• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
MUGATHTHAR

முகத்தார் வீடு

Recommended Posts

இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. .

முகத்தார் வீடு . 1

நேரம் : காலை 9 மணி

(முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .)

பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா?

முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும்

பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ?

முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன்

(பொண்ணம்மா முகம் கழுவ கிணத்தடிக்குப் போற முகத்தார் கப்பைக் கழுவி தேத்தண்ணியை ஊத்தி வைக்கிறார்)

முகத்தார் : இந்தாரும் தேத்தண்ணி. . அதுசரி திருநீறை நெத்திலை புூசினீரோ அல்லது தட்டிலை தலையை வைச்சு தேச்சனீரோ அப்பிடிக் கிடக்கு. .

பொண்ணம்மா : உங்கடை இந்த நக்கலுக்கொண்டும் குறைச்சலில்லை. .

(அந்த நேரம் படலை திறக்கும் சத்தம் கேக்கிறது பொண்ணம்மா எட்டிப் பாக்கிறா. .)

பொண்ணம்மா : கிழிஞ்சுது. . .வேலைவெட்டியில்லை காலேலையே வந்திடுங்கள்

முகத்தார் : யாராயப்பா இப்பிடி திட்டுறாய்?

பொண்ணம்மா : வேறை யார் உங்கடை கூட்டாளிதான் சாத்திரியார். .

முகத்தார் : இஞ்சை தனிய என்னவேணுமானாலும் திட்டு ஆட்களுக்கை மரியாதை கெடுத்துப் போடாதை என்ன. . .

பொண்ணம்.மா : சும்மா அந்தாளோடை அலம்பாமல் ஆளை வேளைக்கு கலைச்சுப் போட்டு வாங்கோ சட்டி பானை எல்லாம் கழுவ வேணும் சந்தைக்கும் போக வேணும் . .

முகத்தார் : சரி... சரி. . புலம்பாமல் போ. . .எட சாத்திரி என்ன காலேலையே. இஞ்சாலை முகமும் விடியாத மாதிரி கிடக்கு என்ன விசயம் ?

சாத்திரி : எல்லாம் வீட்டுப் பிரச்சனைதான் இந்த மனுசிமாருக்கு என்னத்தைச் செய்தாலும் திருப்திப் பட மாட்டாளவை

முகத்தார் : நீ எதைச் சொல்லுறாய்?

சாத்திரி : வேறை என்ன காலேலை எழும்பி சமைச்சுப் போட்டு ஒரு ரவுண்ட் வெளிக்கிடுவம் எண்டு வந்தால் மனுசிகாரி சொல்லுறாள் சாப்பாட்டைப் போட்டு நாய்க்கு வைச்சிட்டு போங்கோ எண்டு

முகத்தார் : இதென்ன சின்ன வேலைதானே. .

சாத்திரி : நானும் சொன்னன் போட்டு வந்து உனக்கும் நாய்க்கும் போட்டு தாறன் எண்டு அதுக்கு சொல்லுறாள் நான் வாறதுக்கிடையிலை நாய் படுத்திடுமாம் ஏன் அவளுக்கு இதைச் செய்யகூட என்ன வருத்தம். . .

முகத்தார் : விடு சாத்திரி இதுக்குப் போய் டென்ஷன் ஆகிக் கொண்டு . . . .

(அந்த நேரம் பொண்ணம்மா தேத்தண்ணி கொண்டு வந்து சாத்திரிக்கு குடுக்கிறா. .)

பொண்ணம்மா : என்ன சாத்திரியண்ணை களைச்சுப்போய் வந்திருக்கிறீயள் தேத்தண்ணி குடியுங்கோவன். எனக்குக் கொஞ்சம் உள்ளைவேலை யிருக்கு வாறன். .

முகத்தார் : (மனசுக்குள்) உள்ளை வேலையா? நான் போய்த்தான் ஏதன் செய்யவேணும்) சாத்திரி தேத்தண்ணியை குடியன்

சாத்திரி : முகத்தான் நீ குடுத்து வைச்ச ஆளடப்பா பொண்ணம்மா மாதிரி பெண்சாதி கிடைக்கிறதுக்கு . . .

முகத்தார் : (நான் போட்டு வைச்ச தேத்தண்ணியை கொண்டு வந்து குடுத்தவுடனை பொண்ணம்மா நல்லம் நான் குடுத்து வைச்சனான் யாரிட்டை சொல்லுறது) சாத்திரி இதெல்லாம் விதிப் பலன் . . . .

(அந்த நேரம் நாய் படலையைப் பாத்துக் குரைக்குது யாரோ நிற்பதுபோல நிழல்வேறை)

முகத்தார் : இது என்னடா ஆமிக்காரனைக் கண்ட மாதிரி நாய் குரைக்குது யாரது?

சாத்திரி : அதுதான் எனக்கும் தெரியலை கூப்பிடட்டே . . ?

பொண்ணம்மா : என்னப்பா நாய் ஏதோவைக் கண்டமாதிரி குரைக்குது போய் ஒருக்கா பாருங்கோவன்

(முகத்தார் எழுந்து படலையடிக்குப் போறார் நிண்டஆளையும் கூட்டிக் கொண்டு வாறார் ஆளைக் கண்டதும்)

பொண்ணம்மா : நான் நினைச்சன் இவராத்தான் இருக்குமெண்டு. .வாங்கோ. .

சாத்திரி : எட. . சின்னப்புவே. என்ன குமர்ப்பிள்ளை மாதிரி வெக்கப்பட்டுக் கொண்டு. .

சின்னப்பு : இல்லையடா சாத்திரி எனக்கும் இந்த நாய்களுக்கும் ஒத்து வராது ஏற்கனவே ஒரு (புல)நாயிட்டை மாட்டுப்பட்டு கந்தலானனான் அதாலை கொஞ்சம் தள்ளி நிக்கிறனான்.

.

பொண்ணம்மா : சரி. . . 3பேரும் சேர்ந்தாச்சு இனி விடிஞ்ச மாதிரித்தான். .

.

முகத்தார் : என்ன சின்னப்பு காலேலை கடையள் புூட்டுப் போல இந்தப் பக்கம் வந்திருக்கிறாய். . . ?

சின்னப்பு : இல்லை முகத்தான் சாத்திரி வீட்டுப் பக்கம் போனன் இந்த நாயைவிட முனியம்மாவின் குரையல் பெரிசாக்கிடக்கு பேசாம திரும்பிட்டன். .

முகத்தார் : அது ஒண்டுமில்லை இண்டைக்கு அட்டமி யெல்லோ கனத்தநாள் சிலபேரிலை காட்டும் இந்த நேரத்திலை நாங்கள் கொஞ்சம் விலகியிருப்பது நல்லம்

சாத்திரி : சின்னப்பு இஞ்சை எண்டாலும் மனுசியை நினைவுபடுத்தாமல் இரு பாப்பம் அதுசரி அடுத்தமாதம் லெக்ஷன் வருகுதெல்லோ பேப்பருகள் என்ன சொல்லுது. . ?

முகத்தார் : யாரடாப்பா உதிலை மினைக்கடுறது சனத்துக்கும் பெரிசா ஆர்வமில்லை.

சின்னப்பு : முந்தி பிரேமதாசா வெட்டுவர் புடுங்குவர் எண்டு போட்டம் பிறகு அம்மா ஏதோ செய்வா எண்டு போட்டம் என்ன நடந்தது இருக்கிற இனவாதத்தை கூட்டித்தான் விட்டிருக்கினம் அவ்வளவுதான்

சாத்திரி : சின்னப்பு இந்தமுறை நீ யாருக்குப் போடப் போறாய். . ?

சின்னப்பு : நான் போடாமல் விட்டா வீட்டிலை இந்த குறுக்காலைபோன குத்தியன் எடுத்துக் கொண்டு போய் தன்ரையாளுக்குப் போட்டுவன் ஆனா படியா போடத்தான் வேணும் யாருக்கு எண்டு இன்னும் யோசிக்கேலை

சாத்திரி : நான் நினைக்கிறன் ரணில் கொஞ்சம் லிஸ்ட் விட்டிருக்கிறார் அவற்ரை தேர்தல் பிரசாரத்திலை மனுசன் செய்திச்சுச்செண்டால் நல்லம்

சின்னப்பு : எங்கை உவங்கள் செய்ய விடுவங்களோ. . . ?

முகத்தார் : அப்ப மகிந்தா வந்தால் என்ன நடக்கும் . . ?

சின்னப்பு : அவர் ஜேவிபிக்கும் மொட்டைக்கும்தான் ஜனாதிபதி ஆகப் போறார் வந்தாப் பிறகு பாரன் மனுசன் தலையைப் பிச்சுக் கொண்டு ஓடாட்டிக்கு. . .

சாத்திரி : ஏன் சின்னப்பு அப்பிடிச் சொல்லுறாய் ?

சின்னப்பு : பின்னை என்ன இந்த ஜேவிபிக்கும் மொட்டைகளுக்கும் ஒத்துவராது பாலிமெண்டிலை பாத்தீங்களே மொட்டைகளின்ரை காவி உடுப்பைக் கழட்டி அடிச்சது ஆர்?

முகத்தார் : ஆனா சின்னப்பு தெற்கிலையெல்லாம் மகிந்தாவுக்குத்தான் அதரவு கூட இருக்கெண்டு சொல்லினம் அதோடை மொட்டைகள் பிரச்சாரத்திலை இலங்கேலை பௌத்தத்தை கொண்டு வந்ததும் மகிந்தா(மன்னன்)தான் அதுபோல அந்த பௌத்தம் அழியாமல் காப்பாத்துவதும் இந்த மகிந்தாவால்தானாம். .எண்டு விடுகினம்

சின்னப்பு : முகத்தான் உந்த மொட்டைகளின் கதையை விடு அரச சுகபோக வாழ்க்கை பிடிக்காமல் துறவியானவர்தான் புத்தர் அவரைப் பின்பற்றி வாறவை அரச பதவிக்கு ஆசைப்படுகிறதெண்டால் என்ன இது. . . .

சாத்திரி : அதுவும் சரிதான் சின்னப்பு யார் வந்தாலும் எமக்கு இதே கெதிதான் என்ன சொல்லுறீயள். . .?

முகத்தார் : அனேகமா சிறுபான்மையெல்லாம் ரனிலுக்குத்தான் சப்போட் பண்ணுவினம் போலக்கிடக்கு பாப்பம் என்ன நடக்குதெண்டு. . .

பொண்ணம்மா : என்ன 3பேரும் லெக்ஷன் கேக்கப் போறீங்களோ. . ? உங்களுக்கு இந்த அரசியலை விட்டாவேறை கதையில்லைப் போல என்ன. . . ?

சின்னப்பு : எங்கடை வயசுக்குப்பிள்ளை நாங்க வேறை என்னத்தைத்தான் கதைக்கிறது

சாத்திரி : சரி இதை இதோடை விடுவம் இன்னோரு கதைகேள்விப் பட்டியளோ திருகோணமலை கடல்த்தண்ணி பச்சைத் தண்ணியாக் கிடக்காம்

சின்னப்பு : இதென்ன கதை கடல்தண்ணி பச்சைத்தண்ணியில்லாமல் சூடுதண்ணியோ.?

சாத்திரி : சின்னப்பு உனக்கு தவறனைத்தண்ணியைத் தவிர வேறையொண்டும் தெரியாது இது பச்சை நிறத்திலை தண்ணியிருக்காம் சனம் திருவிழா மாதிரி கடக்கரையிலை கூடிச்செண்டால் பாத்துக்கோவன்

முகத்தார் : உந்த சுனாமிக்குப் பிறகு எங்கடைசனங்கள் கடலை வடிவாத்தான் பாக்குதுகள் ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் கண்டுபிடிச்சிடுங்கள்

சாத்திரி : இருந்தாலும் முகத்தான் இது முன்னையதுகளைவிட வித்தியாசமா இருக்குதாம்

முகத்தார் : நானும் பேப்பரிலை பாத்தனான் இதுவந்து இந்தியாகாரங்கள் செய்யிற வேலைபோலத்தான் எனக்கு படுகுது

சின்னப்பு : என்ன கடலுக்கை சாயத்தைக் கொட்டிப் போட்டங்களோ . . ?

சாத்திரி : சின்னப்பு உந்த விசர் பகிடியை விட்டுட்டு கதையைக் கேள் முகத்தான் நீ சொல்லு. . .

முகத்தார் : இந்த பாக்குநீரிணையை பெரிய கப்பல்கள் வரவேண்டுமெண்டு ஆழமாக்கிறதுக்கு சேது சமுத்திரத்திட்டமொண்டை தொடங்கினவையெல்லோ அது இப்ப நடமுறைக்கு வந்திட்டுது இனி கடலை ஆழமாக்கேக்கை அங்கையிருக்கிற உயிரிணங்கள் திக்குத்திசை தெரியாம கரையொதுங்கியிருக்குதுகள் போல கூட்டமா வரேக்கை அந்த இடத்திலை சில மாற்றங்கள் தெரியத்தான் செய்யும்

சின்னப்பு : அப்பிடியெண்டால் சில மீன் இனங்களும் அழியிறத்துக்கும் வாய்ப்பிருக்கு என்ன. . ?

முகத்தார் : மீனினங்கள் மட்டுமல்ல பளிங்குப்பாறையள் கூட அழிய வாய்ப்பிருக்கு

சின்னப்பு : அப்ப மீன் பிடிக்கிற ஆட்களுக்கு பாதிப்பில்லையோ . . ?

முகத்தார் : ஏன் இல்லாமல் இப்பிடி மீன் இனங்கள் அழியிறதாலை மீன்பிடித்தொழில் கலர்மீன் ஏற்றுமதிகூட பாதிப்படையச் சாத்தியம் இருக்கு . .

சாத்திரி : அப்ப இது எங்கடை அரசாங்கத்துக்கு விளங்கேலையோ இந்த திட்டத்துக்கு எதுக்கு சம்மதிச்சவை. .

முகத்தார் : எங்களுக்கு மாத்திரமில்லை தமிழ்நாட்டு மீன்பிடித்துறைக்கும் பாதிப்புத் தான் முதலிலை ஜெயலலிதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தவ பிரயோசணமில்லை எங்கடை அரசாங்கம் தமிழீழ மீனவர்தான் பாதிக்கப் படப்போயினம் எண்டுட்டு சும்மா இருந்திட்டினம்

சாத்திரி : இப்ப இந்த திட்டம் முடிஞ்சால் கொழும்பு துறைமுகத்துக்கு வாற கப்பல்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுமே இதாலை இவைக்கு நட்டம்தானே. . ?

முகத்தார் : உண்மைதான் சாத்திரி எல்லாம் முடிஞ்சாப்பிறகுதான் ஓடி முழிப்பினம்

சின்னப்பு : உவைக்கு எங்கடை ஒருகண்ணைக் குத்திறதெண்டால் தங்கடை இரண்டு கண்ணையும் குத்திக் கொள்ளுவினம். .

பொண்ணம்மா : என்னப்பா மணி 11யாகுது சந்தைக்குப் போகேலையோ. . .?

முகத்தார் : சரி. . சரி. . வெளிக்கிட்டுட்டன் சின்னப்பு சாத்திரி வெளிக்கிடுங்கோ மனசி கொப்பிலை ஏறுதக்கிடையிலை நான் ஒருக்கா சந்தைக்கு போகவேணும். .

சாத்திரி : நானும் வெளிக்கிடுறன் மனுசிக்காரி உலையும் வைச்சிருக்க மாட்டாள் போய்த்தான் எதன் செய்யவேணும் சின்னப்பு வரட்டே. . .

சின்னப்பு : இரண்டுபேரும் மனுசிமாருக்கு பயந்து என்ன ஓட்டம் ஓடுறாங்கள் நல்ல காலம் என்ரை மனுசி கொழும்புக்குப் போனது எவ்வளவு சந்தோஷம். . .

(யாவும் கற்பனை)

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி : எட. . சின்னப்புவே. என்ன குமர்ப்பிள்ளை மாதிரி வெக்கப்பட்டுக் கொண்டு. .  

சின்னப்பு : இல்லையடா சாத்திரி எனக்கும் இந்த நாய்களுக்கும் ஒத்து வராது ஏற்கனவே ஒரு (புல)நாயிட்டை மாட்டுப்பட்டு கந்தலானனான் அதாலை கொஞ்சம் தள்ளி நிக்கிறனான்.

.

:lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

முகம்ஸ் இதை பொன்னம்மாக்கா படிக்கட்டும், அதை அடுத்த பாகமா போடுங்க ;)

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

:P :P :lol::lol::lol::lol:

Share this post


Link to post
Share on other sites

:lol::lol::lol:

முகத்தால் உங்களுக்கு நல்ல எழுத்து திறமை இருக்கு, நல்லா எழுதுறீங்க

Share this post


Link to post
Share on other sites

முகத்தார் தன்னுடைய உண்மைக் கதைகளை சொல்கின்றார். நீங்கள் போய் எழுத்து திறமை அது இது என்று சொல்கிறிர்கள்..... அவரின் எழுத்து திறமையால் பொன்னம்மாக்கா சொன்ன பல விடங்களை சென்சர் பண்ணி இருப்பார்

Share this post


Link to post
Share on other sites

கலக்கிறீங்க முகம்.. புது கதைகள், புது விடயங்கள் ஆனால் அதே பழைய (ஓல்ட்) கதாப்பாத்திரங்கள்.. முகம் வரா வாரம் நகைச்சுவைகளுடன் செய்தியையும் தாங்க,,

சுப்பர்..............:lol:

Share this post


Link to post
Share on other sites

நல்லா எழுதுறீங்கய்யா... நல்லாயிருக்கு.. எல்லாரையும் நல்லா சிரிக்க வைக்குறீங்க.. தாத்தான்னா தாத்தாதான்.... :wink: :lol:

Share this post


Link to post
Share on other sites

சுப்பர் கதை.. நல்லாயிருக்கு இடைக்கிட பொண்ண்ம்மா அக்கா வந்து குழப்புறா.. :wink: :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

:P :P :P

Share this post


Link to post
Share on other sites

சுண்ணாகம் சந்தையடியில் எவடம் முகத்தார் தாத்தா?

Share this post


Link to post
Share on other sites

:P :lol::lol:

Share this post


Link to post
Share on other sites

சுண்ணாகம் சந்தையடியில் எவடம் முகத்தார் தாத்தா?

ஓய் மின்சாரநிலையத்துக்கு பின்னாலை ளொள்ளா ??

:evil: :evil: :evil:

Share this post


Link to post
Share on other sites

சுண்ணாகம் சந்தையடியில் எவடம் முகத்தார் தாத்தா?

சுன்னாகம் சந்தையடியில் கத்தரிக்காய் விற்பவருக்கு அருகாமையில் :lol:

Share this post


Link to post
Share on other sites

சுன்னாகம் சந்தையடியில் கத்தரிக்காய் விற்பவருக்கு அருகாமையில் :lol:

சுண்ணாகம் வாழைக்குலைதான் பேமஸ்... :wink: :P :P

Share this post


Link to post
Share on other sites

மட்டுவில்தான் கத்தரிக்காயுக்கு பேமஸ் :P

Share this post


Link to post
Share on other sites

மட்டுவில்தான் கத்தரிக்காயுக்கு பேமஸ் :P

ஓய் அப்ப க...ளுக்கு எந்த ஊரப்பா ???

:wink: :wink: :wink: :wink:

Share this post


Link to post
Share on other sites

ஓய் அப்ப க...ளுக்கு எந்த ஊரப்பா ???

:wink: :wink: :wink: :wink:

கூவில்தான் சுவைக்கு அருமை :P :P :P

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சங்கக்காரவின் அரைச்சதத்தோடு மெரில்போன் கிரிக்கெட் கழகம் வெற்றி     By Mohamed Azarudeen -     பாகிஸ்தான் லாஹூர் நகரில் நேற்று (19) நடைபெற்ற முல்டான் சுல்டான்ஸ் மற்றும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இடையிலான கண்காட்சி T20 போட்டியில், மெரில்போன் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது. சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தான் மண்ணுக்கு மீண்டும் கொண்டுவரும் நோக்குடன் பாகிஸ்தான் சென்றுள்ள, குமார் சங்கக்கார தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அங்கே மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தவகையில், மெரில்போன் கிரிக்கெட் கழக வீரர்கள் அவர்களின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இறுதியாக விளையாடும் போட்டியாக, சஹீட் அப்ரிடியின் PSL அணியான  முல்டான் சுல்டான்ஸ் உடனான T20 போட்டி அமைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மெரில்போன் கிரிக்கெட் கழகத் தலைவர் குமார் சங்கக்கார, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.  குமார் சங்கக்காரவின் முடிவுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய மெரில்போன் கிரிக்கெட் கழக அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற தவறினாலும், அணித்தலைவர் குமார் சங்கக்கார, மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரவி போபரா ஆகியோர் அதிரடி கலந்த பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து இந்த இரண்டு வீரர்களும் அரைச்சதம் விளாச மெரில்போன் கிரிக்கெட் கழக அணியினர் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். மெரில்போன் கிரிக்கெட் கழகம் சார்பான துடுப்பாட்டத்தில் ரவி போபரா ஆட்டமிழக்காது 37 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் பெற, குமார் சங்கக்கார 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பெளண்டரிகள் உடன் 52 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம், முல்டான் சுல்டான்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அலி சபீக் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹமட் இல்யாஸ், ஜூனைட் கான் ஆகியோர் தங்களிடையே தலா ஒரு விக்கெட் வீதம் பகிர்ந்து கொண்டனர். பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 185 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய முல்டான் சுல்டான்ஸ் அணியினர் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவினர். முல்டான் சுல்டான்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக குஸ்தீல் ஷாஹ், போராட்டமான ஆட்டம் காண்பித்து 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம், மெரில்போன் கிரிக்கெட் கழகத்தினுடைய பந்துவீச்சு சார்பாக இடதுகை சுழல் வீரரான இம்ரான் கையூம் வெறும் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ப்ரட் கிளாஸ்ஸன் 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் குமார் சங்கக்காரவின் மெரில்போன் கிரிக்கெட் கழகம் தமது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை, இரண்டு வெற்றிகளுடனும், இரண்டு தோல்விகளுடனும் நிறைவு செய்து கொள்கின்றது.  போட்டியின் சுருக்கம்
  • வணக்கம் வாத்தியார்........! தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளைதாலாட்டுப்பாட ஆதாரம் இல்லைதெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்பாடாமல் போனால் எது தெய்வமாகும்மறுபடி திறக்கும் உனக்கொரு பாதைஉரைப்பது கீதைபுரியாததாலே திரைபோட்டு வைத்தேன்திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லைமறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோவிளக்கிவைப்பாயோ.......! ----இலக்கணம் மாறுதோ----
  • வலன்சியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அடலான்டா: டொட்டன்ஹாமுக்கு நெருக்கடி     By Mohamed Shibly -     ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் இரண்டு போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (20) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் எதிர் RB லீப்சிக் டிமோ வோர்னரின் பெனால்டி கோல் மூலம் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ஜெர்மனி கழகமான லீப்சிக் 1-0 என வெற்றியீட்டியது.  லிவர்பூல், PSG அணிகளுக்கு எதிர்பாராத தோல்வி டொட்டன்ஹம் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய லீப்சிக் கழகம் வெளி மைதானத்தில் தீர்க்கமான கோல் ஒன்றை பெற்றதன் மூலம் இங்கிலாந்து கழகத்திற்கு காலிறுதிக்கு முன்னேறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  டொட்டன்ஹம் கழகம் காயத்தால் அவதிப்படும் தனது முக்கிய வீரர்களான ஹர்ரி கேன் மற்றும் சொன் ஹியுங் மின் இன்றி முன்களத்தில் டெலி அலி மற்றும் லூகாஸ் மௌரோவுடனேயே இந்தப் போட்டியில் களமிறங்கியது.     எனினும் போட்டியை வேகமாக ஆரம்பித்த லீப்சிக் கழகம் இரண்டாவது நிமிடத்திலேயே வோர்கர் மூலம் கோல் புகுத்தியபோதும் அது ஓப் சைடாக இருந்தது.  பதிலடி கொடுத்த டொட்டன்ஹாம் கழக வீரர் ஸ்டீவ் பெர்க்விஜ் உதைத்த பந்தை லீப்சிக் கோல்காப்பாளர் பீட்டர் குலாசி தடுத்தார். போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி கழகம் கோல் பெறுவதை நெருங்கியது. டிமோ வோர்னருக்கு எதரணி கோல் கம்பத்திற்கு நெருக்கமாக பந்து கிடைத்த நிலையில் அவரது உதையை ஹீகோ லொரிஸ் தடுத்தார்.   போட்டி ஒரு மணி நேரத்தை எட்டும்போது பெனால்டி பெட்டிக்குள் கோனார்ட் லெய்மர் மீது பென் டேவிஸ் இழைத்த தவறினால் லீப்சிக் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.  அந்த ஸ்பொட் கிக்கை டிமோ வோர்னர் கோலாக மாற்றினார். டிமோ வோர்னர் இந்தப் பருவத்தில் சம்பியன்ஸ் லீக் தொடரில் பெறும் ஏழாவது கோல் இதுவாகும்.  ஒரு சில விநாடிகளிலேயே லீப்சிக் கழகம் மற்றொரு கோலை பெற நெருங்கியபோது பட்ரிக் சிக் உதையை லொர்ரிஸ் தடுத்தார்.  கியோவானி லோ கெல்சோவின் ப்ரீ கிக் உதையின்போது டொட்டன்ஹாம் அணிக்கு பதில் கோல் திருப்ப சிறந்த வாய்ப்பு ஒன்று கிடைத்தபோதும் எதிரணி கோல்காப்பாளர் அதனை சிறப்பாக தடுத்தார். அதேபோன்று கடைசி நேரத்தில் மௌரோ தலையால் முட்டிய கோல் முயற்சியும் தவறிப்போனது.    இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கட்டப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜெர்மனி கழகத்தின் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இங்கிலாந்து கழகமான டொட்டன்ஹாமுக்கு வாழ்வா சாவா என்ற ஆட்டமாக அமையும்.  அடலான்டா எதிர் வலன்சியா முதல் முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் அடலான்டா அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வலன்சியாவுக்கு எதிரான 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் 4-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.  தனது சொந்த நாட்டில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி கழகமான அடலான்டா போட்டி முழுவதும் தனது முன்னிலையை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்த அணி காலிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கடந்த பருவ சீரி A தொடரில் எவரும் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது இடத்தை பிடித்தே அடலான்டா இம்முறை சம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றது.  எனினும் தனது சொந்த மைதானமான அட்லெடி அசூரி ஐரோப்பிய போட்டிகளை நடத்தும் தரத்திற்கு இல்லாததால் மிலானின் சான் சீரோவிலேயே அந்த அணியால் சொந்த ஆட்டத்தை விளையாட முடிந்தது.  எனினும் சம்பியன்ஸ் லீக் ஆரம்ப போட்டிகள் மூன்றில் தோற்று பின்னடைவை சந்தித்த நிலையிலேயே மன்செஸ்டர் சிட்டியுடனான போட்டியை சமன் செய்து அடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி ஈட்டி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.     இந்நிலையில் 40,000 இற்கும் அதிகமான அடலான்டா ரசிகர்கள் 51 கிலோமீற்றர்கள் பயணித்தே தனது அணி விளையாடுவதை காண வந்தார்கள்.   ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஸ்பெயின் கழகமான வலன்சியாவுக்கு எதிராக முதல் பாதியில் அடலான்டா 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. ஹான்ஸ் ஹெட்போர் (Hans Hateboer) மற்றும் ஜோசிப் லிசிக் (Josip Iličić) அந்த கோல்களை பெற்றனர்.    தொடர்ந்து 57 ஆவது நிமிடத்தில் ரெமோ பிரியுலர் (Remo Freuler) பெற்ற கோல் மூலம் அடலான்டா 3-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது. மீண்டும் செயற்பட்ட ஹான்ஸ் ஹெட்போர் அடலான்டாவுக்காக 4 ஆவது கோலை புகுத்தினார்.  Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஸாஹிரா தகுதி சம்பியன்ஸ் லீக்கில் இரு முறை இறுதிப் போட்டிவரை முன்னேறி இருக்கும் வலன்சியா செய்வதறியாத நிலையில் 66 ஆவது நிமிடத்தில் டானிஸ் கிறிசோ (Denis Cheryshev) மூலம் கோல் ஒன்றை பெற்றது. வலன்சியாவின் சொந்த மைதானமான மெஸ்டெல்லா அரங்கில் இரண்டாம் கட்டப் போட்டியில் வரும் மார்ச் 10 ஆம் திகதி அட்லான்டா ஆடவுள்ளது.  http://www.thepapare.com/champions-league-round-up-for-19th-of-february-2020-tamil/
  • ருக்மணியம்மாவின் சிந்தனைக்குரிய பேச்சு.......!  👍
  • மார்ச் 3ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது   by : Dhackshala நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பாக இன்று அறிவித்தார். அரசாங்கத்தினால் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கான திருத்தங்கள் அனைத்தையும் விலக்கிக்கொள்வதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர், வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு, உர கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்கமான தற்போதைய எதிர்க்கட்சியினர் பெற்றுக்கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கையின் தேவைக்காகவே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன்போது குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல முதலாவது பிரேரணைக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவிப்பதாகவும் 2ஆவது பிரேரணையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட நிலமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். http://athavannews.com/மார்ச்-3ஆம்-திகதி-வரை-நாடா/