், எமது பண்ணைக்குச் செல்கிறேன். நான் இந்தியாவில் இருந்த வேளையில் பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தில் ஒரு பண்ணை 50 ஆயிரம் ரூபாய்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறது. இது இந்தப் பண்ணை புளியங்குளத்திலிருந்து அதிக தூரத்தில் அமைந்திருக்கவில்லை. அந்தப் பண்ணையிக்கு முதலில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, அதனைத் தேடிச் செல்கிறேன். அங்கே சென்று எமது உறுப்பினர்களுடன் கள நிலைமைகள் குறித்தும், புதிய தொடர்புகள் குறித்தும் உரையாடுகிறேன்.

இரண்டு பண்ணைகளிலுமாக ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் விவசாயம் செய்துகொண்டு முழு நேர உறுப்பினர்களாக வாழ்கிறார்கள். முன்னமே குறிப்பிட்டது போல பண்ணையிலிருப்பவர்கள் இயக்கத்திற்குள் உள்வாங்கப் படுவதற்கான முதல் நிலை உறுப்பினர்களாகவே கருதப்பட்டார்கள். இவர்களைச் சில காலங்களுக்கு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதன் பின்னதாகவே இயக்க உறுப்பினர் மட்டத்தில் இணைத்துக்கொள்வது என்பதே எமது திட்டமாகச் செயற்படுத்தி வந்தோம்.

நான் இந்தியாவிற்கு செல்லும் வேளையில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே பண்ணையிலிருந்தனர். ஞானம், சற்குணா, கறுப்பி என்ற நிர்மலன், செல்லக்கிளி ஆகிய நால்வருமே அங்கிருந்தனர். புதிய பண்ணை உருவாக்கப்பட்ட பின்னர், அங்கு புதிய உறுப்பினர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். குமணன், சாந்தன், மதி, பண்டிதர் போன்றோர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

பண்ணை என்பது எமது இயக்கத்தின் சட்டரீதியான முன்முகமாகவே அமைந்திருந்தது. தேடப்படுக்கிற உறுப்பினர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதில்லை. செல்லக்கிளி தேடப்படுகின்ற ஒருவர் என்பதால் பண்ணையில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை.

இந்தப் புதிய உறுப்பினர்களையும், ஒடுக்கு முறைக்கு எதிரான அவர்களது உணர்வுகளையும் நான் கண்டபோது, என்னுள் என்னையறியாத உத்வேகமும் உற்சாகமும் பிறக்கிறது. தனித் தமிழீழத்தை நோக்கிய எமது போராட்டம் தவழ்ந்து எழுந்து நடை போடுவதான உணர்வு என்னுள் பிரவகித்த்து. இரண்டு மூன்று தனி மனிதர்களைக் கொண்ட எமது குழு ஒரு இயக்கமாக மாற்றம் பெறுவதைக் கண்முன்னாலேயே காண்பது போலிருந்தது.

நானும் பிரபாகரனும் இல்லாத வேளைகளில் இப்பண்ணை ஏனைய மத்திய குழு உறுப்பினர்களான நாகராஜா, கணேஸ் வாத்தி, , தங்கா, விச்சு போன்ற உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இவர்கள் மத்திய குழு உறுப்பினர்களாக இருந்த போதும், முழு நேர இயக்க உறுப்பினர்களாக இருக்கவில்லை. இந்த மத்திய குழு உறுப்பினர்களிடமே பண்ணைகளின் நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார இறுதிப்பகுதிகளிலேயே இவர்கள் பண்ணைக்குச் சென்று இயக்க நிர்வாக வேலைகளை கவனித்துக் கொள்வது வழமை.

காடு சார்ந்த வசதி குறைந்த பகுதிகளிலேயே பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகளில் விஷ ஜந்துக்கள், கொசுத் தொல்லை என்பன அதிகமாகக் காணப்பட்டன. இதனால் பண்ணையில் வாழ்ந்த உறுப்பினர்கள் மலேரியா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வாடும் துன்பியல் சம்பவங்கள் வழமையாகியிருந்தது. இவ்வாறான நோய்களுக்கான மருத்துவ வசதி கூட எம்மிடம் இருந்ததில்லை. மத்திய குழு உறுப்பினர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தனர்.

மத்திய குழு உறுப்பினர்கள் வார இறுதியிலேயே அங்கு செல்லும் வாய்ப்பு இருந்தமையால் பண்ணை உறுப்பினர்களின் நலன்களை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாத நிலைமையே காணப்பட்டது. இதனால் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் பண்ணை உறுப்பினர்களுக்கும் இடையேயான முரண்பாடு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. நாடு திரும்பியதும் எனது உடனடியான பிரச்சனையாக இதுதான் அமைந்திருந்தது.

ஆக, பூந்தோட்டம் பண்ணையில்ருந்தவர்களதும், பன்றிக்கெய்தகுளம் பண்ணைகளுக்கிடையே பயணிப்பதும், அவர்களுடைய நலன்களைக் கவனிப்பதும், மத்திய குழு உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளைக் களைவதும் தான் எனது சுமை நிறைந்த வேலையாக அமைந்திருந்தது. மாவை சேனாதிராஜாவின் தம்பியான தங்காவின் மீதான தப்பபிப்பிராயம் ஏனையோரிலும் அதிகமானதாகவே அமைந்திருந்தது. சில மத்திய குழு உறுப்பினர்களின் பிரமுகத்தனமான மனோபாவம் பண்ணையில்ருந்தவர்கள் மத்தியில் விரக்தி மனோபாவத்தைத் தோற்றுவித்திருந்தது. சில மாதங்களில் பண்ணைகள் ஒழுங்கிற்கு வருகின்றன. மறுபடி உற்சாகத்துடன் வேலைகள் தொடர்கின்றன.

இந்த வேளையில் சுமார் 3 மாதங்களின் பின்னர் பிரபாகரனும் இந்தியாவிலிருந்து திரும்புகிறார். இவரோடு கூடவே பேபி சுப்பிரமணியம், ராகவன் ஆகியோரும் நாடு திரும்புகின்றனர்.

நான் இந்தியாவில் இருந்த வேளையில் பேபி சுப்பரமணியம் ஊடாக, கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான , நில அளவையாளருமான உமா மகேஸ்வரனின் தொடர்பு எமக்கு ஏற்படுகிறது.

கொழும்பிலிருந்து வந்த உமாமகேஸ்வரனிடம் இலங்கை அரசின் தேசிய இன அடக்குமுறைக்கு எதிரான உணர்வும் அதற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியிருந்தது. உமா மகேஸ்வரன் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறார். நான் இலங்கைக்கு வந்தபின்னர் பண்ணையில் என்னோடும் ஏனைய உறுப்பினர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார்.

சில நாட்களிலேயே, எமது மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சந்திக்க ஏற்பாடாகிறது. இச் சந்திப்பை அமிர்தலிங்கம் வீட்டிலேயே ஏற்பாடுசெய்யப்படுகிறது. தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கள் நிகழ்ந்தாலும் நான் மத்திய குழுவோடு இணைந்து ஒரு தடவைதான் அவர்களைச் சந்த்தித்திருந்தேன்.

நான் இந்தியாவில் தங்கியிருந்த வேளையில் இந்தத் தொடர்புகளும் சந்திப்புக்களும் பிரபாகரனோடு பலதடவைகள் நிகழ்ந்திருந்ததால், திட்டமிடலுக்கான பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு என்பதை விட நட்பு அடிப்படையிலான சந்திப்பாகவே எனது அமிர்தலிங்கத்துடனான முதலாவதும் இறுதியானதுமான சந்திப்பு அமைந்திருந்தது.

பிரபாகரன், பேபி சுப்ரமணியம், குலம் போன்றோருடன் தான் இந்தத் தொடர்புகள் அதிகமாக அமைந்திருந்தன. எது எவ்வாறாயினும் தமிழர் விடுதலைக் கூட்டணி எமது பிரதான நட்பு சக்தி என்பதற்கும் மேலாக அரசியல் வழிகாட்டிகள் என்பது வரை எமது அனைவரதும் உணர்வுகள் அமைந்திருந்தன. பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை.

ஒரு வகையில் ஒரே அரசியலுக்கான வேறுபட்ட வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தோம். சிறுகச் சிறுக தொடர்ச்சியாக, 80 களின் இறுதி வரை முளைவிட்ட அனைத்து அமைப்புக்களுமே தமது உள்ளகக் கட்டமைப்புகளில் ஜனநாயகத்தையும், வெளியமைப்பில் புதிய அரசியலுக்கான தேடலிலும் ஈடுபட்டிருந்தாலும், பொதுவான அரசியல் புலிகள் போன்று ஒரே வகையானதாகவே அமைந்திருந்தது என்பதை இன்று மதிப்பீட்டுக்கு உட்படுத்தக் கூடியதாக உள்ளது.

இதே வேளை உமா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து வந்து எம்முடன் அடிக்கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக்கொள்கிறார். இவரது போராட்ட உணர்வும், துடிப்பும், உத்வேகமும் எம்மைக் கவர்ந்திருந்தன. 1977 இன் இறுதிகளில் உமா மகேஸ்வரனையும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற முன் மொழிவைப் பிரபாகரன் முன்வைக்கிறார். நாம் யாரும் இதில் முரண்படவில்லை. உமா மகேஸ்வரனும் முகுந்தன் என்ற இயக்கப் புனை பெயரோடு தமிழீழ விடுதலை புலிகளில் இணைத்துக்கொள்ளப்படுகிறார்.

இதே வேளையில் உமா மகேஸ்வரன் 77 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச வன்முறைகளால் அகதிகளான தமிழர்கள் மத்தியிலும் பல வேலைகளை முன்னெடுத்திருந்தார். டொலர் பாம், கென்ட் பாம் போன்றவற்றின் உருவாக்கத்திலும் பங்கு வகித்திருந்தார். டேவிட் ஐயா, ராஜ சுந்தரம் போன்றோரோடும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார். தனது பல்கலைக்கழகக் காலங்களிலிருந்தே தேசியவாத அரசியலில் ஈடுபட்ட உமா மகேஸ்வரன், அகதிகள் புனர்வாழ்வில் வெளிக்காட்டிய உணர்வுபூர்வமான பங்களிப்பும் ஈடுபாடும் எமக்கெல்லாம் அவர்மீதான மதிப்பை ஏற்படுத்தியது.

1978-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி ஜெயவர்த்தனா அரசு, புதிய குடியரசு அரசியல் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. புதிய அரசியல் சட்டம் ஈழத் தமிழினத்தின் அடிமை சாசனம் என்று தமிழர்கள் குரல் கொடுத்தார்கள்.இதே நாளில் நாங்கள் ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று எமது மத்திய குழுவில் முடிவெடுக்கிறோம்.

தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான உணர்வு எல்லோர் மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவது வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன. இவ் வன்முறைகளின் முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது.

இந்த வேளையில் விமானமொன்றைக் குண்டுவத்துத் தகர்க்க வேண்டும் என்ற கருத்து எம்மில் பலரால் முன்வைக்கப்படுகிறது.

வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில் உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம். இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும் பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது.

பேபி சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதே வேளை ராகவனும் எம்மோடிருந்தார். பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக ஏற்பாடாகிறது.

இந்த முடிபுகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் கலந்துரையாடுகிறோம். அந்த வேளையில் சிங்கள மக்கள் அதிகமாகப் பிரயாணம் செய்யும் இந்த விமானத்தில் அவர்கள் விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்னர் குண்டை வெடிக்கவைத்தால் அப்பாவிகள் அனியாயமாக இறந்துபோவார்கள் என்பது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை. இவ்வேளையில் தான் ராகவன் அப்பாவி மக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என வாதிடுகிறார். நானும் அவருடன் இணைந்து கொள்கிறேன். எந்தக் குற்றமுமற்ற அப்பாவிகளின் இழப்புத் தவிர்க்கப்பட வேண்டும் என்று ராகவனோடு இணைந்து நானும் ஆட்சேபிக்கிறேன். சாந்தனும் எமது கருத்தோடு உடன்படுகிறார். பொதுவாக அங்கிருந்த மற்றவர்கள், சிங்கள மக்கள் கொல்லப்பட்டால் வருத்தப்படத் தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இறுதியில் நானும் ராகவனும் உறுதியாக வாதிட்டதில், அப்பாவிப் பொதுமக்கள் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர் மட்டுமே நேரக்குண்டை வெடிக்க வைப்பது என முடிவாகிறது.

(இன்னும் வரும்…)

http://inioru.com/?p=9948

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

அவ்ரோ விமானத் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்ற அளவிற்கு எமக்கு மத்தியில் நம்பிக்கையும் உறுதியும் வேர்விட்டிருந்தது. ஏதோ பெரிய தாக்குதலை நடத்தி முடிக்கப் போகிறோம் என்ற பய உணவெல்லாம் எம்மிடம் இருக்கவில்லை. கடந்து சென்ற ஒரு வருடத்தினுள் எமது இராணுவத் தாக்குதல்களின் வெற்றியும், இயக்கதினுள் ஏற்பட்டிருந்த ஒழுங்கமைப்பும் நாம் குறிப்பிடத்தக்க பிரதான அமைப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக்கொள்வதே. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாங்கள் போதுமானதாக எண்ணியிருந்தோம்.

பெருந்திரளான மக்களைக் அமைப்பு மயப்படுத்தி, கட்சியையும் ஏன் இராணுவ அமைப்பையும் கூட அந்த மக்களின் பலத்திலிருந்து உருவாக்கும் போராட்டங்கள் மட்டுமே உலகத்தில் வெற்றியடைந்திருக்கின்றன என அப்போதெல்லாம் நாம் அறிந்திருக்கவில்லை.

இந்த வகையில் கடந்த கால இராணுவத் தாக்குதல்களின் வெற்றியையும், அரச படைகளின் இழப்புக்களையும் மட்டும் வைத்துக்கொண்டு நாம் கணிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்துவிட்டதாகவே எண்ணிப் பெருமிதமடைகிறோம்.

ஈரோஸ் அமைப்பினருக்கு இங்கிலாந்திலிருந்த அவர்களின் உறுப்பினர்கள் வழியாகப் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பிருந்தது மட்டுமன்றி அவ்வியக்கத்திடம் பயிற்சி பெறும் வசதிகளையும் கொண்டிருந்தனர். கொலைசெய்யப்பட்ட பற்குணத்தினூடாக ஈரோஸ் இயக்கத்துடனான தொடர்புகள் வலுவடைந்திருந்தமை குறித்து முன்னமே பதிந்துள்ளேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளின் மீது மதிப்புவைத்திருந்த ஈரோஸ் அமைப்பினர், எமது இரு உறுப்பினர்களுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்கின்றனர்.

உமாமகேஸ்வரனும் விச்சுவும் பயிற்சி பெறுவதற்காகப் பாலஸ்தீனம் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் வரையான பயிற்சிக்கு அவர்கள் அங்கு செல்கின்றனர்.

உமாமகேஸ்வரனும் இங்கிலாந்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்ட விச்சு என்ற விச்வேஸ்வரனும் எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இவர்கள் தவிர, கொழும்பிலிருந்து வந்து எம்மோடு இணைந்திருந்த சாந்தன் என்பவரும் சரளமாக ஆங்கிலம் பேச வல்லவர். இவரூடாகவே பிரபாகரன் ஆயுதங்கள் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை வாசிப்பதுண்டு.

உமா மகேஸ்வரன் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிக்குச் சென்ற வேளையில், தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஊடாக கியூபாவில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வேளையில் சாந்தன் கியூபாவிற்குச் செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இவரைத் தவிர வேறு ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் இல்லாத நிலையில், சாந்தனுடன் எமது ஆதரவு மட்டத்தில் செயற்பட்ட வேறொருவரும் அங்கு அனுப்பப்படுகிறார்.

இறுதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் இருவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இருவருமாக நான்குபேரும் கியூபா செல்கின்றனர்.

இவர்கள் கியூபா சென்றதும், பாலஸ்தீனத்தில் எமது உறுப்பினர்களோடு பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த ஈரோஸ் அமைப்பினருடன் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக விச்சு பயிற்சியை முடிக்காமலே திரும்பிவிடுகிறார். உமா மகேஸ்வரன் தனது கால எல்லைக்குள் வழங்கப்பட்ட பயிற்சிகளை முடித்துக்கொண்டு பின்னதாக நாடு திரும்புகிறார்.

இவர்கள் திரும்பிய சில காலங்களினுள்ளேயே எமது மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தில் விச்சு மற்றும் உமாமகேஸ்வரன் ஆகியோரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். சில நாட்களில் எமது இயக்க நடவடிக்கைகள் பரந்து பட்ட மக்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் உள்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அமைப்பிற்கான அதிகார மட்டத்திலான பேச்சுக்கள், வேறு அமைப்புக்களுடனான தொடர்புகள், அன்னிய நாட்டுத் தூதரகங்களுடனான தொடர்புகள் போன்ற அனைத்தும் எம்மது வேலைப்பணிகளை அதிகரிக்கின்றன. இந்த வேளையில் எமக்கு மத்தியில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவரும் ஏற்கனவே அகதிகள் மீள் குடியேற்றம் போன்ற வேலைகளில் ஈடுபட்டவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அமைப்பான கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளருமான உமா மகேஸ்வரனின் வேலைப்பழு அதிகரிக்கின்றது.

ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், எம்மை விட அதிகமான தொடர்புகளைக் கொண்டிருந்தவருமான உமா மகேஸ்வரனை தமிழீழ விடுத்லைப் புலிகளின் தலைவராக நியமிக்கலாம் என பிரபாகரன் தனது கருத்தை முன் வைக்கிறார்.

உமா மகேஸ்வரன் அதை மறுக்கவில்லை. நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறோம். இறுதியில் நமது இயக்கத்தின் முதலாவது தலைவராக உமா மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். அரசியல்ரீதியான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை முன்னெடுக்க அரசால் தேடப்படாத ஒருவரின் பிரசன்னம் தேவைப்பட்டது. இந்த வகையில் உமாமகேஸ்வரன் இதுவரை அரசால் தேடப்படாத நிலையில் இருந்ததால் இவரைத் தலைவராக நியமிப்பது நியாயமானது என அனைவரும் கருதினர்.

உமாமகேஸ்வரன் ஒரு கடின உழைப்பாளி. வரித்துக்கொண்ட வேலையச் செய்து முடிக்கும் வரை ஓய்வதில்லை. சிறிய தொகைப் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ளும் நேர்மை அவரிடமிருந்தது. நிர்வாக ஒழுங்கும் திறமையும் படைத்தவர்.

உமாமகேஸ்வரன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும் பிரபாகரனின் ஆளுமைதான் காணப்பட்டது. எமது குழுவின் அதிகாரம் மிக்கவராக பிரபாகரனே இருந்தார்.

இவ்வேளையில், கனகரத்தினம் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் இரட்டை உறுப்பினர் தொகுதியான பொத்துவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறார். 23990 வாக்குகளைப் பெற்று கனகரத்தினம் பாராளுமன்றத்திற்குத் தெரிவுச்ய்யப்படுகிறார். தனித் தமிழீழத்திற்கான பிரச்சாரம் மேற்கொண்டே கனகரத்தினம் வாக்குகளைப் பெற்றுக்கொள்கிறார். டிசம்பர் மாதம் 19ம் திகதி டெய்லி நியூஸ் பத்திரிகையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மீது தான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அவர் தமிழ் மக்களிற்கு நீதி வழங்குவார் என்றும், தவிர, கிழக்கு மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த போதும், தனித் தமிழ் நாட்டை விரும்பவில்லை என்றும் இந்தக் காரணங்களால் அவர் யூ.என்.பி கட்சியில் இணைந்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.

மறு நாளே அமிர்தலிங்கத்தின் அறிக்கை வெளியாகிறது. கனகரத்தினம் தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி என்கிறது அந்த அறிக்கை. இவற்றையெல்லம் பார்த்துக்கொண்டிருந்த உணர்ச்சி மயப்பட்ட இளைஞர்களான நாம், கனகரத்தினம் உயிர்வாழக் கூடாது என்ற முடிபிற்கு வருகிறோம்.

உமா மகேஸ்வரனுக்கு நன்கு பழக்கப்பட்ட கொழும்பில் வைத்தே கனகரத்தினம் கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கனகரத்தினம் கொலை வெற்றியளிக்காத ஒரு சம்பவமாயினும் நாட்டின் தலைநகரில், ஜே.ஆர் அரசின் இராணுவத்தின் இரும்புக்கரங்கள் இறுகியிருந்த கொழும்பின் நடுப்பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை முயற்சி மூழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. ஜனவரி மாதம் 26 ஆம் திகதி 1978 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தப் கொலை முயற்சி இலங்கையில் இதயப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்திய முதல் தாக்குதல்.

பிரபாகரன், உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகிய மூவரும் நேரடியாக களத்தில் நின்று நிகழ்த்திய இந்தத் தாக்குதல் முழுமையான வெற்றியளிகாமல் வெறுமனே கொலை முயற்சி என்ற அடிப்படையில் முடிந்தது.

மிகக் கவனமான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட உமா மகேஸ்வரனும் பிரபாகரனும், செல்லக்கிளியும் கனகரத்தினம் அவரது கொழும்பு இல்ல்லத்திலிருந்து மெய்ப் பாதுகாவலர்களோடு காரை நோக்கிச் செல்லும் போது, துப்பாகியால் சுடுகிறார்கள்.

உமா மகேஸ்வரன், பிரபாகரன், செல்லக்கிளி ஆகிய மூவருமே கைத் துப்பாக்கி வைத்திருந்தனர். உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னால் சென்றதும் அவரை கனகரத்தினம் அடையாளம் கண்டுகொள்கிறார். கொழும்பு இளைஞர் பேரவையின் செயலாளராகவிருந்த உமாமகேஸ்வரன் கனகரத்தினத்திற்கு முன்னமே அறியப்பட்டவர். உமாமகேஸ்வரனைக் கண்டதும் கனகரத்தினம் எப்படி இருக்கிறீர் தம்பி என்கிறார். உடனே உமாமகேஸ்வரன் துரோகியைச் சுட்டுத்தள்ளுங்கோடா என்று சத்தமிட்டவாறே கனகரத்தினத்தை நோக்கிச் சுடுகிறார்.

பின்னதாகப் பிரபாகரனும் கனகரத்தினத்தை நோக்கி குறிவைத்துச் சுடுகிறார். அவர்கள் இருவரின் குண்டுகளுமே தவறிவிடுகின்றன. இந்த வேளையில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் எதிர் எதிர்த் திசைகளிலிருந்து தாக்குதல் நடத்தியதால், உமா மகேஸ்வரனின் குண்டு பிரபாகரனுக்கு அருகாமையில் சென்றதால் அவர் அங்கு மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தையும் நாங்கள் பின்னதாக அறிந்து கொண்டோம். இவர்கள் இருவரினது குறிகள் தவறிவிட செல்லக்கிளியின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தான் கனகரத்தினத்தைக் காயப்படுத்தியது.

ஒரு துப்பாக்கிக் குண்டு அவரை நோக்கிப் பாய்கிறது. குண்டுபட்ட காயத்தோடு அவர் மருத்துவ மனையை நோக்கி எடுத்துச்செல்லப்படுகிறார். அங்கு அவசர சிகிச்சையின் பின்னர் அவர் உயிர்தப்பிவிடுகிறார். ஆனால் துப்பாக்கிச் சூட்டின் தாக்கத்தினால் மூன்று மாதங்களின் பின்னர் கனகரத்தினம் உயிரிழந்துவிடுகிறார்.

பொத்துவில் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினம் கொலை முயற்சி இடம் பெற்ற பின்னர் தான் உமா மகேஸ்வரன் தேடப்பட்டவராகின்றார். அவரும் இப்போது முழு நேரமாக எம்மோடு வடக்கிலிருந்தே இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.

செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோர் தவிர கொழும்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரான நாகராஜாவும் இக் கொலை முயற்சிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். போக்குவரத்து ஒழுங்கு, தங்குமிட வசதிகள் போன்ற பல நடவடிக்கைகளை நாகராஜாவே முன்னின்று கவனித்துக்கொண்டார்.

பிரபா, உமா மற்றும் செல்லக்கிளி மூவரும் கனகரத்தினத்தின் இருப்பிடம் நோக்கிச் செல்லும் வேளையில், பொலீஸ் மோப்ப நாய்களின் தேடுதலிலிருந்து தப்புவதற்காக காகிதம் ஒன்றில் மிளகு சுற்றிக் கொண்டு சென்றனர். மிளகு தூள் சுற்றிய காகிதம் கொழும்புப் காவல்துறையிடமும், உளவுத் துறையிடமும் அகப்பட்டுவிடுகிறது. அந்தக் காகிதம் நாகராஜாவின் தங்குமிடத்தில் அச்சடிக்கப் பட்டிருந்தது. இதனை அவதானித்த பொலீசார், நாகராஜாவை விசாரணைக்கு உட்படுத்தி அவருடன் கொலைமுயற்சிக்கு இருந்த தொடர்பைக் தெரிந்துகொள்கின்றனர்.

இந்த விசாரணைகளில் முக்கிய பங்கு வகித்தவர் முன்னமே துரையப்பா கொலை வழகில் பிரதான அதிகாரியாகச் செயற்பட்ட பஸ்தியாம்பிள்ளை. நாகராஜாவை சித்திரவதை செய்து விசாரணகளை மேற்கொண்டதில் தவிர்க்கவியலாதவாறு அவர் சில தகவல்களைச் சொல்லவேண்டிய நிலைக்கு உட்படுத்தப்படுகிறார். இந்த வேளையில், அவர் எமது பண்ணைகள் குறித்தோ, எமது ஏனைய முக்கிய நிலைகள் குறித்தோ எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை. ஏற்கனவே வேறு வழிகளில் உமா மகேஸ்வரனுக்கு கொலைமுயற்சியோடு இருந்த தொடர்பை உளவுத்துறை அறிந்திருந்ததால், நாகராஜா, உமா மகேஸ்வரன் மீதே எல்லாப் பழியையும் சுமத்துகிறார்.

இதன் பின்னர் நாகராஜாவையும் அழைத்துக்கொண்டு பஸ்தியாம்பிள்ளை உமா மகேஸ்வரனின் கட்டுவன் இல்லத்திற்குச் செல்கிறார். நாகராஜாவும் உமாமகேஸ்வரனைக் அடையாளம் காட்டுவதாக ஒத்துக்கொள்கிறார். மிக நீண்ட நேரப் பிரயாணத்தின் பின்னர், பஸ்த்தியாம் பிள்ளையின் பொலீஸ் வாகனத்திலேயே உமா மகேஸ்வரனின் இல்லைத்தை அடைகின்றனர். துரையப்பா கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுல் நாகராஜாவும் ஒருவர் என்பதால் பஸ்தியாம்பிள்ளையுடன் இவர் சரளமாகப் பேசக்கூடிய நிலை இருந்தது. வழி நெடுக பஸ்தியாம்பிள்ளையுடன் பேசிக்கொண்டு வந்த நாகராஜாவிற்கு உமா மகேஸ்வரன் வீட்டில் தங்கியிருக்க மாட்டார் என்பதும் தெரியும். அங்கே கட்டுவனை அடைந்ததும், பொலீசைக் கண்டால் உமா மகேஸ்வரன் தப்பி ஓடிவிடுவார் என்றும், பஸ்தியாம் பிள்ளையை வெளியே நிற்குமாறும், தான் உள்ளே சென்று அவரைத் தந்திரமாக அழைத்து வருவதாகவும் பஸ்தியாம்பிள்ளையிடம் கூறி அவரையும் சம்மதிக்க வைக்கிறார்.

இதற்கு பஸ்தியாம்பிள்ளை சம்மதம் தெரிவிக்கவே நாகராஜா உமா மகேஸ்வரன் வீட்டினுள் சென்று, வீட்டின் பின்பகுதியால் தப்பியோடிவிடுகிறார். இந்தத் துணிகரமான நடவடிக்கையால் அங்கிருந்து தப்பிய நாகராஜா, பண்ணைகளிலிருந்த எம்மை நோக்கி வந்து எம்மோடு மீண்டும் இணைந்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தின் பின்னர், நாகராஜாவும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இணைந்து கொள்கிறார்கள்.

(இன்னும்வரும்…)

http://inioru.com/?p=10437

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு) : ஐயர்

இந்த இரு வருட எல்லைக்குள் பல உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். பண்ணைகளின் தேவை அதிகமாகிறது. எமது இயக்க உறுப்பினராவதற்கான நுழைவாயில் பண்ணைகள் தான். அங்குதான் அவர்களின் உறுதித்தன்மை பரிசீலிக்கப்படும். தேடப்படுபவர்களோ, முக்கிய உறுப்பினர்களோ பொதுவான பண்ணைகளில் நிரந்தரமாகத் தங்குவதில்லை.

பண்ணை வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கிக் கொண்டவர்கள் பலர். காடு சார்ந்த பிரதேசங்களிலும், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளிலும், எந்த வகையான மத்தியதர வாழ்க்கைக்கும், பண்பிற்கும் உட்படாத தனிமைப்பட்ட வசதியற்ற பண்ணைகளில் போராட வேண்டும் என்ற உறுதியோடு இறுதிவரை தாக்குப்பிடிக்கும் உறுப்பினர்களே இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களாகச் இணைத்துக்கொள்ளப்படுவர்.

80 களில் புலிகள் இயக்கத்தின் அறியப்பட்ட போராளிகளாகத் திகழ்ந்த பலர் 1977 களின் இறுதியிலிருந்து எம்மோடு பண்ணைகளிலிருந்தவர்கள் தான். பண்ணைகளை நிர்வகிக்கும் முழுப் பொறுப்பும் என்னிடமே வழங்கப்பட்டிருந்தது. அவற்றை ஒழுங்குபடுத்துவதும், பண வசதிகள் குறித்து செயற்படுவதும், உறுப்பினர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதும், எனக்குப் பாரிய சுமையாகவிருந்தது. நான் ஓரிடத்தில் ஒரு நாளிற்கு மேல் தங்குவதே முடியாத ஒன்றாக அமைந்திருந்தது. பண்ணைகளிடையே பயணம் செய்வதும் ஒழுங்குபடுத்துவதும் பிரதான பணியாக அமைந்தது. பிரபாகரன் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு புதிய பண்ணை உறுப்பினர்கள் பலரை தெரியாதிருந்தது. என்னிடமே அனைத்துத் தொடர்புகளும் முடங்கிப் போயிருந்தன.

முதலில் வவுனியா பூந்தோட்டம் பண்ணையும் தவிர புளியங்குளத்திற்கு அருகாமைலயமந்திருந்த பன்றிக்கெய்த்த குளம் பண்ணையுமே எம்மிடமிருந்தன. பின்னதாக , புதுக்குடியிருப்புக்கு அருகாமையிலுள்ள வள்ளிபுரம் என்ற இடத்தில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம். இது தான் எமது மூன்றாவது பண்ணை.

இப்பண்ணையுடன் ஒரு வீடும் அமைந்திருந்ததால் பல நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமையும் என உறுதிசெய்கிறோம். இங்கு நிலக்கடலை பயிர்ச்செய்கைக்கான நிலம் இருந்ததால் பண்ணையின் பராமரிப்புச் செலவுகளுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்பு இருந்தது. தவிர, ஆயுதங்களை மறைத்து வைக்கவும் இந்த இடத்தைத் தெரிவுசெய்வதாகத் தீர்மானிக்கிறோம். இந்த நோக்கங்கள் அனைத்துக்குமாக இந்தப்பண்ணையை 25 ஆயிரம் ரூபா பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்கிறோம். பன்றிக்கெய்தகுளம் பண்ணையைப் போலவே இந்தப் பண்ணையும் பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்திருந்தது.

இப்ப்பண்ணை இயங்க ஆரம்பித்த உடனேயே மாங்குளம் பகுதியிலிருந்த கல்மடு என்ற இடத்தில் பண்ணையை உருவாக்குகிறோம் . இந்தப்பண்ணையை நாம் விலைகொடுத்து வாங்கவில்லை. இது காட்டுப்பகுதியில் அமைந்திருந்தது. முன்னதாக விவசாயம் செய்யும் நோக்குடன் இந்தப்பண்ணை காட்டுப்பகுதியில் தனியார் சிலரால் உருவாக்கப்பட்டிருந்தது. அவர்களுக்குப் பராமரிக்கும் வசதியீனம் காரணமாக அதனை எம்மிடம் ஒப்படைக்கிறார்கள்.

அவ்வேளை, மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களுக்கான அங்கீகாரம் உருவாகியிருந்த காலகட்டம். இதனால் நாம் விடுதலை இயக்கம் எனத் தெரிந்துகொண்டே எம்மிடம் இந்தப் பண்ணை தரப்படுகிறது.

சிறீமாவோ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் விவசாயப் பொருளாதாரம் முன்னிலைக்கு வந்திருந்தது . தென்னிலங்கை இடதுசாரி அமைப்புக்களுடன் சிறிமாவோ ஏற்படுத்திய கூட்டு, தேசியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தது.

அந்த வேளையில் முத்தையன்கட்டுப் பகுதியில் பல படித்த இளைஞர்களுக்குக் தோட்டக்காணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காணியை ஒருவர் எமக்கு வழங்குகிறார்.ஒட்டிச்சுட்டானில் அமைந்திருந்த இந்தத் தோட்டக்காணி விவசாயம் செய்வதற்கு ஏற்ற பகுதியாக அமைந்திருந்தது.

இதன் பின்னதாக மடு வீதியிலுள்ள முருங்கன் பகுதியில் ஒரு பண்ணையை உருவாக்குகிறோம் . இதுவும் ஒரு தெரிந்தவர் மூலம் இந்தப் பண்ணையைப் பெற்றுக்கொள்கிறோம். இது காட்டுப்பகுதியில் மிகவும் பாதுகாப்பானதாக அமைந்திருந்தது. இங்கு தங்குமிடம் எதுவும் இருக்கவில்லை. ஒரு தண்ணீர்க் கிணறு மட்டுமே அமைந்திருந்தது. நாங்கள் தங்குவதற்கான கொட்டில்களை அமைத்துக்கொள்கிறோம்.

பின்னர் பன்னாலை என்ற இடத்தில் ஒரு கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்குகிறோம். இது யாழ்ப்பாணப்பகுதியில் உருவான முதல் பண்ணை எனலாம்.

இப்போது எமது பண்ணைகளைக் கிழக்கு மாகாணம் வரை விரிவு படுத்துகிறோம். மட்டக்களப்பில் மியான் கற்குளம் மற்றும் புலிபாய்ந்த கல் என்ற இரண்டு இடங்களில் எமது பண்ணைகள் அமைக்கப்பட்டிருந்தன.

திருகோணமலையில் பண்ணையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் பின்னர் இறுதிக்காலத்தில் திருகோணமலை நகர்ப் பகுதியில் படிப்பகம் போன்ற ஒன்றை ஏற்படுத்துகிறோம். சிறு குடிசை ஒன்றை அமைத்து அங்கு நான்கு அல்லது ஐந்து பேர் வந்து பேசிக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மூதூர் பகுதிகளில் பண்ணையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் இறுதிவரை

பண்ணை அமைக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைக்கவில்லை. ஒப்பீட்டளவில் மாங்குளம் பண்ணையும் மடுப்பண்ணையும் பாதுகாப்பான இடங்களில் அமைந்திருந்தன. ஏனைய பண்ணைகளில் மன உறுதி மிக்கவர்களாக அடையாளம் காணப்படுபவர்களை இந்த இருபண்ணைகளிலும் சிறிய இராணுவப் பயிற்சிகளுக்காக தெரிவுசெய்து அழைத்து வருவோம். அங்கு சிறிய ரகத் துப்பாகிகளால் சுடப்பழக்குவோம்.

உடற்பயிற்சியிலிருந்து குறிபார்த்துச் சுடுதல் வரை பல நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.காட்டுப்பகுதியில் சன நடமாட்டமற்ற பகுதிகளில் அமைந்திருந்த இப்பண்ணைகள் இந்த நடவடிக்கைகளுக்கு வசதியானதாக அமைந்திருந்தது.

தவிர தேவிபுரத்தில் தென்னம் தோட்டம் ஒன்று ஒரு வயதான பெண்ணிற்குச் சொந்தமாக இருந்தது. அவரது மகன் கூட இயக்கத்தில் இணைந்திருந்தார். ரத்தினம் என்ற அவரது மகன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்திருந்தார். இந்தத் தென்னந்தோப்பும் எமது இயக்கத்திற்கு வழங்கப்பட நாம் அதனையும் ஒரு பண்ணையாகப் பாவிக்கிறோம். இந்தப் பண்ணைகளை ஒழுங்குபடுத்தும், நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடமே இருந்தது.

இந்தப்பண்ணைகளில் ஏறக்குறைய ஐம்பது பேர்வரை இணைந்திருந்தனர். பொதுவாக அனைவருமே மத்தியதரவர்க்க இளைஞர்களாக இருந்தனர்.இவர்களிடம் கணக்கு எழுதி வாங்குவது மட்டும் சிரமமான வேலைப்பகுதியாக எனக்கு இருந்தத்து. மத்திய குழுக் கூட்டங்களில் நான் கணக்குகளைச் சமர்ப்பித்தாலும் யாரும் அவற்றைப் பெரி;தாகப் பரிசீலிப்பதில்லை. அந்தளவிற்கு எம்மத்தியில் பரஸ்பர நம்பிக்கை இருந்தது.

பண்ணைகளில் இருந்தவர்களைத் தவிர இதே காலத்தில் வெளியே இருந்து இயக்கத்திற்கு முழு நேரமாக வேலை செய்பவர்கள் சிலரையும் இணைத்துக் கொள்கிறோம். இவர்களுக்கும் இயக்கச் செயற்பாடுகளுக்காக வெளியே அனுப்பப்படுபவர்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இது தவிர பண்ணைகளின் உறுப்பினர்கள் தொகை, வசதிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பண்ணைகளுக்கான பணம் வழங்கப்படும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று சிகரட் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த வேளைகளில் வழமையான சண்டைகளெல்லாம் வந்து ஓயும் தருணங்களும் உண்டு. ஒருவரது சிகரட்டை மற்றவர் திருடுவதும், அதற்காக மற்றவர்கள் முறையிடுவதும் போன்ற குடும்பமாக, பரஸ்பர நம்பிக்கைகளுடனும் உறுதியுடனும் எமது உறுப்பினர்கள் வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார்க்கிறேன்.

ஒவ்வோரு பண்ணைகளிலும் முதலில் இணைந்து கொண்ட உறுப்பினர்களே பொறுப்பாக இருந்தனர். பண்ணைகளில் வேலைப்பழு அதிகமாக எனக்கு உதவியாக குமணனும் மாதியும் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். நான் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப் பண்ணைகளிற்கு ஒரு தடவை தான் சென்று வந்துள்ளேன். குமணன்,மாதி ஆகியோரே இவற்றின் தொடர்பாளர்களாக இருந்தனர்.

பிற்காலத்தில் மனோ மாஸ்டரும் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற இடங்களுடனான தொடர்புகளுக்கு எனக்கு உதவியாகச் செயற்பட்டார். குமணன்,மாதி,மனோ மாஸ்டர் ஆகியோரின் உறுதி மிக்க உற்சாகமான செயற்பாடுகள் மறக்கமுடியாதவை.

பண்ணைகளில் எமக்குக் குறித்தளவு வருமானமும் இருந்தது. ஒட்டிச்சுட்டனில் வெங்காயம் மிளகாய் போன்ற பயிர்ச்செய்கைகளும்,பன்றிகெய்த குளத்தில் நெற்செய்கையும் மேற்கொண்டோம். இவற்றை ஒழுங்படுத்துவதும், வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக்கொள்வதும் என இயக்க வாழ்க்கை சுமையானதாகவும், வேகமானதாகவும் ஒரு சில வருடங்களுள்ளேயே மாறிவிட்டது.

பிரபாகரன் , உமா மகேஸ்வரன், நாகராஜா போன்ற தேடப்படும் உறுப்பினர்கள் பண்ணைகளுக்கு சென்றுவருவதில்லை என்பதால் அவர்களுக்கு பண்ணை உறுப்பினர்களுடன் அதிக தொடர்புகள் இருந்ததில்லை. ஒரு குறித்த காலத்தின் பின்னர் மத்திய குழு உறுப்பினர்களும், தேடப்படுகிறவர்களும் மடுப் பண்ணையில் தங்கியிருந்தோம். நான் ஒவ்வொரு பண்ணைகளுக்கும் சென்றுவருவதால் நிரந்ததரமான தங்குமிடம் ஒன்று இருந்தில்லை.

உமா மகேஸ்வரன் , செல்லக்கிளி, ராகவன், நாகராஜா, கறுப்பி என்ற நிர்மலன், சற்குணா போன்றோர் மடுப் பண்ணையிலேயே தங்கியிருப்பர். வெளியே சென்று பண்ணைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதற்கு சித்தப்பா (ஞானம); ஆகியோர் செயற்பட்டனர். தவிர இங்கு இராணுவப் பயிற்சிகளும் மேற்கோண்டோம்.

இந்தப் பண்னையில் நம்பிக்கைகுரிய மூத்த உறுப்பினர்களும், தேடப்படுவோரும் தங்கியிருந்தனர். முக்கியமானவர்கள் மாங்குளம் பண்ணைக்கும் மடுப் பண்ணைக்கும் இடையே மாறி செல்வது வழமை. சாந்தன் கிட்டு போன்றோரும் மாங்குளத்தில் தான் தங்கியிருந்தனர். மாங்குளம் பண்ணை இரண்டாம் கட்டத் தெரிவுக்கான மையம் போல் செயற்பட்டது. உதாரணமாக,கிட்டு இயக்கத்தில் இணைந்து மூன்று மாதங்கள் அளவில் தேவிபுரம் தென்னந்தோப்புப் பண்ணையில் தங்கியிருந்த பின்னர் மாங்குளத்திற்கு இடம் மாற்றப்படுகிறார். அவர் இயக்கத்திற்கு ஏற்ற உறுதியான மனோவலிமை உடையவர் என அடயாளம் காணப்பட்ட பின்னர், மேலதிக பயிற்சிகளுக்காக இங்கு இடம் மாற்றப்படுகிறார்.

சேகுவேரா மக்களோடு தோட்டமொன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டாராம் என்று நீண்ட காலத்தின் பின் தான் அறிந்து கொள்கிறோம். போராட்டம் வெற்றியடைந்த தேசங்களிலெல்லாம் வெகுஜன அமைப்புக்களும் கூட்டுப்பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. போராளிகள் மக்களோடு இரண்டறக் கலந்திருந்தனர். மக்களிலிருந்து தனிமைப்பட்ட பண்ணைகளைத் தான் நாங்கள் உருவாக்கினோம். எங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என்ற ஞானோதயம் உருவான போது எல்லாமே முடிந்துவிட்டிருந்தது. இன்னொரு போராட்டம் எழுந்தால் இந்தக் கற்றல்களிலிருந்து தவறுகளை களைந்துகொள்ள வாய்ப்புண்டு.

இந்தக் காலப்பகுதியிலேயே உழவு இயந்திரம் ஒன்றையும் , விசைப் படகு ஒன்றையும், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறோம்.

படகிற்குப் பொறுப்பாக குமரப்பாவும் , மாத்தையாவும் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீன் பிடித் தொழில் செய்துகொண்டே படகையும் பராமரித்துக் கொள்கிறார்கள். படகைப் பராமரிப்பதற்காகவும் மீன் பிடித் தொழிலை மேற்கொள்ளவும் இவர்கள் இருவரும் பண்ணையிலிருந்து வெளியிடத்தில் தங்கியிருந்தனர்.

உழவு இயந்திரம் தேவிபுரத்திலேயே விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. செல்லக்கிளி ஒரு உற்சாகமான போராளி, அவருக்கு உழவுதொழில் கைவந்த கலையாக இருந்தது. அவர் தான் தேவிபுரத்தில் விவசாயம் செய்வதில் தீவிரமாக இருந்தவர்.

 

மோட்டர் சைக்கிள் யாழ்ப்பாணத்திலேயே பாவிக்கப்பட்டது. எமது மத்திய குழு உறுப்பினராக இருந்த தங்காவிடம் தான் அது இருந்தது. அவர் இந்தக் காலப்பகுதியிலேயே இயக்கத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் போது அதனை எம்மிடமே ஒப்படைக்கிறார்.

தங்காவைத் தொடர்ந்து, லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்துகொண்ட விச்சுவும் இயக்கத்திலிருந்து விலகிக்கொள்கிறார்கள். தங்கா ஒதுங்கிக்கொண்டதற்கான குறிப்பான எந்தக் காரணங்களும் சொல்லப்படவில்லை. ஆரம்பத்தில் இயக்கத்துடன் தனது வேலைகளைக் குறைத்துக்கொண்டவர், பின்னதாக முற்றாகவே செயற்பாடின்றி விலகிவிட்டார்.

விச்சுவிற்கு , உமாமகேஸ்வரனுடன் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிபெற்ற காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்ந்தவண்ணமே இருந்தது. இதே வேளை இங்கிலாந்தில் இருந்து சார்ள்ஸ் போன்றோரின் அரசியல் நடவடிக்கைகளோடு ஏற்பட்ட தொடர்புகளும் அவரை விலகுவதற்குத் தூண்டியிருக்கலாம் என நம்பப்பட்டது. விச்சுவை கொலைசெய்ய முற்பட்டாலும் பின்னதாக அது நடைபெறவில்லை.

நான் எமது முதல் பண்ணைக்காக உறுப்பினர்கள் வந்து சேர்வார்கள் என்று புகையிரத நிலையத்தில் காத்திருந்து இறுதியில் நிர்மலன் மட்டுமே வந்து சேர்ந்த போது ஏற்பட்ட விரக்தி மூன்று வருட எல்லைக்குள் மிகுந்த உற்சாகமாக மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேலான முழு நேர உறுப்பினர்கள். பலரின் ஆதரவு. உறங்குவதற்குக் கூட நேரமின்றி இயக்கத்தின் வளர்ச்சிக்காக செயற்பட்ட அனைவரதும் அர்ப்பணிப்பும் தியாகங்களும் அளப்பரியவை. விடுதலை என்று வியாபாரமாக மாறிவிட்ட இன்றைய சூழல் அல்ல நாம் வாழந்த காலம்! அது அர்ப்பணிப்புகளோடு கூடியது.

பிரபாகரன், கலாபதி, ராகவன் குலம், செல்லக்கிளி, சற்குணா, சித்தப்பா என்ற ஞானம், கறுப்பி என்ற நிர்மலன், நாகராஜா, கணேஸ்வாத்தி, பேபி சுப்பிரமணியம், தங்கா, பாலா, விச்சு, உமாமகேஸ்வரன், சாந்தன், குமணன், மாதி, பண்டிதர், சுந்தரம், சிறி என்ற மாத்தையா கிட்டு, குமரப்பா என்ற குமரன், சங்கர், கண்ணன் என்ற சிவனேஸ்வரன, காத்தான், பீரிஸ், யோகன், பவானந்தன் மரைக்கார், ராஜன், மனோ மாஸ்டர், அழகன், நந்தன், நெப்போலியன், சசி, ரத்தினம், சிவம், சோமண்ணை, முஸ்தபா, சற்குணாத்தம்பி,காந்தன் டானியல் என்ற தயாளன், இந்திரன், செயந்தன், பொன்னம்மான்,ராம் என்ற ஐயர் ஆசீர், புலேந்திரன்,ஜெயாமாஸ்டர்,ரகு, வீரபாகு,சாத்திரி,லாலா என்ற ரஞ்சன், ரவி, போன்றோர் முழுநேர உறுப்பினர்களாக, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது இயக்கம் வேகமாக வளர்ச்சிபெறுகிறது.

ஒரு தேசத்தின் விடுதலைக்கான பணியின் சுமையை எமது தோள்களில் உணர்கிறோம். இவர்களோடு கூடவே பல்கலைக் கழகத்தில் மாணவர்களாகக் கல்விகற்றவாறே எம்மோடு இணைந்திருந்த அன்ரன் என்ற சிவகுமார்,தனி, கே.பி. என்ற குமரன் பத்மநாதன் ஆகியோரும் எனது தொடர்பு வட்டத்துள் புலிகளுக்காகச் செயற்படுகின்றனர்.

திருகோணமலையில் நான் அதிகமாகச் சந்திக்க வாய்ப்பற்றறிருந்த இளைஞன் ஜான் மாஸ்டரும் இணைந்து கொள்கிறார். இவர்களோடெல்லாம் எனது தோழமையுள்ள இனிய நினைவுகள் என்றும் பசுமையானவை. ஒரு குடும்பமாய் அவர்களின் துயரங்களோடும், மகிழ்வுகளோடும், அவர்களது போராட்ட வாழ்க்கையோடு இழப்பதற்கு எமது உயிரைத் தவிர ஏதுமின்றி கலந்திருந்த காலங்களோடு எனது எனது நினைவு நரம்புகள் வேர்விட்டுப் படர்ந்துள்ளது. இந்த நினைவுகளை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்வேன்.

இன்னும் வரும்…

http://inioru.com/?p=10744

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

பண்ணைகளிலும் அதற்கு வெளியிலும் என்னோடு வாழ்ந்த போராளிகள் ஒடுக்கு முறைக்கு எதிராக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். இன்று மறுபடி பின்னோக்கிப் பார்க்கும் போது ஆயிரம் தவறுகள், குறைபாடுகளைக் கண்டுகொள்ள இயலுமாயுள்ளது.எது எவ்வாறாயினும் சுயநலமின்றி தான் சார்ந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தமது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்கள். தமது வீடுகளின் கொல்லைப்புறத்தால் பேரினவாதப் பிசாசு மிரட்டிய போது தெருவிற்கு வந்து நெஞ்சு நிமிர்த்தி குரல் கொடுத்தவர்கள்.

அவர்கள் வரித்துக்கொண்ட வழியும்இ புரிந்து கொண்ட சமூகமும் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் தேவைப்பட்ட போராட்டம் ஒன்றின் முன்னோடிகள். சாதி ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை, பிரதேசவாதம் போன்ற எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தியதில்லை.

ஒரு புறத்தில் இலங்கை அரசின் பெருந்தேசிய வாத ஒடுக்கு முறை அத்தனை தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரையும் பாதித்தது. இன்று உருவாகியிருப்பது போல் அந்த ஒடுக்குமுறை வெளிப்படையான இராணுவ சர்வாதிகார ஒடுக்குமுறையாக இல்லாதிருப்பினும் அதன் நச்சுவேர்கள் அனைத்துத் தளத்திலும் பரந்திருந்தது. பண்பாடு,கலாச்சாரம், கல்வி, சமூக உறவு, அரசியல்,பொருளாதாரம் என்ற அனைத்து சமூகம் சார்ந்த அம்சங்களுள்ளும் பேரினவாதம் புகுந்து கோரத் தாண்டவமாடியது.

இலங்கை என்ற குட்டித் தீவு தமிழ்ப் பேசுகின்ற சிறுபான்மையினர் வாழ முடியாத நிலப் பகுதி என்பதை பெருந்தேசிய வாதிகள் தமது துப்பாக்கிகளை உயரே தூக்கிக் குரல் கொடுத்த போது சிரம் தாழ்த்தியவர்களா இவர்கள்? நாமும் வாழ்ந்து காட்டவேண்டிய நமது சொந்த நிலம் என தன்னம்பிக்கையோடு முன்வந்தவர்கள்.

சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் இனிவரும் பதிவுகள் எங்கும் குறிப்பான சந்தர்ப்பங்களில் வெளிவருமாயினும் அவர்கள் தொடர்பான ஆரம்பக் குறிப்புகளைச் சுருக்கமாக தருகிறேன்.

பிரபாகரன் : துரையப்பா கொலைச் சம்பவத்திலிருந்து எமக்கெல்லாம் ஒரு கதாநாயகன் போன்று உருவாகியிருந்த பிரபாகரன் தனது பதினேழாவது வயதுமுதல் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகள், சரணடைவுகள் இன்றிப் போராட வேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்டிருந்த இவர் தூய இராணுவ வழிமுறைக்கு அப்பால் எதையும் சிந்திததில்லை. சுபாஸ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன் போன்றவர்களை வாசிக்கும் இவர் அவர்கள் மீது மிகுந்த அனுதாபத்தைக் கொண்டிருந்தார். தவிர ஹிட்லர் மீது கூட பிரபாகரன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இவ்வாறான விசித்திரக் கலவைக்கு எந்த அரசியலும் இருந்ததில்லை. இந்த மூவரும் இராணுவ வழிமுறையில் வெற்றிபெற்றவர்கள் என்பது தான் காரணமாக இருந்தது.

இராணுவ நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார். ஆங்கில நூல்களைக் கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஊடாக வாசித்து அறிந்து கொள்வார். ஆயுதங்களைக் கையாள்வதில் திறமைபெற்றவர். தாக்குதல் சம்வங்கள் நிகழும் போது துணிகரமாகச் செயற்படுபவர். உமாமகேஸ்வரன் தலைவராக இருந்த வேளையிலும் கூட முடிவுகளை முன்வைக்கும் தலைமைத்துவம் பிரபாகரனிடமே இருந்தது. அனைத்தையுமே இராணுவ ஒழுக்கப் பிரச்சனையாக முன்வைக்கும் பிரபாகரன் இவ்வெhழுக்க முறைகளை மீறுவோரை துரோகிகளாகக் கருதினார். இராணுவ ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் துரோகிகள் அழிக்கப்பட்டார்கள். தனது சொந்த நலனுக்கான அழிப்பு என்பதைவிட இராணுவ ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான செயலாகத் தான் இவற்றைக் கருத முடியும். முள்ளிவாய்க்காலில் மரணமடைந்த பிரபாகரன் அரசியல் வழிமுறைகள், மக்கள் அமைப்புக்கள், வெகுஜன முன்னணி போன்ற எந்த வழிமுறைகள் ஊடாகவும் போராட்டத்தை உருவமைப்பது குறித்துச் சிந்தித்ததில்லை.

பிரபாகரனின் இலகுவான சமன்பாடு என்பது தமிழ் மக்கள் இராணுவ ரீதியில் ஒடுக்கப்படுகிறார்கள் பலமான ஒழுக்கமான இராணுவத்தைக் கட்டமைத்து மட்டுமே விடுதலையடைய முடியும் என்ற வரையறைக்குள்ளே அமைந்தது.

செல்லக்கிளி: செல்லக்கிளி ஒரு நல்ல உழைப்பாளி. மத்தியதர வர்க்கத்தின் கீழணியைச் சார்ந்த இவர் உடலுழைப்பில் உறுதிவாய்ந்தவர். ஆயுதங்களைக் கையாள்வதில் மிகத்திறமையானவர். பெருமளவில் படித்திராத செல்லக்கிளி ஆயுதங்கள் தொடர்பான நல்ல அறிவைப் பெற்றிருந்தார்.வேட்டையாடும் திறமை கொண்ட செல்லக்கிளி செட்டியின் உறவினராவார். குறும்புத்தனம் மிக்கவர். எம்மத்தியில் இருந்தவர்களுள் பிரபாகரனை ஒருமையில் அழைப்பவர் செல்லக்கிளி ஒருவர்மட்டுமே. சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி நடந்துகொண்டாலும் செல்லக்கிளி மீது அனைவரும் அன்பு வைத்திருந்தோம். உரம்மிக்க இன்னொரு போராளி. கல்வியங்காடு இவரது சொந்த இடமாயினும் உடையார்கட்டிலேயே தோட்டம் செய்து வாழ்ந்தவர் செல்லக்கிளி. இலங்கை அரச படைகளுக்கு எதிரான தாக்குதலின் போது 1983 ஆம் ஆண்டு யுலை மாதம் திருநெல்வேலி தபால் பெட்டி சந்தியில் மரணமடைந்தார். இவரது மரணம் தொடர்பாக வேறுபட்ட குழப்பமான கருத்துக்கள் நிலவுகின்றன.

பேபி சுப்பிரமணியம்: தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவற்றின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பாட்டாளராகவும் இருந்து அரசியலுக்கு வந்தவர். புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுள் ஒருவர். தீவிர எம்.ஜீ.ஆர் ரசிகன். இயக்கம் பிளவுப்பட்ட காலத்தில் கூட பிரபாகரனோடு இருந்தவர். மத்தியதர வர்க்கத்தின் கீழணிகளைச் சேர்ந்த இவர் காங்கேசந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

குலம்: குலம் எனது பால்ய நண்பனும் எனது ஊரைச் சேர்ந்தவரும் ஆவர். தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பின் ஆரம்ப்பத்திலிருந்தே எம்மோடு பங்களித்தவர். அவ்ரோ விமானக் குண்டு வெடிப்பின் பின்னர் சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். மிக நேர்மையான போராளி.இன்றும் கூட இயக்கத்திற்காக கடனாளியாகிப் போன ஒருவர் இவராகத் தான் இருக்கமுடியும். இன்றுவரை தனக்காக எதையுமே சேர்த்துக்கொள்ளாத அர்ப்பண உணர்வு மிக்கவர். தன்னை முழுமையாக இயக்கச் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்தவர். மத்தியதர வர்க்க குடும்பப் பின்னணியைக் கொண்டவர். இயக்கத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று ஆரம்பத்தில் மேற்கொண்ட முடிவிற்கு இணங்க இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலிருந்த கொள்கைப் பிடிப்பாளன். பிரபாகரன் திருமணம் செய்துகொண்ட போது கூட கடுமையாக விமர்சித்தவர். உறுதிமிக்க போராளி. ஏனையோருக்கும் நம்பிக்கை தரவல்ல மனோவலிமையுள்ளவர்.

நாகராஜா: காங்கேசந்துறையைச் சேர்ந்தவர். துரையப்பா கொலை மேற்கொள்ளப்பட்ட வேளையில் இவரது ரியூசன் நிலையத்திலேயே பிரபாகரன் உள்பட பலரும் தங்கியிருந்தனர். அதற்குரிய அனைத்துச் செலவுகளையும் மிகுந்த இராணுவ அடக்குமுறைகளின் மத்தியில் மேற்கொண்ட நாகராஜா உற்சாகமான போராளி. மத்தியதர வர்க்கக் குடும்பப் பின்னணியைக் கொண்ட நாகராஜா பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை பார்தவர். பொத்துவில் எம்.பி. கனகரத்தினம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தப்பியவர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்தவர் நாகராஜா. வீ.பொன்னம்பலம் என்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் பின்னாளில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டவருடைய அனுதாபி ஒப்பீட்டளவில் அரசியல் ஆர்வமுடையவாராயிருந்தார். தந்தையற்ற குடும்பத்தைச் சார்ந்த இவரின் உழைப்பிலேயே முழுக்குடும்பத்தையும் பராமரிக்க வேண்டிய நிலையிலிருந்தாலும் போராட்ட உணர்வோடு எம்முடன் தீவிரமாக உழைத்தவர்.

விச்சு : லண்டனிலிருந்து வந்து எம்மோடு இணைந்து கொண்டவர். எம்மத்தியிலிருந்த ஆங்கிலம் பேசத்தெரிந்த போராளிகளுள் இவரும் ஒருவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பின்னதாக லண்டனிலிருந்து செயற்பட்ட சார்ல்ஸ் போன்றோரின் கருத்துக்களோடு உடன்பாடுகொண்டு இயக்கச் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டவர்.

ராகவன்: ஆரம்ப காலத்திலிருந்தே புலிகளோடு தொடர்பு நிலையிலும். உறுப்பினராகவும். தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்தவர். காலத்திற்குக் காலம் இயக்கத்திலிருந்து விலகியிருந்து பின்னர் இணைந்து கொள்வதுமாக இருந்த இவர் மிகுந்த மனிதாபிமானி. மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ராகவன் எனது ஊரைச் சேர்ந்தவர். முதலில் பிரபாகரனை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். என்னோடு இவரும் ஆரம்பத்திலிருந்தே கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் இவர் கல்விகற்றுக்கொண்டிருந்தார்.

ஜோன் என்ற சற்குணா : வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர் பிரபாகரனின் தூரத்து உறவினர். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். புளியம் குளம் பண்ணை இருந்த இடம் இவருக்குச் சொந்தமானதே. அரசியல் ரீதியான உணர்வுகளால் உந்தப்பட்டு இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள் என்பதை விட ஆரம்பத்தில் பிரபாகரனின் தனிப்பட்ட தொடர்புகளூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்திலிருந்து பண்ணைகளில் தன்னை அர்ப்பணித்து வேலைசெய்த இவர் மிகவும் உறுதியான போராளி.

கறுப்பி என்ற நிர்மலன்: முதல் முதலில் பூந்தோட்டம் பண்ணையை உருவாக்குவதற்காக நான் பலருக்காகக் காத்திருந்த வேளையில் அங்கு வந்து சேர்ந்த ஒரே ஒருவர் நிர்மலன் தான். சற்றுக் கருமை நிறம் உடையவராதலால் செல்லக்கிளி தான் இவருக்குக் கறுப்பி என்று பெயர்வைக்கிறார். யாழ்ப்பாண நகரத்தைச் சேர்ந்த நிர்மலன் மிகுந்த விழிம்புனிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பேரவையுடன் முன்னதாக இவருக்குத் தொடர்புகள் இருந்தது. அர்ப்பண உணர்வுமிக்க போராளி இவர். இன்று வாழ்விழந்து பரிதாபகரமான நிலையிலிருப்பவர்களுள் இவரும் ஒருவர்.

சித்தப்பா : லொறி ஒன்றில் சாரதியின் உதவியாளராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். பின்னதாக இயக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே எம்மோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்தவர். பற்குணம் ஊடாக பிரபாகரனிற்கு பழக்கமானவர். அவரூடாகவே இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பற்குணம் கொலையுண்ட செய்தி இவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. சுதுமலையைச் சேர்ந்த இவர் அன்னிய நாடொன்றில் இப்போது வாழ்கிறார். பெரிதாக எழுத வாசிக்கத் தெரியாதவராயினும் கிளித்தட்டு விளையாட்டில் மிகத் திறமை வாய்ந்தவர். தொலைக் கிராமங்களில் இருந்து கூடக் கிளித் தட்டு விளையாட்டிற்காக இவரைத் தேடி வந்து அழைப்பவர்கள பலர்.

தங்கா : கூட்டணியின் குறிப்பிடத்தக்க செயற்பாட்டாளராக இருந்து இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கூட்டணியின் மிக முக்கிய உறுப்பினரின் சகோதரர் இயக்கம் பெரிதாகிச் சுய செயற்பாடுகள் அதிகரிக்க இயக்கத்திலிருந்து தானாகவே விலகிக் கொண்டார்.

நிர்மலன். சித்தப்பா. சற்குணா போன்ற மூவரினதும் பங்கும் அர்ப்பணிப்பும் இன்றும் எனது எண்ணங்களைத் துரத்துகிறது. பண்ணைகளில் இருண்ட காடுகளின் மத்தியில் தனியாக வாழ்ந்திருக்கிறார்கள். கொடிய வன விலங்குகள் தனிமை வறுமை அனைத்துக்கும் மத்தியில் போராட்ட உணர்வோடு உறுதியாக வாழ்ந்திருக்கிறார்கள். சுகாதாரம் மருத்துவம் போன்ற வசதிகளின்றி பல நாட்கள் நோயால் வாடியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தால் போராட்டத்தை வழிநடத்தும் பெரும் தலைவர்களாகியிருக்க முடியும்.

மாணவர்பேரவை தீவிரமாக உருவான வேளையில் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளைச் சார்ந்தவர்கள் உத்தியோகம் பார்க்கும் இளைஞர்கள் ஆங்கிலம் பேசும் கனவான்கள் என்று ஒரு பெரிய கல்விகற்ற இளைஞர் கூட்டமே பங்களித்திருந்தது.

அவர்களின் சட்டரீதியான உணர்ச்சிப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக எம்மால் முன்னெடுக்கப்பட்ட போது இந்தப் படித்த இளைஞர்கள் எவரையுமே காண முடிவதில்லை. தான் தனது குடும்பம் தாம் சார்ந்த சமூகமும் அதன் மத்தியிலான அந்தஸ்து என்ற சமூக வரம்புகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

சற்குணா. நிர்மலன். சித்தப்பா போன்ற இளைஞர்கள் தமது ஒவ்வொரு அசைவையும் இளைஞர் பேரவையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாக்கிய உணர்ச்சித் தீக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

பண்ணைகள் பெருகி இயக்கம் ஓர் அமைப்பு வடிவை தகவமைத்துக் கொண்ட வேளையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனான தொடர்பு முற்றாகவே அற்றுப் போயிருந்தது.

பாலா : உரும்பிராயைச் சேர்ந்த இவர் இயக்கத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக சிறிய கடை ஒன்றை வைத்திருந்தவர். கூட்டணியின் ஆதரவாளராக இருந்தவர். உரும்பிராய் கொலைச் சம்பவத்தின் பின்னர் எம்மோடு முழுமையாக இணைந்து கொண்டவர்.

உமாமகேஸ்வரன் : தெல்லிப்ப்ளையைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் வசதியான மத்தியதர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளுள் இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த மிகச் சிலருள் இவரும் ஒருவர். நேர்மை மிக்க இவர் தாக்குதல்களில் முன்நிற்கும் துணிச்சல் நிறைந்த போராளி. நில அளவையாளராகச் தொழில் பார்த்துக்கொண்டிருந்த உமாமகேஸ்வரன்இ தனது தேசிய அரசியலிலான ஆர்வத்தையும் செயற்பாட்டையும் மாணவனாக இருந்த காலப்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக்கிளை செயலாளராகவும் நீண்டகாலமாக செயற்பட்டார். தமிழ்ப் புதிய புலிகளாக இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர் எம்மோடு இணைந்து கொண்ட உமாமகேஸ்வரன்இ இதற்கு முன்னதாக அகதிகளுக்கு உதவும் மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். புலிகளில் இணைந்து கொண்ட சில காலங்களிலேயே பிரபாகரனின் சிபார்சின் அடிப்படையில் மத்திய குழுவில் அமைப்பின் தலைவராகத் தெரிவுசெய்யப்படுகிறார். 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சாந்தன் : கொழும்பில் இருந்து எம்மோடு இணைந்து கொண்டவர் படித்த மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர் இவர். இயல்பாக ஆங்கிலம் பேசக் கூடிய இவர் தான் பிரபாகரனுக்கு ஆயுதங்கள் குறித்த ஆங்கிலப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவார். எல்லோராலும் மதிக்கப்பட்ட தலைமைப் பண்புடைய ஒருவர். ஓரளவிற்கு வசதியான நகர்புறக் குடும்பச் சூழலிலிருந்து எம்மோடு இணைந்து கொண்ட சாந்தன் பண்ணை வாழ்க்கைக்காக எப்போதுமே முகம் சுழித்ததில்லை. அனைவரோடும் உணர்ச்சிவயப்படாமல் அன்போடு பழகும் தன்மை படைத்தவர்.

எமது காலை உணவு மிளகாய்த் தூளோடு பிசையப்பட்ட தேங்காய்த் துருவலும் பாண் துண்டுகளும் மட்டும் தான். இதுவே பல மத்தியதர வர்க்க இளைஞர்களுக்குக் கசப்பான அனுபவமாக அமைந்திருந்தது. அதுவும் தட்டுப்பாடாகும் நாட்களும் இருந்ததுண்டு. சாந்தன் இந்த உணவை எந்ததத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்வார். மிகுந்த மனிதாபிமானி. அவ்ரோ விமானக்குண்டு வெடிப்பின் போது சிங்கள மக்கள் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்று ராகவன் என்னோடு சேர்ந்து சாந்தனும் எதிர்த்தரர்.

குமணன் என்ற குணரத்தினம் : கோண்டாவிலைச் சேர்ந்த வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நிர்வாகத் திறனும் அர்ப்பணமும் மிக்க ஒரு போராளி. பண்ணைகளுக்குச் சென்றுவருதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் எனக்கு உதவியாகச் செயற்பட்டார். கோண்டாவிலில் பிரபாகரனுடைய தொடர்பாளர் ஒருவரின் ஊடாக இயகத்தில் இணைந்து கொண்டவர். இயக்கத்தில் இணைவதற்கு முன்னர் கல்விகற்றுக்கொண்டிருந்தவர்.

திருகோணமலைத் தொடர்புகளைக் கையாண்டவ்ர் குமணன் தான். திருகோணமலையில் பயஸ் மாஸ்டர் என்ற இடது சாரித் தத்துவங்களோடு ஈடுபாடுகொண்ட ஒருவரோடு குமணனுக்குத் தொடர்புகள் ஏற்படுகிறது. திருகோணமலையில் இருந்தவர்களுக்கு பயஸ்மாஸ்டர் தனது தத்துவார்த்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறார். புலிகள் பிளவுற்ற வேளையில் புதிய பாதையில் பிரதான பாத்திரம் வகித்தவர். குமணன் பாத்திரம் குறித்த தனியான பகுதியில் இவர் குறித்து மேலும் பேசலாம். இவர் புலிகளால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்.

மாதி: இவர் கொழும்பிலிருந்து வந்து இணைந்து கொண்ட இன்னொருவர். பின்னர் பண்ணை ஒன்றிற்குப் பொறுப்பாக இருந்தவர்.

பண்டிதர் : கம்பர்மலையைச் சேர்ந்த இவர் மிகுந்த தமிழுணர்வு மிக்கவர். ஆங்கிலக் கலப்பற்ற தமிழ் பேச வேண்டும் என்பதில் தீவிரமான ஆர்வமுள்ளவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேடைப் பேச்சுக்களின் போது காசியானந்தனுக்கு இரத்தப் பொட்டு வைத்தவர். இவர் இணைந்து கொண்ட காலத்திலிருந்தே பண்ணைகளில் வாழ்ந்தவர். மிகுந்த பொறுப்புணர்வு படைத்தவர். இலங்கை இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டவர்.

சுந்தரம்: சுழிபுரத்தைச் சேர்ந்த சுந்தரம் எளிமையான போராளி. காந்தீயம் அமைப்பில் அகதிகளுக்கான வேலைகளில் ஈடுபட்டவர். எப்போதும் அரசியலுக்காகவும் புலிகள் அமைப்பிற்காகவும் தொடர்ச்சியாக உழைத்தவர். தனக்காக எந்த வசதியையும் எதிர்பார்ப்பவரல்ல. இடதுசாரியான எம்.சி.சுப்பிரமணியத்தோடு தொடர்புகொண்டிருந்த சுந்தரம் பின்னதாக தேசியப் போராட்ட உந்துதலால் புலிகளில் இணைந்து கொண்டார்.புலிகளிலிருந்து விலகிய பின்னர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் சித்திரா அச்சகத்தில் புதியபாதை பத்திரிகை பதிப்பித்திக்கொண்டிருந்த வேளையில் கொல்லப்பட்டவர் தலைமைப் பண்பு மிக்க போராளியான சுந்தரம் ஆயுதப் பயிற்சியிலும் திறமை வாய்ந்தவர். 1982 தை 02ம் நாள் யாழ் சித்திரா அச்சகத்தினுள் வைத்து பின்னிருந்து சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ரவி அல்லது பரா : புலோலி வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவராக இருந்ததால் பொலிசாரால் தேடப்பட்ட ரவி பின்னதாகப் புலிகளோடு இணைந்து கொண்டார். தேடப்படுகின்ற காலப்பகுதிகளில் டொலர்.கென்ட் பாம் போன்ற காந்தியப் பண்ணைகளில் தலைமறைவாக இருந்தவர். முத்தயன் கட்டுக் பண்ணைக்குரிய நிலம் ரவியினுடையதே. சண்டிலிப்பாயைச் சேர்ந்த ரவி இப்போது அன்னிய நாடொன்றில் வாழ்கிறார். உமாமகேஸ்வரனின் தொடர்புகளூடாக புலிகளில் இணைந்து கொண்டவர்.

மாத்தையா அல்லது சிறி : மிகவும் வறிய மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்த மாத்தையா பொலிகண்டி மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர். வறுமை நிழலோடு தனது பிள்ளைப் பருவத்தைக் களித்தவர் தற்பெருமையற்ற அனைவரோடும் சகஜமாகப் பழகவல்ல போராளி. வல்வெட்டித் துறையில் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் இல்லை.

கிட்டு, பிரபாகரன் போன்றோர் மீன்பிடிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள ஆயினும் மீன்பிடித் தொழிலை வாழ்கையாக கொண்டவர்களாக இல்லை பிரபாகரனின் தொடர்புகளின் ஊடாகவே புலிகளில் இணைந்துகொண்ட மாத்தையா பிரபாகரனின் அதீத மரியாதை உடையவராகக் காணப்பட்டார். மிகவும் விசுவாசமான உறுதிமிக்க போராளி. மாத்தையா அல்லது சிறி குறித்த விரிவான பதிவுகள் இன்னும் தொடரின் ஏனைய சம்பவங்களோடு வரும்.விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக 80 இன் இறுதிப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மாத்தையா பின்னர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டப்பட்டு பிரபாகரனின் உத்தரவின் பேரில் கொலைசெய்யப்பட்டார்.

கிட்டு : இந்தியக் கடற்பரப்பில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட கிட்டு எம்மோடு பண்ணைகளில் வேலை செய்த இன்னுமொரு போராளி. இவர் துடிப்பான இளைஞன். பிரபாகரனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். மத்தியதர வர்க்க சமூகப் பின்னணியைக் கொன்டவராகும். இவரின் நடவடிக்கைகள் காரணமாக நான் இவர் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்த காலகட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இவரப் பண்ணையிலிருந்து வெளியேற்றிய சம்பவமும் எனது நினைவுகளுக்கு வருகிறது. பண்ணைகளில் வழங்கப்படுகிற உணவின் தரக்குறைவிற்காக எனையவர்களுடன் மோதிக்கொள்வார். ஒரு கால அட்டவணைப் படி ஒவ்வொரு சுற்றிலும் ஒருவர் சமையல் வேலைகளில் ஈடுபடுவார்கள். பண்ணைகளில் நபர்களின் தொகையைப் பொறுத்து சில சமயங்களில் மூன்றுபேர் கூடச் சமையலில் ஈடுபடுவார்கள். இந்த வேளைகளிலெல்லாம் போராளிகளிடையே பிரச்சனை எழுவதும் அதனை சமாதானப்படுத்துவதற்காக எனது நேரத்தின் ஒருபகுதியைச் செலவிடுவதும் வழமையாக இருந்தது.

குமரப்பா : புத்தகங்களை வாசிப்பதும் புதியவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம்மிகுந்த எம் மத்தியிலிருந்த சிலருள் இவரும் ஒருவர். தனக்குச் சரியெனப்பட்ட கருத்தை முன்வைக்கும் திறமையுள்ளவர். பிரபாகரனது அதே உரைச் சேர்ந்த இவர் அவரை தனது ஊர்க்காரார் என்று கூடப்பார்க்காமல் விமர்சிப்பவர். மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண்ட வறிய குடும்பத்தைச் சார்ந்தவர் இவர்.இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த காலப்பகுதியில் சிறையில் சயனைட் வில்லைகளை உட்கொண்டு தற்கொலைசெய்து கொண்டவர். புலிகளில் பிளவு ஏற்பட்ட வேளையில் எந்தப்பக்கமும் சாராது விலகியிருந்த குமரப்பா 83 இனப்படுகொலையின் பின்னரே மறுபடி புலிகளில் இணைந்து கொண்டார்.

சங்கர் : பண்டிதரின் ஊரான வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள கம்பர்மலையைச் சேர்ந்த சங்கர் பண்டிதராலேயே புலிகளுக்குள் உள்வாங்கப்பட்டவர். உறுதியான போராளி. புலிகள் மீதான மிகுந்த விசுவாசத்தோடு செயற்பட்டவர். நிர்மலாவின் வீட்டிற்கு தகவல் சொல்லச் சென்ற வேளையில் இராணுவத்தால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டவர். பின்னர் இந்தியாவிற்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு மரணமானவர்.

காத்தான் : உமாமகேஸ்வரனுடைய தொடர்புகளூடாக இயக்கத்தில் இணைந்து கொண்டவர். கராத்தே பயிற்சிபெற்ற இவர் உடல் உறுதியும் மனோவலிமையும் மிக்கவர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவர் கந்தரோடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பின்னதாக உமாமகேஸ்வரனின் தலைமையிலான புளொட் அமைப்பில் இணைந்து கொண்டவர் இலங்கை இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டவர்.

பீரீஸ் : வடமராட்சியைச் சேர்ந்த இவர் வள்ளிபுரம் பண்ணைக்குப் பொறுப்பாக இருந்து நிர்வகித்தவர். வறிய குடும்பத்தைச் சேர்ந்த பீரீஸ் புலிகள் பிளவுபட்ட போது இயக்கத்திலிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொண்டவர்.இப்போது எங்கு வாழ்கிறார் எனத் தெரியவில்லை.

இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலிருந்து எம்மோடு வந்து இணைந்துகொண்டவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இராணுவ அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட இவர்கள் தேசிய உணர்வு மிக்க உறுதிமிக்க போராளிகளாகக் காணப்பட்டனர்.

யோகன்(பாசி) : பண்டிதர் தான் இவ்வாறான போர்குணம் மிக்க ஒருவர் மட்டக்களப்பில் இருப்பதாக எங்களுக்குத் தெரியப்படுத்தினார். காசியானந்தனோடு இவருக்குத் தொடர்புகள் இருந்தது. காசியானந்னைத் தொடர்புகொண்டால் யோகனைத் தொடர்புகொள்ள முடியும் என்று அறிந்து கொண்டு அவரூடாக யோகனைத் தொடர்புகொண்டு இணைத்துக் கொள்கிறோம். நாகராஜாவும் உமாமகேஸ்வரனும் மட்டக்களப்பிற்குச் சென்று யோகனோடு இன்னும் இருவரை சேர்த்து எமது பண்ணைகளுக்கு அழைத்து வருகின்றனர். மரைக்காயர், பவானந்தன் ஆகியோரும் எம்மோடு இணைந்து கொள்கின்றனர். யோகன் பின்னர் புலிகளோடு தீவிரமாகச் செயற்பட்டவர். பவானந்தன் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகிப் போனவர். ஏனைய இருவர் குறித்த தகவல்கள் இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை.

இதன் பின்பதாக காந்தன் இந்திரன் என்ற வேறு இருவரும் கிழக்கிலிருந்து எம்மோடு இணைந்து கொண்டனர். காந்தன் மிக உற்சாகமான போராளி புலிகளின் பிளவின் போது ஒதுங்கியிருந்தாலும் 83 படுகொலைகள் ஏற்படுத்திய உணர்வலைகளின் தொடர்ச்சியாக மறுபடிசென்று புலிகளோடு இணைந்துகொண்டவர்.

மனோ மாஸ்டர் : பண்ணைகள் விரிவiடந்த காலப்பகுதியில் எம்மோடு இணைந்து கொண்டவர்களுள் மனோமாஸ்டர் குறிப்பிடத் தக்கவர். பின்னதாக இவரின் விரிவான பங்களிப்பு விபரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. மனோ மாஸ்டர் உறுதியான பொறுப்புணர்வுள்ள போராளியாகத் திகழ்ந்தார். பல்கலைக் கழகப் படிப்பை தொடராமல் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். பண்ணைகளை நிர்வகிப்பதில் என்னோடு இணைந்து செயற்பட்ட இவர் திருகோணமலை,மட்டக்களப்புப் பகுதிகளின் பண்ணைத் தொடர்புகளை பேணுவதில் முக்கிய பங்கு வகித்தவர். கம்பர்மலையைச் சேர்ந்தவர்.

இவர் புலிகளில் இணைந்து கொண்ட சில நாட்களிலேயே மார்க்சிய நூல்களைப் படிக்குமாறு எமக்கு முதலில் கூறியவர். ஆளுமை மிக்க மனோமாஸ்டர் ஜெயாமாஸ்டர், ஜான் மாஸ்டர் போன்றோரோடு மார்க்சிய விவாதங்களில் ஈடுபடுவதாகக் எனக்குக் கூறியிருந்தார். 84 நான்காம் ஆண்டளவில் பிரபாகரனின் உத்தரவின் அடிப்படையில் வல்வெட்டித்துறைப் பகுதியில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார்.

ஜான் மாஸ்டர் : குமணனுடன் ஆரம்பத்தில் தொடர்புகளைக் கொண்டிருந்த இவர் பின்னதாக மனோமாஸ்டர் திருகோணமலைக்குச் சென்றுவரும் காலகட்டத்தில் அவரோடு அரசியல் ரீதியாகவும், நடைமுறை விடயங்களிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஜான்மாஸ்டர் மிகவும் உறுதியான மார்க்சியக் கருத்துக்களோடு உடன்பாடு கொண்டிருந்த போராளி. வாசிப்பதில் ஆர்வம் மிகுந்த கொண்டிருந்ததாக குமணன் கூறியிருக்கிறார்.பின்னதாக உமாமகேஸ்வரன் தலைமையிலான புளட் அமைப்பில் இணைந்து கொண்டவர்.

ஜெயச்சந்திரன் என்ற பார்த்தன் : பயஸ் மாஸ்டரின் வழியாக மார்க்சியக் கருத்துக்களில் ஆர்வம் மிக்கவராக இருந்தவர். புளட் அமைப்பில் இணைந்து கொண்டு அரச படைகளால் கொலை செய்யப்பட்டவர். ஆளுமை மிக்கவரென குமணன் கூறியிருக்கிறார்.

தவிர மைக்கல் மகேஸ் போன்றோர் திருகோணமலையைச் சேர்ந்த தொடர்பாளர்களாக இருந்தனர். கிழக்கு மாகாணத்தோடு எனக்குத் நேரடியான தொடர்புகள் இன்மையால் முழுமைப் படுத்தப்பட விபரங்களை அனுபவங்களூடாகத் தொகுக்க முடியாதுள்ளது.

நெப்போலியன் : புலிகளின் பிளவிற்குப் பின்னர் உருவான பாதுகாப்புப் பேரவை என்ற விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான இவர் மிகுந்த ஆர்வமுள்ள போராளி. மனோமாஸ்டரின் தொடர்புகளூடாக வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளானவர்களுள் ஒருவர். ஈரோஸ் இயகத்தால் மலையகப் பகுதிகளில் நெப்போலியன் கொலை செய்யப்பட்டார்.

அழகன் என்ற ஒருவரும் நெப்போலியனோடு இணைந்து அழகனும் பாதுகாப்புப் பேரவையில் இணைந்தார். பாதுகாப்புப் பேரவைக்கு முன்னதாக இயக்கம் பிளவடைந்த வேளையில் புதிய பாதையில் இணைந்து செயற்பட்டனர். பாதுகாபுப் பேரவை முதன் முதலில் கிழக்கில் காவல்நிலையம் ஒன்றைத் தாக்கியழித்தது என்பதைக் குறிப்பிடலாம்.

அழகன் : முத்தயன்கட்டுப் பண்ணையிலிருந்து விவசாயத்தில் ஈடுபட்டார். அழகன் பாதுகாப்புப் பேரவையின் ஆரம்பகாலங்களில் மார்க்சிய நூல்களோடு கொழும்பிற்குப் பயணம்செய்த வேளையில் அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்களை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை. அரச படைகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவே அனைவரும் கருதுகின்றனர்.

இன்னும் வரும்…

http://inioru.com/?p=11081

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே புதிய பாதை சுந்தரத்தை புலிகள் தான் கொண்டார்களா!ஏன்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுந்தரத்தை புலிகள் சுட்டதிற்கு காரணம் அய்யரின் சுந்தரத்தை பற்றிய குறிப்பை பார்த்தாலே விளங்கும்.பல முடிந்து போன கதைகள்.

தமிழன் தனக்கு அடித்த சிங்களவனை திருப்பி அடிக்கதான் இன்றும் முயலுகின்றான்,அன்றும் அதைத்தான் ஊக்கிவித்தான்.விடுதலைக்கும் தமிழனுக்கும் வெகுதூரம்.அரசியலின் அரிச்சுவடி தெரியாதவன் தமிழன்.தனிநபர் துதிபாடலிலேயே காலத்தைக் கழிப்பவன். செல்வா,அமிர்,பிரபா அடுத்தது யாரென்று தெரியவில்லை.மற்றவன் வாயைத்திறக்க முதல் அவனைத் துரோகியாக்கி பிரிவினையை தமக்குள்ளேயே வளர்ப்பவன்.

மொத்தத்தில் ஒரு சுயநலக்கும்பலின் ஒட்டுமொத்த வடிவம்.உலகம் முழுக்க அகதியாக அலைய முழுத்தகுதி பெற்றவன்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt