Jump to content

இட்டலி செய்யும் முறை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

Idli-Large.jpgidli.jpg

மல்லிகைப் பூப் போல இட்டலி செய்யும் முறை.

தேவையான பொருட்கள்.

இரண்டு சுண்டு உழுந்து,

ஒரு சுண்டு வெள்ளை அரிசி (சம்பா அரிசி என்றால் நல்லது),

சுவைக்கேற்ப சிறிதளவு உப்பு,

மா புளிக்க சிறிதளவு அப்பச்சோடா அல்லது ஈஸ்ட்,

இட்டலி அவிக்க.... இட்டலி சட்டி முக்கியம்.

இனி.... எப்படி ஆயத்தப் படுத்துவது என்று பார்ப்போம்.

உழுந்தை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எட்டு மணித்தியாலம் ஊற விடவும்.

அதே போல் வேறொரு பாத்திரத்தில் அரிசியையும் ஊற விடவும்.

ஊறிய உழுந்தையும், அரிசியையும் பசை போல் கிறைண்டரில் அரைக்கவும்.

அரைத்த உழுந்தையும், அரிசியையும் ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு.... உப்பு, புளிப்பதற்கு தேவையான அளவு ஈஸ்டையும் சேர்த்து 10 மணித்தியாலத்திற்கு மேல் வெப்பமான இடத்தில் மூடி வைக்கவும்.

(மூடியை அடிக்கடி திறந்து பாத்து.... அந்த மாவை கரண்டியால் கிளறிக் கொண்டிருப்பதை தயவு செய்து தவிர்க்கவும்)

புளித்த மா, இட்டலி அவிப்பதற்கு தயார். அந்தமாவை இட்டலி பாத்திரத்தில் முக்கால் பகுதிக்கு நிரப்பி , அவிய விடவும்.

இப்போ.... நீங்கள் எதிர்பார்த்த மல்லிகைப் பூப்போல இட்டலி தயார்.

அவிந்த இட்டலியை சம்பல், சாம்பார், சட்னி போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.

பிற்குறிப்பு: இட்டலி மா மிஞ்சியிருந்தால், குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து இரண்டு, மூன்று நாட்களின் பின்... மீண்டும் இட்டலி அவியுங்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் ஏதாவது உதவி கேட்டால் தமிழ்சிறி விழுந்தடித்துக் கொண்டு உதவுவார் போல :)

சில பேர் அரிசிக்கு பதிலாக ரவையும் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சுண்டு உழுந்து,

உழுந்தை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எட்டு மணித்தியாலம் ஊற விடவும்.

உடைத்த உழுந்தா? முழு உழுந்தா?

கோது நீக்கியதா? நீக்காததா?

ரவை தேவையில்லையா?

சட்னி எப்படிச் செய்வது என்று அறியவும் ஆவல்!

Link to comment
Share on other sites

உடைத்த உழுந்தா? முழு உழுந்தா?

கோது நீக்கியதா? நீக்காததா?

ரவை தேவையில்லையா?

சட்னி எப்படிச் செய்வது என்று அறியவும் ஆவல்!

உடைத்த உழுந்து

கோது நீக்கியது இலகுவான வேலை. நீக்காதது அலுப்பு வேலை :)

ரவையில் செய்வது சிறி சொன்னமாதிரி மல்லிகைப்பூமாதிரி வரும் இட்லி.

சட்னி சிறிதான் விளக்க வேணும் :D சிறி படத்திலதான் சட்னி செய்ததோ தெரியாது. :D

பிற்குறிப்பு: இட்டலி மா மிஞ்சியிருந்தால், குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து இரண்டு, மூன்று நாட்களின் பின்... மீண்டும் இட்டலி அவியுங்கள்.

.

சிறி ,

உங்கள் ஊர்ப்பக்கம் வந்தால் உந்த மல்லிகைப்பூ இட்லி சாப்பிட வேணும் :D

Link to comment
Share on other sites

உடைத்த உழுந்து

கோது நீக்கியது இலகுவான வேலை. நீக்காதது அலுப்பு வேலை :)

ஆனாலும். ஒவ்வொன்றாய் கழட்டி, உரித்து சாப்பிடுவது தான் எப்பவும் ருசியானது.. எனக்கென்றால், கோது புடை சூழ்ந்த உழுந்தை மெல்ல மெல்ல கோது நீக்கி வரும், இட்டலிதான் மல்லிகைப்பூவாய் ருசிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ஒரு முக்கியமான பொருளைச் சேர்க்கவேண்டும். உழுந்தை அரைக்கும் போது சிறிதளவு இஞ்சியையும் சேர்த்து அரைத்தால் மட்டுமே இட்லி மல்லிகைப்பூப்போல வரும். உண்டபின் வயிற்றில் பொருமல் ஏற்படாது. எப்போதுமே கோது நீக்காத உழுத்தம்பருப்பை ஊறவிட்டு கோது கழுவி செய்யும் உணவுகள் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். இட்டலி அவிப்பதற்கு முன்பு சிறிது வெங்காயம், கடுகு, செத்தல் , சின்னச்சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை தாழித்து அரைத்துக்கரைத்து வைத்துள்ள மாவில் போட்டு கலக்கி விட்டும் இட்டலி அவிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஓஹோ சகாரா அக்காவுக்கும் சமையல் தெரியுமோ.. நம்புறது கொஞ்சம் கஸ்டமாய் இருக்கிது. சாப்பிட்டுப்போட்டுத்தான் சொல்லலாம் மல்லிகைப்பூமாதிரி இட்டலியோ இல்லாட்டிக்கு செங்கல் மாதிரி இட்டலியோ எண்டு

Link to comment
Share on other sites

பிற்குறிப்பு: இட்டலி மா மிஞ்சியிருந்தால், குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து இரண்டு, மூன்று நாட்களின் பின்... மீண்டும் இட்டலி அவியுங்கள்.

வயிற்ரால போகாதாக்களுக்கு நல்ல மருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் ஏதாவது உதவி கேட்டால் தமிழ்சிறி விழுந்தடித்துக் கொண்டு உதவுவார் போல :lol:

------

ரதி அக்கா, இது எல்லாம் சும்மா செய்யிற சமூக சேவை.

உங்களுக்கும் ஏதாவது தேவை எண்டால் சொல்லுங்கோ......

என்னால் இயன்றதை செய்கின்றேன். :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைத்த உழுந்தா? முழு உழுந்தா?

கோது நீக்கியதா? நீக்காததா?

ரவை தேவையில்லையா?

சட்னி எப்படிச் செய்வது என்று அறியவும் ஆவல்!

சமையல் விஷயங்களில் ஆண்களுக்கு தெரியாத சட்னியா......

Link to comment
Share on other sites

சும்மா இட்லி சட்னி உப்புமா, தோசை என்று சுகமான வேலை குடுக்காமல், ஆட்டுக்கால் பாயா, மீன் தலைத் தீயல் :rolleyes: , இப்படி ஏதாவது நாக்குக்கு ருசியா சமைக்க தெரிஞ்சால் சொல்லுங்கோ... அதோட திராட்சை பழரசம் smiley-eatdrink003.gif செய்வது எப்படி என்று யாருக்காவது தெரிஞ்சால் அதையும் போடுங்கோ... :D:unsure:

குட்டி,

இப்ப கோயில் கொடியேத்துற நேரம்,

முடிஞ்சாப் பிறகு ஆட்டுக்கால் சூப் தான். :D

Link to comment
Share on other sites

குட்டி,

இப்ப கோயில் கொடியேத்துற நேரம்,

முடிஞ்சாப் பிறகு ஆட்டுக்கால் சூப் தான். :unsure:

எப்ப கோயில் கொடி ஏத்தி இறக்குவியள்? ச... ஆட்டுக்கால் சூப் மிஸ் ஆகிடுது இந்த வாரம்...

சரி, ஏதோ கோயில் என்று சொல்லிப் போட்டியல், அதால பொறுமையா ஆட்டுக்கால் சூப்புக்கு வெய்டிங்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்னி எப்படிச் செய்வது என்று அறியவும் ஆவல்!

சட்னி சிறிதான் விளக்க வேணும் :lol: சிறி படத்திலதான் சட்னி செய்ததோ தெரியாது. :)

சாந்திக்கு பகிடியா கிடக்குது. :lol:

தக்காளிப்பழ சட்னி.

தேவையான பொருட்கள்.

தக்காளிப்பழம் அரை கிலோகிராம்

பெரிய வெங்காயம் 2

செத்தல் மிளகாய் 8

உழுந்து மூன்று மேசைக்கரண்டி

பழப்புளி சிறிதளவு

உப்பு

கடுகு சிறிதளவு

தாழிக்க எண்ணை

செய்முறை:

வெங்காயம், தக்காளிப்பழம் போன்றவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.

தாச்சியில் சிறிது எண்ணை விட்டு செத்தல் மிளாகாய், கடுகு, உழுந்து போட்டு தாழிக்கவும்.

இனி, வெட்டிய வெங்காயம், தக்காளி, புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

சிறிது ஆறிய பின் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

இப்போ.... இட்டலிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட, சுவையான சட்னி தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி ஒரு முக்கியமான பொருளைச் சேர்க்கவேண்டும். உழுந்தை அரைக்கும் போது சிறிதளவு இஞ்சியையும் சேர்த்து அரைத்தால் மட்டுமே இட்லி மல்லிகைப்பூப்போல வரும். உண்டபின் வயிற்றில் பொருமல் ஏற்படாது. எப்போதுமே கோது நீக்காத உழுத்தம்பருப்பை ஊறவிட்டு கோது கழுவி செய்யும் உணவுகள் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். இட்டலி அவிப்பதற்கு முன்பு சிறிது வெங்காயம், கடுகு, செத்தல் , சின்னச்சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை தாழித்து அரைத்துக்கரைத்து வைத்துள்ள மாவில் போட்டு கலக்கி விட்டும் இட்டலி அவிக்கலாம்.

வல்வை சகாரா இட்டலி அவிக்கும் முறை வித்தியாசமாக உள்ளது.

இட்டலிக்கு இஞ்சி, கடுகு, கருவேப்பிலை, சீரகம், வெக்காயம், செத்தல் மிளகாய் போன்றவற்றை போடுவதை இப்போ தான் கேள்விப்படுகிறேன்.

அடுத்தமுறை இட்டலி அவிக்கும் போது உங்கள் முறையில் செய்து பார்ப்போம்.

வயிற்ரால போகாதாக்களுக்கு நல்ல மருந்து

நல்லம் தானே.... டாக்குத்தரிட்டை போற நேரமும், காசும் மிச்சம். :lol::)

உங்கள் இட்லியும் என்து போல் வெள்ளை தோசையில் போய் முடியாமலிருக்க ...

ஜெகுமார், ஒளிப்பதிவில் சுலபமாக இட்டலி அவிக்க காட்டித்தந்தமைக்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும். ஒவ்வொன்றாய் கழட்டி, உரித்து சாப்பிடுவது தான் எப்பவும் ருசியானது.. எனக்கென்றால், கோது புடை சூழ்ந்த உழுந்தை மெல்ல மெல்ல கோது நீக்கி வரும், இட்டலிதான் மல்லிகைப்பூவாய் ருசிக்கும்

கோது நீக்காத உழுந்தில் இட்டலி அவிக்கும் போது சுவை அதிகமாக இருக்கும் என்பது உண்மை.

ஆனால் என்ன கன நேரம் மினக்கெட வேண்டும்.

ஓஹோ சகாரா அக்காவுக்கும் சமையல் தெரியுமோ.. நம்புறது கொஞ்சம் கஸ்டமாய் இருக்கிது. சாப்பிட்டுப்போட்டுத்தான் சொல்லலாம் மல்லிகைப்பூமாதிரி இட்டலியோ இல்லாட்டிக்கு செங்கல் மாதிரி இட்டலியோ எண்டு

மல்லிகைப்பூமாதிரி இட்டலி என்பது...... வெள்ளை நிற இட்டலி மச்சான். :)

Link to comment
Share on other sites

ஆனாலும். ஒவ்வொன்றாய் கழட்டி, உரித்து சாப்பிடுவது தான் எப்பவும் ருசியானது.. எனக்கென்றால், கோது புடை சூழ்ந்த உழுந்தை மெல்ல மெல்ல கோது நீக்கி வரும், இட்டலிதான் மல்லிகைப்பூவாய் ருசிக்கும்

இதின்ர அர்த்தத்த நேரடியா விளங்கிக்கொள்ளுறதா? அல்லது... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும். ஒவ்வொன்றாய் கழட்டி, உரித்து சாப்பிடுவது தான் எப்பவும் ருசியானது.. எனக்கென்றால், கோது புடை சூழ்ந்த உழுந்தை மெல்ல மெல்ல கோது நீக்கி வரும், இட்டலிதான் மல்லிகைப்பூவாய் ருசிக்கும்

எனக்கும் இதுதான் பிடிக்கும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாலும். ஒவ்வொன்றாய் கழட்டி, உரித்து சாப்பிடுவது தான் எப்பவும் ருசியானது.. எனக்கென்றால், கோது புடை சூழ்ந்த உழுந்தை மெல்ல மெல்ல கோது நீக்கி வரும், இட்டலிதான் மல்லிகைப்பூவாய் ருசிக்கும்

உது டபுள் மீனிங்க் போல இருக்கு :):lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளிப்பழ சட்னி.

நன்றி. செய்து சாப்பிட்டுப்போட்டு சட்னியின் சுவையைப் பற்றிச் சொல்லுகின்றேன்! :)

Link to comment
Share on other sites

இட்டலி செய்யிறதுக்கும் நான் அரிசி போட்டு அரைக்கிற இல்லை. 1 சுண்டு உழுந்து ஊற போட்டு அரைச்சா, 2 சுண்டு அவிச்ச ரவை சேர்க்கிறது.

idli1.jpg

idli2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்டலி செய்யிறதுக்கும் நான் அரிசி போட்டு அரைக்கிற இல்லை. 1 சுண்டு உழுந்து ஊற போட்டு அரைச்சா, 2 சுண்டு அவிச்ச ரவை சேர்க்கிறது.

குளக்காட்டான், நீங்கள் ரவை போட்டு அவித்த இட்டலி பார்க்க நல்ல மினுமினுப்பாக, வடிவாக இருக்குது. :lol:

Link to comment
Share on other sites

குளக்காட்டான், நீங்கள் ரவை போட்டு அவித்த இட்டலி பார்க்க நல்ல மினுமினுப்பாக, வடிவாக இருக்குது. :lol:

குளக்காட்டானின் முறையிலான இட்டலி பாக்க வடிவு மட்டுமில்லை சுவையும் தான் சிறி.

செய்து பாருங்கோ.

Link to comment
Share on other sites

சிறீ, உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்

என் வீட்டிலும் இட்லி, மூன்று நாலு மாதத்துக்கு ஒருக்கால் வரும், வழமையாக நான் சவுண்ட் விட்டுக் கொண்டிருக்கிறனான், அன்று மவுனமாகி விடுவேன். மனிசி அவித்த இட்லி உடம்பில் பட்டால் எலும்பும் உடையும். அவ்வளவு மென்மை

இட்லி, தென்னிந்தியர்களின் உணவு. வட இந்தியர்களும் குறிப்பாக குஜராத்திகள் இதே மாதிரி, "டோக்றா" என்றழைப்பார்கள். இட்லிக்கு கொஞ்ச மஞ்சலும், கொஞ்ச கடுகு, சீரகப்பவுடர் போட்டவித்தால் எப்படி வருமோ, அதேபோல் இருக்கும். அது அவர்களுடைய(குறிப்பாக சைவ உணவை உண்பவர்களுக்கு) நல்ல சிற்றுண்டி என்பார்கள்.

4032710607_72b785e0b3_o.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.