Jump to content

உழுந்து தோசை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

methosai.jpg

மொறு மொறுப்பான உழுந்து தோசை.

தேவையான பொருட்கள்.

இரண்டு சுண்டு உழுந்து.

இரண்டு சுண்டு வெள்ளை பச்சை அரிசி.

இரண்டு மேசைக்கரண்டி வெந்தயம்.

இரண்டு பெரிய வெங்காயம் அல்லது பன்னிரெண்டு சின்ன வெங்காயம்.

ஆறு கெட்டு கருவேப்பிலை.

வெண்ணெய் (Butter அல்லது Margarine)

ஆறு செத்தல் மிளகாய்

சிறிது உப்பு

கொஞ்சம் மஞ்சள் தூள்.

அப்பச்சோடாத் தூள் அல்லது ஈஸ்ட்

செய்முறை.

உழுந்தையும், அரிசியையும், வெந்தயத்தையும் ஒரு நீர் ஊற்றிய பாத்திரத்தில் 5 மணித்தியாலங்கள் ஊற விடவும்.

ஊறிய பொருட்களை கிறைண்டரில் பசை போல் அரைக்கவும்.

அரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் இட்டு அப்பச்சோடாவையும், மஞ்சள் தூளையும் கலந்து 10 மணித்தியாலம் மூடி வைக்கவும்.

புளித்த மாவில் சிறிதாக வெட்டிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை சிறிது தாளித்து கலக்கவும்.

கையோடு தேவையான உப்பையும் போட்டு மொறு மொறுப்பான தோசையை சுடவும்.

இதனை தேங்காய்ப்பூ சம்பல், பச்சை மிளகாய் சம்பல், சாம்பார் போன்றவற்றுடன் சாப்பிட நல்ல ருசியாக இருக்கும்.

http://www.youtube.com/watch?v=t7Hvm9e-ES4&feature=related

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அண்ணா.நீங்கள் கொண்டு வருகிற சமையல் செய்முறை எல்லாம்...5,10 மணிநேரம் ஊற விட்டு செய்யிற சாப்பாடாக இருக்கே ஏன்?ம்ம்ம்..தோசை திருப்பிக் கேட்டால் பூசை எண்டு வேற பாடல் போட்டு இருக்கிறயள்.நான் ஓடப்போகிறன்...நன்றி. :lol::lol:

யாயினி தங்கச்சி, அடுத்த சமையல் குறிப்பு ஊற விடாமை ....... செய்கின்ற சமையல் தான். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி .....உழுந்து..... அரிசி எல்லாம் மாவாக் பக்கட் பண்ணி

விக்கிறார் களாம் வாங்கி செய்து பாருங்கோ....

Link to comment
Share on other sites

சில யாழ்ப்பாணத்து ஆட்கள் தோசைக்கு நெய் விடுகிறது. ஆரம்பத்தில எனக்கு வயித்தை பிரட்டினாலும், அதிலையும் ஒரு ருசி இருக்கிது எண்டு தொடர்ந்து சாப்பிட உணரக்கூடியதாய் இருந்திச்சிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தேசிய உணவுகளிலை தோசையும் முக்கியம்.

அதிலையும்

எண்ணைத்தோசை.அதாவது தோசை சுடேக்கை நல்லண்ணையை விட்டு அந்தமாதிரி பிரட்டியெடுத்து......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீட்டில் மாதத்தில் இரண்டு தடவைகள் என்றாலும் தோசை கூடுவோம்.

தோசைக்கு செத்தல் மிழகாய் பொரித்து சம்பல் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

ஓம் தெரியுமே. நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்த சமயமும் தோசை ஊத்தி தாறதாய் சாப்பிடச் சொல்லி கேட்டீங்களே. வீட்டிலை குளிர்சாதனப் பெட்டியுக்கை எப்பவும் தோசை மாவு ஆயத்தமாய் இருக்குமோ ஈழப்பிரியன் அண்ணா. நல்ல காலம் மாவு ஆட்டுற வேலை உங்களுக்கு இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை எல்லோரும் ருசித்து சாப்பிடுவதை பார்க்கத்தான் ஆசையா இருக்கு. எனக்கு மோறு மோறு எண்டு தோசை இருக்கனும். தொட்டுக்க ஒன்றுமே இல்லையே . ஐ மின் சம்பல் அல்லது துவையல்.

அது என்ன பாட்டில் அப்பாவுக்கு நாலு தோசை

அம்மாவுக்கு மூனறு தோசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தோசை விருப்பம் ஆனால் யாராவது சுடச் சுடச் சுட்டு தந்தால் சாப்பிடுவேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோசை சாப்பிட தொடங்கினால் நிப்பாட்டுவது கஸ்ரம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் :rolleyes::rolleyes:

எப்பிடியிருந்தாலும் தென்னோலை நெருப்பிலை தோசைக்கல்லை சூடாக்கி சுட்டதோசையின்ரை சுவையேதனி.

தம்பியர் உந்த தோசையெல்லாம் பாக்குறதுக்குத்தான் வடிவு :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோசை சாப்பிட தொடங்கினால் நிப்பாட்டுவது கஸ்ரம் :rolleyes:

ஓமோம் ஊரிலை உங்களை மாதிரி ஆக்களாலைதானே ஒருசில வீட்டிலை தோசை சுடூறதேயில்லை :rolleyes:

Link to comment
Share on other sites

எப்பிடியிருந்தாலும் தென்னோலை நெருப்பிலை தோசைக்கல்லை சூடாக்கி சுட்டதோசையின்ரை சுவையேதனி.

தம்பியர் உந்த தோசையெல்லாம் பாக்குறதுக்குத்தான் வடிவு :(

உண்மை தான் குமாரசாமி அண்ண, ஊரில அம்மம்மா சுட்ட தோசைக்கு நிகரான தோசை எவ்வளவு காசு குடுத்தாலும் வராது :rolleyes: காரணம் அதில ஒரு ingredient சேர்ந்து இருக்கும், அது தான் அன்பு. :(

ஓமோம் ஊரிலை உங்களை மாதிரி ஆக்களாலைதானே ஒருசில வீட்டிலை தோசை சுடூறதேயில்லை :(

சில வீடுகளில சனம் தோசைச் சட்டியை பழைய இரும்புக்கு போடுதுகள் என்று இப்ப தான் விளங்குது... :rolleyes::D

Link to comment
Share on other sites

சின்னனா இருக்கேக்கை அம்மா பூனைக்குட்டி தோசை முயல் குட்டி தோசை எண்டு சொல்லி சுட்டு தந்தது ஞாபகம் வருது.

dosai3.jpg

ஊரிலை தோசை சுடுறதுக்கு பொடுற உழுந்து, மா பொருள் அதாவது அரிசி மா/ அரிசி/ கோதுமை மா 1: 2 என்ற அளவில் இருந்தாலும், சில இடங்களில் மேலதிகமாக தேங்காய்ப் பூ, சோறு, போட்டு அரைப்பார்கள். சில இடங்களில் மஞ்சள் சேர்த்து அரைப்பார்கள். தோசை மஞ்சள் நிறமாக வரும்.

இஞ்சை தோசை சுடுவதென்றால், நான் அரிசி ஊறபோட்டு அரைக்கிறதில்லை.

1 சுண்டு உழுந்து எண்டா 1 சுண்டு அரிசி மா, 1 சுண்டு அவிச்ச கோதுமை மா சேர்க்கிற. சில நேரம் அரிசி மா வேண்ட இந்திய ( நான் இருக்கிற இடத்திலை தமிழ் கடையள் இல்லை, ஆனால் இந்திய கடையளிலை நிரு, நரேன் பிரண்ட் அரிசி மா கிடைக்கும்) கடைக்கு போக நேரமில்லாட்டி 1 சுண்டு அவிச்ச ரவையும், 1 சுண்டு அவிச்ச கோதுமை மாவும் சேர்க்கிற.

ஊரிலை மா புளிக்க பொதுவா ஒண்டும் சேர்க்க தேவையில்லை. இஞ்சை குளிருக்கு ஒழுங்க புளிக்காது/ அல்லது புளிக்க கன நேரம் எடுக்கும். அதிக்காக சிலர் மதுவம்/ ஈஸ்ட் சேர்க்கிறது.

தோசை மா புளிக்க மதுவமும் தேவை அதோட சில லக்டிக் அசிட் பக்ரீரியாவும் சேர்ந்து மாவை புளிக்க வைக்கிறதாலை தான் தோசைக்கு ஒரு தனி சுவை வாறது.

நான் அதுக்காக சிறிதளவு ஈஸ்டும், 2 மேசைக்கரண்டி சாதாரண/ சுவையூட்டாத யோகட்டும் சேர்த்து குழைச்சு வைக்கிறது. ஒரு 4 - 5 மணித்தியாலத்திலை தோசை சுட கூடிய அளவுக்கு தோசைமா புளிச்சிடும்.

dosai11.jpg

dosai21.jpg

dosai4.jpg

dosai5.jpg

dosai6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில யாழ்ப்பாணத்து ஆட்கள் தோசைக்கு நெய் விடுகிறது. ஆரம்பத்தில எனக்கு வயித்தை பிரட்டினாலும், அதிலையும் ஒரு ருசி இருக்கிது எண்டு தொடர்ந்து சாப்பிட உணரக்கூடியதாய் இருந்திச்சிது.

மச்சான், தோசை சாப்பிடும் போது முதலில் நெய் தோசை சாப்பிட்டால்..... வயிறு உடனே நிரம்பிய மாதிரி இருக்கும்.

நான் முதலில் நெய் விடாத தோசையை சாப்பிட்ட பின் , கடைசியாகத்தான் நெய் தோசையில் கை வைக்கிறது. :D

என்ரை தேசிய உணவுகளிலை தோசையும் முக்கியம்.

அதிலையும்

எண்ணைத்தோசை.அதாவது தோசை சுடேக்கை நல்லண்ணையை விட்டு அந்தமாதிரி பிரட்டியெடுத்து......

குமாரசாமி அண்ணை, நல்லெண்ணை விட்டு தோசை தோசை சுட்டால்...... அந்த றோட்டிலை உள்ள எல்லாருக்கும், தோசை சுட்ட விஷயம் தெரிஞ்சு போகும். :D

எமது வீட்டில் மாதத்தில் இரண்டு தடவைகள் என்றாலும் தோசை கூடுவோம்.

தோசைக்கு செத்தல் மிழகாய் பொரித்து சம்பல் செய்து சாப்பிட நன்றாக இருக்கும்

ஈழப்பிரியன், தோசைக்கு முக்கிய கூட்டாளியே....... பொரிச்ச செத்தல் மிளகாய் சம்பல் தான். சாம்பார் எல்லாம் இரண்டாவது தான். :D

தோசைகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் :lol::D

The_Dosa_of_Life.jpg

குட்டி, இவ்வளவு பெரிய தோசையை காட்டி பயப்படுத்தி போட்டியள். இது சுட தோசைக்கல்லுக்கு எங்கை போறது.

ஒரு தோசை சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும் போலை...... :D

தோசையை எல்லோரும் ருசித்து சாப்பிடுவதை பார்க்கத்தான் ஆசையா இருக்கு. எனக்கு மோறு மோறு எண்டு தோசை இருக்கனும். தொட்டுக்க ஒன்றுமே இல்லையே . ஐ மின் சம்பல் அல்லது துவையல்.

அது என்ன பாட்டில் அப்பாவுக்கு நாலு தோசை

அம்மாவுக்கு மூனறு தோசை

அப்பா..... கஷ்டப் பட்டு வேலை செய்வதால், அவருக்கு நாலு தோசை கறுப்பி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தோசை விருப்பம் ஆனால் யாராவது சுடச் சுடச் சுட்டு தந்தால் சாப்பிடுவேன் :D

உண்மை தான் ரதி, தோசை சாப்பிடும் போது சுட்ட சூட்டுடன் சாப்பிட்டால் அதன் சுவையே தனி,

அதனை பின் சூடாக்கி சாப்பிடும் போது..... அதன் சுவை குறைந்து விடும். :D

நான் தோசை சாப்பிட தொடங்கினால் நிப்பாட்டுவது கஸ்ரம் :D

சஜீவனும் என்னைப் போல, எனக்கும் தோசையை சாப்பிட ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம். :D

உண்மை தான் குமாரசாமி அண்ண, ஊரில அம்மம்மா சுட்ட தோசைக்கு நிகரான தோசை எவ்வளவு காசு குடுத்தாலும் வராது :lol: காரணம் அதில ஒரு ingredient சேர்ந்து இருக்கும், அது தான் அன்பு. :D

சில வீடுகளில சனம் தோசைச் சட்டியை பழைய இரும்புக்கு போடுதுகள் என்று இப்ப தான் விளங்குது... :D:D

பேரீச்சம்பழத்துக்கு தோசைக்கல்லு போகுது எண்டு சொல்லுறியள் குட்டி. (சாந்தி கவனிக்க.....) :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னனா இருக்கேக்கை அம்மா பூனைக்குட்டி தோசை முயல் குட்டி தோசை எண்டு சொல்லி சுட்டு தந்தது ஞாபகம் வருது.

dosai3.jpg

------

நான் அதுக்காக சிறிதளவு ஈஸ்டும், 2 மேசைக்கரண்டி சாதாரண/ சுவையூட்டாத யோகட்டும் சேர்த்து குழைச்சு வைக்கிறது. ஒரு 4 - 5 மணித்தியாலத்திலை தோசை சுட கூடிய அளவுக்கு தோசைமா புளிச்சிடும்.

குளக்காட்டான், இந்த முயல், பூனைக்குட்டி தோசையை அச்சில் போட்டு சுட்டீர்களா?

இப்படி சுடும் தோசைகளை சின்னப் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

தோசை மா புளிப்பதற்கு தயிர் சேர்க்கும் புதிய முறையை அறியத் தந்தமைக்கு நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இருக்கிற கூட்டத்தை நம்பி தோசைத் தர்பார் போடலாம் போல இருக்கு.... :lol:

போடலாம் ஆனால் கல்லா இருக்க கூடாது :D

Link to comment
Share on other sites

குளக்காட்டான், இந்த முயல், பூனைக்குட்டி தோசையை அச்சில் போட்டு சுட்டீர்களா?

இப்படி சுடும் தோசைகளை சின்னப் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

தோசை மா புளிப்பதற்கு தயிர் சேர்க்கும் புதிய முறையை அறியத் தந்தமைக்கு நன்றி. :rolleyes:

அச்சு எல்லாம் வச்சு சுடேல்லை. கரண்டியாலை உருவம் வரகூடிய மாதிரி வாத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க தோசை சுடுறது தெரியாம போச்சு இன்று தான் பார்த்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.