Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

சிரிச்ச சா....ரசிச்ச அனைவருக்கும் நன்றிகள்..

சுன்னாகச் சந்தையைப் பற்றி சும்மா எல்லாம் கதைக்கப்பிடாது வெங்காயம் தொடக்கம் உரும்பிராய் கிழங்குகள் வரையிலை எல்லாத்திலும் பேமஸ்..தான்...

Link to comment
Share on other sites

  • Replies 428
  • Created
  • Last Reply

அப்ப பொயிலை(புகையிலை) முகத்தார்... அதுக்கும் சுண்ணாகம் தானே..??

அது வந்து தம்பி இணுவில் சாமான் மருதனாமடச் சந்தைக்கும் சுன்னாகத்துக்கும் வரும் அதெப்படி கரேக்ட் புகையிலையை மாத்திரம் ஞாபகம் வைச்சிருக்கிறீயள்..............

Link to comment
Share on other sites

புகை இலைக்கு வடமராட்சிதான் பேமஸ் சுண்ணாகம்,கோப்பாயில் இருந்து வந்து கட்டிக்கொண்டு போறவயள்.

Link to comment
Share on other sites

சந்தை என்றதும் ஒரு பேச்சுக்கு கத்தரிக்காய் என்னு சொன்னேன்பா. இப்ப என்னடா என்றால். :lol: :roll:

Link to comment
Share on other sites

அது வந்து தம்பி இணுவில் சாமான் மருதனாமடச் சந்தைக்கும் சுன்னாகத்துக்கும் வரும் அதெப்படி கரேக்ட் புகையிலையை மாத்திரம் ஞாபகம் வைச்சிருக்கிறீயள்..............

சாவச்சேரிக்கு சுண்ணாகத்தில இருந்துதான் பொயிலை (தட்டிவானில) வாறது... கொடிகாமம் சந்தைக்கும் தான்...... ஆனா தின்னவேலியைப் பற்றித்தெரியாது....... (மாமாவேட சேந்து பிஸ்னஸ் செய்தனானாக்கும்) :P :P :P

Link to comment
Share on other sites

சிரிச்ச சா....ரசிச்ச அனைவருக்கும் நன்றிகள்..

சுன்னாகச் சந்தையைப் பற்றி சும்மா எல்லாம் கதைக்கப்பிடாது வெங்காயம் தொடக்கம் உரும்பிராய் கிழங்குகள் வரையிலை எல்லாத்திலும் பேமஸ்..தான்...

:evil: :evil: :evil: :evil: :twisted:

Link to comment
Share on other sites

:evil: :evil: :evil: :evil: :twisted:

ரமாக்கு கோவம் வருகுதோ எண்டு பாக்கத்தான் அப்பிடி எழுதினனான் பரவாயில்லை ஊர் பற்று இன்னும் இருக்குத்தான். . .

Link to comment
Share on other sites

என்ன முகத்தார் இப்படி சொல்லிட்டியள். நாங்கள் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த ஊரில் தான். எப்படி பற்று இல்லமால் போய்விடும்

Link to comment
Share on other sites

சாவச்சேரிக்கு சுண்ணாகத்தில இருந்துதான் பொயிலை (தட்டிவானில) வாறது... கொடிகாமம் சந்தைக்கும் தான்...... ஆனா தின்னவேலியைப் பற்றித்தெரியாது....... (மாமாவேட சேந்து பிஸ்னஸ் செய்தனானாக்கும்) :P :P :P

அப்ப முன்னாடி நீங்க ஒரு தொழில் அதிபரா?

Link to comment
Share on other sites

சாவச்சேரிக்கு சுண்ணாகத்தில இருந்துதான் பொயிலை (தட்டிவானில) வாறது... கொடிகாமம் சந்தைக்கும் தான்...... ஆனா தின்னவேலியைப் பற்றித்தெரியாது....... (மாமாவேட சேந்து பிஸ்னஸ் செய்தனானாக்கும்) :P :P :P

திருநெல்வேலி சந்தைதான் வாரத்தில் 7 நாட்களும் பெரியளவில் கூடும் சந்தை. சுன்னாகம் சந்தை வாரத்தில் திங்கள்,புதன்,வெள்ளி 3 நாட்களும்,மருதனாமடம் மற்ரும் சாவகச்சேரி சந்தை செவ்வாய்,வியாழன்,சனி 3 நாட்களும் பெரியளவில் கூடும் சந்தை, கல்வியங்காட்டு சந்தை (5சி அப்புவின் சந்தை) 7 நாட்களும் சிறியளவில் கூடும் சந்தை.

பாணிப்புகையிலைக்கு கோண்டாவில் தான் பேமஸ்.

Link to comment
Share on other sites

அப்ப முன்னாடி நீங்க ஒரு தொழில் அதிபரா?

தல முன்னால் தொழில் அதிபர் போலும்.. :lol:

Link to comment
Share on other sites

திருநெல்வேலி சந்தைதான் வாரத்தில் 7 நாட்களும் பெரியளவில் கூடும் சந்தை. சுன்னாகம் சந்தை வாரத்தில் திங்கள் புதன் வெள்ளி 3 நாட்களும் மருதனாமடம் மற்ரும் சாவகச்சேரி சந்தை செவ்வாய் வியாழன் சனி 3 நாட்களும் பெரியளவில் கூடும் சந்தை கல்வியங்காட்டு சந்தை (5சி அப்புவின் சந்தை) 7 நாட்களும் சிறியளவில் கூடும் சந்தை.

பாணிப்புகையிலைக்கு கோண்டாவில் தான் பேமஸ்.

என்ன சிறீ சந்தையெல்லாம் குத்தகைக்கு எடுத்த மாதிரி விரல் நுனியிலை கூடுறநாள் எல்லாம் வைச்சிருக்கிறீயள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிறீ சந்தையெல்லாம் குத்தகைக்கு எடுத்த மாதிரி விரல் நுனியிலை கூடுறநாள் எல்லாம் வைச்சிருக்கிறீயள்

முந்தி தினமும் வசூலுக்கு போவதாலே. இல்லையா சிறீ?? :lol:

Link to comment
Share on other sites

(இங்கு வரும் உரையாடலில் சில வார்த்தைகள் யாழ்ப்பாணத்தில் பேச்சுவழக்கில் உள்ளவை இது யாழ் களம் எண்டபடியால்தான் அனேகருக்கு புரியும் என நினைக்கிறேன் சின்னப்பு . சாத்திரி உங்களின் பேர்கள் இதில் பாவிப்பதில் எதாவது ஆட்சேபனைகள் இருந்தால் தனிமடலில் தெரிவிக்கவும்)

முகத்தார் வீடு . . அங்கம் -2

நேரம் : காலை 10 மணி

(முகத்தார் வளவுக்குள் வேலிக்கு கதியால் போட்டுக்கொண்டிருக்கிறார் வீட்டுக்குள்ளிருந்து பொண்ணம்மா கூப்பிடுகிறா. . .)

பொண்ணம்மா : எங்கையப்பா நிக்கிறீயள் வேலியோடை நிண்டு சொறியாம ஒருக்கா மாக்கெட்டுக்கு போட்டு வாங்கோவன்.

முகத்தார் : ஏனடியப்பா எழும்பினவுடனையே கத்திறீர். . .பொறும் வாறன். . . இஞ்சை இன்னும் நேரம் இருக்குத்தானே பிறகேதுக்கு அவசரப்படுகிறீர் ?

பொண்ணம்மா : உங்களுக்கு விளங்காது இப்ப விரதநாளெல்லோ வேளைக்குப் போணாத்தான் நல்ல மரக்கறி வாங்கிவரலாம்.

முகத்தார் : சரி. . . சரி. . .என்னவேண்ட வேணும் சொல்லும் பாப்பம்

பொண்ணம்மா : ஏனப்பா 12 மணித்தியாலம் குசினிக்கை நிக்கிறீயள் உங்களுக்குத் தெரியாதோ?

முகத்தார் : மரக்கறி உமக்கு விருப்பமானதைச் சொன்னாத்தானே நல்லது பிறகு வாங்கி வந்தாப் பிறகு துள்ளிக் குதிக்காம.ல். . . .

பொண்ணம்மா : பாவற்காய் 2 எடுங்கோ அப்பிடியே கரட் இருந்தால் சம்பல் ஒண்டு போடலாம் கிழங்கேடுக்கிறதெண்டால் உரும்பிராய் கிழங்கா பாத்தெடுங்கோ பிறகு 4 முருங்கக்காயும். . .

முகத்தார் : எல்லாம் சரி இந்த முருங்கக்காய் மட்டும் வாங்க மாட்டன் கண்டியோ .போண கிழமை வாங்கேக்கை இரண்டு பெட்டையள் பாத்துச் சிரிச்சதுகள் எனக்கு வெக்கமாப் போச்சு.

பொண்ணம்மா : நீங்கள் ஏன் பெட்டையளைப் பாத்தனீங்கள் வளவுக்கை நிண்ட முருங்கை மரத்தையும் தறிச்சுப் போட்டியள் வாய்க்கு ருசியா சாப்பிடுவமெண்டால் அதுக்கும் விடுகிறீயள் இல்லை. .

முகத்தார் : சரி ஒப்பாரி வைக்காதையும் பக்கங்களிலை ஆட்களில்லாட்டி வாங்கி வாறன்

பொண்ணம்மா : கட்டேலை போற வயசிலை இந்த மனுசனுக்கு முருங்கைக்காய் வாங்க வெக்கமாக் கிடக்காம். . . .

(சந்தைக்கு போண முகத்தார் அரைமணித்தியாலத்தால் வழியில் கண்ட சின்னப்புவையும் கூட்டிக் கொண்டு வாறர் )

முகத்தார் : சின்னப்பு வெளியிலை இருப்பம் வீட்டுக்கை ஒரே வெக்கை மனிசிட்டை மரக்கறியைக் குடுத்திட்டு வாறன் இருந்துகொள். .

பொண்ணம்மா : எங்கையப்பா இந்த மனுசனைப் பிடிச்சனீங்கள் விரதநாள் அதுவுமா போட்டுட்டு வேறை வந்திருக்கும்

முகத்தார் : எனக்கு உன்ரை குணம் தெரிஞ்சுதான் வெளியிலை இருத்திப் போட்டு வந்தனான் பாவமடி. மனிசியும் கொழும்புக்கு போணதாலை போக்கிடமில்லாமல் றோட்டிலை நிண்டார் ஒருநேரம் சாப்பாடு குடுத்தால் புண்ணியமாப் போகும்தானே . .

பொண்ணம்மா : இல்லையப்பா உந்த மனுசன் சாப்பிட்டுப் போட்டு எதாவது நொட்டை நொடி சொல்லிக் கொண்டு திரியும். அதுதான் .

முகத்தார் : இண்டைக்கு விரதநாள் அதுவுமா உன்ரை கையாலை ஒருக்காச் சமையுமன் சின்னப்புவும் சாப்பிட்டா இன்னோரு நாள் இந்தப் பக்கம் வரமாட்டான்

பொண்ணம்மா: என்னை மாட்டி விட்டுட்டு எங்கை போறியள் (இந்த நாசமாபோண சின்னப்பு ஏன்தான் வந்திச்சோ தெரியேலை )

முகத்தார் : சின்னப்பு மத்தியாணம் இஞ்சை சாப்பிட்டுட்டு போ என்ன. மரக்கறி சாப்பாடு; உனக்கு ஒத்துவராதுதான். .

சின்னப்பு : பரவாயில்லை முகத்தான் ஒருநாள்தானே. . மனுசியும் வீட்டிலை இல்லாதது விசராக் கிடக்கு. சரி என்ன புதிசா எதாவது புதினங்கள் இருக்கோ?

முகத்தார் : லெக்ஷனைப் பற்றி சொல்லுறதெண்டால் மலையக தமிழ் கட்சிகள் 2ம் ரணில் ஆதரிக்கிற தெண்டு முடிவெடுத்திட்டினம்

சின்னப்பு : யாரு சந்திரசேகரனும் தொண்டமானுமோ?

முகத்தார் : ஓமோம். . .இதாலை மலையக மொத்த வாக்குகளும் ரணிலுக்குத் தான் போகப் போகுது. .

சின்னப்பு : இப்ப முஸ்லீம் காங்கிரசும் ரணிக்குத்தானே சப்போட் பண்ணப் போகினம் அதுசரி உவர் தொண்டமான் மகிந்தாவோடை கதைக்கப் போணவர் எல்லோ என்ன நடந்தது. .

முகத்தார் : அது என்ன பகிடி எண்டால் மகிந்தான்ரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலை சிறிபதி சூரியராச்சி எண்ட பிரதியமைச்சர் ஒருவர் பங்கு பற்றுகிறார் இந்த மனுசன் கூட்டமொண்டிலை பேசேக்கை தொண்டமான் ஹக்கீம் ஆட்களின் ஆதரவு இல்லாட்டியும் மகிந்தாவருவது உறுதி எண்டு சொல்லியிருக்கிறார் இது தொண்டமானுக்கு சுட்டுப்போட்டுது போல

சின்னப்பு : இந்த சூரியராச்சிக்கும் தேவையில்லாத வேலை சும்மா மைக்கை கண்டவுடனை பேசுறதே. .

முகத்தார் : அதுதான் இப்ப கனபேர் மகிந்தாட்டை சொல்லியிருக்கினமாம் அவரை பிரச்சார நடவடிக்கேலையிருந்து விலத்தச் சொல்லி..

சின்னப்பு : இனி என்ன செய்யிறது அதுதான் தொண்டமான் பப்பிளிக்கா அறிக்கை விட்டுட்டாரே. . .

முகத்தார் : இப்ப எங்கடை ஆட்கள்தான் வெளிப்படையா யாருக்கு போடுறதெண்டு அறிவிக்கேலை. .

சின்னப்பு : இனவாதிகளோடை சேர்ந்திருக்கிற மகிந்தாவை விட ரணில் பரவாயில்லை என்ன முகத்தான்

முகத்தார் : இப்ப எங்கடை பிரச்சனைக்கு யார் வந்தாலும் எதாவது செய்வார்கள் எண்டு எதிர்பார்க்க முடியாதுதான் ஆனா இதுக்காண்டி தேர்தலை புறக்கணிச்சு போடாம விட்டாலும் இந்த ஆமிக்காரங்களும் டக்ளஸ்சின்ரை ஆட்களும் கள்ளவோட்டுப் போட்டு மகிந்தாவை கொண்டு வந்திடுவங்கள் இனவாதிகள் ஆட்சியமைப்பது சிறுபாண்மை இனத்தவர்களுக்கு நல்லதில்லை. . .

பொண்ணம்மா: சின்னப்பு மனுசி வீட்டிலை இல்லாட்டி இஞ்சை நேரை வந்து சாப்பிட்டுப் போறதுதானே இண்டைக்கு சாப்பிட்டுட்டுப் போங்கோ என்ன. .

முகத்தார் : (அடிப்பாவி கூட்டிக்கொண்டு வந்ததுக்கு உள்ளுக்கை கத்திப் போட்டு இப்பிடிக் கதைக்கிறாளே ) எதாவது குடிக்கத் தாருமன்

சின்னப்பு : எனக்கெண்டா ஒண்டும் வேண்டாம் பிள்ளை

பொண்ணம்மா : இந்த நேரம் சின்னப்பு என்ன குடிப்பர் எண்டு எனக்குத் தெரியும் இந்த மனுசனும் விரதத்தாலை இந்த 10 நாளும் அடக்கிக் கொண்டு இருக்குது. .

முகத்தார் : சும்மா கதையை விட்டுட்டு வேளைக்கு சமையும் பசிக்குது (அப்பாடி சின்னப்பு நிக்கிறதாலை கொஞ்சம் அதிகாரத்தைக் காட்ட முடியுது )

சின்னப்பு : அதுசரி முகத்தான் ஜேவிபித் தலைவருக்கு எதிரா நடவடிக்கை எடுக்கச் சொல்லி இராணுவம் சொல்லுதாம்

முகத்தார் : அதுவந்து முன்னைய இராணுவத் தளபதிகள் ஒரு 4பேர் சேர்ந்து அறிக்கையொண்டை எமுதி சந்திரிக்காட்டை குடுத்திருக்கினம் சோமவன்ச மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி. . .

சின்னப்பு : இந்த மனுசன் அப்பிடி என்ன செய்துச்சு?

முகத்தார் : அந்த மனுசன் என்ன டோப்பிலை கதைச்சுதோ தெரியேலை இலங்கை ராணுவத்தைக் கலைக்கவேணும் எண்டு சொல்லியிருக்கிறார் இது வந்து இராணுவத்திலை இருக்கிறவையை அவமதிக்கிற செயல் எண்டுதான் நடவடிக்கை எடுக்கச் சொல்லினம்

சின்னப்பு : ஆனா இலங்கை ராணுவம் 88லை ஜேவிபி விசயத்திலை உசாராத்தான வேலை செய்திருக்கிறாங்கள் ரயர் விளையாட்டைப் போட்டபடியாத்தான் அடங்கினவை இப்ப இந்த அம்மா வந்துதான் எழுப்பி விட்டிருக்கிறா. .

முகத்தார் : சிலவேளை சோமவன்ச கைது செய்யப்படலாம் எண்டு பேப்பரிலை இருக்கு அதோடை இவர் விமல் வீரவம்சாவும் 2 . 3 நாளாத் தலைமறைவெண்டும் சொல்லுறாங்கள் உண்மை பொய் தெரியேலை

சின்னப்பு : லெக்ஷனுக்கிடையிலை பெரிய விளையாட்டுகள் இருக்குதெண்டு சொல்லுறாய். . பாப்பம்

முகத்தார் : அதுசரி சின்னப்பு சாத்திரியை 2 நாளாக் காணேலை எங்கையாள் ?

சின்னப்பு : அதையேன் கேக்கிறாய் முனியம்மா நகம் வெட்டேக்கை விரலிலை கீறிப் போட்டுதாம் இதுதான் சாட்டெண்டு மனுசி கட்டிலை படுத்திட்டுது சாத்திரியர் தான் உடுப்புத் தோக்கிறதிலை இருந்து எல்லா வேலையும் ஆளுக்கு வெளிக்கிட நேரமில்லை

பொண்ணம்மா : சரி . .சரி. . கதைச்சது காணும் வாங்கோ சாப்பிடுவம் ..இஞ்சருங்கோ வாழையிலை 3 வெட்டியாங்கோவன். . . . . .

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

பாவற்காய் 2 எடுங்கோ அப்பிடியே கரட் இருந்தால் சம்பல் ஒண்டு போடலாம் கிழங்கேடுக்கிறதெண்டால் உரும்பிராய் கிழங்கா பாத்தெடுங்கோ பிறகு 4 முருங்கக்காயும். . . :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil:

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

:mrgreen: :evil: :evil: :evil:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted:

:twisted: :twisted:

Link to comment
Share on other sites

அந்த ஒரு வசனத்தை விட மற்றது எல்லாம் சுப்பராய் இருக்கு முகத்தார்

Link to comment
Share on other sites

பிள்ளை கோவத்திலும் வடிவாத்தான் இருக்கிறீயள் என்ன செய்ய கைப்பழக்கம் எமுதிவிட்டுது அது பெருமையான விசயம்தானே பிறகேன் கோபம் வருகுது....................

Link to comment
Share on other sites

முகத்தார் இதுவும் நல்லாயிருக்கு.தொடருங்கோ..........

ரமாவிற்கு ஏன் இவ்வளவு கோவம் :?: :?

Link to comment
Share on other sites

முகம்ஸ் சூப்பர் அப்பு ;)

Link to comment
Share on other sites

அசத்துறீங்க தாத்தா. நல்லாக இருக்கு அரசியல் சார்ந்த உரையாடலும்.

அடுத்த பாகத்தில் பொன்னம்மாக்காவின் சாப்பாடு பற்றி எழுதுவியளா? காத்திருக்கிறேன். சின்னப்பு அடுத்த தடவையும் பொன்னம்மாக்காவின் சாப்பாடு சாப்பிட வந்தாரா? :roll: :roll: :roll: :P :P

Link to comment
Share on other sites

என்ன சிறீ சந்தையெல்லாம் குத்தகைக்கு எடுத்த மாதிரி விரல் நுனியிலை கூடுறநாள் எல்லாம் வைச்சிருக்கிறீயள்

இல்லை சந்தை எல்லாம் குத்தகைக்கு கொடுத்தனான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.