Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழில் குழந்தைப் பெயர்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மிழில் குழந்தைப் பெயர்கள்

http://www.kalanjiam.com/babynames/index.ப்ப்

http://www.vembady.com/view.php?area=tamil_baby_names

http://babynames.looktamil.com/

1. AnpuTamil

2. LookTamil

3. Kalanjiyam

4. TamilNames

5. Koodal

6. ThisisMyindia

7. SysIndia

8. TamilBabyName

9. Vembady

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம்.

தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் – மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்

http://tamil.2.ag/

Link to post
Share on other sites
 • 2 weeks later...

இதிலுள்ளை இணையங்களில் உலாவியபோது தூக்கிவாரிப்போட்டது. தமிழ்ப்பெயர்களைத் தேடினால் ஏமாற்றமே.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நல்லபல தமிழ் பெயர்களை இங்கு எதிலும் காணோம்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தூய தமிழ்ப் பெயர் கையேட்டினை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகளினூடாக வாங்கலாம்.இந்தியர்களின் இணையத்தில் தமிழ்ப் பெயர்கள் என்று சொல்லப்படுபவை சமஸ்கிருதம் போன்ற வட மொழிக்கலப்புக்களினால் உருவாகப்பட்டவை. இவை தமிழ்ப் பெயர்கள் அல்ல.

தமிழில் ல, ட , ர போன்ற எழுத்துக்களில் பெயர்கள் முதல் எழுத்துக்களாக வராது. ஆனால் எங்களது தமிழர்கள் குறிப்பாக சைவ, இந்து சமயத்தினர் எண் சோதிட மாயையினால் தமிழ்ப் பெயர் இல்லாத பெயர்களை சம்ஸ்கிறுத, வட மொழி ,சிங்களப் பெயர்களைச் சூட்டுகிறார்கள். கிறுஸ்த தமிழர்கள் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டி தங்களது தமிழன் என்ற அடையாளத்தை இழக்கிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் நன்றி நுணாவிலான். எனக்குத்தெரிந்த இரு குடும்பத்தினர் தங்களுக்குப் பிறக்கவுள்ள பிள்ளைகளுக்கு தூய தமிழ்ப் பெயர்களைச் சூடவுள்ளார்கள். என்னிடம் பெயர்கள் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு இதனை அனுப்புகிறேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தூய தமிழ்ப் பெயர் கையேட்டினை புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகளினூடாக வாங்கலாம்.

இவ்விணைப்பிலும் காணலாம்.

http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html

கீழே இணைக்கப்பட்ட இணைப்பிலும் தூய தமிழ்ப் பெயர்களைக் காணலாம்.

http://www.scribd.com/doc/19488357/Pure-Tamil-Baby-Names

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.