Jump to content

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இராஜினாமாச் செய்ய முடிபு! - ஆதரவாளர்கள் அதிருப்தி; முடிபை மாற்றுமாறு வலியுறுத்து

Recommended Posts

"துரோகி" என்றொரு குறும்படம் பார்த்தேன்.அந்த வருடம் சிறந்த படத்திற்கான பரிசையும் அது தட்டிசென்றது.பழிக்குபழி வாங்கப் போகும் நண்பர்களை போலிசில் காட்டிக் கொடுப்பதே கதை.

அரசாங்கதிடம் செல்லாவிட்டால் கொலைசெய்யப்படுவம் என்ற நிலையில் தான் அனைத்து"துரோகிகளும்"அரசாங்கத்துடன். ஒட்டினார்கள்.இந்த ஒட்டுக்குழுக்களுக்கு 3 தெரிவுதான் இருந்தது.

1.போராட்டத்தில் இருந்து வெளியேறல்.

2.புலிகளுடன் சேருதல்

3.அரசாங்கத்துடன் சேர்ந்து தமது இருக்கையை தக்க வைத்தல். இதில் எதாவது ஒரு முடிவெடுக்காமல்விட்டு தொடர்ந்து போராடினால். புலிகளால் கொல்லப்படுவது நிட்சயம் எனவேதான்

மூன்றாவது தெரிவைத்தான் அனைவரும் எடுத்தார்கள்.ஆகவே தான் துரோகிகளானதும்,ஒட்டுக்குழுக்களானதும். இங்கு பலரது கருத்து என்னவென்றால் இவர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் சேராமல் இருந்து புலிகளால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது.

கருணாவை கூட பின் விளவுகளை யோசித்து இயக்கதில் இருந்து வெளியேற்றிவிட்டோம் என்றொரு அறிவிப்பைகொடுத்திருக்கலாம்.கொல்லபோகின்றோம் வா என்றால் யாரையா போவான்.

எங்க மதிவதனங்கு பிறகு ஒருதரையும் காணேல என்டு பார்தன்...

கருணாவை கூப்பிட்டு வைச்சு கொல்லப்போறம் என்டு பொட்டர் உம்மட்ட சொன்னவரா?

புலிகளுக்கு எதிரா இருப்பதுக்கும் தமிழருக்கு எதிரா இருப்பதுக்கும் இருக்கிற வித்தியாசம் கூடவா உமக்கு விளங்காது???....சரி இப்ப புலிகள் இல்லை உம்மட ஆக்கள் இப்பவாவது தமிழருக்கு சார்பா ஏதாவது செய்யலாமே??

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேவலமான ஜென்மங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கவும் இங்கு பல கூட்டங்கள் இருக்குது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேவலமான ஜென்மங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கவும் இங்கு பல கூட்டங்கள் இருக்குது!!

ஓமனை ஓமனை..நீங்கள் வக்காலத்து வாங்கிறவை திறமான ஆக்கள் ...அதால நீங்கள் மற்றாக்களை கேவலமான ஆக்கள் என்று சொல்லுகிறீர்கள்...

அந்த 44000 எத்தின சதவீதம்? ஏன் போட்டவை என்று பாருங்கோ ...

அதவிட்டிடு அதை சொன்னாக்களை விமர்சிக்காமல்...

Link to comment
Share on other sites

பல தமிழரை படுகொலை செய்துவிட்டு, வவுனியா, யாழ், கொழும்பில் மிரட்டி, கடத்தி கப்பம் வாங்கிவிட்டு, 2500 க்கு யாழ் பேரூந்து ஓடிவிட்டு,....உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை ......திரும்பவும் சொல்லுகிறேன் ஒராளை சொல்லுங்கோ...

Valcano - இதிலே எது நடக்கவில்லை என்கிறீர்கள். கொழும்பில் ... மகேஸ்வரன், ரவிராஜ் .... படுகொலை செய்யப்பட்டவர்களை பட்டியல் போட்டால் பல ஆயிரங்களை தாண்டும். பொய் சொல்வதில் டக்லஸ்க்கு நிகர் வேறு யாரும் இல்லை. நீங்களும் அவரது பொய்யில் மயங்கிவிட்டீர்கள் போல். 2008 இலிருந்து யாழ்ப்பாணத்தில் மட்டும் 12,000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். இதில் அரைவாசி டக்லஸ் செய்ததாகத்தான் கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணத்தில் சந்தித்த, வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த, அனைவரும் கூறினார். எனவே இது என்னுடைய கருத்தில்லை - யாழ் மக்களது கருத்து.

ஆசான் ..

நான் சொல்லவில்லை அந்த கொலைகளுக்கு கரணம் டக்லஸ் இல்லை என...ஆனால் மற்றவர்களையும் பாருங்கள்...நான் வரவில்லை ஒப்பீடு செய்ய ..அவர் 10 இவர் 15 என...இல்லாட்டி இவர் 10000 அவர் 15000 என்று...

நீங்கள் சொல்லுவது டக்ளசை அவர்களின் ஆட்களை கொல்லுவது நியாயம்..மற்றயவர்களை கொல்லுவதுதான் அநியாயம் என்று...எனக்கு எல்லா நிகழ்வுகளும் ஞாபகம் இல்லை..அப்படி இருந்தும் சில..சுபத்திரன், மற்றது 2 யாழ் மேயர் , எத்தனையோ plote --அவங்கள் பிரேதப்பெட்டி தூங்கிக்கொண்டு கொழும்பில் ஊர்வலம் வைத்தவர்கள் இந்த பீஸ் டாக் க்கு பிறகு...எங்களுக்கு பல செய்திகள்/ பெயர்கள் தெரியாமல் போனதே அது ஒரு செய்தியாக/ கொலையாக நாங்கள் கருதுவதில்லை

எத்தனை கருணாவின் , பிள்ளையானின் ஆட்கள்...இங்கே நியூஸ் போகும்...ராணுவம் மடு பிடித்தது, மல்லாவி பிடித்ததென..அதோடு சேர்ந்த செய்தி மட்டக்களப்பில் 2 துணைப்படை வீரர் பலி, 5 ஒட்டுக்குழு வீரர் பலி ..இப்படி தான் பல காலம் செய்தி இருந்தது...

திரும்பவும் சொல்லுகிறேன் டக்லஸ் கையில் உள்ள கறைகளை ஞாயப்படுத்த வரவில்லை...அதற்காக தண்டிக்கக் கூடாது என்றும் சொல்லவில்லை..ஆனால் அதேயளவே கறை எங்களிடமும் உண்டு...

பொய் சொல்லுவது யார்தான் சொல்லவில்லை...நடேசனும் ஏனையோரும் சொல்லவில்லையா ..மக்கள் எல்லோரும் விரும்பித்தான் எங்களுடன் இருக்கிறார்கள் என, மக்கள் எல்லாரும் விரும்பிதான் போராட இணைந்தது என்று..

அரசியலை சொன்னீர்கள் ..மக்களை பெய்காட்டினது பற்றி...யார்தான் இல்லை? தமிழீம் என்று போராடவெளிக்கிட்டு ...எல்லாத்தையும் விடுவம் ..ஒஸ்லோவில நடந்தது என்ன..அப்ப அது பொய் இல்லையா...

முதலில் போட்டிருந்தேன் அப்படியெனில் அந்த 44000 ஆட்களும் யார் ? இன்னுமொன்று இங்கு சிலர் யாழில் மக்கள் தேர்தலை புறக்கணித்து விட்டார்கள் என்று சொல்லுகிறார்கள் ..அவர்களிடம் கேட்கிறேன் அப்படியாயின் வோட் பண்ணின கிட்டத்தட்ட 150000 மக்களும் யார்??

இந்தியாவில நடக்கிற/ நடந்த தேர்தலுக்கு இங்கேயிருந்து வாழ்த்துகளும் கருத்துகளும் சொன்னவர்கள்..தாயக தேர்தலுக்கு கப்சிப்..இங்கே நாங்கள்தான் யாழில் வாதம்/ பிரதிவாதம் மற்றவர்கள் எல்லோரும் ஒளிந்து விட்டார்கள்....BBC இந்த கேள்வியை கேக்கேக்க அட எங்கட நிலைமை இப்படியாய் இருக்கென்று கவலை..அதைதான் நான் இங்கே சொல்லுவதும் எழுதுவதும்...

முடிவாக..யாழ் களம் ஒரு பிரச்சார மேடையாக இருக்கத்தேவையில்லை...எப்பவும் எங்கட./எங்களை பற்றி புளுகிக்கொண்டு இருக்க...உண்மையை கதைப்போம்..பிழைகளை திருத்துவோம்...சாத்திரி தன்னுடைய குறிப்பு ஒன்றில்எழுதினமாதிரி ..எங்களுகேற்றமாதிரி இங்கே 20 % வாக்கு போட்டால் பூரண வெற்றி..ஆனால் அதே 20 % அங்கே போட்டால் தேர்தல் புறக்கணிப்பு...எங்களுக்கு சந்தோசம் தர எப்படியும் எழுதலாம்...ஆனால் உண்மை எப்போதும் சந்தோசமானது அல்ல...

மற்றது இது ஒரு பிரச்சார மேடை எனில் நான் வரவில்லை...சும்மா எழுதிகிறது என்பதற்காக என்னால் எழுத முடியாது...அதற்காக மற்றவர்கள் அப்படிதான் என்று சொல்லவரவில்லை...நன்றி வணக்கம் ...

Link to comment
Share on other sites

3 தெரிவுதான் இருந்தது.

1.போராட்டத்தில் இருந்து வெளியேறல்.

2.புலிகளுடன் சேருதல்

3.அரசாங்கத்துடன் சேர்ந்து தமது இருக்கையை தக்க வைத்தல். இதில் எதாவது ஒரு முடிவெடுக்காமல்விட்டு தொடர்ந்து போராடினால். புலிகளால் கொல்லப்படுவது நிட்சயம் எனவேதான்

மூன்றாவது தெரிவைத்தான் அனைவரும் எடுத்தார்கள்.ஆகவே தான் துரோகிகளானதும்,ஒட்டுக்குழுக்களானதும். இங்கு பலரது கருத்து என்னவென்றால் இவர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் சேராமல் இருந்து புலிகளால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது.

கருணாவை கூட பின் விளவுகளை யோசித்து இயக்கதில் இருந்து வெளியேற்றிவிட்டோம் என்றொரு அறிவிப்பைகொடுத்திருக்கலாம்.கொல்லபோகின்றோம் வா என்றால் யாரையா போவான்.

அர்ஜுன் - நீங்கள் வலுக்கட்டாயமாக 3 தெரிவுகளை வைத்தது விதண்டாவாதம்.

ஆரம்பத்தில் பல இயக்கங்கள், பல குணங்களைக் கொண்ட தலைவர்கள் - பிறகு இயக்க போட்டிகள் - பிறகு ஒருவர் செய்வதை இன்னொருவர் குழப்பும் முயற்சி - முரண்பாடு வளர்ச்சி - பிறகு சகோதர கொலைகள் (இதை ஆரம்பித்தது புலிகள் அல்ல) - இவ்வாறு போராட்டம் சிதைவடைய - கட்டுக்கோப்பான இயக்கமாக புலிகள் உருவானார்கள் - புலிகளை பெரும்பாலான மக்கள் அங்கீகரிக்க ஏனைய இயக்கங்கள் பல வெளிநாட்டு / சிங்கள சக்திகளின் கைப்பொம்மைகளாக மாறினார்.

இக்காலத்தில் தமிழர் விமோசனத்துக்கு அனைவரும் ஓரணியில் கட்டுக்கோப்புடன் இணைய வேண்டிய தேவை இருந்தது. இந்த பின்னணியில் தமிழ் மக்களுக்கு / இயக்கங்களுக்கு பல தெரிவுகள் இருந்தது :

(1) எந்தவொரு ஆர்வமில்லாது சாதாரண தமிழ் குடிமகனாக இருத்தல்

(2) தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் ஆனால் அதற்கான முயற்சியில் உதவி செய்ய ஆர்வமில்லாது சாதாரண தமிழ் குடிமகனாக இருத்தல்

(3) தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் - அதற்கான முயற்சியில் உதவி செய்யும் தமிழ் குடிமகனாக இருத்தல்

(4) தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் - அதற்காக களத்தில் உறுதியான தலைமையின் கீழ் முழுமையாக இறங்குதல், ஒன்றிணைத்தல்

(5) தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் - தலைமைத்துவ தகைமை இல்லாதபோதும் தலைவனாக இருந்துவிடவேண்டும் என்ற முதன்மையான நோக்கம் கொண்டு ஒற்றுமையை சிதைத்து முன்னின்று போராடுபவர்களுக்கு உபத்திரம் கொடுத்தல்

(6) தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் என்று சொல்லியபடி - களத்தில் துணிந்து போராட விருப்பமில்லாதவர்களை அணி திரட்டி ஈழத்தமிழ் தலைமையை ஏற்க விருப்பமின்றி சந்தர்ப்பவாத தமிழ் விரோத சக்திகளுடன் இணைந்து, தமிழனை படுகொலை செய்து - சுக போகங்களை அனுபவித்தல்

(7) தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் என்று சொல்லியபடி - களத்தில் துணிந்து போராட விருப்பமில்லாதவர்களை அணி திரட்டி சிங்கள அரசுடன் இணைந்து, அவ்வப்போது தமிழனைப் படுகொலை செய்து - சுக போகங்களை அனுபவித்தல்

(8) வெளி நாடுகளுக்கு சென்று எந்தவொரு ஆர்வமில்லாது சாதாரண தமிழ் குடிமகனாக இருத்தல்

(9) வெளி நாடுகளுக்கு சென்று தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் ஆனால் அதற்கான முயற்சியில் உதவி செய்ய ஆர்வமில்லாது சாதாரண தமிழ் குடிமகனாக இருத்தல்

(10) வெளி நாடுகளுக்கு சென்று தமிழன் உரிமையை வென்றெடுக்க விருப்பம் - அதற்கான முயற்சியில் உதவி செய்யும் தமிழ் குடிமகனாக இருத்தல்

(11) வெளி நாடுகளுக்கு சென்று - சந்தர்ப்பவாத தமிழ் விரோத சக்திகளுடன் இணைந்து, தமிழ் போராட்டத்தை கொச்சை செய்து - சுக போகங்களை அனுபவித்தல்

இத்தனை தெரிவுகள் இருக்கும் போது, நீங்கள் பட்டியலிட்டவர்கள் தெரிவுகள் (5), (6), (7), (11) இல் ஒன்றை தெரிந்தது ஏன்? நீங்கள் சொல்ல மாட்டீர்கள்.

பெரும்பாலும் அவர்களது ஒழுக்கக்கேடுகளும், சுக போக ஆசைகளும், சந்தர்பவாத புத்தியும், தலைமைத்துவ தகமை இல்லாமையுமே அதற்குக் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமனை ஓமனை..நீங்கள் வக்காலத்து வாங்கிறவை திறமான ஆக்கள் ...அதால நீங்கள் மற்றாக்களை கேவலமான ஆக்கள் என்று சொல்லுகிறீர்கள்...

அந்த 44000 எத்தின சதவீதம்? ஏன் போட்டவை என்று பாருங்கோ ...

அதவிட்டிடு அதை சொன்னாக்களை விமர்சிக்காமல்...

44000 வோட்டும் உண்மையான மனதோட மக்கள் போய் போட்ட வோட்டெண்டு நீங்க போய் பாத்த மாதிரி ஏன் பில்டப் குடுக்கிறியள். அவ்வளவுக்கு டக்கியில பாசம் பொங்குதோ? கள்ள வோட்டு போடையில்லை எண்டு எதை வைச்சு சொல்லிறியள்?

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் எண்டு சொல்லுவாங்கள். அத மாதிரி புலி காய்ச்சல் பிடிச்ச உங்களுக்கெல்லாம் புலி விரோதி எல்லோரும் உத்தமர்கள். அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்க முன்னணி உறுப்பினர்களை (அற்புதன், ...... மகேஸ்வரி....,) திட்டமிட்டு கொலை செய்துவிட்டு (இவைகளை செய்தது டக்லஸ் என்றே வைத்துகொள்வோம்) .....ஒராளை சொல்லுங்கோ இப்படி செய்யாத ஆளை...தந்தை செல்வாவையும்..மற்றக்களையும் சொல்லவேண்டாம்...

பல தமிழரை படுகொலை செய்துவிட்டு, வவுனியா, யாழ், கொழும்பில் மிரட்டி, கடத்தி கப்பம் வாங்கிவிட்டு, 2500 க்கு யாழ் பேரூந்து ஓடிவிட்டு,....உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை ......திரும்பவும் சொல்லுகிறேன் ஒராளை சொல்லுங்கோ...

வொல்கானோ...நீங்கள் எப்ப புலம்பெயர்ந்தனிங்களோ தெரியாது ஆனால் நான் 2008 மார்ச் தான் வெளிநாட்டுக்கு வந்தனான் அதனாலை யாழ்நிலவரம் கொஞ்சம் எங்களுக்கும் தெரியும்..டக்கிளஸும் ஈபிடிபியும் செய்த கொலைகள் கொஞ்சநஞ்சமல்ல நான் புலம்பெயர்ந்து வரவும் ஈபிடிபி தான் காரணம் மருத்துவ மாணவன் என்று எனது அடையாள அட்டையை காண்பித்த பின்பும் வல்லை சந்தியில் வைத்து அடிவாங்கியதோடு(நான் தினமும்750ம் இலக்க பஸ் இல் தான் சென்று வாறனான்) நான் வேலை செய்த தனியார் வைத்தியசாலை வைத்தியரையும் மிரட்டினவர்கள். அத்தோடு எனது ஒன்றுவிட்ட அக்கா இயக்கத்தில் இருந்ததாலேயே அவளின் அண்ணனை(எனது ஒன்றுவிட்ட அண்ணா)யும் நடுரோட்டில் வைத்து சுட்டவர்கள்...இப்படி பலர்.....

இன்னும் எனது அம்மா,அப்பா,தங்கச்சி ஊரிலை இருப்பதால் தான் என்னை அடையாளப்படுத்தி கூறவில்லை..இல்லையேல் என் போட்டோ உட்பட்ட சகல விடயங்களையும் யாழில் போட்டிருப்பேன்.

Link to comment
Share on other sites

:lol:

... இன்று புலத்தில் நாங்கள் செய்யும் அரசியல்கள் ............. இவன் போன்றவர்களை வளர்க்கின்றன ..... வேறொன்றுமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொல்கானோ...நீங்கள் எப்ப புலம்பெயர்ந்தனிங்களோ தெரியாது ஆனால் நான் 2008 மார்ச் தான் வெளிநாட்டுக்கு வந்தனான் அதனாலை யாழ்நிலவரம் கொஞ்சம் எங்களுக்கும் தெரியும்..டக்கிளஸும் ஈபிடிபியும் செய்த கொலைகள் கொஞ்சநஞ்சமல்ல நான் புலம்பெயர்ந்து வரவும் ஈபிடிபி தான் காரணம் மருத்துவ மாணவன் என்று எனது அடையாள அட்டையை காண்பித்த பின்பும் வல்லை சந்தியில் வைத்து அடிவாங்கியதோடு(நான் தினமும்750ம் இலக்க பஸ் இல் தான் சென்று வாறனான்) நான் வேலை செய்த தனியார் வைத்தியசாலை வைத்தியரையும் மிரட்டினவர்கள். அத்தோடு எனது ஒன்றுவிட்ட அக்கா இயக்கத்தில் இருந்ததாலேயே அவளின் அண்ணனை(எனது ஒன்றுவிட்ட அண்ணா)யும் நடுரோட்டில் வைத்து சுட்டவர்கள்...இப்படி பலர்.....

இன்னும் எனது அம்மா,அப்பா,தங்கச்சி ஊரிலை இருப்பதால் தான் என்னை அடையாளப்படுத்தி கூறவில்லை..இல்லையேல் என் போட்டோ உட்பட்ட சகல விடயங்களையும் யாழில் போட்டிருப்பேன்.

ஜீவா.. இவர்கள் இதற்கும் பதில் வைத்திருப்பார்கள்.. அதாவது புலியும் இப்படிச் செய்தது தானே என்று! என்னைப் பொறுத்தவரை எவர் எவர் தனிப்பட்ட வாழ்வில் நீதி நியாயம் ஒழுக்கம் தவறி நடந்தார்களோ அவர்கள் எல்லோரும் புலிக்காய்ச்சல் கொண்டவர்கள். அவர்களுக்கெல்லாம் எதையும் எடுத்துரைப்பது பிரயொசனமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொல்கானோ...நீங்கள் எப்ப புலம்பெயர்ந்தனிங்களோ தெரியாது ஆனால் நான் 2008 மார்ச் தான் வெளிநாட்டுக்கு வந்தனான் அதனாலை யாழ்நிலவரம் கொஞ்சம் எங்களுக்கும் தெரியும்..டக்கிளஸும் ஈபிடிபியும் செய்த கொலைகள் கொஞ்சநஞ்சமல்ல நான் புலம்பெயர்ந்து வரவும் ஈபிடிபி தான் காரணம் மருத்துவ மாணவன் என்று எனது அடையாள அட்டையை காண்பித்த பின்பும் வல்லை சந்தியில் வைத்து அடிவாங்கியதோடு(நான் தினமும்750ம் இலக்க பஸ் இல் தான் சென்று வாறனான்) நான் வேலை செய்த தனியார் வைத்தியசாலை வைத்தியரையும் மிரட்டினவர்கள். அத்தோடு எனது ஒன்றுவிட்ட அக்கா இயக்கத்தில் இருந்ததாலேயே அவளின் அண்ணனை(எனது ஒன்றுவிட்ட அண்ணா)யும் நடுரோட்டில் வைத்து சுட்டவர்கள்...இப்படி பலர்.....

இன்னும் எனது அம்மா,அப்பா,தங்கச்சி ஊரிலை இருப்பதால் தான் என்னை அடையாளப்படுத்தி கூறவில்லை..இல்லையேல் என் போட்டோ உட்பட்ட சகல விடயங்களையும் யாழில் போட்டிருப்பேன்.

ஜீவா,

நான் ஒரு இடமும் சொல்லவரவில்லை...டக்லஸ் செய்தது சரியென...(சிலவேளை ஒருசில சொற்கள் மாறி வந்திருக்கலாம் முழுக்கருத்துத்தை படித்தால் விளங்கும்)

Link to comment
Share on other sites

ஆசான் ..

நான் சொல்லவில்லை அந்த கொலைகளுக்கு கரணம் டக்லஸ் இல்லை என...ஆனால் மற்றவர்களையும் பாருங்கள்...

மற்றது இது ஒரு பிரச்சார மேடை எனில் நான் வரவில்லை...சும்மா எழுதிகிறது என்பதற்காக என்னால் எழுத முடியாது...அதற்காக மற்றவர்கள் அப்படிதான் என்று சொல்லவரவில்லை...நன்றி வணக்கம் ...

Valcano - நீங்கள் எழுதியதில் உள்ள நியாயம் எனக்கு நன்றாக புரிகிறது.

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தலைப்பை ஒட்டி, தலைப்புடன் தொடர்புடையவர் பற்றிய எனது கருத்துக்களையே நான் முன்வைத்தேன். நான் இலங்கையில் பலரின் கருத்துக்களை கேட்டு வருபவன், சகல பகுதி மக்களுடனும் பழகி வருபவன் என்ற முறையிலும் எனது தனிப்பட்ட நீண்ட கால அவதானங்களுக்கும் அமைவாகவே எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதனால் எனது கருத்துக்கள் முற்றிலும் சரியென விவாதிக்க மாட்டேன். ஆனால் முடிந்தளவு, எனது மனசாட்சிக்கு உண்மையென, சரியெனபடுவதை முன்வைக்க விரும்புபவன். இறுதியில் நான் குறிப்பிட்டவற்றை நீங்கள் மறுக்கவில்லை.

ஆனால் இங்கு கவலையான விஷயம் என்னவென்றால் அர்ஜுனும் நீங்களும் இன்று களத்தில் இல்லாத புலிகளுடன் ஒப்பிட்டு விவாதத்தை திசை மாற்றிவிட்டீர்கள்.

இனிவரும் தலைவர்கள் எந்தக் கறையும் இல்லாதவர்களாக இருந்தால் - அதுவே தமிழினத்தின் விமோசனத்துக்கு விரைந்து வழிகாட்டும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்கமுடியாது என நம்புகிறேன்.

கறை படிந்தவர்களால் உறுதியாக பேரம் பேச முடியாது. அவர்கள் தமது இருப்புக்கு எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள். அதனால் தமிழினத்தின் எதிரிகள் கறை படிந்தவர்களையே தம் அருகில் வைத்து பேரம் பேச முனைவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வொல்கேனோ என்னும் எரிமலை சற்று முன் புலிக்காய்ச்சலால் கொலை பாலியல் வல்லுறவு கொள்ளை செய்யும் டக்கியையும் மலையென திரண்டு வரும் பகையை எதிர்க்க வேண்டிய சூழலில் சில கடும்போக்கு நடவடிக்கைகளை எடுத்த புலிகளையும் சமப்படுத்தி சில புளி(ச்சல்) மலைகளை கக்கியிருந்தார். அவற்றிற்கு பதிலெழுதலாம் என்று ஆரம்பிக்கையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தானே தூக்கிவிட்டார்.

Link to comment
Share on other sites

இயக்க முன்னணி உறுப்பினர்களை (அற்புதன், ...... மகேஸ்வரி....,) திட்டமிட்டு கொலை செய்துவிட்டு (இவைகளை செய்தது டக்லஸ் என்றே வைத்துகொள்வோம்) .....ஒராளை சொல்லுங்கோ இப்படி செய்யாத ஆளை...தந்தை செல்வாவையும்..மற்றக்களையும் சொல்லவேண்டாம்...

பல தமிழரை படுகொலை செய்துவிட்டு, வவுனியா, யாழ், கொழும்பில் மிரட்டி, கடத்தி கப்பம் வாங்கிவிட்டு, 2500 க்கு யாழ் பேரூந்து ஓடிவிட்டு,....உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை ......திரும்பவும் சொல்லுகிறேன் ஒராளை சொல்லுங்கோ...

உங்கட கேள்விக்கு பதில் புலிகள்...

உப்பிடி பட்ட ஒரு கேள்வியை நானும் வைச்சு கொண்டு கனகாலமாய் தேடித்திரியுறன் பதில் தரக்கூடிய ஆள் வேண்டும் எண்டு... புலிகள் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தி அவர்களின் நலமான வாழ்வுக்கு தேவையானவைகளை செய்து கொண்டு இருந்த நல்லவர் எவரை கொலை செய்தார்கள்.....???? புலிகள் தமிழ் மக்களுக்கு விரோதமாக எதை செய்தார்கள்...??

நான் மேலை புலிகள் எண்று சொன்னதுக்கும் காரணம் இருக்கிறது... நான் ஒரு புலி உறுப்பினர் எண்று வைத்துக்கொள்ளுங்கள்... எனக்கு மாற்று குழு ஒண்றினால் செயற்பட முடியாத அளவுக்கு பிரச்சினைகள் வருகின்றது... சில சமயங்களில் தாக்குதலும் நடந்து இருக்கின்றது... இப்ப எனது அமைப்புக்கு தலைவராக இருக்கும் தலைவர் என்ன செய்ய வேண்டும்... எனது பாதுகாப்புக்கும், எனது செயற்பாட்டுக்குமான பாதுகாப்பை தரவேண்டிய பொறுப்பு யாரிடம் இருக்கிறது...??

எனது முடிவையும் சொல்லி விடுகிறேன்... எனது தலைவர் சகோதரத்துவத்தை பாதுகாப்பதாக சொல்லி எனது பிரச்சினைகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் தீர்வை தரமுடியவில்லை எண்றால் நான் அவருக்கு கீழ் வேலை செய்வதில் அர்த்தம் இல்லாதது... அவர் எனக்கு தலைவராக இருக்கும் தகுதியையும் இழக்கிறார்... ( இது மற்ற அமைப்பின் தலைமைகளுக்கும் பொருந்தும்)

இங்கை பிரச்சினையே அதுதான்... வழமை போல செயற்பாட்டில் எப்போதும் முன்னணியில் நிக்கும் புலிகளை எந்த அமைப்புக்கும் பிடிக்கவில்லை அதன் பால் பொறாமையால் அவர்கள் செய்து கொண்டவைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது தலைமைக்கு கட்டாயமாக்க பட்டது... நடந்தவைகளுக்கு புலிகள் மட்டுமே காரணம் என்பது போல நீங்கள் யாராவது சொல்ல முயல்வது தேவை அற்றது. பொய்யை திரிக்கும் செயல்... பச்சாபாதபங்களுக்கு இதில் இடம் இல்லை...

புலிகள் தம்பாவின் TEA (தமிழீழ இராணுவம்) EROSE ஐயோ தாக்கியது இல்லை காரணம் அவர்களிம் இருந்த புரிந்துணர்வு... இதில் TEA அமைப்பு தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் புலிகளுக்கு கொடுத்தது...

மிக முக்கியமாக சொல்ல வேண்டியது ஒண்று இருக்கிறது... புலிகள் அடித்தார்கள் எண்று சொல்லி கொண்டு அதன் பின் இந்தியாவுக்கு ஓடிப்போய் திரும்பி வந்தவர்கள் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து நிண்று போட்ட ஆட்டங்கள்தான் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களை தூரத்துக்கு தள்ளியது... அரசுகளின் இரண்டு இராணுவங்களோடு சேர்ந்து நிண்று கொண்டும் கூட தனித்து நிண்ற புலிகளை அழிக்க முடியாமல் திணறியவர்களை திறமையானவர்கள் எண்று எப்படித்தான் சொல்கிறீர்களோ...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா ...

தனியே தனியே நிகழ்வுகளை சொல்ல எனக்கு தெரியாது...ஆனால் அந்த சகோதரியின் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்...

என்னிடம் எந்தனை EPDP அல்லது அவர்களின் குடும்பங்கள் கொல்லப்பட்டார்கள் என்ற விபரம் இல்லை...ஆனால் அவர்கள் ஆயுதத்துடன் /ஆயுதம் அற்றிருந்த வேளைகள் எப்போதும் சுடப்படார்கள்.....ஒருபொழுது வவுனியா நீதிபதி இலச்செலிய பலவன் கூறியது ..அடையாளம் காணப்படாத சில உடலங்களை பார்த்து ( சில புலிகளுடையது சில புளட்டினது) இனியாவது இவர்கள் ஒற்றுமையாக இருக்கட்டும் என்று...இதுதான் அங்கிருந்த நிலை

அதைதான் நான் சொல்ல வருவது இதுதான..சிங்களவருடன் இணக்கப்பாடு வேண்டும், ஜனநாயக முறையில் போராட வேண்டும் என்று சொல்கிறோம் ஆனால் எங்களுக்குள் ஒருவன் துரோகி மற்றையவன் தியாகி...

அதைத்தவிர வேறும் ஓரிடத்தில் பதிந்திருந்தேன், இனிமேல் யாருக்கும் ஆயுதம் தேவையில்லை என, அதற்காகத்தன்னும் சரத்தை ஆதரிக்கவேண்டும் என்றும் எழுதியிருந்தேன்...ஒருவனை இல்லாமல் செய்வதற்கு ஒரே வழி அவனை கொல்லுவதுதான் என்றால் நாங்கள் யாரும் மிஞ்ச மாட்டோம்...அவர்கள் அன்று ஆயுதம் வைத்திருந்தது ஏற்றுக்கொள்ளக்கூடியது , இனி தேவையில்லை ...அடுத்த தேர்தலில் மக்கள் பதில் சொல்லுவார்கள்...அவர்கள் திருந்தும் மட்டும்

ஆசான்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ...

""ஆனால் இங்கு கவலையான விஷயம் என்னவென்றால் அர்ஜுனும் நீங்களும் இன்று களத்தில் இல்லாத புலிகளுடன் ஒப்பிட்டு விவாதத்தை திசை மாற்றிவிட்டீர்கள். ""

எனது முதலாவது பதிலை பாருங்கள் நீங்கள் சொன்னது போல் புலியை பற்றி சொல்லியுள்ளேனா?, ஆனால் ஒன்று டக்லஸ் செய்தது பிழை என்று சொல்லும்போது யாரோ ஒருவர் செய்தது சரி என்றுதானே சொல்லுகிறோம்...இரண்டாவதில் தான் இவ்வாறு குறிப்பிடுள்ளேன்..

"""பொய் சொல்லுவது யார்தான் சொல்லவில்லை...நடேசனும் ஏனையோரும் சொல்லவில்லையா ..மக்கள் எல்லோரும் விரும்பித்தான் எங்களுடன் இருக்கிறார்கள் என, மக்கள் எல்லாரும் விரும்பிதான் போராட இணைந்தது என்று.."""

அதை இங்கு நான் குறிப்பிட்டதற்கு காரணம் அதற்கு மேல் யாரும் பேசமாட்டார்கள் என்பதர்ர்காகவே....ஆனால் அதற்கு ஒருவர் எழுதியுள்ளார் நான் டக்ளஸ்க்கு வக்காலத்து வாங்குவதாக... எனக்கு மறைந்திருந்து மறைபொருளாக புலி பிழை செய்தது / செய்யவில்லை என்று சொல்லத்தேவையில்லை...( நானே ஒளித்திருந்து எழுதும்போது ஏன் எனது கருத்திலும் ஒளிவு இருக்க வேண்டும்) டக்லஸ் செய்தது பிழை என்பவர்கள் தங்களையும் திரும்பி பார்க்கவேண்டும்...அதற்கு டக்ளசின் ஆதரவாளராயோ, விசுவாசியாகவோ இருக்கவேண்டியதில்லை...ஆனால் இப்படியான கருத்துக்கள் மக்களை திசை திருப்புமேன்றால் இது கருத்து பதியும் இடமன்று ..தனியே பிரச்சார மேடை...ஆனால் என்னக்கேன்னவோ சுய கட்டுபாடு உள்ளபடியால் தான் ஜீவாவிற்கு எழுதிய பதிலை சிலநிமிடங்களில் அழித்தேன் ( அழிப்பேன் என முதலே சொல்லித்தான் எழுதினேன் யாரும் கவனித்தவர்கள் சொல்லட்டும்)

மற்றும்படி இன்னுமொரு இடத்தில் எழுதியிருந்தேன் ..தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் அன்றாட தேவைகளில் கவனம் செலுத்தாவிட்டால் டக்லஸ் அமைச்சர் ஆவதையோ, பிள்ளையான் முதல் அமைச்சர் ஆவதையோ தவிர்க்க முடியாது...4 வருடம் படித்து போட்டு வேலையிலாதவன் அமைச்சரிட்ட போனால் என்ன பிழை...அவனுக்காண்டி அவனுடைய குடும்பம் வோட் போட்டால் என்ன பிழை, தொண்டர் ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி கல்லூரி எல்லாம் ஒருவகையில் அமைச்சரின் தேவையுள்ளவை. 44000 வோட் விழுந்திருக்குது என்றால் அதில் எந்தனை கள்ள வோட்டு என்று கேட்பவரை என்னவென்று சொல்லுவது...2004 தேர்தலில் யார் யார் எத்தனை கள்ளவோட்டு போட்டார்கள் என்றா தமிழ் தேசிய கூட்டமைப்பு போனது , அல்லது அதற்கு முந்தைய தேர்தலில் மகேசனுக்கு எத்தனை கள்ளவோட்டு என்று பார்த்தா அவர் அமைச்சராய் இருந்தவர்...

இங்கே இருந்து வண்டில் வண்டிலா கதை விடலாம் ...ஆனால் அது நிஜத்துடம் இணைய வேண்டும்...

மற்றும்படி இப்படி யாரும் குழுவாய் சேர்ந்து பம்பலடிக்கிரதுக்கு நான் இனி வரவில்லை...பார்த்து பொதுவானது, என்றால் வாறன் நன்றி

Link to comment
Share on other sites

அதுசரி

இவருக்கு ஆதரவாளர்கள் எவர்...

சிறிதர் தியேட்டரில் குந்திக்கொண்டு இருப்பினம் அவை தான்.தாடி மாமா ஆடர் போட்டால் கழுத்தை வெட்ட ரெடியாக நிற்கிற ஆட்கள் தான் இவை.கள்ள வாக்கு போட சொல்லுங்கோ நாலு காலில் போடுற ஆட்களும் இவை தான்.தங்களுக்கு எதிராக கருத்து எழுதும் பத்திரிக்கைகளை சந்தியில் போட்டு கொழுத்துபவர்களும் இவர்கள் தான்.

Link to comment
Share on other sites

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அமைச்சுப் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமாச் செய்ய உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

http://www.valampurii.com

அட அட அட.... என்ன ஒரு பிறர் சிநேகம், எவ்வளவு ஒரு தன்னடக்கம்... :lol: இருந்தாலும் தாடி முடிவு எடுத்தல் மட்டும் பத்தாது, எடுத்த முடிவிலிருந்து தடுமாறக் கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுத வரும் ஒட்டுக்குழு உறுப்பினர்களுக்கு, தாங்கள் இது வரை தமிழருக்கு என்ன நன்மை செய்தது என்று சொல்ல தெரியவில்லை.

புலிகளை குற்றம் சாட்டி, தங்கள் குற்றங்களை திசை திருப்புவதிலேயே குறியாக நிற்கின்றார்கள்.

ஜீவாவின் ஒன்று விட்ட சகோதரருக்கு நடந்தது போல் பல கொலைகளை செய்து விட்டு ..... ஜனநாயகம் பேசுவது தான் இவர்கள் பிழைப்பு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழா டக்கி, பதவியை தூக்கிஎறிந்துவிட்டுவா தோழா.

நமது சிவப்புபுரட்சி இன்னும் பச்சையாக மாறவில்லை.

வா தோழா,சென்னையில் சூளைமேட்டிலே நீ ஆட்டோசாரதிக்கு காட்டிய வீரத்தை அன்றே கண்டு மெய்மறந்தவன் நான்.

காரைநகர் அடிக்கப்போய் நீ புறமுதுக காட்டிஓடிவந்த காட்சி புறநானூற்றிலும் இல்லை அப்பனே.

தூ...உனக்கு ஒரு பதவி..அதை நீ வச்சுக்கிறதும்...கழட்டுறதும்தான் இப்ப தேவையாக்கும்..

எதுக்கும் புலத்து புரட்சித்தலைவன் சோபா சக்தியை கொன்ராக் பண்ணு தலைவா...க்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அட அட.... என்ன ஒரு பிறர் சிநேகம், எவ்வளவு ஒரு தன்னடக்கம்... :lol: இருந்தாலும் தாடி முடிவு எடுத்தல் மட்டும் பத்தாது, எடுத்த முடிவிலிருந்து தடுமாறக் கூடாது :lol:

அவர் தடுமாற மாட்டார். சொன்ன சொல்லை காப்பாற்றுவார். :lol:

Link to comment
Share on other sites

அவர் தடுமாற மாட்டார். சொன்ன சொல்லை காப்பாற்றுவார். :lol:

அடுத்த பொது தேர்தலுக்கான படிமானம் தான் இது. தான் மகிந்தவை விட்டு விலகி விட்டேன்.தனியாக தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்று ஒரு பந்தா காட்டி அடுத்த தேர்த்தலில் தான் தனியாக போட்டி இட போக அடிதளம் போடுகிறார் தாடிகாரன்.நன்றாக விளங்கி விட்டது மகித்தவோடு இருந்து வெல்ல முடியாது என்று.தமிழ் மக்களை மாங்காய் மடையர்கள் ஆக்க எத்தனை பேர் வெளிக்கிட்டு உள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பொது தேர்தலுக்கான படிமானம் தான் இது. தான் மகிந்தவை விட்டு விலகி விட்டேன்.தனியாக தமிழ் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்று ஒரு பந்தா காட்டி அடுத்த தேர்த்தலில் தான் தனியாக போட்டி இட போக அடிதளம் போடுகிறார் தாடிகாரன்.நன்றாக விளங்கி விட்டது மகித்தவோடு இருந்து வெல்ல முடியாது என்று.தமிழ் மக்களை மாங்காய் மடையர்கள் ஆக்க எத்தனை பேர் வெளிக்கிட்டு உள்ளீர்கள்?

சிலவேளை ஆனந்த சங்கரி மாதிரி..... பிளானோ.......? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை ஆனந்த சங்கரி மாதிரி..... பிளானோ.......? :lol:

ஆனந்தசங்கரி நினைப்பிலை ஏதும் செய்ய வெளிக்கிட்டால் சூப்பினமாங்கொட்டையும் கிடைக்காது

Link to comment
Share on other sites

ஆனந்தசங்கரி நினைப்பிலை ஏதும் செய்ய வெளிக்கிட்டால் சூப்பினமாங்கொட்டையும் கிடைக்காது

:lol::lol:

ஒரு சிங்களவன் தம்மோடு முரண்பட்டு புலிகளோடோ அல்லது நாட்டை விட்டோ வெளியேறவில்லை. கவரிமான் பரம்பரை அரசோடை இணைந்தவையாம்.நல்ல பம்மாத்து தான். நல்ல வேளை மாரியாத்தா வந்து டக்கிளசின் காதிலை சொல்லவில்லை சேர் சிங்களவனோடு என்று. :) அரசியல் மயமாகப்பட்ட மக்கள் போராட்டம் தான் வெல்லும் என்று மக்களுக்கு பசப்பு வார்த்தை கூறி சோத்து பாசலாக வாங்கி உண்டு விட்டு தமிழ் மக்களுக்கு விமோசனம் தேடி தர போகிறாராம் தாடிகாரர். அண்ணை எப்ப சாவார் திண்ணை எப்போ கிடைக்கும் என வாழும் பச்சோந்திகளை தமிழ் மக்கள் எப்போதுமே இனம் கண்டுள்ளார்கள், இனம் காணுவார்கள்.

ஏதோ பல லட்சம் வாக்குகளால் மக்கள் பிரதிநிதியாக அமைச்சர் ஆனவர் போல் ராஜினாமா செய்ய போகிறாறாம். சில நூறு வாக்குகள் மட்டுமே பெற்று பாராளுமன்றம் சென்றவர் ராஜினாம்வாம்? வெட்கமாக இல்லை. :lol::lol:

ஒரு மாவீரன்(வி.புலி) தனது நாட்டுக்கு செய்த தொண்டோடு ஒப்பிடும் போது டக்ளஸ் ஒரு செல்லா காசு.ஒப்பிடவே முடியாது.ஆனாலும் இருவரும் தமிழர்களாக இருந்து எப்படி பிறந்த தேசத்துக்கு சேவை செய்தார்கள் என ஒப்பிடுகிறேன்.

கூட்டமைப்பில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த ரவிராஜ்,ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்கள் மிருகங்கள் போல் கொல்லப்படும் போது

ஆயுதம் இல்லாத இவர்கள் எப்படி சிறிலங்காவில் இருந்து கருத்து தெரிவிக்க முடியும்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.