Jump to content

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

Recommended Posts

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

...என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..

பிழைக்கத் தெரியாத புறம்போக்குகள்தான் இனியும் வன்னியில் வாழ்வார்கள்..முப்பத்தைஞ்சு லச்சத்துக்கும் மேலான தமிழ்மக்களிற்கு வன்னியிலையிருந்த வெறும் மூண்டு லச்சம் மக்கள் உங்களை பலி குடுத்தாவது தமிழீழத்தை எடுத்திடலாமெண்டு கனவுகண்டம்..அந்த கனவை நீங்கள் கலைச்சுப் போட்டியள்..நாங்கள் உங்களிற்கு என்ன குறை விட்டம்..ஆனையிறவு விழுந்த கையோடையே 50 யுரோவை இயக்கத்திற்கு குடுத்துப் போட்டு அரைப் போத்தல் வி்ஸ்கியை யையும் அடிச்சுப்போட்டு விசிலடிச்து மகிழ்ந்தனாங்கள்..அடுத்ததாய்யாழ்ப்பாணமும் பிடிக்கவேணுமெண்டுதானே காசை காசெண்டும் பாராமல் ஆயிரம் இண்டாயிரம் எண்டு வட்டிக்கும் கிரெடிட்டும் எடுத்து குடுத்தனாங்கள்...இப்ப அந்த வட்டி கட்டேலாமல் நாங்கள் ஓடித்திரியிறம்..ஆனால் அதை வாங்கினவை AUDI காரிலை ஓடித்திரியினம் எண்டிறது வேறை கதை...இப்பிடியெல்லாம் செய்து போட்டு யாழ்ப்பாணம் விழேக்குள்ளை அடிக்கிறதுக்கெண்டு விலை கூடின சிவாஸ்..விஸ்க்கியையும் வாங்கி வைச்சிட்டு..கிளாலியிலை அடி தொடங்கேக்குள்ளை கிளாசை கழுவினால் கெக்குவில் கோண்டாவில் தாண்டேக்குள்ளை கோழிப் பொரியல் ..பலாலி விழேக்குள்ளை பாதிப் போத்தல் முடிஞ்சிடும்..காரைநகர் கடற்படைத்தளம் அடிக்கேக்குள்ளை கோமாவுக்கு போனால் காத்தாலை எழும்பி தலையிடியோடை தமிழ் தேசிய ஊடகங்களை பாத்தால் யாழ்ப்பாணம் விழுந்திட்டுது தமிழீழம் கிடைச்சிட்டுதெண்டு ( எங்களிற்கு யாழ்ப்பாணம் மட்டும்தானே தமிழீழம்)செய்தியள் வருமெண்டு நாங்கள் போட்டு வைச்சிருந்த திட்டமெல்லாம் அடிச்ச தண்ணி மாதிரியே முறிஞ்சு போச்சுது..ஆனாலும் என்ன செய்ய வாங்கி வைச்சிருந்த விலை கூடின சிவாசை முள்ளி வாய்க்கால் முடிஞ்ச கவலையை நினைச்சு அடிச்சாச்சு..வாங்கின போத்தல் வீண் போகேல்லை.. இப்பிடியே எங்களை நீங்கள் பேக்காட்டி போட்டீங்கள்..பரவாயில்லை ஆனால் இனியாவது நீங்கள் எங்கடை ஆக்கினையளிற்கு ஆளாகாமல் நிம்மதியாய் இருந்கிறதெண்டால் என்னாலை முடிஞ்ச சில யோசனையளை மட்டும்தான் சொல்ல முடியும்..

ஆலோசனை 1)

ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு அகதியாய் வந்து குடியேறுங்கோ.பிரச்சனை தீர்ந்திடும்..அதுக்கு உங்களிட்டை பணவசதி இருக்காது எனவே

ஆலோசனை 2)

நீங்கள் திரும்பவும் வட்டுக் கோட்டையிலையோ அல்லது அதுக்கடுத்த அராலியிலையோ ஒரு மேடையை போட்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேத்தலாம்..

தீர்மாம் 1)

புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ

தீர்மானம் 2)

புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ ….

.கப் சிப்..சத்தம் வாராது

அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...அதே நேரம் இஞ்சை சும்மாயும் இருக்கமாட்டம்..இருக்கிறார் எண்டும் இல்லையெண்டும் கட்டுரையள் வந்துகொண்டிருந்தாலும்..அவர் இருந்த காலத்திலை அவரை முருகன் எண்டனாங்கள் இப்ப அவரை யேசுநாதராக்கிப் போட்டம்...இனி அல்லே லூயா என்றபடி அதைவைச்சு பாட்டெழுதி சிடி அடிச்சசு விக்கிற திட்டத்திலை இருக்கிறம்..பல்லாயிரம் சிடி வித்தோ..கரப்பட்டு கலண்டர் வித்தோ புலத்திலை தேசியத்தை வாடவிடாமல் வளர்த்துக்கொண்டுதான்இருப்பம்..

கடிதத்தை முடிக்க முதல் கடைசியாய் ஒரு விசயம்.. எங்களுக்கு முல்லைத் தீவு முத்தையன் கட்டிலை 3 ஏக்கர் காணி இருந்தது (சிறிமா காலத்திலை கள்ள உறுதி முடிச்சதுதான்) அதுகளின்ரை எல்லை கல் இப்ப இருக்கோ இல்லையோ தெரியாது..அதை பாக்கிறதுக்கு இந்த சமர் லீவுக்கு சிறீலங்கா வாறதுக்கு ஏயார் லங்காவிலை றிக்கெற்போட்டு வைச்சிருக்கிறன்..ஒரு கஸ்ரமும் இல்லாமல் கட்டுநாயக்காவை விட்டு வெளியேனால் கதிர் காமகந்தனிட்டை போய் மொட்டையடிக்கிறதாய் வேண்டுதல் வைச்சிருக்கிறன்..மொட்டையடிக்கிறதுக்கு என்ரை மண்டையிலை மயிர் இல்லை அதாலை எனக்கு பதிலா உங்கை யாராவது மொட்டையடிக்க சம்மதித்தால் அவரிற்கு 50 தோ 100 அவரின் மண்டையின் அளவைப்பார்த்துத் தராலம்..

புலம்பெயர் தமிழரின் தாகம்.தமிழீழத் தாயகம்

நன்றி

ஃ.சாத்திரி

தலைமைச் செயலகம்

தமிழீழம்(பிரான்ஸ்)

tel..0033611149470

Link to comment
Share on other sites

  • Replies 86
  • Created
  • Last Reply

கிட்ட தட்ட உங்களுக்கு மேலும் காறி துப்பியுள்ளீர்கள்.புலம் பெயர் மக்களின் பணம் புலிகளுக்கு கட்டாயம் தேவை.எந்த நாடும் உதவி செய்யாத போதும் புலம் பெயர் மக்களின் பண உதவியால் புலிகள் 30 வருடங்களாக போர் நடாத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

வட்டுகோடை தீர்மானத்தின் மூலம் தான் தமிழீழம் என்ற சொல்லே தந்தை செல்வா போன்றவர்களால் கொண்டு வரப்பட்டது.அதனையே பிரபாகரன் அவரகளாலும் தொடரப்பட்டது.மிக பெரிய வித்தியாசம் தலைவர் அகிம்சையை போராட்டம் சரிவராது என தெரிந்து ஆயுத போராட்டத்தை தொடர்ந்தனர். அவரல் தான் கடைசி வரை பயணிக்க முடிந்தது. மற்ற எந்த ஒருவராலும் தொடர முடியவில்லை. மாறாக தமிழ் மக்களை காட்டி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தமது சொந்த மக்களை கொன்று குவித்தும், கடத்தி காசு பறித்தும் சிங்கள இராணுவத்துக்கு உளவாளிகளாக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் இன்று தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்லார்கள் அதுவும் இனவாத சிங்களவருக்காக?

கஞ்சிக்கு வழியில்லாத மகிந்த குடும்பம் இன்று உலகின் பணக்காரர் குடும்ப வரிசையில் நிற்க முடிந்தது இந்த தமிழர்களால் தான்.

இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது எய்தவன் இருக்க அம்பை நோவது எப்படி?

உங்களின் கட்டுரை சிவாஸுக்கான விளம்பரமாக மட்டுமே என்னால் போன்றவர்களால் எடுக்க முடிகிறது. வாங்கி பருகுங்கள் சிவாஸ்.

:lol::(:blink:

Link to comment
Share on other sites

பிரான்சிலையும் சிவாஸ் பிரபலமோ? நான் அமெரிக்கா போகிற நேரங்களில தங்களுக்கு வரும்போது உதை வாங்கிக்கொண்டு வரச்சொல்லியும், பிறகு காசு தருகிறதாயும் சொல்லி குடிமக்கள் அன்புத்தொல்லை. போத்தலை சும்மா வாங்கிற சமாச்சாரம் எண்டாலும் பரவாயில்லை. அவங்கள் எல்லையில ரெண்டு போத்தல் வாங்கின விசயத்தையும் கடவுச்சீட்டை வாங்கி கணணியில குறிச்சு வைப்பாங்கள். :wub:

Link to comment
Share on other sites

எனக்கு மிகப் பிடித்த, தேவபானமான (நான் அசுரன் இல்லை என்றதை நிரூபிக்க உதவிய) சிவாஸ் பற்றி கதை எழுதிய பெருங்குடிமகன் சாத்திரிக்கு என் 5 கிளாஸ்கள் நிரம்பிய நன்றிகள்

Link to comment
Share on other sites

நான் பகலில எழுதுகிறத்திற்கும் இரவில எழுதுகிறத்திற்கும் வித்தியாசப்படுவதற்கு இவர்தான் காரணம்,இரவில மனத்தில் உள்ள பாரங்களை இறக்க சிவனிடம் தஞ்சம்.சிவன் மாத்திரமல்ல எனது கடவுள். நான் நேரத்திற்கேற்ப அவரையும் மாத்துவேன்.எனது fஆவொர்f கிலன்லெவெட்தான்.இண்டைக்கு ஜமைகன் றம் கோக்கோட.

இப்போது சீ.என்.என் இல் கெயிட்டி அனர்த்தங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். இப்போது என் மனதில் எழுவது எலக்சன் முடிய யாழில் இணையத்தில் இருக்கும் யாரவது ஒரு பொதுவேலைத்திட்டத்தை கிழக்கு,வடக்கில் தொடங்கினால் நானும் கை கோர்க்க ரெடி.அது பண உதவி,நேரடி உதவி.

ஆக்கபூர்வமாக யாராவது எதுவும் செய்யும் உத்தேசம் இருந்தால் சொல்லவும் நான் ரெடி நாட்டிற்கு போக.

Link to comment
Share on other sites

பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..

இவ்வளவு தகுதியும் இருக்கிற யாழ்ப்பாணத்தான் ,33 வருடமாக ஆயுதம் ஏந்தி போராடி யிருக்கிறான் என்றால் உண்மையிலயே ஒரு பெரியவிடயம்தான்..

வாழ்க யாழ்ப்பாணி,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு தகுதியும் இருக்கிற யாழ்ப்பாணத்தான் ,33 வருடமாக ஆயுதம் ஏந்தி போராடி யிருக்கிறான் என்றால் உண்மையிலயே ஒரு பெரியவிடயம்தான்..

ஒரு பழைய ஆள் எனக்குச் சொன்னது.

யாழ்ப்பாணத்தான் சண்டைபிடிப்பம் என்று சண்டையைத் தொடங்கி கடைசியில அதை வன்னிச் சனத்திட்ட கொடுத்துட்டு எஸ்கேப் ஆயிட்டான் என்று. உண்மையில யாழ்ப்பாணம் அரசியல் ரீதியான நெருக்கடிகளைத்தான் சிங்களத்தால கண்டது. தரப்படுத்தல் அது இது என்று படித்த யாழ்ப்பாண வர்க்கத்தைத்தான் அது பாதிச்சு நிண்டது. ஆனா கிழக்கில நேரடியான உயிர் உடமை நெருக்கடிகளை அவர்கள் எதிர்கொண்டார்கள். அதனால அதற்கெதிரான ஆயுதப்போரில ஓர்மமும் வன்மமும் அவர்களிடம் நிறைந்து இருந்தது.

யாழ்ப்பாணி ஒரு விச்சுழியன் என்றதில மறுப்புக்கே இடமில்லை. வடக்கு கிழக்கில சண்டை நடந்துகொண்டிருக்க வடக்கில இருந்துமட்டுமே புலம்பெயர்வுகள் மெருமளவு நடந்து கொண்டிருந்தன. ஏன்... ? சூழல்களைப்பயன்படுத்தி அதற்கு தக்கவாறு தன்னை தகவமைத்துக்கொள்கிற கூர்ப்பு விதியை சரியா அப்ளை பண்ணியவன் யாழ்ப்பாணி என்றதால :wub:

தீவில் இருக்கும் மக்கழுக்கு கூர்புவிதி சற்று தூக்கலாகவே இருக்கும், யாழபானம் ஒரு தீபகற்பகம். :lol:

Link to comment
Share on other sites

கிட்ட தட்ட உங்களுக்கு மேலும் காறி துப்பியுள்ளீர்கள்.புலம் பெயர் மக்களின் பணம் புலிகளுக்கு கட்டாயம் தேவை.எந்த நாடும் உதவி செய்யாத போதும் புலம் பெயர் மக்களின் பண உதவியால் புலிகள் 30 வருடங்களாக போர் நடாத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

வட்டுகோடை தீர்மானத்தின் மூலம் தான் தமிழீழம் என்ற சொல்லே தந்தை செல்வா போன்றவர்களால் கொண்டு வரப்பட்டது.அதனையே பிரபாகரன் அவரகளாலும் தொடரப்பட்டது.மிக பெரிய வித்தியாசம் தலைவர் அகிம்சையை போராட்டம் சரிவராது என தெரிந்து ஆயுத போராட்டத்தை தொடர்ந்தனர். அவரல் தான் கடைசி வரை பயணிக்க முடிந்தது. மற்ற எந்த ஒருவராலும் தொடர முடியவில்லை. மாறாக தமிழ் மக்களை காட்டி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தமது சொந்த மக்களை கொன்று குவித்தும், கடத்தி காசு பறித்தும் சிங்கள இராணுவத்துக்கு உளவாளிகளாக செயற்பட்டதோடு மட்டுமல்லாமல் இன்று தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்லார்கள் அதுவும் இனவாத சிங்களவருக்காக?

கஞ்சிக்கு வழியில்லாத மகிந்த குடும்பம் இன்று உலகின் பணக்காரர் குடும்ப வரிசையில் நிற்க முடிந்தது இந்த தமிழர்களால் தான்.

இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது எய்தவன் இருக்க அம்பை நோவது எப்படி?

உங்களின் கட்டுரை சிவாஸுக்கான விளம்பரமாக மட்டுமே என்னால் போன்றவர்களால் எடுக்க முடிகிறது. வாங்கி பருகுங்கள் சிவாஸ்.

:lol::lol::o

கிட்ட தட்ட உங்களுக்கு மேலும் காறி துப்பியுள்ளீர்கள்

கிட்டத்தட்ட அல்ல நுணபவிலான் நான் நேரடியாகவே எனது எச்சில் என் மீது விழ வேண்டும் என்பதற்காக மல்லாந்து கிடந்து வானத்தை பார்துத்தான் துப்பினான் ..அதுவும் எனக்கு மேலே விழுந்தது..அதாவது புலம் பெயர் சமூகத்தில் 80 வீதம்மக்கள் செய்கின்ற அதேவேலைதான்.

எந்த நாடும் உதவி செய்யாத போதும் புலம் பெயர் மக்களின் பண உதவியால் புலிகள் 30 வருடங்களாக போர் நடாத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நானும் அதை மறுக்கவில்லையே

கஞ்சிக்கு வழியில்லாத மகிந்த குடும்பம் இன்று உலகின் பணக்காரர் குடும்ப வரிசையில் நிற்க முடிந்தது இந்த தமிழர்களால் தான்.

தேர்தலை தமிழ் மக்கள் தாங்களாக புறக்கணிக்கவில்லை.. :lol:

பிரான்சிலையும் சிவாஸ் பிரபலமோ? நான் அமெரிக்கா போகிற நேரங்களில தங்களுக்கு வரும்போது உதை வாங்கிக்கொண்டு வரச்சொல்லியும், பிறகு காசு தருகிறதாயும் சொல்லி குடிமக்கள் அன்புத்தொல்லை. போத்தலை சும்மா வாங்கிற சமாச்சாரம் எண்டாலும் பரவாயில்லை. அவங்கள் எல்லையில ரெண்டு போத்தல் வாங்கின விசயத்தையும் கடவுச்சீட்டை வாங்கி கணணியில குறிச்சு வைப்பாங்கள். :wub:

எல்லையில் நிக்கிற சுங்கத் துறையினர் உங்களை பெரும்குடிமகன் எண்டு நினைச்சிருப்பான் :o

Link to comment
Share on other sites

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்..

நன்றி

ஃ.சாத்திரி

தலைமைச் செயலகம்

தமிழீழம்(பிரான்ஸ்)

tel..0033611149470

இன்னும் ஈழத்தமிழனுக்கு ஊரிலும் சரி வெளிநாட்டிலும் சரி ஏன் முகாம்களுக்கு அல்லல்படும் நேரத்திலும் சரி பிரதேச நிறங்கள் மாறாது தொடர்கிறது. சற்று மறைந்து கிடந்த ஊர் வேறுபாடுகள் தற்போது மீளவும் தன் கழற்றிய செட்டைகளை மாட்டிக் கொண்டு வெளியேறுகிறது.

அதுசரி சாத்திரி அதென்ன தலைமைச் செயலகம் தமிழீழம்(பிரான்ஸ்) ? இவ்வளவு நாளும் வாற அறிக்கைகளை விடுகின்ற ஐரோப்பிய அமெரிக்கத் தேசியவாதிகள் தலைமைச் செயலகம் தமிழீழம் என்று எழுதுவார்கள். இதென்ன புதிய தலைமைச் செயலகம் ?

இரகசியமாக சொல்லுங்கோ தலைமைச் செயலகம் தமிழீழம் என்றது எந்தக் கிரகத்தில் இருக்கு ? :lol:

பிரான்சிலையும் சிவாஸ் பிரபலமோ? :wub:

சின்னப்பிள்ளைகள் சிவாஸ் பற்றி ஆராய்ந்தால் சுங்கத்துறை பதியாமல் என்ன செய்யும் ? :lol:

எனக்கு மிகப் பிடித்த, தேவபானமான (நான் அசுரன் இல்லை என்றதை நிரூபிக்க உதவிய) சிவாஸ் பற்றி கதை எழுதிய பெருங்குடிமகன் சாத்திரிக்கு என் 5 கிளாஸ்கள் நிரம்பிய நன்றிகள்

நன்றி சொல்லவும் இந்த மனிதர்களுக்கு சிவாஸ்தான் தேவைப்படுது :o

நான் பகலில எழுதுகிறத்திற்கும் இரவில எழுதுகிறத்திற்கும் வித்தியாசப்படுவதற்கு இவர்தான் காரணம்,இரவில மனத்தில் உள்ள பாரங்களை இறக்க சிவனிடம் தஞ்சம்.சிவன் மாத்திரமல்ல எனது கடவுள். நான் நேரத்திற்கேற்ப அவரையும் மாத்துவேன்.எனது fஆவொர்f கிலன்லெவெட்தான்.இண்டைக்கு ஜமைகன் றம் கோக்கோட.

இப்போது சீ.என்.என் இல் கெயிட்டி அனர்த்தங்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். இப்போது என் மனதில் எழுவது எலக்சன் முடிய யாழில் இணையத்தில் இருக்கும் யாரவது ஒரு பொதுவேலைத்திட்டத்தை கிழக்கு,வடக்கில் தொடங்கினால் நானும் கை கோர்க்க ரெடி.அது பண உதவி,நேரடி உதவி.

ஆக்கபூர்வமாக யாராவது எதுவும் செய்யும் உத்தேசம் இருந்தால் சொல்லவும் நான் ரெடி நாட்டிற்கு போக.

அண்ணை ஒரு சந்தேகம் :o இந்தக் கருத்து

இப்போது என் மனதில் எழுவது எலக்சன் முடிய யாழில் இணையத்தில் இருக்கும் யாரவது ஒரு பொதுவேலைத்திட்டத்தை கிழக்கு,வடக்கில் தொடங்கினால் நானும் கை கோர்க்க ரெடி.அது பண உதவி,நேரடி உதவி.

ஆக்கபூர்வமாக யாராவது எதுவும் செய்யும் உத்தேசம் இருந்தால் சொல்லவும் நான் ரெடி நாட்டிற்கு போக.

நல்ல வெளிச்சத்தில நிதானத்தோடை எழுதினது தானே :lol: பிறகு வார்த்தை தவறக்கூடாது :lol:

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தான் எப்பவுமே மண்டையை சரியாத்தான் பாவிச்சவன்.ஐந்து இலட்சம் பேர் வெளி நாட்டிலிருந்துகொண்டு தங்கட சொந்தங்களை வாழவைத்துகொண்டிருக்கின்றான்.பாவப்பட்டவர்கள் வன்னிமக்களும் , கிழக்கு, மற்றும் மலையகமக்களும்தான்,இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

தீவில் இருக்கும் மக்கழுக்கு கூர்புவிதி சற்று தூக்கலாகவே இருக்கும், யாழபானம் ஒரு தீபகற்பகம். :lol:

இலங்கை ஒரு தீபகற்பம்...யாழ்ப்பாணம் ஒரு குடா என்றுதான் சின்னவயதிலை சமூகக்கல்வி வாத்தியார் சொல்லித் தந்த ஞாபகம்..யாழ்ப்பாணத்தை தீபகற்மாய் மாத்திட்டாங்களா??? :wub:

Link to comment
Share on other sites

தீர்மாம் 1)

புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ

தீர்மானம் 2)

புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ ….

.கப் சிப்..சத்தம் வாராது

அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...

:unsure:இப்படித் தீரமானம் எடுக்க வெளிக்கிட்டால், ஐரோப்பா தழுவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த வேண்டிவரும். உந்த சிலோன் தமிழ் மக்களை வைச்சுத் தானே, புலத்தில் பலரின் பிழைப்புகளே நடக்குது. அதுக்கு ஆப்பு வைக்க முயற்சித்தால் சும்மா இருக்க முடியுமா?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலிக்கு ஓணான் சாட்சியா ?

நல்ல கதையா கிடக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்ககாலுக்குப்பின்பு அனேகர் தங்கள் நிறங்களைக் காட்டத்தொடங்கியிருக்கின்றர்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்கால் சம்பவம்கூட இன்றியமையாததாகவே எனக்குப்படுகின்றது. அன்றேல் இலங்கைத்தீவில் உள்ள தமிழினத்தில் எத்தனை வகை மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை யாராலும் அறழய முடியாது. இங்கு கருத்தோவியம் எழுதியவர்கள் முள்ளிவாய்கால் அவலத்திற்கு முன்பு எழுதிய தமது கருத்துக்களை மீட்டுப்பார்தால் தங்களுக்கே தெரியும் யார் வன்னியில் படித்த வாலிபர் திட்டத்தில் கிடைத்த காணியினை பார்ப்பதற்காக தடம் மாறி நிற்கின்றார்கள் என. (வன்னியில் அக்காலத்தில் கொடுக்கப்பட்டது பேர்மிற் முறையிலான விவசாயக் காணிகளே அவற்றில் ஒருபோதும் தில்லுமுல்லுச் செய்யமுடியாது அதாவது யாருக்கும் விற்பனை செய்யமுடியாது அந்தப் பேர்மிற்றை அன்னளிப்பு என கைமாற்றலாமே தவிர கிரய விலைக்கு மாற்றமுடியாது.) வன்னியில் உள்ள சனம் தற்போதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் மனப்பக்குவத்தடனேயே இருக்கின்றார்கள் நீங்கள் ஒன்றும் அவர்கட்காக வக்காளத்து வாங்காதீர்கள். தமிழீழ விடுதலை என்பது வெறும் மதபானத்துடன் சுவைக்காகப் பேசப்படும் விடையம் மாத்திரமல்ல. ஏதோ ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த ஒரு காரணத்தாலேயே தாங்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சரியானவை என்று சொல்ல முடியாவிட்டாலும் போராட்டத்தில் இலாபமடைந்தது யாழ்ப்பாணத்து திமிர் பிடித்த ஒரு கூட்டமும் என்னதில் எனக்கு எந்தவித முரண்பாடும் இல்லை.

நண்பர் எழுஞாயிறிற்கு வணக்கங்கள்..எனது நிறம் முள்ளி வாய்க்காலிற்கு முன்னர் பின்னர் என்று மாறவில்லை..உதாரணத்திற்கு நான் பத்திரிகையிலும் இங்கு யாழ் இணையத்திலும் எழுதிய கட்டுரை இங்கு இணைக்கிறேன் படித்துப் பார்க்கவும்.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=31826 கட்டுரை எழுதிய காலம்.Posted 07 December 2007 - 11:05 PM அன்றும் இந்த புலம்பெயர் போலிகளுடன் மோதல்கள் செய்து கொண்டுதானிருந்தேன். மற்றும்படி வன்னியில் கொடுக்கப்பட்ட காணிகளில் தில்லு முல்லு செய்ய முடியாதென எழுதியிருந்தீர்கள்..சிறீமா அரசு காலத்தில்..அவருடைய கட்சியின் யாழ் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த சண்டிலிப்பாய் குமாரசாமி வினோதன் என்றொருத்தரை கேள்விப்ப பட்டிருப்பீர்களா???அவர் தன்னுடைய உறவுகளிற்கு முத்தையன் கட்டில் பலகாணிகளை தில்லு முல்லு செய்து வழங்கினார் என்பது எனக்கு தெரியும்....ஏனென்றால் அவர் எனது உறவுக்காரர்தான்..அதே நேரம் சிறீலங்காவில் கள்ள உறுதி முடிக்க முடியாதென்ற உங்கள் வாதம் நகைச்சுவையாக இருக்கிறது....அடுத்ததாக வன்னி மக்கள் தமழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்று நான் எங்காவது எழுதியுள்ளேனா?? அதெ நேரம் வன்னி மக்களிற்காக வக்காளத்தும் வாங்கவில்லையே..ஏமாற்றி விட்டார்கள் என்று தானே எழுதியுள்ளேன்..கட்டுரையை மறுபடியும் படிக்கவும்..மற்றும்படி நான் புலிகள் இயக்கத்தில் ஏதோ காலத்தில் இருந்த காரணத்தால்.. நான் சொல்லும் கருத்துக்கள் யாவும் சரியானவை எனவே திரு எழுஞாயிறு அவர்கள் நான் எழுதுவது எல்லாவற்றையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும்..எழுஞாயிறு எங்கிருந்தாலும் ஓடிவந்து ஏற்றுக் கொள்ளவும்என்று நான் எங்கும் எழுதவில்லையே..சரியெண்டு பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் பிழையென்று பட்டால்..விட்டு விடுங்கள் அது உங்கள் உரிமை..

மேலதிக விபரங்களிற்கு

சாத்திரி

தலைமைச் செயலகம்

தமிழீழம்

என்கிற முகவரிக்கு கடிதத்தினை அனுப்பவும்..

வேலிக்கு ஓணான் சாட்சியா ?

நல்ல கதையா கிடக்குது.

வேலி எது ஓணான் எது??

:unsure:இப்படித் தீரமானம் எடுக்க வெளிக்கிட்டால், ஐரோப்பா தழுவிய ரீதியில் போராட்டங்கள் நடத்த வேண்டிவரும். உந்த சிலோன் தமிழ் மக்களை வைச்சுத் தானே, புலத்தில் பலரின் பிழைப்புகளே நடக்குது. அதுக்கு ஆப்பு வைக்க முயற்சித்தால் சும்மா இருக்க முடியுமா?? :rolleyes:

வட்டுக்கோட்டைக்கு வாக்கு போட போகேல்லையோ

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா சிலுவை சுமந்தவர்கள் நாலாம் பக்கத்தை வாசிக்கவும்.

நீங்கள் வாறிங்களோ இல்லையோ எனது மனைவியும் பிள்ளைகளும் ரெடி.

நான் இயக்கத்தில் இருந்தவர்களை கட்டினாங்களாக்கும்.சும்மா இணயத்தில் சுத்தினாங்களில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்று திசைமாறி தனிப்பிட்ட விருப்பு வெறுப்புக்களோடு போராட்டக்கதை பேசுவோர் அதிகரித்துள்ளனர்!

திசைகள் மாற்றப்பட்ட பயணங்கள் பயணிக்க முன்பே முட்டுக்கட்டை போடுவதற்காய் நிரயாய் பலர் தம்மை தயார்ப்படுத்தி கொண்டுள்ளனர்.விடுதலைக்காய் எமது இனம் கொடுத்த விலையும் அவர்களது அர்பணிப்பு கட்டுரைக்குள், கவிதைகக்குள் தனி மனித பேச்சுக்குள் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

இதன் பெயர் அக்கறையா? இல்லை அனாமதேய நக்கலா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில் சிங்கள ஆதிக்கமும் இந்திய வல்லாதிக்கமும் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது தாயகத்தில் கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சேமிப்புக்களை வைப்பதை விட்டு சர்வதேச வங்கிகளில் வைப்புக்களை வைக்க சர்வதேச வங்கிக் கிளைகளை வடக்குக் கிழக்கிற்கு எடுத்து வர வேண்டும்.

புலம்பெயர் மக்கள் மேற்குலக பல்கலைக்கழகங்களோடு ஒன்றிணைந்து தனியார் உயர்கல்வி நிறுவனங்களை வடக்குக்கிழக்கு எங்கனும் நிறுவி தமிழ் மக்களின் கல்வி அறிவூட்டலையும் அடுத்த நூற்றாண்டிற்கு அவசியமான தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க வேண்டும். பெருகி வரும் ஆசியப் பொருளாதார போட்டி தொழில்நுட்பக் கல்வி கற்ற உயர் கல்வியாளர்களின் தேவைகளை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்வதோடு மேற்குலகில் இருந்து வரும் விஞ்ஞானக் கல்வியில் அக்கறையின்மை அதற்கான தேவையை இன்னும் அதிகரிக்கும்.

தமிழர்கள் தமிழர் பிராந்தியங்களின் பிரதான முதலீட்டாளர்களாக இருப்பதோடு பெறப்படும் பொருளியல் வளத்தைக் கொண்டு தமிழர் தேசத்தின் உட்கட்டுமானங்களை வளப்படுத்த வேண்டும்.

கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் துரிதமாக வளரும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்தின் பார்வையை செல்வாக்கை எம்மை நோக்கி திருப்பி சிங்கள ஆதிக்கத்திற்கும் எதிரான எமது அரசியல் விடுதலைக்கான குரலை உலகு செவிமடுக்கச் செய்ய முடியும்.

தமிழர்கள் இயன்றவரை சேமிப்புக்களை குறைத்துக் கொண்டு உட்கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வர்த்தகம் கல்வி சுகாதாரம் சேவைகள் சுற்றுலாத்துறை என்று முதலீடுகளில் அவற்றை இட்டு தமிழர் தேசங்களை வளமிக்கதாக்குவதோடு எமது வளங்களை நாமே பயன்படுத்தும் நிலைக்கு வரவேண்டும். அந்நியருக்கு எமது வளங்கள் சிங்கள ஆதிக்க சக்திகளால் விற்கப்படுவதும் எமது வளங்களைச் சுரண்டி எடுக்க வரும் அந்நியமுதலீட்டாளர்களை முறியடிக்கவும் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து இந்திய சீன முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது தேசத்தின் உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை அடுத்த நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் அழிவோடு ஐரோப்பா எப்படி எழுச்சி கண்டதோ அப்படிக்கு நாமும் எமது தேசத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

சிங்கள ஆதிக்க சக்திகளும் இந்திய சீன ஆதிக்க சக்திகளும் எமது வளங்களைச் சுரண்டி இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையை தவிர்த்து நாம் சர்வதேச அளவில் பேசக் கூடிய அளவிற்கு எமது பொருளியலை கட்டி எழுப்பி செல்வாக்குள்ளவர்களாகும் நிலை வரின் நிச்சயம் கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது அரசியல் உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.

ஆயுதப்போராட்டம் ஊடான விடுதலை என்பது சாத்தியப்படாத நிலையில் எமது போராட்ட வடிவங்களை எமது தேசத்தின் வளர்ச்சியோடு ஒருமித்துக் கொண்டு இட்டுச் செல்ல வேண்டும். ஏற்கனவே சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது தேசத்தைக் கட்டி எழுப்பி எமக்கு தேவையான அத்துணை வளங்களையும் சேவைகளையும் நாமே எமது தேசத்தில் நிறைவு செய்யும் போது சிங்கள ஆதிக்கத்தில் இருந்து நாம் முழுமையாக விடுதலை பெற முடியும்.

எமக்கான நவீன துறைமுகங்கள்.. விமான நிலையங்கள்.. வைத்தியசாலைகள்.. பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது தேசம் எங்கனும் நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.

வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.

வெறுமனவே தமிழீழம் அமையும்.. அப்போது மட்டுமே ஊருக்குப் போக வேண்டும் கட்டுமானம் கட்ட வேண்டும் என்றிருப்பதும் நன்றல்ல. அதேபோன்று ஏதோ கொலிடேக்குப் போனம் இடம்பார்த்தம் விடீயோ எடுத்தம் என்ற நிலையும் இல்லாமல் போக வேண்டும்.

பொருளியல் பலத்தைக் காட்டி எமது அரசியல் பலத்தை வெல்ல நாம் எனிப் போராட வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஜப்பான் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியா மிக விரைந்து வளரும் பொருளியல் சக்தியாக உள்ளது. இந்த நிலையில் மேற்குலகம் பொருளியலில் பிந்தங்கிச் செல்லும் சூழல் இருப்பதால் அவர்களுக்கு தெற்காசியாவில் தமது நட்புப் பொருளியல் தளம் ஒன்று உருவாவது எதிர்க்கப்படக் கூடியதல்ல. அதேவேளை ஆசிய பொருளியல் சக்திகளோடு நேரடிப்பகை பாராட்டாது அதேவேளை அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லாது சிங்கள தேசம் எமக்கு அளிக்கும் அல்லது கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்திய அரசியல் உரிமையை எமக்கு சாதமாக்கிக் கொண்டு நாம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே தமிழர் தேசத்தை அடுத்த நூற்றாண்டில் உலகம் வியக்க முன்னேற்றிச் செல்ல முடியும்.

கள்ளக்காட் போட்ட தமிழனா இப்படி எழுந்து நிற்கிறான் என்று இந்த உலகம் எம்மை உற்றுநோக்க வேண்டும். ஒரு பொருளியல் பலம் மிக்க இனமாக நாம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் இந்த உலகம் எம்மைப் போட்டு மிதித்திருக்குமா..??! சிங்கப்பூரை எந்த நாடாவது போருக்கு இழுக்குமா..??! இல்லை. அது இராணுவ பலத்தால் அல்ல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பொருளியல்பலத்தால் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

நாம் சிந்திக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசை அரசியல் ரீதியில் தமிழர்களின் தேவையைச் சொல்லிக் கொண்டிருக்க நிறுவிக்கொண்டு தாயகத்தை எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். சிங்கள ஆதிக்கம் மற்றும் இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது. தமிழீழம் வரும் வரை காத்திராமல் நாம் இன்றே செயற்பட வேண்டும்.

தொடர்ந்து தாயகம் புலம்பெயர் மக்கள் என்று பிரித்துப் பேசிக் கொண்டிராமல் இரண்டு மையங்களும் இணைந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும். எம்மிடம் உழைக்கும் சக்தி இருக்கிறது. பொருண்மிய திறன் இருக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. சிறந்த உல்லாசப்பிரயாணத்துறைக்கான வழிமுறைகள் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உலகில் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளியல் சக்திகள் இருக்கும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டும் எமது நிலத்தை வளத்தை சுடுகாடாக விட்டுவிட்டு குளிர்நாடுகளில் கூலிக்கு மாரடிப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதிலும் அந்தக் கூலியில் இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு நாம் வளர முயற்சிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.

எள்ளி நகையாடல்கள் அல்ல..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை ஒரு தீபகற்பம்...யாழ்ப்பாணம் ஒரு குடா என்றுதான் சின்னவயதிலை சமூகக்கல்வி வாத்தியார் சொல்லித் தந்த ஞாபகம்..யாழ்ப்பாணத்தை தீபகற்மாய் மாத்திட்டாங்களா??? :rolleyes:

பாத்தியளோ எண்ட சமூககல்வி வாத்தி என்ன ஏமாத்தி போட்டார், சாத்திரியாருக்கு சொல்லி கொடுத்ததை எனக்கு சொல்லி கொடுக்க இல்லை, நாலு பக்கமும் கடல் சூழ்ந்தது தீவு எண்டும் மூன்று பக்கம் கடலும் ஒரு பக்கம் நிலமும் சூழ்ந்த்து தீபகற்பகம் என்று சொல்லி ஏமாத்தி போட்டார் :unsure::D:D

19க்கு பிறகு சனம் எல்லாம் நிறம் மாறுது அது போல யாழ்பாணமும் தீவாக மாறி விட்டது, சிறீலங்கா தீபிகற்பகமாகமாறிவிட்டது, இப்படித்தான் எல்லாத்தையும் மாத்துகினமோ தெரியவில்லை. :lol:

எத்தனையோ பாத்து விட்டோம் இதையும் பாக்கமாட்டமோ, எல்லா சனத்துக்கும் நல்ல குழையடி எங்கேயோ நடக்குது, எது வரை என பார்ப்போம். :lol::lol::lol:

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிந்திக்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசை அரசியல் ரீதியில் தமிழர்களின் தேவையைச் சொல்லிக் கொண்டிருக்க நிறுவிக்கொண்டு தாயகத்தை எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். சிங்கள ஆதிக்கம் மற்றும் இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது. தமிழீழம் வரும் வரை காத்திராமல் நாம் இன்றே செயற்பட வேண்டும்.

நீங்கள் கூறியவைகள் யாவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான்....ஆனால் துறைமுகங்கள்,விமானநிலையங்கள் ,பழ்கலைக்களகம் அமைப்பதற்கு எப்படியாவது சிங்களதேசத்து ஆட்சியாளருடன் சுமுகமான உறவை வைத்திருந்தால்தான் அது சாத்தியப்படும் தற்பொழுதைய சூழ்நிலையில் ...நாடுகடந்த அரசை உருவாக்கி வைத்துக்கொண்டு நாம் எப்படி சிங்களதேசத்துடன் உறவை வளர்க்கமுடியும்?

நாடுகடந்த அரசு,ஒரு பினாமி அமைப்பை உருவாக்கி வடக்குகிழக்கில் நீங்கள் கூறிய அபிவிருத்தி வேலைகளை செய்ய முயற்சிக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

, எல்லா சனத்துக்கும் நல்ல குழையடி எங்கேயோ நடக்குது, எது வரை என பார்ப்போம். :rolleyes::unsure::D

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

எல்லா பூசாரிமாரும் புலத்திற்கு வந்திட்டினம் அதுதான் தாறுமாறாக குழையடி நடக்குது :D

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு ஆனால் சாத்தியப்படுமா என்பதுதான் கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து இந்திய சீன முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது தேசத்தின் உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை அடுத்த நூற்றாண்டின் சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.

வரின் நிச்சயம் கொங்கொங் சிங்கப்பூர் போன்று நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது அரசியல் உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.

எமக்கான நவீன துறைமுகங்கள்.. விமான நிலையங்கள்.. வைத்தியசாலைகள்.. பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது தேசம் எங்கனும் நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.

வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.

.

எல்லாம் நல்லாய்தான் இருக்குது.அது சரி எங்கட கானிக்கை ஒரு வைரவர் சிலை

வைக்கிறது என்டாலே சிங்களவனிட்டடை அனுமதி பெற வேனுமே :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.