Jump to content

முகத்தார் வீடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்... :P :P :P

Link to post
Share on other sites
 • Replies 428
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்... :P :P :P

பாவம் அனித்த முகத்தார்.. எப்படி தொடர்ந்து எழுதுவார் ஆ?? வீட்டில பொன்ஸ் பாட்டின்ர உடுப்பு தோய்கிறது யாரு? பொன்ஸ் பாட்டிக்கு வக்கினையா சமைச்சுபோடுறது யாரு? பொன்ஸ் பாட்டிக்க்கு யாரு கால் பிடிச்சுவிடுறது?? இதுக்கெண்டு தூயா பையனையா வேலைக்கு அமர்த்தமுடியும்?? ஆ??? :evil: :twisted: :evil:

Link to post
Share on other sites

சூப்பர்ரா இருக்கு முகத்தார் அங்கிள...

ம்ம்ம்;ம அப்பிடி அந்த நாய்ட்ட என்ன சொல்லி இருப்பிங்க?

பொன்னம்மாக்கா வாரா என்டா? :):lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாவம் அனித்த முகத்தார்.. எப்படி தொடர்ந்து எழுதுவார் ஆ?? வீட்டில பொன்ஸ் பாட்டின்ர உடுப்பு தோய்கிறது யாரு? பொன்ஸ் பாட்டிக்கு வக்கினையா சமைச்சுபோடுறது யாரு? பொன்ஸ் பாட்டிக்க்கு யாரு கால் பிடிச்சுவிடுறது?? இதுக்கெண்டு தூயா பையனையா வேலைக்கு அமர்த்தமுடியும்?? ஆ??? :evil: :twisted: :evil:

புலநாய் உயிரோட திரிய வேணுமா வேண்டாமா? :twisted: :twisted: :twisted:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்

செமப் பகிடி சூப்பர் முகத்தார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாவம் அனித்த முகத்தார்.. எப்படி தொடர்ந்து எழுதுவார் ஆ?? வீட்டில பொன்ஸ் பாட்டின்ர உடுப்பு தோய்கிறது யாரு? பொன்ஸ் பாட்டிக்கு வக்கினையா சமைச்சுபோடுறது யாரு? பொன்ஸ் பாட்டிக்க்கு யாரு கால் பிடிச்சுவிடுறது?? இதுக்கெண்டு தூயா பையனையா வேலைக்கு அமர்த்தமுடியும்?? ஆ??? :evil: :twisted: :evil:

ஆகா..இவ்வளவு வேலைகள் இருக்கா..உண்மையாலும் பாவம் தான் முகத்தார் அங்கிள்.. :) :wink: :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் நிறைய இருக்கிறீர்கள் என பார்க்கும் போது சந்தோஷமாக் கிடக்கு எந்த நேரமும் களத்தில் இறுகிய முகங்களுடன் கருத்தெழுதுவதில் என்ன இருக்கு மனம் இலேசாக இளைப்பாற இந்த முகத்தார் வீடு உதவி செய்யும் இந்த முகத்தார் வீடு எனக்கு மட்டும் சொந்தமானதல்ல உங்களுடையதும்தான் (பொண்ணமக்கா நீங்கலாக) ஆனபடியால் நீங்களும் இதில் எழுதலாம் (முகத்தார் பகிடி போல) அல்லது உங்களின் ஜடியாக்களை எனக்குத் தெரியப்படுத்தலாம் சனத்தைச் சிரிக்க வைப்பதென்பது சும்மா லேசுப்பட்ட விசயமில்லை அதுவும் இந்த கத்திகளிட்டையும் தப்பிக்கவேண்டுமே உங்களின் ஆர்வத்துக்கு நன்றிகள்

Link to post
Share on other sites

பிறகென்ன முகத்தான் கலக்கு நேரம் கிடைக்கேக்கை நானும் வாறன் :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முகம்ஸ் சிரிச்சு சிரிச்சு வீட்டில அம்மா கேட்கிறா என்ன என்று..அம்மாக்கும் காட்டினேன்..நன்றி..மேலும் எழுதுங்கள்:)

Link to post
Share on other sites

அப்போ அம்மாவும் சிரிக்க உடன அப்பா கேட்டு இருப்பாரே என்னன்னு?

Link to post
Share on other sites

அப்போ அம்மாவும் சிரிக்க உடன அப்பா கேட்டு இருப்பாரே என்னன்னு?

சீ அப்பா கேக்க இல்லை சுண்டல் கேட்டவர் :evil: :evil: :evil:

Link to post
Share on other sites

புலநாய் உயிரோட திரிய வேணுமா வேண்டாமா? :twisted: :twisted: :twisted:

ரசி அக்காவின் பூனை டன் அண்ணாவின் புலநாய்க்கு தான் காவல் காக்குதாம் :)

Link to post
Share on other sites

காவல் காக்கிற மாரித் தெரியேல்லையே வெண்ணிலா :?

(அந்தப் பூனை எங்கடா ஆள் வரும் சுடலாம் எண்டு நிக்கிது)

Link to post
Share on other sites

முகத்தார் வீடு அங்கம் 4

இது சாத்திரியார் வீட்டில்

சாத்திரி இருமியபடி வீட்டில் நுழைகிறார்

முனியம்மா: என்னப்பா இருமிறியள் குளிர் தொடங்கீட்டுது உடுப்பை நல்லா போட்டுகொண்டு போறேல்லையே சின்னா வந்து கூப்பிட்ட உடைனை அப்பிடியே ஒடுறதே ஜக்கெட்டை போட்டு கொண்டு போயிருக்கலாமே?

சாத்திரி: அடடா என்னது திடீரெண்டு இவ்வளவு அக்கறை ஏதோ கேக்க போறாய் போலை கிடக்கு என்ன

முனியம்மா: இஞ்சை வாங்கோப்பா இதிலை கொஞ்ச நேரம் இருங்கோ ஒரு அலுவல் கதைக்க வேணும்

சாத்திரி: அட அதுதானே பாத்தனான் என்னடா தீரெண்டு அன்பு எண்டு விசயத்தை சொல்லு

முனியம்மா: இல்லையப்பா பேன கிழைமை அந்த அறுபதாம் கலியபணத்துக்கு போட்டு வந்ததிலை இருந்து எனக்கும் ஒரு ஆசை நானும் அறுபதாம் கலியாணம் செய்யலாமெண்டு நினைச்சிருக்கிறன்

சாத்திரி: நான் ஒருத்தன் இருக்கிறன் இந்த வயசிலை இனி இன்னும் 59 பேரை எங்கை தேடிபிடிச்சு செய்ய போறாய்

முனியம்மா: உங்களுக்கும் முகத்தானோடை சேந்து எப்பவும் நக்கலும் நளினமும் பழகிட்டுது ;இதுக்குதான் உங்களை கேக்காமலேயே நான் காட் அடிக்க குடுத்துட்டன்

சாத்திரி: அடியே அறுபாதாம் கலியாணமெண்டுறதடி பிள்ளைளளையெல்லாம் நல்லபடியா கட்டி குடுத்து அதுகளும் பிள்ளை குட்டியளோடை சந்தோசமா இருக்கேக்கை எங்கடை கலியாணத்தை ஊரே பாத்திருக்கும் பிள்ளையளை தவிர அதாலை பிள்ளை எங்கடை கலியாணத்தை பாக்கவேணுமெண்டு ஒரு சந்தோசத்துக்கு பிள்ளையளா எங்களுக்கு செய்து பாக்கிறது தானடி அறுபதாம் கலியாணம் நாங்களா திருப்பி செய்யிறதில்லை இப்ப இதுவும் அய்ரோப்பாவிலை ஒரு ஸ்ரைலா போச்சுது

முனியம்மா: இஞ்சையப்பா இப்ப வயசானவை எல்லாரும்தான் செய்யினம் எங்களுக்கு 5 பெட்டையள்ளை 3 கட்டி குடுத்தாச்சு மற்றது இரண்டும் அதுகளா ஏதும் பாத்து செய்தாதான் நீங்கள் ஒண்டும் செய்யிற மாதிரி தெரியேல்லை நீங்களும் கண்டதையும் குடிச்சு வருத்தங்கள் வந்திட்டிது இருமிறியள் அதாலை தான் அவசரமா அறுபதாம் கலியாணத்தை செய்வம் எண்டு யோசிச்சனான்

சாத்திரி: ஆகா என்ன தாராள மனசு உனக்கு நான் மண்டையை போடுறதுக்கு முதல் உனக்கு 60ம் கலியாணம் செய்யவேணும்.நானே ஊரை சனத்தை பேக்காட்டி சாத்திரம் குறிப்பு எண்டு பாக்கிறன். அதுக்கை யாரும் நல்ல இழிச்சவாய் பெடியளா அம்பிடாதா எண்டு படாத பாடு படுறன் உனக்கெங்கை விழங்க போகுது

முனியம்மா: உங்கடை விளக்கத்தை விடுங்கோ அந்த நேரம் ஊரிலை நீங்கள் பஞ்சத்திலை நூல் மாதிரி 7 பவுணிலை தாலியை கட்டி போட்டியள் இப்பதான் இஞ்சை அகதி காசு பிள்ளை காசு எண்டு வசதியா வந்திட்டம் கையோடை தாலியையும் மாத்தி ஒரு 60. 70 பவுணிலை கட்டவேணும்

சாத்திரி: அடியே கழட்டி கழட்டி கட்ட அது சீலை இல்லையடி தாலி. அவித்து மாத்தி கட்டினா அதுக்கு பேர் வேறையடி

முனியம்மா: சும்மாயிருங்கோ இப்ப யுரோப்பிலை இது நோமல் எல்லாரும்தான் அடிக்கடி மாத்தி பவுணை கூட்டி கட்டினம்

சாத்திரி: ஏனடி அண்டைக்கு எங்கடை இடத்திலை 45 வயசுகாரி 25 வயசுகார பெடியோடை ஓடிட்டாள் இதுவும்தான் இஞ்சை யுரோப்பிலை நோமல் நீயும் ஓடன்

முனியம்மா: உங்களை கட்டி நான் என்ன சுகத்தை கண்டன் அந்த நேரம் வாத்தியார் எண்டு பொய் சொல்லி உங்கடை வீட்டுகாரர் என்னை கட்டி வைச்சிட்டினம் ம்ம்ம்ம்ம்...........

சாத்திரி: எடியே பழசைகிளறாதை அந்த நேரம் உன்ரை கொப்பரும்தான் தனக்கு சுதுமலை அம்மன் கோயிலை சுத்தி வயல்காணி இருக்கு எல்லாம் உனக்குதான் எண்டு பொய் சொன்னவர் நானும் ஒரு மரியாதைக்காக காட்ட சொல்லி கேக்ககேல்லை பிறகு தானே தெரியும் அது உங்கடை காணி இல்லை அது அம்மன் கோயில் வீதியெண்டு. நல்ல வேளை நான் நெல்லு விதைக்க வெளிக்கிடேல்லை.

முனியம்மா : இப்ப முடிவா என்ன சொல்லுறியள் 60ம் கலியாணம் செய்யிறதா இல்லையா

சாத்திரி: எடியே ஊர் உலகத்தக்:கு காட்ட நாங்கள் 60ம் கலியாணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை ஒரு காலம் பிள்ளையள் விரும்பினா செய்து வைக்கட்டும் அப்ப பாப்பம் உன்னோடை இருந்தா சண்டைதான் வரும் நான் முகத்தான் வீட்டு பக்கம் போட்டு வாறன்

சாத்திரி முகத்தான் வீட்டு அழைப்பு மணியை அமத்துகிறார். பொண்ணம்மாக்கா கதவை திறக்கிறார்

பொண்ணம்மாக்கா: வாங்கோ சாத்திரி உங்களை நினைக்க நீங்கள் வாறியள் உள்ளையிருங்கோ அவர் குளிக்கிறார் உங்களிட்டை ஒரு விசயம் கேக்க வேணும் நாங்கள் 60ம் கலியாணம் செய்யலாமெண்டு இருக்கிறன் அவரிட்டை இன்னும் கேக்கேல்லை ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்கோ

அய்யோ எண்டு அலறியபடி சாத்திரி வீதியில் இறங்கி ஓடுகிறார்

யாவும் கற்பனையே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாஸ்தட நிலமையை பார்த்தால் ;) ;)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

frau02713wd9uo7cl.gif

:P :):lol::lol: :P :P

supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr..................... :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் வீடு அங்கம் 4

முனியம்மா:

mensch2914qx7qd.gif

:P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி யாராவது தொடக்கிவிட்டாத்தான் வரும் போல கிடக்கு நல்லா இருக்கு அது சரி ஏன் விழுந்தடிச்சு ஓடுறாய் பேசாம தாலி எடுத்துக் குடுத்து ஹாயா போகவேண்டியதுதானே.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு சாத்திரியார், தொடர வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

60 வயசிலதான் 60ம் கல்யாணம் வைப்பினம்..

அப்ப சாத்திரி ஐயாககும் முகம் தாத்தாக்கும்

வயது 60 ஆஆ? :shock: :P :):lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :):lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
:):lol::lol:
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.