Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

முகத்தார் வீடு - 18

புது மாப்பிளைக்கு பப் . .பப் . பப்ரி

சின்னப்பு எவ்வளவு பகிடி விட்டாலும் சண்டைக்கு வரமாட்டார் எண்ட நம்பிக்கையில்தான்

(முகத்தார் வீட்டில் பே;பர் பாத்துத்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் சின்னப்பு மிகுந்த சோர்வுடன் அங்கு வருகிறார்)

முகத்தார் : அட . . சின்னப்பு என்ன காணக்கிடைக்குதில்லை உடம்புக்கு எதைவது வருத்தங்களோ ? ? ஆளும் சரியா வாடின மாதிரிக் கிடக்கு

சின்னப்பு : சா . . அப்பிடியொண்டுமில்லையடா . . மனுசிக்காரி கொழும்புக்குப் போய் 10 மாதமாகுது என்னைப் பற்றியொரு சிந்தனையிருக்கோ பார் நானும் எத்தனை நாளுக்குத்தான் அங்கை இங்கை எண்டு திண்டு திரியிறது .

முகத்தார் : உன்ரை பிரச்சனை எனக்கு விளங்குது சின்னாச்சிக்கு விளங்கலையே என்ன செய்வம் நானும் உன்னை நெடுக கூப்பிட்டு எப்பிடி சாப்பாடு தாறது மனுசிக்காரி நான் சாப்பிடேக்கையே முறைச்சுப் பாக்கிறாள்

சின்னப்பு : எனக்கும் ஒருதரிடமும் கடமைப்பட விருப்பமில்லை முகத்தான் சின்னாச்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்கவேணுமெண்டு நினைச்சுக் கொண்டுதான் உன்னட்டை வந்தனான் பொண்ணம்மா எங்கை வீட்டிலையோ? ? ?

முகத்தார் : அவள் அடி வளவுக்கைத்தான் நிக்கிறாள் நீ சொல்ல வந்ததைச் சொல்லு பாப்பம்

சின்னப்பு : முகத்தான் எனக்கு அவசரமா ஒரு பெம்பிளை தேவை கலியாணத்துக்கு வந்த எதாவது குறிப்புகள் இருந்தா பார் பாப்பம்

முகத்தார் : சின்னப்பு நான் கலியாண புரோக்கர் என்ரை பேரை மாத்திப் போடாதை .

சின்னப்பு : இப்ப நான் என்ன சும்மா வைச்சுக்கவே கேக்கிறன் சட்டப்படி கலியாண கட்டத்தானே

முகத்தார் : சின்னப்பு உனக்கென்ன தலைகிலை எதாவது கழண்டு போச்சே . .இந்த வயசிலை போய் கலியாணம் எண்டு கொண்டு ஊருக்கை எவ்வளவு வெட்கம் அதோடை சின்னாச்சி வேறை உயிரோடை இருக்குது . .

சின்னப்பு : எனக்கு ஒருதரைப் பற்றியும் கவலையில்லை ஒரு நேர சோறு தராத சனங்கள் வேலைகாரி ஒண்டை வீட்டிலை வைச்சிருந்தாலும் வீண் கதைதான் கதைக்குங்கள் அதிலும் பார்க்க சட்டப்படி கட்டி கூட்டி வந்தால் பிரச்சனையில்லை தானே . . என்ன உனக்கு கொமிசன் கிடைக்காது எண்டு பயப்பிடுகிறியோ. . அதுவும்தாறன்

முகத்தார் : என்ரை கதையை விடு இந்த விசயம் நம்மடை மனுசிக்குத் தெரிஞ்சால் எனக்கும் திண்ணேலைதான் வாழ்வு நல்லா யோசிச்சு முடிவெடு சின்னப்பு . .

சின்னப்பு : இஞ்சை பார் காசு எவ்வளவு குடுக்கிறத்துக்கும் நான் ரெடி வீட்டிலை புருஷன்மாரை தனிய விட்டுட்டு ஆடப் போற பொம்பிளையளுக்கு என்ரை முடீவு படிப்பனையாக இருக்கவேணும் கண்டியோ . .நீயும் கையை விட்டுட்டால் இப்பிடியே பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் வேறை வழியில்லை . .

முகத்தார் சரி இஞ்சையில்லை . . . . .லை ஒரு பகுதியிருக்கு கூட்டிப்போறன் ஆனா நான்தான் ஒழுங்கு செய்ததெண்டு வெளியிலை மூச்சுக் கூட விடப்பிடாது சரியோ ? ? ?

சின்னப்பு : வாயே திறக்கமாட்டன் எப்ப . . எப்ப . . போறது ? ?

முகத்தார் : பாத்தியோ நீ வயித்துப் பசிலை இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை எதுக்கும் அந்த பகுதியோடை ஒருக்கா கதைச்சுப் போட்டு உன்னைக் கூட்டிட்டுப் போறன் அப்ப இண்டைக்கு இஞ்சை சாப்பிட்டுப் போவன்

சின்னப்பு : முகத்தான் எனக்கு இப்ப பசியில்லை வாறன் போட்டு . . .

முகத்தார் : (இந்த சின்னப்புவை புரிஞ்சு கொள்ள முடியலையே இந்த வயசிலை போய் கலியாணம் . . கடவுளே இது எங்கை கொண்டு போய் முடியுமோ ? ? )

(ஒரு நல்லநாள் மம்மல் பொழுது சின்னப்புவைக் கூட்டிக் கொண்டு பெண் பாக்கிறத்துக்கு வந்தார் முகத்தார்)

வீ .காரர் : வாங்க . . வாங்க . . இருட்டுக்கை வாறீயள் அது சரி மாப்பிளையை ஏன் கூட்டி வரேலை ? ?

முகத்தார் : ஜயா இவர்தான் மாப்பிளை உங்களுக்கு முன்னமே சொன்னான் தானே

வீ .காரர் : இல்லை நீங்க கொஞ்சம் வயசு எண்டு சொன்னீங்கள் நான் இந்தளவு வயசா இருக்கும் எண்டு நினைக்கலை . .

முகத்தார் : சரி ஜயா சுனங்கேலாது பெண்ணை கூப்பிடுங்கோ பாத்திட்டு போயிறம்

வீ .காரர் : அம்மா . .அன்னம் இஞ்சை புரோக்கர் முகத்தார் வந்திருகாக. . .மற்றும் அவர் . .

முகத்தார் : வோய் என்ன இது நாங்களும் வடிவேலின்ரை படம் பாத்திருக்கிறம் சும்மா ஆளைக் கூப்பிடுங்க

சின்னப்பு : (ரகசியமாக) முகத்தான் சின்ன பெண்ணு எண்டு சொன்னாய் பாத்தா தலை எல்லாம் நரைச்ச மாதிரி தெரியுது

வீ .காரர் : என்ன . .பெரியவர் . . சா . . மாப்பிளை சொல்லுறார் ? ?

முகத்தார் : இல்லை பெண்ணு கொஞ்சம் வயசாக்கிடக்கிற மாதிரி தெரியுது என்கிறார்

வீ .காரர் : வோய் அது என்ரை பெண்டாட்டி ஜயா . .நல்ல காலம் . . உங்களுக்கு அந்த பக்கத்திலை நிக்கிறதுதான் பெண்ணு

முகத்தார் : அடடா . .இருட்டோடை கலந்து நிக்கிறதாலை தெரியலை பிள்ளை இஞ்சாலை கொஞ்சம் வாங்கோவன்

முகத்தார் : (ரகசியமாக) சின்னப்பு கண் தெரியுதோ வடிவாப் பாத்துக் கொள் பிறகு என்னைப் பேசப்பிடாது

சின்னப்பு : முகத்தான் உண்மேலை நீ என்ரை தெய்வமடா இப்பிடியொரு பெம்பிளையை எனக்கு செட் பண்ணுவாய் . . சா . . காட்டுவாய் எண்டு நினைச்சுக் கூடப் பாக்கேலை

முகத்தார் : சரி . . சரி . . உணர்ச்சிவசப்படாதை . .இதுவெல்லாம் ஒரு தேசத் தொண்டு மாதிரி . . .(பொண்ணம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது முதுகிலை டிண் தான்)

முகத்தார் : அப்ப ஜயா மற்ற விசயங்களைப் பற்றி கதைப்பம் என்ன . .அது சரி இது ஆரு சின்னப் பையன் ? ?

வீ .காரர் : என்ரை பேரன்தான் மகளின்ரை பையன்

முகத்தார் : எங்கை மகளை காணேலை உள்ளுக்கை நிக்கிறாவோ ? ?

வீ .காரர் : இப்ப இவ்வளவு நேரம் பாத்தீங்களே அந்த மகளோடை பையன்தான்

முகத்தார் : அட . . அப்ப கலியாணம் கட்டாத மகள் இருக்கோ எண்டு கேக்க ஓம் எண்டு மண்டையை மண்டையை ஆட்டினீங்கள் ? ?

வீ .காரர் : இப்பவும் சொல்லுறன் இது என்ரை மகள்தான் இது என்ரை பேரன்தான் ஆனா என்ரை மகள் கலியாணம் கட்டேலை

முகத்தார் : என்னங்க ஒரே குழப்பமா கிடக்கே . .

வீ .காரர் : என்னங்க இதிலை குழப்பம் கலியாணம் கட்டாம குழந்தைபெறக் கூடாதா?

முகத்தார் : சின்னப்பு எழும்பு எங்களுக்கு இது சரிபட்டு வராது வேறை இடம் பாப்பம்

சின்னப்பு : (ரகசியமாக) முகத்தான் அமைதியா இரு நானே டென்சன் ஆகாமல் இருக்கிறன் குழந்தை இருந்தா இருந்திட்டு போகட்டும் நமக்கென்ன இப்படியொரு பெம்பிளை என்ரை மூஞ்சைக்கு கிடைக்கிறதே பெரிய விசயம் குழப்பிப் போடாதை இண்டைக்கே கூட்டிட்டு போகலாமோ எண்டு கேள்

வீ .காரர் : என்ன மாப்பிளை குசுகுசுக்கிறார் ? ? ?

முகத்தார் : வேறை என்ன அவருக்கு பிரச்சனையில்லையாம் இப்பவே காசை தந்திட்டு கூட்டிட்டு போகலாமோ எண்டு கேக்கிறார்

வீ .காரர் : காசை வேணுமெண்டால் தாங்கோ . ஆனா அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நேரம் வந்தீங்கள் எண்டால் தாலியை கட்டி கூட்டிட்டுப் போகலாம்

சின்னப்பு : ஏன் அவ்வளவு நாள் அதுக்கு முன்னம் ஏலாதோ ? ?

வீ .காரர் : அப்பிடியில்லைங்க ஞாயிற்று கிழமைதான் மகளோடை குடும்பம் நடத்திறவர் தொழில் அலுவலாக கொழும்புக்கு போறார் அதோடை முழு அமாவாசை நாள் நீங்க மகளை கூட்டிக் கொண்டு போறதும் ஒரு சனத்துக்கும் தெரியாது

முகத்தார் : அப்ப வீட்டிலை ஒரு ஆள் ஏற்கனவே புக் ஆகி இருக்குதா. . நல்ல பமிலி இதுக்குப் பிறகும் சின்னப்பு உனக்கு தேவையா ? ?

சின்னப்பு : முகத்தான் நீ இடத்தைக் காட்டினதோடை உன்ரை வேலை முடிஞ்சுது இனி நான் பாத்துக் கொள்ளுறன் வெளியிலை போய் நில் . . .

(அடுத்த ஞாயிறு வாறது எண்டு சொல்லியிட்டு திரும்பினார்கள் இருவரும்)

ஞாயிற்றுக் கிழமை காலை சின்னப்பு வீடு

சின்னப்பு காலேலையே குளிச்சு வலு உற்சாகத்துடன் இருக்கிறார் றேடியோவும் பெரிதாகப் பாடுகிறது அதில் "முதல் முதல் பார்த்தேன் உன்னை முழுவதும் மறந்தேன் என்னை" என்ற பாடல் போய்க் கொண்டிருந்தது சின்னப்பு கண்களை மூடி பாடலை முணுமுணுத்தபடி சாய்கதிரையில் படுத்திருக்கிறார் வாசலில் ஓட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேக்கிறது யாரோ படலைத்திறந்து கொண்டு வாறது தெரிய சின்னப்பு மெல்ல எழும்பிப் பாக்கிறார் . .சி . . ன் . . னா . .ச் . சி

சின்னப்பு : (மனசுக்குள்) இவள் எங்கை இங்கை . . முகத்தான் எனக்கு ஆப்பு வைச்சிட்டான் போலக் கிடக்கு

சின்னாச்சி : என்னப்பா காலேலையே குளிச்சு வலு சந்தோஷமாக இருக்கிற மாதிரி கிடக்கு

சின்னப்பு : இப்ப என்னத்துக்கு இஞ்சை வந்தனீர் ? ?

சின்னாச்சி : அட . .நாசமே . .மனுசன் என்னபாடோ எண்டு விழுந்தடிச்சு ஓடி வாறன் வாசலை வைச்சு கேக்கிற கேள்வியைப் பார்

சின்னப்பு : இல்லை அறிவிச்சுப் போட்டு வந்திருந்தீர் எண்டால் வசதியா இருந்திருக்கும் இப்ப எல்லாம் பிழைச்சுப் போச்சு. . .

சின்னாச்சி : என்ன பிழைச்சுப் போச்சு . எண்டு கேக்கிறன் நான் கொழும்பிலை இருந்தாலும் எந்த நாளும் உங்கடை நினைப்புத் தானப்பா தனிய கஷ்டப்படுவீயளே எண்டு அதோடை பேப்பரிலையும் ஒரு கதையை படிச்சன் அதுக்கு பிறகு அங்கை நிக்க மனமே பிடிக்கலை ஓடி வந்திட்டன்

சின்னப்பு : அப்பிடி என்ன பேப்பரிலை பெரிசா போட்டுட்டாங்கள் நீர் ஓடி வாறதுக்கு .

சின்னாச்சி : ஒரு வயசான மனுசனாம் மனுசியை கொழும்புக்கு அனுப்பிப் போட்டு ஒரு சின்னப் பிள்ளையை இரண்டாம் தாரமா கலியாணம் கட்டிப்போட்டுதாம் எவ்வளவு வெட்கம் கெட்ட செயல் பாத்தீங்களே . .என்னவோ தெரியலை இதை வாசிச்ச பிறகு எனக்கு அங்கை நிக்கப் பிடிக்கலை

சின்னப்பு : (மனசுக்குள்) நாசமாப் போண முகத்தான் அதுக்குள்ளை பேப்பரிலை வேறை எழுதிப் போட்டுட்டான் போல கிடக்கு மகனே. .இரடி உனக்கு வைச்சுக்கிறன்

சின்னாச்சி : அது சரியப்பா ஏன் உங்களுக்கு இப்பிடி வேர்க்குது உடம்புக்கு எதாவது . ? ? ?

சின்னப்பு : சா . அப்பிடியில்லை சாதுவா வயித்தை கலக்கிற மாதிரி இருக்கு இரும் வாறன்

(சின்னப்பு பாத்துறூம் நோக்கி பறக்கிறார்)

(சின்னப்பு வெறி சொறி உண்மைக் கதையை இஞ்சை எழுதினதுக்கு )

Link to comment
Share on other sites

  • Replies 428
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயையோ.. சின்னப்பு இப்படி எல்லாம் நடக்கிதா..?? சின்னாச்சிக்கு இன்னொரு சின்னப்பு கிடைக்கமாட்டாரா என்ன..?? :wink: :P அது சரி போன மனைவி அலுவல் முடிஞ்சு வாறதுக்க ஒரு புது குடும்பமே தொடக்க நிக்கிறார்களா..?? என்ன முகம்ஸ் கதை இப்படிப்போகுது.. பாவம் சின்னப்பு யென்டில் அப்பு என்று எல்லொ நினைச்சன். :P

Link to comment
Share on other sites

ஆகா சித்தப்பு சூப்பர் ஆனால் சின்னப்பு பாவம் சின்னாச்சியிடம் இப்படி மாட்டிவிட்டீங்களே :lol::lol::lol::D:lol::lol::lol:

Link to comment
Share on other sites

என்ன முகத்தார் பகிடி ஒரு மாதிரியா போகுது...?! பாவம் சின்னப்பு...எவ்வளவு நல்ல மனிசன்...இப்படி ஆக்கிட்டேள்..! அதுக்க சின்னாச்சிக்கு இன்னொரு சின்னப்பு தேடுது சனம் பாருங்க...! :evil: :shock: :twisted:

வடிவேல் சொன்னது போல ஊரே கெட்டுக்கிடக்கு...அவன் பொண்டாட்டிய இவன்..இவன் பொண்டாட்டிய அவன்..இப்படித்தான் எல்லாம் நகருது...களத்திலும்..! :shock: :roll: :idea:

Link to comment
Share on other sites

ஆகா சித்தப்பு சூப்பர் ஆனால் சின்னப்பு பாவம் சின்னாச்சியிடம் இப்படி மாட்டிவிட்டீங்களே :lol::lol::lol::lol::lol::lol::lol:
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D
Link to comment
Share on other sites

:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

தாத்தா என்ன லொள்ளா? உங்கள் சிரிப்புக்கு என்ன அர்த்தம் நான் மு.சித்தப்புவிடம் உங்களுக்காக கதைக்க நீங்கள் லொள்ளுப் பண்ணுகின்றீங்கள்

Link to comment
Share on other sites

முகத்தார் வேலையைக் காட்டீட்டிங்கள். உதைத்தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதென்பதோ?? :roll: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயயோ!!!!

எட டண். உவர் முகத்தாரும், சின்னப்புவும் சேர்ந்து அக்களுக்கு துரோகம் பண்ணப்பார்கினமே!! நீ எங்கே ராசா போய்விட்டாய்!! :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

பாவம் சின்னப்பு. வந்த சின்னாச்சி ஒரு நாள் பிந்தி வந்திருக்க கூடாதா? இல்லை சின்னப்புக்கு விழுந்த பூசையையும் பார்த்திருக்கலாம்.

இந்த பாகத்தில் சிரிக்க வைத்துவிட்டீர்கள் அங்கிள். நன்றிகள்

Link to comment
Share on other sites

ஜயயோ!!!!

எட டண். உவர் முகத்தாரும், சின்னப்புவும் சேர்ந்து அக்களுக்கு துரோகம் பண்ணப்பார்கினமே!! நீ எங்கே ராசா போய்விட்டாய்!! :cry: :cry: :cry: :cry:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

முகத்தார் வேலையைக் காட்டீட்டிங்கள். உதைத்தான் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவதென்பதோ?? :roll: :)

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

பாருடா சின்னப்பு எவ்வளவு கோபமாய் இருக்கார்ணு, அப்பு உங்களுக்கும் ஒரு நேரம் வரும்தானே முகத்தாரப் போட்டுக்குடுக்க.

இப்படி அப்புக்கு உசுப்பேத்தனாத்தன் 2 போட்டுட்டு வந்து அந்த ம**ல முகத்தாற்ற திருவிளையாட்டெல்லாம் எடுத்துவுடுவார். :wink:

Link to comment
Share on other sites

ஆகா முகத்தார் சின்னப்புவை இப்படி போட்டு தாக்கிறீங்களே :)

இந்த சமயத்தில் பிரித்தானியாவில் அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பார்த்த காட்சி .... (நகைச்சுவைக்காக மட்டும்)

இடம்: ஒரு சட்டதரணியின் அலுவலம்

தொலைபேசி ஒலிக்கின்றது. அலுவலகத்தின் இருப்பவர் பதிலளிக்கின்றார்

போன் செய்தவர்: எனக்கு மனுசிட்ட இருந்து டிவோர்ஸ் எடுத்து தரவேணும். அதுக்கு தான் அவசரமா போன் பண்ணினான்

அலுவலகத்தில் இருப்பவர்: சரி காரணத்தை சொல்லுங்கோவன் சும்மா டிவோஸ் எடுக்க முடியுமே

போன் செய்தவர்: அதில்லை தம்பி எனக்கு இப்ப கிட்டடியிலை பிள்ள பிறந்தது. நல்ல பால் வெள்ளை ஆனா நானும் கறுப்பு என்ட மனுசியும் கறுப்பு எப்பிடி இது எண்டு மனுசியை கேட்டால் கடவுள் தந்த கொடை எண்டுறாள். நான் என்ன செய்ய சொல்லும்

அலுவலகத்தில் இருப்பவர்: உதுக்கேன் டிவொஸ் எடுக்கிறியள் ஐயா. மனுசியை அரவணைச்சு குடும்பத்த கொண்டு நடத்துற வழியை பாருங்க. ஆனான ஒண்டு அந்த கடவுளை கண்டா இருட்டடி கொடுங்கோ

Link to comment
Share on other sites

ம்ம்..மு.அங்கிள் பாவம் நிறையப்பேரோட கோவத்தை சம்பாதிக்கிறாரு..இது எங்க போய் முடியுமோ தெரியல.. :roll: :roll: :arrow:

Link to comment
Share on other sites

Mathan wrote:

ஆகா முகத்தார் சின்னப்புவை இப்படி போட்டு தாக்கிறீங்களே :)

இந்த சமயத்தில் பிரித்தானியாவில் அண்மையில் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் பார்த்த காட்சி .... (நகைச்சுவைக்காக மட்டும்)

இடம்: ஒரு சட்டதரணியின் அலுவலம்

தொலைபேசி ஒலிக்கின்றது. அலுவலகத்தின் இருப்பவர் பதிலளிக்கின்றார்

போன் செய்தவர்: எனக்கு மனுசிட்ட இருந்து டிவோர்ஸ் எடுத்து தரவேணும். அதுக்கு தான் அவசரமா போன் பண்ணினான்

அலுவலகத்தில் இருப்பவர்: சரி காரணத்தை சொல்லுங்கோவன் சும்மா டிவோஸ் எடுக்க முடியுமே

போன் செய்தவர்: அதில்லை தம்பி எனக்கு இப்ப கிட்டடியிலை பிள்ள பிறந்தது. நல்ல பால் வெள்ளை ஆனா நானும் கறுப்பு என்ட மனுசியும் கறுப்பு எப்பிடி இது எண்டு மனுசியை கேட்டால் கடவுள் தந்த கொடை எண்டுறாள். நான் என்ன செய்ய சொல்லும்

அலுவலகத்தில் இருப்பவர்: உதுக்கேன் டிவொஸ் எடுக்கிறியள் ஐயா. மனுசியை அரவணைச்சு குடும்பத்த கொண்டு நடத்துற வழியை பாருங்க. ஆனான ஒண்டு அந்த கடவுளை கண்டா இருட்டடி கொடுங்கோ

ஆ ஆ ஆ(சாமி) மதனா இணைத்தது :roll: :roll:

Link to comment
Share on other sites

முகத்தாரின் தொடரை படிச்சதும் அண்மையில் பார்த்தது நினைவுக்கு வந்தது. இணைப்பமா வேண்டாமா என்று யோசித்து யோசித்து தான் இணைச்சன். இப்ப இணைச்சிருக்க வேண்டாமோ என்று தோணுது :)

Link to comment
Share on other sites

இல்லை மதன் நகைச்சுவைக்காகத் தானே இணைத்துள்ளீர்கள். நானும் கொஞ்சம் நகைச்சுவைக்காகத்தான் கடித்தேன். :):lol:

Link to comment
Share on other sites

முகத்தான் பெடியள் நம்மளோடை விளையாடுதுவள் கவனமடாப்பா இப்பிடித்தான் கிராபிக்கிங் எண்டு ஒருத்தன் விளையாடினவன் தெரியும் தானே ஆள் யாரெண்டு

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

முகத்தார் வீடு அங்கம் 19

பொண்ணம்மா : உங்களுக்கென்ன நிம்மதியா நல்லா நீட்டி நிமிந்து கிடவுங்கோ

முகத்தார் : என்னடியப்பா சும்மா சரியக் கூட விடமாட்டியே

பொண்ணம்மா : நேற்று உங்களிட்டை என்ன சொன்னான் புதன் கிழமை கொழும்புக்கு போக வேணும் சீலன்ரை வானுக்குச் சொல்லச் சொல்லி எல்லோ

முகத்தார் : இப்ப என்னத்துக்கு திடீரெண்டு கொழும்புக்கு

பொண்ணம்மா : சரியாப் போச்;சு வயசுபோனா அறளை பேந்துபோகும் எண்டது உண்மைதான் அதுதானப்பா தம்பி ராசன் பிரான்ஸ்சிலை இருந்து வாறனெல்லோ ஏயாப்போட்டிலை போய் கூட்டியற வேண்டாமே. . . .

முகத்தார் : அவன் வரச் சொல்லி சொல்லேலையே எதாவது ஒழுங்குகள் செய்திருப்பான்

பொண்ணம்மா : அவன் சொல்லாட்டிக்கு போகப்பிடாதே 10 வருஷம் வெளியிலை இருந்து வாறவனை கூப்பிடப் போகாட்டி ஊருக்கை என்ன கதைப்பினம்

முகத்தார் : போகேக்கை இந்த உருக்கத்தை காணேலை இப்ப வருகுது அதுசரி அவனுக்கு பேசி வைச்சிருக்கிற சம்மந்தபகுதி கொழும்பிலைதானே இருக்கினம் எப்பிடியும் அவைக்குச் சொல்லியிருப்பான்

பொண்ணம்மா : லூசாப்பா நீங்க பேசித்தான் வைச்சிருக்கு இன்னும் சம்மந்தம் கலக்கேலையே அவையை போகவிட்டா ராசன் கொண்டு வாறதெல்லாத்தையும் அப்பிடியே அமத்திப் போடுவினம்

முகத்தார் : அப்ப நீர் போய் அமத்தப் போறீர் வயசுபோண நேரத்திலை ஏன் அலைச்சல் எண்டு சொல்ல வந்தன்

பொண்ணம்மா : நீங்க வராட்டி நில்லுங்கோ நான் போறன் சம்மந்தி மாணிக்கத்தாரின்ரை குணம் உங்களுக்குத் தெரியாது ஏயாப்போட்டுக்கே பெடிச்சியை கொண்டு போய்க் காட்டி அப்பிடியே வறுகிப் போடும் மனுசன்

முகத்தார் : அதுவும்சரிதான் உன்ரை தம்பியும் பெம்பிளையைக் கண்டா என்ன செய்யிறதெண்டு தெரியாது இஞ்சையே எத்தினை பிரச்சனைகள் காட்டினவன்

பொண்ணம்மா : சும்மா எதுக்கு பழசுகளை கிளறீங்கள் இப்ப அவன் வெளிநாட்டு மாப்பிளை

முகத்தார் : கொழும்பிலை போய் எங்கையப்பா தங்கிறது மாணிக்கத்தின்ரை வீட்டுக்கு போவமோ

பொண்ணம்மா : சா. . சா. . அங்கை போனா எங்கடை டிமான்ட் குறைஞ்சிடாது பேசாம ஒருநாள்தானே லொஜ்சிலை தங்குவம்

முகத்தார் : ஏதோ ஆட வெளிக்கிடுறீர் நானும் சேந்தாடவேண்டிக்கிடக்கு வானுக்கு சொல்லிப்போட்டு வாறன்

(அடுத்தநாள் மாலை வான் ஒண்டு முகத்தார் வீட்டில் வந்து நிக்கிறது அதிலிருந்து ராசனும் இன்னொரு பெண்ணும் இறங்கி வருகினம்)

பொண்ணம்மா : உங்கை பாருங்கோ ராசன் வாறான். அது ஆர் பக்கத்திலை மாணிக்கத்தாற்ரை பெடிச்சி சுமதி போலக் கிடக்கு

முகத்தார் : எனக்கு அப்பவே தெரியும் உன்ரை தம்பி என்ன வேலை செய்திருப்பான் எண்டு

பொண்ணம்மா : ஒரு பிளானோடைதான் மாணிக்கத்தார் பெடிச்சியையும் சேத்து அனுப்பி வைச்சிருக்கிறார்

முகத்தார் : பிளான் இல்லையடி உன்ரை தம்பின்ரை குணம் தெரிஞ்ச மனுசன்

தனிய விட்டா ஊருக்கை என்ன செய்வான் எண்டு மனுசனுக்குத் தெரிஞ்சிருக்கு

பொண்ணம்மா : இதெல்லாம் நான் இருக்கேக்கை எப்பிடி நடக்குதெண்டு பாக்கிறன்

தம்பி ராசன் எப்பிடியடா இருக்கிறாய் இப்பிடி இழைச்சுப் போட்டியே?

முகத்தார் : இந்தா போனதைவிட 2மடங்கா வந்திருக்கிறான் இழைச்சுப் போட்டான் எண்டு சொல்லுறாய்

ராசன் : எப்பிடி அக்கா இருக்கிறீயள்?? இரண்டுநாள் முன்னுக்கு வரக் கிடைச்சுது உங்களுக்கு என்னத்துக்கு கஷ்டம் எண்டுதான் நானே வந்திட்டன்

பொண்ணம்மா : வாங்கோ பிள்ளை என்ன அப்பர் தனிய அனுப்பியிருக்கிறார் சும்மா சம்மந்தம் தான் பேசியிருக்கு ஊருக்கை பாத்தா வடிவில்லைத்தானே. .

ராசன் : அக்கா என்ன இன்னும் பழைய காலத்திலையே இருக்கிறீயள் இப்பத்தைய காலத்திலை கலியாணத்துக்கு முன்னம் ஆண்ணும் பெண்ணும் பழகினால்தான் ஒருவரை ஒருவர் சரியா புரிஞ்சு கொள்ள முடியும்

முகத்தார் : அது வாஸ்தவம் தான் தம்பி ஆனா ஒருவர் ஒருவற்றை மனசை புரிஞ்சு கொள்ளுங்கோ எண்டா பெடியள் எல்லாத்தையும் எல்லோ புரிஞ்சு கொள்ள நிக்கினம்

ராசன் : இதுக்குத்தான் அக்காவை சொன்னான் ஒருக்கா உங்களையும் கூட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு வந்து அந்தக் கலாச்சாரங்களை பாக்கச் சொல்லி இது இங்கே அடைஞ்சு கிடந்து கொண்டு உலகம் விளங்காம நிக்கிறீயள்

முகத்தார் : தம்பி இப்பிடிச் சொல்லித்தான் இஞ்சையும் ஆட்கள் காதல் கலியாணம் திறம் என்;கிறவை பிறகு பாத்தால் இரண்டு மூண்டு வருஷத்திலை கவிழ்ந்து போய் கிடக்குது

பொண்ணம்மா : ராசன் நீ ஆம்பிளையடா வெளிநாட்டு பிளானிலை நாலு பெட்டையளோடை பழகிட்டு வந்தாலும் டிமாண்ட்தான் மாணிக்கத்தாருக்கு எங்கை அறிவு போட்டுது பிள்ளையை தனிய அனுப்பிறதுக்கு

முகத்தார் : இஞ்சை பாற்ரா அக்காச்சி சொல்லுற புத்திமதி வந்த பிள்ளையை வைச்சுக் கொண்டு கதைக்கிற கதையை முதலிலை பிள்ளைக்கு ஏதன் குடிக்கக் குடுமன்

பொண்ணம்மா : இல்லையப்பா பிள்ளையை நான் பேசேலை கல்யாணம் முடியாமல் இரண்டு பேரையும் பழகவிடுகிறது நம்மடை ஊருக்கு புதிசா எல்லோ கிடக்குது

ராசன் : அக்கா இஞ்சை ஊரிலை இருக்கிற ஆட்கள்தான் இன்னும் மாறமல் கிடக்கிறீயள் இப்ப வெளியிலை எங்கடையாட்கள் கலியாணம் முடிக்காமல் குடும்பம் நடத்தி பிள்ளை பிறந்தாப் பிறகே தாலிக்கட்டினம் இந்த விதத்திலை கொழும்பிலை இருக்கிற ஆட்களே மாறியிட்டினம் நீங்கள்தான். . . .

முகத்தார் : இஞ்சரும் இப்ப பெண்ணைப் பெத்தவையும் கொழும்புவாசிகள்தானே அவையே யோசிக்காமல் பிள்ளையை அனுப்பியிருக்கினம் நீர் ஏன் குதிக்கிறீர்

ராசன் : சரி அக்கா. கதையை விடு . ஒரு அட்டியல் கொண்டு வந்தனான் சுமதிக்குக் குடுப்பம் எண்டு ஒருக்கா பார்

பொண்ணம்மா : (தன்ரை கழுத்தில் வைத்து பாத்துவிட்டு) சா. . .நல்லாத்தான் இருக்கு அட்டியல்

முகத்தார் : அட்டியல் நல்லாத்தான் இருக்கு ஆனா கழுத்து வடிவில்லையே அப்பிடியே கழட்டிக் குடுத்திடம்மா. .

பொண்ணம்மா : வேண்டியும் தர மாட்டியள் ஆசைக்கு வைச்சுப்பாத்தாலும் உங்களுக்குப் பொறுக்காது

முகத்தார் : எனக்கு தெரியுமப்பா உம்மடை குணம்

ராசன் : அக்கா சரியான அலுப்பாக்கிடக்கு முதலிலை குளிச்சிட்டு வாறன் நல்ல தேத்தண்ணி ஒண்டு போட்டுத் தா பாப்பம்

(சுமதியையும் கூட்டிட்டு சமையலறைக்கு போற பொண்ணம்மா )

பொண்ணம்மா: பிள்ளை உமக்கும் தேத்தண்ணி போடுறன் நீரும் குளிச்சிட்டு வாருமன்

சுமதி : பாத்றூம் எங்கையன்ரி இருக்கு?

பொண்ணம்மா: பிள்ளை பாத்றூம் இல்லை கிணத்தடிதான் உந்தச் சட்டையோடையே குளியும்

சுமதி : ஜயோ என்ன அன்ரி எனக்கு பாத்றூமிலை குளிச்சுத்தான் பழக்கம் இதென்ன முத்தவெளியிலை குளிக்கச் சொல்லுறீயள்

பொண்ணம்மா: பிள்ளை முந்தி நீங்க 18வயசுமட்டும் வடலியடைப்புக்கை இருக்கேக்கை பொது கிணத்திலைதான் குளிக்கிறதெண்டு அம்மா சொன்னா இப்ப 3 வருஷம் கொழும்புக்கு போணவுடனை எல்லாம் மறந்து போச்சே அங்காலை வெறும் வளவுதான் ஒருதரும் பாக்கமாட்டினம் போய் குளியும்

(சுமதி குளிக்கப் போக முகத்தாரிடம் வருகிற பொண்ணம்மா)

பொண்ணம்மா: இஞ்சரப்பா இண்டைக்கு நீங்க விறாந்தேலை படுங்கோ என்ன

முகத்தார் : ஏனப்பா என்ன நடந்தது?

பொண்ணம்மா: ஒரு அறைக்கை நானும் சுமதியும் படுக்கிறம் மற்ற அறைக்கை ராசன் படுக்கட்டும் கலியாணம் முடியும் மட்டும் கண்ணுக்கை எண்ணெயை ஊத்திக் கொண்டிருக்கனுமப்பா மாணிக்கத்தாரை ? நானா எண்டு பாக்கிறன் பேசாமல் நான் சொல்லுறதைக்கேட்டு நீங்க வெளியிலை படுங்கோ என்ன

முகத்தார் : கடைசிலை படியிலை காவலுக்கு படுக்கிற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திட்டாய் சரி. . .சரி. . .

முற்றும் :roll: :roll:

Link to comment
Share on other sites

கள உறவுகளுக்கு வணக்கம் உங்களுடன் ஒரு நிமிடம்

முகத்தான் விடை பெறும் நேரம் இது . . . ஆமாங்க கடந்த 5 வருடங்களாக சவுதி பாலவனத்தில் சொந்தங்கள் நண்பர்கள் எவருமின்றி தனித்திருந்த எனக்கு யாழ் களம் ஒரு பெரிய குடும்பத்தையே அமைத்துத் தந்தது நான் இங்கு இணைந்து சரியாக 1வருடம் ஆகிறது. . .வருடத்தில் கிடைக்கும் ஒரு மாத லீவு எப்ப வரும் ஊருக்கு போக என கலண்டரை பார்த்து நாட்களை எண்ணிய எனக்கு யாழ்களத்தில் இணைந்ததின் பின் நாட்கள் போவதுகூடத் தெரியவில்லை பணம்தான் வாழ்க்கை அல்ல என்று கூறும் பொண்ஸ்சின் பேச்சை நம்பி மார்ச் 15ம் திகதியுடன் எனது ஒப்பத்த அடிப்படையிலான வேலையை முடித்துக் கொண்டு தாயகம் செல்லவுள்ளேன். . . .நிச்சயம் தாயகத்திலிருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்த விடை பெறுகிறேன். . . அதற்கு முன்னம் இங்கு நான் நகைச்சுவையாக எழுதிய கருத்துக்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்

நன்றி. . . .வணக்கம் . . .என்றும் உங்கள் முகத்தார்

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

முகத்தார் என்ன இப்படி ஒரு குண்டை போடுறீங்கள்?

இருந்தாலும் உங்கள் நகைச்சுவையான பேச்சுகள் சிரிக்கமட்டும் இல்லை சிந்திக்கவும் வைத்தன அதுக்கு

நன்றிகள், உங்களை மீண்டும் தாயகத்தில் இருந்து தொடர்பு கொள்ளுவிர்கள் என்று காத்து இருக்கிறேன்..........

Link to comment
Share on other sites

மீண்டும் உங்களுடன் பேச முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் கனத்த இதயத்துடன் விடையளிக்கிறோம், இவ்வளவுகாலமும் மகிழ்வளித்த உங்களுக்கு என் நண்றிகள் முகத்தார். :lol::):lol:

Link to comment
Share on other sites

வணக்கம் அங்கிள்..கனத்த இதயத்துடன் விடை தருகின்றோம்...

:cry: :cry: சென்று தயவு செய்து அங்கு இருந்து எங்களுடன் இனைந்து கொள்ளுங்கள்....

:P :P உங்கள் நகைச்சுவையால்...எங்களை சிரிக்க வைத்த உங்களுக்கு மனம்மார்ந்த நன்றிகள்.... :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் முகம்ஸ் இந்தத்தொடரையும் நல்லா எழுதியிருக்கிறியள்.. பொன்ஸ் பாவம் ஒரு அட்டியல் வாங்கிக்கொடுக்கிறது தானே..

எங்க போனாலும் யாழிற்கு வருவியள் என்று நம்பிறன் முகம்ஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.