Sign in to follow this  
MUGATHTHAR

முகத்தார் வீடு

Recommended Posts

மிக அருமையான நாடகங்கள்.

 

 

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும்  யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 

 

நீங்கள் அன்னியமாகும்  அளவு யாழில் உங்களுக்கு ஒன்றும் நடந்ததுபோல் தெரியவில்லையே சாத்திரி.
 

Share this post


Link to post
Share on other sites

முகத்தார் வீடு பாகம் 9 வரை வாசித்தேன். மிகுதி பின்னர் வாசிக்கிறேன்.

 

முகத்தார் என்பவரும் சாத்து அண்ணாவும் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்கள். :) :) :) (ஒரு சில ஓவர் வசனங்களும் உள்ளன)

யார் இந்த முகத்தார்? நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். :)  offline - march 2009 என்று உள்ளது. அதன் பின்னர் ஏன் எழுதாமல் விட்டார்? :unsure:  சின்னப்பு என்ற பெயரில் உள்ளவரை இடைக்கிட யாழில் நான் கண்டிருக்கிறேன். இந்த கூட்டணி மீண்டும் சேராதா? :rolleyes:

 

சாத்திரி : முகத்தான் நீ குடுத்து வைச்ச ஆளடப்பா பொண்ணம்மா மாதிரி பெண்சாதி கிடைக்கிறதுக்கு . . .

முகத்தார் : (நான் போட்டு வைச்ச தேத்தண்ணியை கொண்டு வந்து குடுத்தவுடனை பொண்ணம்மா நல்லம் நான் குடுத்து வைச்சனான் யாரிட்டை சொல்லுறது) சாத்திரி இதெல்லாம் விதிப் பலன் . . . .

:lol: :lol:

 

 

பொண்ணம்மா: சின்னப்பு மனுசி வீட்டிலை இல்லாட்டி இஞ்சை நேரை வந்து சாப்பிட்டுப் போறதுதானே இண்டைக்கு சாப்பிட்டுட்டுப் போங்கோ என்ன. .

முகத்தார் : (அடிப்பாவி கூட்டிக்கொண்டு வந்ததுக்கு உள்ளுக்கை கத்திப் போட்டு இப்பிடிக் கதைக்கிறாளே ) எதாவது குடிக்கத் தாருமன்

இப்படி பலவற்றை நானும் பார்த்திருக்கிறேன். :lol: :lol:

 

முகத்தார் : தம்பி வணக்கம் என்ன படம் எடுக்கப் போறீயளாம்?
தல : அதுதான் வந்திருக்கிறம் படம் எடுக்க ஜடியா குடுத்திட்டு சாத்திரியார் இன்னும் கதையையே சொல்லேலை….
சாத்திரி : கதையா அது என்னத்துக்கு தமிழ் படத்துக்கு தேவையில்லையே அதை நான் பாத்துக் கொள்ளுறன். .

------------

------------
முகத்தார் : எனக்கெல்லாம் அப்பிடி ஆட ஏலாதடா. .
சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்


:lol: :lol:

 

முனியம்மா: இல்லையப்பா
பேன கிழைமை அந்த அறுபதாம் கலியபணத்துக்கு போட்டு வந்ததிலை இருந்து
எனக்கும் ஒரு ஆசை நானும் அறுபதாம் கலியாணம் செய்யலாமெண்டு
நினைச்சிருக்கிறன்

சாத்திரி: நான் ஒருத்தன் இருக்கிறன் இந்த வயசிலை இனி இன்னும் 59 பேரை எங்கை தேடிபிடிச்சு செய்ய போறாய்

:lol: :lol:

 

வந்தவர் : அம்மா நாங்க அகதிமுகாமுக்கு சாமான் சேர்க்கிறம் உங்களிட்டை நல்ல தேவையில்லாத பொருட்கள் இருந்தா தாங்கோவன்

பொண்ணம்மா: அப்பிடியெண்டா (யோசிக்கிறா) இந்தா இவரை கொண்டு போங்கோ

வந்தவர் : (அதிர்ச்சியாக) என்னம்மா இது நாங்களே அகதிகளுக்கு சாமான் சேக்கிறம் எங்களிட்டையே ஒரு அகதியைத் தரப் பாக்கிறீயள்

பொண்ணம்மா: இல்லைதம்பி திடீரெண்டு நீங்க கேட்டதிலை வாயிலை வந்திட்டுது நாளைக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்

:lol: :lol: :icon_idea:

 

பழணியாண்டி : மனுசிக்காரி சொல்லிறா குத்துவிளக்காட்டம் மருமகள் வரவேணும் எண்டு

முகத்தார் : ஏன் அப்பதான் திரி இழுத்து பத்த வைக்க லேசோ. . .

:lol: :lol:

 

பொண்ணம்மா : என்னப்பா ஏதோ கருகி மணக்கிது கதையெண்டா எல்லாத்தையும் மறந்திடுங்கோ

முகத்தான் : வெங்காயம் வெங்காயம்

பொண்ணம்மா : ஆரை வெங்காயம் எண்டுறியள் வரட்டே உங்கை

முகத்தான் : இல்லையப்பா பருப்புகறிக்கு வெங்காயம் தாழிக்கிறன் அதைதான் சொன்னனான்

சாத்திரி : நீயடாப்பா சரியான கில்லாடி சரி இப்ப என்ன செய்ய சொல்லுறாய்

:icon_mrgreen::D:lol:

 

முகத்தார் : என்ன திடீரெண்டு பணச்சடங்கு வைக்கிறார் என்ன விசயம்

பொண்ணம்மா : அவற்ரை 2 பிள்ளைகளும் வெளியிலைதானே இனி வீட்டிலையும் ஒரு விசயமும் வராது ஊருக்கை குடுத்த காசுகளை எப்படி எடுக்கிறது அதுதான்

:D :D :icon_idea:

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

மிகுதிப்பகுதிகளை வாசித்து முடித்து விட்டேன். உண்மையில் சமூகத்தில் நடைபெறும் பல விடயங்களை நகைச்சுவையுடன் முன்வைத்துள்ளார்கள். :)  மிகவும் பாராட்டுதற்குரியது. :)  யார் அந்த முகத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரை ரொம்ப மிஸ் பண்ணுறன். :( :( :(

 

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும் யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 


சாத்து அண்ணா, முகத்தார் என்பவரை மீண்டும் அழைக்க முடியாதா? அழைத்து பாருங்களன். சின்னப்பு என்பவரையும் வர சொல்லுங்கள். :(

இந்த திரியை நீங்கள் தொடரலாமே. அல்லது இப்படியொரு திரியை நீங்கள் ஆரம்பித்து எழுதலாம் தானே.  இன்றைய அரசியலை சேர்க்காமல் வேறு சமூக விடயங்கள் தொடர்பாக நகைச்சுவையாக எழுதுங்கள். திரி குழம்பாது. :rolleyes:

Edited by துளசி

Share this post


Link to post
Share on other sites

அது  ஒரு கனாக்காலம்  எண்டுதான் சொல்லலாம். இப்பவெல்லாம்  இப்படி  பலர் இணைந்து  நகைச்சுவையோடை  ஒரு  சமூக  பிரச்னை கருத்தை எழுத  முடியுமா என்பது சந்தேகம்  அப்படி எழுதினாலும்.அதற்குள் ஒருவர் புகுந்து    அதனை திசை  திருப்பி வெட்டு குத்தாகி  திரியை பூட்டிவிட்ட பிறகு  ஒற்றுமை இல்லை   சிலர்  குழுசேர்கிறார்கள்  என்று பிரித்தவர்களே  ஒற்றுமை பற்றி எழுதிக்கொண்டிருப்பார்கள்.  முகத்தார்  சின்னா  இப்பவும் யாழ் படிக்கிறார்கள்  என்பது தெரியும் ஆனால் எழுதுவது இல்லை.அதே நேரம் நானும்  யாழை விட்டு  அன்னியமாகிக் கொண்டிருக்கிறேன் 

 

அது ஒரு கனகாலம் மட்டுமில்லை  முந்தி என்க்கு யாழில காலுக்கை ஒன்று கைக்கை ஒன்று என்று பிகர் எல்லாம் இருந்திச்சு இப்பா  பட்ப்பிடிப்பே இல்லாத  வடிவேலு போல் காஞ்சுபோய் இருக்கேன்,.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கை அதிபர் தேதலில் வெற்றிபெற்ற கோத்தபாய அவர்களுக்கும் வடகிழக்கில் வெற்றிபெற்ற சம்பந்தர் ஐயாவுக்கும் என் வாழ்த்துக்கள் - . இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றிருக்கிறார். முன்னைபோலில்லாமல் சிறுபாண்மை இனங்கள் தொடர்பான - குறிப்பாக முஸ்லிம்கள் மீதான - எதிர்நிலையை கைவிட்டு- சிறுபாண்மை இனங்களின்/ தலைவர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஆட்ச்சி புரியவேண்டுமென்கிற வேண்டுகோளுடன் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. .   தமிழர் மத்தியில் பெரும் எற்றியை பெற்றுள்ள சம்பந்தன் ஐயாவுக்கும் எனது பாராட்டுகள். உடனடியாகவே அவசர பிரச்சினையான கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தகவல் மற்றும் நில மீட்ப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் வண்ணம் கோருகிறேன். தோழர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் அணியும் கிழக்கில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். முஸ்லிம் தலைவர்களுக்கும் சிங்கள ஜனநாயக சக்திகளுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்பதையும் வலியுறுத்தி சம்பந்தன் ஐயாவையும் வாழ்த்துகிறேன். சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் மலையக தமிழர் தலைவர்களும் கூடிபேசி ஒன்றாகவே கோத்தபாயாவை சந்தித்து பேசவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நல்வாழ்த்துக்கள் சம்பந்தன் ஐயா.
  • அப்போதும் சொன்னம் இப்பவும் சொன்னம் கூத்தமைப்பை நம்பி பின்னால் போகிறவர்களுக்கு ஆப்பு என்று அறப்படிச்ச செம்புகள் தான் பரத நாட்டியம் ஆடுனவை என்ன ஒன்று இவ்வளவு நாளும் இல்லாத போர்குற்றம் தடை என்று மேற்குலகு மறுபடியும் ஆனா வில் இருந்து தொடங்குவது போல் சலசலப்பு காட்டுவினம் தங்களுக்கு வேண்டிய அலுவல் முடிந்தவுடன் தமிழர்களை கையை விட்டு விடுவினம் . கொத்தாவும் லேசு பட்ட ஆள் அல்ல முதலைக்கு யார் சுறாவுக்கு யார் என்று தெரிந்து போட தெரிந்த  அரசியல் கதைக்க தெரியாத அரசியல் வியாபாரி அதுக்காக கைகளை வெள்ளையாய் காட்டிய பின் மறுபடியும் வெள்ளைவான் உள்ளே கொண்டு வருவது நிறைய  கஷ்ட்டம் உள்ளது அவருக்கு ஆனாலும்  யுத்த இறுதி நேரம்களில் ராணுவத்துக்கு மத்தியில் இருந்து தமிழ் பெண்கள் ராணுவத்துக்கு தமிழ் ஆண்களின் இரத்தம் இந்து சமுத்திர கடலுக்கு என்று ஓலமிட்டவர் மறக்க முடியாது .
  • இலங்கை நேரம் நண்பகல் 12:00 இன் போது: கோட்டாபய              4,813,108 (51.74%) சஜித் பிரேமதாச     3,953,630 (42.50%) அனுரகுமார                286,775 (3.08%) சிவாஜிலிங்கம்              11,066 (0.12%) ஏனையவை                  238,687 (2.57%)  
  • தொகுத்து வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.  குறிப்பாக லாரா, ஈழப்பிரியன், நுணா, நிழலி, கிருபன் உட்பட அவைவருக்கும்.  கருத்துக்களை இணைத்த ஏராளன், கோசான், ஜுட் உட்பட்டவர்களுக்கு நன்றிகள்.  பெயர் விடுபட்டிருந்தால், மன்னிக்கவும்.        குறிப்பு : லாரா, கோசான் போன்றவர்கள் முடிந்தால் இன்னொரு திரியை திறந்து ஒரு  "போஸ்ட் மோட்டம்"  செய்யவும். 
  • சின்னம் கட்சியின் பெயர் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் கோத்தாபய ராஜபக்ச ( SLPP ) 4679619 (51.51%) சஜித் பிரேமதாச ( NDF ) 3880556 (42.71%) அனுர குமார திசாநாயக்க ( NMPP ) 280154 (3.08%) M. K. சிவாஜிலிங்கம் ( IND10 ) 11024 (0.12%)   ஏனையவை 234361 (2.58%)